• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் - 05

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
177
202
43
Salem
தன்னை அணைத்தவளை தானும் அணைத்தவன், "எப்படி டா இருக்கீங்க.." என்றான் புன்னகையுடன்.

பெண்ணவளும் சிரிப்புடன், "ம்ம் நல்லாருக்கேன் அண்ணா.. நீங்க எப்படி ண்ணா இருக்கீங்க.." சிரிப்புடன் கேட்டாள் தன் தமையனை.


" ம்ம் பைன் டா.. பசிக்குது ரூபி மா சாப்பிடலாமா.." என்றான் கெஞ்சல் தொனியில்.

அவளுக்கு நன்றாக தெரியும் யாரிடமும் தன் பசியை கூட சொல்ல மாட்டான்.. ஏன் இவ்வளவு நெருக்கமான ஆதவனிடமும் கூட தன் உள்ளத்து உணர்வுகளை கொட்ட மாட்டான்.

அவனைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம்.. ஏன் பல நேரங்களில் ஆதவன் ரூபி கூட அவனை புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறியிருக்கின்றனர்.

ஆனால் சில நேரங்களில் அவனே இது போல் கேட்பது ஆபூர்வம்.

"அய்யோ வாங்கண்ணா சாப்பிடலாம்.. ஏங்க அண்ணனை கூட்டிட்டு வந்தா சாப்பிட வர்றது இல்லை.. உங்களால தான் லேட்டு..." தமையனை அழைத்தவள் தன்னவனை திட்டவும் தவறவில்லை.

" அடியே இதெல்லாம் ஓவர் டி.. இவ்ளோ நேரம் ரெண்டு பேரும் சேர்ந்து பாசமலர் படம் ஓட்டிட்டு இப்போ என்னான்னு திட்றியா.. உனக்காக பாவம் பாத்து போய் இந்த நாயை கூட்டிட்டு வந்தேன் இல்லை.. என்னை சொல்லனும் டி.." என்று மனைவியை திட்டியவன்,

"அடேய் நல்லவனே வாடா சாப்பிட போலாம்.. உன்னால நான் திட்டு வாங்குனது தான் மிச்சம்.." என்று தன் நண்பனையும் திட்டி அழைத்துக் கொண்டு சென்றான்.

தன் நண்பன் திட்டியதை காதில் வாங்காதாவன் போல் ஆராவை தூக்கி கொண்டு சாப்பாட்டு மேஜைக்கு சென்றான் அகஸ்டின்.. அவனின் முகத்தில் கள்ளப் புன்னகை ஒளிந்ததை கண்டு ஆதவனும் சிரிப்புடன் அவன் பின்னே சென்றான்.

தன் நண்பனை பற்றி அறியாதவர்களா இருவரும்.. இருந்தும் அவ்வப்போது இது போல் நடக்கும் சிறு சிறு சண்டை தான் இருவருக்கும் பிடித்தமானது.

அதுவும் ரூபினி இது தெரிந்தும் தெரியாதவள் தன்னவர்களிடம் நடந்து கொள்வாள்.

இது போல சண்டையில் தான் அகஸ்டினின் இயல்பை காண முடியும். அதை தான் கணவன் மனைவி இருவரும் பயன்படுத்தி கொள்வார்கள்.

மூவரும் அமர்ந்ததும் அவர்களுக்கு பரிமாறியவள் ஆராவிற்கு அவளின் கைகளால் ஊட்டி விட்டாள்.


அவர்கள் சாப்பிட்டு அமர்ந்ததும் தானும் உண்டுவிட்டு அவர்களுடன் ஹாலில் வந்து அமர்ந்தவள் தன்னவனை பார்த்து புருவம் தூக்கி ஏதோ கேட்டாள்.

அவனோ உதட்டை பிதுக்கி முடியவில்லையென்று தலையாட்டினான்.

ஒரு பெருமூச்சுடன் அகஸ்டினிடம் திரும்பி, "அண்ணா நான் சொன்னதுக்கு என்ன முடிவு எடுத்துதிருக்கீங்க அண்ணா.. நீங்க சரின்னு சொன்னா நான் சந்தோஷப்படுவேன் அண்ணா.." என்றாள் முகத்தில் எதிர்பார்ப்பை தேக்கியபடி.

