• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 11, 2023
Messages
57
தன் மகளையும் தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு தனது மாமனார் வீட்டிற்கு சென்றான் ஆதவன்.

அவர் ஒரு முன்னால் ராணுவ வீரர்.. கர்னல் ராபர்ட்.. அவரின் ஒரே மகள் தான் ரூபினி.. ராணுவத்தில் பணிபுரிந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்து கொண்டவர்.. அவரின் மனைவி பெயர் காயத்ரி.. அவர் ஐயர் வீட்டுப் பெண்.. காதலுக்கு ஜாதி மதம் தேவையில்லை என்பதை போல ஒரு ராணுவ வீரனுக்கும் ஜாதி மதம் தேவையில்லை என்பதை தன் வாழ்வில் நிருபித்தவர் அவர்.

அவரைப் போல அவரின் மகளும் காதல் என்று வந்து நின்றதில் முதலில் அதிர்ந்தாள் ஆதவனை பற்றி வெளியில் கேட்டு அறிந்து கொண்டவருக்கு மிகுந்த சந்தோஷம் தான்.. வாழ்க்கையில் கஷ்டப்பட்டவன் நிச்சயம் தன் பெண்ணை நன்றாக பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் இருந்தவருக்கு அகஸ்டின் அவனுக்காக வந்து பெண் கேட்கவும் மனமுவந்து தன் பெண்ணை ஆதவனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார்.

அவருக்கு இப்பொழுது தன் மகளை விட தன் மருமகன் தான் முதல் உரிமை.. ஒரு மகனாய் அவர்களை எந்த இடத்திலும் ஆதவன் விட்டுக் கொடுப்பதில்லை..

கிட்டத்தட்ட இவர்களின் திருமணம் முடிந்து ஏழு ஆண்டுகள் கழித்து தான் ஆரா உதயமானாள்.. ஏன் அதற்கு காரணமும் அகஸ்டின் தான்.

தன்னை நேசித்தவளை தானும் நேசித்தாலும் தன் நண்பன் தனி மரமாய் நிற்கும் நேரம் தன் வாழ்க்கையை பற்றி யோசிக்கும் அளவுக்கு ஆதவன் சுயநலக்காரன் இல்லையே.. தன் காதலை தனக்குள்ளே புதைத்துக் கொண்டவன் வெளியே தன்னவளை பிடிக்காதது போல் நடித்தான்.

அவனின் புறக்கணிப்பை தாங்க முடியாத பெண்மனம் தவித்து துடித்தது.. ஆனால் அவனின் விழிகளில் தனக்கான காதலை கண்டவள் அதை தன்னிடமிருந்து சாமர்த்தியமாய் மறைக்கும் தன்னவன் மேல் கோபம் கூட பட முடியவில்லை பெண்ணவளால்.. அவனின் சொல்லாத காதலுக்கும் நிச்சயம் ஏதேனும் காரணம் உண்டு என்று நம்பினாள்.. அதனால் அவன் புறக்கணிப்பு வலியை தந்தாலும் தாங்கி கொண்டாள்.

ஒரு அளவுக்கு மேல் அவளுக்கும் வலியை தாங்க முடியா தருணத்தில் நேரே அவனைக் காண அலுவலகம் வந்திருந்தாள்.. அப்பொழுது அகஸ்டின் அங்கு இல்லை.. வெளி வேலையாய் சென்றிருந்தான்.

அலுவலகத்திற்குள் வந்தவள் ரிசப்ஷனில்,

"எக்ஸ்க்யூஸ் மீ கேன் ஜ ஸீ டூ மிஸ்டர் ஆதவன்.." என்றாள் அங்கிருந்த யுவதியிடம்.

"அப்பாயின்மெண்ட் இருக்கா மேம்.. மே பி சார் டுடே லீவ் மேம்.. அகஸ்டின் பாஸ் தான் மேம் இருக்காங்க.. நீங்க அவங்களை மீட் பண்றீங்களா.." என்றான் தன்மையாய்.

"நோ மிஸ்டர் ஆதவனை தான் பாக்கணும்.. சம் பர்சனல்.. ஓகே அவரோட அட்ரஸ் சொல்ல முடியுமா.." என்றாள் இயல்பாய்.

இன்றைக்கு நிச்சயம் அவனை காணாமல் செல்லக் கூடாது என்ற முடிவுடன் தான் வந்திருந்தாள் ரூபினி.

