• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் - 14

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
ஆதவனின் கைகளில் அவனின் கார் பறந்தது என்று தான் சொல்ல வேண்டும். அவனின் கோபம் அந்த வண்டியில் தான் அவனால் காட்ட முடிந்தது. தன் மேல் விளைந்த கோபம் எதற்காக தன்னவளிடம் தன் காதலை சொல்லாமல் மறைத்து நின்றோமோ இன்று அந்த காரணங்கள் எல்லாம் உடைத்து தன்னை அறியாமல் தன்னவளிடம் தன்னை ஒப்படைத்தது கண்டு அவன் மேலே அவனுக்கு அளவு கடந்த கோபம் வந்தது.

நிதானம் இல்லாமல் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான் ஆதவன்.

' ச்சீய் ஆதவ் எப்படி இந்த காரணத்தை மறந்து இன்னைக்கு அவளோடு இப்படி இளைஞ்சி நின்ன.. அந்த அளவுக்கு பலவீனமா ஆயிட்டுயா ஆதவ்.. ஆஆஆ.. என்னடா நீ ஆம்பளை உன்னையே கட்டுப்படுத்திக்க முடியாத அளவு..' தன் மேலே கோபம் கொண்டவனுக்கு ஆத்திரம் தலைக்கேறி புத்தி தடுமாறி நின்றான். கிட்டத்திட்ட பைத்தியக்காரன் போல இருந்தான்.

இங்கே அவன் விட்டு சென்ற இடத்திலே சிலையாய் அமர்ந்திருந்தாள் ரூபினி. அவளால் நடந்ததை நினைத்து வெளி வரமுடியாமல் தவித்து நின்றாள்.

அவனின் திடீர் விலகலுக்கான காரணம் புரியாமல் நின்றாள். தன் காதல் கைக்கூடிய சந்தோஷம் தன்னவனும் தன்னை கண்ட நொடியில் இருந்து தன்னை காதலித்துள்ளான் என்ற மகிழ்ச்சி எல்லாம் சேர்த்து அவளை சிறிகில்லாமல் பறக்க வைத்தது.

ஆனால் ஓரே நொடியில் அவளின் அனைத்து மகிழ்ச்சியையும் அவனின் ஒற்றை சொல் கொல்லாமல் கொன்றது.

எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்திருந்தாளோ மீண்டும் அவளின் அலைபேசி அடிக்கும் போது தான் சுயநினைவு பெற்றாள்.

அதில் அகஸ்டினின் எண் ஒளிர்ந்தது.. கண்களில் கண்ணீர் வழிய போனை எடுத்து ஆன் செய்து காதில் வைத்தாள்.

அந்த பக்கம் அவனோ, "ரூபி மா எங்க மா இன்னும் அவன் வரலை.. அவனோட போனுக்கு கூப்பிட்டா ரிங் போய் கட் ஆகுது.. இங்கே மீட்டிங்க்கு டைம் ஆச்சி மா.." என்றான் கேள்வியாய்.

அவனின் கேள்விக்கு பதில் கூற முடியாமல், "அண்ணா.." என்றாள் அழுகையுடன்.

அழுகையுடன் அவளின் குரல் வரவும் அவனுக்கு அந்த பக்கம் பதற்றம் உண்டானது.

"என்னாச்சி மா எதுக்கு அழற.. அவனுக்கு திரும்பவும் காய்ச்சல் வந்துடுச்சா மா.." என்றான் பதட்டம் தாங்கிய குரலில்.

"இல்லைண்ணா.." என்றவள் அவன் சென்ற பின்பு அங்கு நடந்ததை விவரித்தாள்.

"அவருக்கு திடிர்னு என்ன ஆச்சுன்னு தெரியலை ணா.. ஏன் இப்படி சொன்னாரு எதுவும் புரியலை ணா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு அண்ணா..." என்றாள் அழுதபடி.

அவள் தைரியமானவள் தான்.. ஆனால் அவளவனின் உதாசீனம் அவளை கோழையாக்கியது. நமக்கு பிடித்தமானவர்களின் அன்பும் பிரிவும் கூட சில வேலைகளில் நம்மை பலவீனமாக்குகிறது.

எதையோ யோசித்த அகஸ்டின் மீண்டும் அவளிடம், "ரூபி என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கு தானே.." என்றான் முடிவாய்.

