• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் - 13

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
பெண்ணை பார்த்து அதிர்ந்து போனான் ஆதவன்.. ஏனென்றால் அங்கே நின்றது அவனவள் தானே.. சிரித்தபடி நின்றவளை கண்டு,

"ஏய் நீ எங்கே டி இங்கே வந்த.." பதட்டத்துடன் அகஸ்டினையும் அவளையும் பார்த்தபடி பேசினான்.

அவனின் பதட்டத்தை கண்ட அகஸ்டினோ சிரித்தபடி,

"அடேய் லூசு ரொம்ப பன்னாத டா.. உனக்கு இந்த பொண்ணை பிடிச்சிருக்கு தான.. அப்புறம் என்னடா யாருக்காக இப்படி உன் மனசுல தோனின ஆசைய மறைக்கிற இடியட்.." என்று திட்டினான்.

அவன் கூறியதை கேட்டு அசடு வழிந்தவன், "அகஸ் அது வந்து.. உனக்கு எப்படி டா தெரியும்.. இவ சொன்னாளா டா.." என்றான் அவளை கோபமாய் பார்த்தபடி.

"டேய் ரூபி எதுவும் சொல்லலை.. நாயே நீ தான் சொன்ன.." என்றான் சிரித்தபடி.

"எது நான் சொன்னேனா.. நான் எப்படா உன்கிட்ட சொன்ன.." என்றான் எதையோ யோசித்தபடி.

"ம்ம் இதோ இப்படிங்க சார்.." என்று தன் கோட் பாக்கெட்டில் இருந்து எதையோ எடுத்தபடி.

அதை கண்ட ஆதவனின் கண்கள் அவனறியாமல் பெண்ணவளை பார்த்தது.. அவன் கண்களில் காதல் வழிந்து ஓடியது.

ஆம் அது அவளின் புகைப்படம் தான்.. அதுவும் அவளுக்கு தெரியாமல் அவளை கோவிலில் பார்த்து எடுத்தது.

அதை வாங்கிப் பார்த்தவளின் கண்களில் கண்ணீர் வந்தது.

அந்த புகைப்படம் அவளின் தாயிற்காக முதல் முறையாக புடவை கட்டி எடுத்த புகைப்படம்.

அதுவும் தாயின் திருப்திக்காக அந்த புடவையுடன் கோவிலுக்கு வந்தது.. அங்கே தான் முதல் முறையாக ஆதவனை கண்டு அவனின் கம்பீரத்திலும் நட்பிலும் மனதை பறிகொடுத்தவள் அவனையே நேசிக்க ஆரம்பித்தது.

அங்கே வயதான தம்பதிகளுக்கு உணவை வாங்கி கொடுத்து அவர்களுடனே நிழலில் அமர்ந்து அவர்களை சாப்பிட வைத்து அவர்களை முதியோர் இல்லத்தில் தன் உதவியாளரை வைத்து சேர்த்து விட்டான்.


அன்றே ஆதவனுடன் கடைக்கு சென்று அவனுக்கு கோட் சூட் செலக்ட் செய்தது.

ஏனோ அன்றே அந்த கள்வன் பாவையவளுக்கு பிடித்து காதல் செய்ய.ஆரம்பித்தாள்.

பின்பு அவன் யார் என்ன என்று அவனைப் பற்றிய தகவல்களை சேகரித்தது.. ஆனால் எத்தனை முயன்றும் அவனின் குடும்பத்தை பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

அன்று தான் முதல் முறையாக புடவை கட்டினாள்.. அதன் பின்பு மருந்துக்கும் புடவை பக்கம் அவளின் பார்வை சென்றதில்லை.

இந்த புகைப்படம் அவனிடம் இருக்குமாயின் அன்றே தன்னை அவனுக்கு தெரியுமா என்று நினைவுடன் அவனை பார்த்தாள் பாவை.

அவளின் பார்வை வீச்சை தாங்காமல் அகஸ்டினிடம் திரும்பி,

"டேய் இந்த போட்டோ எப்போ டா உனக்கு கிடைச்சது.. இது ஒரு தடவை நம்மோட விளம்பர கம்பெனிக்கு மாடல் தேவைபட்டுச்சு இல்லை.. அப்போ கோவில்ல பாத்து எடுத்தது.. மாடலுக்காக எடுத்த போட்டோ டா மச்சான்.." என்றான் இருவருக்கும் தன்னை நிரூபிக்கும் நோக்கத்துடன்.

