• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நான் பார்த்த முதல் முகம் நீ..! NPMMN EPI 13

Kriya

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 31, 2025
19
1
3
chennai
"எதுக்குடி அப்போ குடிச்ச, இந்த மாறி நேரத்தில் ஆல்கஹால் எடுப்பியா லூசா நீ "என்று அவன் மீண்டும் கத்த
அவள் ஃபோன் ஒலிக்க ஆரம்பித்தது
வேகமாய் அதை எடுக்க, அதில் தெரிந்த நம்பர் பார்த்ததும் அவள் முகம் பதட்டதிலும் பயத்திலும் மாறுவதை கண்ட ஆதி அவளை புரியாமல் பார்க்க

ஃபோன் ஆஃப் செய்து விட்டு அமைதியா மீண்டும் சோபாவில் வந்து அமர

அவளை சந்தேகமாய் பார்த்தவன், என்ன ஆச்சு? என்று கேட்க

அவள் ஒன்னும் இல்லை என்று தலை அசைக்க
அவளின் நடவடிக்கை அவனுக்கு சந்தேகத்தை அதிகப்படுத்த

மீண்டும் அவளுக்கு கால் வர அவள் கையில் இருந்த ஃபோன் அடுத்த நொடி பற்றி இருந்தான்

அவள் ஆதி என்று தடுமாற

அவன் ஃபோன் அதற்குள் ஸ்பீக்கரில் போட

அந்த பக்கம் பேசியவிஷங்கள் எல்லாம் கேட்ட ஆதிக்கு ஒரு பக்கம் கோவம் ஒரு பக்கம் வருத்தம் என்று கலைவயான உணர்ச்சிகளுடன் ஆரண்யாவை பார்த்தபடி அமர்ந்து இருந்தான்.

ஆரண்யா கண்கள் கலங்க ஆரம்பித்தது.

இனி

"என்னால முடியாதுன்னு சொல்றேன் தானமா ஏன் நீயும் புரிஞ்சிக்காம பண்ற, ஆரண்யா நீ எப்படியாச்சு உன் வாழ்கையை பார்த்துப்பன்னு தான் நீ படி வேலைக்கு போய்டு இந்த வீட்டுக்கு வந்துடாதன்னு நான் சொல்லிட்டு இருந்தேன் ஆன இப்போ உன் அக்கா" என்று அவர் அழ

"எனக்கே என்ன பண்றதுனு தெரியலைடி, இந்த குழந்தை" என்று அவர் மீண்டும் அழ

"பிளீஸ்மா அந்த குழந்தைக்கு என்னவேணுமோ நான் உயிரோட இருக்கிற வரைக்கும் எல்லாமே பண்றேன் ஆனா அப்பா சொல்ற மாறி என்னால ஒரு நாளும்" என்று அவள் அழ

"ஆரண்யா அழாதடா, சரி நீ வேலையில் இருப்ப அதை பாரு முதலில் குழந்தை அழுது நான் வைகிறேன் "என்று தன் அம்மா ஃபோன் வைத்ததும் ஆரண்யா அதே இடத்தில் மடிந்து அழவும்

அதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த ஆதிக்கு இத்தனை நாள் எப்படியோ ஆனால் இன்று அவன் கேட்ட விஷயங்களை எல்லாம் யோசிக்க அடுத்த நிமிடம் அவன் அடுத்த அடுத்த முடிவுகளை வேகமாய் எடுத்தவன் அவள் அருகில் செல்ல

அவனை ஒரு நொடி உணர்ச்சியற்ற பார்வையில் பார்த்தாள்.

"உன் அப்பனுக்கு அறிவு இல்லையா?? சின்ன பொண்ணை என்று அவன் கோவமாய் கத்த
கண்ணங்களில் நீர் வழிய அமர்ந்து இருந்தால்

"சரியான சாடிஸ்ட்டா இருப்பான் போலையே, அன்னைக்கும் அப்படி தான் நடந்துகிட்டான் ச்சை! "என்று கோவமாய் ஆதி கத்த

ஆரண்யாவோ கண்களில் நீர் திரள அவளால் ஏதும் பேச முடியாமல் அமர்ந்து இருந்தாள்.


"இங்க பார் எதுக்கு இப்போ அழுதுட்டு உக்காந்துட்டு இருக்க, அதான் நீ அங்க இல்லையே அப்பறம் என்ன பிரச்சனை? உனக்கு வேணும்னா இந்த ப்ராஜெக்ட் முடிஞ்சதும் அடுத்த ப்ராஜெக்ட் usa, இல்ல uk கூட போக நான் ஹெல்ப் பண்றேன் நீ திரும்ப இந்தியா போக வேண்டாம் உனக்கு புடிச்ச லைப் நீ பார் "என்று அவன் சொல்ல

அவனை உணர்ச்சியற்றவளாய் பார்த்தவள், "அம்மா அங்க இருக்காங்க அவங்களை கஷ்ட படுத்துவாரு, இப்போ அந்த குழந்தை" என்று சொல்ல
"படிச்சவ தான நீ, உன் அம்மாவை டர்சர் பண்ணுவாங்கனா அப்போ போலீஸ் கம்ப்லைன்ட் குடுங்க அந்த குழந்தைக்கு பைனான்சியலா என்ன ஹெல்ப் வேணுமோ நீ எங்க இருந்தாலும் செய்யலாம் அதுக்காக" என்று அவன் அதை சொல்ல கூட விரும்பலை
"என்னோ அதை நினைத்தால் அவனுக்கு அத்தனை வலி ஒன்றாய் தாக்குவது போல் உணர்வு."

