ராயல் இன்ஸ்டியூட் முழுதாய் வறுமையில் வாடும் ஏழை குழந்தைகளுக்காய் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள்.. கல்வியின் மகத்துவம் தெரிந்தவன் அகஸ்டின்.. இருக்கும் இடத்தில் வாங்கி கொண்டு இல்லாத இடத்திற்கு இலவசமாய் கல்வியை கொண்டு சேர்க்கிறான்.. மற்றவர்களின் கண்களில் அவனுக்கு இது ஒரு தொழில்.. ஆனால் சிலர் மட்டுமே அறிந்த ரகசியம் அங்கே நடப்பது சேவை என்று.
ஆதவனும் அகஸ்டினும் அங்கே நுழைந்தனர்.. அந்த கல்லாரி வளாகம் பரந்து விரிந்து கிடந்தது.. எங்கும் பசுமையின் வண்ணமாய் ஜொலித்தது.. செயற்கையை விட இயற்கையான மரங்களை நட்டு அதில் அனைவருக்கும் நிழல் கொடுப்பதாய் பரந்து விரிந்திருந்தது.
இதை வடிவமைத்தவனுக்கு நிச்சயம் ரசனை நிரம்பியவனாய் இருக்க வேண்டும்.
பார்க்க பார்க்க திகட்டாத சொர்க்கமாய் தெரிந்தது.
கல்வி நிறுவனங்கள் ஆரம்ப பள்ளியிலிருந்து கல்லாரி வரைக்கும் பரந்திருந்தது.
அதன் நிறுவனர்கள் இருவர் தான் அகஸ்டின் ஆதவன்.
இது முற்றிலும் அகஸ்டினின் சொந்த முயற்சியால் உருவானது.. அவன் தான் வறுமையில் தவிப்பவர்களுக்கு தரமான கல்வியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கதுடன் ஆரம்பித்தான்.
இது ஆரம்பித்து ஆறு ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது.. இப்பொழுது தரமான கல்விக்கு பெயர் பெற்ற நிறுவனமாய் மாறிப் போனது.
இதோ இப்பொழுது கூட புது கட்டிட மேற்பார்வைக்கு தான் இருவரும் வந்துள்ளனர்.
அவர்கள் இருவரும் வரவும் அங்கேயிருந்த பிரின்சிபல் அவனுடன் கட்டிடத்தை மேற்பார்வையிட வந்தனர்.. ஆதவன் அதன் கணக்கு வழக்குகளை பார்வையிட ஆரம்பித்து விட்டான்.
பெரும்பாலும் இது போன்ற விடயங்களுக்கு செல்ல மாட்டான்.. ஏன் அகஸ்டின் ரசனை ஆதவனிடம் கிடையாது.. அவன் சொல்வது போல் இவனுக்கு அதில் பெரிய அனுபவம் இல்லை.
கல்லாரி முதல்வரும் பள்ளி முதல்வரும் அவனுடன் கட்டிடத்தையும் பார்வையிட வந்தனர்.. அவர்களுடன் இன்ஜினியரும் வந்தார்.
அதை கட்டுவதும் அவனின் கன்ஸ்ட்ரக்ஷன் தான்.. அதன் சீஃப் இன்ஜினியரிடம் சில வேலைகளையும் சில மாற்றங்களையும் செய்யச் சொன்னவன் அவர்களை அனுப்பி விட்டு அந்த கட்டிடத்தை திரும்பவும் சுற்றி பார்க்க ஆரம்பித்தான்.
அப்பொழுது தான் எங்கிருந்தோ ஒரு மழலை சிரிக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான்.
அங்கே இரு சிறு பையன்கள் இணைந்து பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.. அந்த மழலையின் சிரிப்பு சத்தம் ஆடவனின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த பையன்கள் இருவரும் சிரித்து பேசியபடி ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அந்த இருவரையும் அவர்களின் சிரிப்பையும் ரசித்துக் கொண்டிருந்தான்.. அவனின் வீட்டில் மழலைச் செல்வங்களுக்கு பஞ்சமில்லை.. ஆனால் அவர்களிடம் நெருங்க முடியாது.. அதற்கு அவனின் குடும்பம் ஒத்துக் கொள்ளாது.. எனவே அத்தனை பாசத்தையும் தன் மனதினுள் பொத்தி வைத்துக் கொண்டான்.
இதோ இப்பொழுது அது மடைதிறந்து வெளியேற துடிக்கிறது.. ஆனால் அதை கட்டுக்குள் கொண்டு வரும் வித்தை அறிந்தவன் அவன்.
சிரித்தபடி விளையாடி கொண்டிருந்தவர்களை கண்டவனின் இதழ்கள் புன்னகையில் விரிந்தது.
இரு சிறுவர்களில் ஒருவனை முன்பே தெரியும் அகஸ்டினுக்கு.. நேற்று கடற்கரையில் காப்பாற்றிய சிறுவன் அவன்.. அவனின் புன்னகையில் தான் அகஸ்டினின் மனம் நிறைந்திருந்தது. அப்பொழுது தான் அவனின் மனதில் ஒரு கேள்வி.. அந்த சிறுவன் இங்கேயே படிக்கிறான்.. அப்பொழுது அவனின் தமையன் என்ற கேள்வி எழாமல் இல்லை.
