• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் - 12

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
அகஸ்டின் சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் நின்றிருந்த பெண்ணவளை கண்டவனின் மனம் கனிந்து போனது.

மெதுவாக புன்னகைத்தபடி, "உனக்கு அவனை இவ்வளவு பிடிக்குமா.. ஆனா நீ ஒன்னு யோசிச்சி பாத்தியா.. யாரும் இல்லாத ஒரு வீட்ல ஒரு ஆம்பளையோட இருந்தா இந்த உலகம் எப்படி பேசும்னு தெரியுமா.. உன்னை மட்டும் இல்லை அவனையும் சேர்த்து தான் பேசும்.. நீ பன்னனது தப்பு தானா.." என்றான் கேள்வியாய்.

அவனின் கேள்வியில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

"யாரு வேணா எதுவும் சொல்லிட்டு போகட்டும் அண்ணா.. நான் அவரை உயிரா நேசிக்கிறேன்.. மத்தவங்களை பார்த்து என்னோட வாழ்க்கையை நான் இழக்க முடியாது.. இப்போ ஆதவனுக்கு நிச்சயம் நான் தேவை அண்ணா.. ஆனா எனக்கு இன்னொன்னும் தெரியும்.. நீங்க சம்மதிக்காம எங்களோட கல்யாணம் நிச்சயம் நடக்காது.. நீங்க அவரோட வாழ்க்கையில அவருக்கு ரொம்பவே முக்கியம்.. அவருக்கு மட்டுமில்ல எனக்கும் நீங்க முக்கியமானவர் தான்.. நீங்க சம்மதிச்சா எங்களோட கல்யாணம் நடக்கும்... இல்லையா கடைசி வரை நான் இப்படியே தனியாத்தான் இருப்பேன் அவரை நினைச்சிகிட்டு.. உங்களோட சம்மதத்துக்காக நான் எத்தனை வருசமானாலும் காத்திருப்பேன் அண்ணா.." என்றாள் தெளிவாய்.

அவள் சொன்னதில் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.. மெதுவாய் சிரித்தபடி,

"உங்க கல்யாணம் நடக்கனும்னா முக்கியமான ஒருத்தர் சம்மதம் வேணுமே ரூபி.." என்றான் மென்மையாய்.

யார் என்ற கேள்வியுடன் அவனைப் பார்த்தாள்.. அவளின் கேள்வி புரிந்தவன்,

"முக்கியமா மாப்பிள்ளை சம்மதம் வேணுமே மா.." என்றான் இயல்பாய்.

"எது என்ன வேணாம்னு அவரு சொல்லிடுவாரா அண்ணா.. என்னை விட்டா அவருக்கு யாரு கிடைப்பா.. நான் வாழ்க்கை கொடுத்தா தான் ஆச்சி அவருக்கு.." என்றாள் கோபமாக.

அவன் எப்படி தன்னை வேணாம் சென்று சொல்லுவான் என்ற எண்ணத்தில்.

ஆனால் அவன் கூறவில்லை.. அகஸ்டின் தான் அவளின் மனமறிய கேட்டான்.. அவன் எதிர்பார்த்த பதிலை தனது கோபத்தினால் சொன்னாள் பெண்ணவள்.

அதை உணர்ந்து சிரித்தவனை இமை கொட்டாமல் ரசித்தாள் பெண்ணவள்.. ரசித்தது மட்டும் அல்லாமல்,

