• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் -21

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,051
473
113
Tirupur
கண்ணங்களில் கண்ணீர் தடங்கள் காய்ந்து போயிருக்க பெண்ணவள் தூரத்தே வெறித்த கண்களுடன் அமர்ந்திருந்தாள்.. ஒரு கட்டத்தில் ஆறுதலாய் இருந்த கண்ணீரும் கூட நின்று விட்டது.. அவளையே பார்த்தபடி நின்றிருந்தான் அகஸ்டின்.

அவள் அழுவது அவனின் கண்களிலும் கண்ணீரை வர வழைத்தது.. ஆனால் அதை வெளிக்காட்டாமல் நின்றிருந்தான் அந்த அழுத்தக்காரன்.. சிறிது நேரத்தில் அங்கே வந்தான் அவளின் முதல் பையன் அம்மா என்ற அழுகையுடன்.

அவன் வந்ததும் பார்வையை அவன் புறம் திருப்பியவள், "ஆது கண்ணா.." என்று அவனை அணைத்துக் கொண்டாள்.

அவனோ அழுகையுடன், "அம்மா சாரி மா.. நான் தான் தம்பியை பாத்துருக்கனும்.. என்னை மன்னிச்சிருமா.." என்றான் அழுகையுடன்.

அழும் அவனின் கண்களை துடைத்தவள், "ச்சீய் அப்படி எல்லாம் இல்லைடா தங்கம்.. அம்மா தாண்டா உங்களை கவனிக்கலை.. சாரி டா தங்கம்.. தம்பி வந்துருவான்டா.. கவலைப்படாதே.." என்றபடி அவனின் தலையை தடவியபடி மூடியிருந்த அறையின் கதவு என்னேரம் திறக்கும் என்ற எதிர்பார்ப்புடன் பார்த்திருந்தாள்.

அவர்களை பார்த்திருந்த அகஸ்டினை பார்வை விலக்காமல் பார்த்திருந்தான் ஆதவன்.. அவனுக்கு இந்த அகஸ்டின் புதிது.. அதுவும் அந்த பையனை அவன் கைகளில் அள்ளும் நேரம் அவன் கண்கள் கலங்கியதை பார்த்தான்.

எத்தனை கவலை கஷ்டம் வந்த போதும் நடுங்காத அவனின் கரங்கள் அவனை அந்த நிலையில் தூக்கும் போதும் நடுங்கியதையும் கண்டான்.

மருத்துவமனைக்கு வந்த பின்பும் ஏனோ இறுகியே இருக்கிறான்.. அதன் காரணமும் அவனுக்கு விளங்கவில்லை.. ஏன் இதைப் போல் எத்தனையோ கடினமான சூழ்நிலைகளிலும் கூட நிதானம் தவறாமல் இருக்கும் அகஸ்டினைத் தான் தெரியும்.

ஆனால் தன்னிடம் வேலை செய்யும் பெண்ணின் புதல்வனுக்காக இப்படி தடுமாறிய அகஸ்டினை தான் இப்பொழுது கண்டான் ஆதவன்.

அகஸ்டினின் உடலும் மனமும் பதைபதைப்பு இருந்ததை இத்தனை காலம் அவனுடன் இருந்தும் உணராது போனால் அது உயிர் நட்புக்கு அர்த்தம் இல்லையே.

சற்று நேரத்தில் அந்த ஐ சீ யூ கதவை திறந்து கொண்டு வந்த மருத்துவரை வேகமாய் அணுகினாள் பெண்ணவள்.. அவளுக்கு முன்னே அங்கே அகஸ்டின் அவரை அணுகியிருந்தான்.

அவனை கண்டதும் மருத்துவர், "ஹீ ஈஸ் பைன் சார்.. இன்னும் கொஞ்ச நேரத்துல கண் விழிச்சிருவாங்க.. அப்புறம் நீங்க போய் பாக்கலாம்.." என்றார் சிரித்த முகத்துடன்.

அதற்கு பின் தான் அனைவரின் முகமும் சற்று நிம்மதியை கொண்டது.

" தேங்க்யூ மிஸ்டர் விநாயகம்.. பட் எப்படி இப்படி ஆனுச்சு.. எனி கெஸ்ஸிங்.." என்றான் யோசனையாக.

