• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் - 07

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
சிறியவன் நாலாபுறமும் தன் விழிகளை சுழற்றியவனை கண்ட அகல்யா,

"நவி குட்டி என்ன ஆச்சுடா.. என்ன தேடுறீங்க.." என்றாள் கேள்வியாய்.

தன் பார்வையை சுற்றிலும் தேடியவனுக்கு என்ன தேடினோம் என்று புரியவில்லை.. ஆனால் அவனின் மனம் தேடிய ஒன்றை அவனால் உணரத்தான் முடியவில்லை.

அது ஒன்னுமில்லை மா.. நானு தண்ணிக்குள்ள போனேனா அப்போ யாரோ என்ன தூக்கி முத்தம் கொடுத்து ஏன் தங்கம் இப்படி தவிக்க விட்டேன்னு கேட்ட மாறி இருந்துச்சி மா.. ஆனா அது யாருன்னு தெரியலை மா.. அவங்களை தான் தேடுறேன்.. " என்றான்

அவளோ சிறியவன் தண்ணீருக்குள் சென்று வந்ததால் அவனின் பிரம்மையோ என்று எண்ணி அவனை தன் புறம் திருப்பியவள்,

" நவி மா ஒன்னும் இல்லை டா அது உன்னோட நினைப்பு டா தங்கம்.. வாங்க டா.." என்று அவனை அணைத்துக் கொண்டாள்.

அப்பொழுது அந்த கூட்டத்திலிருந்து ஒரு பெரியவர், "பாருங்கய்யா பையன காப்பாத்த முடியுமோ முடியாதோன்னு நினைச்சி கலங்கி போன நேரத்துல சாமி மாறி வந்து பிள்ளையை காப்பாத்தின அந்த தம்பி எங்கிருந்தாலும் நல்லாருக்கனும் யா.." என்று கூறினார்.

அப்பொழுது தான் உணர்ந்தாள் தன் மகனை காப்பாற்றியவருக்கு ஒரு நன்றி கூட கூறவில்லையே என்று நாலாபுறமும் அவனை தேடினாள்.

ஆனால் அவளின் தேடலுக்கு சொந்தமானவனோ தன்னை ஒரு படகு மறைவில் மறைத்துக் கொண்டு நின்றிருந்தான்.

பக்கத்திலிருந்த பெரியவர் அவளின் தேடலை உணர்ந்து, "அம்மா அந்த தம்பி முன்னையே இங்கிருந்த போயிடுச்சி மா.." என்றார் தகவலாய்.

அதைக் கேட்டவள் சிறிது வருத்தத்துடன் தலையாட்டியவள் தன் மகன்களை அழைத்துக் கொண்டு சென்றாள்.


போகும் அவளையும் பிள்ளைகளையும் இமை சிமிட்டாது பார்த்திருந்தான் அகஸ்டின்.

அவர்கள் சென்றதும் அந்த படகு மறைவிலிருந்து வந்தவன் தனது காரை நோக்கி சென்றான்.

தன் இல்லத்தை நோக்கி காரை ஓட்டிக் கொண்டிருந்தவனின் சிந்தனைகள் முழுவதும் வியாபித்திருந்தான் சிறியவன்.

அவனின் கண்களும் சிரிப்பும் ஏனோ ஆடவனின் மனதில் பதிந்து போனது.

எத்தனை இருந்தும் என்ன குழந்தைகளின் சிரிப்பு என்பது மனதிற்குள் மகிழ்ச்சியை தான் தோற்றுவித்தது.


தன் வீட்டிற்கு சென்றவன் உள்ளே நுழைந்ததும் காச் மூச் என சத்தம் கேட்டது.. அது சத்தம் என்று சொல்வதை விட சண்டை என்று சொல்வது தான் உத்தமம்.. ஆம் அங்கே அவனின் தம்பி மனைவியும் அவனின் தங்கையும் சண்டை பிடித்துக் கொண்டிருந்தனர்.

அவர்களுடைய இருவரின் சண்டையை மற்றவர்கள் கண்டு கொள்ளாமல் காரியமே கண்ணாக வரவேற்பறையில் இருந்த டிவியில் தான் கண் வைத்திருந்தனர்.

இங்கே இரவு சமையல் தனக்கு பிடித்தது தான் செய்ய வேண்டும் என்று இருவரும் மாற்றி மாற்றி சண்டை போட்டனர்.

அவனின் முதல் தம்பி மனைவி மரியத்திற்கும் தங்கை எலிசாவிற்கும் இந்த சண்டை அன்றாடம் நடப்பதனால் மற்றவர்கள் தலையிடவில்லை.

