• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் - 24

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
அகல்யா இருந்த தளத்திற்கு வந்தவன் நவிஷின் அறைக்கு சென்றவனுக்கு அங்கே சிறியவன் இருந்த நிலை அதிர்ச்சியை கொடுத்தது.

அவனின் மூச்சுக் குழாய் பிடிங்கி இருந்தது.. மூச்சு விட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

அதைக் கண்ட ஆதவன் வேகமாய் அங்கிருந்த தாதியை எழுப்பி விட்டு அதை சரி செய்ய வைத்தான்.

அவனின் சத்தத்தில் அங்கே அசதியில் உறங்கி போயிருந்த அகல்யாவும் தவிப்புடன் எழுந்தாள்.

அங்கே அந்த நேரத்தில் ஆதவனை கண்டவள், "அண்ணா என்னாச்சு.. " என்றாள் படபடப்பாய்.

அவளின் பதட்டத்தை கண்டவன், "ஒன்னுமில்லை மா தூக்கத்துல மூச்சுக் குழாய் பிடிங்கிட்டான் போல.. சும்மா எட்டிப் பாக்கலாம்னு வந்தேன்.. அப்போ தான் தெரிஞ்சிது.. இப்போ சரியாயிடுச்சி டா.." என்று அவளை சமாதானம் செய்தவன் வெளியே சென்று விட்டான்.

அவனின் சிந்தனை அனைத்தும் அகஸ்டினை சுற்றியே இருந்தது.

இங்கே இவனுக்கு ஆனது அவன் எப்படி உணர்ந்தான்.. அவனோட உயிரையும் பொருட்படுத்தாமல் இந்த குட்டி பையனை ஏன் காப்பாத்த வந்தான்.

இவர்களுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்.. ஆனா அகல்யாவுக்கு அவனை யாருன்னு தெரியலை.. புதுசா தான் பாக்குறாங்க.. இதுக்கு தீர்வு அகஸ்டின் கிட்ட தான் இருக்கு.. அவன் தான் சொல்லனும்.. காலையில இதை முதல்ல கிளியர் பண்ணணும் என்ற யோசனையுடன் அகஸ்டினின் அறைக்கு வந்தான்.

அங்கே மருந்தின் வீரியத்தில் உறங்கி கொண்டிருந்த அகஸ்டினையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான்.

' எதோ ஒரு விஷயத்தை என்கிட்ட இருந்து மறைக்குற.. ஆனா அது என்னன்னு தான் எனக்கு புரியலை அகஸ்.. ஆனா நிச்சயம் அது உனக்கு நன்மைன்னா மட்டும் தான் உன்கிட்ட சேரும்.. அது தீமையான விஷயம் னா அதை உன் பக்கத்தில கூட விட மாட்டேன் டா..'என்று மனதினுள் சபதம் ஏற்றவன் அங்கிருந்த மற்றொரு கட்டிலில் படுத்துக் கொண்டான்.


முகத்தில் காற்றின் குழுமை பரவ தன் விழிகளை மலர்த்தினான் அகஸ்டின்.

அவன் உடலில் இப்பொழுது எந்த ஒயரும் இல்லை.. எல்லாம் அதிகாலையிலே ரீமூவ் பண்ணிவிட்டாள் தாதி.

மெதுவாய் தன் படுக்கையில் எழுந்து அமர்ந்தவன் பக்கத்து கட்டிலை பார்த்தான்.. அங்கே ஆதவன் உறங்கி கொண்டிருந்தான்.


அவனை எழுப்பாமல் தானே எழுந்து குளியலறை சென்றவன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு அறையை விட்டு மெதுவாய் வெளியே வந்தான்.

இன்னும் நன்றாக விடியவில்லை.. அதனால் யாரும் அதிகமாக அங்கே இல்லை..

மூன்றாவது தளத்திற்கு வந்தவன் நவிஷ் இருந்த அறைக்குள் புகுந்தான்.

அங்கே ஆழ்ந்த நித்திரையில் இருந்தான் நவிஷ்.. மெதுவாய் அவனருகே சென்றவன் அவனின் தலையை வாஞ்சையுடன் தடவி விட்டு அவனின் நெற்றியில் இதமாய் ஒரு முத்தமிட்டவன் பக்கத்தில் திரும்பி பார்த்தான்.

