• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் -19

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
185
201
43
Salem
பழைய நினைவுகளில் இருந்து மீண்டவளை ஆதவனின் சரசப் பேச்சு முகம் முழுவதும் குங்குமம் பூசியது போல் சிவந்தது. அதைக் கண்டவனின் முகமும் மலர்ந்திருந்தது.

அவள் சென்றதும் வழக்கம் போல் அவளிடம் மனதார மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.

இது அன்றாடம் நடப்பது தான். அவளிடம் நேரடியாக கூறினாள் "உங்களுக்கு வேற வேலையே இல்லையா ஆது.." என்று திட்டுவாள்.

அதனால் தான் இந்த மனதோரம் மன்னிப்பு. சும்மாவா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் அல்லவா அவளை தொடாமல் தண்டனை கொடுத்தது. அதற்காக தான் இந்த மன்னிப்பு.

மீண்டும் அவன் பழைய நினைவுகளுக்குள் செல்வதற்குள்ளாகவே, "அடடே வாங்க மாப்பிள்ளை.. ஏன் இங்கேயே நிக்குறீங்க.." என்ற ராபர்ட்டின் குரலில் தன்னுணர்வு பெற்றவன்,

"இல்லைங்க மாமா வண்டிய நிறுத்திட்டு போகலாம்னு.. எங்க வெளியே போனீங்களா மாமா.." என்றான் இயல்பாய்.

"ஆமா மாப்பிள்ளை நீங்க வரேன்னு சொன்னா போதும் உங்க மாமியா என்னை வேலை வாங்காம இருக்கமாட்டா மாப்பிள்ளை.. இதை நீங்களும் அனுபவிக்கனும் மாப்பிள்ளை உங்க பொண்ணு கல்யாணம் முடிஞ்சு உங்க வீட்டுக்கு வரும் போது.." என்று இயல்பாய் மருமகனின் தோள் மேல் கைபோட்டு அழைத்து சென்றார்.

அது என்னவோ இந்த மாமனார் மருமகனின் உறவில் அலாதி சுகம் கண்டனர் இருவரும்.

இருவரும் பேசிக் கொண்டே உள்ளே வரவும் அவனின் மாமியார் முன்னே வந்து, "ஏங்க எப்போ கடைக்கு போனேள்.. இப்போ தான் வரேள்.. கொடுங்கோ பையை.." என்று தன்னவனை முறைத்தபடி வாங்கி கொண்டார் காயத்ரி.

" அத்தை இப்போ எதுக்கு மாமாவா திட்டுறீங்க.. அவரு இப்போ தான் வந்தாரு.. நாங்க பேசிக்கிட்டே வந்தோம்.. அவ்வளவு தான்.." என்றான் தன் மாமியாரிடம் மாமனாருக்கு ஆதரவாக.

" வாங்கோ மாப்பிள்ளை.. நீங்க ஒருத்தர் தான் மாப்பிள்ளை இவருக்கு சப்போர்ட்டுக்கு இருக்கேள்.. சரி நீங்க பேசுங்க.. நான் போய் மீதம் இருக்கறதை சமைச்சி முடிச்சிடுறேன்.." என்று இருவரிடமும் கூறிக் கொண்டே சமையலில் மீதம் உள்ள வேலையை பார்க்க போனார்.

போகும் அவரை பார்த்து சிரித்தவன் தன் மாமனாரிடம் திரும்பி, "ஏன் மாமா டேமேஜ் அதிகமாயிடுச்சோ.." என்றான் புன்னகையுடன்.

"அதெல்லாம் எப்பவும் இருக்கறது தானே மாப்பிள்ளை.. புதுசாவா நடக்குது.. இந்த பொம்பளைங்க எத்தனை தான் புருசன் வேலை செஞ்சாலும் எதுவுமே செய்யாத மாறி சண்டை போடுறது.. உங்களுக்கு நடக்கும் மாப்பிள்ளை.. அப்போ தெரியும் இந்த மாமாவோட மகிமை.." என்றபடி சோபாவில் சென்று அமர்ந்தார்.