"அண்ணா என்ன இப்படி கேக்குறீங்க.. நாம ஒரு தடவை தான் பேசியிருக்கோம்.. ஆனா எங்க அப்பாவ எந்த அளவுக்கு நம்புறேனோ அதே அளவுக்கு உங்களையும் நம்புறேன் அண்ணா.." என்றாள் தெளிவாய்.

"அப்போ நீ அழுகாத கிளம்பி உன் வீட்டுக்கு போ.. அடுத்த வாரம் உனக்கும் அவனுக்கும் நிச்சயம்.. அடுத்த மாசம் உனக்கும் அவனுக்கும் கல்யாணம்.. போய் உன்னோட கல்யாணத்தை பத்தி கனவு கானு.." என்றான் அழுத்தமாய்.

" அண்ணா ஆனா அவரு.." அதற்கு மேல் என்ன சொல்வது தெரியாமல் இழுத்தாள்.

"அவனோட சம்மத்தோட தான் நடக்கும்.. இது இந்த அகஸ்டின் உனக்கு கொடுக்குற வாக்கு.. என்னோட வாக்கு நிறைவேறும் அது உன் வருங்கால புருஷனுக்கு நல்லாவே தெரியும்.. என்னை நம்பி போ.. நிச்சயம் நான் சொன்னது நடக்கும்.." என்றான் இறுதியாய்.

" அண்ணா அவரு எங்க போயிருகாருன்னு தெரியலையே.. ஏற்கனவே காய்ச்சல் கண்ட உடம்பு ணா.. அது தான் பயமா இருக்கு.. மத்தபடி உங்களை நான் முழுசா நம்புறேன் அண்ணா.." என்றவளின் வார்த்தையில் தன்னவனுக்கு மீண்டும் எதுவும் ஆகிடுமோ என்ற பயம் இருந்தது.

அதை உணர்ந்தவன், "அவன் எங்க இருக்கான்னு எனக்கு தெரியும் மா.. நான் பாத்துக்குறேன் நீ போ.." என்றான் ஆறுதலாய்.

அவனின் உறுதியான வார்த்தையில், "ம்ம் சரிங்க அண்ணா.." என்று தெளிவான மனதுடன் அங்கிருந்து கிளம்பினாள்.

இங்கு ஆதவன் இல்லாமல் அந்த பாரின் கிளையண்ட் மீட்டிங்கை முடித்தவன் தன் காரை எடுத்துக் கொண்டு தன் நண்பன் எங்கு சென்றிருப்பான் என்று தெரியுமாதலால் அங்கே சென்றான் அகஸ்டின்.

அவன் நினைத்தது போல் அவன் அங்கு தான் இருந்தான். அது அவர்களின் கெஸ்ட் ஹவுஸ். கடற்கரையின் அருகே இருந்தது.. அங்கே நீச்சல் குளத்துடன் கூடிய வீடு.. இந்த வீடு அவர்கள் இருவரின் வீட்டிற்கும் தெரியாது.. ஏன் இருவரும் தெரியப்படுத்த விரும்பவில்லை.. இது இவர்கள் இருவருக்குமான மன ஆறுதலுக்கான இடம். அதுமட்டுமன்றி இருவரின் ஆலோசனைக்கான இடம்.

அங்கே தான் நீச்சல் குளத்தின் அருகே அமர்ந்திருந்தான் ஆதவன்.. அழுதிருப்பானோ என்னவோ கண்கள் இரண்டும் சிவந்திருந்தது.


அவன் அருகே வந்தவன் அவனின் தோளில் கை வைத்து அழுத்தினான்.. தன் தோளில் கை வைத்தது யார் என்று பார்க்காமலே அறிந்தவன் அவனின் கையில் தன் கையை வைத்தான் ஆறுதலுக்காய்.

" என்னாச்சு டா.. ஏன் இப்படி இருக்க டா.. உனக்கு என்ன ப்ராப்ளம் சொல்லு டா சரி பண்ணலாம்.. அதை விட்டு உன்னையே நம்பி வந்த பெண்ணை இப்படி துரத்தியிருக்கியே என்ன டா நியாயம்.. ஒரு பெண் பாவம் டா வேணாம் அது நம்ம குடும்பத்துக்கு.. மச்சான் எது இருந்தாலும் சொல்லுடா.. உனக்கு அந்த பெண்ணை பிடிக்கலையா சொல்லு டா.." என்றான் ஆறுதலாய்.

