வந்த சிறிது நேரத்தில் தன் நிலையில் யோசித்தவளை கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.. தன்னையே பாத்துக்க கொண்டிருந்தவள் கண்டு மனதுக்குள் சிரித்த ரூபினி,
"அச்சோ அகல்யா என்ன இப்படி நிக்குறீங்க.. முதல்ல உக்காருங்க.." என்று அவளை அமர்த்தியவள் தன்னவனிடம் திரும்பி,
"அத்தான் ரெண்டு காபி வாங்கிட்டு வர்றீங்களா.." என்று கட்டளையிட்டாள்.
அது அன்பு கட்டளை என்பதை உணர்ந்தவன் சரி என்று தலையாட்டிவிட்டு சிரித்த முகத்துடன் சென்றான்.
அவன் சென்றதும் புன்னகையுடன் அகல்யாவிடம் திரும்பிவள்,
"குட்டி பையன் எப்படி இருக்கான் பாத்தீங்களா.." என்று கேட்டாள்.
"இல்லைங்க மேடம்.." என்றவளை முறைத்து தள்ளினாள் ரூபினி.
"அச்சோ சாரி மே.. சாரிங்க எனக்கு எப்படி கூப்பிடறதுன்னு தெரியலை.." என்றாள் தயக்கமாய்.
" ஓஓ உங்க ஆதவன் சாரை எப்படி கூப்பிட்டீங்க.." என்றாள் நக்கலாய்.
"அது அது அண்ணான்னு சார் கூப்பிட சொன்னாங்க அதான்.." என்றாள் தயக்கத்துடன்.
" ஓஓ அப்போ உங்களுக்கு அண்ணன் மட்டும் போதும் இந்த அண்ணி தேவையில்லை அது தானே.." என்றாள் சிரிப்புடன்.
அப்பொழுது தான் ரூபினி கூறியதை உணர்ந்தவள் கண்களில் வழியும் கண்ணீருடன், "அண்ணி.." என்று அனைத்துக் கொண்டாள்.
சிறிது நேரத்தில் காபியுடன் வந்த ஆதவன் இதை கண்டு மகிழ்ச்சியில், "ஹலோ கேர்ல்ஸ் என்னடா இது அதுக்குள்ள இப்படி குழைஞ்சிக்குறீங்க.." என்றான் சிரிப்புடன்.
" அதெல்லாம் கேர்ல்ஸ் ரகசியம் உங்ககிட்ட சொல்ல முடியாது அத்தான்.." என்றவள் அவனிடம் இருந்து காபியை வாங்கி அகல்யாவுக்கு ஒன்றை ஊற்றிக் கொடுத்தவள் தன்னவனுக்கு ஒன்றை கொடுத்து விட்டு தானும் ஒன்றை எடுத்துக் கொண்டாள்.
அவள் கொடுத்ததை எந்த வித மறுப்பும் சொல்லாமல் வாங்கி கொண்டாள் அகல்யா.
ஏனோ ரூபினியின் இயல்பான பேச்சு அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
யாருமில்லாமல் தனியாளாக இருக்கும் தனக்கு துணையாக ஆதரவாக ஒரு உறவை கடவுள் அனுப்பி வைத்ததாக கருதினாள்.
காபியை குடித்து விட்டு, "ஏன் அத்தான் குழந்தையை பாக்கலாமா.." தன்னவனிடம் கேட்டாள்.
அப்பொழுது அங்கே வந்த தாதியிடம் கூறி விட்டு நவிஷ் இருந்த அறைக்கு அழைத்து சென்றான் ஆதவன்.
அங்கே தலையில் கட்டுடன் மருத்துவ உபகரணங்களை கட்டிலை சுற்றி இருக்க அவன் இதயத்தில் அங்காங்கே ஒயர்கள் சொருகி அவன் இதயத்தை பரிசோதித்த படி இருக்க இன்னும் கண் விழக்கவில்லை அவளின் இளவரசன்.
அந்த நிலையில் அவனை பார்த்ததும் பெற்றவளுக்கு மனம் வலித்தது.. அவளையறியாமல் இதுவரை தடுத்து நிறுத்தியிருந்த கண்ணீர் கரை உடைத்தது.
