• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நான் வாழும் நாள் மட்டும்! 22

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
841
634
93
Chennai
அத்தியாயம் 22

காதில் கேட்ட குரலும் அதில் இருந்த செய்தியும் என அடுத்த அடி நகர விடவில்லை மனம்.

"மலரு!" என அவளை அன்னை சந்திரா தாங்கிக் கொள்ள,

"அண்ணி!" என சந்திராவைப் பார்த்து தங்கதுரை கண் கலங்க, அவருமே கலங்கிவிட்டார் என்ன என தெரியாமலே.

"வா மலரு!" என சந்திரா கைப்பிடித்து இழுத்து வர, உள்ளுக்குள் அத்தனை துடிதுடிப்பு தேன்மலருக்கு.

தேன்மலர் வருவதை கண்டுவிட்ட கோமளம் வாய்விட்டே அழுதுவிட, அவர் அழுகையில் புலம்பிக் கொண்டிருந்த புஷ்பம், கண்ணீருடன் நின்ற ராதிகா, அழுது அழுது ஓய்ந்து நின்றிருந்த வெற்றி என அனைவரின் பார்வையும் தேன்மலர் மீது விழுந்திருந்தது.

"ஆத்தே! நான் இவளுக்கு என்னத்த பதில் சொல்லுவேன். மலரு!" என பெருங்குரலில் புஷ்பம் அழ,

அங்கே அனைவரையும் இருப்பதை பார்த்த மலரால் சந்தோசப்பட முடியவில்லை.

உறவுகள் அனைவரும் அங்கிருக்க, உயிரானவன் அங்கில்லை என்பதோடு சற்று முன் கேட்ட அந்த அப்பத்தாவின் குரல், 'என் உயிரை எடுத்துக்க சாமி.. என் பேரனை விட்டுரு!' கேட்டாளே அந்த குரலை.

"ம்மா!" என அழைத்து தூரத்திலேயே நின்றுவிட்டாள் தேன்மலர்.

"மலரு!" என்ற தங்கதுரைக்கு விஷயத்தை அந்த பெண் முகம் பார்த்து சொல்லிவிட முடியவில்லை.

"மலரு! ஆத்தா!" என புஷ்பம் அழுது கொண்டே அவள் அருகே வர, பின்னே நகர்ந்தது தேன்மலரின் கால்கள்.

தங்கதுரையோடு சந்திராவும் மகளைப் பிடிக்க, அத்தனை இறுக்கம் அவள் உடல்மொழியில்.

"என்னனு சொல்லுங்க அண்ணே! எனக்கே பதறுது!" சந்திரா தங்கதுரையிடம் கேட்க,

"நம்ம... நம்ம சக்திக்கு... அச்சிடேன்ட்..." என்று சொல்லும் போதே தங்கதுரையும் அழுதுவிட, கேட்ட தேன்மலர் விக்கித்து நின்றுவிட்டாள்.

"மலரு! அங்க வந்து பாரு மா. சக்திய பாரு!" என அவள் மேல் வந்து அணைத்து விழுந்து புஷ்பம் கதற, நெஞ்சடைக்க நின்றவள் பார்வை நிலைகுத்தி நின்றுவிட்டது ஐசியூ அறையின் கதவில்.

"மலரு! ஏ மலரு! வா மலரு!" என சந்திரா இழுத்து தான் அந்த கதவு அருகே அவளை அழைத்து செல்லும் நிலை.

மூச்சுக்கள் வேகமாய் வர, இதயத்துடிப்பின் சத்தம் காதில் கேட்க, இதோ கண்ணாடிக் கதவின் வழி உள்ளே கண்டாள் தேன்மலர்.

காலையில் அவன் அணிந்திருந்த வெள்ளை சட்டையின் ரத்தங்கள் மட்டும் தான் அவள் கண்டது. முகத்தை கூட காணவில்லை. மருத்துவர்கள் அங்கே மறைத்திருக்க ஆனால் அந்த சட்டையும் ரத்தமுமே போதுமானதாய் இருந்தது தேன்மலர் அங்கேயே மயங்கி சரிய.

