தொடர்_22

நான் நீ நடுவில் பேய்

************************""""""**********
இதுவரை...
"அதானே என்னை எதுக்கு இவங்களோட சேர்த்து கட்டிவச்சிருக்க" என்று வசந்த் கத்த...
அதுவரை அமைதியாக இருந்த கத்துக்குட்டி அவர்கள் இருவரது கன்னத்திலும் பளார் பளார் என அறைந்துவிட்டு அந்த பங்களாவே அதிரச் சிரித்தான் அது பேய் குரலாக எதிரொலித்தது.
இனி....
" நம்பிக்கைத் துரோகி ...கூட இருந்தே குழி பறிஞ்சிட்டியேடா அந்த பேய்களுக்கு உதவுறேனு என்னையும் என் குடும்பத்தையும் இப்படி நிக்க வைச்சிட்டியேடா ....."
மீண்டும் பலமாகச் சிரித்தான் கத்துக்குட்டி .
"எதுக்குடா இப்ப சிரிக்கிற...?"
"ஓ நான் சிரிப்பது ஏன்னு தெரியலையா "
தெரியலை , சொல்லித்தொலை ...
எவ்வளவு காசு வாங்கின ?
இப்படி எங்க கழுத்தறுக்க..."
இப்படி சொன்னதும் கத்துக்குட்டி அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து அழ ஆரம்பித்தான்.
"டேய் டேய் உன் நடிப்பு ரொம்பவே ஓவர் டா .சிரிக்கிற அழற இங்க என்ன சூட்டிங்கா போகுது...."
மீண்டும் மீண்டும் அழவே "டேய் பைத்தியம் இப்ப எதுக்க டா இந்த டிராமா..."
பெருங்குரலெடுத்து அழுதவன் எழுந்து வந்து நிதானமாக கண்களைத் துடைத்துக் கொண்டு
"என்னையும் உங்களைமாதிரி துரோகி ஆக்கிட்டீங்களேடா"
"நாங்க என்னடா பண்ணினோம் ?"
"என்னடா பண்ணல இன்னுமா உங்களுக்கு புரியல ?"
"அட பைத்தியங்களே கதை டைம்பாஸ் பண்றதுக்கா சொன்னேன் ?"
"பின்ன ?"
"ஹாஹா நல்ல காமெடி அந்த குடும்பம் அழிந்து போனதே உங்களால் தானே டா "
"என்னடா பைத்தியம் மாதிரி பேசுற ?"
"நான் பைத்தியமா ?"
"அண்ணா ,ஒன்னுமே புரியல அண்ணா நீங்க சொன்ன கதைக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்?"என்றாள் மது
"அப்படி கேளு அந்த கதையில் வசந்த் சுரேஷ் வேறு யாருமில்லை உன் புருஷனும் இதோ இருக்கானே
இவனும் தான்" என்று பாபுவையும் வசந்தையும் கைகாட்டினான்
"என்னடா உளறுற நாங்க யாரைடா கொலை பண்ணினோம் எங்களைப் பார்த்தா அப்படியா தோணுது "
"ஆமா அண்ணா அவரு அப்படி பட்டவர் இல்லைணா "
"அடச்சீ வாயை மூடு, நீ மட்டும் என்ன அதுல ஒருத்தி தானே "
"என்ன அண்ணா புதுக்கதை யா இருக்கு "
"அந்த மூனு பேர்ல ஒருத்தன் நீதா "
"ஆம்பளை எப்படிணா பொண்ணா ஆகமுடியும் ?"
"உண்மையிலே உங்களுக்கு பைத்தியம் தான் எங்களை இங்க கடத்தி வச்சிட்டு ஏதோ கதைசொல்லி குழப்புவதோட ஏதோதோ சொல்றீங்க "
அதுவரை அமைதியாய் இருந்த பாட்டி
ஓங்கி அறைவிட்டாள்.
"நாயே எல்லோரும் சேர்ந்து அந்த குடும்பத்தையே அழிச்சிட்டீங்களே
உங்களை" என்று அவள் கழுத்தை இறுக்க...
"கொஞ்சம் இருங்க பாட்டி அவங்க ஏன் சாகப்போறாங்கனு சொல்ல வேண்டாமா ? நான் யார்னு தெரிய வேண்டாமா ?"
"டேய் அதைத்தானே டா இவ்வளவு நேரமா கேட்கிறேன் ?"
"இப்பவாவது கேட்டியே..ஹாஹாஹா..."
"மாயா ஜெனி யார் தெரியுமா ?"
"அதான் சொன்னியே அநியாயமா கொல்லப்பட்ட பொண்ணுங்கனு"
"அவங்க யாருனு தெரியுமா?"
"அது எங்களுக்கு எப்படிடா தெரியும் ?"
"இப்பத்தெரியும்" என்று தன் கண்களைச் சுவற்றில் பதிக்க ...பழைய சம்பவங்கள் அனைத்தும் திரையில் ஓடுவதைப்போல தெரிய வசந்த் பாபு மது மற்றும் அவள் அம்மா தங்கை ஐந்து பேரும் அந்த கொலைக்கு காரணமான ஐந்து பேராக இருந்து மீண்டும் பிறந்து வந்தது தெரிந்தது .கடைசியாக அவர்கள் தலை தரையில் தனியாக உருளுவதையும் கண்டு
இப்போது இந்த ஐந்து பேரும் அலறத்தொடங்கினர்.