அங்கே அகல்யா உறக்கத்தில் இருந்தாள்.. கூடவே பெரியவனும்.. இருவரையும் கண்டவன் அவர்களருகே சென்று பெரியவனின் தலையை கோதியவன் அவனின் நெற்றியிலும் ஒரு முத்தத்தை கொடுத்து விட்டு அகல்யாவை பார்த்தான்.

அவளின் தலைக்கு தன் கையை கொண்டு சென்றவன் எதையோ நினைத்து இழுத்துக் கொண்டான்.

ஆனால் அவளின் முகத்தை சற்று பார்த்தவன் கண்கள் கலங்கிய வண்ணம் அங்கிருந்து சென்றான்.

அவனையே இருவிழிகள் தொடர்ந்ததை அவன் அறியவில்லை.. தன்னறைக்கு வந்தவனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தானா ஆதவன்.

அவனை பார்த்து சற்று திகைத்தாலும் மறுநொடி நார்மல் ஆகி மீண்டும் தன் கட்டிலில் வந்தமர்ந்தான்.

அவனின் அந்த அலட்சியம் ஆதவனுக்கு கோபம் வரவழைத்தது.
வேகமாக அவனருகே சென்றவன்,

"ஏன்டா எருமை இப்போ தானே கொஞ்சம் நல்லாருக்கு அதுக்குள்ள எங்கடா போனே.." என்றான் சற்று கோபத்துடன்.

அதை காதில் வாங்காதவன், "ரூபினி எங்கடா.." என்றான் கேள்வியாய்.

'அதானே நான் கேட்ட சார் நீங்க பதில் சொல்ல மாட்டீங்க.. ஆனா நீங்க கேட்டா நாங்க உடனே பதில் சொல்லனும்..' என்று மனதோரம் நினைக்க மட்டும் தான் முடிந்தது.

வெளியே சொன்னால் அதற்கும் எதாவது பதில் வைத்திருப்பான் தனது நண்பன் என அறிந்தவன் வாயை திறக்காமல் அமைதியாய் நின்றான்.

நண்பனின் பதில் இல்லாமல் போகவும் தலையை நிமிர்ந்து பார்த்த அகஸ்டின் ஆதவனின் கோபத்தை கண்டு மனதினுள் புன்னகைத்து, "நான் உன்கிட்ட என்ன டா கேட்டேன்.. நீ என் முகத்தை பாத்துட்டு இருக்க.." என்றான் முறைத்தபடி.

அப்பொழுதும் அவனை முறைத்தானே தவிர எதுவும் பேசாமல் அமைதியாய் நின்றிருந்தான் ஆதவன்.

அவனின் கோபம் எதற்கு என்பதை அறிந்தவன் எதுவும் பேசாமல் அவனை முறைக்கும் சமயம் அங்கே ரூபினி வந்தாள்.

இருவரையும் பார்த்து ஒன்றும் புரியாமல் தன் தமையனிடம் வந்தவள்,

"அண்ணா உங்களுக்கு இப்போ எப்படி இருக்கு..ஓகே தானே.." என்றாள் புன்னகையாய்.

தங்கையை பார்த்து புன்னகைத்தவன், "இப்போ பரவாயில்லை டா.. " என்றான் சிரித்தபடி.

" அண்ணா ஏன் இவரு இப்படி நிக்குறாரு.." என்று கேட்டாள் தமையனிடம்.

"அவன் கிடந்துட்டு போறான் மா.. நீ வீட்டுக்கு போயிட்டு வா.. குட்டி உன்னை நேத்தில இருந்து பாத்துருக்க மாட்டா.. தேடுவா.. நீ போயிட்டு குளிச்சிட்டு பாப்பாவை கூட்டிட்டு வா.. அப்படியே ஒரு செட் லேடீஸ் டிரஸ் எடுத்துட்டு வீட்டு சாப்பாடு ரசம் மட்டும் வச்சி எடுத்துட்டு வா.." என்று அடுக்கடுக்காய் கட்டளைகளை பிறப்பித்தான்.