"இல்லை என்று எதோ சொல்ல ஆரம்பிக்க

"என்ன இல்லை!! அப்போ மேடம் உன் அப்பன் அந்த வீணா போனவன் சொல்ற மாறி செய்ய போரியா?" என்று அவள் தோள்கள் பற்றி உறும்ம

"வேற என்ன தான் நான் செய்யமுடியும், ஆசைப்பட்டதும் நடக்காது, இப்போ அம்மாவை அங்க தனியா அழவச்சிட்டு என்னலா இங்க நிம்மதியா எப்படி இருக்க முடியும், நீங்க சொல்ற மாறி என் வேலை என்று சுயநலமா என்னலா இருக்க முடியாது."

ஓஹ்! அப்போ மேடம் என்ன பன்ன போறாதா இருக்கீங்க? என்று கைகளை கட்டி அவன் கேட்க

"நான் ஊருக்கு போய்ட்டு அம்மாவையும் குழந்தையும் கூட்டிட்டு எங்கையாச்சு போய்டுறேன்."

"போன்னு சொல்லி உங்க அப்பன் அனுப்பி வச்சிடுவான் இல்லையா? "என்று ஆதி கேட்க

சரியான காட்டு மிராண்டி அவன், ரெண்டு தடவை பார்த்த எனக்கே தெரியுது இத்தனை வர்ஷம் இருந்த உனக்கு தெரியாது என்று அவன் கட்டமாக கேட்க

"வேற என்ன தான் நான் பன்ன முடியும், எப்படியாச்சு அப்பா காலில் இல்லை, மாமா காலில் விழுந்து நான் அம்மாவை கூட்டிட்டு வந்துறேன்" என்று அவள் சொல்லவும்

"அவனுக்கு எங்கு இருந்து தான் அவளோ கோவம் வந்தது என்று தெரியவில்லை, "எதுக்குடி நீ காலில் விழனும் எவன் காலையோ விழனும் அதும் என்கிட்டையே சொல்ற, அறிவு இருக்கா இல்லையா உனக்கு" என்று அவன் வீடே அதிரும் படி கத்த

அதிர்ந்து அவனை பார்த்தவள், "இப்போ உங்களுக்கு என்ன அக்கறை, நான் எப்படி போனால் உங்களுக்கு என்ன? எந்த உரிமையில் நீங்க இப்போ என்னை கத்திட்டு இருக்கீங்க?" என்று அவள் கோவமாய் கேட்க

"என்ன உரிமையா? என் உரிமை என்னனு மேடம்க்கு தெரியாதா இல்லை நான் நியாபக படுத்தடுமா?" என்று இவன் கேட்க

ஆரண்யா அவன் கேள்வியில் தடுமாறினாள், ஆதி?? என்று அவள் ஏதோ சொல்ல வர

அடுத்த நொடி அவளை தன் அருகில் பிடித்து இழுத்தவன் அவள் இதழ்களை முற்றுகை இட்டான். அத்தனை மென்மை அவன் செயலில், அவள் ஒரு நொடி திகைத்தாள்.

அவள் தலை கொஞ்சம் பாரமாக இந்த மென்மை தனக்கு அத்தனை பரிச்சியமாய் ஒரு நொடி இருக்க இவள் மனம் வேகமாய் அடித்து கொள்ள ஆரம்பித்தது.

ஆதி என்ற வார்த்தை தவிர அவன் மனமும் இதழ்களும் வேற எதும் உச்சரிக்கவில்லை.

அவன் தன் இதழ் ஒற்றலை நீடித்து கொண்டே செல்ல ஒரு கட்டத்தில், அவள் அப்படியே மயங்கி அவன் மேலே விழ
சின்ன புன்னகையுடன் அவளை தாங்கி பிடித்தவன் மெல்லமாய் அவள் அறைக்குள் தூக்கி சென்றான்.


ஆதி ஆரண்யா வருவார்கள் 💜







:):):):):):):):):):):):):):)
படிப்பவர்கள் ஒரு கமெண்ட் செய்தால் நல்லா இருக்கும்.

உங்கள் விமர்சனகள், பாராட்டுக்கள் என்னை இன்னும் நல்ல கதை களத்தை எழுத உதவும்.
நன்றி