அவள் அழுவதை பார்த்த ரூபினி , "அகல்யா கவலைபடாதீங்க.. தம்பி சீக்கிரம் குணமாயிடுவான்.. நீங்க இப்படி அழுதா அவனை யாரு அப்புறம் பாத்துக்கறது.. நாங்க இருக்கோம் இல்லை சீக்கிரம் இவரை குணமாக்கி விளையாட விட்டுடுவோம்.." என்றாள் அவளை சகஜமாக்கும் முயற்சியாக.
தன்னவனிடம் திரும்பியவள், "அத்தான் எப்போ தம்பி கண் விழிப்பான்.." என்று கேட்டாள்.
" காலையில தான் டி.. மருந்தோட பவர்லாம் இருக்கு இல்லை.. மார்னிங் ஆயிடும் டி.." என்றான் அந்த சிறியவனை பார்த்துக் கொண்டே.
" ம்ம் சரிங்க அகல்யா கூட நான் இருக்கேன் நீங்க அங்கே போங்க.." அகல்யா அறியாமல் தன்னவனை தன் தமையனிடம் செல்ல சொன்னாள்.
ஏன் முன்பே வருத்தத்தில் இருப்பவளிடம் மீண்டும் எதையும் கூறி வருந்த வைக்க இருவரும் விரும்பவில்லை.
" அய்யோ அண்ணி நீங்க போங்க நான் இருந்துப்பேன்.. எனக்கு தனிமை புதுசு இல்லை அண்ணி.. பழகி போன ஒன்னு தான்.. நீங்க போங்க அண்ணி நான் பாத்துக்குறேன்.." என்று ரூபினியை அனுப்பினாள் ஆதவனுடன்.
ஆதவனுக்கு இப்பொழுது தன்னவள் தன் நண்பன் அருகில் இருக்க வேண்டும்.. அவனை பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையால் இருவரும் அமைதியாய் அங்கிருந்து சென்றனர்.
அவர்கள் சென்றதும் மனம் நிறைந்து அங்கே அமர்ந்தாள் அகல்யா.
ஆனால் ஒரு விடயத்தை மறந்து விட்டாள்.. ஒரு கல்லாரி பள்ளி வணிக செய்யும் பெரிய பணக்காரர்கள் ஏன் தன்னிடம் இவ்வளவு இறங்கி பாசமாக பேச வேண்டும் என்பதை யோசிக்க மறந்தாள்.. தீர்வு காலத்தின் கையில்.
இங்கே அகஸ்டினிடம் இருவரும் வரவும் அப்பொழுது தான் கண்விழித்தான் அகஸ்டின்.
அவன் எழுந்து விட்டான் அறிந்த இருவரும் வேகமாக அவனருகில் சென்றனர்.
ரூபினி அழுது கொண்டே, "அண்ணா.." என்று அவன் கையை பிடித்துக் கொண்டாள்.
ஆதவனின் கண்களும் கலங்கி தான் இருந்தது.. அதை உணர்ந்தவன் இருவரின் கையையும் பிடித்துக் கொண்டு,
"ஹேய் எனக்கு ஒன்னுமில்லை பா.. எதுக்கு ரெண்டு பேரும் இப்படி அழுகாச்சியா இருக்கீங்க.." என்றபடி சிரிக்க முயன்றான்.
ஆனால் அது முடியாமல் அவனின் வலி அவனை படுத்தியது.. ஏன் ஒன்று சேர்ந்தார் போல் இதை பேசி முடிப்பதற்குள்ளாகவே அவனுக்கு மூச்சு அதிகமாய் வாங்கியது.
அதைக் கண்ட இருவரும், "அப்புறமா பேசலாம்.. இப்போ ரெஸ்ட் எடு.." என்று சொல்லிவிட்டனர்.
இதழ் பிரியாமல் சிரித்துக் கொண்டே கேள்வியான பார்வையுடன் ஆதவனை பார்த்தான்.
அந்த பார்வையின் பொருளை உணர்ந்த ஆதவன், "நல்லாருக்காங்க.. காலையில பாக்கலாம்.." என்றான் ஆறுதலாய்.
அவனின் வார்த்தை அவனுக்கு புதுத் தெம்பு தந்ததுவோ என்னவோ அமைதியாய் கண் மூடியவன் அப்படியே தூங்கி விட்டான்.
அவன் உறங்கியதும் கணவன் மனைவி வெளியே வந்தனர்.. ஆதவனின் மனம் மிகவும் குழப்பத்தில் இருந்தது.. அதை அவன் முகம் காட்டி கொடுத்தது.
