அத்தியாயம் 20
"வெற்றி!" என்று புஷ்பம் அழைக்க,
"சொல்லு அப்பத்தா!" என முன் வந்து நின்றான் கலங்கிய குரலை மறைக்க முயன்று.
"பயந்துட்டியோ!" என்று புஷ்பம் கேட்கவும் கைகளை உயர்த்தி மேல்பகுதியான சட்டையின் கைகளில் கண்ணீரைத் துடைத்தான் அவன்.
"ந்தா! என்னத்துக்கு அழுது வடியுத வெற்றி! மூத்தவனுக்கு கல்யாணம் ஆன சந்தோசம், உன் வாழ்க்கைக்கு ஒரு வழி கிடைச்ச சந்தோஷம்னு கொஞ்சமா ஏதோ ஆயிடுச்சு!" புஷ்பமே பேசி அவனை சமாதானப்படுத்த முயன்றார்.
"கொஞ்சமாவா? கிழவி! பீபி சுகர்னு எல்லாம் கூடி இருக்கு. சந்தோசத்துல இதெல்லாம் குறையனும். ஏன் கூட விடுத நீ?" என்றான் ஆதங்கமாய்.
தான் இன்னும் உடன் இருந்து கவனித்திருக்க வேண்டுமோ என்றும் தோன்றாமல் இல்லை.
வெற்றி வேலையில் சேர்ந்து இரண்டு வாரங்கள் ஆகி இருந்தது. அன்று பேருந்தை வெற்றி விட்டதை கவனித்த சக்திவேல் அடுத்த வார ஞாயிறு அன்று அவனை உடன் அழைத்துச் செல்ல, எங்கே என்று கூட கேட்காமல் உடன் சென்றான் வெற்றி.
நேரே ஷோ ரூம் தான் கூட்டி சென்றிருந்தான்.
"யாருக்கு ண்ணே?" என்ற வெற்றிக்கு தனக்காய் இருக்குமோ என்று தோன்றாமலும் இல்லை.
"வேற யாருக்கு வாங்கவா உன்னை கூட்டியாறேன்?" என சக்திவேலும் கேட்க,
"நான் கூட அண்ணிக்கு ஸ்கூட்டி வாங்க போறீங்கனு நினச்சேன்!" என கிண்டல் பேசினாலும்,
"எனக்கு பஸ்ல போக கஷ்டமாலாம் இல்லண்ணே!" என்றான்.
"இருக்கட்டும்! எத்தனை நாளுக்கு பஸ்ஸுக்கு பார்த்துட்டு நிக்க? காலேஜ் வெளியூர் போய்ட்ட அதனால வண்டி தேவைப்படல. இனி அப்பத்தா வேற உனக்கு பொண்ணு பாக்கணும் சொல்லுச்சு!" என்று சக்திவேல் சொல்லிக் கொண்டிருக்க,
"ண்ணே! வண்டியை சந்தோசமா வாங்கிக்கிடுதேன்! வேற பேச்சே வேண்டாம்!" என கையெடுத்து கும்பிட்டான் வெற்றி.
அப்படி வண்டியை வாங்கிக் கொடுத்து சக்திவேல் வெற்றி இருவரும் வீட்டிற்கு வர, வீட்டிற்கு வந்ததும் அதை புஷ்பத்திடம் சொல்லி அத்தனை மகிழ்ச்சி வெற்றிக்கு.
"இப்ப தான போனமாட்டுக்கு இருந்துது. அதுக்குள்ள வாங்கியாந்து இருக்கீங்க?" என்ற புஷ்பத்திற்கும் அத்தனை மகிழ்ச்சி.
"ரொம்ப நல்லாருக்கு வெற்றி! புது வேலை, புது வண்டி... இன்னும் கொஞ்ச நாள்ல புது மாப்பிள்ளையா?" என தேன்மலரும் கிண்டல் செய்ய,
"அண்ணி! நீங்களுமா?" என முறைத்த வெற்றி,
"அப்பத்தா அண்ணே நாலு நாள் முன்னவே ஆர்டர் சொல்லிட்டு வந்திருக்கு. எனக்கு சர்ப்ரைஸ் பண்ணிருக்கு" என்று அத்தனை பெருமையாய் வெற்றி சொல்லவும், அப்படியா என விழி விரித்து தேன்மலர் கணவனைக் காண,
"என்ன உனக்கும் சர்ப்ரைஸ் வேணுமா?" என்றான் புருவம் உயர்த்தி.
