செங்கதிரோன் சுடர்விட்டு எரிக்கும் அந்த காலை வேலையில் கண் விழித்து எழுந்தான் அகஸ்டின்.. இரவு உண்ணவில்லை.. ஏன் அவனிடம் யாரும் கேட்கவுமில்லை.. இதெல்லாம் பழகி போன ஒன்று தான் என்றாலும் ஏனோ சில சமயங்களில் தோன்றும் வெறுமையை தவிர்க்க முடியவில்லை.
எழுந்தவன் குளித்து முடித்து அலுவலகத்துக்கு கிளம்பி கீழே வந்தான்.
அங்கே சாப்பாட்டு மேஜையில் அவனின் மொத்த குடும்பமும் அமர்ந்திருந்தது.
அங்கே எல்லாரும் உணவருந்த இவனும் அங்கே அமராமல் அவனுக்காக மட்டும் தனியாக போடப்பட்டிருந்த மேஜையில் சென்று அமர்ந்தான்.
கிட்டதட்ட இருபது பேர் அமர்ந்து உண்ணும் அந்த மேஜையில் இவனுக்கு மட்டும் இடமில்லையோ.. இடமெல்லாம் இருந்தது.. ஆனால் மற்றவர்களுடன் அவன் அமர்ந்து உண்பதை அவர்கள் விரும்பவில்லை.. அதற்காகவே தன் உண்ணும் மேஜையை மாற்றி விட்டான் மற்ற இடத்திற்கு.
அங்கே மேஜையில் அனைத்தும் இருந்தது.. அங்கிருந்த வேலைக்கார பெண் அவனுக்கு பரிமாற வந்தாள்.. ஆனால் அதற்குள்ளாகவே அந்த வீட்டின் சின்ன மருமகள் வினோலா அழைத்தாள் தனது பிள்ளைகளுக்கு உணவை ஊட்டி விட.
அகஸ்டினும் யாரையும் பார்க்காமல் தன் தட்டில் தானே உணவை வைத்து உண்டான்.. உணவு உண்ணும் நேரத்தை தான் மறப்பானே தவிர்த்து உணவை மறக்க மாட்டான்.. அவன் உயிர் வாழ அந்த உணவு அவசியமானது.. அதை மற்றவர்கள் அறிவார்களோ என்னவோ அவன் நன்றாகவே அறிவான்.
கிடைத்த உணவை வீணாக்காமல் உண்பது அவனின் வழக்கம்.. ஏன் ஒரு காலத்தில் அந்த ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் எத்தனை வலிகள் அனுபவித்தான்.. உணவின் உன்னதத்தை உணர்ந்தவன்.
அவன் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டே அந்த வேலைக்கார பெண் வினோவின் மகளுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்தாள்.. அப்படி ஒரு ஆள் வந்து உணவை ஊட்டும் அளவுக்கு அவள் கைக்குழந்தை அல்ல.. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி.
அகஸ்டினுக்கு எப்பொழுது உணவு பரிமாற சென்றாலும் யாராவது அழைத்து அந்த பெண்ணுக்கு வேறு வேலையை புகுத்தி விடுவார்கள்.
அகஸ்டினுக்காக அவள் பரிதாப படத்தான் முடிந்ததே தவிர்த்து அவர்களை கேள்வி கேட்கும் துணிவு அவளுக்கு இல்லை.
அவன் சாப்பிட்டு விட்டு அலுவலகத்துக்கு செல்லும் நேரம் அவனின் முன்னே அவனின் தங்கையும் இரண்டாவது மருமகளும் வந்து நின்றனர்.. கேள்வியுடன் அவர்களை பார்த்தான்.
அவனின் தங்கையோ எங்கேயோ பார்த்துக் கொண்டு, "இரண்டு லட்சம் பணம் வேணும்.. இன்னைக்கு பசங்கள வெளியே கூட்டிட்டு போறோம்.." என்னவோ எதிரிக்காரனிடம் கேட்பது போல்.
அவள் கேட்ட தொகையை அவளுக்கு எதுவும் பேசாமல் கொடுத்து விட்டு செல்ல முனைந்தவனை அவனின் முதல் தம்பி மனைவி வழி மறித்தாள்.
