• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் - 04

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
177
202
43
Salem
அகஸ்டின் ராயல் இன்டஸ்டிரிஸ் நிறுவனத்தின் CEO. சிரிப்பை காணாத இதழ்கள்.. கருமை நிறம்.. சிவந்திட்ட விழிகள்.. எப்பொழுதும் கோபத்துடன் இருப்பானோ என்னும் அளவுக்கு இறுக்கமான முகம். வயது 39 .. ஆனால் முப்பதை தாண்டி கனிக்க முடியாத அளவுக்கு உடல்வாகு.. பார்க்க கம்பீரமானவன்.. அவனின் கருமை நிறத்திலும் திரும்பி பார்க்க வைக்கும் அழகை கொண்டவன்.

பெண்களின் நிழலை கூட இதுவரை தீண்டாதவன்.. அவன் வீட்டிலும் பெண்கள் உண்டு.. ஆனால் சகோதரத்தில் மட்டுமே கணக்கில் கொள்வான். பெண்களை மதிப்பவன் தான்.. ஆனால் தாயாய் சகோதரியாய் மகளாய் மட்டுமே அந்த பாசம் நின்று விடும்.. மற்றபடி தாரம் என்ற சொல்லில் பிடித்தமில்லாதவன்.. அவன் பெரிதாய் சிரித்து யாரும் கண்டதில்லை.. ஆனால் அவனின் புன்னகை வெளிப்படும் இடமும் உண்டு.. ஆனால் அது இருவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

தன் அலுவலக அறைக்கு வந்தவனை அங்கிருந்த கண்கள் அத்தனையும் மொய்த்து தீர்த்தது.. கருமை நிறம் தான் என்றாலும் பேரழகன் அல்லவா.. அலுவலகத்தில் அவனை சைட் அடிக்கும் பெண்கள் ஏராளம் தான்.. ஆனால் அவனின் குணம் அறிந்து யாரும் அவனை நெருங்க முயற்சிக்கவில்லை.

தன் அறைக்கு வந்தவன் அங்கேயிருந்த தன் தாயின் புகைப்படத்தை வாங்கியவன் தன் இடத்தில் அமர்ந்து பெல் அழுத்தினான்.

அடுத்த நொடி அங்கே வந்தார் வயதான ஒருவர்.

"சார்.." என்று அவர் வரவும் தலை நிமிர்ந்து பார்த்தவன்

"அக்கவுடண்டு ரங்கநாதன் வரசொல்லுங்க தாத்தா.." என்றான் மீண்டும் தலை குணிந்து கொண்டான்.

அவரும் ஒரு பெருமூச்சுடன் அவனை பார்த்து விட்டு வெளியே சென்று விட்டார் அவன் சொன்ன வேலையை செய்ய.


இல்லையென்றால் அவனின் முறைப்பை யார் வாங்கி கொள்வது.. அவருக்கு நன்றாக தெரியும் அவன் சொன்ன வேலையை செய்யவில்லை என்றாள் பெரிதாக கோபப்பட்டு கத்தமாட்டான்.. ஆனால் அவன் பார்வையே சொல்லிவிடும் அவனின் கோபத்தின் அளவை.

அக்கவுண்டன்ட் வரவும் அவரை வைத்து மாத கணக்குகளை சரி பார்த்தவன் மீண்டும் தன் வேலைக்குள் தன்னை தொலைத்துக் கொண்டான்.

அவ்வளவு தான் இனி அவன் எந்திரம் தான்.. அவனின் பசி சோர்வு என அனைத்தும் இனி அடுத்தவர் வந்து நினைவுபடுத்தினால் ஒழிய அவனுக்கு நினைவு வரப்போவதில்லை.

தன் வேலையில் மூழ்கியிருந்தவனை கதவு திறக்கும் சத்தம் கேட்டு திறந்து பார்த்தான்.

அங்கே புன்சிரிப்புடன், "டேய் மச்சான்.." கத்திக் கொண்டே நுழைந்தான் ஆண் ஒருவன்.

அவனைக் கண்டதும் இறுக்கமாய் இருந்த இதழ்கள் விரிந்து சிரித்தது.

