• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நான் நீ நடுவில் பேய் _17

writer naga

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 23, 2024
40
57
18
Chinna Rettaiyurani Ramanathapuram
தொடர்_17
***********


👻👻👻நான் நீ நடுவில் பேய்👻👻👻
************************""""""**********"


இதுவரை..



சுரேஷ் வசந்த்துக்கு தெரியாமல் தன் பாக்கெட்டில் வைத்து எடுத்த வீடியோவைப் பார்த்து சிரித்தான்.


இனி...


மாயாவுக்கு இரவு கண்ட கனவில்
இருந்து மீளமுடியவில்லை.
என்ன செய்வது பாட்டி என்னை மிரட்டுகிறாள்.


அம்மாவும் படுக்கையில் நானோ முடமாக தங்கை வயசுக்கு வந்த பொண்ணு தம்பி விபரம் தெரியாதவன் நினைத்து நினைத்து அவளால் தூங்க முடியவில்லை சாப்பிட முடியவில்லை .


அவள் மனத்தில் செல்லரித்துக்கொண்டிருந்த அந்த உண்மையைச் சொல்ல வேண்டும் இல்லையென்றால் தலைவெடித்துவிடும் போலிருந்தது.


கடைசியில் என்ன நடந்தாலும் உண்மையை போலீஸிடம் சொல்வதென முடிவும் எடுத்துவிட்டாள்


ஆனால் அதனை வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் செய்ய வேண்டும் என்று நினைத்தாள்
அதன்படி ஒரு கடிதம் எழுதித் தனது தம்பியிடம் தந்து போலீஸ்காரர் ஒருவரிடம் யாரோ ஒருவர் கொடுத்ததாகச் சொல்லிக் கொடுக்கச்செய்தாள்.


அதன்பிறகே அவள் நிம்மதியாக இருந்தாள் .அவளது இந்த திடீர் மாற்றம் ஜெனியை யோசிக்க வைத்தது.இருந்தாலும் அதனைக் காட்டிக்கொள்ளாமல் தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.


மாயா அதன்பிறகு செய்தித்தாளில் கொலையாளி பற்றிய தகவல் வராதா என்று தேடத்தொடங்கினாள்
நாட்கள் செல்லச்செல்ல எந்த தகவலும் இல்லாததால் தம்பி கார்த்தியை அழைத்து
" நீ யாரிடம் கொடுத்தாய் ?" என்று கேட்டாள்.


"அக்கா டெய்லி நம்ம வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற டீக்கடைக்கு டீக்குடிக்க பெரிய மீசைவச்சிட்டு ஒரு அங்கிள் வருவாங்கதானே அவர்கிட்ட..."


"சரி அவர் ஏதும் சொன்னாரா ?"


"இதை யார் கொடுத்ததுனு கேட்டார் நான் ஓடிவந்துட்டேன்."


இவர்கள் பேசிக்கொண்டு இருக்க ஜெனி வந்தாள் .


"சரி நீ போய் விளையாடு யார்கிட்டேயும் இதைப் பற்றி பேசாதே"
என்று கண்டிப்பாகச் சொன்னாள் மாயா.
" சரிக்கா" என்று ஓடிவிட்டான்


***************


வசந்தும் சுரேஷும் ஒருவருக்கொருவர் போலீஸில் மாட்டிக்கொண்டால் மற்றவரைச் சொல்லித் தப்பிக்க ஆதாரங்கள் சேகரித்து வைத்துக்கொண்டு அவரவர் ஒரு தொழிலைத் தொடங்கி மிகப்பெரிய அளவில் பணக்காரர்களாகி விட்டனர்.


கார்த்தி கொடுத்த மாயாவின் மொட்டைக் கடுதாசியின் உண்மை உணர்ந்து இன்ஸ்பெக்டர் நவீன் தனது சீக்ரெட் ஆபரேஷனைத் தொடங்கினார்.


அப்போது அவருக்கு ஒரு ஐயம் வரவே மீண்டும் அந்த கடிதத்தை எடுத்துப்படித்தார்.