"ஓஓஓ அப்படியா மச்சான்.. அப்போ ஏன்டா மாடல் போட்டோ செலக்ட் பண்ணும் போது இந்த போட்டோவ காட்டலை.. ஏன் நான் என்னன்னு கேட்டும் அந்த போட்டோ அழகா இல்லை டா.. அதனால வேண்டாம்னு ஒளிச்சு வச்சவன் தூக்கி இல்லை போடனும்.. இதை ஏன்டா உன்னோட பர்சனல் லாக்கர் ல வச்சி பூட்டி வச்ச.."என்றான் நக்கலாக.

பெண்ணவளின் பார்வையோ ஆடவனை முறைத்து தள்ளினாள்.

' அய்யோ கடவுளே இவளே கம்முனு இருந்தாலும் இந்த மூதேவி எடுத்து குடுக்குதே.. இதுல இவ அழகா இல்லைன்னு வேற நான் சொல்லி வச்சிருக்கேனே..கடவுளே இந்த ரெண்டையும் எப்படி டா சமாளிக்கிறது.. டேய் மச்சான் எப்போ சொன்னது இப்போ வத்தி வக்கிறியோ டா..' தன் மனதில் யோசித்தவன் அவனை பாவமாய் பார்த்தான்.

அவன் பார்வையை தவிர்த்தவன் ரூபியிடம் திரும்பி,

"ஆமா மா இந்த போட்டோவ இந்த நாய் என்கிட்ட காட்டவே இல்லை மா.. காட்ட சொன்னதுக்கு இந்த பொண்ணு அவ்வளவு ஒன்னும் அழகா இல்லை டா ன்னு சொன்னான் மா.." தன் நண்பனை கார்த்தி விட்டு அங்கிருந்து செல்ல முயன்றான்.

தன்னை மட்டும் தன்னவளிடம் கோர்த்து விட்டு செல்லும் தன் நண்பனை பாவமாய் பார்த்தவன்,

"டேய் நண்பா இப்படி ஒரு ராட்சசிகிட்ட என்னை காத்து விட்டுட்டு போறியே உனக்கே நியாயமா டா.." என்றான் அழுவதைப் போல.

அவனோ தன் தங்கையானவளிடம் திரும்பி,

"பாரும்மா உன் முன்னாடியே சொல்றான் ராட்சசின்னு.. ஏதோ கொஞ்சம் பாத்து பண்ணுமா.. நண்பா ஈவ்னிங் நல்லாருந்தா ஆபிஸ் வந்துடு.. ஈவ்னிங் பாரின் கிளையண்ட் மீட்டிங் இருக்கு.." என்று விட்டு வேகமாய் அங்கிருந்து சென்று விட்டான்

" அடேய் இப்படி மாட்டிவிட்டுட்டியே டா.." என்று பாவமாய் தன்னவளிடம் திரும்பினான்.

அவளோ அவனை முறைத்தபடி,

"என்ன சொன்ன நான் ராட்சசியா.. நான் அழகா இல்லையா.. ஆமா நீங்க எல்லாம் பெரிய ஆளுங்க.. என்னையெல்லாம் புடிக்குமா.. உங்க அந்தஸ்துக்கு தான தேடுவீங்க.." கோபமாய் ஆரம்பித்தவள் அழுகையுடன் முடித்தாள்.

அவள் அழுவது அவனுக்கு மன வேதனையை தந்தது.. தன்னை உயிராய் நேசிப்பவள்.. தான் உயிராய் நேசிப்பவள்.. தன் முன்னே அழுவது அவனுக்கு இதயத்தில் வலியை கொடுத்தது. அவள் அழுவது தாங்காமல்,

"ஏய் ச்சீய் என்னடி இப்படி அசிங்கமா பேசுர.. யாருடி அந்தஸ்து பாத்து பேசுனா.. நீன்னா எனக்கு உயிருடி.. ஹனி இங்கே பாரு இன்னொரு முறை என் கண் முன்னாடி அழாத டி.. என்னால தாங்க முடியலை.." என்றான் அவளின் கண்ணீரை துடைத்தபடி.

" அப்புறம் ஏன் என்னை இத்தனை நாளாய் தொரத்துன.. எத்தனை தடவை என்னோட காதலை உன்கிட்ட சொன்னேன்.. ஆனா என்னை எப்படி அடிச்சி விரட்டுன.." என்றாள் இரு கண்களையும் கசக்கி சிறுபிள்ளையாய்.

அவள் சிணுங்களில அவனுக்கு குழந்தையாய் தெரிந்தாள்.. தன்னவளின் சிறு பிள்ளை தனத்தினை நினைத்து சிரித்தவன்,

"அடியே மண்டு.. நான் போன்னு சொன்னா நீ போய்டுவியா டி.. இல்லை என்னை மறந்துட்டு தான் உன்னால வாழ முடியுமா.. சொல்லுடி அப்போ நான் வேணாம்னு சொன்னா நீயும் என்னை விட்டு போய்டுவியா ஹனி.." என்றான் ஏக்கமாய்.

