[
தொடர்_6
***********

நான் நீ நடுவில் பேய்

************************""""""**********"
இதுவரை...
"நாளை நம்மை அவன் வந்துதான் அழைச்சிட்டு போகணும் அதுவரை நாம் இங்கதான் "என்று பாபு சொல்லிமுடிக்க...
"என்னங்க இது சோதனை ? இதுக்கு முடிவு?"
"அது அவன் வந்தாத்தான் தெரியும்" என்று பாபு சொல்ல...
ஜெனி அவர்களை நோக்கி வந்தது.
அதேநேரத்தில் தனது அறையில்
அமானுஷ்ய சக்திகளைப்பத்தி எழுதிக்கொண்டு இருந்த கத்துகுட்டியின் பின்புறம் இரண்டு பேய்கள் முறைத்துகொண்டு இருந்தன.
இனி....
பாபுவைப் பார்க்க வருவதாகச் சொல்லியவுடனே தன்னைத்தேடி ஜெனிப்பேய் வருமென்று கத்துக்குட்டி போட்ட கணக்குத் தப்பவில்லை.
தனது கட்டுரையை முடித்துக் கோப்புகளை மூடிவைத்து விட்டு நிதானமாகத் திரும்பிய கத்துக்குட்டி
"வா ஜெனி எப்படி இருக்க?
என்ன அமைதியா இருக்க?
ஓ நாம் வந்தது எப்படி இவனுக்கு தெரியும்னா?'
"ஹாஹா உன்னை இங்கே கொண்டுவந்ததே நான் தானே
எனக்குத் தெரியாதா?
ஏன் பின்னால் நிக்கிற ? முன்னால் வா."
ஜெனி முன்னால் வந்தது.
"ஏன் நிக்கிற உட்காரு , "
ஜெனி மீண்டும் முறைக்க..
"சரி சரி கூல் இப்ப எதுக்கு முறைக்கிற?"
"எதற்காக நீ இந்த விசயத்தில் தலையிடுகிறாய்.?"
"இதுயென்ன கேள்வி?"
"அவன் என் நண்பன் அவனுக்கு ஒன்னுனா நான் சும்மா இருக்கணுமா?"
"நீ நினைச்சாலும் அவனைக் காப்பாத்த முடியாது."
"வீணாக நீ என்னோடு பகை வளர்த்துக்காதே விலகிப் போயிடு "
"நீ அவனை விட்டு விலகிப்போயிடு"
"அது ஒருக்காலும் நடக்காது
அவனைப்பழிவாங்காம போகமாட்டேன்"
"அதையும் பார்ப்போம் எந்த காரணமாக இருந்தாலும் என்னைத்தாண்டி நீ அவர்களை ஒன்றும் செய்ய முடியாது."என்றான் கத்துகுட்டி
"வேண்டாம் நீ என்னை உணரும் திறன் பெற்றதால் என்னை அடக்கி ஆளலாம் என்று எண்ணிவிடாதே ."
"நான் நினைத்த நேரத்தில் நினைத்த உருவமெடுப்பேன்
அவன் அந்த மந்திரவாதியைக் காண்பதற்குள் அவர்களை மொத்தமாக முடித்து விடுகிறேன்."
"ஜெனி வேண்டாம் வீணாக உனது ஆசைகளை வளர்த்துக்கொள்ளாதே தேவையற்ற உனது ஆசைகளால்தான் இந்த நிலையில் வந்து நிற்கிறாய்.மீண்டும் உனக்கு இது ஏமாற்றமே ."
"ஹாஹா பார்க்கலாம் " என்றபடி ஜெனி மறைய..
வேண்டாம் என்பதற்குள் ஜெனி கிளம்பிவிட்டது.
*****
அவசர அவசரமாக பாபுக்கு ஃபோன் போட்டான் கத்துக்குட்டி
"ஹலோ பாபு நான் சொல்ற வரை எக்காரணம் கொண்டும் வெளியில் வந்துவிடாதே உன் குடும்பத்தாரையும் வெளியில் அனுப்பாதே"
"என்னாச்சு டா ?"
"ஒன்னுமில்லை."
"சும்மா சொல்லு ஏதும் பிரச்சனையா ?ஜெனியாலா?
அப்போ வீட்டுக்குள் வந்து பிரச்சினை பண்ணாதா?"
