அத்தியாயம் 24
தன் அறையில் வந்து சட்டையை கழற்றிவிட்டு கட்டிலில் வந்து சக்திவேல் சாய்ந்து அமர, அவனுக்கு வசதி செய்து கொடுத்தாள் தேன்மலர்.
தலையணையை அவன் முதுகுக்கு பின் வைத்துவிட்டு தேன்மலர் நிமிரும் நேரம் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான் சக்திவேல்.
"இங்க வா!" என்றவன் அமர்ந்திருக்க, அவன் முகமருகில் தானே சென்றாள் அவன் முத்தத்திற்காகவே.
நெற்றி முத்தமும் அதன் அழுத்தமும் போதவே போதாது தான் இருவருக்கும்.
ஒற்றை அடிபட்டக் கையை இப்பொழுது தான் அசைக்கவே ஆரம்பித்திருந்தான் சக்திவேல். மற்றொரு கையிலும் நரம்பு ஊசியினை குத்தி எடுத்திருக்க, அவன் கைகளில் அவ்வளவு பலம் இல்லை என்பதை உணர முடிந்தது தேன்மலருக்கு.
"மாமா!" என தானே பிரிந்து நின்று அவள் புன்னகைக்க,
"என்னை விட நீ தான் மெலிஞ்சுட்ட தேனம்மா!" என்றான் அருகில் அமர சொல்லி.
"வலிக்குதா மாமா!" என்றவள் மெதுவாய் அவன் தோள் சாய,
"இல்லையே!" என்றவன் அவளுக்கு வாகாய் அமர,
"ரெண்டு நிமிஷம் தான். எழுந்துப்பேன்!" என்றவள் கூறியதில் புன்னகைத்தவன்,
"பாப்பா என்ன சொல்றா தேனு?" என்றான்.
"அப்பா இப்படி பண்ணிருக்க கூடாதாம். அம்மா பாவமாம். ரொம்ப பயந்துட்டாங்களாம்!" என்றாள் சாய்ந்தவாறே.
"சரி டி! அதான் வந்துட்டேன்ல. எங்க போக?" என்றவன்,
"உன்னைய விட்டே அவ்வளவு சீக்கிரம் போயிற மாட்டேன். இதுல என் பொண்ணையும் அப்படி விட்ருவேனா? என்னவோ நேரம்!" என்றான் அவள் இடையில் கைவைத்துக் கொண்டு.
"இனி எங்க போனாலும் எங்களையும் கூட்டிட்டு போயிருங்க மாமா. உங்களை தவிர எதையுமே யோசிச்சது இல்ல நான். இந்த ஒரு மாசமும் என்னனு இருந்தேன் தெரியல. கண்ணை மூடினா தூக்கமே வரல. தேனுன்னு நீங்க தான் கண்ணுக்குள்ள வந்து நின்னிங்க. தூக்க மாத்திரை கூட கேட்டுப் பார்த்தேன். தர மாட்டேன் சொல்லிட்டாங்க" என்றவள் நிமிர்ந்து அவனை முறைக்க,
"மன்னிச்சுக்க தேனு!" என்றான் வேறெதுவும் சொல்ல முடியாமல்.
"ம்ம்ஹும்.. மாட்டேன் மாமா. இந்த ஒரு மாசத்துக்கு நான் பட்டது போதும். அதெல்லாம் மறக்கணும் நான். பாப்பா வர்ற வரை என் கூடவே இருங்க மாமா. நீங்க நான் பாப்பா, நம்ம வீடு, குடும்பம் இது மட்டும் தான் இனி உங்களுக்கு. வேற எதையும் பார்க்க கூடாது. இன்னும் ஒரு மாசமோ ரெண்டு மசாமோ உங்களுக்கு முழுசா சரியாகிடும். பழையபடி என்னை இந்த கையில தூக்கிக்கங்க. இதோ இந்த இடத்துல உங்க கைக்குள்ள இருந்து நான் முத்தம் தரணும்!" என்றவள் அவன் உச்சந்தலையை காட்டி புலம்பலாய் பேச,
"தேனு!" என தன் மேல் சாய்ந்திருந்தவளை நிமிர்த்திவிட்டான்.
