• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் - 06

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
216
220
43
Salem
சாரதா இல்லத்திலிருந்து கிளம்பிய மூவரும் கடற்கரையை நோக்கி சென்றனர்.. எப்பொழுதும் தங்களின் வேலையை முடித்துக் கொண்டு மூவரும் கடற்கரைக்கு வந்து விடுவார்கள்.. இன்றும் தன் மகளின் சந்தோஷத்திற்காக வந்தாள் அகல்யா.

இருவரும் கடற்கரை மணலில் இறங்கி விளையாட கரையில் அமர்ந்து பெண்ணவள் ரசித்திருந்தாள் இருவரையும்.

தன் கையில் இருந்த தண்ணீர் பிடித்து விளையாடும் தன் மகன்களை பார்க்க பார்க்க பெண்ணவளுக்கு திகட்டவில்லை.

தன் வாழ்வின் கருப்பு பக்கங்களை அவளறியாமல் அவளின் நினைவுச் சுவடு கொண்டு வந்தது.

அகல்யா குடும்பத்தின் மூத்த பெண்.. சேலம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள்.. ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த மூத்த பெண்.. இவளுக்கு அடுத்து இவள் வீட்டில் ஒரு தங்கை தம்பி உண்டு.

பண்ணிரெண்டாம் வகுப்பு வரை படித்தவள் அதன் பின்பு தன் தம்பி தங்கையின் படிப்பிற்காக தன் படிப்பை நிறுத்த வேண்டிய சூழல்.

வீட்டிற்கு முதல் பெண் என்பதால் வீட்டின் கஷ்டங்கள் சொல்லியே வளர்க்கப்பட்டாள்.. அதுமட்டுமின்றி விட்டுக் கொடுத்தாலும் அக்காவுக்கு நிகர் என்றும் அக்கா தானே.. அவள் வீட்டிலும் அவளுக்கு அவை சொல்லியே வளர்க்கப்பட்டது.

தன் தம்பி தங்கைக்காக தன் படிப்பை விட்டுக் கொடுத்தவள் அடுத்த ஒரு ஆண்டுகள் வீட்டில் தான் இருந்தாள்.

பொதுவாய் கிராமத்தில் பெண்களை பதினெட்டு வயதிற்கு முன்பே கல்யாணம் செய்து கொடுப்பது வழக்கம்.

படிக்காமல் வீட்டிலிருந்ததால் வீடு தேடி வரன்கள் வர ஆரம்பித்தது.. முதலில் அவளின் தாய் தந்தை மறுத்தாலும் காலமும் சூழலும் அவர்களை விரைந்து வரன் தேட வைத்தது.

அந்த கிராமத்திலே அவளின் ஒரு வகையில் தூரத்து சொந்தமான மாமன் மகன் ஒருவன் காதல் என்று அவளின் பின்னே சுற்ற அது அவளின் தாய் தந்தை காதிற்கு போய் எங்கே தங்கள் மகள் தங்களை மீறி தன் வாழ்க்கையை தேடிக் கொள்வாளே என்ற பயம் இருந்தாலும் அவர்களின் சொந்தத்தின் மேல் அத்தனை நம்பிக்கை இல்லாமையால் தங்களின் மகளுக்கு அவசரமாய் வரன் தேடினார்கள்.

அவசரத்தில் தேடிய வரன் என தினேஷ் அமைந்தான்.

தினேஷ் வீட்டின் முதல் மகன் தான்.. அவனுக்கடுத்தது ஒரு தம்பி என அவனின் குடும்பம் இருந்தாலும் அவனின் பெரியப்பா பெரியம்மா அவர்களின் இரு மகன்கள் சித்தப்பாக்கள் சித்திக்கள் என அவர்களின் பிள்ளைகள் நீண்ட குடும்பம் அவனுடையது.

வெறும் ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவன் மேற்கொண்டு படிக்காமல் டிரைவர் தொழிலை தேர்ந்தெடுத்து அதில் கனரக லாரியின் டிரைவராய் இருப்பவன்.. அதுமட்டுமன்றி அவனின் குடும்பத்திற்கு விவசாயமும் உண்டு.. பெரிதாய் வசதியில்லை.. ஆனால் தோட்டத்தை பார்த்து அவளை திருமணம் செய்ய துணிந்து அவளின் பெற்றோரின் நினைவில் மறந்தும் தன் பெண்ணிற்கு விவசாயம் தெரியாது என்பது நினைவில் இல்லையோ..?