"நீங்கள் வீட்டுக்குள் இருக்கும்வரை உயிருக்கு பயமில்லை தவறி வெளியில் வந்தால் உங்களைக் கொன்றுவிடும். "
"யாருடா அது ?"
"இப்போ யாருனு தெரிந்து என்ன பண்ணப்போற?"
"சொன்னதை மட்டும் செய் " என்று போனைத் துண்டித்தான் கத்துக்குட்டி.
பாபுவுக்கு ஒரே குழப்பம் ,
என்ன சொல்ல வர்றான்
சரி வரும்வரை பொறுத்திருப்போம் என்று விட்டுவிட்டான்.
"யாருங்க ஃபோன்ல ?"
"என் பிரண்ட் தான்."
"என்னங்க சொன்னாரு ஒரு மாதிரி இருக்கீங்க?"
"ஒன்னுமில்லை நீ டீ கொண்டு வா" என்று சொல்ல...
"என்னங்க தூங்கிட்டு இருந்த வனி யாரோ அவ பிரண்ட் ஃபோன் பண்ணினானு எங்கேயோ போறேன் சொன்னாங்க...."
"என்னது வனி வெளியில் போறாளா?
இப்ப எங்க அவ ?"
"இப்பதாங்க ரெடியாகிட்டு இருந்தா போயிருப்பா" என்று சொல்லத்தான் கடமை அவளைத் தள்ளிவிட்டு வாசலுக்கு ஓடினான்.
அங்கே அவள் இல்லை வீட்டுக்குள் ஓடிவந்து எல்லா இடமும் தேட வனியைக் காணவில்லை.
"என்னங்க ஆச்சு ஏன் இப்படி அரக்கப்பறக்க ஓடுனீங்க ?"
"அவ பிரண்டைப் பார்க்கத்தானே போறேன் சொன்னா"
"அடக்கிறுக்கு வீட்டைவிட்டு வெளியே போனா உயிருக்கே ஆபத்துனு இப்பத்தான் அவன் சொன்னான்
அதுக்குள்ள......"
அய்யய்யோ என்னங்க அவ போயிட்டாளே அவளுக்கு ஃபோன் போடுங்க..."
இந்த எண்ணம் நமக்கு வரலையே என்று தோன்ற...
வனிக்கு ஃபோன் போட்டான் பாபு
ஃபோன் சத்தம் வீட்டுக்குள் அடிக்க உள்ளேபோய் பார்க்க டேபிளில் ஃபோன் இருந்தது.
"மது இங்க வா , அவ ஃபோனை மறந்துட்டுப் போயிட்டாடி "
"ஐயோ இப்ப என்னங்க பண்றது?"
"சரி யார் வீட்டுக்குப் போறதா சொன்னா ?"
"யாழினி வீட்டுக்குனு"
" அவ நம்பர் இருக்கா?"
"அவ யாருனே தெரியாதுங்க புதுப்பேரா இருக்கு "
"இப்ப என்ன செய்ய ?" என்று இருவரும்
பேசிக்கொண்டு இருக்க..
"இரண்டு பேரும் என்ன தீவிரமா பேசிட்டு இருக்கீங்க ? " என்றபடி பாத்ரூமிலிருந்து வந்தாள் வனிதா.
"எங்கடி போயிட்டு வர்ற?"
"என்னடி லூசு மாதிரி பேசுற பாத்ரூம்ல இருந்து வர்றேன்
எங்க போனீனு கேட்குற?"
"ஐயோ யாரையோ பார்க்கப்போறேனு சொன்ன ?
இங்கிருந்து வர்ற?"
"கிளம்பிட்டு வாசல் போனதும் வயிறு ஒரு மாதிரி இருந்தது சரி பாத்ரூம் போயிட்டுப் போவோம்னு போனேன்"
"ஏதோ கொலைக்குத்தம் பண்ணின மாதிரி இரண்டு பேரும் கேட்கிறீங்க ?"
"ஆமாடி கொலை நடந்திடக் கூடாதுனுதான் பேசுறோம்
ஆமாம் யாரு உனக்கு ஃபோன் பண்ணினா ?"
"என் பிரண்ட் யாழினி "
"சரி அவளுக்கு ஃபோன் போட்டு இங்க வரச்சொல்லு."
"எதுக்கு மாமா ?"