உனக்கென்ன வேணும் என்பதை போல் இருந்தது அவனின் பார்வை.
" எனக்கு ஒரு லட்சம் பணம் வேணும் பெரியத்தான்.. டிரஸ் எல்லாம் பழசாக ஆயிடுச்சு.. புதுசு எடுக்கனும்.." என்றாள் கொடுத்து வைத்ததை போல்.
அவள் கேட்டதையும் எதுவும் பேசாமல் கொடுத்து விட்டு சென்றான்.
ஆனால் அங்கிருந்த யாரிடமும் எதுவும் பேசுவுமில்லை.. கேட்கவுமில்லை.. ஏன் அடிப்படையாக வரும் கோபம் கூட அங்கே அவனுக்கு வரவில்லை.. உரிமையுள்ள இடத்தில் தானே கோபம் வரும்.
இவர்களின் இத்தனை அலும்புகளுக்கும் அமைதியாய் போகிறான் என்றாள் அதற்கு காரணம் அவன் தாய்.. தன் தாயின் மேல் வைத்த பாசம் மரியாதை இது தான் இத்தனை நடந்தும் இந்த குடும்பத்தை விட்டு விலகாத காரணம்.
விரக்தியான சிரிப்புடன் அங்கிருந்து அலுவலகத்திற்கு சென்றான்.
அங்கே அவன் வருவதற்குள்ளாகவே அவனின் வேலை அங்கே கணிசமாகக் குறைந்திருந்தது.. அது யாரின் வேலை என்று அறிந்ததும் முகத்தில் சிரிப்பு படர்ந்தது.
"போதும் சார் சிரிச்சது.. இன்னைக்கு ஸ்கூல் போகனும்.. அங்கே புது பில்டிங் கட்டற ஓர்க் முடிஞ்சிருச்சி.. சார் வந்து பாத்து சொன்னா பெயின்டிங் ஓர்க் ஸ்டார்ட் பண்ணிடலாம்.. அது மட்டுமில்லாம ஸ்கூலுக்கு புதுசா ஸ்டாப் ரெண்டு பேரு வந்துருக்காங்க.. அவங்களோட ஓர்க் எப்படின்னு இன்னைக்கு சார் பாக்கனும்.. அதுனால தான் இந்த ஓர்க் நான் பாத்தேன்.. போலாமா.." என்ற கேள்வியுடன் ஆதவன் நின்றான்.
இந்த கம்பெனியில் ஆதவனும் ஒரு பார்ட்னர் தான்.. இது அகஸ்டின் ஆதவன் இருவரின் விடாமுயற்சியின் பலமாய் வளர்ந்த கம்பெனி.
அதனால் அகஸ்டினின் தம்பிகள் இதில் வரமுடியவில்லை.. இல்லை என்றால் இதிலும் நுழைந்து அவனின் நிம்மதியை குடிதோண்டி புதைக்க தயங்க மாட்டார்கள்.
தன் ஆருயிர் நண்பனை இறுகக் கட்டித் தழுவிக் கொண்டான் அகஸ்டின். அப்பொழுதே அவனுக்கு புரிந்து விட்டது அவனின் மனம் அமைதியில் இல்லை என்று.
அகஸ்டினின் இந்த இறுகிய அணைப்பு எல்லாம் என்றாவது ஒரு நாள் தான்.. அவன் மனமே அமைதியின்மையில் துடிக்கும் போது தான் இந்த மாதிரி அணைப்பு வரும்.
ஆனால் அப்பொழுதும் தன் உணர்வுகளை வார்த்தையால் வெளிவிடமாட்டான் அந்த அழுத்தக்காரன்.
தன் நண்பனை நன்கு அறிந்தவன் இன்று எதுவோ நடந்துள்ளது.. அதை உடமைப்பட்டவன் சொல்ல மாட்டான் என்றாலும் இந்த் ஆறுதலையாவது தன்னிடம் தேடுகிறானே என்ற ஒரு நிம்மதி எழாமல் இருக்க முடியவில்லை.
அவனின் முதுகில் தடவி கொடுத்தான் ஆதவன்.. சிறிது நேரத்தில் தன்னை மீட்டுக் கொண்டவன், "போலாம் டா.." என்று தன் கலங்கிய கண்களை மறைக்க கண்ணாடியை மாட்டிக் கொண்டு புறப்பட்டு விட்டான்.