லாரி டிரைவர் என்பதாலோ என்னவோ அவனுக்கு மது மாது என இரண்டு பழக்கமும் அத்துபடி... அது தெரியாமல் தங்களின் மகளை அவனுக்கு மனைவியாக்கினார்கள் அவளின் பெற்றோர்கள்.

ஏற்கனவே பயந்த சுபாவம் கொண்ட பெண் அவள் புகுந்த வீட்டில் மாமியாரின் இயல்பான பேச்சை ஏனோ ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தன்னை பெண் பார்க்க வந்த புதிதில் சீர் செனத்தி எதுவும் வேண்டாம் தங்களின் பெண் எங்கள் வீட்டின் மருமகளாய் மகாலஷ்மியாய் இருந்தால் போதும் என்ற மாமியார் தான் அவளின் மாமியார்.

ஆனாலும் பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூவையாவது வைக்கலாம் என்று அவளின் பெற்றோர்கள் மாப்பிள்ளைக்கு ஒன்றரை பவுனில் கைக்கு பிரெஸ்லெட்டும் பெண்ணிற்கு இரண்டு பவுனில் நெக்லஸ் ம் போட்டார்கள்.

அப்போதைய சூழ்நிலையில் அதுவே அவளின் தந்தை வேணுகோபாலனுக்கு பெரிய விஷயம்.. அவளின் தாயான கற்பகமும் தன் சேமிப்பில் இருந்த பணத்தில் நல்லதாக ஆறு புடவை எடுத்துக் கொடுத்தார்.

ஆனால் திருமணத்தை பற்றிய எந்த ஒரு விபரமும் இல்லாமல் விட்டில் பூச்சியாய் இருந்தவளை அந்த திருமணம் பயமுறுத்த தான் செய்தது.

ஆனால் அவளின் பயம் உண்மை என்பதை போல் அவளின் கணவன் தினேஷால் முதலிரவிலேயே தெரிந்து கொண்டாள்.

இரண்டும் கெட்டான் வயதான அந்த பதினெட்டு வயதிலே திருமண வாழ்வை இருட்டாக்கினான் அவளின் கணவன்.

எத்தனையோ பெண்களுக்கு கல்யாணம் காதல் இதெல்லாம் இன்றும் ஒரு கனவாய் தான் போகும் போல.. அந்த பெண்களில் ஒருத்தி தான் அகல்யா.

அவளின் கல்யாண வாழ்வும் கானல் நீராய் தான் போனது அதுவும் முதலிரவிலே.

ஏன் அந்த இரவை நினைத்து இன்னுமும் அவளின் கண்களில் பயம் தென்படுவது அவள் பயத்தின் உச்சமாய் நடந்த தாம்பத்யம்.

தன் நினைவில் மூழ்கியிருந்தவளின் மேல் எதுவோ வந்து விழவும் நடைமுறைக்கு வந்தவளை வரவேற்றது அவளின் சின்ன மகனின் சிரிப்பு சத்தம் தான்.. அவன் தான் விளையாட்டில் தமையனிடம் இருந்து தப்பிக்க தன் தாயின் மடியில் வந்து விழுந்தான்.

தன் மடியில் விழுந்த மழலைச் செல்வத்தை தன் கைகளால் அள்ளி கிச்சு கிச்சு மூட்டினாள்.

அவளுடன் அவளின் மூத்த பையனும் கலந்து தன் தம்பியை கிச்சு கிச்சு மூட்டினான்.

இவர்கள் செய்த வேலையில் சின்னவனின் சிரிப்பு சத்தம் அடுத்து இவர்களுக்கு சிறிது தூரத்தில் அமர்ந்திருந்த அகஸ்டினின் காதுகளில் விழுந்தது.

அந்த குரல் சற்று முன் அவனிடம் மிரண்டபடி பேசிய சிறுவனின் குரல் தானே என்று குரல் வந்த திசையில் தன் பார்வையினை செலுத்தினான்.