"அண்ணா நீங்க சிரிச்சா அழகா இருக்கீங்க.. எப்பவும் இப்படியே இருங்க அண்ணா.. அவரை பிடிச்சதே அவரு உங்க மேல வச்ச பாசத்தை பாத்து தான் அண்ணா.. நண்பரான உங்க மேலேயே இவ்வளவு பாசம் வைக்கும் போது அவரோட மனைவியை எப்படி பாத்துப்பாரு.. அதை நினைச்சி தான் அண்ணா அவரை நேசிச்சேன்.. அதுமட்டுமல்லாம அவரை கல்யாணம் செய்துகிட்டா உரிமையா உங்க கூட பேசலாம் இல்லைண்ணா.. எனக்கு ரொம்ப நாள் ஆசைன்னா உங்களோட பேசணும்னு.. ஆனா என்ன நீங்க தான் இவரைத் தவிர வேற யாருகிட்டேயும் பேச மாட்டீங்களே.. அது தான் தூரத்துல இருந்து பாத்துட்டு போயிடுவேன் அண்ணா.." ரொம்ப நாள் தன் மனதில் உள்ள ஆசைகளை அவனிடம் கொட்டித் தீர்த்தாள் பெண்ணவள்.

அதைக் கேட்ட ஆடவன் பிரமித்து தான் போனான்.. இந்த சிறு பெண்ணிற்கு தன்னை அவ்வளவு பிடிக்குமா.. எனக்காக என் ஆதவனை காதலிக்கிறாளா.. இவள் மட்டும் என் ஆதவனின் வாழ்வில் வந்தாள் அவனின் தனிமை துயர் தீர்ந்து போய்விடுமே.. இறைவா உன் கருணையே கருணை.

எப்பொழுதும் மற்றவர்களுக்காகவே சிந்திக்கும் ஒருவனின் இயல்பான சிந்தனை இது தானே.

அவளைப் பார்த்து மேலும் சிரித்தவன்,

"ரூபினி ரைட்.." அவளின் பெயரை தெளிவுபடுத்திக் கொண்டான்.

ம்ம் என்று சந்தோஷமாக தலையசைத்தாள்.

" ரூபினி நான் உன்கிட்ட சில விஷயம் பேசணும்.. முதல்ல நான் முழுசா சொல்லிடுறேன் அப்புறம் நீ உன்னோட ஒப்பினியனை சொல்லு.. "

" ம்ம் சொல்லுங்க அண்ணா.." என்றாள் சந்தோஷமாய்.

"ஆதவனை பத்தி உனக்கு என்ன தெரியும்னு எனக்கு தெரியாது.. ஆனா நான் சொல்றது நல்லா தெரிஞ்சிக்கோ.. அவனுக்கு எல்லா சொந்தமும் இருக்கு.. ஆனா யாரும் அவனோட இல்லை.. அவனுக்கு நல்லா விவரம் தெரிஞ்சதிலிருந்தே அவன் தனிமையில தான் இருக்கான்..

அவனோட அண்ணன் தங்கை எல்லோரும் இருக்காங்க.. ஆனா அவங்கெல்லாம் தனியா தான் இருக்காங்க.. அவனோட அம்மா பெரிய மகனோட கொஞ்ச நாள் மகளோட கொஞ்ச நாள்னு அவங்க வாழ்க்கை போகுது.. எப்பவாவது ஒரு தடவை வருவாங்க.. அவங்க அப்போ எதாவது சொன்னாலும் ஆதவனுக்காக நீ பொறுத்து போகனும்.. ஆனா சில சமயம் நிலமை கைமீறி போகும் போது உன் பக்கத்துல இருந்து எது சரியோ அதை நீ செய்யலாம்.. அதுக்கு இந்த அண்ணனோட சப்போர்ட் எப்பவும் இருக்கும்.

இதெல்லாம் தெரிஞ்சும் நீ அவனை கல்யாணம் செய்துக்க சம்மதிக்குறியா ரூபி மா.." தனக்கு தெரிந்த வரையில் தன் நண்பனை பற்றியும் அவனின் குடும்பத்தை பற்றியும் எந்த விதமான ஒளிவு மறைவும் இல்லாமல் கூறினான் அகஸ்டின்.

அவன் கூறியதை கேட்டதும் பெண்ணவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது அவளறியாமல் அவளவனை நினைத்து.

" அண்ணா எனக்கு அவரை கட்டிக்க முழு சம்மதம் அண்ணா.." என்றாள் தெளிவுடன்.

அவள் கூறியதை கேட்டு சந்தோஷமடைந்தவன் அவளின் தலையில் கைவைத்து ஆசிர்வதித்தான்.

