• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நான் நீ நடுவில் பேய் -3

writer naga

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 23, 2024
40
57
18
Chinna Rettaiyurani Ramanathapuram
தொடர்_3
***********


👻👻👻நான் நீ நடுவில் பேய்👻👻👻
************************""""""**********"


இதுவரை...


பயத்தில் அம்மாவிடம் விசயத்தைச்சொல்ல ஓடிவர
அம்மா யாருடனோ தீவிரமாகப் பேசிக்கொண்டு நின்றாள்.
அவள் முகத்தை பார்க்க அவளை எங்கோ பார்த்தது போல் இருந்தது.


இனி....

ஜெனிஃபர் ஹாஸ்பிடல் நர்ஸ் பிலோமினால அது எதற்காக அம்மாவிடம் பேசிக்கொண்டு இருக்கிறாள் அவளுக்கு இங்கென்ன வேலை. சரி என்னதான் நடக்கிறது என்று ஒளிந்திருந்து கேட்டாள் வனிதா


அவர்கள் பேசுவது சரியாகக் கேட்கவில்லை .சரி நேரில் போய் கேட்போமென வனிதா வரவும் அவள் அங்கிருந்து நடந்தாள்.


"யாருமா அவள் எதற்காக இங்கு வந்திருக்கிறாள் ?"


"யாரைக் கேட்கிற?"


வந்துட்டுப்போன அந்த லேடியைத்தான்"


"அவளைக் கேட்கிறியா
அவ நம்ம ஜெனிஃபர் ஹாஸ்பிடல் நர்ஸ் பிலோமினா "


"அது தெரியும் அவ எதுக்கு இங்கு வந்தாள்?"


"அவ வீட்டுக்காரர் கேட்டரிங் ஆரம்பிச்சிருக்காராம் உன் மேரேஜ்க்கு ஆர்டர் கேட்டு வந்தாள்"


"அவ நல்ல பழக்கம் அதான் சரின்னு சொல்லிட்டேன் "


"அவ நம்பர் இருக்கா ?"


"எதுக்குடி "


"ஹாஸ்பிடல்ல இருந்து ஒரு ஃபோன் வந்தது "


"என்னனு "


"அக்காவுக்கு சீரியஸ்னு"


"ஐய்யோ என்னடி இவ்வளவு லேட்டா சொல்ற என்னாச்சு அவளுக்கு
ஐயோ ஐயோ"


"இப்ப எதுக்கு கததுற ?"
"அது உண்மையா பொய்யானு பார்க்க வேண்டாமா ?"


"என்னடி கூறுகெட்ட தனமா பேசுற ஒருத்தருக்கு முடியலனு யாராவது பொய் சொல்லுவாங்களா?"


"அக்காவுக்கு போன் பண்ணிப் பாருடி"


"பண்ணிட்டேன் எடுக்கல"


"அப்ப எதாவது ஆகிருக்குமோ?"


"லூசு மாதிரி பேசாதே மா"


"உனக்கு எந்த நேரத்தில் விளையாடுறதுனு தெரியாதா?"


மச்சானுக்கு ஃபோன் பண்ணிப்பாரு"


"அவரும் எடுக்கல "


"சரி அப்போ ஸ்கூட்டியை எடு போய்ப்பார்த்துட்டு வருவோம் "


"அம்மா இரு மா இன்னொரு தடவை போட்டுப்பார்க்கிறேன் "


"சரி சீக்கிரம் டி"


வனிதா மீண்டும் மதுவுக்கு ஃபோன் போட.. நீண்ட நேரத்திற்கு பிறகு
எடுத்து ஹலோ என்றாள்.


"எங்க டி போன இவ்வளவு நேரமா ?"


"ஏன்டி கத்துற ஈவினிங் வார்றோம்னு சொன்னேன்ல ."


"உனக்கு ஏதோ முடியாம ஹாஸ்பிடல்
சேர்த்துருக்கறதா ஃபோன் வந்தது "


"நான் குத்துக் கல்லுமாதிரி நல்லாத்தான் டி இருக்கேன்.யார் ஃபோன் பண்ணியது ?"


"அதுதான் தெரியல"
"பதறிப்போய் உன்கிட்ட கேட்கலாம்னா
நீ எடுக்கல அவரும் எடுக்கல
அதான்"


"நம்பர் அனுப்பு மச்சான்கிட்ட பார்க்கச் சொல்றேன்."


