• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் -18

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
தன் கணவனின் நடவடிக்கையில் இருந்த மாற்றத்தை உணர்ந்தும் அவனிடம் எதுவும் கேட்காமல் அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்றாள் பெண்ணவள்.

இருவரும் கோயிலுக்கு சென்று வந்ததும் அவளை ரூமுக்கு அனுப்பாமல் கீழேயே அவன் கைகளால் சமைத்து இருவரும் உண்டனர்.

சாப்பிடும் போதும் அவளிடம் அவன் எதுவும் பேசவில்லை. ஏன் அவளும் பேசவில்லை. ஆனால் பார்வையை அவனிடம் இருந்து திருப்பவில்லை.

அவளின் பார்வையை உணர்ந்திருந்தாலும் எதுவும் பேசாமல் அவளை பார்க்காமல் அமைதியாய் இருந்தான்.

அவளை அழைத்துக் கொண்டே தங்களின் அறைக்கு சென்றான். அங்கே அவர்களின் முதல் இரவுக்கான அலங்கார ஏற்பாடுகள் நடந்து இருந்தது.

அதைப் பார்த்தவளுக்கு அதிர்ச்சி ஆச்சரியமும் வெட்கமும் ஒருங்கே இணைந்து வந்தது. ஆனால் அடுத்த நொடி ஏன் என்ற கேள்வி தான் வந்தது. அந்த கேள்வியான பார்வையுடன் தன்னவனை திரும்பி பார்த்தாள். அவளின் பார்வையின் பொருளை கண்டவன் அவளருகே வந்து அவளின் கையைப் பிடித்துக் அதை தன் கண்ணங்களில் வைத்துக் கொண்டு,

"ஹனி சாரி டி.. நான் தப்பு பன்னிட்டேன்.. அதை உணர்ந்துட்டேன்.. இன்னைக்கு நமக்கு முதல் இரவு.. ஆனா எப்பவோ நடந்திருக்க வேண்டியது.. என்னோட பிடிவாதத்துல தள்ளி வச்சிட்டேன்..

ஆனா அந்த பிடிவாதம் உன்னை இந்தளவுக்கு வருத்தும்னு எனக்கு தெரியலை டி.. தாயாக எல்லா தகுதியும் இருந்தும் நான் தள்ளி நின்ன கொடுமைக்கு இந்த உலகம் உனக்கு மலடின்னு பட்டம் கொடுக்கனுமா.. என்னடி நியாயம்.. போதும் டி எனக்காக நீ பண்ண தியாகம்.. மனசை அரிச்சி என்னை கொல்லுது ஹனி மா..

எனக்கு இந்த குற்றவுணர்ச்சி வேணாம் டி.." என்றவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.

அதைக் கண்டு பதறியவள் துடைக்கப் போக அதை தன் கரம் கொண்டு தடுத்து நிறுத்தி விட்டான்.

"அச்சோ அத்தான் என்ன இது சின்ன பிள்ளை மாறி.. யாரோ எதுவோ சொல்லிட்டு போறாங்க.. அதுக்காக உங்களுக்கு முழு விருப்பம் இல்லாம என்னோட இணைய போறீங்களா..

ஆது தாம்பத்யம்னா என்னன்னு நினைச்சிட்டீங்க.. மத்தவங்களுக்காக நாம வாழ்க்கையை தொடங்கிய கூடாது.. நமக்காக தான் நம்ம வாழ்க்கையை தொடங்கனும்.. பரவாயில்லை விடுங்க.. போய் படுங்க.." என்று அவனை விட்டு விலகியவளை தன் கைகளில் அள்ளிக் கொண்டான்.

தன்னை கைகளில் அள்ளி எடுத்தவனின் தோள்களில் மாலையாய் தன் கரங்களை போட்டவள் அவனின் பார்வையை சந்தித்தாள்.

அதில் காதல் இருந்தது.. காமம் இருந்தது.. வலி இருந்தது.. விரக்தி இருந்தது.. அனைத்தையும் தாங்கிய குற்றவுணர்ச்சி அவனின் விழிகளில் கண்ட பெண்மனம்,

"ஆது என்கிட்ட எதாவது மறைக்குறீங்களா.." என்றாள் கேள்வியாய்.

அவளின் தலையோடு தன் தலையை முட்டியவன்,

"ச்சீய் இல்லடி.. உனக்கு தெரியாம அப்படி என்ன பெருசா நான் மறைக்க போறேன்.." என்றாள் காதல் வழியும் கண்களுடன்.

"அப்போ ஏன் ஆது அகஸ்டின் அண்ணா வந்ததை மறைச்சீங்க.." என்றாள் கேள்வியாய்.