அந்த வீட்டின் இரண்டாம் மருமகளான வினோலாவிற்கு பெரிதாய் எதிலும் ஈடுபடமாட்டாள்.. சமையலில் எல்லாமே அவளுக்கு பிடிக்கும் என்பதால் இதில் பெரிதாய் குடுமி பிடி சண்டைக்கு போக மாட்டாள்.

ஆனால் ஆடை ஆபரணங்கள் வாங்கி குவிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவள்.. அவளிடம் இருக்கும் ஆடைகளுக்கு பெரிதாய் கணக்குகள் இல்லை.

அலுவலகம் முடிந்து வந்தவனை அத்தனை பெரிய வீட்டில் கண்டு கொள்ள யாருமில்லை.. எல்லோருக்கும் அவர்களின் தேவை முடிந்தால் போதும்.. அவனின் மேல் அவர்கள் வைத்திருக்கும் பாசம் மழை பொழிந்ததும் தீர்ந்திடும் மேகம் போல். அவர்களின் தேவை முடிந்ததும் அவனை குப்பையில் தள்ளக் கூட யோசிக்க மாட்டார்கள்.

அவனின் முதல் தம்பி அருள்ராஜ்.. டிரான்ஸ்போர்ட் வைத்துக் கொடுத்தான் அகஸ்டின்.. அதை ஏனோ தான் என்று பார்த்துக் கொண்டே நினைத்த நேரத்தில் ஊர் சுற்ற கிளம்பிவிடுவான் தன் மனைவி பிள்ளைகளுடன்.

அவன் கிளம்பினாள் அடுத்த அந்த தொழிலை அகஸ்டின் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்தவன் ஸ்டீபன்ராஜ்.. அண்ணனின் லெதர் பேக்டிரியை பார்த்துக் கொள்கிறேன் என்று ஜாலியாக ஊர் சுற்றும் டம்பட் பேர்வழி.. அவனின் மனைவிக்கு வீண் பகட்டு படோடாபம் அதிகம்.

அவன் தங்கையோ கேட்கவே வேண்டாம்.. என்னவோ பணத்திலே பிறந்து பணத்திலே வளர்ந்தவள் போல அகம்பாவம் நிறைந்தவள்.

இதில் இவர்கள் பெற்ற பிள்ளைகளையும் இவர்களை போலவே வளர்க்கின்றனர்.

இவர்களை யாரும் தடுக்கவும் அடக்கவும் முடியாது.. அகஸ்டினின் தாய் இருந்த வரையில் அடக்க வாசித்த பிறவிகள் அவர் இறந்ததும் தங்களின் விருப்பம் போல வாழத் துவங்கினார்.

அது தான் சம்பாதித்து போட ஒரு எந்திரன் இருக்கிறானே.. அவனுக்கும் வயது கடந்தது பற்றி யாருக்கும் அக்கறை இல்லை போல்.


இவர்களின் யார் பணம் வேண்டும் என்று கேட்டாலும் எந்த கேள்விகளும் கேட்காமல் வள்ளலாய் அள்ளி கொடுப்பான்.. ஆனால் அவனின் சொத்தையே சாப்பிடும் இந்த விசித்திர பிறவிகள் அவனை சாப்பிட்டாயா என்று கூட கேட்க மாட்டார்கள். அந்த அளவு பாசம் அவனின் மேல்.

இவனின் பொறுப்புகள் அதிகம் சுமைகள் அதிகம்.. ஆனால் அந்த பொறுப்புகளையும் சுமைகளையும் யாரும் பங்கீட்டு கொள்ள வரமாட்டார்கள்.. ஆனால் அவனின் சம்பாத்தியத்திற்கு பங்கீடு அதிகமாய்த் தான் இருக்கும்.

அவன் அசந்து வீட்டிற்கு வரும் நேரம் சாப்பிட்டாயா காபி குடிக்கிறாயா என்று கேட்க கூட ஆளில்லை அவ்வளவு பெரிய அரண்மனையில்.

அத்தனை உறவுகள் இருந்தும் பணம் இருந்தும் அவன் அனாதையாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

அவன் என்றும் தாழ்வு மனப்பான்மையில் சுணங்கி அமர்ந்ததில்லை.. ஏனோ அவனுக்கு அமைந்த வாழ்வு இதுவே இறைவனின் கருணை என்ற நினைவில் வாழ்ந்து வருகிறான்.

அவனின் தம்பி மனைவிகள் தங்கை என யாரும் தன் குழந்தைகளை அவனருகில் செல்ல விடமாட்டார்கள்.. இதற்கும் காரணம் உள்ளது.

தன் வீட்டின் அடிதடியான சூழல் அவனுள் வெறுமையை தோற்றுவித்தது.

