அகல்யாவிற்கு அன்று மாலையில் வகுப்பு என்பதால் முதலில் பிள்ளைகளை வீட்டிற்கு சென்று விடுவார்கள் எப்பொழுதும். இன்றும் அது போல பிள்ளைகள் முதலில் சென்று விட்டார்கள் என்று எண்ணி இவள் மாலை வகுப்பை கவனிக்க சென்றாள்.
தன் வகுப்பை முடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்றவளை வரவேற்றது என்னவோ அவளின் பெரிய பையன் தான்.
கதவை திறந்து உள்ளே நுழைந்தவள் கண்டது ஹாலிலேயே பெரியவன் தூங்கியிருந்ததை தான். வேகமாய் சென்று அவனை எழுப்பியவள்,
"ஆது கண்ணா என்னாச்சி பா.. தூங்கிட்ட தம்பி எங்கே பா.." என்று அவனின் தலையை தடவியவாறு விசாரித்தாள்.
அவனோ தூக்க கலக்கத்தில், "அம்மா தம்பி உங்களோட தானே இருந்தான்.." என்றான் தாயின் கேள்விக்கு பதிலாய்.
" என்னடா சொல்றே..அவன் எப்போடா என்கிட்ட வந்தான்.." என்றாள் பதைபதைப்புடன்.
" இல்லை மா அவன் வேன்ல என்னோட வரலையே.." என்றான் தூக்கம் கலைந்த கலக்கத்துடன்.
"இல்லையே கண்ணா.. நவி குட்டி என்கிட்ட வரலை பா.. சரி கொஞ்சம் இரு.." என்று பள்ளியின் வாட்ச்மேனுக்கு போன் செய்தால்.
அவர் எடுத்ததும், "அண்ணா நான் அகல்யா பேசுறேன்.. என்னோட சின்ன பையன் ஸ்கூல்ல இருக்கானான்னு கொஞ்சம் பாக்குறீங்களா அண்ணா.." என்றாள் படபடப்புடன்.
" அம்மா இங்கே யாரும் இல்லையை மா.." என்றார் அவரும்.
" ம்ம் சரிங்க அண்ணா.." என்று போனை வைத்தவளுக்கு தன் மகனின் நினைவு கண்ணீராய் பொங்கியது.
எங்கே போயிருப்பான்.. இன்னும் தனியாக போகும் அளவுக்கு கூட விவரம் இல்லையே.. என்றவளின் சிந்தனையில் பள்ளியை தாண்டி தன் மகன் எங்கேயும் சென்றிருக்க மாட்டான் என்று உறுதியாய் தெரிந்தது.
வீடு விட்டால் பள்ளி .. பள்ளி விட்டால் வீடு எனும் அளவில் தான் இன்னும் இருவருக்கும் பழக்கம்.. அதை விடுத்து தனியே எங்கும் சென்று பழக்கம் இல்லை எனும் போது ஏன் அவன் பள்ளியிலே இருக்கக் கூடாது என்று எண்ணத்தில் தன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.
அவளுக்கு இப்போ எல்லாவற்றையும் தாண்டி தன் மகனை பற்றி மட்டுமே சிந்தனையில் இருந்தாள்.
இவள் பள்ளிக்கு செல்லும் பொழுது நேரம் ஒன்பது தாண்டி இருந்தது.
அங்கே போய் வாட்ச்மேனிடம் நின்றவள், "அண்ணா.." என்று அழைத்தாள்.
அந்த நேரத்தில் அவளை எதிர்பார்க்காத அவரும், "மேடம் இப்போ நீங்க எங்க இந்த நேரத்துக்கு மா.." என்றார் ஆதரவாய்.
அண்ணா என் பையன் வீட்டுக்கு போகலை அண்ணா.. இன்னைக்கு எனக்கு ஈவ்னிங் கிளாஸ் முடிச்சிட்டு லேட்டா தானே போனேன்.. ஆனா வீட்ல பையன் இல்லைன்னா.. பெரியவனோட வரலைன்னு சொல்றான் அண்ணா.. அது தான் தேடி பாக்க வந்தேன்.. ப்ளீஸ் அண்ணா.." என்றாள் இரு கையெடுத்து கும்பிட்டு.