" சார் கீழே விழுந்து எதுலேயோ பலமா அடிபட்டுருக்கு சார்.. பிளட் ஹெவி லாஸ்.. பட் உடனடியா நீங்க அரேன்ஞ் பண்ணதால நோ பிராப்ளம்.. அவங்க கண் முழிச்சா தெரியும் எப்படி அடிபட்டதுன்னு சார்.." என்றார் அந்த மருத்துவமனையின் டீன் விநாயகம்.

அதுவரை அவர்கள் பேசியதை கேட்டிருந்த அகல்யா, "டாக்டர் சார் என் பையனை நான் பார்க்கலாமா.." என்றாள் அழுகையுடன்.

" ம்ம் கொஞ்ச நேரத்துல நர்ஸ் வந்து சொல்லுவாங்க.. அப்போ நீங்க போய் பாக்கலாம் மேம்.. ஓகே சார் ஐ ஆம் லிவ்.." அகஸ்டினிடம் அனுமதி வாங்கி கொண்டு அவர் சென்றார்.

அகஸ்டின் அருகில் ஆதவனும் இருந்தான்.. ஒரு குழந்தையின் உயிர்.. இத்தனை காலமாக பெற்று வளர்த்த தாய்க்கு தான் அதன் வலி தெரியும்.. அவனுக்கும் சிறிது பதட்டம் தான்.. ஆனால் இப்பொழுது மருத்துவர் கூறிய செய்தி மன நிம்மதி அடைந்தது.

அழுகையுடன் நிமிர்ந்த அகல்யா இருவரையும் பார்த்து கையெடுத்து வணங்கினாள்.

"சார் நான் என் வாழ்க்கையில வாழுற இந்த வாழ்க்கை என் பசங்களுக்காக தான்.. இப்போ என் பையனை நீங்க மீட்டு தந்துருக்கீங்க.. என் வாழ்நாள் முழுக்க உங்களை மறக்க மாட்டேன் சார்.." என்று கண்ணீருடன் அவள் கூறிய வார்த்தை யாவும் ஆடவனின் மனதில் அச்சாய் பதிந்து போனது.

அவள் கூறிய வார்த்தைக்கு மறுவார்த்தை கூறாமல் அவளையே இடுங்கிய கண்களுடன் பார்த்திருந்தான்.. அவனின் கண்களில் ஏதோ ஏக்கம், ஆசை , பரிதவிப்பு.. எல்லாம் கலந்திருந்தவன் கண்களை பார்த்த ஆதவனுக்கு அப்பொழுது தான் ஒன்று உரைத்தது.

இதுவரை அகஸ்டின் ஒரு வார்த்தை பேசவில்லை.. ஏன் ஆறுதலாய் அந்த பெண்ணிடமும் எதுவும் கூறவில்லை.. அந்த பையனை தன்னிடம் அழைத்து வரக் கூறியது மட்டும் தான் அவன் தன்னிடம் பேசியது.. ஏன் அந்த பெண்ணையே பார்க்கிறான் என்ற ஆதவனின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியவனோ கண்களை இறுக மூடியபடி சுவற்றில் சாய்ந்து அந்த இருக்கையில் அமர்ந்திருந்தான்.


அந்த பெண்ணை அப்பொழுது தான் நன்றாக கண்டான் ஆதவன்.. அப்பழுக்கற்ற பால் நிலா முகம்.. அவள் உடுத்தியிருந்த உடையின் நேர்த்தி சொல்லியது அவளின் நடப்பை.. கழுத்தில் சிறியதாய் மெலிதாய் ஒரு செயின்.. இரு கரங்களிலும் கைக்கொன்றாய் வளையல்.. இந்த அழுத தோற்றத்திலும் கம்பீரமாய் இருந்தாள்.. ஒரு ஆசிரியைக்குண்டான அனைத்து லட்சனங்களும் பொருந்தியவள்.. நிச்சயம் வேலையிலும் சரியாகத்தான் இருப்பாள் என்று தோன்றியது.

அந்த தாயையும் மகனையும் பார்த்தவனுக்கு எதுவோ உறுத்தியது.

இரண்டு மகன்களுக்கு தாயானவளின் கணவன் எங்கே என்ற கேள்வி தான் அது..? ஆனால் யாரிடம் இதை கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வது என்ற யோசனையில் இருந்தவனை அலைபேசியின் சத்தம் கேட்டு நடப்பிற்கு கொண்டு வந்தது.

அவனவள் தான் அழைத்திருந்தாள்.. தன்னவனும் தமையனும் சென்று வெகுநேரமாகியும் இன்னும் ஒரு தகவலும் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் அடித்தாள்.