அதை உணர்ந்த பெண்ணவள் அவன் தோளில் கை வைத்து அழுத்தினாள்.
அவளின் கரத்தோடு தன் கரத்தையும் சேர்த்து அழுத்தியவன் அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.
இங்கே விடையில்லாத பல கேள்விகள் அவன் முன்னே நின்றன.. ஆனால் அதற்கு பதில் சொல்ல வேண்டியவனோ மருந்தின் வீரியத்தில் உறங்கி கொண்டிருந்தான்.
தம்பதிகள் இருவரும் உறங்கவில்லை.. அவனின் தோளில் சாய்ந்திருந்தவள் தன் முகத்தை தூக்கி தன்னவனை பார்த்து,
"அத்தான் உங்களுக்கு எதாவது புரியுதா.." என்றாள் கேள்வியாய்.
ம்ம் என்று தலையசைத்தவன், "ஆனா ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை டி.. ஏன்..? எதுக்கு..? எதுவும் சரியா புரியலை.. ஆனா எதுவோ இருக்கு டி.. அவனோட ஹெல்த் கண்டிசன் அவனுக்கு நல்லாவே தெரியும்.. இப்படி ஆகுற அளவுக்கு விட்டதில்லை.. ஆனா இப்போ இப்படி ஆக விட்டுருக்கான்னா எதுவோ அவன் மனசு ஆழத்துல பதிஞ்சி போய் இருக்குடி.. அது அவனா சொல்லாம நமக்கு எதுவும் தெரியாது.
என்ன தான் சின்ன வயசுல இருந்து அவனோட இருந்தாலும் இன்னும் அவனோட அழுத்தமான மௌனத்துக்கு எனக்கு பதில் தெரியலை டி.. பாக்கலாம் எல்லாம் ஒரு நாள் வெளியே வரும்.. அப்போ இருக்குடி உன் அண்ணனுக்கு.." என்றான் பற்கள் கடித்தபடி.
அதில் சிரித்தவள், "அத்தான் ஒன்னு சொல்லவா.." என்றாள் புன்னகையுடன்.
"என்னடி.." என்றான் ஊடுருவியபடி.
"அப்படி தெரிஞ்சாலும் நீங்க அண்ணா வா எதுவும் சொல்ல மாட்டீங்க.. உங்களால அண்ணன் மேல எப்பவும் கோபப்பட முடியாது.." என்றாள் கிண்டலாய்.
"என்னடி கிண்டலா.. நிச்சயம் உங்க அண்ணன் என்கிட்ட மாட்டுவான்டி.. அன்னைக்கு இருக்கு.." என்றபடி அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.
அவளும் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
அவளின் தலையில் தன் முகத்தை பதித்துக் கொண்டு, "பாப்பாவ எப்படி டி விட்டு வந்த.. அவ அழுதுருப்பாளே.." என்றான் மகளின் நினைவில்.
"இல்லைத்தான் அவ உங்களை போல.. அவங்க மாமாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னதும் அனுப்பி வச்சிட்டா.. சமர்த்து அத்தான்.." என்றாள் தன் மகளை சிலாகித்து.
இவர்கள் இங்கே பேசிக் கொண்டிருந்த அதே நேரம் துவாரகனின் இல்லத்தில் பெரும் பிரளயமே வெடித்தது அந்த சாம வேலையில்.
"அவ எங்கய்யா இருக்கா இப்போ நீ சொல்றீயா இல்லையா.." என்றாள் காட்டு கத்தலாய் துவாரகனின் மனைவி.
" ஏய் நா ஹாஸ்பிடல் சவாரி போனேன் டி.. எமர்ஜென்ஸியா கூப்பிட்டாங்க டி.. அங்கே தான் போனேன் போதுமா.. இந்த உனக்கு நம்பிக்கை இல்லைன்னா நீயே கேட்டுக்கோ.." என்று ஒரு நம்பரை கொடுத்து விட்டு அறைக்குள் சென்று தன் மகன் அருகில் படுத்துக் கொண்டான்.
போகும் அவனை வன்மமாய் பாத்துக்க கொண்டவள், "என்னைக்காவது நீ மாட்டுவடா.. அன்னைக்கு இருக்குது உனக்கு அந்த சிறுக்கி மவளுக்கும்.." என்று கறுவறுத்துக் கொண்டாள்.
பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள்.. ஆனால் இங்கே ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் தான் எதிரியாய் உள்ளாள்.
இங்கே தேவையில்லாமல் தன் மணவாழ்க்கைக்கு எதிரியாய் அகல்யா இருப்பதாக உணர்ந்தாள் பெண்ணவள்.
ஆனால் அவளின் மகிழ்வான மண வாழ்க்கைக்கு அவளின் எண்ணம் தான் அழிவானது ஆரம்பம் என்பதை உணராது போனாள் துவாரகனின் சரிபாதி.
ஆனால் அதை அவள் உணரும் நேரம் அவளின் இழப்பு மிகவும் பெரியதாக இருக்கும்.
இங்கே தன் தோளிலே தன்னவள் உறங்கியதை உணர்ந்தவன் அவளை அள்ளி எடுத்துக் கொண்டு அங்கே இருந்த மற்றொரு அறையில் இருந்த கட்டிலில் அவளை படுக்க வைத்து விட்டு வெளியே வந்தான்.
தூக்கம் வராமல் அங்கேயே வராண்டாவில் நட்ந்தவனுக்கு இன்று நடந்தது நிகழ்ச்சி யாவும் கண்ணில் கட்டி காட்டில் விட்டதை போல் இருந்தது.
ஆனால் யாரிடமும் நெருக்கம் காட்டாத தன்னையும் அண்ணனாக நினைக்க வைத்தவளை நினைத்து வியக்காமல் இருக்கவில்லை.
ஏதோ நினைவுகளில் இருந்தவனுக்கு ஏனோ அகல்யாவை உடனே காண வேண்டும் போல் இருந்தது.
அங்கே போகலாம் என்று நினைக்கையில் அகஸ்டினின் அறையில் இருந்து தாதி ஓடி வந்தாள்.
" சிஸ்டர் என்னாச்சி ஏன் இப்படி ஓடி வர்றீங்க.." என்றான் படபடப்பாய்.
" சார் சார் கண்ணு முடிச்சிட்டு எழ முயற்சி பண்ணிட்டு இருக்காரு.. நான் வேணாம்னு சொன்னாலும் எதுவும் கேட்க மாட்டேங்கறாரு.. ப்ளீஸ் சீக்கிரம் வாங்க சார்.." என்று படபடத்தாள்.
அவளின் படபடப்பு அவனையும் தொற்றிக் கொண்டு உள்ளே ஓடியவனை வரவேற்றது என்னவோ கட்டிலில் இருந்து இறங்கிய அகஸ்டினைத் தான்.
கண்கள் இரண்டும் சொருக தள்ளாடி கீழே விழப் போகும் நிலையிலும் எழுந்தவன் தன்னை சுற்றிலும் இருந்த ஒயர்களை கழட்டித் தூக்கி எறிந்து விட்டு தள்ளாடி கீழே விழப் போனவனை ஓடி வந்து தாங்கி கொண்டான் ஆதவன்.
"டேய் அகஸ் என்னடா பண்ணிருக்க நீ.." என்றவனின் கேள்விக்கு
"ஆ..ஆ..தவா.. கு..குட்டிக்கு ஏதோ.." முழுதாய் சொல்ல வருவதற்குள் மயங்கியிருந்தான்.
அவன் என்ன சொன்னான் எனும் முழுதாய் சொல்வதற்கு மும்பாய் மயங்கியவனை தூக்கி கட்டிலில் கிடத்தியவன் அங்கிருந்த தாதியிடம் ஊசியினை செலுத்த சொல்லிவிட்டு வெளியேறினான்.
அகஸ்டின் சொன்னதை யோசித்தவனுக்கு தலையை வெடிப்பது போல் முதலில் எதுவும் புரியவில்லை.
அப்பொழுது தான் அவனின் மூளையில் ஒரு விடயம் உதித்தது.
வேகமாய் கீழே இறங்கியவர் அகல்யா இருந்த அறைக்கு வந்தவனுக்கு அங்கே நவிஷ் இருந்த நிலை அதிர்ச்சியை கொடுத்தது.
நிழலை வருடும் நிஜம் தொடரும்...
அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு லைக் கமெண்ட் பண்ண பட்டூஸ்க்கு நன்றி