...
தொடர்_18
***********

நான் நீ நடுவில் பேய்

************************""""""**********"
இதுவரை..
"என்ன சொல்லுறீங்க சார் அக்காவுக்கு ஆபத்தா ?" என்று உளறியவன் நாக்கைக் கடித்தான்.
"என்னது அந்த கடிதத்தை எழுதியது உன் அக்காவா ?"
முதலில் மறுத்தாலும் பிறகு அத்தனையும் ஒப்புக்கொண்டான்.
இவர்கள் இருவரும் பேசுவதை இரண்டு கண்கள் பார்த்துக்கொண்டிருந்தன
இனி ....
நவீன் கார்த்தியிடம் யார் அந்த கடிதத்தைத் தந்தது என்று கேட்டு அவன் வாயால் உண்மையை வாங்கிக்கொண்டு இருக்க.. புதிய ஆள் ஒருவன் அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டு நின்றான் உடனே
பேச்சை நிறுத்திவிட்டு அவனை நோக்கி நடந்தான் நவீன்
நவீன் அவனை நோக்கி வருவதை கண்டவுடன் அந்த நபர் அங்கிருந்து ஓட தொடங்கினான் ,நவீன் திரும்ப வந்து அவன் பைக்கை எடுத்துக் கொண்டு அவனைத் துரத்திக் கொண்டு போனான்.
இதுதான் சமயம் என்று கார்த்தி வீட்டுக்கு ஓடினான்
மூச்சிரைக்க ஓடிவரும் கார்த்தியைக் கண்ட மாயா " என்னாச்சுடா உனக்கு" என்று கேட்டாள்
"அது வந்து.. அது வந்து" என்று தயங்க
"சொல்லு என்ன ஆச்சு ஏன் இவ்வளவு பதட்டமா ஓடிவந்த ?"
"அக்கா அந்த போலீஸ்காரர் என்னைப் பிடித்து விட்டார்"
"அப்புறம் என்ன ஆச்சு
நீதான் அந்த லெட்டரை கொடுத்தனு நான் சொல்லிட்டேன்"
"அடப்பாவி என்ன காரியம் பண்ணுன உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு தானே சொன்னேன்"
"ஆமாக்கா உனக்கு பிரச்சனை வரும்னு அந்த போலீஸ்காரர் சொன்னதால சொல்ல வேண்டியதா போச்சு"
"எனக்கு என்னடா பிரச்சனை வரப்போகுது அந்த போலீஸ்காரர் உன்னை ஏமாத்தி உண்மையை வாங்கி இருக்கிறார்"
"இல்லக்கா அந்த போலீஸ்காரர் பார்த்தா அப்படி தெரியல"
"ஆமா நீ பெரிய ஆளு உனக்கு தெரியும் சரி சரி நான் பாத்துக்கறேன் நீ போய் கால் மூஞ்சி கழுவிட்டு ஜெனிகிட்ட சொல்லி டீ போட்டு சாப்பிடு"
"சாரிக்கா"
"பரவால்லடா நான் பாத்துக்குறேன் சொல்லிட்டேன்ல வேற ஏதாவது கேட்டாரா?"
"இல்லக்கா வேற ஏதோ கேட்க வந்தாரு அதுக்குள்ள யாரோ ஒருத்தர் நாங்க பேசுறத கேட்டது அவரை துரத்திகிட்டு போயிருக்காரு"
"ஓ சரி நீ போ "என்று சொல்லிவிட்டு யோசிக்க ஆரம்பித்தாள்.
"அந்தக் கொலை ஏதோ பகையால் நடந்தது போல தெரியவில்லை இது வேறு ஏதோ கும்பல்களுக்கு இடையேயான கௌரவ கொலையாக அவளுக்கு பட்டது"
"பாட்டி சொன்னது போல தேவையில்லாமல் மூக்கை நுழைத்து விட்டோமா ?" என்று அவளுக்கு புத்தியில் உரைக்க ஆரம்பித்தது.
அதைப்பற்றி யோசித்து ஒன்றும் ஆகப் போவதில்லை இனி என்ன செய்யலாம் என்று மனதுக்குள்ளே கணக்குப் போட ஆரம்பித்தாள்.
**********
போலோனியம் என்ற பெயரைக் கேட்டதும் படபடத்து வியர்க்க ஆரம்பித்த வசந்தைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டாள் ரீட்டா.