"இன்னும் கொஞ்ச நேரம் சாஞ்சுக்கவா மாமா? இல்ல வலிக்குதா?" என்று தேன்மலர் கேட்க,
"என்ன தேனு!" என்றவன் மார்போடு அணைத்துக் கொண்டான் தன்னவளை.
இத்தனை நாட்கள் அவள் மனதில் மட்டும் வைத்திருந்த அழுத்தம் பயம் என அவனிடம் மட்டும் என அவள் புலம்பல்கள் வர, உணர்ந்தவனுக்கு என்ன சொல்லி ஆறுதல் சொல்ல என தெரியவில்லை.
"பாப்பா கூட உன் கூட தான் இருப்பேன். எங்கேயும் போகல. உன்னையும் நீ கவனிக்கணும் தேனு. பாப்பாவும் இப்ப இங்க இருக்குல்ல?" என சக்திவேல் கைவைத்துக் காட்ட,
"பாப்பா சமத்து. அம்மாக்கு கஷ்டமே கொடுக்கல!" என்றாள் தேன்மலர்.
"அவ அப்பா பொண்ணு! அப்பாவை அம்மா பாத்துக்குறது தெரிஞ்சி தான் அவ சமத்தா இருந்திருப்பா. இனி ரெண்டு பேருமா பாப்பாவை பார்த்துக்கலாம்!" என்றான் சக்திவேல்.
தேன்மலருக்காக சக்திவேல் மீண்டு வர, அவன் மீண்டு வந்த நாட்கள் ஒவ்வொன்றும் தேன்மலர் அத்தனை பரிசோதித்தாள் அவனை.
ராதிகாவின் திருமண விஷயமாய் கோமளம் புஷ்பம் மற்றும் சக்திவேலிடம் பேச, "நல்ல இடமா இருந்தாலும் படிப்பு முடியவும் பாக்கலாம் சொல்லுங்க சித்தி. கல்யாணத்துக்கு அப்புறம் படிக்கறது எல்லாம் எப்பவும் எல்லாருக்கும் சரியா அமையாது. படிப்பு எப்பயும் வேணும்!" என்று சொல்லிவிட்டான் சக்திவேல்.
"நான் படிக்கும் போது அது தெரியலையா மாமா உங்களுக்கு?" தேன்மலர் சக்திவேலிடம் தனியாய் கேட்க,
"கல்யாணத்துக்கு அப்புறம் தேனு புள்ளைய சுமக்குமா புஸ்த்தகத்த சுமக்குமான்னு அளவுக்கு எல்லாம் நான் யோசிக்கலையே தேனு. இந்த புள்ளைய தான் கட்டணும்னு தோணுச்சு. அதுக்கு மேல எதுவும் யோசிக்கல. இப்ப தான் நாலையும் யோசிக்க தோணுது!" என்றான் சிரித்தபடி.
ஒரு வாளியில் தண்ணீர் நிரப்பி வைத்து, "ம்ம் தூக்குங்க மாமா!" என்றாள் இரண்டு மாதங்களில்.
"என்ன மலரு பண்ணுத?" அப்பத்தா கேட்க,
"அண்ணி அண்ணனுக்கு டெஸ்டு வைக்குது. வேடிக்கை மட்டும் பாரு கிழவி!" என்றான் வெற்றி.
"டாக்டருங்க கூட இப்படி செக் பண்ணல. நீங்க சூப்பர் அண்ணி!" ராதிகா சொல்லி இருந்தாள்.
"பூரண குணமாகனும் டா உங்க அண்ணே! அப்பத்தா, அத்தை, என் அம்மா எல்லாரும் இவங்களுக்கு சத்து சேரனும்னு பார்த்து பார்த்து தினமும் சமைச்சு கொடுக்குறாங்க. அது வேணும் தான் ஆனா உங்க அண்ணனும் கொஞ்சம் மனசு வச்சா தான அவங்க பலம் மறுபடியும் வரும். ஆபரேஷன் பண்ணின உடம்பு தானேனு எங்கேயும் தேங்கிற கூடாது. அதான்!" என்று கூறினாள் தேன்மலர்.
"அதுக்கு ஆறு மாசமாச்சும் ரெஸ்ட் எடுக்கணும் டி. சும்மா இப்பவே அத தூக்கு இத தூக்குன்னுட்டு!" என்று வந்துவிட்டார் சந்திரா.