" எப்பவும் நல்லாருப்படா.." என்றான் மகிழ்ச்சியில்.

அப்பொழுது தான் தூக்கம் கலைந்து வந்தான் ஆதவன்.

அவனைக் கண்டதும் பெண்ணவள் கிச்சனில் சென்று ஒழிந்து கொண்டாள்.

ஹாலுக்கு வந்தவன் அகஸ்டின் இருந்ததை கண்டு, "வாடா அகஸ் எப்போடா வந்த.. என்னவோ தெரியலை டா.. நைட் பூரா காய்ச்சல்.. காலையில எழவே முடியலை.. ஆனா இப்போ காய்ச்சல் விட்டு நல்லாருக்கு.. நீ தான் மாத்திரை கொடுத்தியா டா.. தேங்க்ஸ் டா.." என்று பேசிக் கொண்டே தன் நண்பனை அணைத்துக் கொண்டான்.

அவனைக் கோபத்துடன் தள்ளி விட்டவன், "எருமை உடம்பு சரியில்லைன்னா சார் கால் பண்ணி சொல்ல மாட்டீங்களோ.. எதுக்குடா இப்போ இந்த தனிமை வாசம்.. இல்லை இது சரிவராது.. உன்னை இப்படியே விடறது.. நான் முடிவு பண்ணிட்டேன்.." என்றான் முடிவாய்.

" அடேய் என்னடா முடிவு பண்ணிருக்க அப்படி.. என்னால முடிஞ்சா நான் சொல்லிருக்க மாட்டேனா.. நானே கண்ணைத் திறக்க முடியாம படுத்திருந்தேன் டா.." என்றான் பாவமாய்.

" உனக்கு கல்யாணம் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டேன்.." என்றான் தான் எடுத்தது தான் முடிவு என்பது போல்.

"எது கல்யாணமா.." என்றவனுக்குள் அவனவளின் நினைவு தான். ஆனால் அதை தன் நண்பனிடம் சொல்ல முடியாமல் மனம் தடுமாறியது.. அதை தள்ளி வைத்தவன்,


"எனக்கு கல்யாணம் வேணாம் டா.. நான் கல்யாணம் செய்துக்கனும் னா நீயும் பண்ணிக்கணும்.. அப்போ தான் நான் கல்யாணம் செய்துப்பேன்.." என்று பேரம் பேசினான்.

அதை கண்ட அகஸ்டின், "ஆதவா அடுத்த மாசம் உன்னோட கல்யாணம்.. நான் முடிவு பண்ணி பொண்ணு பாத்துட்டேன்.. நீ கண்டிப்பா ஒத்துக்கணும்.. இது என் மேல சத்தியம்.. அது மாதிரி இனி என்னோட கல்யாணத்தை பத்தியும் பேச கூடாது.. என் மேல உண்மையா பாசம் வச்சிருந்தினா இந்த கல்யாணம் நான் சொல்ற பொண்ணோட நடக்கனும்.. அப்படி இல்லைன்னா இந்த அகஸ்டின் உயிரோட இருக்கறது வெறும் பொணமாத்தான் இருப்பான்.." என்றான் தன் நண்பனிடம் கட்டாய குரலில்.

அந்த குரலில் இருந்த கட்டாயமும் அழுத்தமும் சொன்னது நான் சொல்வதை நீ கேட்கவில்லை என்றாள் நான் இல்லை என்று.

தன் நண்பனை பற்றி தெரிந்தும் அவனிடம் இது போல பேசியது வருத்தம் தான் ஆதவனுக்கு.

தன் நண்பன் பேச்சை தட்டாமல் தன் காதலையும் கூறாமல் திருமணத்திற்கு சம்மதித்தான் ஆதவன்.

ஆதவன் திருமணத்திற்கு சம்மதித்ததும் அவனை கட்டியணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அகஸ்டின்,


"ஆதவ் நான் பார்த்த பொண்ணு யாருன்னு நீ தெரிஞ்சிக்க வேணாமா.." என்றான் சிரித்தபடி.