அவளின் கேள்வியில் சற்று தடுமாறியவன், "இல்லைடி அவன் என் மேல ரொம்ப கோபமா இருக்கேன்.. பேசாத மூஞ்சியிலே முழிக்காதன்னு சொல்லிட்டு போய்ட்டான் டி.. நம்ம விஷயம் அவனுக்கு தெரிஞ்சிருக்கு டி.
அந்த கோபத்துல இருக்கான்.. ரெண்டு நாள் போகட்டும்.. அப்புறம் பேசிக்கிறேன்.. இப்போ அவன் வந்தான்னு சொன்னா நீ ஏன் என்னை பாக்காம போனாருன்னு கேள்வி கேட்ப.. அது தாண்டி சொல்லலை.." என்றான் வலியுடன்.

" அண்ணனுக்கு எப்படி ஆது தெரிஞ்சிது.. நீங்க எதாவது சொன்னீங்களா.." என்றாள் கேள்வியாய்.

" இல்லைடி நான் சொல்லலை.. சரி அதை விடு.. உனக்கு ஓகே வாடி.." என்றவனின் பார்வை மனைவியின் மேல் இருந்த காதலும் மோகமும் கலந்திருந்தது.

அவனின் பார்வையில் இருந்த மாற்றம் பெண்ணவளை வேறு எதுவும் சிந்திக்க விடாமல் வெட்கம் சூழ்ந்திருந்தது.

அதே வெட்கத்துடன் அவன் மார்பில் தலைசாய்ந்தவள், "அத்தான் உங்க முழு மனசோட தான் நம்ம தாம்பத்யம் நடக்கனும்.. அதுல கொஞ்சம் உறுத்தலா இருந்தாலும் வேணாம் அத்தான்.. நான் காத்திருக்கேன் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை அத்தான்.." அப்பொழுதும் அவளுக்கு அவளவனின் விருப்பம் தான் பெரிதாயிருந்தது.

தன் விருப்பத்தை மட்டுமே முன்னிறுத்தும் தன்னவளின் காதல் முன்னே வேறு எல்லா திரைகளும் அவனை விட்டு விலகின.

அவளின் காதுக்கு அருகில் சென்றவன், "ஹனி ஐ நீட் யூ.. ஐ லவ் யூ.. " என்றான் மென்மையாய்.

அவனின் காதலை பெண்ணவள் உணர்ந்திருந்தாள் இத்தனை நாட்களான வாழ்வில்.. ஆனால் அவர்களின் தாம்பத்யம் மூன்று வருடங்களுக்கு பின்பு இன்று தான் நடைபெறுகிறது.

"ஹனி எனக்கு மனப்பூர்வமான சம்மதம் டி.. உன்னோட சேர்ந்து வாழனும்.. நம்ம குழந்தை இந்த பூமிக்கு வரனும்.. என் வாழ்க்கை முழுமைக்கும் எனக்கு நீ வேணும் டி.." என்று அவளின் நெற்றியில் ஆரம்பித்தவன் படிப்படியாக அவளை தன் கரங்களால் தொட்டு ஆள ஆரம்பித்தான்.

மெதுவாய் அவளின் அங்கங்களில் விளையாண்ட அவன் கைகளில் பற்றுக் கொடியாய் அவனை பற்றிக் கொண்டாள்.

அவனின் இந்த மென்மை புதிது. அவனின் கோபம் கண்டிருக்கிறாள். மென்மையை கண்டிருக்கிறாள். ஆனால் அவனின் காமத்துடன் கூடிய காதலின் மென்மை அவளை கவர்ந்திழுத்தது.

அவனின் கைகளில் மெழுகாய் உருகினாள் பெண்பாவை.. உச்சி முதல் உள்ளங்கால் வரை பெண்ணவளை முத்தத்தில் குளிப்பாட்டினான்.. அவளின் கால்விரல்களை கைகளால் பிடித்து அழுத்தி அதில் இதழ் பதித்தான்.. பெண்ணவளின் முகத்தை பார்த்துக் கொண்டே அவளின் காது மடல்களை கடித்தான்.. பெண்ணவளின் சூடான மூச்சுக்காற்று ஆடவனை நிலைகுழையச் செய்தது.

இத்தனை நாளாக கட்டிக் காத்த ஆண்மையை தன்னவளிடம் முழுதாய் தாரை வார்க்க துணிந்தான் ஆடவன்.

அவளின் உடைகளுக்கு முழுதாய் விடுதலை கொடுக்க அவளின் ஜாக்கெட்டில் கை வைக்கும் நேரம் பெண்ணவள் ஆடவனை தடுத்தாள்.

அவளின் விழியில் கழந்தவன் ஏன் என்ற யோசனையுடன் அவளைப் பார்த்தான்.