அதற்குள் யாரோ கதவைத்தட்ட போய் திறந்தாள் .டிப்டாப்பாக நின்றிருந்த ஆசாமி கண்ணாடியைக் கழற்றாமல்
"வேர் இஸ் ஹி" என்றான்
"கு ஆர் யூ , மை பாஸ் இஸ் பிசி நவ்"
என்று கதவைச் சாத்தப் போனவளை
"போலோனியம் _210 "என்று சொல்லி நிறுத்தினான்.
இந்த பெயரைக் கேட்டதும் உள்ளே வாங்க என்று அழைத்துப்போக ..
"வா மச்சான் எப்படி இருக்க ?"
"என்னடா நாடகம் ஆடுறியா ?"
"பார்த்தா மச்சான் மாமன் இல்லனா எதிரி"
"என்ன மச்சான் சொல்ற உன்னை எங்கே பார்ப்பேன் நினைச்சேன்"
நீ என்னடான்னா நாடகம் அதுஇதுனு சொல்ற ?"
"பின்ன நமக்கு மட்டுமே தெரிஞ்...ச...".என்று சொல்லி நிறுத்தியவன்
"ரீட்டாவை வெளிய போ "என்றான்
அவள் வசந்த் பக்கம் திரும்ப அவனும் கண்ணால் ஜாடை காட்ட ..அவனை முறைத்தபடி வெளியே போனாள்
"இப்ப சொல்லுடா"
"என்ன சொல்ல உன் லைப் நல்லா இருக்கட்டும்னு உனக்கு ஹெல்ப் பண்ணினா நீ என்னையே மாட்டி விடுவதற்கு பிளான் பண்றியா ?"
"என்ன மச்சான் இப்படி சொல்லிட்ட எப்பவுமே உன்னோட நன்றியை நான் மறக்க மாட்டேன்"
"இந்த நடிப்பு எத்தனை காலத்துக்கு பார்க்கிறேன்"
"உண்மையா மச்சான் நீ எப்படி வேணாலும் நினைச்சுக்கோ ஆனா உன்னுடைய உதவியை என்னைக்குமே மறக்க மாட்டேன்"
"அப்புறம் எப்படி என்னைக் காட்டிக்கொடுத்த ?"
"நான் எங்க மச்சான் காட்டிக்கொடுத்தேன் உன்னைக்காட்டிக்கொடுத்தா நானுந்தானே மாட்டுவேன் என்ன புரியாம பேசுற ?'?"
"இந்த கடைசி வார்த்தை சுரேஷுக்கு நெருடலைக்கொடுக்க..
அப்போ யார் செய்திருப்பா" என்று யோசிக்கலானான்
"என்ன மச்சான் யோசனை ?"
"ஒன்னுமில்லை"
"ஆமா இதுகேட்கவா இவ்வளவு தூரம் வந்த ?"
"இல்லை ஒரு டீல் விசயமா வந்தேன் "
"சரி முடிஞ்சுதா ?"
"இல்லை இன்று இரவு நடக்கும் பார்ட்டில தான் பிசினஸ் முடியும் "
"ஓகே மச்சான் வேற என்ன பிரச்சினையானாலும் சொல்லு பார்த்துக்கலாம் "
"சாரிடா நீயும் கொஞ்சம் கேர்ஃபுல்லா இரு ."
"ஹோட்டல் ஷெரட்டன்ல தான் மீட்டிங் நடக்கப் போகுது நீவர்றதா இருந்தா என்னை தொடர்பு கொள்" என்று சொல்லிவிட்டுக்
கிளம்பிப்போனான்
வசந்த் தலையசைத்து அவனிடம் சம்மதம் தந்தான்.
அவன் போன பிறகு வசந்த் ரீட்டாவை அழைத்து ஒரு வேலை இருக்கிறது பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டு
கிளம்பி வெளியே போனதுதான் தாமதம் ரீட்டா பிளவர் பொக்கை பாட்டிலில் மறைத்துவைத்திருந்த கேமராவை எடுத்து அவர்கள் பேசியதைப் பார்த்துவிட்டு தனது மொபைலை எடுத்து யாருக்கோ தகவல் சொன்னாள்.
வசந்த் திரும்பி வந்து கொண்டு இருந்தான்
வசந்த் திரும்பி வருவான் என்று எதிர்பாராத ரீட்டா முகத்தில் வியர்த்து கொட்ட ஆரம்பித்தது
"என்னாச்சு பேபி ஏன் உன் முகம் இப்படி வேர்த்து கொட்டுது"
அதெல்லாம் ஒன்னும் இல்ல டார்லிங்"
"இல்லையே ஏதோ இருக்கு சொல்லு என்ன ஆச்சு?"