அவன் மனதின் கட்டுப்பாடுகளை தாண்டியும் அந்த குரல் வந்த திசையினை கண்டு தன் பார்வையை மேயவிட்டான்.

அவனுக்கு நன்றாக தெரியும் இது தவறு.. தன் மனதில் ஆசை பாசத்திற்கு இடமில்லை.. அத்தனையும் மனதின் ஆழத்தில் கொண்டு புதைத்து விட்டான்.. ஆனால் இப்பொழுது அலைபாயும் கண்களை கட்டுப்படுத்த முடியாமல் அந்த சிறுவனின் சத்தம் வந்த திசையினை கண்டான்.

அங்கே அவன் கண்டது கடலலையை திரும்பி அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணும் அவளிடம் விளையாடிய இரு சிறுவர்களும் தான்.. அதில் ஒரு பையன் சற்று முன் தன் மேல் நீரை தெளித்தவன் என்று தெரிந்து விட கண் சிமிட்டாமல் அவர்களையே பார்த்திருந்தான்.

அந்த பெண் அமர்ந்திருக்க அந்த சிறுவர்கள் இருவரும் தன் தாயை சுற்றி விளையாடிக் கொண்டிருந்தனர்.

ஏனோ அதை பார்க்க பார்க்க திகட்டவில்லை ஆடவனின் கண்களுக்கு.. அந்த மூவரை விட்டு அவனின் விழிகள் வேறு எங்கும் அசையவில்லை.

அந்த பெண்ணை தாண்டி அந்த சிறுவர்களைத் தான் இவனின் கண்கள் ஓய்வு தராமல் தழுவிக் கொண்டிருந்தது.

எப்படியும் பெரியவனுக்கு பத்திலிருந்து பதினைந்து வயதிற்குள்ளும் சிறியவனுக்கு ஆறிலிருந்து பத்துக்குள்ளும் இருக்கும் என்பது அவனின் கணிப்பு.

அவர்களையே வைத்துக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு கண்கள் கூட இன்று வலிக்கவில்லையே என அவனையே அவன் நினைத்து வியந்து தான் போனான்.

தன்னை சிரமப்படுத்தி தன் விழிகளை வலுக்கட்டாயமாக திரும்பி கரையைத் தேடும் அலையை பார்க்கத் தொடங்கினான்.

ஒரு அரை மணி நேரம் கூட முடிந்திருக்காது அதற்குள்ளாக பக்கத்தில் சலசலப்பும் அழுகையும் கலந்து வரும் திசையை நோக்கி தன் பார்வையைத் திருப்பினான் அகஸ்டின்.

ஆம் அங்கே அந்த சிறியவன் தாயும் தமையனும் அழுது கொண்டிருந்தனர்.. அந்த தாய் தன்னை பிடித்திருந்தவர்களை விடுத்து கடலுக்குள் செல்ல முற்பட்டாள்.. அவன் மனதிற்கு ஏதோ தவறாக நடப்பது போல் தோன்றியது.

தன்னை தாண்டி சென்றவரை பிடித்தவன்,

"அண்ணே என்னாச்சி.. ஏன் இப்படி ஓடறீங்க.." என்று விசாரித்தான்.

"அட தம்பி அந்த பொண்ணோட சின்ன பையன அலை வந்து இழுத்துட்டு போயிடுச்சி தம்பி.. யாரும் காப்பாத்த முன்ன போக மாட்றாங்க தம்பி.." என்று சொல்லிவிட்டு ஏதோ அந்த பையனை காப்பாத்த போவது போல் ஓடினார் அவர்.

அதைக் கேட்டு சிலை போல் சிறிது நேரம் நின்றவன் அந்த பிஞ்சு முகம் மனதை உந்த வேகமாய் அங்கே சென்றான் அகஸ்டின்.

ஏன் இப்படி பதட்டம் கொள்வது நீண்ட நாட்கள் என்ன நீண்ட வருடங்கள் கழித்து இப்பொழுது தான்..வேகமாய் அந்த இடத்தை நோக்கி சென்றவனை பெண்ணவளின் நவி என்ற கதறல் இழுத்தது.