மொத்தமாய் ஆட்டம் கண்டுவிட்டது சக்திவேல் குடும்பம். ஒருவருக்கும் உயிர் நிலையாய் இல்லை. உணர்வற்ற முகம் கொண்டு புஷ்பம் வெற்றி தங்கதுரை என சக்திவேல் இருக்கும் ஐசியூ அறையின் வாசலில் தவம் கிடக்க,

கோமளம், ராதிகா, சந்திரா என தேன்மலர் அருகே நின்றிருந்தனர் வேறொரு அறையில்.

மருத்தவர் பரிசோதிக்க, கவ்விப் பிடித்து குரலை நெறித்து வந்த அழுகையை வாய்க்குள் விழுங்கி சேலையின் தலைப்பை எடுத்து வாயில் வைத்துக் கொண்டு இறுக்கமாய் பிடித்து நின்றார் கோமளம்.

இப்படியா இன்றைய நாள் விடிய வேண்டும் என நினைத்து நினைத்து உயிரெல்லாம் மருகி அனைவரும் அங்கே நிற்க,

பரிசோதித்த மருத்துவர் சொன்ன செய்தியில் தலையில் அடித்துக் கொண்டு அழுதார் சந்திரா.

"கன்சீவா இருக்காங்க! பிரஷர் திடிர்னு ரைஸ் ஆகி இருக்கு. இவ்வளவு ஸ்ட்ரெஸ் இப்ப இவங்களுக்கு இருக்கவே கூடாது!" என சொன்ன நொடி சந்திரா வெடித்து அழ, அவரை அணைத்துக் கொண்டு அத்தனை கண்ணீர் வடித்தார் கோமளம்.

ராதிகாவிற்கும் அழுகை மட்டும் தான். குடும்பமே கொண்டாட வேண்டிய ஒரு தருணம். இரு உயிர்களின் சாட்சிக்கு அடைக்கலம் எது என தெரியாமல் மொத்த குடும்பமுமே பரிதவித்து நின்றது.

"மயக்க ஊசி தான் குடுத்துருக்கேன். இப்போ அவங்களுக்கு ரெஸ்ட் தான் தேவை!" என்ற மருத்துவர்,

"அவங்களுக்கு நீங்க தான் ஆறுதல் சொல்லி கூட இருக்கனும். சக்திவேல் பத்தின ஏந்த விஷயமும் இப்ப அவங்களுக்கு போக வேண்டாம். அது ரெண்டு உயிருக்கும் ஆபத்து. நாளைக்கு டெஸ்ட் எடுத்து பார்த்துடுவோம். பார்த்துக்கோங்க!" என சக்திவேலை தெரிந்த மருத்துவர் தேன்மலர் பற்றி சொல்லி செல்ல,

"அவகிட்ட என்னனு நான் ஆறுதலா பேச அண்ணி?" என அழுதார் சந்திரா.

இன்னும் ஜெகதீஸனுக்கு விஷயம் தெரிந்திருக்கவில்லை. அவர் வயலில் இருக்க, வீட்டில் இருந்த தேன்மலர் தான் அன்னையுடன் மருத்துவமனை வந்திருந்தாள்.

அழுது அழுது சோர்ந்து ஆங்காங்கே நின்ற கோமளம் சந்திரா இருவரின் பார்வையும் தேன்மலரிடம் தான். இரண்டு மணி நேரங்கள் கடந்துவிட்டது. விழித்தால் அவள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமே?

என்ன சொல்ல? ஆபரேஷன் முடிந்து இன்னும் சக்திக்கு நினைவு திரும்பவில்லை என்றா? இன்னும் இரண்டு மணி நேரங்களில் அவன் விழித்தே ஆக வேண்டுமாமே! இல்லையென்றால்???? நினைக்கவே உடலெல்லாம் அதிர்ந்தது.

"சக்தி நல்ல ஹெல்த் கான்சியஸ் இருக்குற பெர்சன். அதனால தான் அவர் ஆபரேஷன்க்கு எங்களுக்கு கோஆபரேட் பண்ணிருக்கார். இதே கண்டிஷன்ல வேற யாரும்னா நிச்சயமா பொழைக்கவே வாய்ப்பில்ல!" என என்னென்னவோ சொல்ல சொல்ல, கேட்டவர்களுக்கு தான் இருப்பு கொள்ளவில்லை.

