• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் - 02

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
எபிசோட் - 02

தனசேகர் சாரதா இருவரும் தங்களின் மருத்துவ ரிப்போர்டை டாக்டரிடம் தந்து விட்டு ஆவலாய் அவரின் முகத்தை பார்த்தனர்.. சாரதாவிற்கு எந்த அளவிற்கு குழந்தை ஆசை உள்ளதோ அதே அளவிற்கும் தனசேகருக்கு இருக்கிறது.. ஆனால் தன் குழந்தை ஆசை தன் மனைவியை எந்த விதத்திலும் காயப்படுத்தி விடக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தார்.. ஆனால் இப்பொழுது அதற்காக மருத்துவமனை வந்த பின்பு அவரின் ஆசை முகத்தில் இருந்தது.. ஆனால் அதை தன் மனைவிக்கு தெரியாமல் மறைத்தார்.. ரிசல்ட் என்ன வந்தாலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அவருக்கு உள்ளது.. அவரின் காதல் அதை தந்தது.. ஆனால் சாரதாவினால் நிச்சயம் தாங்க முடியாது.. எனினும் இதை எதிர் கொள்ளத் தான் வேணும் என்ற எண்ணத்துடன் மருத்துவரின் முன்னே அமர்ந்திருந்தார்.

அவர்களின் மருத்துவ முடிவுகளை படித்தவர் சாரதாவிடம் திரும்பி,

"உங்களுக்கு ஸ்டெமக் பெயின் எவ்வளவு நாளா இருக்கு.. அப்போல்லாம் என்ன செய்வீங்க அந்த வலி போக.. வேற எங்கேயாவது ஹாஸ்பிடல் போய் செக் பண்ணிருக்கீங்களா இதுக்கு முன்னாடி.." என்று கேள்விகளாய் கேட்டார்.

தன் கணவரின் முகத்தை தயக்கத்துடன் பார்த்தார் சாரதா.. தனசேகரின் முகம் அதிர்ச்சியில் இருந்தது.. தன் மனைவிக்கு வயிற்று வலியா..? அதை தன்னிடம் சொல்லவில்லையா..? என்ற கேள்வியுடன் மனைவியின் முகத்தை அடிபட்ட வலியுடன் பார்த்தார்.

அவருக்கு தன் மனைவியின் உடல்நிலை தெரியவில்லை என்பது பெரிய அடியாக இருந்தது.. அந்த அளவிற்கா தன் மனைவியுடன் வாழ்ந்தேன்.. இல்லை அவளின் வேதனை கூட தெரியாத அளவிற்கா அவளுடன் குடும்பம் நடத்தினேன்.. அவளின் மேல் அளவில்லாத காதல் கொண்ட தனக்கா தன்னவளின் நிலை தெரியவில்லை.. இந்த நினைவே அவரை கொல்லாமல் கொன்றது.. தன்னை நினைத்தே அவருக்கு அசிங்கமாக இருந்தது.

இருவரின் முகத்தையும் நன்றாக பார்த்த மருத்துவர் தனசேகரிடம் திரும்பி,

"அப்போ உங்க மனைவிக்கு வர்ற வலி உங்களுக்கு தெரியாதுங்கறது உங்க அதிர்ச்சியை வச்சி தெரியுது மிஸ்டர் தனசேகர்.." என்றார் ஒரு பெருமூச்சுடன்.

எப்படி செல்வார் தெரியாது என்று.. தன் காதல் மனைவி மேல் உள்ள அதீத அன்பில் தானே அவள் சாதாரண வலி என்ற போது பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டார்.. அது எவ்வளவு பெரிய தவறென்று இன்று அவரின் மனைவி உணர்த்தி விட்டாள்.. யாரோ நடுரோட்டில் நிர்வாணமாய் நிற்க வைத்து சாட்டையால் விளாசியதை போல் வலித்தது.

ஆனால் இப்பொழுது அதை விட அந்த ரிப்போர்ட்டில் என்ன உள்ளது தெரிய வேண்டும் அதுவே தற்சமயம் முக்கியம்.. நடந்து முடிந்ததை பற்றி யோசித்து இனி பிரயோஜனம் இல்லை. மருத்துவரின் முகத்தை பார்த்து,

"என்னாச்சி டாக்டர் எதுவும் பெரிசா இல்லையே.." எதுவும் இருக்கக்கூடாது என்ற படபடப்புடன்.

அவரோ தன் கண்ணாடியை கழற்றி விட்டு இருவரின் முகத்தையும் பார்த்து,

"ஐ ஆம் சாரி மிஸ்டர் தனசேகர்.. ஷீ ஈஸ் கவுண்டிங் இன் லாஸ்ட் டேஸ் இன் அவர் லைப்.." என்றார் வருத்தத்துடன்.