அவளின் நிலை அவருக்கும் பாவமாய் தான் இருந்தது.. ஆனால் நிர்வாகத்தின் கட்டுப்பாடுகளை மீறிய எப்படி இவரை உள்ளே அழைத்து போவது.. அதுவும் திரும்பும் திசையெங்கும் கேமிரா உள்ள இடத்தில் மறைத்தும் தேட முடியாது.. சிறிது யோசித்தவர்,
"அம்மா ஒரு நிமிஷம் இருங்கம்மா.. நம்ம அகஸ்டின் ஐயா இன்னும் தூங்கியிருக்க மாட்டாங்க.. அவரையும் வர சொல்றேன் மா.." என்றார் பதிலாய்.
சரியென்று தலையாட்டியவளுக்கு அங்கே நிற்பதற்கே இருப்பு கொள்ளவில்லை.. அவளின் மகனை கண்ணால் காணும் வரைக்கும் இந்த துடிப்பு இருக்கும் போல்.
அகஸ்டின் ஆதவன் ராபர்ட் மூவரும் சிரித்து பேசியபடி சாப்பிடவும் பெண்கள் இருவரும் பரிமாறினார்கள்.. அப்பொழுது தான் தன் கோபத்தை மறந்து அங்கிருந்த பொம்மைகளுடன் விளையாடி கொண்டிருந்தாள் ஆரா.
அவர்கள் சாப்பிடும் போது அகஸ்டினின் அலைபேசியில் அழைப்பு சத்தம் கேட்கவும் யாரென்று பார்த்தவனுக்கு முகம் யோசனையில் மிதந்தது.
அவனின் யோசனையான முகத்தை பார்த்த ஆதவன், "டேய் போன் எவ்வளவு நேரம் அடிச்சிட்டு இருக்கு.. அட்டெண்ட் பண்ணாம அப்படி என்னடா யோசனை.." என்றான் கேள்வியாய்.
"இல்லை டா நம்ம ஸ்கூல்ல இருந்து வாட்ச்மேன் கால் பண்றாரு.. இந்த நேரத்துக்கு எதுக்கு பன்றாருன்னு யோசிச்சேன் டா.." என்றான் நண்பனின் கேள்விக்கு பதிலாய்.
" அடேய் எடுத்து பேசுனா தானே தெரியும்.. நீயே யோசிச்சின்னா எப்படி டா புரியும்.."
" ம்ம் அட்டெண்ட் பண்றேன் டா.." என்றவன் பேனை எடுத்து காதுக்கு வைத்ததும் அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ அடுத்த நொடி, "வாட்.." என்று அதிர்ச்சியுடன் எழுந்தவன்,
"ம்ம் ஓகே ஜஸ்ட் பைவ் மினிட்ஸ் நான் வர்றேன்.." என்றவன் பாதி சாப்பாட்டிலே கைகழுவி விட்டு எழுந்து சென்றான்.
அவனை கண்ட ஆதவன், "டேய் என்னாச்சு.. ஏன் இப்போ இவ்வளவு பதட்டபடுற.." என்று கேட்டான் ஆதவன்.
"ஒன்னுமில்லை டா ஒரு சின்ன பிராப்ளம் நான் போய் பாக்குறேன்.. வர்றேன் ப்பா..வர்றேன் ம்மா..ரூபி மா நாளைக்கு வர்றேன் டா.. ஆரா கிட்ட சொல்லிடு.." என்றவன் அவசரமாய் கிளம்பினான்.
" டேய் நில்லுடா நானும் வர்றேன்.." என்று நண்பனிடம் கூறியவன்,
"ஹேய் நீ இங்கேயே இரு டி நான் என்னான்னு பாத்துட்டு வர்றேன்.." என்றபடி அவனும் அகஸ்டினுடன் கிளம்பினான்.
ஆதவன் வண்டியை ஓட்ட பக்கத்தில் அமர்ந்திருந்த அகஸ்டின்தன் போனை எடுத்து பள்ளியின் வாயிலில் இருந்த கேமிராவை பார்த்தான்.
அங்கே பதட்டத்துடன் அழுகையை அடக்கி நிற்கும் அகல்யா தான் தெரிந்தாள்.
சற்று நேரத்திற்கு முன் தனக்கு தோன்றிய முகம் தானே இது என தனக்கு தானே அவளை அடையாளப்படுத்திக் கொண்டான்.
ஒரு மணி நேரத்தில் வர வேண்டிய இடத்திற்கு அரை மணி நேரத்தில் வந்திருந்தனர் இருவரும்.