"உங்க பிரண்டு உங்ககிட்ட வந்து சண்டை போட்டதும் எனக்கு பயமா போச்சு"
"ஓ அதானா அவ்வளவு பிடிக்குமா பேபி என்னை உனக்கு ?"
"என்ன டார்லிங் அப்படி கேட்டுட்ட
உனக்காக உயிரையும் கொடுப்பேன்"
"என்ன சினிமா டயலாக்கா நீ என் உயிரை எடுக்க வந்தவ தானே ?" என்று வசந்த் சொல்ல அவள் ஆடிப்போனாள்
"இல்...ல...இல்ல ...என்று உளற.."
"சரி சரி கூல் இப்போ எதுக்கு டென்ஷன் ஆகுற பேபி ..சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்"
"போங்க உங்களுக்கு எப்ப பாத்தாலும் விளையாட்டு தான்"
"உன்கிட்ட விளையாடாம யார்கிட்ட விளையாட..."?"
"சரி சரி இன்னிக்கு உங்க பிரண்ட் பார்ட்டிக்கு போறீங்களா ?"
"ஆமா நேர்ல வந்து சொல்லிட்டுப் போய் இருக்கான்ல "
"அப்போ நான் ..?"
"உன்னை எப்படி பேபி கூட்டிப் போக முடியும்?"
"அங்க உங்களை யார் கூட்டிப் போகச் சொன்னது ?"
"பின்ன ?"
"மறந்துட்டீங்க பாத்திங்களா வர வர என் மேல பாசமே இல்லை
"என்ன பேபி லூசு மாதிரி பேசுற நான் எதை மறந்தேன்"
"மறக்காமல்தான் இன்னைக்கு டின்னர் போகலாம்னு சொல்லிட்டு இப்படி உங்க பிரண்டோட பார்டிக்கு போறீங்க ?"
"டின்னர் இன்னைக்கு இல்லன்னா நாளைக்கு போகலாம் ஆனால் அவனோட பார்ட்டி இன்றைக்கு இல்லனா போக முடியாதுல்ல.."
"இப்ப நான் முக்கியம் இல்ல போங்க போங்க உங்க பிரண்டு கூடவே போங்க"
"சாரி பேபி டுமாரோ போலாம் ஓகேவா" என்று ரீட்டாவின் கன்னங்களைக் கிள்ளிவிட்டு "சரி பேபி நான் கிளம்புறேன்" என்று வசந்த் வெளியேறினவனை மறித்து...
"ஆமா இப்ப எதுக்காக வந்தீங்க ?"
"என்னோட கார் க்கீயை இங்க வச்சுட்டு போயிட்டேன் அதை எடுக்க வந்தேன்"
"ஓ சாரி.. ஓகே டார்லிங் பாத்து போயிட்டு வாங்க எனக்கு ஆஃபீஸ் வேலை நிறைய இருக்கு "என்று ஒரு ஃபைலை எடுத்துக் கொண்டு அவளும் தன் கேபினுக்குப் போனாள்.
வசந்த் சிரித்தபடியே நடந்தான்..
*****
"சுரேஷ் ஃபோன் பண்ணினான்.
மச்சான் பார்ட்டி இன்னிக்கு இல்லை
நாளைக்குத்தான் "
"என்ன மச்சான் சொல்ற ? ஏன் திடீர்னு மாத்திட்ட ?"
"ஆமா வசந்த் உண்மையில் பார்ட்டி நாளைக்குத் தான் "
"பின்ன எதுக்கு இன்னைக்குனு சொன்ன ?
என் கேர்ள் ஃப்ரெண்ட் கூட வெளியே போகலாம்னு இருந்தேன் உனக்காக அதைக் கேன்சல் பண்ணினேன் நீ என்னன்னா மீட்டிங் இன்னைக்கு இல்ல அப்படி சொல்ற ?"
"ஆமா மச்சான் எல்லாத்துக்கும் காரணம் இருக்கு
உன் கேர்ள் ஃப்ரெண்ட் சொன்னியே அது உன்னோட பிஏ ரீட்டாவைத் தானே சொல்ற ?"
"ஆமா மச்சான் அவ என் கேர்ள் ஃப்ரெண்ட்னு உனக்கு எப்படி தெரியும் ?"