அவர் சொன்னதை கேட்டதும் இருவரின் தலையிலும் யாரோ கூடை நெருப்பள்ளி கொட்டியதை போல அதிர்ச்சியில் திகைத்தனர்.

" டாக்டர் என்ன சொல்றீங்க.. கொஞ்சம் ரிப்போர்ட் நல்லா பாருங்க.. ஒரு சாதாரண வயித்து வலியா உயிரை குடிக்கும்.." என்றார் சாரதா பதட்டத்துடன்.

தனசேகருக்கும் பதட்டம் இருந்தாலும் அவர் முதலில் கூறிய வார்த்தையில் இருந்தே இன்னும் அதிர்ச்சியில் இருந்து எழவில்லை என்பது அவரின் அதிர்ச்சி முகமே சொன்னது.


மேலும் மருத்துவரே சாரதாவின் கேள்விக்கு மெல்லிய புன்னகை சிந்தியபடி,

"சாதாரண வயித்து வலி உயிரை குடிக்காது மிஸ்ஸஸ் தனசேகர்.. பட் அந்த வயித்து வலிக்கு காரணம் புற்றுநோய் கட்டிகள் னா கண்டிப்பா அது உயிரை குடிக்கும் இல்லையா.." என்று அடுத்த அதிர்ச்சியை அவர்களின் தலையில் இறக்கினார்.

சாரதாவிற்கு அது மிகுந்த அதிர்ச்சியை தான் தந்தது.. தன் வாழ்நாள் அவ்வளவு தானா.. தனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் தன் கணவனின் உதிரத்தை கூடவா என்னால் சுமக்க முடியாது.. அதற்குள்ளாகவா நான் மறைய போகிறேன் அவரின் கண்களில் உடைப்பதற்கு ஓடும் ஆறாய் கண்ணீர் ஓடியது.


தனசேகர் நிலையோ அதற்கு மேல் மோசமாகியது.. இனி தன்னவள் இருக்கும் நாட்களை எண்ணிக் கொள்ள வேண்டுமா.. என்னை விட்டு நிரந்தரமாக பிரிய போகிறாளா.. அளவில்லாமல் என் வாழ்வு சிறக்குமா.. அவளில்லா வாழ்வு காரிருளில் மறைந்து விடுமே.. ஆனால் இதற்கு தீர்வு என்ற ஒன்று உண்டல்லவா..

தன்னவளை காக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன், "டாக்டர் இதை சரி பண்ணலாம் இல்லை.. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை டாக்டர்.. என் மனைவியை எனக்கு திருப்பி கொடுங்க.." என்று அவரின் கால்களில் விழுந்து விட்டார் தன்னவளுக்காக.

"அச்சோ மிஸ்டர் தனசேகர் என்ன செய்றீங்க நீங்க.. இந்த புற்றுநோயை குணப்படுத்த முழுதாக எந்த மருந்தும் இல்லை.. ஆனா இவங்களுக்கு கர்ப்பப்பை புற்று நோய் தான்.. அதுக்கு சரியாகனும்னா இவங்களோட கர்ப்பப்பையை ரீமூவ் பண்ணணும்.. அப்படி செஞ்சாலும் முழுசா கீயூர் ஆகுமாங்கிறது சந்தேகம் தான்.. ஆனா இதுவும் உங்களோட மன திருப்திக்காக நாங்க செய்யலாம் தனசேகர்.. இனி நீங்க யோசிச்சிட்டு சொல்லுங்க தனசேகர்.. எனக்கு தெரிஞ்ச பாரின்ல ஒரு டாக்டர் இதுல ஸ்பெஷலிஸ்ட்.. அவங்க ஒரு கான்பிரன்ஸ்க்காக சென்னை வந்துருக்காங்க.. நான் அவங்களையும் கலந்துட்டு உங்களுக்கு நாளைக்கு கால் பன்றேன்.. நீங்க எனக்கு நாளைக்கு பதில் சொல்லுங்க.." என்று இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

வீட்டிற்கு வந்த இருவரும் பேசாமல் அமர்ந்திருந்தனர்.. சாரதா தனசேகரன் மடியில் தலை வைத்து படுத்திருந்தாள்.. தன் மனைவியின் தலையை மென்மையாய் வருடியபடி சுவற்றில் சாய்ந்திருந்தவரின் கண்களில் கண்ணீர் பொழிந்தது.