அவன் குரலில் இருந்த ஏக்கம் அவளுக்கு அவனின் வேதனையை நினைவுபடுத்தியது.

கொஞ்ச நேரம் முன்பு அகஸ்டின் சொன்னது அவளுக்கு நினைவு வந்தது.. தன்னவனின் வேதனை நிறைந்த வாழ்க்கை.. இனியும் எதற்காகவும் தன்னவன் ஏங்கக்கூடாது என்ற எண்ணம் பெண்ணவளின் மனதிற்குள் தோன்றியது.

அவனின் கையைப்பிடித்து தன் கண்ணத்தில் வைத்துக் கொண்டு, "இல்லை சத்தியமா என் உயிரே போனாலும் உங்களை விட்டு போகமாட்டேன் அத்தான்.. என் உயிர் போனாலும் அது உங்க மடியில தான் போகனும் அத்தான்.." என்றாள் அழுத்தமாய்.

"தேங்க்ஸ் டி.." என்றான் காதலுடன்.

அதைக் கேட்டு சிரித்தவள், "ம்ம் சரி சரி சீக்கிரம் சொல்லுங்க.. வெயிட்டிங் அத்தான்.." என்றாள் அவசரமாய்.

" என்னடி சொல்லனும்.. அது தான் சொல்லிட்டேனே தேங்க்ஸ் வேற என்னடி சொல்லனும்.." என்றான் கிண்டலாய்.

" விளையாடாதீங்க அத்தான்.. நிஜமாவே நீங்க என்கிட்ட சொல்ல எதுவுமே இல்லையா.." என்றாள் எதிர்பார்ப்புடன்

அவன் யோசித்தானே ஒழிய அவனுக்கு எதுவும் விளங்கவில்லை, "நிச்சயமா எனக்கு தெரியலை ஹனி.. என்ன சொல்லனும்.." என்றான் மீண்டும் கேள்வியாய்.

அவளுக்கோ அழுகை கண்களில் கரை கட்டியது.

"நீங்க இன்னும் எனக்கு பிரபோஸ் பன்னலை அத்தான்.." என்றாள் அழுகையாய்.

அதை கேட்டு சிரித்தவன், "அடியே அழுகாச்சி அடங்குடி.. ஐ லவ் யூ சொன்னா தான் நான் உன்னை விரும்புறதா நம்புவியா.. அப்போ நீ என்னை நம்பளையா.. அந்த ஐ லவ் யூ வைத்தான் நம்புறியா.." என்றான் சற்று கோபத்துடன்.

"அது இல்லை அத்தான்.. ஆனா நீங்க ஒரு தடவை கூட சொல்லலியே.." என்றாள் ஏமாற்றமாய்.

"இங்கே பாரு ஹனி.. நான் சொல்லுவேன்.. ஆனா நான் அதை சொல்லும் நேரம் உன் வாழ்க்கையில நீ மறக்க முடியாத நாளா கண்டிப்பா இருக்கும் சரியா.." என்று அவளின் கண்களை துடைத்தவன்

"ம்ம் எங்க சிரி பார்க்கலாம்.." அவளின் இதழை தன் கைகளால் இழுத்தபடி.

அதை கண்டவள் மனம் திறந்து தன் புன்னகையை சிந்தினாள்.

" ம்ம் தட்ஸ் மை கேர்ள்.. ஓகே இப்படியே சிரிச்சுட்டு போய் அத்தானுக்கு சாப்பாடு ரெடி பண்ணு.. நான் போய் பிரஷ் ஆயிட்டு வர்றேன்.." என்றான் கட்டளையாய்.

" எது நானா.." என்றாள் திகைப்புடன்.

"ஏன் நான் மயக்கத்துல இருக்கும் போது தான் அம்மனி செய்வீங்களா.. இப்போ செய்ய மாட்டீங்களா.." என்றான் நக்கலாய்.

அதைக் கேட்டவளோ அதிர்ச்சியில் விழி விரித்தாள்.

"அப்போ நான் வந்தது உங்களுக்கு முன்னவே தெரியுமா அத்தான்.." என்றாள் விரிந்த விழிகளில்.

