• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் - 16

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
அதிகாலையின் இனிமையான குயில் ஓசையில் தன் தூக்கம் கலைந்தவளுக்கு கண் திறக்க மனமில்லை போலும். அவள் காதுகளில் ஒலித்த லப்டப் ஓசை பெண்ணவளுக்கு கீதமாய் இருந்தது உணர்ந்த பெண்ணவளின் மனது மகிழ்ச்சியில் திளைத்தது.

எப்படி இங்கு வந்தோம் என்னவெல்லாம் பெண்ணவள் யோசிக்கவில்லை.. இரவில் பால்கனி ஊஞ்சலில் படுத்திருந்தவர்கள் இப்பொழுது அறையின் கட்டிலில் படுத்திருக்கிறார்கள்.

இரவில் கண் விழித்தவன் தன்னவள் அமர்ந்தபடியே உறங்கியதை கண்டவன் அவளுக்கு முதுகு வலிக்குமே என்று பூவைப் போல தூக்கி வந்து கட்டிலில் படுக்க வைத்தவன் தானும் கூட படுத்து அவளை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டு ஆழ்ந்து உறங்கினான்.

மன்னவனின் மஞ்சமான நெஞ்சத்தில் படுத்திருந்தவளுக்கு இது போல் காலை வேலையை இனிமையாய் அமைந்ததா என்றால் இல்லை என்று தான் தோன்றும்.. மெல்ல கண் விழித்து தன்னவனை இமை சிமிட்டாமல் பார்த்தவள் அவனின் நெற்றியில் அழுத்தமாய் முத்தம் பதித்து விட்டு எழுந்தாள்.

அவளை பிடித்திருந்தவனின் கரத்தை மெல்ல விலக்கி விட்டு எழுந்தவள் குளியலறை சென்றாள்.

குளித்து முடித்து வந்த பின்பும் அவளவன் நிம்மதியாய் உறங்கி கொண்டிருந்தான். அவனின் தூக்கத்தை கலைக்காமல் வெளியே சென்றவள் அங்கிருந்த பரந்து விரிந்த வாசலை சுத்தம் செய்து அதில் மாக்கோலம் போட்டு விட்டு தோட்டத்தில் இருந்த பூக்களில் மாலை தடுத்து பூஜையறைக்கு சென்று அங்கே சுத்தம் செய்து விட்டு மாலை போட்டு விளக்கேற்றினாள்.

சமையலறைக்கு சென்றவள் அங்கே ஒரு நடுத்தர வயதுடைய பெண்மணி கிச்சனை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.. இவள் வரவும் இவளைப் பார்த்து சிரித்து விட்டு,

"அம்மா உங்களுக்கு காபி போடவா.." என்று கேட்டாள்.

இவளும் புன்னகைத்தபடியே, "உங்க பேரு என்ன அக்கா.." என்றாள் அடுப்பில் பால் கிண்ணத்தை வைத்தபடியே.

அவரும் சிரித்தபடி, "அம்மா என் பேரு சுகந்தி மா.." என்றார்.

"அக்கா எப்படியும் நீங்க என்னை விட வயசுல பெரியவங்களா தான் இருப்பீங்க.. என்னை போய் அம்மான்னு சொல்லி கூப்பிடுறீங்க.. பேரு சொல்லி கூப்பிடுங்க அக்கா.. அப்புறம் இனிமே சமையல் நான் தான் செய்யப் போறேன்.. நீங்க மத்த வேலையை பாருங்க.. இந்தாங்க உங்களுக்கு காபி.." என்று சிரித்தபடி கொடுத்தாள்.

அதை வாங்கிய சுகந்தி, "அம்மா என்ன தான் நீங்க சின்னவங்கன்னு சொன்னாலும் படியளக்குற முதலாளி அம்மாவ அப்படி கூப்பிட கூடாது இல்லைங்களா.." என்றார் உறுதியாக.

" அக்கா உங்களுக்கு சம்பளம் நான் கொடுக்கலை.. என் புருசன் தான் கொடுக்கிறாங்க.. ஆனா நீங்க இனி என்ன அம்மான்னு கூப்பிடிங்கன்னா நான் உங்களை வேலையை விட்டு அனுப்பிடுவேன் பாத்துக்கோங்க.." என்று கிட்டதட்ட மிரட்டினாள்.

"அய்யோ அப்படி எதுவும் பண்ணிடாதீங்க அம்மா.. இனிமே நான் உங்களை ரூபினி அம்மான்னு சொல்லுறேன் ரூபினி மா.." என்றாள் தயங்கியபடி

இப்போதைக்கு இதுவே போதும் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றிக் கொள்ளலாம் என்று எண்ணியவள்,

"சரிக்கா நீங்க குடிச்சிட்டு சமையலுக்கு வெண் பொங்கலுக்கு தேவையானதை ரெடி பண்ணுங்க.. நான் வந்து செய்யறேன்.." என்று விட்டு இரு காபி கப்புகளை எடுத்துக் கொண்டு தங்களின் அறைக்கு சென்றாள்.

