தொடர்_10
***********
நான் நீ நடுவில் பேய்
************************""""""**********"
"என்னாச்சு இவனுக்கு இப்படி பிஹேவ் பண்றான்
ஒருவேளை லூசாகிட்டானா?" என்று நினைத்தாள்.
கொஞ்சம் நேரத்திற்குப் பிறகு
வசந்த் நார்மலாகி ..சாரி கேட்டான்.
"இட்ஸ் ஓகே என்னாச்சு சார் உங்களுக்கு ஏன் அப்படி நடந்துகிட்டீங்க ?'
"தெரியலை மாலினி பட் சம்திங் ராங்.
ஒன்ஸ் அகைன் சாரி பார் தட்."என்றான்.
"பி கூல் சார்" என்றாள் மாலினி.
ம்ம் என்று தலையாட்டிவிட்டுக் கண்களை மூடிக்கொண்டான்.
விமானம் இந்தியாவை நோக்கிப்பயணித்தது.
******
ஜெனியும் சுரஷும் நேரே ஜெனியின் வீட்டுக்கு வந்தார்கள்.
"பேபி நீ ரெஸ்ட் எடு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு
வர்றேன்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்
"ஹனி நான் வீட்டுக்கு கிளம்புறேன் "
"இந்த நிலைமையிலா பேபி ?"
"இப்ப வீட்டுக்கு போனா உனக்குத்தான் பிராப்ளம் நான் சொல்றதைக் கேளு "
"சரி நீ எங்கே போற?"
"நீ தூங்கு பேபி முக்கியமான வேலை இருக்கு"
"காரை எடுக்கணும்ல"
"அது எப்படி முடியும் ? அந்த கார் இப்போ
போலீஸ் கஸ்டடியில் தானே இருக்கும்"
"ஆமா அதுக்காக விட முடியுமா ?"
"மாட்டிக்க போற ஹனி "
"ஹாஹா நானா ?"
"ஏன் இப்படி சிரிக்கிற ? உண்மையைத்தானே சொல்றேன்
வண்டியை எடுக்க யோசிப்போம் நீ போகாதே ஹனி"
"நீ சும்மா இரு பேபி
நான் வண்டியோட வாரேன்"
"என்னமோ பண்ணு நீ பிடிவாதக்காரி"
"பேபி தூங்கு வார்றேன் பசிச்சா பிரிட்ஜ்ல பழம் ஸ்நாக்ஸ் இருக்குஎடுத்து சாப்பிடு" என்று கிளம்பிப் போனாள்.
************
கத்துக்குட்டியும் பாபுவும் வீட்டிற்கு முன் போடப்பட்டு இருந்த நாற்காலியில் அமர்ந்து பேச ஆரம்பித்தார்கள்.
"இங்க பாரு பாபு நீ ஏதாவது தப்பு பண்ணியிருக்கியா ?"
"இல்லை ஏன்டா இப்படி கேட்கிற?"
"ஒரு சிறு சந்தேகம் உனக்கும் ஜெனிக்கும் என்ன தொடர்பு ?"
"டேய் டேய் என்னடா நீயே குடும்பத்தில் குழப்பம் பண்ணி விட்டுருவ போல இருக்கு."
"இல்லை என்கிட்ட பொய் பேசாதே
நான் உன்னோட ஜாதகம் பார்த்தேன் ஜெனி ஊன்னைத்தேடித்தான் வந்திருக்கு"
"என்னடா சொல்ற ? என்னைத்தேடி ஏன் வரணும் ?"
"அதை நீதான் சொல்லணும் "
"நான் என்ன சொல்ல?"
"அவள் சாவுக்கு நீதான் காரணமாக இருக்கலாம்( இ) அவளை ஏமாத்தி இருக்கலாம் "
"ரொம்ப ஓவர்டா இது
இதுவரை ஜெனிங்ற பெயர்கூட நான் கேட்டது இல்லை "
"எந்த பொண்ணையும் லவ் கூட பண்ணுனது கூட இல்லைடா"
"இல்லை உன் ஜாதகம் பொய்சொல்லாது "
"நிசமாவே சொல்றன்டா ஒருவேளை லவ் பண்ணியிருந்தா நிச்சயமாக ஏமாத்தி இருக்க மாட்டேன் புரிஞ்சுக்கோ இதுல ஏதோ குழப்பம் இருக்கு."
"மதுகிட்ட வனிதாவுக்கு பாத்த மாப்பிள்ளைகிட்ட மாத்தி மாத்தி வரும்போதே சந்தேகம் எனக்கும் வந்துச்சு ஆனால் ஏன்னு தான் புரியல"
"சரி விடு நடந்ததை மறந்துடு இனி நான் பார்த்துக்கொள்கிறேன்."
"ம்ம் சரிடா உன்னை நம்பித்தான் இருக்கேன் "
"என்னை நம்பினவங்களைக் கைவிட மாட்டேன் தெரியாதா ?
உனது உயிர் என் கையில் சரியா?"
என்று சொல்லிச் சிரித்தான்
"ஏதோ பண்ணு ஆனா சீக்கிரம் பண்ணு, என்னால் ஜெயில் அடைச்சு கிடக்க முடியாது"
"ஓகே கூல் நான் பாத்துக்கறேன்" என்றான்.