தன் கண்ணீரை மெதுவாய் துடைத்துக் கொண்டவர், " ஏன் மா என்கிட்ட எதுவும் சொல்லலை.. அந்த அளவுக்கு நான் உனக்கு வேண்டாதவனா போயிட்டேனா மா.. என் உயிரே நீதான்னு உனக்கு தெரியும் இல்லை.. ஏன் டா இப்படி பண்ணுண.. ஒரு தடவை சொல்லிருந்தா நான் உன்ன தங்கம்மா தாங்குவேனா டா.. நான் ஒரு முட்டாள் டா.. கூடவே இருக்கற பொண்டாட்டிய பத்தியே தெரியலே.. இதுல நான் உன்னை காதலிச்சு கல்யாணம் செய்துகிட்டேன்.. எங்கிருக்கு என்னோட காதல்.. என் தப்பு தான்மா.. என் தப்பு தான் மா.." மனைவியை கேள்வி கேட்டவர் தன் தலையிலும் அடித்து கொண்டார்.


தன்னவன் தன்னால் வருத்தம் அடைவதை கண்ட பெண்மனம் தாங்காமல் அவரின் கையை பிடித்து தடுத்து நிறுத்தியவர்,

"மாமூ ஏன் இப்படி நினைக்குறீங்க.. நீங்க என்னை பாத்துக்குறதுல எப்பவும் குறை வைச்சதில்லை.. உங்க காதல் உசந்தது மாமூ.. எனக்கான உங்க காதல்ல எந்த பிழையும் எப்போதும் இருந்தது இல்லை மாமூ..

எனக்கே தெரியலை மாமூ.. இது பெண்களுக்கு எப்பவும் வர்ற வலி தான் இதுல பெருசா எதுவும் இல்லைன்னு சொன்னாங்க.. எனக்கும் பெருசா எதுவும் தோனலை.. அதுனால அந்த சமயத்தில வெந்தயம் கசாயம் இப்டி எதாவது வச்சி குடிச்சா சரியாகிடும்.. அதுனால நானும் பெருசா எடுத்துக்கலை மாமூ.. ஆனா இப்போ இந்த அளவுக்கு வரும்னு நானும் எதிர்பார்க்கவே இல்லை மாமூ.." என்று தன்னவனுக்கு ஆறுதல் கூறியவள் அவரின் மடியில் இருந்து எழுந்து அவரின் மார்பில் சாய்ந்து கொண்டு,

"மாமூ நான் செத்துருவேனா.. நமக்கு குழந்தை பிறக்காதா.. என் வயித்துல பாப்பா வராதா மாமூ.." அவரின் மார்பிலே சாய்ந்து கதறினாள்.

"சாரதா மாமூ ஒன்னு கேட்பேன் அதுக்கு உண்மையான பதில் சொல்லுவியா மா.." என்றான் தன் மனைவியின் மனதை படிக்க.

"சொல்லுங்க மாமூ.. உங்களுக்காக என் உயிரையும் கொடுப்பேன் மாமூ.." என்றாள் கண்ணீர் சிந்தியபடி.

"உன் உயிரெல்லாம் வேணாம் டா..
எனக்கு என் சாரதா உயிரோட வேணும்.. என் சாரதாவ எனக்கு திருப்பி கொடு மா.. இதை நான் உன்கிட்ட பிச்சையா கேட்கிறேன்.. ஆப்ரேசனுக்கு சரின்னு சொல்லுமா.. நமக்கு ஒரு குழந்தை இல்லைன்னா என்ன டா.. எத்தனையோ அனாதை குழந்தைங்க இருக்காங்க.. அவங்கள நாம வளர்க்கலாம் டா.. நீ நூறு குழந்தைக்கு தாயா ஆகலாம் டா.." அடுத்ததாக தன் மனைவி என்ன கேட்பாள் என்று யூகித்தே தான் முந்தி கொண்டார்.

தன் கணவனின் புத்திசாலி தனத்தில் சாரதாவின் முகத்தில் புன்னகை அரும்பியது.. இன்னும் எத்தனை காலம் ஆனாலும் அவரின் காதலுக்கு நிகர் அவரே.. அவரின் காதலில் எப்பொழுதும் போல் இப்பொழுதும் கர்வம் சுமந்த புன்னைகயுடன் இவன் என்னவன் என்ற கர்வத்திலும் தன்னவனை தன் ஆசை விழிகளால் வருடினாள் பெண்ணவள்.


"என்னடி இப்படி ஆசையோட பாக்குற.. ஏன் சாரதா எதுக்கு என் மேல உனக்கு இந்த காதல்.. ஆனாலும் வயசானாலும் இன்னுமும் அழகாத்தாண்டி இருக்கே.. இன்னுமும் உன்னை பாத்தா தோன்ற உணர்வு யாருகிட்டேயும் வந்ததில்லைடி.. என் உணர்வுகளை தூண்டற சக்தி உன் பார்வையில இருக்குடி.." தன் மனைவியை சகஜமாக்கும் வேலையை ஆரம்பித்தார்.

அவளை இப்பொழுது தேற்றவில்லை எனில் எப்பொழுதும் அதே வருத்தத்தில் உழன்று கொண்டிருப்பாள்.. அது அவளின் உடல்நிலைக்கு இன்னமும் தான் ஆபத்து என்று உணர்ந்தவர் தன் மனைவியை பார்வையால் சிவக்க செய்திருந்தார்.