" எனக்கு வேணாம் டா அவ.. ப்ளீஸ் என்கிட்ட எதுவும் கேட்காத.. எனக்கு இந்த கல்யாணம் வேணாம் டா.. எனக்கு அவளை பிடிக்கலை டா மச்சான்.." என்றான் எங்கோ பார்த்து.

"உனக்கு ரூபினிய பிடிக்கலைன்னு என் கண்ணை பார்த்து சொல்லு ஆதவ்.. நான் பேசவே இல்லை.." என்றான் அழுத்தமாய்.

" இல்லை டா எனக்கு பிடிக்க.." அவனின் முகம் பார்த்து சொல்ல முயன்றவன் முழுதாய் சொல்ல முடியாமல் தலைகுனிந்து நின்றான்.

"என் கண்ணை பார்த்து உன்னால பொய் சொல்ல முடியலை இல்லை.. எனக்கு நல்லாத் தெரியும்.. உன்னால என்கிட்ட பொய் சொல்ல முடியாதுன்னு.. சொல்லு என்ன காரணம் அந்த பெண்ணை வேணாம்னு சொல்ல.." அவளை வேண்டாம் என்று சொன்னதுக்கான காரணம் இப்பொழுதே தனக்கு தெரிய வேண்டும் என்ற உறுதி இருந்தது.

" அய்யோ அகஸ் எனக்கு அவளை பிடிக்கும்.. ஆனா கல்யாணம் செய்துக்க முடியாது.. இதுக்கு மேல இதை பத்தி பேசாத டா.." என்றான் கோபமாய்.

"ஏன்.." என்றான் ஒற்றை வார்த்தையாய்.

அவன் காரணம் சொல்லாமல் அமைதியாய் இருக்கவும் அகஸ்டினுக்கு கோபம் வந்தது.

" ஆதவ் ஏன் வேணாம்னு கேட்டேன்.." என்றவனிடம் எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்கவும் கோபம் தாங்காமல் தன் நண்பனை தன்னிடம் திருப்பி அவனின் கண்ணத்தில் அடித்தான்.

அந்த அடியை வாங்கி கொண்டு அமைதியாய் இருந்தானே ஒழிய எதுவும் பேசாமல் அமைதியாய் தான் இருந்தான்.

"ஆதவ் உன் மனசுல என்னடா நினைச்சிட்டு இருக்கே.. அந்த பெண்ணை பத்தி கொஞ்சமாவது யோசிச்சியா டா.. நீ தான் எல்லாமேன்னு உனக்காக காத்திருந்த பெண்ணோட மனசை எப்படி டா உடைக்க முடிஞ்சிது.. இதோ பாரு எந்த ஒரு முடிவும் எடுக்குற வரைக்கும் ஆயிரம் தடவை யோசிக்கலாம்.. ஆனா இது தான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா அதை உயிரே போனாலும் மாத்தக்கூடாது.. என்னை பத்தி உனக்கே நல்லா தெரியும்.. நான் அந்த பொண்ணுக்கு வாக்கு குடுத்துருக்கேன்.. அடுத்த வாரம் உனக்கும் அந்த பெண்ணுக்கும் நிச்சயம்.. அடுத்த மாசம் பத்தாம் தேதி உங்களுக்கு கல்யாணம்..

உனக்கு உண்மையாலுமே என் மேல பாசம் இருந்துச்சின்னா இந்த கல்யாணம் நடக்கனும்.. இது என் மேல சத்தியம்.. நான் வேணும்னு நினைச்சா நீ இந்த கல்யாணம் செய்துகிட்டு தான் ஆகணும்.. இது தான் என் முடிவு.. இல்லை நீ என்ன சொல்றது நான் என்ன கேட்கறதுன்னு நினைச்சா இந்த நிமிஷம் உன்னை விட்டு நான் போயிடுவேன்.. உனக்கே நல்லாத் தெரியும் நான் போனாலும் யாரும் என்னை நினைச்சி வருந்த மாட்டாங்க.. உன்னைத் தவிர.. இல்லை நீயும் அவங்களை போலத்தான் அப்படின்னா இந்த நிமிஷம் இந்த அகஸ்டின் உயிரோடு இருக்கற பொணம் தான்.." என்றவன் கடைசி வாக்கியம் முடிவதற்குள்ளாக அவனின் வாயில் கை வைத்தவன்


"ஏன்டா என்னை விட இன்னைக்கு வந்த எவ்ளோ ஒருத்தி உனக்கு பெருசா போயிட்டாளா.. அவளுக்காக நீ என்னை விட்டுக் கொடுக்குறியா அகஸ்.." என்றான் வேதனையுடன்.