அவன் விதித்த கட்டளையை கேட்டவளுக்கு கண்களை கட்டிக் கொண்டு வராத நிலை தான்.. தன் தமையனா எது என்ற எண்ணம் தான்.. ஆனால் அவனின் முகத்தில் தெரிந்த மலர்ச்சி அவளை வேறு எதுவும் சிந்திக்க விடாமல் தலையாட்ட வைத்தது.. இது எப்பொழுதும் நடப்பது தான் என்பது போல் கணவன் மனைவி இருவரும் இருந்தனர்.. ஆனால் இந்த வேகம் அவனிடம் எதிர்பாராத ஒன்று.


அவன் அவ்வாறு கூறியதும் தன்னவனிடம் கண்ணசைவில் விடை பெற்றாள்.

அவள் கிளம்பியதும் மீண்டும் ஆதவனிடம் திரும்பியவன், "ஆதவ் மிஸ்டர் விநாயகத்தை நான் பார்க்கனும்னு சொல்லு.." என்று அவனிடம் சொல்லிவிட்டு துண்டுடன் குளியலைறைக்குள் நுழைந்து கொண்டான்.

அவனை விசித்திரமாய் பார்த்தபடி அவன் சொன்னதை செய்ய சென்றான் ஆதவன்.

ஆதவனுக்கு என்றும் அகஸ்டினின் மேல் அதீத நம்பிக்கை உண்டு.. அதனால் அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவன் கூறியதை தட்டாமல் செய்வான் ஆதவன்.

இன்றும் அவன் கூறியதில் ஏதோ உந்தி தள்ள அவன் சொன்ன வேலையை செய்ய சென்றான்.

ஆதவன் அந்த மருத்துவமனையின் டீன் விநாயகத்தை அழைத்து வரும் பொழுது அகஸ்டின் குளித்து கேஷிவல் டிரஸில அமர்ந்து கணிணியில் வேலை செய்து கொண்டிருந்தான்.

" ஹலோ சார் ஹவ் ஈஸ் யுவர் ஹெல்த் சார்.. எனி இன்ஞிரீஸ்.." அவனை விசாரித்தபடி அங்கே வந்தார் விநாயகம்.

அவர் வந்ததும் தன் லேப்டாப்பை அணைத்து வைத்து விட்டு வந்தவன், "ஹலோ விநாயகம் யா ஐ ஆம் பைன்.. ப்ளீஸ் டேக் யுவர் சீட்.." என்றபடி இருவரும் எதிரெதிர் அமர்ந்தனர்.

அங்கேயே ஆதவனும் அகஸ்டினை பார்த்தவாறு அமர்ந்தான்.

" சொல்லுங்க சார்.. என்னை விஷயமா வர சொன்னீங்க சார்.." என்றபடி அமர்ந்தார் விநாயகம்.

அகஸ்டின் அவரை பார்த்து சிரித்தவன் ஆதவனை பார்த்து,

"ஆதவ் அந்த குட்டி பையனை பாத்துட்டு வர்றியா எப்படி இருக்கான்னு.." என்றபடி அவனை வெளியே அனுப்ப முயன்றான்.

அதை கேட்டதும் தன்னை வெளியே அனுப்ப தான் முயல்கிறான் என்பதை அறிந்து அதிக கோபம் கொண்டான்.


அகஸ்டினுக்கு நன்றாக தெரியும் தன் நண்பன் தன் மேல் கோபமாய் உள்ளதை.. ஆனால் அதை பறக்கும் வழியும் அவனுக்கு தெரியும்.. அதனால் தான் அவனை வெளியே அனுப்பினான்.

அவனும் கோபத்துடன் நவிஷ் இருக்கும் அறைக்கு வந்தவன் அங்கே அகல்யாவை ஒரு வயதான பெண்மணி திட்டிக் கொண்டிருக்க அமைதியாய் அழுதபடி நின்றிருந்தாள் அகல்யா.

ஏற்கனவே தன் நண்பன் மேல் இருந்த கோபம் இப்பொழுது தன் தங்கையாய் ஏற்றவுடன் அழுகையாய் அவளைப் பார்த்ததும் அவனின் கோபம் அவனின் எல்லையைத் தாண்டி சென்று விட்டது.