"இருக்கட்டும் த்தை!" என்ற சக்திவேல் ஒரு வார்த்தை பேசவிடவில்லை மனைவிபுறம் மற்றவர்களை.
அவள் பயத்திற்கு அவளால் முடிந்ததை அவளுக்கு தெரிந்ததை என செய்கிறாள். செய்யட்டுமே என்று விட்டுவிட்டான்.
அடுத்தடுத்த மாதங்களில் அவன் நன்றாய் தேறி இருக்க, தேன்மலருக்கு சுத்தமாய் முடியவில்லை.
மூன்றாம் மாதம் ஆரம்பித்ததில் இருந்தே தலை சுத்தல், வாந்தி என மலரை எழுந்து கொள்ளவே விடவில்லை மசக்கை காலம்.
எதை சாப்பிட்டாலும் வாந்தி தான். சக்தி ஊட்டிவிடும் நேரம் கொஞ்சமாய் சாப்பிட்டு வைப்பாள். அந்த அளவை மீறினால் அதுவும் மொத்தமாய் வெளிவரும்.
"பிரியாணி வாங்கியாறட்டுமா தேனு! பிடிச்சதை சாப்பிட்டா வாந்தி வராதுல்ல?" வாந்திக்கு பயந்து சாப்பிடவே மாட்டேன் என அத்தனை அடம் பண்ணியவளை கவலையுடன் சக்திவேல் கேட்க,
"ம்ம்ம் ஆசையா தான் இருக்கு.. ஆனா..." என்றவள் யோசித்தாள்.
"என்ன தேனு?"
"எனக்கு நீங்க அன்னைக்கு வாங்கிட்டு வந்த பிரியாணி சாப்பிடணும்னு இருக்கு மாமா. ஆனா உங்களை அனுப்ப மாட்டேன்! அது மட்டும் இல்ல. அதுவும் சேராம வாந்தி பண்ணிட்டா?" என்றவளைப் பார்த்து சிரித்தவன்,
"வாந்தி பண்ணினாலும் கொஞ்சமாவது உள்ளே போகும்ல? சரி வெற்றியை வாங்கியாற சொல்லுதேன்!" என்றான்.
"வேண்டாம் மாமா! வெற்றியை போய் இதுக்கு அலைய வச்சுக்கிட்டு.." என தடுக்க, சக்திவேல் அப்பத்தாவிடம் கூறினான்.
"அவனுக்கு அம்புட்டுக்கா வேலை உசத்தியா போச்சு? இரு போனை போட்டு பிரியாணி கொண்டாறியா இல்லையானு அவன்கிட்ட நான் கேட்கேன்!" என்றார் அப்பத்தா.
"அப்பத்தா! பாவம் வெற்றி! மாமாக்காக எம்புட்டு லீவு போட்டுருச்சு தெரியுமா? இப்போ எனக்கு பிரியாணி வாங்க போய் வெற்றியை வேலை ஏவனுமா?" என்றாள் தேன்மலர்.
"அவே அண்ணேனுக்காக வேணுமுன்னா ஊரையே ஏமாத்துவான்.. அங்க இருக்க கம்பெனிய ஏமாத்த மாட்டானாங்கும்?" என்று சொல்லி விஷயம் வெற்றி காதுக்கு செல்ல,
"இந்தா கிளம்பிட்டேன் அப்பத்தா!" என்ற வெற்றி,
"நிஜமா அண்ணி கேட்டுச்சா இல்ல வாய் ருசிக்கு நீ கேட்டு வைக்குறியா?" என்றும் கேட்க,
"வெற்றி! எல்லாருக்குமா வாங்கிட்டு வா டா!" என்றான் போனை வாங்கி சக்திவேல்.
"மதியமே வந்துட்டியே ஆபீஸ்ல எதுவும் சொல்ல மாட்டாங்களா?" தேன்மலர் சாப்பிடபடி வெற்றியிடம் கேட்டாள்.
"அதை ஏன் அண்ணி கேட்குறீங்க! அப்பத்தா இருக்க பயமேன்?" என வெற்றி சொல்ல,
"என்னைய போட்டு தள்ளிட்டான் போல!" புஷ்பம் சொல்ல,
"டேய்!" என அதட்டினான் சக்திவேல்.