"வா டா ஆதவா.. எப்போடா வந்த.. வர்றதா சொல்லவே இல்லை.. ஆமா ரூபினியும் பாப்பாவும் எங்கேடா.." சிரித்தால் முத்து உதிர்ந்துடுமோ என்பவனுக்கு இப்பொழுது வார்த்தைகள் சரளமாய் எங்கிருந்து வந்ததோ அவனின் நண்பனை கண்டதும்.

" அவங்க வீட்ல இருக்காங்க டா.. எல்லாம் ஜெட் லாக் தான்.. ஆனா நான் உன்னை பாக்க வந்துட்டேன்.. உன் மேல எவ்வளவு பாசம் எனக்கு.." அவன் கண்களில் வராத கண்ணீரை துடைக்கவும் அதை கண்டு சிரித்த அகஸ்டின்,

" டேய் போதும் டா ஓவரா நடிக்காத.. இப்போ சாருக்கு என்ன வேணும்னு இந்த நடிப்பு.." என்றான் கிண்டலாக.

" அது ஒன்னுமில்லை நண்பா.. உன்னை வீட்டுக்கு இப்போ கூட்டிட்டு வந்தா தான் வீட்ல சோருன்னு உன் தங்கச்சி சொல்லிட்டா டா.." என்றான் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு.

அதைக் கண்டு மனம் விட்டு சிரித்தவன், "டேய் இடியட் அதை சொல்ல வேண்டியது தானா.. எதுக்கு டா இப்படி நடிக்குற... சரி வா போலாம்.. நானும் குழல் பாப்பாவா பாக்கனும்.. ஒன் வீக் ஆச்சி.." என்று தான் பார்த்துக் கொண்டிருந்த பைலை மூடி வைத்தவன் அவனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

இருவரும் ஒரு சேர வந்தவர்களை அந்த அலுவலகமே திரும்பி பார்த்தது. ஏன் யாருடனும் இயல்பாய் கூட வாய்விட்டு பேசாதவனின் நண்பன் எலலோரிடமும் சகஜமாகி பேசும் நண்பன் வித்தியாசமான அந்த நண்பர்களை பார்ப்பது அவர்களுக்கு ஒரு சுவாரஸ்யம் போல்.

அதுமட்டுமின்றி எப்படி இந்த நட்பு என்ற எண்ணமும் எல்லோரின் மனதிலும் உண்டு.. ஆனால் அதை வாய் விட்டு கேட்பதற்கு தான் யாரிடமும் தைரியம் இல்லை.

அவர்கள் பார்ப்பதை எல்லாம் ஒரு பொருட்டாக கூட கருதாத நண்பர்கள் இருவரும் பேசிய படியே வந்து தங்களின் வண்டியில் ஏறினார்கள்.

காரை ஆதவன் ஓட்ட அவனருகில் அமர்ந்து தனது லேப்டாப்பில் வேலையை செய்து கொண்டு வந்தான் அகஸ்டின்.

"டேய் மச்சான்.." என்று அழைத்தான் ஆதவன்.

" சொல்லுடா.." குனிந்தபடி சொல்லிவிட்டு தனது வேலையை பார்த்தான்.


"மச்சான் அது வந்து உன் தங்கச்சி ஒரு விஷயம் சொன்னா இல்லை.. அதை பத்தி யோசிச்சியா டா.." என்றவனின் குரலில் எதிர்பார்ப்பு இருந்தது.

அது எதற்காக என்று தெரிந்தாலும் தெரியாதவன் போல்,

"என்ன விஷயம் டா.." என்றான் தலைநிமிராமலே.


"டேய் லூசா டா நீ.. அவ எவ்வளவு தூரம் சொன்னா ஆனா நீ என்னன்னு சுலபமா கேட்குற.." என்றான் இயலாமையான கோபத்துடன்.

"டேய் மச்சா இப்போ எதுக்குடா இந்த கோபம்.." என்று கம்ப்யூட்டரை மூடியவன் முகம் இறுக அவனிடம் திரும்பி,

"வேணாம் ஆதவா.. போதும் டா.. மீண்டும் ஒரு வலிய தாங்க மனசு இல்லை டா.. அது மட்டும் இல்லாம வயசும் போயிடுச்சி இனி கல்யாணம் குழந்தை வேணாம் ஆதவா.. நீயே ரூபி கிட்ட எதாவது சொல்லி நிறுத்திடு.." என்றான் இறுக்கமான மனதுடன்.