இவர்கள் பேசிக்கொண்டு இருப்பதை இரண்டு கண்கள் பார்த்துக்கொண்டு இருந்தன.
கத்துக்குட்டி அந்த கண்களைப் பார்த்தும் பார்க்காதது போல் ..
"சரி பாபு நாம வீட்டுக்குள் போகலாமா?" என்று கேட்க ...
"நல்லா காற்று வருது கொஞ்சம் இருக்கலாமேடா"
"இல்லை உள்ளே கொஞ்சம் வேலை இருக்கு வா "என்று அவன் கையைப்பிடித்து இழுக்க...
"சரி சரி வாரேன்" என்று சொல்லி எழும்ப..
ஜெனி பாபுவின் முன்னால் வந்து நின்றது.
பாபுவின் கண்ணுக்கு தெரியவில்லை.
இருவரும் விரைந்து நடக்க ஜெனி ஓடிவந்து பாபுவின் சட்டையைப்பிடித்து இழுக்க..தூக்கி வீசப்பட்டு அந்த பக்கமாகப் போய் விழுந்தது
அப்போதுதான் பாபுவின் கைகளில் கட்டியிருந்த தாயத்தைப்பார்த்தது.
உடனே அனைத்து கோபமும் கத்துக்குட்டி மேல் திரும்ப அவனைத்தாக்கியது
அப்போதும் அது தூக்கியெறிப்பட்டது
இனி அந்த வீட்டில் இருக்கும் ஒருவர் உடம்பிலாவது புகுந்தால்தான் தான்செய்ய நினைத்ததைச் சாதிக்க முடியும் என்று முடிவு எடுத்துக்கொண்டது ஜெனி.
*********
நள்ளிரவு பன்னிரண்டு மணியை நெருங்க,
எங்கோ தூரத்தில் ஒலிக்கும் ஓநாய்கள் சத்தத்தைத் தவிர எந்த அசைவும் இல்லாத மயான அமைதியில் அந்த இடம் இருக்க....
நீண்ட தலைமுடியுடன் இடுப்பில் கோவணத்துடன் நூற்றைத்தாண்டிய வயதுடைய எலும்பும் தோலுமான ஒருவன் முன் ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் வாயும் கையும் காலும் கட்டப்பட்ட நிலையில் கிடக்க..யாக குண்டம் வளர்க்கப்பட்டு
பலியிட காத்திருந்தான்
சுற்றிலும் அன்று எரியூட்டப்பட்ட உடல்களின் துர்நாற்றம் பரவ, எந்த ஒரு உணர்வும் இல்லாத அவரின் கண்களில் ஒரு அகோரப்பசி தெரிய
மந்திரங்களைக் கூறியபடி அமர்ந்திருந்தார்.
சுற்றிலும் நாக்கில் எச்சில் வழிய வழிய எப்போது சிறுவன் பலியாவான் உடலைத் தூக்கிச்செல்லலாம் என்று காத்திருந்தன நான்கைந்து சிறுத்தைப்புலிகள்.
நேரம் நெருங்க நெருங்க சிறுவனின் கண்களில் பயத்தோடு இதயத்துடிப்பும் அதிகமாகிக்கொண்டிருக்க..
அந்த கிழவன் அரிவாளோடு சிறுவனின் முன் வந்து நின்றான்
பத்து ..ஒன்பது... இரண்டு..ஒன்று..என்று சொல்லி ஜெய் பாதாளி பைரவி என்று அரிவாளை உயர்த்த எங்கிருந்தோ வந்த ஜெனி அவனைத்தூக்கிச்சென்றது.
பசியோடு காத்திருந்த சிறுத்தைப்புலிகள் அந்த கிழவன் மீது பாய..அவன் ஏதோ முணுமுணுக்க..அவை அனைத்தும் எரிந்து சாம்பலாக..
அவனது கண்களில் வெறி நூறுமடங்காக ..கொலைபசியில்..
நடந்து எரிந்து கொண்டிருந்த சிதையில் இருந்து பிணத்தை எடுத்து நறநறவெனக் கடித்து உண்டான்.
அப்போதும் வெறி அடங்காமல் அங்கிருந்த அனைத்தையும் அடித்து நொறுக்கிவிட்டு அந்த ஜெனியைத் தேடிப் புறப்பட்டான்
***""***
சென்னை விமான நிலையம்
அதிகாலை 4 மணி.
விமானம் தரையிறங்கும் அறிவிப்பு கேட்டு விழித்த மாலினி வசந்தைத் தட்டியெழுப்பினாள்.
வசந்த் எழுந்திருக்காமல் இருக்க
அவனது தோளைத்தொட்டு அசைக்க
அசைவற்று கிடந்தான்
உடனே பணிப்பெண்ணை அழைத்து தகவலைச் சொல்ல ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவசர சிகிச்சைக்கு அவனைத்தூக்கிச்சென்றார்கள்.
பின்னாலேயே அவளும் ஓடினாள்.
தொடரும்
எழுத்தாளர் நாகா