• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் - 03

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
சாராதவை ஈசியாக சமாதானம் செய்தவருக்கு தன்னை சமாதானம் செய்துக் கொள்ளத் தான் முடியவில்லை.. ஏன் தன்னவள் மறைத்த விடயம் இன்று அவளின் உயிருக்கே உலையானதே..அவளை எப்படி இந்த நோயில் இருந்து மீட்பது.. கடவுளே சொந்த பந்தத்தை அனைத்தையும் பறித்தாலும் என்னவள் என்னருகில் உள்ளாள் என்ற சந்தோஷத்தில் இன்று விஷம் பாய்த்து விட்டாயே.

உன்னையே நம்பி இருந்த என்னை இப்படி அனாதையாய் ஆக்கி விட்டாயே இறைவா என்று நாளும் கடவுளை வணங்குபவர் இறைவனிடம் சண்டை போடாமல் இருப்பதில்லை.. ஆனாலும் தன்னவளை கவனிப்பதில் எந்த குறையும் வைப்பதில்லை.

மெதுவாக பேசி பேசி ஒரு வழியாக சாரதாவிடம் ஆப்ரேசனுக்கு அனுமதி வாங்கிவிட்டார்.. குறிப்பிட்ட தேதியில் அறுவை சிகிச்சையும் நடந்தது.. ஆப்ரேசனும் நன்முறையில் நடந்து ஓரளவிற்கு சாரதா தேறி வந்தார்.. குழந்தை இல்லை என்பதை விட இருவருக்கும் வேறு எந்த மனவருத்தம் இல்லாமல் எல்லாம் நன்றாகத் தான் நடந்தது.

அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாய் அவர்களின் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்பிறையாய் வளர்ந்தது.

இருவரும் மகிழ்ச்சியாக தங்களின் வாழ்வை வாழ்ந்தனர்.. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அனாதை ஆசிரமத்திற்கு சென்று அங்குள்ள சின்னஞ்சிறு பிஞ்சு முகத்தை பார்த்து கொஞ்சி தங்களின் ஏக்கத்தை தீர்த்து கொள்வார்கள்.. இப்படியான அவர்களின் மகிழ்ச்சியான வாழ்வில் மீண்டும் காலன் புகுந்தான்.

ஆப்ரேசன் பண்ணி அகற்றப்பட்ட புற்றுநோய் மீண்டும் அவருக்குள் உருவாக தொடங்கியது.. முன்பு போல் அல்லாமல் உடல் தளர்ந்து மனம் தளர்ந்து போனார் சாரதா.. தன்னவனுக்கு இன்னும் எத்தனை வலிகளை கொடுப்பது என்று மனவேதனை அரிக்க அரிக்க உள்ளுக்குள்ளே நோயின் தாக்கமும் அதிகரித்தது.

நாளடைவில் அது பெரிதளவில் உடலில் பரவி அவரை படுத்த படுக்கையாக்கியது.. படுக்கையில் இருந்தாலும் சிறிதும் காதல் குறையாமல் தன்னவளை குழந்தையாய் பாவித்து காத்து வந்தார் தனசேகர்.

எத்தனை தான் தன்னவன் தன்னை மகிழ்ச்சியாக பார்த்துக் கொண்டாலும் சாரதாவிற்கு தன்னால் தான் தன் கணவனுக்கு வாரிசு என்ற ஒன்றே இல்லாமல் போனதை நினைத்து மனம் வருந்தினார்.. ஆனால் அதை தன்னவன் அறியாமல் சாமர்த்தியமாக மறைத்தார்.

அவருக்காக தெரியாமல் போகும் மனைவியின் சிறுமாற்றுமும் தெரிந்து அதை நிவர்த்தி செய்வது தான் தன் வாழ்நாளின் லட்சியமாக கொண்டுள்ளாரே.. ஆனால் இதை அப்படி நிவர்த்தி செய்ய முடியாதே.. தன் வாழ்நாளில் தன் மனைவி என்றாள் அது சாரதா மட்டும் தான் என்ற எண்ணத்தில் தீர்க்கமாய் அல்லவா உள்ளார்.