இந்த நிமிடம் இவனுக்காக தான் இறங்கினாள் தனக்கென ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ள மாட்டான் என்பதை உணர்ந்த அகஸ்டின் அமைதியாய் இருந்தான்.

அவன் அமைதி நண்பனை வருத்தத்தில் தள்ள அதே வேதனையுடன், "டேய் நான் அவளை கல்யாணம் செய்துகிட்டேனா அவளோட வாழ்க்கை வீணா போயிடும் டா.. கல்யாணம் பண்ணி அவளோட சந்தோஷத்தை கொல்லனுமா டா.." என்றான் கேள்வியாய்.

என்ன சொல்கிறாய் என்ற பார்வையில் ஆதவனை பார்த்து வைத்தான்.. அவன் சொன்னது உண்மையான காரணம் இல்லை என்று நன்றாகவே அவனுக்கு தெரியும்.. இவன் மறுப்பதில் வேறு எதுவோ காரணம் இருக்கிறது என்பதை உணர்ந்தவன் அமைதியாய் திரும்பி கொண்டான்.

தான் உண்மையான காரணத்தை கூறாமல் தன் நண்பனை தன்னிடம் பேசமாட்டான் என்பதை உணர்ந்தவனுக்கு தன்னுடைய காரணத்தை கூறினாலும் தன்னிடம் பேசமாட்டான் என்று தான் தோன்றியது.
ஆனாலும் வேறு வழியின்றி,

"அகஸ் நீ இப்படி இருக்கும் போது எனக்குன்னு ஒரு வாழ்க்கையை என்னால யோசிக்க முடியலை டா.. எனக்கு நீ எவ்வளவு முக்கியம்னு உனக்கே நல்லா தெரியும்.. அப்படி இருக்கும் போது உன்னை விட என்னோட வாழ்க்கை தான் முக்கியம்னு என்னால நினைக்க முடியலைடா.." என்றான் உண்மையான நண்பனாய்.

தன் நண்பனை நினைத்து சந்தோஷமாய் உணர்ந்தான்.. தனக்காக யோசிக்கும் ஒருவன் இதுவே அவனை புத்துணர்ச்சி கொள்ள செய்தது.


" பைத்தியமா யோசிக்காத மச்சான்.. இப்போ என்ன நான் கல்யாணம் பண்ணிக்கணும் அவ்வளவு தானே.. கண்டிப்பாக பண்ணிக்கிறேன் டா.." என்றான் தன் நண்பனிற்காக.

"அகஸ் நிஜமா சொல்றியா டா.. அப்போ உனக்கும் பொண்ணு பாக்கவா டா.." என்றான் சந்தோஷமாய்.

"ஓஓஓ பாக்கலாமே.. ஆனா நான் சொல்ற மாறி இருந்தா ஒகே.." என்று என்ன கூறினானே அடுத்த நொடி அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டான் ஆதவன்.

அப்படி என்ன சொல்லியிருப்பான்.. அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.



நிழலை வருடும் நிஜம் தொடரும்..🌹

போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ண பட்டூஸ்க்கு நன்றி
 

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
518
150
43
Dindugal
உண்மையான நட்புக்கு இவர்கள் தான் அடையாளம்.
ஆனாலும் ரூபி பாவம் தான்
 
  • Like
Reactions: ரமா

Vimala

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 10, 2023
104
44
28
Trichy
ஆதவனுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா என்ன?
 
  • Like
Reactions: ரமா

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
அழகான நட்பு ❤️
அழகான தந்தைக்கு ஈடான அண்ணன் மற்றும் தங்கை உறவு ❤️

அகஸ்டினுக்கு என்ன பிரச்சினை?
அப்படி என்ன சொன்னான் ஆதவன்கிட்ட?
 
  • Like
Reactions: ரமா