"நீ நல்லா இருக்கதானே விடு.
பாத்துக்கலாம் "


"அவரை டென்ஷன் பண்ண வேணாம்
வைக்கிறேன் என்று வைத்துவிட்டு
அம்மாவின் பக்கம் திரும்பி
அவ நல்லாத்தான் மா இருக்கா


"வேற யாரோ வேண்டாத வேலை பார்த்து இருக்காங்க"


"அதுசரி அதனால் அவர்களுக்கு என்ன லாபம்?"


"சில சைக்கோக்கள் அப்படித்தான் மா
சரி நீ போ நான் என் பிரண்ட்க்கு ஃபோன் பண்ணிட்டு வர்றேன்"


"இன்னுமாடி பண்ணல?"


"எங்க பண்ண, அதான் ஃபோன் வந்து டென்ஷன் ஆச்சே ."


"சரி சரி பேசிட்டு வா
டீ போட்டு வைக்கிறேன் "


"சரிமா" என்று மொட்டைமாடிக்குப்போய் தன் பிரண்ட் அனுவுக்கு ஃபோன் போட்டாள்..


"சொல்லுடி என்ன விசயம்?"


"எப்படிடி இருக்க ?"


"நான் நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க?"


"ம்ம் என்னை, வர்ற சன்டே பொண்ணு பார்க்க வர்றாங்கடி "


""ஏய் சூப்பர் டி பையன் யாருடி ?"


"யாருக்கு தெரியும் "
வந்தபிறகு தான் தெரியும்
நீயும் உன் வீட்டுக்காரரும் வரணும் "


"அச்சச்சோ அவரு பிசினஸ் விசயமாக வெளியூர் போயிருக்காருடி "


"சரி நீயாவது வருவியா இல்லை நீயும்?"


"அவருக்கு ஃபோன் போட்டுக்கேட்டுட்டு வாரேன்டி"


"ம்ம் உன் கல்யாணத்துக்கு கடைசிவரை இருந்தவ நானு மறந்துடாத "


மறப்பேனா டி கண்டிப்பா வர்றேன் சரியா நீ ஹேப்பியா இரு "


"தேங்க்ஸ் டி அப்புறம் நம்ம குணா எங்க இருக்கா ?"


அவ போனவாரம் தான் பாரீன் போனாள்
அவ புருஷன் வந்திருந்தாருல அவருகூட நான்கு மாதம் இருந்துட்டு வர்றேன்னு போயிருக்கா"


"அவளுக்கு குழந்தை எத்தனை டி?"


"அவளுக்கு இன்னும் குழந்தை இல்லை.அதான் அவ அங்க போயிருக்கா வரும்போது நல்ல செய்தியா சொல்லுவானு நினைக்கிறேன் பார்ப்போம்"


"சரிடி நான் மத்த ஃபிரண்ட்ஸ்க்கு ஃபோன் பேசிட்டு வாரேன் .கண்டிப்பா நீ வரணும் சரியா ?"என்று போனைத்துண்டித்தாள்.


ரேணுகாவுக்கு ஃபோன் போட..கீழே, தொபீரென்று யாரோ விழுந்த சத்தம்கேட்க இறங்கி ஓடிவந்தாள்.
அம்மா கீழே விழுந்து கிடந்தாள்.


ஒரு பூனை அங்கிருந்து ஓடி மறைந்தது.


"என்ன மா கீழவிழுந்து கிடக்க..பாத்து வரமாட்டியா?"


"நான் பார்த்துத்தான் வந்தேன் ஒரு பூனை வந்து என்மேல் விழுந்து பிராண்டிருச்சு "என்று கையைக்காட்ட...


"சரி சரி எழுந்திருங்க..அடி ஏதும் படலையே"


"இப்படி விழுந்துகிடக்கேன் அடிபடலையா கேட்கிற?"


"இடுப்பெல்லாம் ஒரே வலி பர்ஸ்ட் தூக்குடி.."


"ஓ சாரி மா"


"என்ன சாரி வரவர உன்போக்கே சரியில்லை."


ஆமம்மா இதுயென்ன சிராய்ப்பு ?"


"நான் தமிழ்லதானேடி சொல்றேன்
பூனை பிராண்டிருச்சுனு


"என்ன மா சொல்ற இந்த தெருவில் யார்வீட்டிலும் பூனை இல்லை உன்னை மட்டும் எப்படி பிராண்டும்?"