"மலருக்காக வந்துரு ராசா. அந்த புள்ள பாவம்ய்யா!" என்று அழுது புலம்பிய புஷ்பத்திடம் இன்னும் தேன்மலர் பற்றிய விஷயம் சொல்லப்பட்டிருக்கவில்லை அவர் உடல்நிலை இருக்கும் நிலையில்.

"சக்தி அப்பாவாக போறான் டா!" என தங்கதுரை வெற்றியிடம் சொல்ல, அவனுமே அழ மட்டும் தான் செய்தான் அந்த செய்தியில்.

இதை எப்படி எங்கு எவ்வளவு மகிழ்ச்சியாய் தெரியப்படுத்தி இருக்க வேண்டும்? என நினைக்க நினைக்க கண்ணீர் உற்பத்தியானது வெற்றியிடம்.

"அம்மாட்ட சொல்ல வேண்டாம் வெற்றி. தாங்காது. சக்தி வரட்டும்!" என்று தங்கதுரை சொல்ல, சக்தியின் வரவுக்காகவே
காத்திருந்தான் அவனுமே.

"வெற்றி!" என ஓடி வந்த ஜெகதீஸன், "சக்தி எங்க? இப்போ எப்படி இருக்கு தம்பி? நான் பாக்கலாமா?" என கலங்கிப் போய் கேட்க, இருக்கும் கண்ணீர் எல்லாம் வற்றி ஒரு ஓரமாய் அமர்ந்திருந்த அனைவர்க்கும் அவரின் பதட்டத்தில் மீண்டும் அழுகை வெளிவந்தது.

யாராலும் பேசிட முடியவில்லை. சுத்தமாய் தெம்பும் இல்லை. தங்கதுரை தனியே அழைத்து வந்து சொல்ல, இடியாய் செய்தியை கேட்டவர் மகளிடம் வர,

"எப்படி அண்ணி? சக்தி தம்பி அவ்வளவு வேகமா கூட போகாதே வண்டில!" என சொல்லி சொல்லி சந்திரா அழ,

"நம்ம ஊருக்குள்ள வந்து சக்தி வண்டியோட ஓரமா நின்னுட்டு தான் போன் பேசிட்டு இருந்துருக்கு அண்ணி! குடிச்சுட்டு வண்டி ஒட்டின ரெண்டு பேர் வண்டில யாரு முதல்ல போறதுன்னு போட்டில ஓட்டிருக்கானுங்க. அதுல ஒருத்தன் தான் தம்பியை வண்டியோட இடிச்சி தள்ளி இருக்கான். சக்திய இங்க கொண்டாந்து சேர்த்தவங்க சொல்லிட்டு போனாங்க!" என்று அழுது கொண்டே கோமளம் தெரிந்ததை சொல்ல, அதற்கே சந்திரா அழ,

"அங்க கம்பி அடுக்கி வச்சிருந்த இடத்துல தலை இடிச்சதுல தலையில தான் பலத்த அடியாம்!" என்று வாயை கைகளால் மூடிக் கொண்டார் கோமளம்.

எங்கே தான் சத்தம் போட்டு அழுது ஊசியின் மூலம் உறங்கிக் கொண்டிருக்கும் தேன்மலர் விழித்து விடுவாளோ என பயந்து அழுகையை வாய்க்குள் அடக்க,

"அய்யோ இதெல்லாம் எப்படி இவ தாங்குவா அண்ணி? நான் என்னனு சொல்லுவேன்.. அதுவும் இந்த நிலைமையில!" என அப்படி ஒரு அழுகை சந்திராவிடம்.

இதில் ஜெகதீஸனும் வந்து கண் கலங்கி மகள் தோற்றம் பார்த்து அதிர்ந்து கண்ணீர் வடித்தார் அவள் நிலை கேட்டு.

"யாரு கண்ணு பட்டுச்சுன்னு தெரியலயே! இப்போ தான என் சாமிங்க சந்தோசமா இருக்கு இப்படியே இருக்கணும்னு வேண்டிகிட்டேன். அதுக்குள்ளவா இப்படி ஆகணும்?" என கொஞ்சம் கொஞ்சமாய் புலம்பிக் கொண்டு தான் இருந்தார் புஷ்பம்.