அவளைப் பார்க்க திரும்பினான்.. பெண்ணவளோ கைகளில் தன் முகத்தை மூடி அழுது கொண்டிருந்தாள்.

அதற்குள்ளாகவே ஆடவனுக்கு சிறியவனின் நினைவு வர வேகமாய் கடலை நோக்கி சென்றான்.

அங்கிருந்த அத்தனை பேரும் அமைதியாய் இருந்திருக்க துணிந்த ஒன்றிரண்டு இளசுகளோ தேடி கலைத்து இல்லை என்று வந்து நிற்க பெண்ணவளுக்கோ உயிர் போய் வந்தது.

தன் வாழ்வு அவர்களுக்காக தானே.. அவர்களுக்கு ஏதேனும் தன்னால் தாங்க இயலுமா..? இல்லை தான் உயிருடன் தான் இருக்க வேண்டுமா என்ன.. என பல கேள்விகள் முளைத்து பெண்ணவளை மயக்க நிலைக்கு கொண்டு சென்றது.

அவள் மயங்கி விழவும் பதறிய சுற்றியிருந்தவர்கள் அவளின் மேல் தண்ணீர் தெளித்து எழுப்பினார்கள்.

அதற்குள்ளாக சிறியவனை தன் கைகளில் ஏந்தி வந்தான் அகஸ்டின்.

" இதோ பையனை காப்பாத்திட்டாங்க அந்த தம்பி.." என்ற வார்த்தை மயக்கத்தின் பிடியில் இருந்தவளை மீட்டது.

தன் மகன் வந்து விட்டான் ஒரு தாய்க்கு எத்தனை பெரிய பலம்.. அதை அனுபவித்தவர்களுக்கே தெரியம்.. வீரியமான வார்த்தையின் பொருளை.

தன் கைகளில் தவழ்ந்த மழலையை கண்ட அகஸ்டின் அவனறியாமல் சிறியவனின் நெற்றியில் பெருமூச்சுடன் இதழ் பதித்தான்.

ஏனோ அவனின் மனம் அத்தனை நிம்மதியை கண்டிருந்தது.. அந்த நிம்மதி வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.

அங்கிருந்தவர்கள் அதற்குள்ளாக சிறியவனை வாங்கி தாயின் மடியில் கிடத்தினார்கள்.

அங்கே வந்த இளவயது மருத்துவர் ஒருவர் சிறியவனின் வயிற்றில் இருந்த தண்ணியை அழுக்கி எடுத்தார்.. சிறிது நேரத்தில் தன் வாயை குழந்தை வாயினுள் வைத்து சுவாசம் தந்தான்.

சிறிது நேரத்தில் இருமிக் கொண்டே கண் விழித்த நவிஷ் தன்னை சுற்றி இருந்த கூட்டத்தை பார்த்து சற்று மிரண்டவன் கண்ணீர் நிரம்பிய தன் தாயின் முகத்தை பார்த்து, "அம்மா.." என்று அணைத்துக் கொண்டான்.

அழுது கொண்டிருந்த தன் தமையனையும் சேர்த்து அணைத்துக் கொண்டவன் சிறிது நேரத்தில் தன் பார்வையை திருப்பி யாரையோ தேடினான் தன் விழிகளால்.

ஏனோ பார்த்ததும் மனதில் பதிந்தாய்..
சிரிப்பால் எனை சிறையெடுத்தாய்..
சிந்தையை உன்னையே சுற்ற வைத்தாய்..
உன்னுயிர் துடிக்கையில் எனது மனமும் துடித்ததை அறிவாயா என்னுயிரே..

நிழலை தீண்டும் நிஜம் தொடரும்..🌹

அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. இந்த கதை பிடிச்சிருந்த லைக் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க பட்டூஸ்
 
Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
810
95
93
Jaffna

செம வேற லெவல்
 
Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
187
43
Tirupur
இன்ட்ரெஸ்ட்டிங் எபி 👌

ஒரு மெல்லிய இழை போல அகஸ்டினுக்கும் நவிஷ்க்கும் இடையில உறவு மலர்ந்திட்டுது 😍