" டேய் மச்சா உண்மையா சொல்லு.. உன் மனசுலன்னு எந்த ஒரு பெண்ணும் இடம் பிடிக்கலையா டா.. எனக்கும் புரியலை டா.. எனக்கு நல்லா தெரியும்.. உன் வாழ்க்கையில எந்த பெண்ணும் இல்லைன்னு.. ஆனாலும் ஏன்டா கல்யாணம்னு சொன்னா வேணாம்னு தட்டி கழிக்குற. ." தன் நண்பனுக்கு ஒரு நல்லது செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் அவனின் பேச்சில் இருந்தது.

ஆனால் அருகிலிருந்தவனோ அதை கவனிக்காமல் அவன் உதிர்த்த வார்த்தையான, 'உன் மனசுல எந்த பெண்ணும் இல்லையா டா..' என்ற வார்த்தையிலே தங்கி விட்டது.

அவனின் நினைவில் ஒரு முகம் வந்து போனது.. அதன் கண்களில் தெரிந்த வலியில் இவன் கண்கள் கண்ணீர் கண்டது.. அதை தன் நண்பனுக்கு தெரியாமல் மறைத்தவன் வெளியே வேடிக்கை பார்த்தான்.

"டேய் பைத்தியம் நான் சொன்னது உன் காதுல விழுந்துச்சா டா.. இடியட்.." என்று கோபத்தில் கத்தினான்.

" ம்ம் நான் சொல்லிக்குறேன் ரூபி கிட்ட நீ வீட்டுக்கு போ போலாம்.." அவனிடம் சொல்லிவிட்டு கண்ணை மூடிவிட்டு சீட்டில் சாய்ந்து அமர்ந்து விட்டான்.

இனி அவனுடன் பேசுவது வீண் என்று புரிந்த ஆதவனும் அவனுடன் பேசுவதை விடுத்து வண்டியை ஓட்டினான்.

இங்கே அகல்யாவும் தனசேகரை சந்தித்தது முதல் ஒரு உறவாய் தங்களோடு இணைந்த நாட்களை எண்ணி கொண்டிருந்தாள்.

அந்த மருத்துவமனையில் ஆரம்பித்த அவர்களின் உறவு நாளடைவில் தினமும் சந்திக்கும் அளவு வளர்ந்தது.

யாருமில்லாத தனசேகருக்கு மகளாய் அகல்யா கிடைத்து மிகவும் மகிழ்ச்சியாய் உணர்ந்தார்.

அதுவும் சுட்டியாய் திரிந்த இரு பேரன்களுக்கும் இடையில் உலகில் உள்ள அனைத்து சந்தோஷமும் கிடைத்ததாய் உணர்ந்தார்.

அடிக்கடி சாரதா இல்லத்தில் அடிக்கடி போக ஆரம்பித்ததால்.. அதில் அங்கிருந்தவர்களுடன் பாசப்பிணைப்பு உருவானது.

அவளுக்கும் அது ஒரு மன அமைதியை கொடுத்தது.. அடிக்கடி பசங்களுடன் அங்கே சென்றாள்.

தனசேகரின் மருத்துவர் நண்பரான ராஜாவும் அவளை இருவரும் சொந்த மகளாய் பாவிக்க ஆரம்பித்தனர்.

வாழ்க்கை எனும் போராட்டத்தில் தனி ஒரு பெண்ணாய் போராடிக் கொண்டிருக்கும் அவளுக்கும் தந்தையாய் அவர்கள் கிடைத்தது மிகுந்த சந்தோஷம் தான்.

அன்றிலிருந்து இன்று வரை சாரதா காப்பகத்திற்கு மாதத்தில் இரண்டு நாட்கள் வரவு என அவளின் வரவு அங்கே இருந்தது... தனது மகன்களுடன் வருபவள் அன்று முழுவதும் அங்கேயே பொழுது கழித்து விட்டு அந்தியில் தான் தனது இல்லத்திற்கு செல்வாள்.