இருவருக்குமே பதட்டம் இருந்தது..
அவர்கள் இருவரும் வந்ததும் அங்கே பதட்டத்துடன் நின்றிருந்த அகல்யா இருவரிடமும் வந்து, "சார் ப்ளீஸ் என் பையனை காப்பாத்தி கொடுங்க.. நிச்சயம் அவன் எங்கேயும் போக மாட்டான் சார்..அவனுக்கு இங்கே யாரையும் பெருசா தெரியாது சார்.. ப்ளீஸ் சார்.." என்றாள் இரு கைகளையும் கூப்பியபடி.
அவளின் அந்த பதட்டம் நிறைந்த அழுகை அகஸ்டினையும் தொற்றிக் கொண்டாது..
வாட்ச்மேனிடம் திரும்பி கதவை திறங்க என்று உத்தரவிட்டான்.
அடுத்த நொடி கதவு திறக்கப்பட்டதும் முன்னே ஓடினாள் அகல்யா.. அவளின் பதற்றம் இருவரையும் தொற்றிக் கொண்டது.
வேகமாக உள்ளே சென்றவர்கள் அவனின் பிளாக்கை கண்டுபிடித்து தேடினார்கள்.. ஆனால் அங்கே யாருமில்லை.. இவள் இருந்த இடத்திலும் சென்று தேடினாள்.. ஆனால் அங்கேயும் யாருமில்லை.. அதை கண்டவளுக்கு மனம் புதைத்து போனது.
அவளின் மனது 'நவி கண்ணா எங்கடா இருக்க.. அம்மாகிட்ட வந்துருடா..' என்று மனதில் ஜெபித்து கொண்டே தேடினாள்.
அவளுடனே மூன்று ஆடவர்களும் தேடினார்கள்.
ஆனால் நவி அங்கே இருப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை.தான் தேடி வந்த தன் மகன் அங்கே இல்லையென்றவுடன் அகல்யாவிற்கு பைத்தியம் பிடிக்காத குறையாய், "நவிஷ்.." என்று அந்த இடமே அதிர கத்தினாள்.
இருளின் போர்வையில் அமைதியாய் இருந்த அந்த இடம் அகல்யாவின் சத்தத்தில் அமைதியாய் இருந்த இடம் அதிர்ந்தது.
அப்பொழுது எங்கிருந்தோ ஒரு பெருமூச்சு சத்தம் கேட்டது.. ஆனால் அதை யாரும் உணரவில்லை.. அகஸ்டினின் காதில் தப்பாமல் விழுந்தது.
அந்த சத்தம் கேட்ட திசை நோக்கி வேகமாய் ஓடினான்.
அது ஆண்கள் பயன்படுத்தும் கழிவறை.. அங்கிருந்து தான் சத்தம் வந்தது.. அகஸ்டின் ஓடவும் மற்ற மூவரும் அவன் பின்னே ஓடினார்கள்.
அங்கே ரத்த வெள்ளத்தில் கிடந்தான் நவிஷ்.. அவனை அந்த கோலத்தில் பார்த்தவளுக்கு இதய துடிப்பே நின்றது போது இருந்தது.
நவீஷ் என்று ஓடி சென்று அவனை அணைத்தாள்.. அங்கே வேகமாய் வந்த அகஸ்டின் சிறுவனை தன் கையில் எடுத்தவன், "ஆதவா சீக்கிரம் வண்டியை எடு.. நம்ம ஹாஸ்பிடல் போலாம்.. கோ பாஸ்ட்.." என்றபடி சிறுவனை தன் கையில் எடுத்துக் கொண்டு ஓடினான்.
தன் கைகளில் ஒட்டியிருந்த தன் புதல்வனின் ரத்தத்தை பார்த்தபடி பிரமை பிடித்து அதே இடத்தில் அமர்ந்திருந்தாள் அகல்யா.
தன் பின்னே அவள் வரவில்லை என்பதை உறுதி செய்தவன் வாட்ச்மேனிடம் திரும்பி,
"அண்ணே போய் அவங்களை கூட்டிட்டு வாங்க.." என்றபடி முன்னே சென்றான்.
அவரும் போய் அவளை கைப்பிடித்துக் அழைத்து வந்தார்.. அங்கே வரும் போது அவளுக்கு சுயநினைவு இல்லாமல் தான் வந்தாள்.