அவரோ தன்னவனின் பார்வையில் நாணம் கொண்டவர் இரு கண்ணங்களும் சிவக்க தன்னவனின் மார்பில் தலை சாய்த்தாள்.

தன் மார்பில் சாய்ந்த தன்னவளின் உச்சியில் முத்தமிட்டு,


கண்ணே உனக்கு என்ன குறை சொல்லிவிடு
கண்ணீர் எடுக்கு அன்று விழியில் தள்ளி விடு
நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளைதான்
இங்கு நானும் பிள்ளைதான்….

கண்ணே உனக்கு என்ன குறை சொல்லிவிடு
கண்ணீர் எடுக்கு அன்று விழியில் தள்ளி விடு
நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளைதான்
இங்கு நானும் பிள்ளைதான்….

கண்ணே உனக்கு என்ன குறை சொல்லிவிடு….

பார்க்கும் பார்வை பொதுமே
பாலும் தானும் ஒருமே
பார்வையில பாசம் வந்து
எம் பசிக்கு பாலூட்டும்
பாவை உந்தன் கை வளையல்
பாட்டு சொல்லி தாளட்டும்.

பெத்தெடுத்த தாய் முகத்தை
நான் மறந்து நாள் ஆச்சு
தத்தெடுத்த தாயா என்ன
தாங்கி கொள்ள நீயாச்சு

கண்ணே உனக்கு என்ன குறை சொல்லிவிடு
கண்ணீர் எடுக்கு அன்று விழியில் தள்ளி விடு
நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளைதான்
இங்கு நானும் பிள்ளைதான்….

கண்ணே உனக்கு என்ன குறை சொல்லிவிடு….

பாசம் உள்ள நெஞ்சிலே
பாரம் இங்கு வந்ததே
மையெழுத்தும் கண்ணுக்குள் வேலி முல்லை வச்சென பூவிருக்கும்
நெஞ்சுக்குள் ஊசி கொண்டு தாச்சனா
சேலையில மூடி வச்சு
திங்க வச்ச ராசாத்தி தெய்வங்களும் கை வணங்கும்

கண்ணே உனக்கு என்ன குறை சொல்லிவிடு
கண்ணீர் எடுக்கு அன்று விழியில் தள்ளி விடு
நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளைதான்
இங்கு நானும் பிள்ளைதான்….



தன் காதலை பாடல் மூலம் உணர்த்தினார் தனசேகரன்... மனைவியின் தீராத அன்பை வைத்தவருக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்.. தன்னவளுக்காக இந்த பாடலை எப்பொழுதும் பாடுவார்.. அவர்களின் சந்தோஷமோ துக்கமோ அனைத்திலும் இந்த பாடல் அவர்களுக்குள்ள இருக்கும்.


காதல் ஒருவரின் மேல் நாம் வைத்திருக்கும் காதல் அவரின் குற்றம் குறைகள் அனைத்தையும் மறந்து ஏற்றுக் கொள்ளும்.. அதே காதல் தான் அதீத பெறாமையால் விட்டுக் கொடுக்க முடியாமல் தவிக்கும்.. தன் பொருள் மற்றவர்கள் பார்வையில் கூட விழக் கூடாது என்ற எண்ணம் தான் அந்த காதல் தோற்க சில நேரம் காரணமாகிறது என்பது நாம் ஏற்றுக் கொள்ளும் வருத்தம் தரக்கூடிய விடயமாகும்.

இங்கே சாரதா தன்னவன் மேல் வைத்த அதீத அன்பால் தன் உடலில் இருந்த வலியை சிறிதென நினைத்து தன்னவனிடம் மறைத்தாள் அதை அறிந்தாள் மனம் வருத்தப்படுவானே என்று.. ஆனால் சிறிதென நினைத்து மறைத்த விடயத்தில் தான் அவளின் உயிர் ஊசாலாடுகிறது.. தன்னால் தன்னவனுக்கு சின்ன வேதனை கூட தரக்கூடாது என்று நினைத்தவள் தானே தன்னவனை அதள பாதாளத்தில் விழ வைக்கப் போறோம் என்பது அவருக்கு வேதனைக்குரிய விஷயம் தான்.


காலமாற்றிலே கலங்கரை விளக்காய் நீ..
நிழலின் அருமை நிஜத்தில் உணர்வேனோ..
இல்லை நிழலிலே என் காலம் கழியுமோ..


நிஜம் வருடும்...🌹
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
தனசேகர் ❤️ சாரதா அன்யோன்யமான ஜோடி

பொருத்தமான பாடல்👌
 
  • Like
Reactions: ரமா