அந்த பெண்ணும் அவனின் அட்ரஸை கொடுக்கவும் அதை பெற்று கொண்டு அந்த பெண்ணிற்கு ஒரு நன்றியை சொல்லவிட்டு அவனின் வீடு தேடி சென்றாள் பெண்ணவள்.

ஆதவன் தனியாகத்தான் இருக்கிறான்.. அவனுக்கென்று எல்லோரும் இருந்தாலும் அவரவர்கள் சூழ்நிலை காரணமாக வெளியூரில் உள்ளனர்.. அவனின் தங்கையுடன் அவன் அம்மாவும் உள்ளார்.. அதனால் இவனுக்கு தனிமை வாசம் தான்.


அவன் வீட்டிற்கு வந்தவள் வீட்டின் காலிங்பெல்லை அழுத்தினாள்.. ஆனால் யாரும் வருவதற்கான அறிகுறியோ யாரும் இருப்பதற்கான அறிகுறியே அங்கே இல்லை.

அதை உணர்ந்தவள், "ச்சீய் எங்க போனாரு.." என்று கதவில் தட்டவும் அந்த கதவு உள்ளே நோக்கி திறந்தது.

" என்ன இது கதவு திறந்திருக்கு.. ஆனா எங்க தான் போனாரு இவரு.." என்று பேசிக் கொண்டே உள்ளே சென்றாள்.

அங்கே ஒரு அறையில் நுழைந்தவளை பார்த்தது படுக்கையில் யாரோ படுத்திருந்ததை தான்.

அது யாரென்று உள்ளே சென்று பார்த்தவளுக்கு அங்கே ஆதவன் அந்நேரத்தில் படுத்திருப்பது மனதோரம் உறுத்தியது.

" என்ன இந்த நேரத்துக்கு தூங்கறாரு.." என்று எண்ணிக் கொண்டே அவனருகில் சென்றவளுக்கு அவன் ஏதோ அனத்துவது போல் இருந்தது.. மெதுவாய் அவனின் தலையில் கை வைத்து பார்த்தவள் பதறித்தான் போனாள்.

ஆம் அங்கே அவனுக்கு காய்ச்சல் அனலாய் கொதிக்க பக்கத்தில் கவனிக்கவும் யாருமில்லாமல் ஏதோ அனாதை போல் இருந்தான்.

அவன் நிலையை கண்ட பெண்ணவளின் கண்களில் கண்ணீர் சுரந்தது.. தன் கண்ணீரை துடைத்தவள் மெதுவாய் அவனின் அருகே அமர்ந்து அவனின் கண்ணத்தை தட்டி, "ஆது.. ஆது என்னாச்சி உங்களுக்கு.." என்று எழுப்ப முயன்றாள்.

அவனின் தலையில் அதிகமாய் காய்ச்சல் அடிக்க அவன் வலியில் முனுகுவது நன்றாகவே கேட்டது.

முதலில் எழுந்தவள் அந்த அறைக்கு வெளியே வந்து கிச்சனுக்கு சென்றாள்.

அவனுக்கு சிறிது கஞ்சி வைத்தவள் அதை தொட்டுக் கொள்ள பருப்பை வறுத்து துவையல் செய்தால்.. கொஞ்சம் சுடுதண்ணீர் வைத்து எடுத்துக் கொண்டு அவனின் அறைக்கு சென்றாள்.

அவன் இன்னமும் காய்ச்சலின் அவதியில் அனத்திக் கொண்டிருக்க தான் கொண்டு வந்த தண்ணீரை வைத்து அவனின் முகத்தை துடைத்து விட்டு அவனின் தலைக்கு தைலைத்து போட்டு தேய்த்து விட்டாள்.

தான் செய்த கஞ்சியை அவனை தன் மேல் சாய்த்துக் கொண்டு மெதுவாய் அவனை பருக வைத்தாள்.

காய்ச்சலின் வீரியத்தில் அவன் அருகே அவள் இருப்பதை ஆடவன் உணரவில்லை.

அவன் கஞ்சியை வேண்டாம் என்று திருப்பும் போதெல்லாம் குழந்தைக்கு கஞ்சியை ஊட்டுவது போல் ஊட்டி முடித்தாள் பெண்ணவள்.. இறுதியாக காய்ச்சல் மாத்திரை போட்டு அவனை விட்டு தள்ளி போக சென்றவளை காய்ச்சலின் வீரியத்தில் அவளின் கையை கதகதப்பாய் பிடித்துக் கொண்டான் ஆதவன்.