அவளையும் தங்களுடன் அழைத்துக் கொண்டு மருத்துவமனையை நோக்கி அந்த வாகனம் ஆதவனின் கைகளில் பறந்தது.
ராயல் மருத்துவமனை.. அது ஏழைகளுக்காக ஆரம்பித்த மருத்துவமனை.. இன்று இருப்பவர் இல்லாதவர் என அனைவருக்கும் சேவை செய்கிறது.. இருப்பவரிடமிருந்து வாங்கி இல்லாதவருக்கு சேவை செய்கிறது.
அந்த மருத்துவமனையின் உரிமையாளன் அகஸ்டின் தான்.
அவன் கையில் அடிபட்ட குழந்தை இருக்க என்ன ஏது என்று எதுவும் விசாரிக்காமல் மருத்துவம் செய்ய ஆரம்பித்தனர்.
அங்கே போடப்பட்டிருந்த பெஞ்சில் கால்களை கட்டி அழுதபடி அமர்ந்திருந்தாள் அகல்யா.. அவளால் எதுவும் பேச முடியவில்லை.. அவளின் நினைவு முழுவதும் உள்ளே சிகிச்சை பெற்று வரும் தன் மகவு தன்னிடம் மீண்டும் தன்னை அம்மா என்று அழைக்கும் நொடிக்காக காத்திருந்தாள்.
அகஸ்டின் ஆதவனிடம் திரும்பி அவன் காதில் ஏதோ கூறினான்.. அடுத்து நொடி யோசனையாய் அகஸ்டினை பார்த்த ஆதவன் அவனிடம் எதுவும் பேசாமல் அவன் சொன்னதை செய்வதற்காக வெளியே சென்றான்.
அவன் சொன்னதை செய்தாலும் அவனின் இந்த நடவடிக்கை சற்று வித்தாயசமாகத் தான் இருந்தது.. ஏன் எல்லார்க்கும் இயல்பாய் உதவி செய்பவன் தான்.. ஆனால் அது உதவி என்ற அளவில் மட்டும் நின்று விடும்.
ஆனால் இன்றைய அவனின் செயல் அவனின் நடவடிக்கைக்கு அப்பால் பட்டதாய் தான் இருந்தது.
எல்லாருக்கும் செய்யும் உதவியாய் இருந்தாலும் இப்பொழுது அவனின் தவிப்பு துடிப்பு அவனின் கலங்கிய தோற்றம் என அனைத்தும் அவனிடம் புதிது.
அவன் யாருக்காகவும் இப்படி தவித்து துடித்ததில்லை.. ஆனால் இன்று யாரோ ஒரு குழந்தைக்காக தவிக்கிறான் துடிக்கிறான்.. ஆனால் ஏன்..? என்ற கேள்வி தான் அவனின் முன்னே நின்றது.
சிறிது நேரத்தில் தன்னை தேற்றியவன் சரி கத்திரிக்காய் முத்தின கடைத்தெரு வந்து தானே ஆகனும் என்று தன் யோசனையை பின்னுக்கு தள்ளி வைத்தவன் இப்பொழுது அகல்யாவின் வீட்டிற்கு சென்றான்.
சிறிது நேரத்தில் ஆதர்ஷிடன் மருத்துவமனை வந்தான்.. அப்பொழுதும் தன் நிலையிலிருந்து மாறாமல் அப்படியே அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் அகல்யா.
ஆதர்ஷ் வந்து தன் தாயின் தோளில் கை வைக்கவும் அவனை கட்டிக் கொண்டு அழுதாள்.
ஆனால் தன் மனக்குமுறல்களை காட்டாமல் அழும் தன் மகனை தலையில் கை வைத்தவள், "ஆது கண்ணா தம்பிக்கு எதுவும் இல்லை டா அழாதீங்க டா.." என்று அவனுக்கு தைரியம் சொல்வது போல் தனக்கும் சொல்லிக் கொண்டாள்.
ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லும் அந்த தாயையும் மகனையும் விழி எடுக்காமல் பார்த்திருந்தான் அகஸ்டின்.. அது ஆதவன் கண்களிலிருந்து தப்பவில்லை..
அவனின் மனம் நினைத்தது இதை தான் சம்திங் ராங்..
நிழலை வருடும் நிஜம் தொடரும்...
அடுத்து பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ண பட்டூஸ்க்கு நன்றி