ஆனால் அதற்கு மேல் எதையும் யோசிக்கமுடியாமல் அவனை வேலை அழைத்தது.. ஆம் ஆதவன் அவனை அலுவலகத்திற்கு வர சொல்லி அழைத்திருந்தான்.
அவர்களை பார்த்து சிரித்தபடியே அலுவலக அறை நோக்கி சென்றான் அகஸ்டின்.
அங்கே சென்றவனுக்கு இந்த ஒரு வருடத்தில் புதிதாய் வேலைக்கு சேர்ந்திருக்கும் ஆட்களை அவனுக்கு அறிமுகப்படுத்தினார் பிரின்சிபல்.. உடன் ஆதவனும் இருந்தான்.
எல்லோரின் வேலை நேர்த்தியையும் விவரித்தார்.. எல்லாவற்றையும் கேட்டவன் யாரையும் தனியாக சந்திக்கவில்லை.. ஒட்டு மொத்தமாக தான் சந்தித்தான்.
நாற்பது பேரில் இருந்த பெண்ணவளும் அவனின் முகத்தை பார்க்கவில்லை.
எல்லோரும் அவனிடம் இருந்து விடைபெற்று அவரவரின் வேலையை பார்க்க சென்றனர்.
அடுத்ததாக கல்லாரி வளாகத்தில் நுழைந்தவன் அங்கேயும் தன் வேலையை முடித்துக் கொண்டு மீண்டும் பள்ளிக்கு வந்தான்.
அங்கே அனைவரும் சென்ற பிறகு புதிதாக வந்த மாணவர்களின் பட்டியலை முதல்வரிடம் கேட்டான்.
அவரும் அவன் கேட்டதை எடுத்துக் கொடுத்தார்.
எல்லாவற்றையும் பார்த்தவன் அதனுடன் இருந்த அவர்களின் புகைப்படத்தையும் பார்த்தான்.
ஒரு பைலில் அவனின் கண்கள் நிலைகுத்தி நின்றது.. ஆம் அது அந்த சிறுவனின் புகைப்படம் தான்.. அவனின் குறிப்புகள் அடங்கிய பைல் தான்.
பிரின்சிபலை அழைத்து அவனை பற்றிய தகவல்களை கேட்டான்.
அந்த புகைப்படத்தை கண்டவர் சிரிப்புடன்,
"சார் இது நம்ம அகல்யா மேம்மோட பையன் சார்.. சின்னவன் இவனுக்கு முன்னே பெரியவன் இருக்கான் சார்.. பசங்களுக்கு அப்பா இல்லை சார்.. அம்மா மட்டும் தான்.. உங்ககிட்ட முன்னே ஒரு நாள் கேட்டேனா சார்.. ரெண்டு பசங்க அப்பா இல்லாம அவங்க அம்மாவோட இருக்காங்க சார்.. அவங்க அம்மாவும் இங்கே தான் சார் ஜாயின் பன்றாங்கன்னு கேட்டேனே.. நீங்க ஓகே சொன்னதுக்கு அப்புறம் தான் சார் அவங்களை அப்பாயின்மென்ட் பண்ணேன் சார்.." என்றார் நீண்டதாய்.
ஆம் கிட்டத்தட்ட ஒரு ஒன்பது மாதமாய் அவன் கல்வி வளாகத்திற்குள் வரவேயில்லை.. அவனின் வேலை அப்படி.. சில முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை முதல்வருக்கு வழங்கியுள்ளான்.. அதன் பேரில் தான் சிலரை முதல்வரும் நியமித்துள்ளார்.
அதை தலையசைத்து கேட்டுக் கொண்டவனை ஆதவன் அழைத்தான் மீண்டும்.
"டேய் அகஸ் அது தான் பாத்தாச்சே.. திரும்பவும் என்னடா அப்படி பாக்குற.. நேரமாச்சுடா போலாம்.. நமக்கு ஈவ்னிங் மீட்டிங் இருக்கு மறந்துடுச்சா உனக்கு.." என்று எழுப்பினான்.
அவனிடம், "ம்ம் போலாம் டா.." என்றவன் முதல்வரிடம் திரும்பி, "எல்லோரோட டிடைல்லும் சிஸ்டம்ல அப்லோடு பண்ணியாச்சு இல்லை.." என்றான்
"ம்ம் பண்ணியாச்சு சார்.. நீங்களும் ஆதவன் சாரும் ஓபன் பண்ணி பாக்கலாம் சார்.."
"ம்ம் ஓகே நான் நாளைக்கு வர்றேன்.." என்று அவரிடம் விடை பெற்று சென்றான்.
அதைக் கேட்ட ஆதவன், "எது நாளைக்கும் வர்றியா.. அடேய் உனக்கென்னாச்சு டா.. நமக்கு இது மட்டும் வேலை இல்லை டா.. இன்னும் பிஸ்னஸ் இருக்கு.. நாளைக்கும் இங்கே வந்தா மத்த வேலையை எப்போ பாக்குறது டா.." என்று கேட்டவனுக்கு எதையும் பதில் தராது சிந்தையில் இருந்தான் அகஸ்டின்.