தங்கையானவள் கேட்டதும் அவனின் முகத்தில் அதுவரை ஆராவிடம் விளையாடியதில் இருந்த இலக்கம் காணாமல் போய் இறுக்கம் வந்து ஒட்டிக் கொண்டது.

ஏக்கப் பெருமூச்சு விட்டவன், "ரூபி உங்க ரெண்டு பேருக்கும் என்னோட ஹெல்த் கண்டிசன் தெரியும் இல்லை.. ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழிக்க சொல்றீயா ரூபி.. அந்த பெண்ணுக்கும் ஆசை கனவு எல்லாமே இருக்கும்.. அதை கலைக்க சொல்றியா மா.. நீயும் ஒரு பொண்ணு தான.. அவளோட இடத்துல இருந்து யோசிச்சு பாருமா.. இது சரியா வருமா.. என்னால ஒரு பொண்ணோட கனவுகளையும் ஆசையையும் அழிக்க முடியாது.. இதுக்கு மேல இந்த பேச்சு வேணாம் டா.." என்று அவளிடம் கூறியவன் இருவரிடமும் விடைபெற்று வெளியேறினான்.

அவனுடன் வந்த ஆதவனையும் தன் பார்வையால் தடுத்து நிறுத்திவிட்டு வேகமாய் அங்கிருந்து வெளியேறினான்.

அவன் சென்றதும் உள்ளே வந்த ஆதவன் கண்டது தன்னவளின் கண்களில் வழிந்த கண்ணீரை கண்டு பதறித்தான் போனான்.

"ஹேய் ஹனி என்னடா இது எதுக்கு இப்போ இந்த அழுகை டா.. முதல்ல நல்ல பிள்ளையா கண்ணை தொட டா.." என்று அவளின் கண்ணீரை துடைத்து விட்டவன் அங்கே விளையாடிக் கொண்டிருந்த மூன்றுவயதான ஆராவிடம்,

"ஆரா குட்டி உங்க பிளே ரூம்ல போய் பிளே பண்ணுங்க டா தங்கம்.." என்று அவளின் விளையாடும் அறைக்குள் அனுப்பி விட்டான்.

தந்தை சொல் தட்டாத மகளாக அவளின் அறைகுறை மொழியில், "ஓகே பா.." என்று சிரித்தபடி சென்றது அந்த சிறுமலரும்.

மீண்டும் தன்னவளின் அருகே வந்து அமர்ந்தவன் அவளின் தலையை அன்புடன் வருடி விட்டான்.

அவனின் தோளில் ஆயாசமாய் சாய்ந்தவள்,

"ஏன் மாமா அண்ணாவோட வாழ்க்கை கடைசி வரைக்கும் இப்படியே இருந்துடுமோன்னு பயமா இருக்கு மாமா.. ஏன் மாமா அண்ணா இப்படி இருக்காங்க.. அவங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா.. ஏன் அவரை பத்தி யாரும் கவலை படலை மாமா.. நானும் தப்பு பண்ணிட்டேனா மாமா.. நானும் சுயநலவாதியா இருந்துட்டேனா மாமா.." என்று அவனின் தோளில் சாய்ந்து கதறி போனாள் பெண்ணவள்.


பெண்ணறிக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் ஆடவனின் மனமும் கலங்கி தான் போயிருந்தது.

தன் நண்பனின் வாழ்வு இப்படியே போய் விடுமோ.. ஒரு மனிதனின் நிறைவான வாழ்க்கை என்பது அவனின் அடுத்த சந்ததியை பார்ப்பது தான்.

அவனின் நிறைவான வாழ்க்கையை சொல்வது அவனின் பாதியானவளின் மகிழ்ச்சியான முகம் தான்.

ஆனால் அவன் நண்பனின் நிலையை நினைத்து கண்ணீர் தான் விட முடிந்தது. எத்தனை முயன்றும் அவனை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க முடியவில்லை அவனால்.

இதோ மனதுக்குள்ளே மருவி கொண்டிருக்கும் தன்னவளையும் சமாதானம் செய்ய முடியவில்லை.. அவன் மனம் மிகவும் வலித்தது.