அங்கே அவளவன் இல்லை. குளியலைறைக்குள் சத்தம் கேட்டது.. அவன் இருப்பை உணர்ந்தவள் கட்டிலில் இருந்த போர்வைகளை எடுத்து துவைக்க போட்டவள் வேறு பெட் உறையை மாற்றிவிட்டு தலையை துவட்டும் போது பின்னிருந்து இரு வலிய கரங்கள் அவளை அணைத்தது.

அந்த கரங்களுக்கு சொந்தக்காரன் அவளின் பூவுக்கும் பொட்டுக்கும் காவல்காரன் என்பதை உணர்ந்தவளின் முகம் குங்குமமாய் சிவந்தது.

" ஹனி மா இப்படி ஒரு காலையை நான் பார்த்தே இல்லை டி.. நீதானான்னு சந்தேகமா இருக்கு.. பட் இதுவும் நல்லாருக்கு டி.. இனி என்னோட ஒவ்வொரு காலையும் இப்படித்தான் இல்லை.." என்று பேசிக் கொண்டே சென்றவன் அவளின் கூந்தலில் முகத்தை நுழைத்து அதிலிருந்து வந்த மணத்தை நுகர்ந்தான். அவளின் கூந்தலின் மனம் ஆடவனை தடுமாறச் செய்தது.

ஏன் இத்தனை வருடமாய் உறங்கி கொண்டிருந்த அவனின் ஆண்மை ஆடவனை எழுப்பியது. பெண்ணவளின் மேல் தீராத மோகம் ஏற்பட்டது.

அவனும் உயிர் உணர்வுள்ள ஆடவன் தானே. கண்ணுக்கு முன்னே தாலி கட்டிய மனைவி.. அவளை முழுவதுமாய் எடுத்துக் கொள்ளச் சொல்லி ஆடவனின் உடலிலுள்ள ஒவ்வொரு செல்லும் தட்டி எழுப்பியது.

அங்கே உரிமையும் இருந்தது.. உணர்வும் பொங்கியெழுந்தது.. ஆனால் பெண்ணவளை முழுவதுமாய் சொந்தமாக்கி கொள்ள ஆடவனுக்கு தயக்கம் ஏற்பட்டது. அவனின் நண்பனின் நினைவு அவனை முழுவதுமாய் மோகத்தில் மூழ்காமல் நிற்கச் செய்தது.

அவளை பிடித்திருந்த கைகளை தளர்த்தி விட்டவன் அங்கேயிருந்த காபி கப்பை எடுத்துக் கொண்டு பால்கனி ஊஞ்சலில் சென்று அமர்ந்தான்.

அவன் மனதில குற்றவுணர்ச்சி கொள்ளாமல் கொன்றது. இருதலைக் கொள்ளை எறும்பாய் தவித்தான் ஆடவன்.

அவன் கைகளில் குழைந்த பெண்ணவளின் உடல் அவனுக்கு குற்றவுணர்ச்சியை தோற்றுவித்தது.. பேதையவளின் ஆசையை நிராசையாக்கும் அவன் மீதே அவன் கோபம் கொண்டான்.

அவனின் தீடீர் மாறுதல் அவளுக்கு புரிந்தது முதலில் அதை பாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவனின் அருகே சென்று அமர்ந்தாள் காபி கப்புடன்.


அவன் தோளில் கைவைத்து, "ஆது என்னாச்சி.. ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கீங்க.." தன்னவனின் எண்ணத்தை மாற்றும் பொருட்டு.

"ஹனி உன் லைப் நான் பாழாக்குறேன்னு நினைக்குறேன் டி.. நான் பன்றது தப்புன்னு தோனுது.. ஆனா என்ன செய்யறதுன்னு புரியலை டி.. உன்னை தொடும் போது எல்லாம் எனக்கு அகஸ்டினை தனியா விட்டுட்டேன்னு குற்றவுணர்ச்சியா இருக்கு.. உன்னை விட்டு விலகும் போது உன்னை தவிக்க விடறது நெனச்சா நெருப்பாக கொதிக்குதுடி மனசு..

நான் எவ்வளவு பெரிய தப்பு பன்றேன் இல்லை.. எல்லா பொண்ணுங்களும் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் அவங்க வாழ்க்கையை வாழ்வாங்க.
ஆனா நான் உன்னை இப்படியே வச்சிருக்கேன் இல்லைடி.. சாரிடி.." என்றான் குணிந்த தலையுடன்.

