• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் - 17

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
அந்தி மயங்கிய மாலைப் பொழுதில் தனது வீட்டிற்கு வந்த ஆதவனிற்கு இருட்டை தாங்கிய வீடே வரவேற்றது. திருமணம் ஆன இந்த மூன்று வருடங்களில் பெரிதாக அவனை விட்டு அவனவள் எங்கும் சென்றதில்லை. ஏன் அவனின் சொந்தமும் யாரும் இங்கே வந்து தங்கமாட்டார்கள். வந்ததும் கிளம்பிவிடுவார்கள். அவள் இருக்க சொன்னாலும் யாரும் இருக்கமாட்டார்கள். அவனோ யாரையும் இருக்கச் சொல்லமாட்டான்.

ஆனால் இன்று வீடு இவ்வளவு அமைதியாய் இருப்பது என்னவோ அவனுக்கு சரியாய்படவில்லை. வீடு முழுவதும் தன்னவளை தேடியவன் பின்பக்க தோட்டத்திற்கு போக அங்கேயிருந்து சுகந்தி வந்தார்.

அவரிடம் சென்றவன், "அக்கா ரூபி எங்கே.. நானும் வீடு முழுசும் தேடிட்டேன்.. ஆனா நான் வர நேரம் என் முன்னாடி இருக்கறவ இப்போ காணோம் கா.. எங்கேக்கா போனா.." என்றான் கேள்வியாய்.

அவரோ அவனை பார்த்து பரிதவிப்புடன், "தம்பி நான் உங்க வீட்ல வேலை செய்யறவ தான்.. ஆனா நீங்க என்னை வேலை செய்யறவளா பாக்காமா வீட்ல ஒருத்தியா பாத்துருக்கீங்க.. அந்த உரிமையில சொல்றேன் தம்பி.. உங்க அம்மா பேசுனது சுத்தமா சரியில்லை தம்பி.. அந்த பொண்ணு என்னைக்கு இந்த வீட்டுக்கு வந்ததுதோ அதுக்குப்புறம் தான் இந்த வீடும் நீங்களும் சந்தோஷமா இருந்து நான் பார்த்தேன்.. ஆனா உங்க அம்மா.." என்று தயங்கியபடி நிறுத்தினார்.

அவனோ புருவத்தை சுருக்கியபடி, "அக்கா என்ன ஆச்சு.. என்ன சொன்னாங்க என்னோட ரூபியை பார்த்து சொல்லுங்க கா.." என்றான் கோபத்துடன்.

அவன் தாய் வந்ததிலிருந்து நடந்த அனைத்துக் கூறியவர் அதை கேட்டதும் அந்த பொண்ணோட முகத்துல இருந்த சிரிப்பே போச்சி தம்பி. காயத்ரி அம்மாவும் வந்து திட்டுனாங்க ரூபிமாவா. தம்பி உங்களுக்கு நான் புத்தி சொல்ல வேண்டியது இல்லை. அந்த பொண்ணுக்கு புள்ளைங்கன்னா உசுரு தம்பி. எப்பேயாவது வர்ற என் புள்ளைய கொஞ்சும் தம்பி நான் திட்டுனா என்னை திட்டும் தம்பி. ஆனா இன்னைக்கு உங்க அம்மா சொன்ன வார்த்தை ரொம்ப பெருசு தம்பி.. பாத்து சூதனமா நடந்துக்கோங்க. ரூபிமா கோயிலுக்கு போனாங்க தம்பி. வந்துருவேன்னு சொல்லிட்டு போனாங்க தம்பி.." என்று சொல்லிவிட்டு சென்றார்.

தன்னவளின் நிலைக்கு தானும் ஒரு காரணம் என்பதை அறிந்தவனின் இதயம் வலித்தது. அதுவும் இத்தனை நாளாக பெற்ற மகன் உயிரோடு இருக்கிறானா இல்லையா. சாப்பிட்டானா இல்லையா என்பதை பற்றி கவலைப்படாத தன் தாய் தன்னவளை சொல்லால் வதைத்து சென்றது கோபத்தை ஏற்படுத்தியது.

அதே கோபத்துடன் தன் போனை எடுத்தவன் முதல் முறையாக தன் அலைபேசியில் இருந்து தன் தாயை அழைத்தான் அதுவும் வலி கண்ட தன்னவளுக்காக.

