அத்தியாயம் 23
இன்னமும் அறைக்கு மாற்றி இருக்கவில்லை. கண் விழிக்க நினைத்தும் சரியாய் விழிக்க முடியவில்லை சக்திவேலினால். அவன் உடல்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை போல.
புஷ்பம் உள்ளே நுழையும் பொழுது கண்களை திறந்திருக்க, "சக்தி! சீக்கிரம் வந்துருய்யா! மலரு பாவம்ய்யா!" என்று சொல்லியவர் கண்கள் கண்ணீரைவிட,
"அப்பத்தா அண்ணே முன்னாடி அழுதுற கூடாது. டாக்டர் சொன்னாங்க இல்ல? போய் சும்மா பேசிட்டு வா. அண்ணே சீக்கிரம் சரியாயிரும்!" என்று சொல்லி தான் வெற்றி அனுப்பி இருந்தான்.
அழவும் முடியாமல் அழாமல் இருக்கவும் முடியாமல் அந்த வயதில் மூச்சிறைக்க ஆரம்பிக்க, "சீக்கிரமா சரியாகி வாய்யா!" என்று மட்டும் சொல்லிக் கொண்டு வந்துவிட்டார்.
ராதிகாவை எல்லாம் உள்ளே செல்லவிடவில்லை புஷ்பமும் கோமளமும். நிச்சயம் தாங்க மாட்டாள் சிறுபெண் என.
தேன்மலரை அப்படி தடுத்திட முடியாதே! அவள் உயிர் அங்கிருக்கும் பொழுது என்ன சொல்லிவிட முடியும் அவளிடம்?
கதவை திறந்து உள்ளே வந்தவளை காண தான் அவனும் தவித்திருந்திருப்பான் போல. ஆனாலும் அந்த முகத்தில் எந்தவொரு ப்ரெத்யேக வரவேற்பும் இல்லை அவளுக்கு என அவனிடம்.
இப்படி எல்லாம் அவன் இருக்க மாட்டானே! பார்த்ததும் பளிச்சென புன்னகைத்து 'தேனு!' என அழைத்து தானே அவனுக்கு பழக்கம்.
அந்த பார்வை மட்டும் அவளிடம் இருந்து எங்கும் விலகவில்லை அவனிடம்.
ஆங்காங்கே சிராய்ப்புகள், தலையில் அறுவை சிகிச்சை, வலது கையில் கட்டு என படுத்திருந்தவன் தோற்றம் அவளை துவண்டு விழச் செய்ய போதுமானதாய் இருந்த போதும் துளி கண்ணீர் இல்லை அவள் கண்களில்.
அத்தனை திடமாய் அவனை எதிர் கொண்டு அவனுக்கு வெகு அருகில் சென்று அவள் நிற்க, தொண்டை வரை நிறைத்து நின்றது சக்திவேலிடம் வார்த்தைகள்.
"மாமா!" என்றவள் குரலை செருமிக் கொண்டாள்.
இதில் மீண்டும் அவன் கண்கள் மூடி மூடி திறக்க, தேன்மலர் இதயம் அதற்கேற்றாற் போல நின்று துடிப்பதாய் இருந்தது.
"ரொம்பவே நேரம் பேச வேண்டாம் மேடம்!" அங்கிருந்த செவிலியர் கூற, அதை கேட்டுக் கொண்டவள், அவன் ஒற்றை கையில் செலைன் ஏறிக் கொண்டிருக்க, மற்றொரு கையில் கட்டு போடப்பட்டிருக்கவும் அவன் விரல்களை வருடியவள்
"அப்பா ஆக போறீங்க! சீக்கிரமா வாங்க. வரணும். வேறெதுவும் நான் சொல்ல மாட்டேன். என் மேலயும் நம்ம பாப்பா மேலயும் ஆசையும் அக்கறையும் இருந்தா சீக்கிரமா எந்திச்சு வந்துடுங்க மாமா! இங்க வேண்டாம். சீக்கிரம்... வாங்க!" என்று சொல்லி அவன் மீண்டும் கண்களை மூடி மூடி விழிக்க, ஓடியே விட்டாள் அடக்கி இருந்த விம்மலை வெளியேற்ற.