"அட அப்பத்தாக்கு பிறந்தநாள்னு சொல்லி லீவு கேட்டு வந்தேன் ண்ணே!" என வெற்றி சொல்லவும் சிரித்தபடியே புஷ்பத்தோடு வெற்றி, சக்திவேல் என மொத்தமாய் அமர்ந்து சாப்பிட, மொத்தத்தையும் சாப்பிட்டுவிட்டாள் தேன்மலர்.
"பிள்ளைக்கு இது மட்டும் தான் சேருது சக்தி!" புஷ்பம் சொல்ல,
"தினமும் வர வச்சோருவோம் அப்பத்தா!" என்றான் வெற்றி.
"அம்புட்டெல்லாம் சாப்பிட கூடாது வெற்றி" என்று தேன்மலர் கூறவும்,
"அப்போ வேண்டாமா?" என சக்திவேல் அவளை தெரிந்ததை போல கேட்க,
"வாரத்துக்கு ஒருக்கா போதும்" என்றாள் தேன்மலர்.
"அண்ணி! அல்டி நீங்க!" என வெற்றி சிரித்தவன் கோமளம் ராதிகாவிற்கு என வாங்கி வந்ததை கொண்டு சென்றான்.
இரவு தூங்கும் நேரமும் அத்தனை பாடு தேன்மலருக்கு. தூங்காமல் புரண்டவள் அவன் எழுந்து விட கூடாதே என மெதுவாய் எழ, அவன் ஏற்கனவே விழித்து தான் இருந்திருந்தான்.
"அங்க அம்மா வீட்டுல வேணா கொஞ்ச நாள் இருக்கியா தேனு?" சக்திவேல் அவள் படும் அவஸ்தை பார்த்து கேட்க,
"ம்ம்ஹும்ம் வேண்டாம். அம்மா தான் டெய்லி வருதே என்னை பார்க்க. எனக்கு அப்படி எல்லாம் போகணும்னு தோணல!" என்றாள் அவன் கைகளுக்குள் சென்று சுருண்டு கொண்டு.
"என்னோட கஷ்டமா இருக்கா? தூக்கத்தை கெடுத்துட்டேனா?"
"உனக்கு தெரியாதா தேனு? அப்படினு நான் சொல்லுவேனா? எனக்காக நீ பாக்குறியே அதான் கேட்டேன். நீ இல்லாம தான் எனக்கு தூக்கம் வந்துருமா?"
"அப்போ போவோம்னு சொல்லுங்க. போறியானு கேக்காதீங்க மாமா!"
"சரி கேட்கல!" என்றவன் அணைத்துக் கொண்டு, "வளையல் போட்டதும் என்னனு இருக்க போற நீ?" என்றான் சிரித்தபடி.
"ஏன் மாமா! ஒன்பதாவது மாசம் வளையல் போட்டா ஒரு நாலு மாசம் என்னோட அங்க வந்து இருக்க மாட்டிங்க? பிள்ளை பிறந்த மூணு மாசத்துல தூக்கிட்டு ஓடியாந்துருவோம்!" என்றாள் உடனேயே.
"எவ்ளோ பிளான் தான் போட்டு வச்சிருக்க தேனம்மா?" என அதைக் கேட்டு அவ்வளவு சிரித்தான் சக்திவேல்.
"நிறையா! காலம் முழுசுக்கும் உங்க கூட தான் பிளான் இருக்கு மாமா. கூடவே வச்சுக்கோங்க!" என கட்டிக் கொண்டவளை தானுமே அணைத்துக் கொண்டான்.
நாளும் பொழுதும் என சக்திவேல் தேன்மலர் இருவருக்குமே அத்தனை கவனிப்பு வீட்டில். முதலில் விரும்பியது அவனாய் இருந்த போதும் தொடர்வில் இருவருமே ஒரு உயிராய் தான் இணைந்திருந்தனர்.
சக்திவேல் இளவரசி அவன் கைகளில் வரும் நேரம் கூட தன்னவளின் அருகிலேயே தான் இருந்தான் சக்திவேல்.
தொடரும்..