"அவ்வளவுக்கு உங்களுக்கு தெரியுதான்னு பார்த்தேன்!" என்றிருந்தாள் தேன்மலர்.
இப்படி அதிகப்படியான சந்தோசத்துடன் தான் நாட்கள் நகர்ந்தது சக்திவேல் குடும்பத்தில்.
அடுத்த ஒரு வாரத்தில் எல்லாம் காலையிலேயே வீட்டில் மயங்கிவிட்டார் புஷ்பம்.
சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை விட்டினர் யாரும். மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது ரத்த அழுத்தம் கூடி இருப்பதாகவும் மாத்திரை போடவில்லையா என்றும் மருத்துவர் கேட்டு திட்டிப் பேசி இருக்க, அன்றே அங்கே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுவிட்டார்.
மாலை அலுவலகம் முடிந்து வரும் வரை வெற்றிக்கு யாரும் தகவல் சொல்லி இருக்கவில்லை.
"மாத்திரையை எல்லாம் சரியா தான் டா போட்டேன். டாக்டருங்க என்னத்த சரியா பாக்குறானுங்க!" என்று புஷ்பம் சொல்லும் சமயம் தான் மருத்துவரும் உள்ளே நுழைந்தார்.
"காலையில செக் பண்ணிக்குவோம்!" என்று சொல்லி அவர் கிளம்பிவிட,
"சக்தி!" என்று புஷ்பம் அருகே அழைக்க,
"சொல்லு அப்பத்தா!" என அருகே வந்தான் சக்திவேல்.
"வீட்டுக்கு போக சொல்லுவாங்க நினைச்சேன். காலையில தான் விடுவாங்க போல. மலர கூட்டிட்டு வா ய்யா! அழுதுகிட்டே இருப்பா" என்றார் ஆசையாய்.
"ண்ணே! நீ கூட்டியாறாத! கிழவி! நீ சரியானதும் வீட்டுல வந்து பாரு! எல்லாரையும் அழ விட்டுட்டு பேச்சைப் பாரு!" என இன்னும் விசும்பிக் கொண்டு நின்றான் வெற்றி.
"சரி டா! சரியாகிரும். இன்னும் என்ன கண்ணெல்லாம் சிவந்து நிக்குது?" என சக்திவேல் தம்பியிடம் சொல்ல,
"கோவமா வருது ண்ணே! இதுவும் இல்லைனா நமக்கு யார் இருக்கா!" என்று வெற்றி கேட்டபோது சக்திவேல் கண்களுமே கலங்கும் போல இருந்தது.
"வெற்றி!" என்றழைத்த புஷ்பமுமே கலங்கி தான் போனார்.
"என்ன எல்லாரும் மூக்கை உறிஞ்சிட்டு நிக்கிங்க?" என்று சமையல் பாத்திரங்களை கூடையில் வைத்துக் கொண்டு அறைக்குள் வந்திருந்தார் கோமளம்.
"போதுமா த்த? உங்க பேரன்கள இப்படி அழ வச்சு பார்க்க தான் ஆசைப்பட்டிங்களாக்கும்?" என கோமளம் கேட்கவும் வெற்றி வெளியே சென்றுவிட, கோமளம் கொண்டு வந்த உணவைப் பிரித்தார்.
"பேரன் வாங்கிட்டு வந்த பிரியாணியை சாப்பிடும் போதெல்லாம் ஒன்னும் செய்யல. இப்போ மட்டும் என்ன ஆகிப் போச்சுன்னு இங்க வந்து படுத்துக்கிட்டு அதுங்கள அழ வைக்கிங்க?" என்று அவருக்கான இரவு உணவை எடுத்துக் கொடுத்தார்.
"சக்தி! இதுல உங்களுக்கு இருக்கு!" எடுத்து தரவா?" என கேட்கவும்,
"எனக்கு வேண்டாம் சித்தி! வெற்றி தான் வெறும் வயித்தோட இருப்பான். அவனை சாப்பிட சொல்லுங்க!" என்றான் சக்திவேல்.