மனதில் வேதனையுடனும் முகத்தில் சிரிப்புடன் தன் கடைசி நாளை எண்ணிக் கொண்டிருந்த சாரதா ஒரு இரவின் தூக்கத்திலே மறைந்தார்.

மறுநாள் தன் மனைவிக்கு சேவை செய்ய வந்த கணவனுக்கு அவரின் சில்லிட்ட உடல் எதையோ உணர்த்த பக்கத்திலிருந்த மருத்துவரை அழைத்து வந்து காண்பித்தார்.

என்ன தான் எதிர்பார்த்த மரணம் என்றாலும் அது நடக்கும் போது நம் மன தைரியம் எங்கே போகும் என்றே தெரியவில்லை.

தன் மனைவி இறந்ததிலிருந்து அவரின் நினைவை மட்டுமே சுமந்தபடி எந்த ஒரு நினைவும் இல்லாமல் வாழ்ந்தவருக்கு தன் மனைவியின் வேண்டுதல் நினைவு வந்தது.

ஏன் அது அவரின் கடைசி ஆசையும் கூட.. தங்களுக்கு குழந்தை இல்லாது போல எத்தனையோ தம்பதிகளும் தாய் தந்தை இல்லாத எத்தனையோ குழந்தைகளும் உள்ளனர்.. அவர்களுக்கு வழிகாட்டியாகவும் அரவணைப்பையும் தர வேண்டும் என்பது தான் அவரின் ஆசை.

இனி தன் ஆசையும் வாழ்வும் தன்னவளின் இறுதி ஆசை என்பதை உணர்ந்தவர் சாரதா குழந்தைகள் மற்றும் முதியோர் காப்பகம் நிறுவினார். தனக்கென்று சொந்த பந்தமும் இல்லாத வயதான தம்பதிகள் தாய் தந்தை யாரென தெரியாத இளம்பிஞ்சுகள் என கிட்டதட்ட அறுபது பேர் வரை இருக்கிறார்கள்.


ஒரு முறை தன் மனைவிக்கு மிகவும் பிடித்தமான கண்ணன் கோவிலுக்கு சென்ற போது தான் அகல்யாவை குழந்தைகளுடன் கண்டார்.

ஏனோ கோயிலுக்கு சென்றால் அங்கே ஒரு சின்ன மன அமைதி.. தன்னவளின் நினைவு மழைச்சாரலாய் அவரை நனைய வைக்கும்.. உண்மைக் காதல் எந்த வயதிலும் அழியாது மனதில் சுமக்கும் சுகமான சுமைதானே.. அதை தான் தனசேகரும் அனுபவித்தார்.

அங்கே இருந்த கோயில் தூணில் அமர்ந்தவருக்கு பக்கத்தில் ஒரு பெண்ணின் கண்டிப்பு நிறைந்த குரல் கேட்டது.

" நவி இங்கே பாரு.. இப்படி அடம் பண்ணின அப்புறம் அம்மா உனக்கு எதுவும் வாங்கி தர மாட்டேன் பாத்துக்கோ.." என்ற பெண்ணின் குரலும் அதைத் தொடர்ந்து வந்த,

"அம்மா ப்ளீஸ் என் செல்ல அம்மா இல்லை.. இது ஒரு தரம் மட்டும் அம்மா.. இனி கேட்க மாட்டேன். . டேய் அண்ணா சொல்லுடா.." என்ற மழலையின் குரலும் அவரை திரும்பி பார்க்க வைத்தது.


"ஆமாம்மா இந்த ஒரு தடவை மட்டும் மா இனி நாங்க கேட்க மாட்டோம்.." என்று தம்பியுடன் இணைந்து கொண்டான் பெரியவனும்.