"நீ வரச்சொல்லு காரணம் இருக்கு "
"சரி மாமா" என்று தன் பிரண்ட் யாழினிக்குப் ஃபோன் போட...
யாழினி ஹலோ என்றாள்.
"சொல்லு வனி என்ன திடீர்னு கால்?"
"என்னது..... திடீர் கால்லுனு கேட்கிற?
கொஞ்சம் முன்னாடி நீதானே அர்ஜென்ட் உன்னை பார்க்கணும் வா சொன்ன?"
"என்னடி உளறுற ?
எங்க வரச்சொன்னேன் ?"
"உங்க வீட்டுக்கு ?"
"என்னாச்சு உனக்கு நான் பாரீன் வந்து இருபது நாளாச்சு,அங்க வீட்ல யாருமே இல்லை."
"நான் எதுக்குடி வரச்சொல்லப்போறேன் ?" என்றாள்.
"சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்டி எப்படி இருக்கனு கேட்கத்தான் ஃபோன் போட்டேன் வைக்கட்டுமா ?" என்று சட்டென்று கட் பண்ணினாள் வனி.
"என்னாச்சு இவளுக்கு ஏன் இப்படி உளறுறா ? நான் பாரீன் வர்றது குரூப்ல சொல்லிட்டு தானே வந்தேன்.
என்னவோ ? "என்றபடி அவள் வேலையைப் பார்க்கப்போனாள்.
வனிதாவின் முகம் ஒருமாதிரியாக மாற...
"வனி என்னாச்சு ?"
"மாமா அவ பாரீன்ல இருக்கிறாளாம்"
"என்னது பாரீனுக்கா ஃபோன் போட்ட?"
"இல்லை லோக்கல் நம்பர்தான் ரோமிங்கல இருக்கும் போல ,
ஆனால் அவள் நம்பரில் இருந்துதான் வந்தது."
"நல்லா பாரு வனி" என்றதும் வந்த எண்ணைத் தேடினாள் ,அதில் யாழினி எண் இல்லை.
அப்படியே அதிர்ச்சியாகி நின்றாள்.
அந்த ஃபோனை வாங்கிப் பார்த்த பாபுவும் அதிர்ச்சியானான்.
டிஸ்பிளேயில் ஜெனி என்று இருந்தது.
பாபுவுக்கு வியர்த்துக்கொட்ட வச்ச கண் வாங்காமல் அதையே பார்த்துக்கொண்டு இருக்க ...
"என்னங்க ஆச்சு பேயறைஞ்ச மாதிரி இருக்கீங்க ?"
"பேய் தான்டி அறைஞ்சிடுச்சு "
"என்னங்க சொல்றீங்க ? என்னாச்சு ?" என்று ஃபோனை வாங்கிப் பார்க்க..
"என்னங்க ஜெனினு இருக்கு"
"ஆமாடி அவளைப் ஃபோன் போட்டு வரச்சொன்னது அந்த ஜெனி தா "
"அய்யய்யோ வனி போயிருந்தா என்ன ஆயிருக்கும்?"
"அதையேன் நீ நினைக்கிற நம்ம சாமிதான் நமக்கு துணை."
"யாரும் எங்கேயும் போகாதீங்க " என் பிரண்ட் வரும்வரை...
"சரிங்க " என்றபடி உள்ளே போனாள் மது.ண
"வனி நீ எந்த கால் வந்தாலும்
எடுக்காத "
"சரி மாமா" என்று அவளும் உள்ளே போனாள்.
"இந்த பேய் விளையாட்டினால் நமது ஆபிஸ் வேலைக்கும் போகமுடியவில்லை.
வனிதாவுக்கும் கல்யாணம் முடிய மாட்டிங்குது.
என்ன தான் பிரச்சனை ? " என்று
பாபு யோசிக்க ஆரம்பித்தான்.
**************
" ஹனி எப்போ பாரு நீ என்கிட்ட முத்தம் கேட்கிறதுலேயே இருக்கியே உனக்கு போர் அடிக்கலையா ? " என்று சிணுங்கினாள் மாயா.
"என்ன பேபி நீ இப்படி சொல்லிட்ட
நீ என்னோட உயிர் உன்னை கொஞ்சாமல் இருக்க முடியுமா?"
"ஏய் ஓவரா சீன் போடாத ..
நீ நேத்து சுகன்யா கூட சினிமா போனீன்னு கேள்விப்பட்டேனே..."