"ப்ளீஸ் போன ஜென்மத்தில் பண்ணிய பாவத்துக்கு இப்ப வந்து தண்டிக்கிறேனு நீ பண்றது எந்த விதத்தில் நியாயம் ?"
"நியாய தர்மம் பேசுற தகுதி உங்களுக்கு இல்லை "
"ப்ளீஸ் கத்துக்குட்டி அந்த பேய்களின் இருந்து எங்களைக் காப்பாத்து ."
இப்போது அந்த பாட்டி பலமாக சிரித்தாள்
"ஏய் கிழவி நீ எதுக்கு இப்ப சிரிக்கிற ?"
"உங்களை நினைச்சுத்தான் "
"அவிழ்த்து விட்டா உன்னை கொன்னுடுவேன் ஒழுங்கா சிரிப்பதை நிறுத்துனு கத்தினான் பாபு ."
""அடேய் முட்டாளே இந்த கிழவிகிட்டத்தான் உன் வீரத்தைக் காட்டமுடியும் "
"இதோ உங்களைக் கொல்லப்போறானே இந்தப்புள்ள
இவன்கிட்ட காட்டுங்கடா "என்று சொல்ல..
"டேய் கத்துக்குட்டி நான் உன் பிரண்ட் டா என்னடா சொல்லுது அந்த பாட்டி நீ எங்களைக் கொல்லப்போறியா ?"
"இன்னுமாடா புரியலை உனக்கு "
"நான் காட்டிய படத்துல உங்கள் ஐந்து பேரை மட்டும் தானே பார்த்த இப்ப பாரு "என்று மீண்டும் படம் காட்ட நீண்ட வாளோடு கத்துக்குட்டி நின்றிருந்தான்.
"டேய் நீயா எங்களை கொல்லப்போற ?
கூட இருந்து குழிபறிச்சிட்டியே "என்று கதறினான்
"நல்லா அழுங்கடா இப்படித்தானே அழுது அழுது அடங்கிப்போனோம் "
"என்னது நீயுமா ?அப்போ நீதான் மாயா ஜெனி ?"
"ஹாஹா இப்பவாவது புரிந்ததே அடிமுட்டாள்களே நான் கத்துக்குட்டி இல்லடா கார்த்தி "என்று கத்தினான்
" என்னது கார்த்தியா அப்போ அந்த மாயா ஜெனி யாரு ?"
"நானே தான், மாயாவும் ஜெனியும் மீண்டும் பிறக்கலடா ,எல்லாம் நான் செய்த மாயாஜால வித்தை உங்களை எல்லாம் இந்த வீட்டில் வைத்து முடிக்கத்தான் எல்லாம்" என்று கத்தினான்.
"ப்ளீஸ் டா நாங்க தெரியாம பண்ணிட்டோம் அதுக்காக இப்படி எங்களை வெட்டி நீயும் பாவியாகிடாதடா"
"அப்போ ஒரு ஒன்னு சொல்றேன்
பண்ணுறீங்களா ? உங்களை வெட்டாம இருக்கேன்."
"எங்க சொத்து சுகம் அத்தனையும் வேணா எழுதி வைக்கிறோம் எங்களை விட்டுடு என்ன வேணா எடுத்துக்கோ ப்ளீஸ் "என்று கெஞ்சினான் பாபு.
"உங்க சொத்து எனக்கு எதுக்குடா" என்றவாறு பாட்டி என்று குரல்கொடுக்க அவள் திரும்பிப்பார்த்தவள்
அவள் ஒரு பெட்டியைத் திறந்து ஒரு கர்ச்சீப்பை எடுத்து கொடுத்தாள்.
"இதோ உனது டெக்னிக் தான் இதை உன் மனைவிக்கு கொடுத்துடு நீங்கள் எல்லோரும் சேஃப்பா வீட்டுக்குப் போகலாம்" என்று சொல்ல...
பாபு மதுவின் பக்கம் திரும்ப..அவள் "வேண்டாங்க" என்று கெஞ்சினாள்.
"இங்க பாரு பேபி நீ இறந்தால் நாங்க நாலு பேரும் பிழைப்போம் "என்று சொல்ல அவள் நோ என்று கத்தினாள்
"உங்களுக்கு ஐந்து நிமிடம் தாரேன் நீங்களே முடிவு பண்ணிக்கோங்க யாராவது ஒருத்தர் உயிரைக்கொடுங்க மற்றவர்களை விட்டுவிடுகிறேன் "என்றான் கத்துக்குட்டி.
நேரம் செல்லச்செல்ல ஒருவரை ஒருவர் பார்க்க யாரும் ஒத்துக்கொள்வதாயில்லை பாட்டி அவர்களை நோக்கிப்போனாள்
அந்த அறைமுழுவதும் விசம் பரவத்தொடங்கியது ஒவ்வொருவராக சுருண்டு விழத்தொடங்க கத்துக்குட்டி பலங்கொண்ட மட்டும் சிரித்துக்கொண்டே இருந்தான் பாட்டி அவனைத் திரும்பிப் பார்க்கத் தனது ஆசை நிறைவேறிய மகிழ்சசியில் காற்றோடு காற்றாக கலந்து மறைந்தான்.
பாட்டியும் அவர்களோடே சுருண்டு விழுந்தாள் அவள் உதடுகள் சிரித்த வண்ணம் இருந்தன.
"போலோனியம் 210" இப்போது முழுவதுமாக ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டது.
முற்றும்.
எழுத்தாளர் நாகா