"அடேய் உங்களை வெளியே கூட்டி வர்றதே பெரிய விடயம்.. இதுல வரும் போது எல்லாம் ஐஸ்கிரிம் வேற.. அதுவும் பேமிலி பேக்.. உங்களை என்ன தான் பன்றதோ. . ஆனா ஆது அவன் கேட்டானு அவனோடு சேர்ந்துட்ட நீ.. போட அம்மா உங்களோட பேசலை கா உங்க கூட.." என்று பெண்ணின் குரல் அந்த மழலைகளிடம் மட்டும் கனிவை கொண்டுள்ளதா இல்லை எப்போதும் இதே கனிவை கொண்டுள்ளதா என்ற சந்தேகமே வந்தது.

நீண்ட நேரம் அந்த மூவரையும் பார்த்துக் கொண்டிருந்தார்.. ஏனோ அந்த தாய் மகன்களுக்கான பிணைப்பு அவருக்குள் ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் போல.. அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்த சிறுவர்களுக்கு பத்து ஐந்து வயது இருக்கலாம் என்று தோன்றியது. அந்த பெண்ணின் முகத்தை பார்த்தார்.

சிவப்பும் அல்லாத கருப்பும் அல்லாத மாநிறம்.. வட்ட வடிவ முகம்.. அதில் பிறைநிலவாய் சிறிய கருப்பு நிற பொட்டு விபூதி இதிலே அழகாய்த்தான் இருந்தாள்.. ஆனால் எதுவோ குறையாய் அவரின் மனதிற்கு தோன்றியது.. அந்த குறை என்னவென்று சிறிது நேரத்திலே புரிந்தது.. அந்த பெண்ணை நினைத்து வருந்தினார்.

சிறிது நேரத்தில் அவர்கள் சென்றதும் இவரும் அங்கிருந்து கிளம்பினார்.

அடுத்த அவளை சந்தித்த இடம் பல்பொருள் அங்காடியில் தான்.. எப்பொழுதும் ஆசிரமத்திற்கு அங்கிருந்து தான் மளிகை பொருட்களை வாங்குவார்.. அன்றும் அது போல வாங்க சென்றவர் அகல்யாவையும் சிறுவர்களையும் கண்டார்.

அவர்களை கண்டதும் அவரின் முகத்தில் ஒரு புன்னகை இயல்பாய் வந்து ஒட்டிக் கொண்டது.. தான் வந்த வேலையை மறந்து அந்த பெண்ணையும் சிறுவர்களையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் அவர்கள் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்தனர்.. இவரின் வேலையும் முடிந்ததால் வெளியே வந்தவர் தன் முன்னால் போனவர்களை பார்த்துக் கொண்டு சென்றவர் பாதையில் இருந்து கல்லை கவனிக்கவில்லை.. பெரிய கல்லாய் இருந்ததை கவனிக்காமல் சென்றவர் அந்த கல் தடுக்கி அங்கேயே அம்மா என்ற அலறலுடன் கீழே விழுந்தார்.


தன் பின்னால் யாரோ அலறும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்த அகல்யாவும் கீழே விழுந்திருந்த தனசேகரை கண்டு பதட்டத்துடன் அவரருகே வந்தாள்.

கீழே தடுமாறி விழுந்ததில் தலையில் அடிபட்டு அங்கே உதிரம் கசிந்தது.. அதை கண்டவள் பதட்டமாக தன் பேக்கில் இருந்த வாட்டர் பாட்டிலில் இருந்த நீரை அவரின் முகத்தில் தெளித்து தலையில் வந்த உதிரத்தை சுத்தப்படுத்தினால் நீரால்..