அவனின் யோசனையான முகத்தை கண்ட ஆதவன் மேலும் அவனிடம் எதுவும் பேசாமல் அமைதியடைந்து விட்டான்.. இனி பேசினாலும் அவனிடமிருந்து எதுவும் பதில் வரப்போவதில்லை என்பதை நன்றாக தெரிந்தவன்.. ஆதலால் அமைதி.
அகஸ்டினின் மனம் முதல்வர் சொன்னதிலேயே நின்றது.. அது அகல்யா மேம் பையன் சார்.. இன்னொரு பையனும் இருக்காங்க.. அவங்களுக்கு அப்பா இல்லைங்க சார்.. என்று அவர் கூறிய வார்த்தைகள் அவன் காதுகளில் விழுந்து கொண்டே இருந்தது.. ஏனோ அவனையும் அறியாமல் அவன் மனம் வலித்தது.. அதன் காரணம் தான் அவனுக்கு விளங்கவில்லை.
இங்கே பள்ளி முடிந்ததும் தன் வேலையை முடித்துக் கொண்டு இன்று அவளுக்கு எதுவும் பகுதி நேர வகுப்பு இல்லாமையால் பசங்களையும் தன்னுடனே அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்றாள்.
இரவு பசங்களை உட்கார வைத்து அவர்களின் பாடங்களை முடிக்கச் செய்தவள் அவர்களை டீவியின் முன்னே அமர்த்திவிட்டு இவள் சமைக்க சென்றாள்.
இரவு உணவுக்கு சப்பாத்தி செய்தவள் அதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி செய்து விட்டு இருவரையும் அழைத்தாள் உணவு உண்ண.
மூவரும் உணவு அருந்திய பின்பு வீட்டின் மொட்டை மாடியில் பசங்களுடன் படுத்தாள் அகல்யா.
இரவு நேர மெல்லிய காற்று மனதிற்கு இதமாகவும் இயற்கை அன்னை தந்த கொடையை பயன்படுத்த இது ஒரு வழியாகவும் செயல்படுத்தினாள்.. இது இவர்கள் தினமும் நடக்கும் செயல் தான்.
அவள் வந்து அமர்ந்ததும் இருவரும் அவளின் மடியில் ஆளுக்கொரு புறம் படுத்துக் கொண்டு, "அம்மா ஒரு பாட்டு மா ப்ளீஸ் மா.." என்றனர் இருவரும்.
அவர்களின் இருவரின் தலையையும் தடவியள் சிரிப்புடன் பாடத் தொடங்கினாள்.
அழகு நிலவே கதவு திறந்து
அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில்
எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில்
பாலை வார்த்தாயே
என் பாதி உயிரை திருப்பி தரவே
பறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை நானும் உன் தாயே
அழகு நிலவே கதவு திறந்து
அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில்
எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில்
பாலை வார்த்தாயே
என் பாதி உயிரை திருப்பி தரவே
பறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை
நானும் உன் தாயே
சொந்தங்கள் என்பது தாய் தந்தது
இந்த பந்தங்கள் என்பது யார் தந்தது
இன்னொரு தாய்மை தான் நான் கண்டது
அட உன் விழி ஏனடா நீர் கொண்டது
அன்புதான் தியாகமே
அழுகை தான் ஞானமே
உனக்கும் எனக்கும் உள்ள உறவு
ஊருக்கு புரியாதே
அழகு நிலவே கதவு திறந்து
அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில்
எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில்
பாலை வார்த்தாயே
என் பாதி உயிரை திருப்பி தரவே
பறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை
நானும் உன் தாயே
அழகு நிலவே கதவு திறந்து
அருகில் வந்தாயே
எனது கனவாய் உனது விழியில்
வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில்
பாலை வார்த்தாயே
என் பாதி உயிரை திருப்பி தரவே
பறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை
நானும் உன் தாயே
பூமியை நேசிக்கும் வேர் போலவே
உன் பூ முகம் நேசிப்பேன் தாயாகவே
நீருக்குள் சுவாசிக்கும் மீன் போலவே
உன் நேசத்தில் வாழுவேன் நானாகவே
உலகம் தான் மாறுமே
உறவுகள் வாழுமே
கடலை விடவும் ஆழம் எந்தன்
கண்ணீர் துளி ஒன்றே.
அவள் பாடி முடிக்கவும் இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.. அவர்களை தன் மடியில் இருந்து இயக்கியவர் தலையனை வைத்து படுக்க வைத்தவள் தானும் அவர்களுடன் அங்கேயே படுத்துக் கொண்டாள்.
இங்கே தனது புது ஊழியர்களின் பயோடேட்டாவை பார்த்துக் கொண்டே வந்தவன் அகல்யாவின் புகைப்படத்தை பார்த்தவனின் கைகள் அப்படியே நின்றது.
நிழலை வருடும் நிஜம் தொடரும்..
அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ணுங்க பட்டூஸ்க்கு நன்றி