********************************
இரண்டு நாட்கள் கடந்திருந்தது. மகிழ்ச்சியாய் இருந்த சமயங்களில் எல்லாம் அத்தனை வேகமாய் ஓடிய நாட்கள் இப்பொழுது நொடி நொடியாய் ஓடிக் கொண்டிருப்பதாய் தோன்றியது சக்திவேல் குடும்பத்திற்கு.
கோமளம் சந்திரா என மாறி மாறி மருத்துவமனைக்கு சமைத்து எடுத்து வர, சொந்தங்கள், தெரிந்தவர்கள், உறவுகள், நண்பர்கள், என ஊர் முழுக்க வந்து பார்த்து செல்லும் வண்ணமாய் இருந்தது.
இதில் சக்திவேலிடம் தேன்மலர் கூறிய பின் தான் புஷ்பத்திற்கு தேன்மலர் கர்ப்பமாய் இருக்கும் விஷயத்தை சொல்ல, சுமக்க முடியாத கணத்தின் நடுவே சிறு ஆசுவாசம் தான் அந்த செய்தி புஷ்பத்திற்கு.
நன்றாய் கண்விழித்துவிட்டான் சக்திவேல். ஆனால் அவன் பேச்சு சத்தம் அவ்வளவு எளிதில் யாருக்கும் கேட்கவில்லை. அத்தனை மெதுவாய் வந்தது அவன் குரல்.
"தலையில அடிபட்டிருக்கு இல்ல. கொஞ்சம் கொஞ்சமா தான் ரெகவர் ஆக முடியும். பயப்பட வேண்டாம்!" என்றிருந்தார் மருத்துவர்.
"ஸ்ட்ரைன் பண்ணிக்காம அப்பப்ப மட்டும் பேசுங்க!" என சக்திவேலிடமும் கூறி இருந்தார்.
யாரையும் அவனிடம் பேசவிடவில்லை. அதிக நேரம் நிற்க கூட விடவில்லை.
"இன்ஃபெக்ஷன் ஆக கூடாது!" என்றெல்லாம் சொல்லி இருக்க, சக்திவேல் அருகிலேயே இருந்தது தேன்மலர் மட்டும் தான்.
வெளியில் சென்றால் தானே அவளிடம் இருந்து அவனுக்கு நோய் தொற்று வர, அவன் இருக்கும் அறைக்குள் மட்டும் தான் அவள் உலகம் என சுருக்கிக் கொண்டாள்.
"வயித்து பிள்ளைதாச்சி! நீ வீட்டுக்கு போ த்தா! நான் பாத்துகிடுதேன்!" என புஷ்பம் முதல் ராதிகா வரை கூட அனைவரும் சொல்லிப் பார்த்துவிட்டனர்.
"இவரில்லாம அந்த வீட்டுலயா?" என்று அதிர்ந்த அவள் முகம் பார்க்க முடியவில்லை மற்றவர்களுக்கு.
அவசர தேவைக்கு என அறைக்கு வெளியே தங்கதுரை, வெற்றி, ஜெகதீஸன் என யாரோ ஒருவர் காத்து நிற்க, அவனருகிலேயே அவனை பார்த்தபடியே என நாட்களை அமைதியாய் கடத்தினாள் தேன்மலர்.
புஷ்பத்தின் உடல்நிலையை காரணம் காட்டி அவரை மருத்துவமனையில் தங்கவிடவில்லை யாருமே என்றாலும் தினமும் பேரனை பார்க்க வந்துவிடுவார்.
அனைவரும் சக்திவேல் எழுந்து வர காத்திருக்க, மகள் மேல் கொள்ளை பாசம் வைத்திருந்த ஜெகதீஸன் தன் மகள் மீண்டு வர காத்திருந்தார்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் இதுவரை இப்படி கண்டிராத மகளை நினைத்து நினைத்து அத்தனை கவலை ஜெகதீஸனுக்கு. சிரிப்பென்ற சொல்லோடு உயிரற்ற முகம் உணர்வற்ற பார்வை என தேன்மலரைப் பார்த்து பார்த்து உள்ளுக்குள் நொந்து போனார்.