"அத்தான் அப்படி எல்லாம் இல்லை.. நான் சந்தோஷமா இருக்கேன்.. நீங்க இப்போ என் புருஷன் அது போதும் அத்தான்.. வேற எதையும் யோசிக்காதிங்க சரியா.. குளிச்சிட்டு வாங்க இன்னைக்கு என் கையால தான் உங்களுக்கு சாப்பாடு.." அவனை சகஜமாக்கிவிட்டு பெண்ணவள் சமைக்க சென்றாள்.

அவள் அவனுக்கு தாயாக தாரமாக மகளாக தோழியாக என அணைத்து இடத்திலும் அவளின் முக்கியத்துவத்தை உணர்த்தினாள்.

அவர்களுக்குள் அவ்வப்போது சிறு சிறு சண்டை வந்தாலும் அடுத்த நொடியில் மறந்து இருவரும் பேசி விடுவார்கள். மனதளவில் நெருங்கிய இருவரும் உடலளவில் நெருங்கவில்லை வருடம் மூன்று கடந்தும்.

அவர்கள் சந்தோஷமாக இருப்பதாக அவளின் பிறந்த வீட்டிலும் அகஸ்டினும் நினைத்தார்கள். அப்பொழுது தான் ஒரு முறை ஆதவனின் தாயார் தன் மகன் வீட்டிற்கு வந்தவர் தன் மருமகளை பார்த்து,

"ஏன் ரூபினி ஏதாவது சந்தோஷமான செய்திய எப்ப சொல்லுவ.. உங்களுக்கும் கல்யாணம் ஆகி ஆச்சு மூனு வருசம்.. இன்னமும் பிள்ளையை பத்தி சேதி சொல்லவே இல்லை.. ஆமா பழுக்குற மரம் தானே நீயி.. இல்லை காய்க்காத மரமோ.. அது தான் அவ்வளவு பெரிய எடுத்த பெண்ணை இப்படி கட்டி கொடுத்தாங்களா.." இன்னும் என்னவெல்லாம் சொல்லியிருப்பாரோ அதே வேலையில் அங்கே காயத்ரி வந்தார்.

அவர் சொல்வதை கேட்ட காயத்ரியின் மனம் மிகவும் வலித்தது. தன் மகளை தனியே அழைத்தவர்,

"ரூபி மா வாடா ஹாஸ்பிடல் ஒரு எட்டு போயிட்டு வரலாம்.. எதாவது குறையிரைந்தாலும் சரி பண்ணிக்கலாம்.." என்று அழைத்தார்.

அவர் கேட்டதும் அவரின் தோளில் சாய்ந்து தன் மனம் வலி தீர அழுது முடித்தாள். அவளும் எத்தனையோ இடங்களில் இந்த பேச்சுக்களை கேட்டாயிற்று. முதலில் வலித்தாலும் பின்பு அதுவே மறுத்து போன உணர்வை கொடுத்தது. ஆனால் இன்று ஆதவனின் தாயார் கொடுத்த வலி மற்றவைகளை பின்னுக்கு தள்ளியது.

தன்னால் ஒரு குழந்தையை சுமக்க முடிந்தும் தான் மல்டி என்ற பட்டத்தை எந்த பெண்ணால் தான் வாங்கி கொள்ள முடியும்.

அந்த வேகத்தில் அவளும் ஆதவனும் எடுத்த முடிவை அவளின் தாயிடம் கூறிவிட்டாள். ஆனால் அதன் பின்பு நிதர்சனம் உறைக்க அவள் தாயிடம்,

"அம்மா ப்ளீஸ் மா இதைபத்தி யாருகிட்டேயும் சொல்லாத மா.. அவருக்கு ரொம்ப கஷ்டமா ஆகிடும் மா.." என்றாள் தன்னவனுக்காக.

அதை கேட்ட காயத்ரிக்கு கோபம் அதிகமானது தன் மகளின் மடத்தனத்தின் மேல்.

"ஏய் ரூபி என்ன இதெல்லாம்.. உன் புருஷன் சொன்னா உனக்கு எங்கேடி போச்சி புத்தி.. அகஸ்டினும் என் புள்ளை தான்டி.. ஆனா நீங்க பண்ண வேலை அவனுக்கு தெரிஞ்சா அவன் உங்களை கொஞ்சுவானா டி.. பைத்தியம் பைத்தியம்.. உன்னை சொல்லி தப்பு இல்லை.. நீ காதல்னு வந்து சொன்னவுடனே எங்க மகளோட ஆசை தான் பெருசுன்னு உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சேன் இல்லை.. எங்களை சொல்லனும் டி.. யாருடி பண்ணுவா இதெல்லாம்.. தியாகம் பண்றீங்களோ ரெண்டு பேரும்.. நான் பேச வேண்டிய இடத்துல பேசிக்கிறேன் டி.." என்று விட்டு வேகமாய் சென்று விட்டார் காயத்ரி.