அவளோ அவனின் முகம் பார்க்க நாணி, "அத்தான் லைட் ஆஃப் பண்ணுங்க.." என்றாள் அவனின் நெஞ்சில் முகம் புதைத்தப்படி.

"ஏன்டி உன்னை நான் வெளிச்சத்துல பாக்க கூடாதா.. நான் பார்க்க தானே இப்படி பொத்தி வச்சிருக்க.. இருட்டுல என்னடி தெரியும்.. உன் அழகான.." அடுத்து என்ன கூறியிருப்பானோ அவனின் வாயை தன் கைகளை வைத்து மூடினாள்.

" அத்தான் போதுமே.." என்றவளின் முகம் அந்தி வானத்திற்கும் போட்டியாய் சிவந்திருந்தது.

அவளின் கையை விலக்கி விட்டவன், "இந்த அழகான வெட்கபடற முகத்தை பார்க்க முடியுமான்னு கேட்டேன் டி.." என்றவனின் பார்வை சொன்ன செய்திக்கும் அவனின் வாய் வார்த்தைக்கும் நிச்சயம் யாதெரு சம்பந்தமும் இல்லை.

அவளின் காதுகளில் அந்தரங்க ரகசியம் பேசி அவளின் மேனி சிலிர்க்க வைத்தான்.

அவனின் பேச்சு தாங்காமல் அவனின் இதழுக்கு தன் இதழால் பூட்டு போட்டாள் பெண்ணவள்.

அவளின் செய்கையை தனக்கு சாதகமாக்கி கொண்டான் ஆடவன்.
அவனின் மோகக் கடலில் முழ்கிட துடிக்கும் படகாய் மாறினாள் பெண்ணவள்.

அவன் கைகள் செய்த வேலையில் இருவரின் உடலில் இருந்த துணிகளும் சுத்தமாய் விலகியிருந்தன.

அதற்கு மேலும் தாளாது பெண் மனம், "அத்தான் ப்ளீஸ்.. லைட் ஆஃப் பண்ணுங்க.." என்றாள் மயக்கத்துடன்.

அதற்கு மேலும் தன்னவளின் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து லைட்டை ஆஃப் பண்ணியவன் அதற்கு மேலும் அவளை விடாது கூடலில் முக்குளித்தான்.

அதற்கு மேலும் அந்த அறையில் கேட்டது அவர்களின் முத்த சத்தமும் கொலுசு சத்தமும் அந்த அறையை நிறைத்திருந்தது.

அவர்களின் முதல் கூடல்.. பெண்ணவளுக்கு வலியை தந்தாலும் தன்னவனின் சந்தோஷத்தில் மனம் நிறைந்தாள்.


செங்கதிரோன் சுடர்விட முனையும் நேரத்திலே பெண்ணவளுக்கு விழப்பு வந்தது. எப்போதும் எழும் நேரத்தை விட இன்று சற்று நேரம் தான் ஆகிவிட்டது.

கண் விழித்தவளின் அருகே அவளவன் நிம்மதியாய் உறங்கியிருந்தான். உறக்கத்தில் ஏதோ கனவு கண்டானோ என்னவோ உதட்டில் சிறிதாய் புன்முறுவல் பூத்திருந்தது.

அவனையே கண் இமைக்காமல் காதலுடன் பார்த்திருந்தாள். அப்பொழுது தான் உணர்ந்தாள் அவளின் உடலில் சிறிதும் துணியில்லை என்று. அவளின் வெற்று உடலில் மன்னவனின் கரங்கள் அணைத்திருந்தது.

தன் உடலில் போர்வையை சுற்றிக் கொண்டவள் குளியலறைக்கு சென்று விட்டாள்.

அவள் குளித்து வந்த பின்பும் அவளவன் எழவில்லை.. அவனைப் பார்த்து புன்னகைத்தபடியே இவள் வாசலுக்கு சென்று தண்ணீர் தெளித்து கோலம் வரைந்தாள்.

எங்கோ தூரத்தில் ஏதோ ஒரு வீட்டில் மெலிதாய் பாடல் ஓடிக் கொண்டிருந்தது.. அதை கேட்டவளின் மனம் நிறைந்து தான் போனது.