' அய்யோ கடவுளே உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா.. இன்னும் எத்தனை இன்னல்களை தான் தாங்க போறான்.. இதுக்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா.. இதெல்லாம் எப்போடா தீரும்.. இறைவா ப்ளிஸ் என் அகஸ்டினுக்கு நிம்மதியை குடு..'என்று மனதோரம் தன் கடவுளிடம் வேண்டிக் கொண்டு அவன் பின்னே சென்றான்.
இங்கே அந்த இருட்டறையில் தன் முகத்தில் உதிரம் வழிய அங்கே இருந்த சிறிய ஜன்னலில் தூரத்தே தெரிந்த கோயில் கோபுரத்தை பார்த்தான் துவாரகன்.
அவன் கீழே எழுதியிருந்த அம்மு என்ற பெயரை திரும்பி பார்த்தான்.
அவனின் கண் முன்னே தோன்றினாள் அவள் சிரிப்புடன் அவனிடம் கேட்டாள் அழுதாள் யாசகம் பெற்றாள்.. கடைசியாக அவள் பேசியது அவன் காதுகளில் ஒளித்தது.
'அண்ணா போதும் ணா நீங்க எனக்கு செஞ்ச உதவி..எங்களுக்கு யாரும் வேணாம்ணா.. நாங்க போயிடறோம் எங்களால உங்க வாழ்க்கையும் கேள்விக் குறி ஆக வேண்டாம் அண்ணா..
உங்ககிட்ட ஒன்னு மட்டும் சொல்லனும் அண்ணா.. எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் அண்ணா..இந்த ஜென்மத்துல வேனா நீங்க என்னோட அண்ணனா உடன் பிறக்காதா போகலாம்.. ஆனா அடுத்த ஜென்மத்துல உங்க மகளா உங்களுக்கு பிறக்கனும் அண்ணா..
என்னால உங்க குடும்ப வாழ்க்கை எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது அண்ணே.. நாங்க வர்றோம் அண்ணா..'
" அம்மு திரும்பவும் இந்த அண்ணன் கிட்ட வரமாட்டியா டா.. வேணாம் டா வர வேணாம்.. நீங்க நல்லாருந்தா போதும் டா.." என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
வெளியே அந்த கருணாகரனின் ஆட்கள் பேசுவது நன்றாக காதில் விழுந்தது.
"ஏன் மச்சி அந்த மது பொண்ணுக்கு எவ்வளவு தைரியம் இல்லை.. கட்டுன புருசன நம்மகிட்ட கொடுத்துருக்கு.." என்றான் ஒருவன்.
இன்னொருவனொ, "டேய் ஏன்டா நீ வேற.. அந்த பொண்ணு இனிமே நல்லா ஜாலியா சுத்தலாம்னு நினைச்சிருப்பா.. அவ கவர்மென்ட் வேலை தானா.. இவன் சாதாரண டிரைவர் தானே.. அது தான் ஈசியா தூக்கி போடுறா டா.. போன வாரம் கூட எவனோ அவ கூட வேலை செய்யறவனாம் அவனோட ராத்திரி வந்து இறங்குறா.. அவங்களுக்குள்ள எதுவும் கசமுசா நடந்துருக்கும்னு தோனுது டா.. அந்த அளவுக்கு குளோசா வந்து இறங்கியிருக்கா.." அதற்கு மேல் அவன் கூறியது அனைத்தும் ஒரு சாதாரண கணவன் கேட்ககூடாத வார்த்தைகள் தான்.
அதை கேட்டு மனம் உறைந்திருந்தான் துவாரகன்.
தன் மனைவியை பற்றி அடுத்தவன் வர்ணிப்பதை கேட்க முடியாமல் தன் காதை பொத்திக் கொண்டான்.
துவாரகனின் மனைவி மதுமதி.. அவனின் சொந்தம் தான் மது.. அவர்களின் திருமணத்தின் போது வெறும் டிகிரியுடன் இருந்தவளை வற்புறுத்தி ஆசிரியருக்கு படிக்க வைத்தான்.
அதற்கு பின்பு அரசுத் தேர்வு எழுத வைத்தான்.