அதன் பின்பு எங்கே தள்ளிப் போவது.. அவனருகிலே அமர்ந்து அப்படியே அசதியில் தூங்கி விட்டாள்.

அவர்கள் இருவரும் எழும் நேரம் அவர்கள் முன்னே அகஸ்டின் அமர்ந்திருந்தான் முகத்தில் யோசனையை தாங்கியபடி.

முதலில் எழுந்தது ரூபினி தான்.. அசதியில் நன்றாக உறங்கி விட்டதை உணர்ந்தவள் தன் காதுக்குள் இதயம் துடிக்கும் சத்தத்தை கேட்டு தன் விழியை மலர்த்தி பார்த்தாள்.

அங்கே அவளவன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான்.. அவனைப் பார்த்தது பெண்ணவளுக்கு இயல்பாய் ஒரு முறுவல் வந்து போனது.. அப்பொழுது தான் அவனுக்கு காய்ச்சல் என்று.. வேகவேகமாய் அவனின் நெற்றி கழுத்து என அனைத்திலும் தொட்டு பார்த்தாள்.. காய்ச்சல் குறைந்திருந்தது. அப்பொழுது தான் அவளுக்கு சற்று நிம்மதியாய் இருந்தது.


அவனில் இருந்து எழுந்தவள் கண்டது தங்களின் முன்னே இருந்த சோபாவில் அமர்ந்து பேப்பரை படித்துக் கொண்டிருந்த அகஸ்டினைத் தான்.. கடவுளே அண்ணா என்ன சொல்லுவாங்கன்னு தெரியலையே என்ற பதட்டத்துடன் பார்த்துக் கொண்டே எழுந்தாள்.

அவள் எழுந்ததை உணர்ந்தவன் பேப்பரை அங்கிருந்த டேபிளில் வைத்து விட்டு அவளின் பக்கம் திரும்பி புருவத்தை உயர்த்தி பார்த்தான்.. அவனைப் பற்றி அவளுக்கு நன்றாக தெரியும்.. ஆனால் இருவரும் இதுவரை நேருக்கு நேர் சந்தித்ததில்லை.. இன்று தான் முதல் முறையாக அதுவும் இந்த நிலையிலா..? என்று பெண்ணவளுக்கு பதட்டம் தான் அதிகம் ஆனது.

எங்கே கோபப்பட்டு திட்டி விடுவானோ என்று பயத்துடன் இருந்தாள்.

ஆனால் அவனோ அவளின் பயத்தை கண்டு மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டான்.

அவனையே பார்த்தவள், "அண்ணா அது.. அது .. வந்து.. வந்து அவங்களுக்கு உடம்பு முடியலை... அதான்.." எப்படியோ தான் சொல்ல வந்ததை திக்கி தினறி சொல்லிவிட்டாள்.

அவள் கூறியதற்கு எந்த பதிலும் சொல்லாமல் மீண்டும் சோபாவில் வந்து அமர்ந்து கொண்டான்.

' இது என்னடா இந்த அண்ணா பேசவே மாட்டாங்கன்னு தெரியும்.. குத்து கல்லு மாறி ஒருத்திய ரீசன் சொல்றாலேன்னு கொஞ்சமாச்சும் கவனிக்குறாரா..' என்று மனதிற்குள்ளாக அவனை தீட்டி கொண்டாள்.. ஆனால் வெளியே சொல்வதற்கு அவளுக்கு தைரியம் இல்லை.

முதல் காரணம் அவன் கோபக்காரன்.. சட்டென யாரிடமும் பேசமாட்டான்.. ஏன் அவன் அமைதியே அவன் எதிரிக்கும் சிம்ம சொப்பனம்.. அது மட்டுமல்லாமல் அவளவனின் உற்ற உண்மையான நண்பன் அல்லவா.. அவனை பற்றி முழுதும் அறிந்திருந்தாள் பெண்ணவள்.

சோபாவிலிருந்து எழுந்தவன் மீண்டும் ஒரு முறை ஆதவனை பார்த்து விட்டு அவளிடம், "வெளியே வா.." என்ற ஒற்றை வார்த்தையில் அவளை நடுங்க செய்து முன்னே சென்றான்.