"அப்போ உன் வீட்டம்மாக்கு யார் குடுக்க?" என்றதும் சக்திவேல் பார்க்க,
"வெளில தான் மலரு நிக்குறா! நீ வர வேண்டாம் சொன்னியாம். திட்டுவனு பயந்து நிக்குறா!" என்றதும் உடனே வெளியே செல்ல, கண்களை துடைத்துக் கொண்டு வெற்றியிடம் என்னவோ கேட்டுக் கொண்டிருந்தாள் தேன்மலர்.
"இப்ப அப்பத்தா நல்லாருக்கு அண்ணி!" என வெற்றியும் வாடிய முகத்தோடு சொல்ல, யாரை சமாளிக்க என தெரியவில்லை சக்திக்கு.
"உள்ள வா தேனு!" என்றவன்,
"வெற்றி! ஆபீஸ்லேருந்து அப்படியே வந்துட்டல்ல. உள்ள போய் சாப்பிடு! வா!" என்றான்.
வெற்றி உள்ளே செல்ல, "கோவமா மாமா?" என்றாள் அவளும் அழுது சிவந்த முகத்துடன்.
"ப்ச்! வீட்டுலயும் அழுதுட்டே தான் இருந்தியா?" என முறைத்தவன்,
"அப்பத்தா சும்மா தான் பேசிட்டு இருக்கு. காலையில வீட்டுக்கு போயிரலாம்!" என்றவன்,
"அப்பத்தா கிட்டவே இருந்தேன். அதான் உனக்கு போன் பண்ணல!" என்றவனுக்கு அந்த நேரம் நிஜமாய் வேறெதுவும் நியாபகம் இல்லை. அவனுமே பயந்துவிட்டான் என்று தான் சொல்ல வேண்டும்.
காலை புஷ்பம் மயக்கத்திற்கு செல்கையில் உடனிருந்தது என்னவோ தேன்மலர் தான்.
அவள் போட்ட சத்தத்தில் தான் மேலிருந்து ஓடி வந்தான் சக்தி. "அப்பத்தான் திடிர்னு மயங்கிருச்சு மாமா. பயமாருக்கு" என்று சொல்லும் முன்பே அழுத்திருந்தாள் தேன்மலர்.
தண்ணீரை தெளித்துப் பார்த்தும் அவரால் எழுந்து கொள்ள முடியவில்லை. இதில் தேன்மலர் நன்றாய் அழ ஆரம்பிக்க,
காரில் அவரை ஏற்றிக் கொண்ட சக்தி, "சித்தி!" என எதிர்வீட்டைப் பார்த்து அழைக்கவும் அப்பொழுது தான் ராதிகாவை கல்லூரி அனுப்பி இருந்த கோமளம் என்னவோ என வேகமாய் வாசலுக்கு வர, அவரோடு தங்கதுரையையும் அழைத்துக் கொண்டு சென்றுவிட்டான்.
"சொன்னா கேளு தேனு! நீ வர வேண்டாம்" என அவளை அங்கேயே விட்டுவிட்டு ஜெகதீஸனுக்கு வழியில் அழைத்து விவரம் சொல்லி தேன்மலரை கூட்டிப் போக சொல்ல, அவருமே வந்து அழைத்துச் சென்றிருந்தார் தேன்மலரை.
மாலை கோமளத்திற்கு அழைத்து தேன்மலர் கேட்டபோது அவர் சாப்பாடு செய்து கொண்டு செல்ல இருப்பதாக சொல்லவும் சந்திரா சொல்லியும் கேட்காமல் அவருடன் கிளம்பி வந்துவிட்டாள்.
"என்ன எல்லாரும் அழுதுட்டு இருக்கீங்க? ஆறுதலா நாலு வார்த்தை சொல்லி தெம்பா இருக்க சொல்ல வேண்டாமா? நீங்க தான அவுங்களுக்கு நம்பிக்க குடுக்கணும்? என்ன சக்தி நீயும் அமைதியா இருக்க?" என கோமளம் தான் பேசி பேசி அனைவரையும் மீட்கப் பார்த்தார்.
"ஏத்த! வெற்றிக்கு இருவத்து நாலு வயசு நடக்கு. அவனுக்கு கல்யாணத்தை பண்ணிருவோமா? அப்போ நல்லா ஆயிருவீங்களா?" என்றதும் புஷ்பத்திற்கும் அதை பார்த்துவிடும் ஏக்கம் கண்களில்.