அவளின் அழைப்பை கண்டவன் அகஸ்டினை பார்த்தவாறு எடுத்தான்.

அவன் ஹலோ என்றதும், "ஆது எங்க இருக்கீங்க.. என்ன பன்றீங்க.. என்ன ஆச்சி.." என்றாள் படபடப்புடன்.

"உங்க அண்ணனை பாத்துட்டு இருக்கேன்டி.." என்றான் அவனை பார்த்துக் கொண்டே.

" எது அண்ணனை பாத்துட்டு இருக்கீங்களா.. என்ன அத்தான் சொல்றீங்க.." என்றாள் புரியாமல்.


" ம்ம் உங்க அண்ணனை சைட் அடிச்சிட்டு இருக்கேன் டி.." என்றான் குதர்க்கமாய்.

" எது அண்ணனை சைட் அடிக்கீறீங்களா.. அத்தான் உங்களுக்கு ஒன்னுமில்லையே.. நீங்க நல்லா இருக்கீங்க இல்லை.." என்றாள் எதோ யோசனையுடன்.

" அடச்சீ.. அடியே நீ பேசுனதுல கன்பியூஸ் ஆயிடுச்சி டி.. நான் இப்போ என்ன சொன்னேன்.." என்றான் குழப்பமாய்.


" ம்ம் எங்க அண்ணனை சைட் அடிச்சி குடும்பம் நடத்த போறதை பத்தி சொன்னீங்க.." என்றாள் நக்கலாய்.

" எது அவன் கூட குடும்பம் நடத்த போறேனா.. அடியே நீ என்ன சொல்றேன்னு புரிஞ்சி தான் பேசுறீயா டி.." என்றான் எரிச்சலாய்.

" நானெல்லாம் புரிஞ்சி தான் பேசுறேன் சார்.. நீங்க தான் இவ்வளவு நேரம் பைத்தியம் மாறி பேசுனீங்க.." என்றாள் கோபமாய்.

" அடியே உங்க அண்ணன் பன்ற வேலைக்கு நான் என்ன எல்லாருக்குமே பைத்தியம் தாண்டி ஆவாங்க.. அம்மாஞ்சி மாறி இருக்கறவன் இங்கே ரோமியாவா இருக்கான் டி.. ரூபி நிஜமா ஒன்னு சொல்லவா கூடிய சீக்கிரம் உங்க அண்ணன் மாலையும் கழுத்துமா வந்து நின்னாலும் ஆச்சர்ய படறதுக்கு இல்லைடி.." என்று தன்னவளிடம் இங்கே அகஸ்டின் பட்டிருக்கும் மௌன நாடகத்தினை கூறி கொண்டிருந்தான்.


" அத்தான் என்ன கொழப்புறீங்க.. " என்று சிடுசிடுத்தாள் தலையும் புரியாமல் வாழும் புரியாமல்.

" ஆமாடி நானே கொழம்பி போய் தான் நிக்குறேன்.. என்னோட அகஸ்டினா டி இது.. ஒரு வேளை அவன் மேல எதாவது பேய் வந்துருக்குமோ ரூபி.."


"ஆமா உங்க நினைவுல தீய வைக்க.. இருங்க நானே அங்கே வர்றேன்.." என்று கட் பண்ண போனவளை,

"அடியே நீ வந்து என்னடி பன்ன போற.." என்றான் குழப்பமாய்.

" அறிவு இருக்கா உங்களுக்கு அங்கே இருக்கறது ஒரு பொண்ணு.. அதுவும் ரெண்டு பசங்களோட தனிச்சு நிக்குறவங்க.. நீங்க எல்லாம் ஆம்பளைங்க.. அவங்க ஆறுதலுக்கு கூட யாரையும் தேட முடியாது.. அது மட்டுமல்ல எங்க அண்ணனை பத்தி நீங்க சொன்னது எந்த அளவுக்கு நிஜம்னு தெரியனும் இல்லை.. வைங்க வரேன்.." என்று கட் செய்தாள்.


' இவ வேற ஒருத்தி.. இனி இவ டார்ச்சர்.." என்று சிலுசிலுத்துக் கொண்டு அகஸ்டினிடம் வந்தான்.

வந்தவனை வரவேற்றது என்னவோ அகஸ்டினின் பாறையாக இறுகிய முகம் தான்.