அவருடனே சென்று அமர்ந்தவன், "அது என்னவோ உண்மை தான் மாமா.." என்றான் சிரிப்போடு.

இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அங்கே மாமன் மருமகனின் உறவு இல்லை. தந்தை மகனின் உறவை கண்டாள் ரூபினி.

ஆதவனுக்கு நன்றாக விவரம் தெரியும் முன்பே அவன் தந்தை இறந்து விட்டார். அதிலிருந்து குடும்ப பாரத்தை சுமந்தவனுக்கு மனதின் பாரம் தீர்க்கவோ இயல்பாக யாரிடமும் பேசிவிட மாட்டான்.

ஆனால் ராபர்டிடம் மட்டும் அந்த வேறுபாடு மாறும். அவரிடம் இயல்பாய் பேசுவான் கிண்டலடிப்பான். ஏன் சில நேரங்களில் இருவரும் சேர்ந்து செய்யும் கிண்டலில் தாயும் மகளும் தங்கள் இணைகளை முறைத்த நாட்களும் உண்டு.

ஆனால் ரூபினியின் மனம் மகிழ்ந்தே இருக்கும். தன்னவனின் இந்த புதிய அவதாரம் பெண்ணவளுக்கு சந்தோஷத்தை கொடுத்தது.

ஆனாலும் அவர்கள் செய்யும் அழிச்சாட்டியத்தில் எதுவும் செய்ய இயலாமல் அமைதியாய் முறைப்பாள் உள்ளுக்குள் ரசித்துக் கொண்டு.

இருவரும் பேசிக்கொண்டிருக்கும் நேரம் வீட்டின் வெளியே கார் நிற்கும் சத்தம் கேட்டது.

ஆதவன் யார் என்று பார்க்க எழுந்தவனை நிற்க வைத்த ராபர்ட், "மாப்பிள்ளை என் பையன் தான் வரான் உக்காருங்க.." என்று தன்னுடனே அமர்த்திக் கொண்டார்.

அங்கே கோட் பட்டனை கழட்டியவாறு வந்தான் அகஸ்டின்.

"டேய் மச்சான் நீ வர்றதா சொல்லவே இல்லை.." என்று சந்தோஷமாய் தன் நண்பனை வரவேற்றான்.

அதற்கு அவனோ, "என் வீட்டுக்கு வர்றதுக்கு உன்கிட்ட எதுக்குடா சொல்லனும்.. என்னப்பா நான் சொல்றது சரிதானே.." தன் நண்பனிடம் ஆரம்பித்தவன் ராபர்டிடம் முடித்தான்.

அவரோ புன்சிரிப்புடன், "ஆமா பா.." என்றார் இயல்பாய்.

"மாமா யூ டூ புரூட்டூஸ்.. உங்க பையன் வந்ததும் இப்படி கட்சி மாறிட்டீங்களே.. இதெல்லாம் நியாயமா.. இதை கேட்க யாருமில்லையா.." என்றபடி புலம்பினான் ஆதவன்.


"இங்கே யாருமில்லை மாப்பிள்ளை.. நீங்க வெளியே இருந்து தான் யாராவது கூட்டிட்டு வரனும்.." என்றபடி கையில் காபி டிரேயுடன் அங்கே வந்தார் காயத்ரி.

ஆடவர் மூவருக்கும் காபி கப்பை கொடுத்தவர் அவரும் ஒரு கப்புடன் அங்கே அமர்ந்து கொண்டார்.

அப்பொழுது கையில் காபி கப்புடன் ரூபினியும் அங்கே வந்தாள்.

அவள் வந்து அகஸ்டின் அருகே அமர்ந்து கொண்டவள், "ஏன் அண்ணா லேட் ஆயிடுச்சி.." என்று கேட்டாள்.

"இல்லை டா இவனும் வந்துட்டான்.. ஒரு முக்கியமான மீட்டிங் டா.. அது தான் கொஞ்சம் லேட் ஆயிடுச்சி.. ஆமா எங்கே ஆரா குட்டி.." என்றான் கண்களால் தேடியபடி.