"அதானே ...ஆனா பார்க்க கருப்பா அசிங்கமா இருந்ததுடி."


"நீ வேற எதையோ பார்த்துட்டு பூனைனு சொல்லுறியா?"


"என்னடி கிண்டலா நான் என் கண்ணால் பார்த்தேன் ."


"சரி விடு வா ஒரு ஆன்டிபயாட்டிக் ஊசி போட்டு வரலாம் பின்ன ஏதாவது செப்டிக் ஆகிடும் "என்று பக்கத்தில் இருக்கும் கிளினிக் அழைத்துப்போனாள் வனிதா.


********


" வாங்க வனிதா என்னாச்சு?"


"அம்மாவுக்கு பூனை பிராண்டிருச்சு"


"எப்போ ?"


"இப்பத்தான்"


"அதுசரி எப்போல இருந்து பூனை வளர்க்க ஆரம்பிச்சீங்க?"


"நாங்க வளர்க்கல டாக்டர்"


"ஓ சாரி அதானே உங்களுக்கு பூனையே பிடிக்காது சொன்னீங்க தானே"


"ஆமா டாக்டர் இந்த பூனை அங்கங்கே திரிஞ்சிட்டு வீட்டை குப்பையாக்கிடும்
முடி வேற சாப்பாட்டுல விழுந்தா டேஞ்சர்."


"ம் சரி தான்"


"அம்மா இங்க படுங்க "என்று அவருக்கு இரண்டு ஊசி போட ஆ...என்று கத்தினாள்.


"என்னம்மா குழந்தை மாதிரி கத்துறீங்க?"


"குழந்தைக்குத்தான் வலிக்குமா என்ன?"


"அது சரி வலி எல்லோருக்கும் இருக்கும் ஆனா அதுக்காக பெரியவங்க நீங்க கத்துவீங்களா?"


"ம்ம் என்று தேய்த்துக்கொண்டே வெளியே வர ..
சரிமா போகலாமா ?"


"டாக்டர் எவ்வளவு பீஸ்?"


"இருநூறு ரூபாய் "


"சரி டாக்டர் வேறு டேபிளட்ஸ்?"


"அதெல்லாம் வேண்டாம்.
அவங்களை ரெஸ்ட் எடுக்க வையுங்க."


"அப்புறம் அந்த பூனை யாரோடதுனு விசாரிங்க ..
ஏதும் அந்த பூனைக்கு நோய் இருக்கானு செக் பண்ணனும்"


"டாக்டர் அந்த பூனை எங்க தெருவிலேயே இல்லை
எங்க இருந்து வந்ததுனு தெரியல"


"சரி, நான் அம்மா பிளட் எடுத்துருக்கேன் டெஸ்ட் பண்ணிக்கிறேன்."


"சரி எப்போ மேரேஜ் ?"


"நாளை மாப்பிள்ளை வீட்டார் வாராங்க நீங்களும் வாங்க டாக்டர்."


"ஓ குட், நாளை ஃப்ரீயா இருந்தா வாரேன்."


"சரி டாக்டர் வரட்டுமா?"


"சரிமா "


அம்மாவைக் கூப்பிட்டு வீடுவரவும்
மதுவும் மச்சானும் வந்திருந்தார்கள்.


"எங்கடி போயிட்டு வர்ரீங்க
அம்மாவுக்கு என்னடி கையில் காயம் ?"


"இருடி அவரை வெளியில் விட்டுட்டு
என்ன கேள்வி? வீட்டைத் திறந்து உள்ளே போய் பேசலாம் "என்று கதவைத் திறக்க உள்ளிருந்து அந்த பூனை வெளியில் ஓடியது


"என்னங்க இது அந்த பூனை தானே ?"


"அது எங்க இங்க வரப்போகுது "


"இல்லங்க நல்லா பார்த்தேன் அது நம்ம ஜெனி தான்."


"சரி சரி கூல் அவ பார்க்கிறா "


"அத்தையைப் படுக்க வை பிறகு பேசிக்கலாம்."


"சரி "என்று வனிதா பக்கம் திரும்பிச் "சரி எப்படி டி நடந்தது?"


" நான் மேலே பேசிட்டு இருந்தேன் திடீர்னு சத்தம் கீழே வந்து பார்த்தேன்
அம்மா கீழ விழுந்து கிடந்தாங்க."


"சரி நீ போய் மச்சானுக்கு காஃபி போட்டு எடுத்துவா ."