"தேனு!" என்ற சக்திவேல் சத்தம் ஒன்பதாம் நாளில் தான் தேன்மலர் செவிகளை எட்டி இருக்க, "மாமா!" என அவனருகே எழுந்து ஓடினாள்.
எட்டு நாட்களும் அவன் கையில் பாட்டில் பாட்டிலாய் செலைன் ஏறிக் கொண்டே இருக்க, இன்று காலை முதல் தான் எதுவும் இன்றி படுத்திருந்தான் சக்திவேல்.
"தண்ணி குடு தேனு!" சக்திவேல் கேட்க, "இதோ மாமா!" என பாட்டிலை திறந்து டம்ப்ளரில் தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்தவள் கன்னம் தாண்டி வடிந்து கொண்டிருந்தது கண்ணீர்.
இரண்டு மடக்கு குடித்தவன் முடியவில்லை என்பதாய் தலையசைக்க, அதை கீழே வைத்துவிட்டு,
"வலிக்குதா மாமா! எங்க வலிக்குது சொல்லுங்க. இப்ப டாக்டர் வருவாங்க. நீங்க தூங்கிட்டா கூட நான் சொல்றேன் டாக்டர்கிட்ட!" என அவன் முகத்தருகே வந்து அவள் பேச,
"பாப்பா என்ன பண்றா?" என்றான் முதல் கேள்வியாய். அதைக் கேட்க தானே வறண்டிருந்த நாவிற்கு அவன் தண்ணீர் கேட்டது.
அதில் முட்டிக் கொண்டு கண்ணீர் வந்த போதும் அடக்கிக் கொண்டவள், "இதோ இங்க தான் பத்திரமா இருக்கா! உங்களை கேட்டா! நீங்க வீட்டுக்கு வந்ததும் அவகிட்ட பேசுவீங்கன்னு சொல்லிருக்கேன்!" என தேன்மலர் தன் வயிற்றில் கைவைத்து பேச பேச, விழியின் ஓரமாய் நீர் வடிந்து அவன் காதினை அடைந்தது.
"சாரி தேனு!" சக்திவேல் சொல்ல,
"மாமா! சீக்கிரமா வீட்டுக்கு வாங்க. நான் கட்டிக்கணும்!" என்றவள் தன் கண்ணீரை தானே துடைத்துக் கொள்ள,
"இருங்க! வெற்றி நிக்குறான். வர சொல்றேன். பேசுங்க!" என வெளியில் சென்றவள் வெற்றியை அனுப்பி வைத்துவிட்டு வெளியில் நின்று நிற்காமல் வடிந்த கண்ணீரை துடைத்தாள்.
முழுதாய் ஒரு மாதம் மருத்துவமனை வாசம் தான் சக்திவேலோடு தேன்மலருக்கும்.
எவ்வளவோ சொல்லியும் அவன் இல்லாமல் அந்த வீட்டில் தங்கள் அறையில் தான் மட்டும் என நினைத்துப் பார்த்து அது முடியாமல் மருத்துவமனையிலேயே அவனோடே இருந்து கொண்டாள் தேன்மலர்.
இந்த ஒரு மாதத்தில் நன்றாய் தேறி வந்திருந்தான் சக்திவேல். வெற்றி கேட்டு இரண்டு முறை ஸ்கேன் எடுத்திருந்தனர் ஒரு மாதத்தில்.
வேறெந்த பிரச்சனையும் இல்லை என தெளிவாய் கேட்டுக் கொண்டான் வெற்றி. கூடவே தன் நண்பனுக்கு ஸ்கேன் ரிப்போர்ட்டை அனுப்பி அவன் அண்ணன் மருத்துவர் என்பதால் அவரிடமும் ஒருமுறை கேட்டுக் கொண்டான்.
முகத்தின் காயங்கள் எல்லாம் ஆறி இருக்க, கையிலும் தலையிலும் என மட்டும் தானே எழுந்து அமர, கொஞ்சமாய் நடக்க என ஆரம்பித்தான் சக்திவேல்.
"சூப்பர் மாமா!" என பாராட்டு வேறு தேன்மலரிடம் இருந்து. மூன்று நேரமும் அவள் மட்டுமே அவனுக்கு சாப்பாடு கொடுப்பதும் கூட.