அப்பொழுதும் மயக்கம் தெளியாமலிருந்த தனசேகரை பார்க்கும் போது அவளுக்கு பதட்டமானது.. அருகிலிருந்தவர்களை அழைத்து ஒரு ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றாள்.. ஏனோ அவரை அப்படியே விட்டுச் செல்ல அவளுக்கு மனமில்லை.
அதனால் அவர் கண்விழிக்கும் வரை அவரருகில் இருந்து பார்த்துக் கொண்டாள்.

சிறிது நேரத்திலே மயக்கம் தெளிந்தவர் கண்டது தன் அருகில் அமர்ந்திருந்த அகல்யாவைத் தான்.

அவர் கண் விழித்ததை உணர்ந்தவள் உடனடியாக மருத்துவரை அழைத்தாள்.

அவர் வந்து பரிசோதித்து தனசேகரை பார்த்து,

"என்னாச்சி தனா.. எப்படி இப்படி திடிர்னு ஆச்சி.. ரொம்ப உணர்ச்சிவசப்பட்டியா டா.." என்று தனசேகரின் தோளை தட்டினார்.

தன் உடல்நிலையை கூறிய மருத்துவரை பார்த்த தனசேகர்,

"ஹேய் ராஜா எனக்கு ஒன்னுமில்லை டா.. நீ எப்படி இருக்க.. நீ இங்கே தான் இருக்கியா. . கால் தடுக்கி விட்டுருச்சி டா.. வேற எதுவும் இல்லை.." என்றார் இயல்பாக.

அவர்கள் இருவர் பேசுவதையும் தலையிடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அகல்யா.

அவரை பரிசோதித்த மருத்துவர்,

"ஆமா டா இப்போ தான் வந்து ஒன் மன்த் ஆகுது.. பசங்க எல்லாம் கனடாவிலேயே செட்டில் ஆகிட்டாங்க டா.. நமக்கு அதெல்லாம் ஒத்து வரலை.. இனிமே என்ன நம்ம ஊர்லையே சர்வீஸ் பண்ணிட்டு நம்ம காலத்தை ஓட்டிக்கலாம்னு வந்துட்டேன்.. ஆமா இது உன்னோட பொண்ணாட.. சாரதா எப்படி டா இருக்கா.. வரனும் டா வந்து பாக்கணும்.. ரொம்ப வருசம் ஆச்சி நம்ம ஊரை விட்டு போயி.." என்று தன் நண்பனை பரிசோதித்து கொண்டே பேசினார் மருத்துவர்.

அவர் கூறிய வேறெதும் தனசேகரின் காதுகளில் விழவில்லை.. அகல்யாவை காட்டி உன் பெண்ணா என்று கேட்டதும் மனம் சிலிர்த்து போனார் தனசேகர்.


என் பெண்ணா என் பெண்ணா ஆம் இவள் என் மகளாய் இருந்தால் தான் என்ன என மனசெல்லாம் சிறகை விரித்து பறந்தது.

"அடேய் தனா நான் பாட்டு பேசிட்டு இருக்கேன் நீ எங்கேயோ டீரிம்ல இருக்கு.. இருடா சாரதாகிட்ட சொல்றேன்.." என்று வம்பிழுத்தார் ராஜா.

" இப்போ நீயே நினைச்சாலும் சாரதாவ பாக்க முடியாது ராஜா.. அவ என்ன விட்டு போயி பத்து வருசம் ஆகுது ராஜா.." என்றவரின் குரலில் இருந்த சோகம் அங்கிருந்த இருவரையும் கலங்க செய்தது.

"தனா என்னடா சொல்ற.. என்னாச்சி டா.." தன் நண்பனின் வருத்தத்தை காண முடியாமல் கேட்டார் ராஜா.

தன் வாழ்வில் நடந்த அத்தனையும் சொல்லியவரின் கண்கள் கலங்கி போயிருந்தது தன்னவளின் நினைவில்.

