• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் - 26

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,051
473
113
Tirupur
நன்றாக உறங்கி கொண்டிருந்த ஆதர்ஷ் எழுந்தவன் சுற்றிலும் தன் தாயை தேடினான்.. தன் தமையனுடன் இருக்கக் கூடும் என்று யோசித்தவன் அங்கே சென்றான்.

அங்கே நிறைய பேர் இருக்கவும் இரவு தன்னை அழைத்து வந்த ஆடவனை பார்த்த போதும் சற்று பயத்துடன் தன் தாயின் அருகில் வந்தான்.

அங்கே பயத்துடன் வந்தவனை பார்த்த அகஸ்டினின் கண்கள் மென்மையாய் அவனை வருடியது.

தன்னருகே வந்த தன் தலைமகனை கைப்பிடித்து தன்னருகே வைத்துக் கொண்டாள் பெண்ணவள்.

அவனை கண்ட ரூபினி சிரிப்புடன், "ஹலோ பாஸ் வணக்கம்.. நல்ல தூக்கமோ.. ஓகே ஓகே போய் பல் விளக்கிட்டு வாங்க டீ குடிக்கலாம்.." என்றாள் இயல்பாய்.


அவளின் சிரிப்பான பேச்சும் அவனை அழைத்த விதமும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.. இருந்தும் தன் தாயின் முகத்தை பார்த்தான்.. அவளின் சிரிப்பும் தலையாட்டலும் அவனுக்கு அனுமதி வழங்கிய பின்பு அங்கேயிருந்த குளியலைறைக்கு சென்றான்.

அதை கண்ட ரூபினி, "ஆனாலும் அத்தான் உங்க தங்கச்சி பிள்ளைகளை ரொம்ப பயமுறுத்தி வச்சிருக்காங்க.." தன் கணவனிடம் நொடித்தாள்.

அதை கண்ட ஆதவனுக்கு தன்னவளின் மேல் காதல் பெருகியது.. தான் காட்டி ஒரு கோட்டை வைத்து ஓவியம் வரைந்தவளின் மேல் அதீதமான காதல் பொங்கியது.

ஆனால் அகல்யாவோ உண்மையாகவே அவள் கோபித்ததாக நினைத்து, "அய்யோ அண்ணி அப்படி எல்லாம் இல்லை.. பசங்களை காப்பாத்த தான் நான் இன்னும் உயிரோடவே இருக்கேன்.. இல்லைன்னா என்னைக்கோ இந்த உடல் மண்ணுக்கு உரமாயிருக்கும்.. எங்களுக்கு இருந்த ஆபத்துல தான் அவங்க யாருகிட்டேயும் அவ்வளவா வாங்க மாட்டாங்க.. அதுவே அவங்களுக்கு பழகிடுச்சி அண்ணி.. வேற எதுவும் இல்லை.." என்றாள் தங்களை அவளுக்கு புரிய வைத்திடும் நோக்கில்.

அதை கேட்ட ரூபினிக்கு சிரிப்பு தான் வந்தது.. அகல்யாவிடம் திரும்பியவள்,

"ஏன் அகல்யா இவ்வளவு இன்னசென்டா இருக்கீங்க.." என்று சொல்லிக் கொண்டே அவளை கட்டியணைத்தாள்.

அப்பொழுது ஆரா குட்டி தன் தாயிடம், "அம்மா ஆனு ஆனு.." என்று இருவரையும் சேர்த்து கட்டியணைத்தாள்.


அவளை இருவரும் சேர்ந்தே தூக்கி கொண்டனர்.. அகல்யா அவளிற்கு முத்தம் கொடுத்தாள்.

சிறிது நேரத்தில் அங்கிருந்த அனைவரையும் சாப்பிட வைத்து விட்டு ரூபினி கிளம்பவும் அகஸ்டினும் ஆதவனும் ஆதர்ஷை அழைத்துக் கொண்டு சென்றனர்.

அவள் தடுக்கத் தான் நினைத்தாள்.. ஆனால் ஆதவன் அவளை சமாதானம் செய்து அழைத்து சென்று விட்டான் அகஸ்டினின் கட்டளைப்படி.


இங்கே பள்ளிக்கு வந்த அகஸ்டின் பாத்ரூம் அருகே இருந்த கேமிராவை செக் செய்தான்..