" அண்ணா அவ நீங்க லேட்டா வந்தீங்கன்னு கோபத்துல ரூம்ல இருந்துட்டு வர மாட்டேங்குறா அண்ணா.." என்றாள் சிரித்தபடி.

" ஓஓ அப்படியா ஒகே டா நான் போய் குட்டிய சமாதானம் செஞ்சு கூட்டிட்டு வர்றேன்.." என்றபடி ஆரா இருந்த அறைக்குள் நுழைந்தான்.

அவன் சென்றதும் இங்கே காயத்ரி ஆதவனிடம் திரும்பி, "மாப்பிள்ளை உங்களுக்கு எங்க மேல கோபம் இல்லையே அகஸ்டினுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம்னு.." என்றாள் எப்பொழுதும் கேட்கும் கேள்வியாய்.

அய்யோ அத்தை அப்படி எல்லாம் இல்லை அத்தை.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அத்தை.. எனக்காகன்னு இல்லாம அவனுக்காக அவனை ஏத்துக்கிட்டுங்களே அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷம் அத்தை.. நானும் நிறைய முறை சொல்லிட்டேன்.. ஆனா நீங்க இந்த கேள்வியை விடற மாறி இல்லை.." என்று எப்பொழுதும் போல சலித்துக் கொண்டான்.


இங்கே ஆராவின் ரூமுக்குள் வந்த அகஸ்டினுக்கு கோபமாய் அமர்ந்திருக்கும் அந்த பொன்மகளை கண்டதும் முகம் விரிந்து புன்னகை புரிந்தான் அகஸ்டின்.

" ஹாய் ஆரா குட்டி.. என்னாச்சி என் தங்கத்துக்கு.. எதுக்கு மாமு மேல கோபம்.. மாமூ பாவம் இல்லைடா.. மாமூக்கு ஹெவி ஓர்க் டா தங்கம்.. ஆனா சொன்னது போல மாமூ வந்துட்டேன் இல்லை டா.." என்றபடி தன்மையாய் அவளிடம் தஞ்சம் புகுந்து சமாதானம் செய்தான்.


" சரி ஓகே மாமூ மன்னிச்சு.. ஆனா பாப்பா ஸ்கூலுக்கு போகனும்.. கூட்டிட்டு போறீயா மாமூ.." என்ற மழலையாய் கொஞ்சினாள் சிறுமலர்.

" ஓ ஓ பாப்பாக்கு ஸ்கூல் போகனுமா.. ஓகே டா தங்கம் மாமூ கூட்டிட்டு போறேன் நாளைக்கு.. இப்போ சாப்பிடலாமா டா.. மாமூக்கு பசிக்குது தங்கம்.." என்றான் பாவமாய்.


" பாப்பாக்கு பசிக்குது மாமூ.." என்றாள் மழலையாய்.

"அடடே தங்கம் வாங்கடா சாப்பிடலாம்.." என்று அவளை தூக்கியபடி டைனிங் டேபிள் வந்தான்.


அங்க மற்றவர்களும் அமர்ந்திருந்தனர்.. இவர்கள் இருவரும் வந்ததும் எல்லோருக்கும் பரிமாறினாள் ரூபினி.

ஆரா அகஸ்டின் மடியிலே அமர்ந்து அவனுடனே சாப்பிட ஆரம்பித்தாள்.

எல்லோருக்கும் பரிமாறிய ரூபினி ஆராவிடம் வந்தவள், "ஆரா குட்டி வாங்க பாப்பாக்கு அம்மா மம்மு ஊட்டுறேன்.. மாமூ சாப்பிடட்டும் டா.." என்றபடி தூக்க வந்தாள்.


அவளோ அகஸ்டினை விட்டு வரமாட்டேன் என்ற பிடிவாதத்துடன் அமர்ந்திருந்தாள்.