இவனுக்கு என்ன ஆச்சி இவ்வளவு நேரம் நல்லாதானே இருந்தான் என்ற யோசனையுடன் அகஸ்டின் பார்வை சென்ற திசைக்கு தன் பார்வையை வைத்தவனின் கண்களில் அங்கே அகல்யா வேறொரு ஆடவனின் மார்பில் சாய்ந்து அழுது கொண்டிருப்பது தெரிந்தது.

ஓஓ இது தான் காரணமா.. இதுக்கு ஏன் இவன் இவ்வளவு கோபமா இருக்கனும்.. இந்த லூசு பையன் எதை மறைக்கிறான் என்ற யோசனையில் இருந்தவனின் தலையை யாரோ பின்பக்கம் தட்டியது போல் இருந்தது.. யாரென்று பார்த்தால் அங்கு அகஸ்டின் தான் நின்றிருந்தான்.

"எதுக்குடா இப்போ தலையை தட்டுற.." என்று கோபமாய் கேட்டான்.


"அங்கே என்ன அப்படி பாத்துட்டு இருக்கு.. தலைவலிக்குது போய் டீ வாங்கிட்டு வா.. அப்புறம் அவங்களுக்கும் வாங்கி கொடு.. அந்த பையனுக்கு ஹார்லிக்ஸ் வாங்கி கொடு.." என்று விட்டு அங்கேயிருக்கும் அவனுக்கு என ஒதுக்கப்பட்டிருக்கும் தனி அறைக்கு சென்றான்.


போகும் அவனை யோசனையாக பார்த்தபடி அவன் சொன்ன வேலையை செய்வதற்கு சென்றான்.

அவன் டீ வாங்கி வந்து அகல்யா அந்த ஆடவனுக்கும் கொடுக்கும் சமயம்,

"அண்ணா ஏன் இப்படி வந்தீங்க.. அண்ணிக்கு உங்க மேல கோபம் தான படுவாங்க.. என்னால உங்களுக்கு இன்னும் எத்தனை இன்னல்களை தரப்போறேன் ணா.." என்றாள் அழுதபடி.

அப்பொழுது தான் உணர்ந்தான் வந்திருப்பது அவளின் தமையன் என்று.. இதற்கு ஏன் இவன் கோபப்பட வேண்டும்.. என்ற யோசனையுடனே இருவரையும் வற்புறுத்தி டீயை கொடுத்தவன் ஆதர்ஷ்க்கு ஹார்லிக்ஸ் குடிக்க வைத்தான்.

அப்பொழுது அகல்யா தன் தமையனிடம் திரும்பி, "அண்ணா இவரும் சேர்மன் சாரும் இல்லைன்னா இன்னைக்கு நம்ம நவி நமக்கு இல்லைண்ணா.." என்றாள் கண்ணீரோடு.

அவளின் கண்ணீரை சுமந்த முகம் ஆதவனுக்கு ஏதோ ஒரு வலியை தோற்றுவித்தது.. இத்தனை நாட்களில் அவளையும் மற்றவர்களை போல் தங்களின் பள்ளியில் வேலை செய்பவள் என்ற எண்ணத்துடன் தான் கண்டான்.. ஆனால் இன்று அகஸ்டின் அந்த பார்வையை மாற்றி விட்டான்.

அவளின் தலையை தடவியவன், "என்னையும் நீ அண்ணான்னு சொல்லலாம் மா.. " என்றான் சற்று புன்னகையோடு.

அதை ஏற்றுக் கொண்டவள் புன்னகையுடன், "ரொம்ப தேங்க்ஸ் அண்ணா.." என்றான் அழுகையும் சிரிப்புமாய்.

அவளின் அண்ணா என்ற அழைப்பு அவனுக்குள் இருந்த பாசத்தை வெளி கொண்டு வந்தது.

இதுவரை எந்த பந்த பாசத்திலும் சிக்காதவனை முதலில் காதலி மனைவி என்ற பந்தத்தில் சிக்க வைத்தது அவனவள்.


இதோ இன்று தமையன் என்று மற்றொரு சுகமான சுமையை தந்துள்ளாள் இந்த பெண்.

அடுத்து சில நிமிடங்களில் அகஸ்டினை தேடி வந்த ஆதவனுக்கு அகஸ்டினின் நிலை அதிர்ச்சியை கொடுத்தது.

மச்சான் என்ற அறைகூவலுடன் அகஸ்டினிடம் ஓடினான் ஆதவன். ந




நிழலை வருடும் நிஜம் தொடரும்..🌹



அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ண பட்டூஸ்க்கு நன்றி