வேகமாக அங்கே சென்றவன் அகல்யாவின் கையை பிடித்திருந்த அந்த பெண்ணின் கையிலிருந்து அகல்யாவின் கையை விடுவித்தவன்,

"யாரு நீங்க எதுக்கு இங்கே வந்து சத்தம் போட்டுட்டு இருக்கீங்க.. இது ஹாஸ்பிடலா இல்லை சந்தை கடையா உங்க இஷ்டத்துக்கு இருக்க.." என்று அந்த வயதானவளை பார்த்து திட்டினான்.

அவன் அகல்யாவின் கையை பிடித்திருப்பதை பார்த்தவர்,

"இவன் யாருடி.. அங்கேயிருந்து இங்கே வந்ததும் இவனை பிடிச்சிட்டியா.. அது எப்படி டி உனக்கு மட்டும் எங்க போனாலும் இந்த ஆம்பளைங்க சப்போர்ட் பண்றாங்க.. எங்கே போனாலும் ஒருத்தனை பிடிச்சிடுவியா.. உனக்கு கொழுப்பு எடுத்து திரியறியா.. வேலைக்கு போறேன் பிள்ளைங்கள வளர்க்கிறேன்னு இன்னைக்கு என் பேரனை இப்படி படுக்க வச்சிட்டியேடி மூதேவி.." என்று அவளை திட்டியவர் ஆதவனிடம் திரும்பி,

"ஏன்டா வீட்ல உங்களுக்கு பொண்டாட்டி பிள்ளைங்க இருக்காங்களா இல்லையா.. இவளை மாறி இருந்தா தான் உங்களுக்கெல்லாம் பிடிக்குமோ.. அது என்னடா அடுத்தவன் பொண்டாட்டின்னு தெரிஞ்சும் போறீங்க.. நீங்கெல்லாம் என்ன சென்மமோ.." என்று அவர் போக்கில் திட்டிக் கொண்டிருந்தார்.

அவரின் பேச்சு அத்தனை நல்லதாய் இருக்கவில்லை.. அவரின் பேச்சுக்களை காதில் கேட்க முடியாமல், " அய்யோ போதும் அத்தை உங்களோட நாராசமான பேச்செல்லாம்.. இவரு எங்க அண்ணன் அத்தை.. அது மட்டுமில்லாம நம்ம நவியை காப்பாத்தினதும் இவங்க தான்.. ஒரு அண்ணனை போய் தங்கையோட இனைச்சி வச்சி பேசுறீங்களா நீங்கெல்லாம் மனுசங்க தானா.." என பாரம் தாங்காமல் இறக்கிவிட்டாள்.

தன்னை திட்டிய போது பொருத்துக் போனவள் தனக்கு உதவி செய்தவர்களை நிந்திக்கும் போது சீறியெழுந்து விட்டாள் பெண்ணவள்.


"ஆமாடி நாங்க மனுசங்க இல்லை தான்.. நீதான் மனுசியாச்சே அதான் உன்னோட சந்தோஷத்துக்கு என் பேரன் தடையா இருக்கான்னு தானே அவனை இப்படி படுக்க வச்சிட்ட. . நீயெல்லாம் நல்லாருப்பியா டி.." என அப்போது வாய் அடங்காமல் பேசிக் கொண்டிருந்தவரை


" ஷெட்டாப்.."என்ற அழுத்தமான குரலில் வாயை கப்பென பொத்திக் கொண்டார் பயத்துடன்.

அந்த குரலில் இருந்த அழுத்தம் அவரை அமைதியடைய வைத்தது.

குரல் வந்த திசையில் அனைவரும் பார்க்க அங்கே அகஸ்டின் விநாயகத்துடன் நின்றிருந்தான்.


நிழலை வருடும் நிஜம் தொடரும்..🌹


அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ண பட்டூஸ்க்கு நன்றி
 

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
255
144
43
Theni
அகஸ்டீன் என்னதான் நினைக்கிறான்.
 

Vimala

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 10, 2023
104
44
28
Trichy
அகஸ்டீனுக்கும், அகல்யாவுக்கும் ஏதோ சம்மந்தம் இருக்கு