"நீ சாப்பிட்டியா மலர்? குழந்தை வயித்துல இருக்கும் போது ரொம்ப பசிக்கும் சொல்லுவாங்க இல்ல? அதுவும் பிடிச்சதெல்லாம் சாப்பிடணும்னு அப்பத்தா கூட சொல்லுமே! உனக்கு பசிக்குதா அப்படி? எல்லாமே சாப்பிடுறியா? சாப்பிடுறாளா அப்பத்தா?" என சக்திவேல் கேட்க,
"நீ வந்து தான டா வாங்கி குடுக்கணும்? பிடிச்சதை சாப்பிடுத நிலைமைலயா வச்சிருக்கோம் அவளை? புருசன் வாங்கி குடுக்க தான் பொண்ணுங்க கேட்குறதே! கூட ஒரு மாசம் கூட நல்லா ஓய்வா இருந்துக்க. அப்புறம் அவளை தான் கவனிக்கணும் எல்லாருமா. அதுக்குள்ள எந்திச்சு வந்துருய்யா!" என்றார் புஷ்பம்.
இரவு உணவை கொடுத்துவிட்டு கோமளம் தங்கதுரையோடு செல்ல, "ராதிகாவை பக்கத்து ஊர்ல இருந்து கேட்டு வந்திருக்காங்க கல்யாணத்துக்கு. அத்தைக்கு இஷ்டம் தான்." என தேன்மலர் பேசியபடி அவனுக்கு உணவை ஊட்ட,
"இன்னும் படிப்பிருக்கே அவளுக்கு!" என்றான் சக்திவேல்.
"நானும் அதான் நினச்சேன். ஆனா சொல்ல முடியல. நீங்க சொல்லுங்க. படிச்சு முடிக்கட்டும்." என்றாள் தேன்மலர்.
"இங்க பக்கத்துல வந்து தாயேன் தேனு. எதுக்கு இவ்வளவு தூரமா நிக்குற?" சக்திவேல் கேட்க,
"கையில ஊசியை எங்க எல்லாம் குத்தி வச்சிருக்காங்க பாருங்க. தெரியாம பட்டா கூட வலிக்கும். இப்படியே வாங்கிக்கங்க மாமா!" என பேசிக் கொண்டே கொடுத்தாள்.
"வேணும்னு தள்ளி நிக்குற!" சக்திவேல் சொல்ல,
"கிட்ட வந்தா உங்க கைக்குள்ள இருக்கனும்ல? வீட்டுக்கு வாங்க மாமா!" என அத்தனை ஏக்கம் அவள் கண்களில்.
ஒரு மாதம் முடியும் நிலையில் தான் வீடு வந்து சேர்ந்தான் சக்திவேல். அன்று மட்டும் என்னென்ன தெரியுமோ அத்தனையையும் செய்தார் புஷ்பம் திருஷ்டிக்கு என.
ஹாலில் வந்து சாய்ந்து அமர்ந்த அப்பொழுது தான் இயற்கையாய் சுவாசிக்கவே முடிந்ததைப் போல இருந்தது சக்திவேலிற்கு.
"எதாவது குடிக்க தரட்டுமா?" புஷ்பம் கேட்க,
"நீங்க இருங்க அப்பத்தா! நான் கேட்டுக்குறேன்!" என தேன்மலர் சொல்ல,
"நீயும் பேசாம ஒரு இடத்துல உக்காரு. நான் எடுத்தாறேன்!" என சந்திரா சொல்ல,
"நான் தான் இருக்கேனே! எதுக்கு ஆளாளுக்கு பேசிகிட்டு?" என தண்ணீருடன் வந்துவிட்டார் கோமளம்.
சுற்றி உள்ள தெரிந்தவர்கள் பக்கத்து வீட்டினர் எல்லாம் பார்க்க வர,
"இப்ப தான் வந்திருக்கான் அதுக்குள்ள அம்புட்டு பேர் கண்ணும் இங்க தான் இருக்கு!" என்ற புஷ்பம்,
"ஆத்தா! நீ சக்திய மேல கூட்டிட்டு போ. வாரவள நான் பேசிகிடுதேன்!" என அனுப்பி வைத்தார் புஷ்பம்.