"அவ்வளவு உரிமையா உன்னோட கேபினுக்குள் உன்னையே அதிகாரம் பண்ணிட்டு ஒருத்தி இருக்காள்னா அவ நிச்சயமா உன்னோட ஒயிஃபா இருக்கணும் இல்ல உன்னுடைய லவ்வரா இருக்கணும் உனக்கு மேரேஜ் ஆகல சோ அவ கேர்ள் பிரண்டனு கணிச்சேன் ."
"மச்சான் அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு ?"
"இன்னைக்கு ஹோட்டல் ஷெரட்டன்ல பார்ட்டி அப்படின்னு சொன்னதும் அவளுடைய முகத்தில் வித்தியாசமான ஒரு பாவணையை நான் பார்த்தேன்"
"என்ன மச்சான் அவள சந்தேகப்படுறியா ?"
"நோ வசந்த் அவளை நான் சந்தேகப்படவில்லை கன்ஃபார்மே பண்றேன் அவ நல்லவ இல்ல."
"என்ன மச்சான் நீ எல்லாரையுமே சந்தேகப்படுற என் கேர்ள் ஃப்ரெண்ட் நான் வந்ததுல இருந்து என் கூடவே தான் இருக்கா எனக்குத் துரோகம் பண்ணதில்ல"
"இன்னைக்கு இரவு அதை நான் உனக்கு ப்ரூஃப் பண்றேன் ?"
"எப்படி மச்சான் சொல்ற?"
"இன்னைக்கு ஹோட்டல் ஷெரெட்டான்ல பார்ட்டி இல்லைன்னு உனக்கும் எனக்கும் மட்டும் தான் தெரியும் ஆனா நாம ஹோட்டல் ஷெரட்டன் போறோம்"
"எதுக்கு மச்சான் ?"
"உன் கேர்ள் ஃபிரண்ட் யார்னு உனக்குக் காட்ட "
"என்ன மச்சான் உளறுற
அங்க நாம் போனா எப்படி அவள் கெட்டவனு நிரூபிப்ப ?"
"இன்னிக்கு அவ ஹோட்டல் ஷெரட்டன் வருவா அப்ப உனக்குப் புரியும்"
"நிசமாவா சொல்ற ?"
"உண்மை வசந்த் "
"பார்ப்போம் அவள் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு"
"உன் நம்பிக்கை தப்புன்னு எனக்குத்தெரியும் பட் நீ நேர்ல தெரிஞ்சிக்கோ '"
"சரி சரி மச்சான் சரியா ஆறுமணிக்கு அங்க இருக்கேன்" என்று சொல்ல ஃபோனை துண்டித்தான் சுரேஷ்.
**
சரியாக ஆறுமணியாக வசந்த்தும் சுரேஷும் ஹோட்டல் ஷெரட்டன்ல ரீட்டாவிற்காக காத்திருக்க நேரம் கடந்து கொண்டே இருந்தது.
"வசந்த் சுரேஷிடம் மச்சான் மணி ஏழு ஆகப்போகுது இனியும் அவள் வருவானு நம்பிக்கை இல்லை என்று அவன் மறைந்திருந்த இடத்தைவிட்டு வெளியில் வர...
அவன் கையைப்பிடித்து உள்ளே இழுத்தான் சுரேஷ் .
வசந்த் அவன் முகத்தைத் திரும்பிப்பார்க்க கண்களால் ஏதோ சைகை காட்டினான் சுரேஷ்
அவன் கண்காட்டிய திசையில் வசந்த் பார்க்க ...ஒரு நீலநிற சான்ட்ரோ காரில் அவளும் இன்னொருவனும் கீழே இறங்கி வர ..மற்றொருவன் வந்து அவர்களை வரவேற்றான்.
வசந்த் கண்களை மூடித் திறந்தான்
ரீட்டாவா இது அவனுக்குள்ளேயே கேள்வி கேட்க அவர்கள் ஒரு டேபிளில் அமர்ந்து எதையோ தீவிரமாகப் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
*********
தனது தம்பியிடம் இத்தனை விசாரணை நடத்திய நவீன் கண்டிப்பாக இங்கு வர வாய்ப்புள்ளது ஒரு வாரம் காலம் இந்த இடத்தைக் காலி செய்து எங்காவது போக வேண்டும் என்று நினைத்தாள் மாயா.
இந்த சூழலில் எங்கு போவதென யோசிக்க தனது முன்னே நிழலாடுவதைப் பார்த்து நிமிர்ந்தவளுக்கு அதிர்ச்சி.
*********
தொடரும்
எழுத்தாளர் நாகா