அவர்கள் திருமணம் ஆனதிலிருந்து நீண்ட காலமாக அவர்களுக்கு குழந்தை இல்லை.. ஆனாலும் தன்னவளை ஒரு சொல் சொல்லாமல் காதலுடன் அவள் ஆசைகளை நிறைவேற்றி வைத்த உண்மையான ஆண்மகன்.
அவனின் ஆதரவும் மதுவின் விடாமுயற்சியும் சேர்த்து அரசுத் தேர்வில் தேர்வானாள். முதல் போஸ்டிங் நாகர்கோவிலில்.
தன் மனைவியின் விடாமுயற்சியின் பலனாய் கிடைத்த வேலையினை அவளின் ஆசைப்படியே வேலைக்கு அனுப்பினான்.
ஆனால் அவளோ வேலையோடு மற்ற அனைத்தையும் கற்றுக் கொண்டு வந்தாள்.
படித்து அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும் தனக்கு படிக்காத டிரைவரா கணவர் என்று கணவனை சுத்தமாய் மதிக்காமல் போனாள்.
என்ன தான் தன்னை மதிக்காமல் போனாலும் தன் மனைவியை யாருக்கும் விட்டுக் கொடுக்க ஆடவனுக்கு துளியும் விருப்பமில்லை.
ஏன் காதல் தன்னவளின் மேல் கொண்ட கண் மூடித்தனமான காதல் அனைத்தையும் தோற்கடித்தது.
ஆனால் பெண்ணவளோ ஆடவனுக்கு வலியை தந்து அதில் திருப்தியுற்றாள்.
தன்னவளின் நினைவில் உழன்றவனுக்கு பெண்ணொருத்தியின் மலர் முகம் ஒன்று நினைவில் வந்தது.. அந்த முகத்தில் இருந்த புன்னகை காணாமல் கலையிழந்து காணாமல் போன தருணம் மனதில் ஆராத வலியை தந்தது.. அதன் வலியில் அவனின் வார்த்தையில்,
"அம்மு மன்னிச்சிருடா அண்ணன் உன்னை காக்க தவறிட்டேன் டா.. என் உயிரே போனாலும் நீ எங்கே இருக்கன்னு இவங்களுக்கு சொல்ல மாட்டேன் டா.. நீயும் என் மருமகன்களும் எங்கிருந்தாலும் நல்லாருக்கனும்.. என் உயிர் போறதுக்குள்ள உனக்குன்னு ஒரு வாழ்க்கையை ஏற்படுத்தி தரணும்னு நினைச்சேன்.. ஆனா அது நடக்கலையே அம்மு.. நான் திரும்ப உன்னை பார்ப்பேனா டா.." அவனின் வாய் வார்த்தைகள் உதிர்த்த அதே தருணத்தில்,
இங்கே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அகல்யா, " அண்ணா.." என்ற அலறலுடன் எழுந்து அமர்ந்தாள்.
எங்கேயோ தன் தமையன் அழைத்தது போல் இருந்தது என்று சுற்று முற்றும் பார்த்தாள்.. அப்பொழுது தான் யோசித்தாள் அவள் இருக்கும் இடம் அவளின் தமையனுக்கு தெரியாதே என்று.
அவளின் பக்கத்து கட்டிலில் பிள்ளைகள் இருவரும் ஆழ்ந்து உறங்க அவளின் சத்தம் அவர்களின் காதுகளை எட்டவில்லை.
உறக்கத்தில் விலகியிருந்த தன் ஆடையை சரி செய்தவள் எழுந்து வெளியே வந்தாள்.
"அண்ணா என்னை மன்னிச்சிருங்க அண்ணா.. என்னை நினைப்பீங்களா.. இல்லை வேணாம் அண்ணா.. எங்களை மறந்துட்டு உங்க வாழ்க்கையை பாருங்க அண்ணா.." இரவை தூதுவிட்டாள் தன் தமையனுக்கு.
ஆனால் அவளின் தமையனோ அவளுக்காக உயிர் போகும் வலியை அனுபவிப்பது தெரிந்தால் அதற்கு காரணமானவர்கள் நிலை என்னவோ..?
அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. இந்த கதை பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க பட்டூஸ்.