யாரையும் பார்க்காமல் மெதுவாய் தன்னறையில் போய் அடைந்து கொண்டான்.

அவன் வந்ததை அறிந்தும் அவனிடம் பேச யாருக்கும் விருப்பமில்லை நேரமும் இல்லை.. அவரவரின் வேலை அங்கே அவர்களுக்கு முக்கியாமானதாய் இருந்தது.

தன்னைறைக்கு வந்தவன் படுக்கையில் படுத்து விட்டான் விட்டத்தை பார்த்தபடி.

என்றும் இருக்கும் வெறுமை ஏனோ இன்று குறைந்தது போல் இருந்தது.. தன் உடலில் ஏதோ புதிய வாசனை அவனை நிம்மதி உலகிற்கு அழைத்து சென்றது.

ஏனோ அவனறியாமல் மனதில் ஒரு புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.. அவனுக்கு அப்பொழுது ஒரு பாடல் தான் தோன்றியது.. தன் மனதில் தோன்றிய பாடலுக்கு தன் அலைபேசியில் உயிர் கொடுத்தான்.



பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லல ல்லா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்போலே

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா


என்னாளும் நம்மைவிட்டு போகாது வசந்தம்
தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்
தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும்
ஏதேதோ ஏழை மனம் நினைக்கும்
தென்னை இளம் சோலை பாளைவிடும் நாளை
தென்னை இளம் சோலை பாளைவிடும் நாளை
கையிரண்டில் அல்லிகொன்டு காதோறம் அன்னை மனம் பாடும்
கண்கள் மூடும்

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லல ல்லா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்போலே

ஆளான சிங்கம் இரண்டும் கைவீசி நடந்தால்
காலடியில் பூமி எல்லாம் அடங்கும்
சிங்காரத்தங்கம் ரெண்டும் தேர்போல வளர்ந்தால்
ஆகாயம் வந்து இங்கே வணங்கும்

எங்களால் தாயே உயிர் சுமந்தாயே
எங்களால் தாயே உயிர் சுமந்தாயே
கண்களிலேயே முத்துச்சுரம் காப்பாத்தி
கட்டிவைத்தாய் நீயே எங்கள் தாயே

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்போலே


அந்த பாடலில் அவனின் மனம் அமைதியடைந்ததா எனில் இல்லை அவனின் மனதில் இத்தனை நாளாய் அமிழ்ந்திருந்த உணர்வுகள் அனைத்திற்கும் உயிர் வந்ததை போல் அவனின் மனம் மகிழ்ச்சியில் தத்தளித்தது.

இந்த பாடல் ஒரு தாயிற்காக தனையன் பாடிய பாடல் தான்.. எத்தனை தேடல் தன் தாயிற்காக.. இந்த பாடல் என்றும் அவனுக்கு பிடித்தமானது தான்.

ஏனோ அவனும் ஒரு தாயின் மகன் என்ற காரணத்தினாலோ என்னவோ இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்பான் ஆடவன்.

ஆனால் இன்றோ இந்த பாடலை கேட்கும் போது அந்த மூவரைத் தான் மனம் நினைத்திருந்தது.

தன் மனம் போன போக்கை கண்டு திகைத்தவன் திடுக்கிட்டு எழுந்தான்.

தானா இது தனக்கென ஒரு வாழ்வை வாழாமல் தவ வாழ்க்கையை ஏற்றுக் கொண்டிருக்கும் அவனுக்கு இது பெரிய அதிர்ச்சி தான்.

தன்னை மீட்டவன் எழுந்து குளியலறைக்கு சென்று குளித்து விட்டு வந்தவன் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்து விட்டான் தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர.. சற்று நேரத்தில் வெற்றியும் கண்டவன் படுக்கையில் சென்று படுத்துக் கொண்டான்.

இங்கே பாளையூர் என்ற கிராமத்தில் இருந்த அந்த பெரிய வீட்டின் உள்ளே யாரோ அலறும் சத்தம் கேட்டது.அந்த பெரிய வீட்டின் வெளியே சில ஆட்கள் நின்றிருக்க உள்ளே பூஜையறையில் அமர்ந்து தீபாராதனை காட்டிக் கொண்டிருந்தான் அவன்.

அவன் கருணாகரன்.. ஊரின் பெரிய தலைக்கட்டு.. ஊரே மரியாதை கொடுக்கும் ஒரு குடும்பம்... ஆனால் அகராதி பிடித்தவர்கள்.. அவர்கள் அங்கே செய்வது அணைத்துக் அராஜகம் தான்.. ஆனால் யாரும் அவர்களை தட்டி கேட்க முடியாது.. அப்படி தட்டி கேட்க நினைத்தால் அவர்களுக்கு இதோ இப்பொழுது அடி வாங்கி கொண்டிருக்கிறவனின் தண்டனை தான்.