வானில் விடி வெள்ளி
மின்னிடும் மின்னிடும் நேரம்
கனவாய் கலைந்தாலே
கண்மணி கண்மணி தாரம்

அதிகாலை சுப வேளை
உறங்காதே கண்ணா
எனைப் பார்த்து
இமை மூடி நடிக்காதே மன்னா
போதும் வா என் ராஜாவே…

பாசமாய் இரு ஜீவனும்
அன்பை பொழிந்து பொழிந்து பழகும்
நேசமாய் நல்ல கவிதைகள்
மெல்ல நெருங்கி நெருங்கி எழுதும்

ஓஓ பால் நிலா
நல்ல பிறவியாய்
பிள்ளை வடிவில் மடியில் துலங்கும்
பல்கலை கொஞ்சும் கழகமாய்
இந்த இனிய குடும்பம் விளங்கும்

தென்றல் வந்து
தொட்டில் கட்டும்
இல்லம் ஒரு கோவில்
தெய்வம் என மங்கை தொழும்
மன்னன் அதன் காவல்


அந்த பாடலில் மெய்மறந்து நின்றவளை பின்னிருந்து இரு கரங்கள் இறுக்கமாய் அணைத்துக் கொண்டன.


அந்த கரங்களுக்கு செந்தமானவன் யார் என்பதை உணர்ந்திருந்தாள் பேதையவள்.

அவளின் காதுகளில் மெதுவாய் முத்தமிட்டவன், "ஹனி சாரி டி உன்னை மூனு வருசமா காக்க வச்சதுக்கு.. ஆனா என்னால உனக்கு எத்தனை அவமானம் இல்லை.. மனசே தாங்கலை டி.. உன்னை எல்லார் முன்னாடியும் மகாராணியா வச்சிருக்கணும்னு நினைச்சேனே தவிர இதை தள்ளி வச்சா நீ எந்தளவுக்கு பாதிக்கபடுவேன்னு தெரியலை டி..

ஆனா ஒன்னு இந்த மூனு வருசமா உன்னை ரசிச்சேன்.. ஆனா இப்போ முழுசா ருசிச்சி பாத்தேன் டி.. நிஜமா சொல்லவா நீ அவ்வளவு அழகு டி.. ஐ லவ் யூ ஹனி.." மேலும் அவளின் காதுகளில் எதையோ முனுமுனுத்தவனை பெண்ணவளின் கரங்கள் அப்படியே அடைத்து விட்டது.


" அய்யோ அத்தான் போதும் காலையிலே ஆரம்பிக்காதீங்க.. நான் சமைக்க போறேன்.. நீங்க போய் குளிச்சிட்டு வாங்க.. ஆபிஸ்க்கு டைம் ஆச்சி இல்லை.." என்றாள் அவனை விரட்டும் முயற்சியுடன்.

"மேடம் உங்க உடன்பிறப்பு என்னை டெர்மினேட் பண்ணிருக்காரு ஒன் வீக்குக்கு.. சோ இந்த ஒன் வீக் உங்களோட மட்டும் தான்.. வேற எங்கேயாவது போனேன்னு தெரிஞ்சிச்சி என்னை இன்னும் வச்சி செஞ்சிருவான் டி அந்த இடியட்.. சோ இனி என்னோட வேலை என் பொண்டாட்டியை கவனிக்கிறது தான்.." என்று பெண்ணவளை கைகளால் அள்ளிக் கொண்டவன் தங்களின் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

அவளின் சிந்தனையில் இருந்தவளை தோளில் அழுந்த தட்டியது ஒரு கரம். யாரென்று பார்த்தவளுக்கு விடையாய் அவளவன் தான் நின்றிருந்தான்.


" என்ன மேடம் கனவுலாம் முடிஞ்சிதுன்னா கொஞ்சம் எறங்கலாம். . என் மாமனார் வீடு வந்துருச்சி டி.. ஆமா அது என்ன பழசு நினைச்சு பாக்கும் போதெல்லாம் இந்த முகம் ரோஜா பூவாய் பூத்து குலுங்குது.. இதை பாக்கும் போது நம்மோட பர்ஸ்ட் நைட் தாண்டி ஞாபகம் வருது.. கல்யாணம் ஆகி இத்தனை வருசம் ஆச்சி ஆனா மேடம் அப்போ எப்படி வெட்கபட்டிங்களோ இப்பவும் அப்படியே தாண்டி இருக்கற.. அதே ஸ்டெரக்சர்.. என்ன இப்பெல்லாம் என் பொண்ணு இருக்கறதால என்கிட்ட இருந்து நீ தப்பிச்சிடற.." தன்னவளிடம் சரசம் பேசினான்.

"அய்யோ போங்கத்தான்.." என்று வெட்கப்பட்டுக் கொண்டே உள்ளே ஓடினாள்.

அவள் சென்றதும், "சாரிடி ஹனி.." என்றான் எப்போதும் போல்.



நிழலை வருடும் நிஜம் தொடரும்... 🌹



அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ண பட்டூஸ்க்கு நன்றி
 

Mayuri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 2, 2024
36
11
8
Bangalore
சூப்பர் 👌 அடுத்த எபிக்கு வெயிட்டிங்
 
  • Like
Reactions: ரமா