அவரிடம் என்ன போசினானோ அடுத்த நிமிடம் அலைபேசி வைக்கப்பட்டதும் கண்களில் கண்ணீர் வழிய சோபாவில் சாய்ந்து கொண்டான்.

உடலில் எந்த விதமான குறைபாடும் இல்லாதவள் தனக்காக தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியவள் தனக்காக தன் குழந்தை ஆசையை தள்ளி வைத்தவள் இன்று கலங்கி நிற்கும் சூழ்நிலைக்கு தானே காரணம் என்பதை உணர்ந்தான் தான். ஆனால் இதற்காகத்தானோ அவளை திருமணம் செய்ய மறுத்தது என்று நினைவில் வந்து போயின.

மனித மனம் குரங்கு தான். இப்படியும் அப்படியும் ஒரு நிலையில் இல்லாமல் தாவி கொண்டே இருக்கிறது. இதில் ஆதவன் மட்டும் என்ன விதிவிலக்கா என்ன..?

அவனவளை பற்றி நன்றாகத் தான் தெரியும்.. அவளின் குழந்தை ஆசையும் தெரியும்.. ஆனால் அவன் நட்பும் அதன் மேல் வைத்த அளவில்லாத நேசமும் தன்னவளை வருந்த வைத்தது.

எப்படி அவளை எதிர்கொள்வது என்ற யோசனையுடன் அமர்ந்திருந்தவனின் கண்ணத்தில் பளார் என்று அறை விழுந்திருந்தது.

யாரென்று பார்த்தவனின் முன்னே அய்யனார் கனக்காய் நின்றிருந்தான் அகஸ்டின்.

எப்பொழுதும் இறுக்கமாய் இருக்கும் அகஸ்டினின் முகம் கோபத்தில் செந்தனலாய் மாறி இருந்தது.. தன் நண்பன் ஏன் தன்னை அடித்தான் என புரியாமல் எழுந்து நின்றான் ஆதவன்.

அவனின் சட்டையை பிடித்த அகஸ்டின்,

"உன்னை எவ்வளவு நம்பினேன்.. எப்படி டா இப்படி பண்ண.. ஒரு பொண்ணோட உணர்வுகளை கொண்ணுட்டு அப்படி என்னடா எனக்காக நீ தியாகம் பன்ற.. இதுக்காகவா டா ரூபினி ய உனக்கு கல்யாணம் செய்து வைத்தேன்.

அந்த பொண்ணு எத்தனை கனவுகளோட உன்னோட வாழ வந்துருப்பா.. ஆனா நீ அவளோட ஆசை கனவு எல்லாத்தையும் குழி தோண்டி புதைச்சிட்டு அப்படி என்ன டா பெருசா நீ வாழுறே..

நிச்சயம் இதை நான் உன்கிட்ட எதிர்பார்க்கலே ஆதவ்.. என் நண்பன் தன்னை நம்பி வந்த பொண்ணோட வாழ்க்கையை பாழாக்கிட்டான்னு நினைச்சாலே என் மனசு வலிக்குது டா..

எந்த நம்பிக்கையில நீ மட்டும் இல்லாம அந்த பெண்ணையும் காக்க வச்சிருக்கே ஆதவ்.. ஒரு வேளை எனக்கு காலம் முழுசும் கல்யாணம் ஆகலைன்னா அந்த பொண்ணோட நிலமையை நினைச்சியாடா இடியட்.." என்று கோபத்துடன் கத்தியவன் மீண்டும் அவனிடம் திரும்பி,

"இனி நீ எப்பவும் என்கிட்ட பேசக்கூடாது.. நானும் பேசமாட்டேன்.. இனி நமக்குள்ள எதுவும் இல்லை.." என்று சொல்லவிட்டு வேகமாய் போனான்.

அவனின் பின்னே சென்று கூப்பிடவும் முடியாமல் சிலையாய் அப்படியே நின்று விட்டான்.

நண்பர்களான இத்தனை வருடத்தில் ஒரு தடவை கூட பேசாமல் இருந்ததில்லை.. ஆனால் இனி தன்னிடம் பேச வேண்டாம் என்று சொல்லி சென்ற தன் நண்பனை விக்கித்து போய் பார்த்தான் ஆதவன்.

மனம் வலிக்க கண்கள் கண்ணீர் பிழிய எவ்வளவு நேரம் அப்படியே அமைதியாய் அமர்ந்திருந்தானோ அவனின் தோளில் மலர் கரம் விழவும் திரும்பினான்.