பின்பு அங்கிருந்த பணியாட்களை அழைத்து வேன் எல்லாம் சென்று விட்டாலும் மீண்டும் பள்ளி அறையிலிருந்து பாத்ரூம் வரை மீண்டும் செக் செய்து விட்டு தான் கிளம்ப வேண்டும் என கட்டளையிட்டான்.

அதே போல் பள்ளியில் சில மாற்றங்களை செய்தவன் மீண்டும் தன் அலுவலகத்திற்கு சென்றான்.. அவனுடனே இருந்த ஆதவனும் கூட அதை எல்லாம் பார்த்து எதுவும் கேட்கவில்லை.. பின்னே அவன் எதற்காக செய்தாலும் கூட நல்லது தானே செய்தான்.. ஆனாலும் அகஸ்டினை யோசனையாக பார்க்கும் பார்வையை நிறுத்தவில்லை.. அதை உணர்ந்தவனும் அதற்கு பதிலளிக்காமல் மறைத்தான்.


அந்தி சாயும் நேரத்திலே வேகமாய் அந்த வீட்டின் முன் நின்றது அந்த கார்.. அதிலிருந்து கோபமாய் இறங்கினார் பவளம்.

கருணாகரன் வீட்டின் முன்னே நின்ற தன் காரிலிருந்து இறங்கியவர் வேகமாய் உள்ளே சென்றார்.

அங்கே கூடத்தில் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தான் கருணாகரன்.. ஊரில் பெரிய மனிதன் என்ற போர்வையில் வாழும் அரக்கன்.

ஊரில் நல்லது செய்வதும் பின்பு அதை வைத்து பாமர மக்களிடம் அடித்து பிழைக்கும் பிழைப்பை கொண்டவன்.. சுத்தமாய் கருணை உள்ளம் இல்லா கொலைகாரன்.. பழி பாவத்துக்கு அஞ்சிடாதவன்.

அந்த ஊரில் வட்டிக்கு கடன் கொடுப்பவன்.. ஆனால் அவர்கள் அந்த கடனை கட்டி முடிப்பதற்குள்ளாகவே அவர்கள் ரத்தத்தை உறிஞ்சி எடுத்திடும் கொடூர அரக்கன்.

அதுவும் கடன் வாங்கியவர்களில் வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தால் போதும் அவர்களின் வாழ்க்கையை சிதைத்து சின்னா பின்னாமாக்கிவிடுவான்.. அதற்கு பயந்த தங்களின் பெண் பிள்ளைகளை மறைத்து வைத்து வாழ்கின்றனர் அந்த ஊர் மக்களில் சிலர்.. இன்னும் சிலரோ பெண் குழந்தை பிறந்து சில மாதங்களிலே ஊரை விட்டு போய் விடுவார்கள்.

இல்லை வயதிற்கு வந்தவுடன் படிக்கவென கல்லூரிக்கு அனுப்புபவர்கள் படித்து மடித்து அங்கே கல்யாணம் முடித்து தான் அழைத்து வருவார்கள்.

அப்படிபட்ட அரக்கன் தான் அகல்யாவை தேடி கொண்டிருக்கிறான் பவளத்தின் அனுமதியோடு.

இப்பொழுதும் அங்கே வந்தவள் கருணாகரனிடம் சென்றவள்,

"கருணா தம்பி அந்த சிறுக்கி அங்கே தான் இருக்கா.. அவளை அப்படியே விடக்கூடாது தம்பி..சீக்கிரம் அவளை அங்கிருந்து கூட்டிட்டு வர வழியை பாருங்க.. நான் போய் கூப்பிட்டா அவளுக்கு சப்போர்ட் பண்ண ஆளுங்க வந்துட்டு இருக்கு.. அவளை வரவழைக்கனும்னா அந்த பசங்களை தான் முன்னே வர வைக்கனும்.. எப்படியாவது அந்த பசங்களை இங்கே கொண்டு வந்துருங்க.. பின்னாடியே அந்த சிறுக்கியும் வந்துருவா.." என்று வஞ்சகமாய் திட்டம் தீட்டிக் கொடுத்தாள்.

அதைக் கேட்ட கருணாகரனின் விழியில் பேராசை மின்னியது..அவள் கூறியதற்கு தலையைசத்தவன் அவளை இங்கே கொண்டு வருவதற்கான முதல் படியாய் அவளின் பிள்ளைகளின் தூக்க சொன்னான்.