ரூபினியும் பின்னே அம்மா அம்மா என்று அழைத்தபடி பின்னே செல்ல அவளின் அழைப்பை காதில் ஏற்காதாவாறு அங்கிருந்து சென்று விட்டார் காயத்ரி.

தன் தாயும் தன் மேல் கோபத்தில் இருக்க யாரிடமும் பேசாமல் அவளின் அறைக்கு சென்று அடைந்து கொண்டாள்.

இங்கே வேகமாய் அகஸ்டினை தேடி வந்தார் காயத்ரி.

தன் அறைக்குள் வேலையாய் இருந்தவனின் பார்வை அங்கிருந்த கேமிராவை பார்க்க அங்கே காயத்ரி வருவதை கண்டவன் மனமெல்லாம் மகிழ்ச்சி பொங்க 'அம்மா..' என்ற அழைப்புடன் அவனே அவரை தேடி சென்றான்.

அவர் அவன் அறைக்குள் வருவதற்குள்ளாகவே அவன் வந்து,

"காயூ மா வாங்க வாங்க.. வாட் எ பிளசன்ட் சர்ப்ரைஸ்.." என்று அவரின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு சென்றான்.

" அம்மா என்ன சாப்பிடுறீங்க.. காபி அண்ட் டீ இல்லை ஜீஸ் மா.." என்றான் உபசரிக்கும் விதமாய்.

" கண்ணா அம்மா உன்கிட்ட ஒரு யாசகம் கேட்டு வந்துருக்கேன் டா.. நிறைவேத்துவியா.." என்றான் எதிர்பார்ப்புடன்.


" அம்மா என்ன இது பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க. . இதை செய்யனும்னு உத்தரவு போடுங்க மா.. கண்டிப்பா நிறைவேத்துவேன் மா.." என்றான் பதட்டத்துடன்.

" உன் தங்கை வாழ்க்கையில விளக்கேத்தி வை கண்ணா.." என்றார் கண்ணீருடன்.

" அம்மா நீங்க என்ன சொல்றீங்க.." அவனின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

ஆனால் அவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டான் அகஸ்டின்.

இங்கே தன் வீட்டிற்கு வந்த ஆதவனிற்கு இருண்ட வீடு வரவேற்றது. தான் வரும் நேரம் தன்னை சிரிப்புடன் வரவேற்கும் தன்னவள் இல்லாதது அவனுக்கு பெரிதும் உறுத்தலாக இருந்தது. ஆனாலும் அவளை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வீடு முழுவதும் தேடியவனுக்கு அவள் இல்லாததது பதட்டத்தை உண்டு பண்ணியது.

அப்பொழுது அங்கே வந்த சுகந்தியை பார்த்து,

"அக்கா ரூபி எங்கேக்கா வீடு பூராவும் பாத்துட்டேன்.. ஆனா காணலை.." என்றான் தன் தேடலை தொடர்ந்தபடி.

அதற்கு சுகந்தி கூறிய பதிலில் "ஹனி.." என்று ஆக்ரோஷமாய் அழைத்தான்.



நிழலை வருடும் நிஜம் தொடரும்..🌹

அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ண பட்டூஸ்க்கு நன்றி.
 

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
255
144
43
Theni
நல்லாத்தானே போச்சு..
இந்த ஆதவனோட அம்மாவுக்கு திமிர்
 
  • Like
Reactions: ரமா

Kalaivani shankar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 1, 2024
62
24
8
Karur
இந்த மாமியாரெல்லாம் பாய்சன் வச்சு கொல்லுங்கடா முடில
பையனுக்கு ஒரு கல்யாணத்த செஞ்சி வைக்க முடியல.. புள்ள பெத்துக்கலன்னு மருமகள வந்து வாய் கிழிய பேசிட்டு போகுது..
 
  • Like
Reactions: ரமா

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
காயத்ரி ஒரு அம்மாவா யோசிச்சதுல தப்பே இல்ல
Thanks ma
இந்த மாமியாரெல்லாம் பாய்சன் வச்சு கொல்லுங்கடா முடில
பையனுக்கு ஒரு கல்யாணத்த செஞ்சி வைக்க முடியல.. புள்ள பெத்துக்கலன்னு மருமகள வந்து வாய் கிழிய பேசிட்டு போகுது..
Thanks sis
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
ரூபி ஆதங்கத்துல விஷயத்தை சொல்லிட்டா... இனி ஆதவன் என்ன சொல்லப் போறானோ?