உயிருக்கு உயிராய் நேசித்து காதலித்த காதல் மனைவி.. நித்தமும் அவளை காதலால் குளிப்பாட்ட முடியும்.. ஆனால் பெண்ணவளோ தமையனை நினைத்து கண்ணீரில் குளிக்கிறாளே.. அதுவும் தாங்க முடியவில்லை ஆடவனால்.. தன் நண்பனின் நிலையும் காண முடியவில்லை.

இவர்களின் கண்ணீருக்கு காரணமானவன் கடற்கரை காற்றில் தூரத்தே தெரிந்த மறையும் சூரியனை கண்டு ரசித்து கொண்டிருந்தான்.

அவனுக்கு நன்றாக தெரியும் தனக்காக அங்கே இரு ஜீவன் கலங்கி கொண்டிருப்பது.. ஆனால் அவர்களின் கண்ணீரை துடைக்க அவர்கள் கேட்பது தன்னால் செய்ய முடியாதே.. அது முடிந்தால் தான் என்றோ நடத்தி அவர்களின் சந்தோஷத்திற்கு தானே காரணமாக இருப்பான்.

தன் முந்தைய வாழ்க்கையை நினைத்து பார்த்தான்.


அகஸ்டின் இன்று தான் ஊரறியும் தொழிலதிபன்.. ஆனால் முன்பொரு காலத்தில் ஒரு வேலை சாப்பாட்டிற்கும் அலைந்து திரிந்தவன்.

அகட்டி வீட்டிற்கு மூத்தவன்.. ஒரு கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவன்.. இவனுக்கு பின்னே இரு தம்பி ஒரு தங்கை என பெரிய குடும்பம்.

தந்தை சாதாரண நடுத்தர வர்க்கத்திற்கு கீழான தொழிலாளி.. அதுமட்டுமன்றி மது மாது என அவரின் அன்றாட வாழ்க்கை சென்றது.

அவனின் தாய் தான் கிடைத்த கூலி வேலையை செய்து தன் மகன்களை வளர்த்தார். சிறு வயது முதலே கஷ்டங்களை மட்டுமே கண்டு வளர்ந்த அகஸ்டினுக்கு ஒரு வேளை சாப்பாட்டின் அருமை நன்றாகவே தெரியும்.

தாயின் கஷ்டங்களை பார்த்து வளர்ந்தவன் பத்தாம் வகுப்பு முடிந்ததும் தனது படிப்பை நிறுத்தி விட்டு தேவாலயத்திற்கு சேவை செய்ய நேர்ந்து விடப்பட்டான் அவனின் தாயால்.

ஆனால் அவனின் உடல்நிலை காரணமாக திருச்சபையால் சேவையிலிருந்து வெளியே அனுப்பப்பட்டான்.

மீண்டும் தன் தாயிடம் தம்பி தங்கையிடம் வந்தவன் குடும்பத்தின் கஷ்டங்களை உணர்ந்து கிடைத்த வேலையை செய்தான்.

ஒரு நாளில் இரண்டு வேலைக்கு மேல் அவன் சாப்பிட்டதில்லை.. ஒரு ஷீ கடையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது நான் ஆதவன் அவனின் நண்பன் ஆனான்.

ஆதவனிற்கு பெற்றோர்கள் யாருமில்லை.. அத்தை மாமாவின் வளர்ப்பில் வளர்பவன்.. மூன்று வேலை சாப்பாடு போடுவதே பெரிய விஷயமாக பட்ட அவனின் அத்தைக்கு அவனை படிக்க வைக்க விருப்பமில்லை.

தன் சூழ்நிலையை உணர்ந்தவன் அவர்கள் சொன்ன வேலையை செய்தவன் மேற்படி வருமானத்திற்காக அவர்கள் சேர்த்து விட்ட வேலையில் சேர்ந்தான்.

அங்கே தான் அகஸ்டினும் ஆதவனும் நண்பர்கள் ஆனார்கள். அவர்களின் சூழ்நிலை இருவரின் நட்பையும் வலு சேர்த்தது.

சில நாட்கள் ஆதவன் கொண்டு வரும் உணவு பழையது கெட்டு போய் இருக்கும்.. அதை கேட்கவும் மனதில்லாமல் உண்ணும் போது அதிலும் பங்கிட்டு தான் கொண்டு வரும் உணவையும் பங்கிட்டு உண்ணுவார்கள் இருவரும்.