அங்கே அவனவள் தான் நின்றிருந்தாள் முகத்தில் புன்னகையுடன். இந்த சிரிப்பின் பின்னே இருக்கும் வலியை இத்தனை நாளாய் தான் புரிந்து கொள்ளவில்லையோ என்ற எண்ணம் தான் தோன்றியது.

அத்தனை மலர்ச்சியாய் இருந்தாள் பெண்ணவள்.

தன்னவளையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்தான் ஆதவன். இத்தனை நாளாய் உடலால் அவளுடன் இணையவில்லை. ஆனால் மனதால் வாழ்ந்திருந்தான். அவளின் மனதை முழுதாய் புரிந்ததாய் தான் நினைத்தான். ஆனால் அவன் தவற விட்ட இடம் எது என்பதை அவனது தாயும் நண்பனும் உணர்த்தி விட்டார்கள்.

கண்கள் கண்ணீர் வழிய அவளை இழுத்தனைத்துக் கொண்டான். இத்தனை நாளாய் அணைப்பு இருந்தது என்னவோ உண்மை தான். ஆனால் இந்த அணைப்பு அவளுக்கு வித்தியாசத்தை தோற்றுவித்தது.

அவளை காற்றும் புகாத அளவுக்கு இறுக்கி அணைத்துக் கொண்டான்.

" அத்தான் என்ன ஆச்சி.. ஏன் இப்படி அழறீங்க.. அத்தான் இங்கே பாருங்க என்னாச்சித்தான்.." அவனிடம் கேள்வி கேட்டு கொண்ட தன்னை விட்டு பிரித்தெடுக்க முயன்றாள். ஆனால் அவளால் அவனை பிரித்தெடுக்க தான் முடியவில்லை.

அவளை அணைத்தபடியே அவளின் காலின் கீழே விழுந்தான். அவன் தன் கால்களில் கீழே விழவும் பதறிப் போனவள்,

"ஆது இங்கே பாருங்க என்னாச்சி.. யாராவது எதாவது சொன்னாங்களா.. என்னாச்சி ஆது.." தன்னவனை முடிந்தளவு சமாதானம் செய்ய முயன்றாள்.

ஆனால் அவனோ, "ஹனி என்னை விட்டு போயிட மாட்டியே.. நீ இல்லைன்னா என்னால வாழ முடியாது டி.. உன்னோட அணைப்பு இல்லாம என்னோட நாள் விடியாது.. உன்னோட சிரிச்ச முகத்தை பாக்காம என்னோட பொழுது ஓடாது டி.." அவளை அணைத்தபடியே இன்னும் என்னவெல்லாம் பேசினானோ அதை கேட்ட பெண்ணவள் தான் அவனை சமாதானம் படுத்த முடியாமல் தடுமாறினாள்.


" ஆது உங்களை விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன்.. என் உயிர் போனாலும் அது உங்க மடியில இந்த வீட்டுல தான் போகனும்.. இங்கே பாருங்க உங்க மேல சத்தியமா நான் உங்களை விட்டு விலக மாட்டேன் ஆது.." என்று சமாதானம் செய்தாள்.

தன்னவளின் சமாதானத்தில் ஆடவனும் கொஞ்சம் தெளிந்தான்.

" போங்க போய் ரிபெரஷ் ஆயிட்டு வாங்க.. நாம சாப்பிடலாம்.." என்றாள் புன்னகைத்தபடியே.

அவளின் சொல்லுக்கு கட்டுப்பட்டு இவனும் மேலே தங்களின் அறைக்கு சென்றான்.

அவன் குளித்து விட்டு வருவதற்குள்ளாக அவளும் இருவருக்குமான சாப்பாடு எடுத்துக் கொண்டு அவர்களின் அறைக்கு சென்றாள்.

இருவரும் சாப்பிட்டதும் அவளை அணைத்தபடியே உறங்கி போனான். அந்த தூக்கத்திலும் அவனின் அணைப்பு சிறிதும் தளரவில்லை.
ஏன் அந்த இறுகிய அணைப்பு அவளுக்கு வலி எடுத்தும் அந்த வலியை சுகமாய் ஏற்றுக் கொண்டாள்.

மறுநாள் அவன் எழுவதற்குள்ளாக சமைத்து முடித்தாள் சுகந்தி அப்பொழுது தான் வந்தார். அவளைக் கண்டதும் சிரித்தபடி,

"அம்மா நேத்து சொன்னேன அந்த விசேசத்துக்கு போயிட்டு வந்தேன் மா.. தம்பி போயிட்டாங்களா போயிட்டாங்களா மா.." என்றாள் சிங்கில் இருந்த பாத்திரத்தை துலக்கியபடி.