பயந்து கொண்டே அவனின் பின்னே சென்றவளை ஹால் சோபாவில் அமர்ந்து கொண்டு, "போய் டீ போட்டு எடுத்துட்டு வா.." என்றான் கட்டளையாய்... ஆனால் அதிலிருந்த உரிமையை பெண்ணவள் அறியவில்லை.

அவனுக்கு பயந்து உடனே கிச்சன் சென்றவள் அவசர அவசரமாக அவனுக்கு டீயை போட்டு எடுத்து வந்தாள்.

அந்த டீ கப்பை கையில் எடுத்தவன் அவளிடம் கேள்வியாக கண்டான்.. அவன் பார்வையிலுள்ள கேள்வியை புரிந்து கொண்டு வேகமாய் சென்று அவளுக்கும் ஒரு கப்பை எடுத்து வந்தாள்.

எடுத்து வந்தவள் அமைதியாய் அப்படியே வைத்திருக்கவும் அவளை பார்த்து "குடி.." என்றான் கட்டளையாய்.

அவன் குடி என்று சொன்னதும் வேகமாய் வாயில் வைத்தவள் நாக்கை சுட்டுக் கொண்டாள்.

அவளின் பதட்டத்தை பார்த்தவன், "ஏய் பார்த்து குடி.. என்ன அவசரம்னு இப்படி குடிக்குற.." என்று மென்மையாய் அதட்டினான்.

அவனின் மென்மை அவளுக்குள் மகிழ்ச்சியை கொடுத்தது.

மெதுவாய் இருவரும் காபி குடித்து முடிக்கவும் அகஸ்டின் அவளை பார்த்து புன்னகைத்து,

"உன்னோடு பேரு என்ன.." என்றான் மென்மையாய்.

"ரூ.. ரூ.. பினி.." என்றாள் தத்தி தாவும் மழலையாய்.


"ஓ ரூ ரூ பினியா.." என்றான் அவளைப் பேல் இழுத்து.

"அய்யோ இல்லைன்னா ரூபினி.." என்றாள் தெளிவாய்.

"ம்ம் இவ்வளவு நேரம் இந்த தெளிவு எங்கே போச்சி.." என்றான் கிண்டலாய்.

அவளோ பயத்துடன் தன் கண்களை கீழே தாழ்த்திக் கொண்டாள்.

அவளின் முகத்தை பார்த்தவன், "நான் யாரு தெரியுமா.." என்றான் இறுக்கமாய்.

தெரியும் என்று தலையசைத்தாள் பெண்ணவள்.

" யாரு.." என்றான் கேள்வியாய்.

"அவங்களோட பிரண்ட் நீங்க.." என்றாள் புதிதாய் பேசுபவள் போல.

" அவங்கன்னா யாரு அந்த அவங்க.."

" அது ஆதவன் நண்பன் நீங்க.."

" ஆதவன் உனக்கு என்ன வேணும்.." என்றான் மீண்டும்.


"நான் அவங்களை விரும்புறேன்.." என்றாள் தலைகுணிந்தபடியே.

"அவனுக்கு தெரியுமா.."

"ம்ம் தெரியும்.. "

"அவனும் உன்னை விரும்புறானா.." என்றான் கேள்வியாய்.

"ம்ம் ஆமா.." என்று தலையாட்டினாள்.

"அவன் உன்கிட்ட சொன்னானா.."

"இல்லை.." என்று தலையாட்டினாள்.

அதை சொல்லும் பொழுது அவளின் கண்கள் கலங்கியிருந்தது.

அதை உணர்ந்தவன் மனதில் வலி இருந்தது.. அவன் ஏன் தன் காதலை அவளிடம் மறைத்தான் என்று அறிந்திருந்தான் அந்த நண்பன்.

"அப்புறம் ஏன் அவனை பாக்க வந்த.. நீ பன்றது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா..இனி நானா சொல்லாத நீயா அவனை பாக்க வரக்கூடாது.." என்றான் கட்டளையாய்.

அதைக் கேட்டவளின் கண்களில் அதிர்ச்சியில் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.. அவன் சொன்னதில் இருந்த அதிர்ச்சியில் அப்படியே சிலையாய் நின்று விட்டாள் பேதையவள்.



நிழலை வருடும் நிஜம் தொடரும்..🌹


அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ். . போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ண பட்டூஸ்க்கு நன்றி
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 31, 2022
Messages
36
அருமையான கதை நகர்வு 👌
 
Top