இவனின் சம்பாத்தியம் தான் அவனின் தம்பி தங்கைகள் படிக்க வைத்ததும் வீட்டில் அனைவரும் உண்பதும்.. ஒர் வேலைக்கு இரு வேலையாக காலையில் பேப்பர் போடுவதில் ஆரம்பித்து இரவு கடையில் வேலை வரை என இருவரும் சேர்ந்து செய்தனர்.

ஒரு கட்டத்தில் அகஸ்டினின் தாய் படுக்கையில் விழ அன்று அடம்பிடித்து அவனின் கடின வாழ்க்கையின் மறுபக்கம். தாய்க்கு இருதய நோய் தாக்க அவரை குணப்படுத்த முடியாமல் அல்லாடும் வேலையில் அவனின் தந்தை வேறொரு பெண்ணுடன் இருந்தார்.

தான் தன் சுகம் மட்டுமே பெரிதான எண்ணி தன் மனைவி குழந்தைகள் கண்டு கொள்ளாமல் மனைவியை கொன்றவர் என்றும் சொல்லலாம்.

ஒரு கட்டத்திற்கு மேல் தாயை காப்பாற்ற முடியாம‌ல் பூமி மாதாவுக்கு தன் தாயை பறிகொடுத்தான் ஆதவன்.

அவன் தாய் இறந்ததில் இருந்து அவனின் சிரிப்பு மொத்தமும் தொலைந்து போனது.

குடும்ப சூழ்நிலையை சமாளிக்க தனது தம்பி தங்கையை சர்ச்சின் கட்டுப்பாட்டில் இருந்த பள்ளியில் சேர்த்தவன் தான் மட்டும் கிடைக்கும் வேலையை செய்து அதன் மூலம் வந்த பணத்தில் தம்பி தங்கைகளின் தேவையை தீர்த்து வைத்தான்.

கல்வி மட்டும் தான் இலவசமே ஒழிய மற்றது எல்லாம் இவன் தான் மூவருக்கும் செய்தான்.

கிடைத்த இடத்தில் தங்கி கிடைத்த இடத்தில் சாப்பிட்டு தன் உடலின் அப்பப்போ இருந்த வலியும் தாண்டி இரவு பகல் பாராமல் உழைத்தான்.

அந்த நேரத்தில் தான் ஆதவனின் வாழ்வில் மீண்டும் சூறாவளி சுழன்றடித்து அவனை நிலைகுழையச் செய்தது.

தன் நண்பனின் நிலைகுலைந்த தோற்றம் அகஸ்டினையும் கலங்கடித்தது.


தன் நினைவில் இருந்தவனின் முகத்தில் தண்ணீர் அடிக்க யாரென்று பார்த்தான் அகஸ்டின்.

அங்கே ஐந்திலிருந்து பத்து வயதுக்குள் இருந்த சிறுவன் ஒருவன் தவறு செய்த குழந்தையாய் திருதிருத்தான்.

அவன் கேள்வியாக பார்க்கவும், "ஐ ம் சாரி சார்.. அண்ணா மேல அடிச்சேனா உங்க மேல விழுந்துடிச்சி.. சாரி.." என்று சொல்லிவிட்டு நில்லாமல் ஓடி விட்டான் சிறுவன்.

ஏனோ அவனின் அந்த பார்வையும் அவனின் பேச்சும் அகஸ்டினின் மனதினுள் இனிமையை தோற்றுவித்ததை தடுக்க தான் முடியவில்லை.



இருவரி கானலாய் உன் காதல்..
அங்குமிங்கும் அசைந்தாடும் காந்த விழிகள்..
சுட்டித் தனமான பேச்சு..
ஏனோ பசுமையாய் மனதினுள் இனிமையாய் பதிந்து விட்டாயடா களவா...!



நிழலை வருடும் நிஜம் தொடரும்..🌹
 
Last edited:

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
118
52
28
Tirupur
WOW ❤️ சூப்பர் எபி👌
நவிஷ் தான் பாலமோ? 😎
அகஸ்டின் அகல்யாவ ஏற்கனவே பாத்திருப்பானோ? 🧐
ஒருவேளை அவனோட மனசுல இருக்குற பொண்ணு ...? 🤔
 
  • Like
Reactions: ரமா