" இல்லைக்கா அவருக்கு என்னாச்சின்னு தெரியலை.. நேத்தில இருந்து சரியில்லை.." என்றாள் வேதனையுடன்.

"ஏனம்மா என்னாச்சி.. நேத்து அகஸ்டின் தம்பி வந்துருந்தாரே அவரு இவரை சரி பன்னிருப்பாருன்னு இல்லை நினைச்சேன். ." என்றார் எதையோ யோசித்தபடி.

" என்னக்கா சொல்றீங்க.. அண்ணா வந்தாரா.. இவரு எதுவும் சொல்லலையே.." என்றாள் பதட்டத்துடன்.

"ஆமாம்மா.. நேத்து நீங்க வெளியே போனிங்க இல்லை.." என்று நேற்று நடந்ததை கூறினார்.

அவர் கூறியதை கேட்டவளுக்கு தன்னவனின் மனம் குற்றவுணர்ச்சியில் தவிப்பது நன்றாக தெரிந்தது.

எழுந்து தங்களின் அறைக்கு சென்றவள் தன்னவனை காண சென்றாள்.

அங்கே அவனோ எங்கேயோ வெளியே கிளம்பியபடி கண்ணாடி முன் நின்றிருந்தான்.

அதைக் கண்டவள் எப்போதும் போல் தன்னவனை ரசித்திருந்தாள்.

கண்ணாடியின் வழியே தன்னவளை கண்டவன் அவளின் கண்களில் தெரிந்த காதலிலும் ரசிப்பிலும் தன்னை மறந்திருந்தான்.

எத்தனையோ முறை உணர்ச்சி மேலிட்டால் தன்னவளை கண்டிருக்கிறான். ஆனால் அப்பொழுது தன்னை கட்டுபடுத்தும் வழி இருந்தது.
ஆனால் இப்பொழுது அவளுடன் சேர்ந்து வாழ்வை தொடங்கிய வேண்டும் என்ற எண்ணம் வந்ததும் அவனின் உணர்வுகள் பேயாட்டம் போட்டது.

வேண்டாம் இப்பொழுது கட்டுப்படுத்திக் கொள். இன்று ஒரு பகலை கடத்தினால் போதும் என்ற எண்ணத்துடன் அவளைக் கடந்து அவளிடம் பேசாது சென்றான்.

தன்னை கடந்து சென்றவனை விழியகலாமல் பார்த்திருந்தாள் பெண்ணவள். ஏனோ அவனை தடுக்கும் எண்ணம் அவளுக்கு தோன்றவில்லை. அப்படியே நின்றிருந்தாள் பெண்ணவள்.

எதை எதையோ யோசித்தவளுக்கு அவன் போனதும் தெரியவில்லை. மீண்டும் அவளவன் வந்ததும் அறியவில்லை.

அவளிடம் வந்தவன் அவளிடம் ஒரு புடவையை குடுத்து கீழிருக்கும் ரூமில் குளித்து வரச் சொன்னவன் தானும் குளித்து பட்டு வேட்டி சட்டையில் வந்தான்.

குளித்து வந்தவளுக்கு தானே புடவை கட்டி அழகாய் எளிமையான அலங்காரம் செய்தான்.

அவளை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றான். அங்கே இருவரின் பெயரிலும் அர்ச்சனை செய்தவன் அவளை வீட்டுக்கு அழைத்து வந்தான். வழியில் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

இருவரும் ஒரு சேர அவர்களின் அறைக்கு சென்றனர். அங்கே இருந்த ஏற்பாட்டில் பெண்ணவளுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் வெட்கமும் ஒருங்கே வந்தது.



நிழலை வருடும் நிஜம் தொடரும்...🌹



அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ண பட்டூஸ்க்கு நன்றி
 

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
255
144
43
Theni
அகஸ்டீன் இப்போ தான் சரியா பண்ணிருக்கான்.
இனிமேலாசும் இந்த ஆதவனுக்கு புத்தி வருதான்னு பார்க்கலாம்
 
  • Like
Reactions: ரமா

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
ரூபியோட மனசையும் புரிஞ்சிக்கிட்டான். இனியாவது அகஸ்டின் பேசுவானா?
 
  • Like
Reactions: ரமா