"யாரு ஹனி அது உன்னைவிட்டா
எனக்கு யாரு தெரியும்.
போ இனி பேச மாட்டேன் " என்று முகத்தைத் திருப்பிக் கொண்டான்
சுரேஷ் .
"சரி சரி நான் எதுவும் சொல்லல இப்போ கிஸ் வேணுமா வேணாமா நான் கிளம்பவா" என்றாள் மாயா.
"ஈஈஈஈஈ வேணும் ?"
"ரொம்ப வழியாதே இதுன்னு மட்டும் ரோசம் இருக்காதே "
"லவ்வர்கிட்ட என்ன மான ரோசம்..?"
"சரிதான் விட்டா நீ என்னவெல்லாமோ சொல்லுவ ஆத்தாடி நான் போறேன் பா என்று எழுந்தவளை இறுக்கி அணைத்து இதழ்களில் நீண்ட முத்தத்தைக் கொடுத்தான்."
"ச்சீ போடா முரடா இனி உன் பக்கமே வரமாட்டேன்" என்று கோபித்துக்கொண்டு கிளம்பினாள் மாயா.
"ஏய் ஏய் நில்லுடி ..சாரிடி ஏதோ எமோஷனல்ல பண்ணிட்டேன் ."
"போதும்டா உன் நடிப்பு எப்போ பாரு
இதையே சொல்லிட்டு ..
வர்ற நேரத்தில் எல்லாம் உதட்டைச் கடிச்சு வச்சிடுற"
"வீட்டுக்குப் போனா எங்க அம்மாவுக்கு விளக்கம் சொல்லியே சமாளிக்க முடியலை."
"சீக்கிரம் மேரேஜ் பண்ணிக்கோ ஆசை தீரக் கடிச்சுக்கலாம் சரியா " என்றாள் மாயா.
"அதுக்குள்ள என்ன அவசரம்?
இப்போதானே லவ் பண்ண ஆரம்பிச்சிருக்கோம்."
"அடப்பாவி நாம லவ் பண்ண ஆரம்பிச்சு ஆறு வருசமாச்சு ஒவ்வொரு வருடமும் இதையே தான் சொல்ற .."
"இரண்டு தடவை அபார்ஷன் வேற பண்ணியாச்சு , என்னைக்கு என் வீட்டுக்குத் தெரியப்போகுதோ அத்தோடு என் கதை முடிஞ்சிடும் ஆனா நீ கல்யாணம் பண்ணிக்கற மாதிரி இல்லை."
"உன்மேல நம்பிக்கை குறைஞ்ச்சிட்டு வருது .என்னமோ போ இருந்தாலும் நீ இல்லாம இருக்க முடியாதுங்கறது மட்டும் உண்மை."
"சீக்கிரம் வீட்டுல பேசி நல்ல முடிவா சொல்லு ஓகே.."
"பேசிட்டேன் ஹனி, நீ கவலைப்படாதே
அடுத்த மாதம் வேலைல ஜாயின் பண்ணிடுவேன் அப்புறம் நம்ம கல்யாணம் டும் டும் டும் தான்" என்று சொல்ல..மாயா ஓடிவந்து கட்டிக்கொண்டாள்.
"நிசமாவாடா"
"ஆமா ஹனி நம்பு" என்றதும்
அவனது நெத்தியில் அழுத்தமாக ஒரு இச் ..தந்துவிட்டு நடக்க..
"நெத்தியில் மட்டுந்தானா ?" என்று ஏக்கமாகப் பார்க்க..
"போதும் போதும் "என்று பழித்து விட்டு நடந்தாள்.
அவள் போவதையே பார்த்துக்கொண்டு நின்றான் சுரேஷ்.
அவள் முகம் மறையும் வரை காத்திருந்து விட்டுத் தனது ஃபோனை எடுத்து "டார்லிங் நான் வா.ஊ.சி.பார்க்ல தான் இரண்டு மணி நேரமா வெயிட் பண்றேன் நீ ஏன் வரல ,போ நான் போகிறேன்" என்றதும் எதிர்முனை ஏதோ சொல்ல சுரேஷின் முகம் பிரகாசமானது.
********
கத்துக்குட்டி கிளம்புவதற்கு தயாராக இருக்க ஜெனி வந்து நின்றது.
தொடரும்....
எழுத்தாளர் நாகா