அங்கிருக்கும் வயதான தம்பதிகளுக்கு மகளாய் குழந்தைகளுக்கு தாயாய் என அவளின் வரவு அங்கிருப்போருக்கும் மகிழ்ச்சி தான்.

பழைய நினைவிலிருந்து வந்தவள் அங்கே தங்களின் வயதை கூட பொருட்படுத்தாமல் குழந்தைகளுடன் விளையாடும் தனசேகரையும் ராஜாவையும் கண்டவளின் மனது சந்தோஷமாய் இருந்தது.


இங்கே வீட்டிற்கு வந்த அகஸ்டினுடன் வந்த ஆதவன் கதவை திறந்து உள்ளே அவனை அழைத்துச் செல்லவும் அப்பொழுது அங்கே 'மாமா..' என்று இரு தளிர்கரம் அகஸ்டினின் காலை கட்டி அணைத்தது.


தன் காலை கட்டி அணைத்திருக்கும் சிறு மலரை சிரிப்புடன் தூக்கி கொண்டவன், "ஆரா குட்டி.. எப்படி டா இருக்க.. மிஸ் யூ லாட் டா ஏஞ்சல்.." என்று அவளின் நெற்றியில் இதழ் பதித்தான்.

ஆதவன் அதை சந்தோஷமாய் பார்த்திருந்தான்.. மற்றவர்கள் பார்க்கும் அகஸ்டினுக்கும் இப்பொழுது இருக்கும் அகஸ்டினுக்கும் மலையளவு வித்தியாசம் இருந்தது.. அவனக்கு தெரியும் அவனின் வெளி முகம் சுத்தமான நடிப்பு என்பது.. இப்பொழுது இருக்கும் முகம் தான் உண்மை.. அதை நினைத்தவன் பெருமூச்சு விட்டான்.

அப்பொழுது கொலுசு சத்தம் கேட்க இரு ஆடவர்களும் திரும்பி பார்த்தனர்.. அங்கே அழகான சின்தடிக் புடவையில் தலை நிறைய மல்லிகை பூ சூடி நெற்றியில் குங்குமம் மிளிர இரு புருவத்தின் இடையில் ஒரு மெரூன் நிற கல் பொட்டு வைத்திருக்கு அஞ்சனம் தீட்டிய விழிகள் என அழகின் பிறப்பிடமாக வந்தாள் அவள் தேவதை.


வந்தவள் நேரடியாக அகஸ்டின் அருகில் வந்து அவனை "அண்ணா.." என்று கட்டியணைத்தாள்.

தன்னை அணைத்தவளை தானும் அணைத்தவன், "எப்படி டா இருக்கீங்க.." என்றான் புன்சிரிப்புடன்.



உறவு என்று சொல்லிக் கொள்ள ஆயிரம் பெயர்கள் உண்டு..
அண்ணா என்ற உறவுக்கு ஈடாகுமா. .
இல்லை அவனின் பாசத்தின் முன்னே தான் நிற்க முடியுமா..
உதிர சொந்தம் இல்லையே என்ற ஏக்கம் மனதை அரிக்க..
உணர்வால் அடைந்த சொந்தம் என்றானே என் தமையனும்..



நிஜம் தொடரும்..🌹
 
  • Love
Reactions: Kameswari

Abinaya abi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 28, 2023
5
1
3
Cuddalore
உண்மை தான் உற வென்று சொல்ல எத்தனை உறவுகள் இருந்தாலும் அண்ணன் என்ற உறவுக்கு எத்தனை உறவுகள் வந்தாலும் ஈடாகாது சூப்பர் 😍😍
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
118
52
28
Tirupur
ஹீரோ வாழ்க்கையில நண்பனுக்கு தன் தெரியாம ஒரு பொண்ணா? 🤔
யாரு அந்த பொண்ணு? 🧐
ஒருவேளை வித்யாவா இருக்குமோ? 🙄
 

Lakshmi murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 14, 2022
653
130
63
Coimbatore
இந்த கதையை நான் படித்திருக்கிறேனே.ஆனால் கதை மறந்து விட்டது .