அவளின் விரிந்த முட்டைக் கண்ணை கண்டவன் அழகாய் புன்னகைத்து, "அடியே உன்னோட வாசனை எனக்கு தெரியாதா.. ஏன்டி என் பக்கத்துல யாரு இருக்காங்கன்னு தெரியாத அளவுக்கா நான் மடையன்.. நீ வந்த உடனே எனக்கு தெரிஞ்சிடுச்சி டி.. ஆனா கனவோன்னு தான் நினைச்சேன்.. ஆனா தூக்கத்துல என் நெஞ்சில சாஞ்சி படுத்திருந்த பாத்தியா அந்த நிமிஷம் உணர்ந்தேன் டி.. நீ கனவு இல்லை என்னோட நிஜம் ன்னு.. என் நிழலை தீண்டறது கூட உன்னோட நிஜமாத்தான் இருக்குமே ஒழிய வேறு யாரையும் என் நிழலை கூட தீண்ட முடியாது ஹனி.." என்றவளின் கண்ணத்தில் தன் முதல் முத்திரையை அழுந்த பதிந்து விட்டு சென்றான்.

அவன் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்தவள் மனம் மகிழ்ச்சியுடன் இருக்கும் நொடியில் அவனின் முத்தம் பதித்த முதல் காதல் முத்திரை பெண்ணவளை வெட்கம் கொள்ளச் செய்தது.

தன் முகத்தில் நாணப் புன்னகையுடன் தன்னவனுக்கு சூடான சாதமும் மிளகு ரசமும் முன்னே செய்த பருப்பு துவையலுடன் சாப்பாடு பரிமாற காத்திருந்தாள் பெண்ணவள்.

குளித்து விட்டு வந்தவனுக்கு சாப்பாடு பறிமாறி போகும் போது அவனின் முகத்தில் நீர்திவாலைகள் வழிந்திருந்தது.. என்னவென்று பார்க்கும் போது அவன் தலைக்கு குளித்திருந்தது தெரிந்தது.. அதைப் பார்த்தவள் சட்டென தன் சுடிதாரின் துப்பட்டாவை வைத்து துவட்டி கொண்டே,

"ஏனத்தான் உங்களுக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா.. இப்போ தான காய்ச்சல் விட்டிருக்கு.. இப்போ போய் தலைக்கு ஊத்தி இருக்கீங்க.." என்று திட்டிக் கொண்டே துவட்டினாள்.

அவள் செய்தது அவளைப் பொறுத்த வரை அது சாதாரண செயல் தான்.. ஆனால் தனிமையில் தான் தோன்றித் தனமாய் திரிந்தவனுக்கு இந்த அன்பு அக்கறை நேசம் எல்லாம் பாலைவனத்தில் இருப்பவருக்கு தண்ணீர் கிடைத்ததைப் போல் பொக்கீஷமானது.

அவள் செய்ததை ரசித்துக் கொண்டே அவனின் பார்வை அவளின் முகத்தில் வந்து நிலைத்தது.

அவளின் அன்பு கலந்த பாசம் திகட்டாத காதல் அக்கறை கலந்து திட்டு என்று தாயும் தாரமுமாய் அவனின் கண்களுக்கு தோன்றினாள்.

அவள் மேல் தோன்றிய காதல் பன்மடங்காகப் பெருகியது.. அப்பொழுது தான் அவன் புத்தியில் நறுக்கென்று உரைத்தது அவன் செய்த செயலின் வீரியம்.

தன் தலையை துவட்டியிருந்தவளின் கரத்தை தட்டி விட்டவன், "ரூபினி நீ இங்கேயிருந்து போ.." என்றான் கோபத்துடன்.

அவனின் கோபமும் அவளின் முழுப் பெயரை அழைத்த விதமும் அவளுக்கு எங்கோ எச்சரிக்கை மணி அடித்தது.. ஆனால் என்னவென்று தான் அவளுக்கு புரியாமல் கலங்கி நின்றாள் பேதை.

அவளின் கலங்கிய தோற்றம் மனதை வதைத்தாலும் அதை தன் மனதுக்குள் அழுத்தியவன் எழுந்து சாப்பிடாமல் வெளியே சென்று விட்டான்.

அவன் சென்றும் அதிர்ச்சியிலிருந்து வெளி வராமல் அங்கேயே கண்களில் கண்ணீர் வழிய நின்றிருந்தாள் ஆதவனின் ஹனி.


நிழலை வருடும் நிஜம் தொடரும்..🌹


அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ண பட்டூஸ்க்கு நன்றி
 

Samithraa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 16, 2022
131
64
28
Karur
ஆதவன் அகஸ்டீனுக்காக பார்க்குறானோ?
எனக்கு அப்படித்தான் தோணுது. பார்ப்போம் ரைட்டர் என்ன வச்சிருக்காங்கன்னு
 
  • Like
Reactions: ரமா