"தேவையில்ல அகஸ் நீ பார்த்தா போதும்.. ஆனா ஒன்னுடா நான் சொன்னதுக்கு மட்டும் நீ சரின்னு சொல்ல மாட்ட இல்லை.. போடா.." என்று சிறுபிள்ளையாய் தன் நண்பனிடம் கோபித்துக் கொண்டான் ஆதவன்.

அவனின் கோபம் சிரிப்பை வரவைத்தாலும், "ஆதவ் நான் வேணாம்னு சொல்றதுக்கு வேலிடான ரீசன் இருக்கு அது உனக்கும் தெரியும் இல்லை.. அப்புறம் என்னடா.." என்றான் தன் நண்பனை அறிந்தவனாய்.

அவன் சொன்னது உண்மை என்பது போல் அமைதியாய் இருந்தான் ஆதவன்.

" சரி வா உனக்கு பார்த்த பெண்ணை பார்க்கலாம்.." என்று நண்பனை அவசரப்படுத்தினான்.

"அடேய் அது தான் சரின்னு சொல்லிட்டேன் இல்லை.. அப்புறம் எதுக்கு டா இழுக்குற இடியட்.. பாக்கலாம் மெதுவா இப்போ நான் எங்கேயும் வரலை.." என்றான் சோபாவில் அமர்ந்தபடி.

" ஹலோ சார் நானும் வெளியே போகனும்னு சொல்லலை.. பொண்ணு இங்கே தான் இருக்கா.. இரு கூப்பிடறேன்.." என்றான் அகஸ்டின்.

அதைக் கேட்டதும் ஆதவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.. தன் நண்பன் இவ்வளவு வேகமாய் இருப்பான் என்று எதிர்பார்க்கவில்லை ஆதவன்.

"டேய் அகஸ் அது வந்து.." என்று அவன் அவனவளை பற்றி சொல்ல வரும் போது

"டேய் நீ எதுவும் சொல்ல வேணாம்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என் தங்கச்சி இப்போ வருவா பாரு.. அம்மா தங்கச்சி என் மச்சானுக்கு காபி கொண்டு வா மா.." என்று கிச்சன் நோக்கி குரல் கொடுத்தான்.

" எது உன் தங்கச்சியா என்ன டா சொல்றே.." என்றான் அதிர்ச்சியாய்.

"அடச்சீ எரும அடங்கு உன்னை கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு எனக்கு தங்கச்சி தான.." என்றான் பதிலாய்.

அப்பொழுது தான் அவனின் மனம் அமைதியடைந்தது.

அதற்குள்ளாக உள்ளிருந்து ரூபினி அவனுக்கு காபியை எடுத்து வந்தாள்.. அவள் வந்ததை கவனிக்காமல் இருந்த ஆதவனை அகஸ்டின் அவனின் தோளில் தட்டி ,

"டேய் பொண்ணு வந்துருச்சி பாருடா.." என்றான் சிரித்தபடி.

தன் நண்பன் கூறியதற்கிணங்க மறுத்து சொல்லாது தலை நிமிர்ந்து காபி கப்பை எடுக்க போனவன் அப்படியே அவனின் கைகள் காற்றில் நின்று விட்டது அவளைக் கண்டு, "நீயா.." அதிர்ச்சியில்.

பெண்ணவளோ சிரித்தபடி ஆடவனின் முன்னே நின்றிருந்தாள்.


நிழலை வருடும் நிஜம் தொடரும்..🌹



அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ண பட்டூஸ்க்கு நன்றி
 

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
518
150
43
Dindugal
ஒ.. பிரண்ட் பார்த்தா ஓகே வா. அப்போ இவனை வச்சு செய்யணும் ரூபி
 
  • Like
Reactions: ரமா

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
ஸ்வீட் சர்ப்ரைஸ் ஆதவனுக்கு ❤️
க்யூட்டான பொண்ணு பாக்குற நிகழ்வு 😍
 
  • Like
Reactions: ரமா