"சரிக்கா"


"ஜெனி இப்படி செய்யாது ஆனால் அந்த
பூனை மாதிரி தான் இருக்கு .அங்கிருந்த பேய் இங்கு வந்திருக்குமோ?"


"நல்லவேளை அம்மாவுக்கு ஒன்னும் ஆகல, படாத இடத்தில் பட்டிருந்தா?"


என்னதான் வேணும் அந்த பேய்க்கு...
யாரிடம் கேட்பது என்று யோசிக்க..
கானாடுகாத்தான் காளியப்பன் பேய் ஓட்டுபவர் ஞாபகம் வர அவருக்கு ஃபோன் போட்டாள்.


நீண்ட நேரமாக ஃபோன் போய் கட்டானது.


மறுமுறை ஃபோன் போட ..
எதிர்முனையில் ஒரு பெண் பேசினாள்.


"ஹலோ... உங்களுக்கு யார் வேணும் சாமி இல்லை ,"என்றதும்


"எங்க போயிருக்காங்க அவங்களை எப்படி கான்டெக்ட் பண்றது?"


"அவங்க இங்கதான் இருக்காங்க ஆனால் பேச முடியாது "


"ஏன் மா என்பெயரைச் சொல்லுங்க பேசுவாரு"


"கடவுளே வந்தாலும் இப்போ அவரு பேச மாட்டாருமா"


"என்ன சொல்றீங்க அவ்வளவு ஸ்டிரிக்ட்டா அவரு ,அந்த மாதிரி இல்லையே நீங்க தெரியாம சொல்றீங்க?"


"மேடம் அதுயில்லை பிரச்சினை?"


"பின்ன?"


"கொஞ்ச நேரத்திற்கு முன்னால் அவரை ஒரு பூனை கழுத்தில் கடிச்சிருச்சு அதுனால அவரை
ஹாஸ்பிடலில் சேர்த்துட்டாக "


"ஐய்யய்யோ எந்த பூனை ? எப்படி இருந்தது ?"


"ஒரு கருப்புக் கலர் பூனை மேடம்"


"ஓ சிட் ,என்னங்க நம்ம ஜெனி நம்ம பூசாரியிடமும் சேட்டையைக்காட்டியிருக்கு"


"என்ன சொல்ற மது?"


"ஆமாங்க பூசாரி கழுத்தைக் கடிச்சு இப்போ அவரு ஹாஸ்பிடலில் இருக்காராம்"


"ஓ மை காட் நீ அவரை இப்போதானே நினைச்ச ஆனா அதுக்கு முன்னால் எப்படி இப்படி?"


"அதாங்க தெரியல"


"இந்த பேய்க்கும் நமக்கும் என்னங்க சம்பந்தம்?"


"தெரியலையே ஹனி ,ஆனால் ஏதோ இருக்கு?
நாம கொஞ்சம் கவனமா இருக்கனும்"


"ஆமாங்க.. அநியாயமா ஜெனிவேற போயிடுச்சு."


"சரி உன் தங்கச்சி வர்றா இதைப்பத்திப்பேசி யாரையும் பயமுறுத்த வேண்டாம்"


"என்ன சீரியஸா பேசிட்டு இருக்கீங்க?"
என்றபடி வந்த வனிதாவிடம்


"ஒன்னுமில்ல செல்லம் எதுக்கு மாப்பிள்ளை பார்க்க வர்றாங்க, நானே மாப்பிள்ளை தானே " என்று சொன்னான்.


"ஆமா மச்சான் அவமட்டும் ஓகே சொன்னா இப்பவே நான் கட்டிக்கிறேன் என்றாள்.


ஆசைப்பாரு இரண்டு பேருக்கும்
போடி போய் வேலையைப்பாரு."


"அவதான் சின்ன பொண்ணு உங்களுக்கு அறிவு இல்லையா அப்படி பேசுறீங்க ?"


"கூல் கூல் டி எதுக்கு டி இப்போ டென்ஷன் ஆகுற ?அவளைத்திசைதிருப்பச் சொன்னேன்"
"ஹாஹா பயந்துட்டீங்களா?" என்று சொல்லிச் சிரித்தாள்





தொடரும்....
எழுத்தாளர் நாகா
 
  • Haha
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
417
91
43
Tirupur
இந்த மாப்பிள்ளையோட அலப்பறை 🤣🤣

அதுக்கும் மேல மச்சினி 🤣🤣