#கனவுதான் என்றாலும் அது நிசம்
இறந்தவனின் இடம் தெரியாது
ஆனால் தடம் தெரியும்
பிழைத்தவனின் முகம் தெரியும்
ஆனால் முகவரி தெரியாது
அடுத்தது என்னவோ
ஆராயுங்கள் ?

#மார்க்கெட் மர்மம்


இந்த கடிதத்தை எழுதிய யாரோ இந்த சம்பவத்தைப் பார்த்திருக்கிறார்கள்
ஆனால் சொல்ல முடியாத நிலை.
ஆனால் இது கனவு என்றும் நிசமென்றும் குழப்பி இருக்கிறது


நவீன் மூளையைக் கசக்கிப்பிழிந்து தேடத்தொடங்கினான்


அப்படியானால் இவனோடு ஒருவன் இருந்திருக்கிறான் அவன் உயிரோடு இருக்கிறான் அவன் முகம் இந்த கடிதத்தை எழுதியிருப்பவர் பார்த்திருக்கிறார் கொலையாளி யார் என்பதும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு


அடையாளம் தெரியாத கொலையாளியைத் தேடுவதை விட அடையாளம் கண்டுகொண்ட இந்த நபரைத் தேடினால் என்ன ?


அந்த சிறுவனைப் பிடித்தால் அந்த கடிதம் கொடுத்தவரைக் கண்டுபிடிக்கலாம் என்று தோன்ற நவீன் கார்த்தியைத்தேடி புறப்பட்டான்.


************************


அவனுக்கு வரவேண்டிய பணம் வராததால் டென்ஷனாகி இருந்தான் வசந்த் .


திடீரென அவனுக்கு ஒரு ஃபோன் வர எடுத்து ஹலோ என்றான்


எதிர் முனையில் பேசியவரின் செய்தி கேட்டு அந்த ஏசியிலும் அவனுக்கு வியர்க்க ஆரம்பித்தது.


போலோனியம் _210



" ஹலோ நீங்க யாரு ?"


"நான் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் நீ யார் ? உனது தொழில் என்ன ?உனது பழைய வாழ்க்கை என்ன ? நான் அறிவேன் "


"டேய் என்னடா மிரட்டுறியா ?"


எதிர் முனை ஹா ஹா என்று தொடர்ந்து சிரித்தது.


"டென்ஷன் பண்ணாதே நீ யார் முதலில் அதைச்சொல் "


"அதைத்தெரிந்து என்ன செய்யப்போகிறாய் ?"


"ஒன்னும் பண்ண மாட்டேன் "


"நீயா ? அதான் ஒரு குடும்பத்தையே கொலைசெய்தாயா?"


"ஏய்..ஏய்..நா..நா‌.கொலையா..நாக்கு குளற.."


"அடடே நல்லா நடிக்கறியே, ஆஸ்கார் அவார்டு தரலாம் ஆனால் உனக்கு அதைவிட பெரிய பரிசு காத்திருக்கிறது" என்று சொல்லிவிட்டு
ஃபோனைத் துண்டிக்கக் கோபத்தின் உச்சகட்டத்திற்குப் போனான் வசந்த் .


"இவன் யார் புதிதாய் முளைத்த விசச்செடி.ஒரு வேளை இது சுரேஷ்ஷின் வேலையாக இருக்குமோ ?
அய்யய்யோ அவனாக இருந்தால் நிச்சயம் நாம் தப்பிக்க முடியாது
ஆனால் அவன் ஏன் நம்மை மிரட்ட வேண்டும் ?"


"அவனைப் பற்றிய இரகசியம் நமக்குத் தெரியும் என்று அவனுக்கும் தெரியுமே "


"அப்படியானால் வேறு எவரோ தான் இதைச் செய்கிறார்கள்
யாராக இருக்கும்" யோசித்துக்கொண்டு இருக்க...


"சார் உங்களுக்கு ஒரு ஃபோன் வந்திருக்கு " என்றாள் ஸ்டெனோ ரீட்டா


"யார் ?"