மருத்துவர் அகல்யாவை கேள்வியாக பார்க்க அவளோ கலங்கிய தன் கண்களை துடைத்து விட்டு,

"அது சார் நாங்க மளிகை கடைக்கு போயிட்டு வரும் போது அய்யா கீழே விழுந்துட்டாரு.. தண்ணி தெளிச்சி பார்த்தேன்.. ஆனா அய்யா எழுந்துக்களை.. அதான் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்தேன்.." என்றாள் இயல்பாய்.

இருவரும் அவளை பெருமையாய் பார்த்தார்கள்.

தனசேகர் சிரிப்புடன் அவளை பார்த்தவர் தன் நண்பனையும் பார்த்தார்.

அவரின் விழிகள் சொன்ன வார்த்தையை உள்வாங்கிய அந்த நண்பன் அகல்யாவிடம் திரும்பி,

"உன்னோட பேரு என்னம்மா.. உன்னோட பசங்க ரெண்டு பேரு வந்தாங்க இல்லை.. அவங்க எங்கேம்மா.." என்று அவர் கேட்கும் பொழுதே அங்கே அம்மா என்ற அழைப்புடன் வந்தனர் அவளின் செல்ல மகன்கள் கையில் பிளாஸ்குடன்.

அதை கண்டவள் அவர்களின் கையிலிருந்த பிளாஸ்கை வாங்கி கொண்டு,

"சார் என்னோட பேரு அகல்யா.. இவங்க என்னோட பசங்க.. சார் காபி.." எனக்கேட்டு இருவருக்கும் இரு கோப்பைகளை நீட்டினாள்.

சிரித்தபடி இருவரும் நன்றி சொல்லி பெற்றுக் கொண்டனர்.

அவளை மேற்கொண்டு எதுவும் கேட்காமல் இருவரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் விழிகள் நான்கும் பெண்ணவளையும் அந்த குட்டி மாஸ்டர்களையும் சுற்றியே வலம் வந்தது.


அதே நேரத்தில் சென்னையில் அந்த பெரிய கம்பெனியின் வாயில் கார் நுழைந்து போர்டிகோவில் நிற்க அதிலிருந்து இரு நீண்ட நெடிய கால்கள் இறங்கியது.

டக் டக் வென அந்த ஷீ கால் சப்திக்க விருவிருவென ஒருவன் நடந்து கொண்டிருந்தான்.

பார்க்க அந்த கார்மேகவண்ணன் கண்ணனின் நிறத்தை கொண்டிருந்தான்.

முன்பே கருப்பு நிறமும் சிவப்பேறிய விழிகளும் இறுக்கமான உதடுகளும் என பார்க்கவே அவனுக்கு சிரிக்கத் தெரியுமா என தோன்றும் வகையில் இருந்தான்.



கார்மேக வண்ணனின் நிறத்தை உடையவனே..
நீ சிரித்தால் பேரழகு பெட்டகம் என்று எண்ணம் கொண்டாயோ..
சிரிப்பை மறந்த உன் இதழ்களும் கருமை நிறமே..
ஏனோ என் மனம் உன்னையே சுற்றி சுழன்றடிக்கும் சூறாவளியாய் ஆனதே..
இந்த பூவையை மையம் கொள்வாயோ என் பேரழகா..


நிழலை வருடும் நிஜம்..

தொடரும்..




அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.
 

Vimala

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 10, 2023
104
44
28
Trichy
கஷ்டமோ நஷ்டமோ அகல்யாவை அப்படியே விட்டுடுங்க ப்பா
அவங்க மூனு பேருமே நல்லாத்தான் இருக்காங்க
 
  • Like
Reactions: ரமா

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
ஒரு ஃப்ளோல அவங்கள ரசிச்சிட்டு இருந்தா.. 😍
இது யாருடா புதுசா? 🧐
திடீர்னு ஒருத்தன் உள்ள குதிச்சிட்டானே.. 🤨

ஹீரோ என்ட்ரியா? 🙄
 
  • Like
Reactions: ரமா