அதை கண்ட ரூபினிக்கு கோபம் வந்தது.. அதே கோபத்துடன், "ஏய் ஆரா வா நான் ஊட்டிவிடுறேன்னு சொல்றேன் வரமாட்டேங்குற.. வர வர உனக்கு பிடிவாதம் அதிகம் ஆயிடுச்சி.." என்று அடிக்க போனவளை "ரூபினி.." என்ற அகஸ்டினின் குரல் ஓங்கி ஒலிக்கவும் தன் கையை பயத்துடன் கீழே இறக்கினாள்.


அதில் பயந்து அழுத ஆரா கோபத்துடன் அவன் மடியிலிருந்து இறங்கி தோட்டத்திற்குள் சென்றாள்.

அவள் இறங்கி சென்றதை கண்ட ஆதவனும் அகஸ்டினும் ரூபினியை முறைத்தனர்.

அகஸ்டினை பார்த்து "சாரி அண்ணா.. நான் கூட்டிட்டு வர்றேன்.." என்று ஆராவை தொடர்ந்து சென்றாள்.

அவளோ தோட்டத்தில் முகத்தை தூக்கியபடி அமர்ந்திருக்கவும் அவளருகில் சென்றவள்,

"ஆரா குட்டி சாரி டா மம்மியை மன்னிச்சிடு டா.." என்ற காதில் கைவைத்தபடி நின்றிருந்தாள்.

அச்சிறுமலரோ தன் பிடிவாதத்தில் இருந்து இறங்காமல் முகத்தை திருப்பியபடி அமர்ந்திருந்தாள்.

அவளோ புன்னகைத்தபடி தன் அலைபேசியை எடுத்து பாடலை ஓட விட்டாள்.




மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே!
அன்பு கொண்ட செல்லக் கிளி
கண்ணில் என்ன கங்கை நதி
சொல்லம்மா!

நிலவே மலரே
நிலவே, மலரே
மலரின் இதழே
இதழின் அழகே!

மண்ணில் வந்த நிலவே

எட்டி நிற்கும் வானம்
உன்னைக் கண்ட நேரம்
பக்கம் வந்து தாலாட்டும்!
அந்தி மழை மேகம்
இந்த மலர் தேகம்
தொட்டுத் தொட்டு நீராட்டும்!

விழிகளில் கவிநயம்
விரல்களில் அபிநயம்
கண்ணே நீ காட்டு!
விடிகிற வரையினில்
மடியினில் உறங்கிடு
பாடல் நீ கேட்டு!

நிலவே மலரே
நிலவே, மலரே
மலரின் இதழே
இதழின் அழகே!

மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே!

புன்னை இலைபோலும்
சின்னமணிப் பாதம்
மண்ணில் படக் கூடாது!
பொன்னழகு மின்னும்
உன்னழகு பார்த்து
கண்கள் படக் கூடாது!

மயில்களின் இறகினில்
அழகிய விழிகளை
நீதான் தந்தாயோ?
மணிக்குயில் படித்திடும்

கவிதையின் இசையென
நீதான் வந்தாயோ!

நிலவே மலரே
நிலவே, மலரே
மலரின் இதழே
இதழின் அழகே...!


இந்த பாடல் ஆராவிற்கு மிகவும் பிடித்த பாடல்.. அவளின் கோபத்தை சமாதானம் செய்ய இந்த ஒரு பாடல் போதும்.. இதை கேட்டாள் அடுத்த நொடி தன் கோபங்களை மறந்து விட்டு மகிழ்ச்சியாயிருப்பாள்.


அதை கண்ட அகஸ்டினின் கண்ணுக்கு வேறு இரு உருவங்கள் வந்து போனது.. அதை நினைத்தவுடன் மனம் கனத்து போனது.. என்னவோ எதுவோ தவறாக நடப்பது போல் நெஞ்சமெல்லாம் வலி கண்டது.. தனது கைகள் கொண்டு நெஞ்சத்தை தடவி கொண்டான்.


அதே நேரத்தில் அகல்யா தன் புதல்வனை தேடி பள்ளி வந்தாள்.



நிழலை வருடும் நிஜம் தொடரும்..🌹


அடுத்து பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ண பட்டூஸ்க்கு நன்றி