"கிழவி! கொன்னுருவேன் உன்னை! எனக்கெல்லாம் இன்னும் மூணு வருஷம் வேணும் கல்யாணத்துக்கு. அப்போவும் நீ தான் அண்ணனுக்கு மாதிரி முன்ன நின்னு நடத்தி தரனும்" வெற்றி சொல்ல,
"அதை இப்பவே பண்ணிக்கிட்டா என்னலே!" என்றார் கோமளம்.
"எதுக்கு நான் கல்யாணம் பண்ணுன கையோட சந்தோசத்துல நீ டிக்கெட் வாங்கிட்டு போயிரவா? ஓடிரு பார்த்துக்க! ஒழுங்கா எந்திச்சு வீடு வந்து சேரு!" என்றான் கோபமும் ஆதங்கமுமாய்.
"சரி டா! அதான் பெருசா ஒண்ணுமில்லனு சொல்லிட்டாங்க இல்ல!" புஷ்பம் சொல்ல,
"ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் இருக்காது அப்பத்தா! இப்போல்லாம் இந்த வயசுன்னு சாவுக்கு வயசே கிடையாது. கொஞ்ச நாள் முன்னாடி ஆறு படிக்க பையன் நெஞ்சு வலி வந்து இறந்து போச்சு தெரியுமா? என்ன வயசா இருக்கட்டும். உயிரு உயிரு தான். நாம தான் பாத்துகிடனும். அதுவும் உனக்கு இருக்க பிரஷருக்கும் சுகருக்கும்... எப்படி நீ மாத்திரையை போட மறக்கலாம்?" என்றாம் வெற்றி தான் கோபமாய்.
"மலரு எப்பவும் போல பிரிச்சு வச்சுட்டு தான் தூங்க போச்சு. நான் தான் ய்யா மறந்து படுத்துட்டேன்!" என புஷ்பம் சொல்ல,
"ரெண்டு நாளாவா? எனக்கென்னவோ வேணும்னு நீ பண்ணுதாப்புல இருக்கு!" என இன்னும் இன்னும் கோபம் வெற்றிக்கு.
"சரி சரி! சாப்பிடுங்க! ராதிகாவும் ஒரே அழுகை. அவளை ரெண்டு அதட்டி சாப்பிட வச்சிட்டு தான் உங்களுக்கு எடுத்தாந்தேன்" என்ற கோமளம்,
"சக்தி! மலரு மதியமே சாப்பிடலையாம். நீயும் அவளுக்கு குடுத்து சாப்பிடு. அப்போ தான் அவளுக்கு இறங்கும்!" என்ற கோமளம்,
"இந்தா இந்த பச்ச புள்ளைக்கும் ஊட்டி விடு" என வெற்றியைக் காட்டி சொல்ல,
"வேண்டாம் நானே சாப்பிடுறேன்!" என்றுவிட்டான் வெற்றி.
"என்னால முடியாத நேரம்னா பரவால்ல. நான் தான் நானே எல்லாருக்கும் பாத்துகிடுதேன் சொல்லுதேன்ல? சக்தி கல்யாணத்துக்கு முன்னாடியே சொன்னே ஒரு அடுப்பு போதும் எல்லாருக்கும் சேர்த்து நான் சமைக்குதேன்னு. நீங்க தான் கேட்காம பேரனுங்களுக்கு நான் தான் பண்ணுவேன்னு சொல்லிட்டீங்க. இனிமே யாரு சொன்னாலும் நான் கேட்க போறதில்ல. எல்லாருக்கும் என் சாப்பாடு தான்!" என கோமளம் சொல்ல, தேன்மலர் கணவனை தான் கண்டாள்.
"வாங்கு தேனு!" என அவன் அவளுக்கு ஊட்டிவிட, இப்பொழுதும் கண்ணீர் பொங்கி வந்தது அவளுக்கு.
"ஷ்ஷ்!" என்றவன் கண்கள் மிரட்டலில் உயர, தலையசைத்தவள் அதை வாங்கிக் கொண்டாள் மீண்டும் உற்பத்தியான கண்ணீரோடு.
தொடரும்..