"அப்பத்தா! அண்ணே அண்ணி நிலைமைல உயிரெல்லாம் உதறலெடுத்துட்டு இருக்கு. நீயும் இப்படி அழுது...." என்ற வெற்றி முடிக்காமல் புஷ்பத்தை அணைத்துக் கொண்டு அழ,

"என் புள்ளைங்க இப்படி அழுவுததை பாக்கயா நான் இன்னும் உயிரோட இருக்கேன்?" என அதற்குமே அழுகை பொங்கி தான் வந்தது புஷ்பத்திற்கு

சக்திவேலை இன்னும் உள்ளே சென்று பார்க்க கூட அனுமதிக்கவில்லை மருத்துவர். கண் விழிக்கட்டும் என்று தான் கூறி இருந்தார்.

முழுதாய் மூன்று மணி நேரம் கழித்து சக்தி வேல் கண் விழித்ததாய் செவிலியர் ஓடி வந்து மருத்துவரிடம் சொல்ல, அவர் பரிசோதிக்க செல்லும் நேரம் அவன் கண்கள் அழுத்தமாய் திறந்து கொள்ள படாதபாடு பட்டது.

"நல்ல இம்ப்ரூவ்மென்ட்!" சொல்லிக் கொண்ட மருத்துவர்,

"சக்திவேல் கண் முழிச்சாச்சு.. உயிருக்கு ஏந்த ஆபத்தும் இல்ல" என்று வெளியே வந்து சொல்ல, மருத்துவர் காலில் பட்டென்று விழுந்துவிட்ட புஷ்பத்தை வெற்றி பிடித்துக் கொண்டான்.

"ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்!" என்ற வெற்றி கையோடு அதை சொல்ல தேன்மலர் இருக்கும் அறை நோக்கி ஓட, அப்பொழுது தான் எழுந்து ஒரு மூச்சு அழுது கத்தி சக்தியைப் பார்க்க சண்டையிட்டு தவித்துக் கொண்டிருந்தாள் தேன்மலர்.

"வயித்து புள்ளைக்கு ஆவாதாம் டி. அழுவாத! புள்ளையும் நீயும் நல்லாருக்கன்னு நாங்க சக்திகிட்ட சொல்ல வேண்டாமா? என்ன பாத்துகிட்டிங்க என் பொண்டாட்டியைனு அவன் எங்களை கேட்க மாட்டானா?" என கோமளம் கண்ணீரோடு அதட்டி எடுக்க, அவர் மேல் சாய்ந்தவள்,

"எனக்கு அவங்களை பாக்கணும். நான் அவங்ககிட்ட பேசணும் த்தை. ப்ளீஸ் த்த!" என தேன்மலர் கெஞ்சிக் கொண்டிருக்கும் நேரம் தான் வெற்றி வந்தது.

"அண்ணே கண்ணு முழிச்சிருச்சு!" என்று அவன் சொல்ல, அத்தனை அழுகை அதற்குமே.

மொத்த ஐந்து மணி நேரங்களில் ஒருவரிடமும் உயிர் ஒட்டி இருக்கவில்லை இந்த ஒற்றை வார்த்தையை மருத்துவர் கூற கேட்கும் வரை.

பத்து நிமிட இடைவெளிகளில் கண் விழித்துப் பார்த்த சக்திவேல் அடுத்த அரை மணி நேரத்தின் பின்பே சக்திவேல் நினைவு திரும்பி இருந்தது.

"இனி ஏந்த பிரச்சனையும் இல்ல. நினைவு திரும்ப தான் இவ்வளவு நேரம் வெயிட் பண்ணினோம். ஹி இஸ் சேஃப் நௌ! ரூம்க்கு நைட்டு மாத்திடலாம்" மருத்துவர் சொல்ல, அவன் எத்தனை ஆபத்தில் இருந்திருக்கிறா என்பதை கொஞ்சம் கொஞ்சமாய் உணர்ந்தது அவன் உறவுகள்.

ஒவ்வொருவராய் மட்டுமே அவனைப் பார்க்க அனுமதிக்கப்பட, புஷ்பம் முதலில் சென்று கண்களை நிறைத்து பார்த்து வந்தார் அவனை.

இதோ தேன்மலர் தன் கணவன் அருகில்.....

தொடரும்..