அவர்களை யாரும் எதிர்த்து பேசுற மாட்டார்கள்.. அந்த மக்கள் கொடுக்கும் மரியாதை கூட பயத்தை முன்னால் வைத்து தான்.

பூஜையை முடித்துக் கொண்டு வெளி வந்த கருணாகரன் அங்கே ஒருவனை போட்டு அடித்து துவைக்கும் கூட்டத்தை கண்டு, "டேய் என்னடா உண்மையை சொன்னானா அவன்.." என்றான் கர்ஜனையாய்.


அவனின் அடியாட்களோ, "இல்லைங்கய்யா எத்தனை அடிச்சாலும் அமுக்குனி மாறி வாயை மூடிட்டு இருக்கானுங்க ஐயா.." என்றான் ஒருவன்.

அவர்களின் அருகே வந்தவன் அடி வாங்கி கொண்டிருந்தவனை பார்த்து,

"அடேய் துவாரகா உனக்கு என்னடா பைத்தியமா.. எதுக்குடா இம்புட்டு அடி வாங்குறா.. அந்த சிறுக்கி நாய் எங்கே போய் தொலைஞ்சான்னு சொல்லுடா கழிசடை நாயே.." என்று அவனின் முன்னச்சி முடியை பிடித்து கத்தினான் கருணாகரன்.

ஆனால் அதற்கெல்லாம் அசருவேனா என்று இருந்தது அடி வாங்கியவனின் முகம்.. உன் மிரட்டலுக்கு நான் அடிபனிவேனா என்ற தெனாவெட்டுடன் பார்த்திருந்தான் அவனால் துவாரகன் என்று அழைக்கப்பட்ட ஹரிதுவாரகன்.

அவனின் சிரிப்பை பார்த்து கருணாகரனுக்கு வெறியேறியது.. அந்த வெறியை போக்க துவாரகனை அடித்து துவைத்தான் தன் கை வலிக்க மட்டும்.

சிறிது நேரத்தில் அவனை விட்டவன்,

"டேய் இவனை அந்த இருட்டறைக்குள்ள கொண்டு போயா போடுங்கடா..இப்போ இல்லைனாலும் எப்பவாது இவன் சொல்லித் தான் ஆகனும்.. அந்த நா** **டை" என்று சொல்லவிட்டு வெளியேறினான் கருணாகரன்.


துவாரகனை கொண்டு இருட்டறைக்குள் கொண்டு அடைத்தார்கள் அந்த மனித ஜந்துக்கள்.

உள்ளே அடைந்தவன் தன் கைகளில் வழிந்த உதிரத்தில் அங்கே தரையில் எழுதினான் 'அம்மு..' என்று.. மெதுவாய் அவனின் வாயும் அம்மு என்று உச்சரித்தது.

அந்த பெயரை உச்சரித்ததும் அவனின் கண்களில் கண்ணீர் வழிந்து உருண்டோடியது.



நிழலை வருடும் நிஜம் தொடரும்..🌹





அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. இந்த கதை பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க பட்டூஸ்.
 

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
255
144
43
Theni
அகஸ்டீன் கூட இருக்குறது எல்லாம் மனுசங்களா?
 
  • Like
Reactions: ரமா

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
81
63
18
Dindigul
அகல்யாவையும் அகஸ்டீனையும் சேர்த்து விட போறீங்களா?
இந்த கருணாகரன் யாரு
 
  • Like
Reactions: ரமா

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
பாசத்துக்காக ஏங்குற அகஸ்டினுக்கு அகல்யா மற்றும் குழந்தைகள் தான் கொடுப்பார்கள். சீக்கிரம் அவனை இந்த அழகான கிளிகளின் கூட்டுக்குள் ஒருத்தனா சேத்துடுங்க 😍

யாரு இந்த வில்லன்? 🧐

இந்த துவாரகன் 🤔

அம்மு, ஒருவேளை அகல்யாவோ?

சஸ்பென்ஸா இருக்கு 🤩
 
  • Like
Reactions: ரமா

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
பாசத்துக்காக ஏங்குற அகஸ்டினுக்கு அகல்யா மற்றும் குழந்தைகள் தான் கொடுப்பார்கள். சீக்கிரம் அவனை இந்த அழகான கிளிகளின் கூட்டுக்குள் ஒருத்தனா சேத்துடுங்க 😍

யாரு இந்த வில்லன்? 🧐

இந்த துவாரகன் 🤔

அம்மு, ஒருவேளை அகல்யாவோ?

சஸ்பென்ஸா இருக்கு 🤩
Thanks ma