"தெரியலை சார் பட் உங்ககிட்ட முக்கியமான விசயம் பேசணுமாம்"


"நீயே கேட்கவேண்டியது தானே ?"


"எவ்வளவோ கேட்டுட்டேன் சார் ஏதோ புது பிசினஸ் விசயமாம் "


"அப்படி என்ன விசயமாம் ?"


"போலோனியம் 210 " என்றதும் அவளது வாயைப் பொத்தித் தனது கேபினுக்குள் இழுத்துச்சென்றான்.


"ஏய் லூசு பப்ளிக்லயா சொல்லுவ ?"


"சாரி டார்லிங் நீங்க கேட்டீங்க"


"அதுக்கு இப்படியா பேசுவ ?"


"என்னாச்சு டார்லிங் அந்த பேரைக் கேட்டதும் இப்படி வியர்க்குது ?"


"ஒன்னும் இல்லை கொஞ்சம் தண்ணி கொடு" என்று தனது சேரில் உட்கார ..
ரீட்டா தண்ணீரை ஊற்றி அவனிடம் தந்தாள்


தண்ணீரைக் குடித்தும் அவனது பதட்டம் நிற்கவில்லை.


"என்னாச்சு இப்படி துடிக்குது?"


"அ.அது...வந்து.." என்று திணற..
அவனை இழுத்துப்பிடித்து உதட்டில் நச்சென்று முத்தமிட்டாள்.


ஐந்து நிமிடங்கள் அந்த முத்தம் தொடர யாரோ கதவைத்தட்டுவது கேட்டது .


தன்நிலைக்கு வந்த ரீட்டா தனது ஆடைகளைச் சரிசெய்து கொண்டு
போய்க் கதவைத் திறந்தாள்.


சுரேஷ் நின்றுகொண்டு இருந்தான்.


*******************


மாயா எதிர்வீட்டில் இருந்த டீக்கடையில் நின்று டீ குடிப்பது போல தன்னிடம் மொட்டைக்கடுதாசியைத் தந்துவிட்டுப்போன அந்த சிறுவனை(கார்த்தியை) பார்த்துக்கொண்டிருக்க ..


பள்ளிவிட்டு பசங்களோடு விளையாடியபடி வந்த கார்த்தி போலீஸைக் கண்டதும் பயந்து ஓட...


"ஏய் ஏய் தம்பி இங்க வா
பயப்படாதே" என்றான் நவீன்.


பயந்து பயந்து அவன் அருகில் வர..


"எதற்காக நீ ஓடினாய்??"


"அதுவந்து நீங்க பிடிச்சிட்டு போய்விடுவீங்கனு பயம் "


"உன்னை எதுக்குப் பிடிச்சிட்டு போகணும் நீ என்ன தப்பு பண்ணின ?"


"அன்னிக்கு லட்டர் தந்தேன்ல"


"அதுக்கு என்ன நல்லது தானே செஞ்ச ..அது சரி அந்த லட்டரை யார் கொடுத்தா அதுமட்டும் சொல்லு "


"மாட்டேன் அதுமட்டும் கேட்காதீங்க "


"ஏன்பா"


"அவங்க சொல்லக்கூடாதுனு சொன்னாக அவங்களுக்கு பிரச்சினை வரும்னு"


"அதெல்லாம் நீ கவலைப்படாதே அவங்களுக்கு பிரச்சினை வரக்கூடாதுனா நீ சொல்லித்தான் ஆகணும் இல்லைனா அவங்க உயிருக்கு ஆபத்து " என்றான் நவீன்.


"என்ன சொல்லுறீங்க சார் அக்காவுக்கு ஆபத்தா ?" என்று உளறியவன் நாக்கைக் கடித்தான்.


"என்னது அந்த கடிதத்தை எழுதியது உன் அக்காவா ?"


முதலில் மறுத்தாலும் பிறகு அத்தனையும் ஒப்புக்கொண்டான்.
இவர்கள் இருவரும் பேசுவதை இரண்டு கண்கள் பார்த்துக்கொண்டிருந்தன


தொடரும்


எழுத்தாளர் நாகா
 
  • Love
Reactions: Kameswari