ஆனால் அவனறியாதது அவர்களை காவல் காக்கவென சிங்கம் ஒன்று உள்ளது என்பதை அவன் அறியாமல் போனது அவர்களின் அறியாமையே.

பவளத்தை பார்த்தவன், "நீ போ பவளம் அவ இங்கே சீக்கிரம் வருவா.. ஆமா அந்த துவாரகன் பயல் பின்னாடியே போய் உன் மருமக இருக்கற இடத்தை கண்டு பிடிச்சிட்டே போல.. ஆனாலும் உன்னை அடிச்சிக்க ஆளே இல்லை பவளம்.. நீ போ இனி நான் பாத்துக்குறேன்.." என்று அவளை அனுப்பி வைத்தவன் வஞ்சகமாய் சிரித்துக் கொண்டான் உள்ளுக்குள்.

ஆடு தானே வந்து தலையை கொடுத்து விட்டு சென்றதாக எண்ணினான்.. ஆனால் அவன் அறியாதது பவளம் தான் அவனின் தலையை சிங்கத்திடம் ஒப்படைக்க வழிவகுத்து சென்றுள்ளாள் என்று.


இங்கே அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அகஸ்டின் தன் கைகடிகாரத்தை பார்த்தன்.. அவன் பார்ப்பதை ஆதவனும் கண்டான்.. எப்பொழுதும் நேரம் காலம் பார்த்து வேலை செய்பவினில்லை அகஸ்டின்.. இன்று நேரத்தை பார்த்தது புதிதாய் இருந்தது.

தன் வேலையை பார்த்துக் கொண்டே தன் நண்பனையும் நோட்டம் விட்டான்.. தன்னை அவன் கவனிப்பது உணர்ந்தாலும் எதுவும் கூறாமல் தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தான் அகஸ்டின்.

சற்று நேரத்தில் தன் அலைபேசியை எடுத்து யாருக்கோ கால் செய்தான்.. அந்த பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும்,

"நான் அகஸ்டின் பேசுறேன்.. நான் காலையில சொன்ன மாறி ஆதர்ஷை என் டிரைவரோடு அனுப்பி வைத்து விடுங்க.." என்று காலை கட் பண்ணினான்.

மீண்டும் வேலையில் தன்னை மூழ்கடிக்க நினைத்தவனுக்கு அதற்கு மேல் அங்கே உட்கார பிடித்தம் இல்லை.. மெதுவாய் எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு ஆதவனிடமும் சொல்லாமல் வெளியேற முயன்றான்.

அவன் கிளம்புகிறான் என்பதை அறிந்த ஆதவன், "பாஸ் இன்னைக்கு கிளையண்ட் மீட்டிங் இருக்கு.." என்றான் அவனை தடுத்து நிறுத்த முயன்றபடி.

"நீ பாத்துக்கோ ஆதவ்.. நான் போறேன்.." என்று தன்னை திரும்பியும் பார்க்காமல் சென்ற நண்பனின் மாற்றம் மனதுக்கு இதமாய் தான் இருந்தது.

ஆனால் தன் நண்பன் எதையோ மறைக்கிறான் என்பதை அறிந்த ஆதவனுக்கு அது என்னவாய் இருக்கும் என்ற கேள்வி தான்.

தன் மனம் போன போக்கால் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தவனுக்கு நவிஷின் நினைவு வந்து பாடாய்படுத்தியது.. அவர்களை பார்க்க போலாம் என்றாலும் அவனை அவன் மனமே தடுத்து நிறுத்தியது.

மீண்டும் அவர்களை சந்தித்த கடற்கரைக்கே வந்தமர்ந்தான்.. அவனின் மனம் முழுவதும் அன்று தன் மேல் தண்ணீர் அடித்து விட்டு மன்னிப்பு கேட்ட அந்த சிறுவனின் முகம் தான் தங்கியது.

மனம் ஏதோ பாரமாய் உணர்ந்தான்.. அவன் மனம் வெறுமையாய் வலிகளை கண்டது.

' எத்தனை வருட தவம்.. எத்தனை வருட வேள்வி.. இந்த சூழ்நிலையிலா அவளை சந்திக்க வேண்டும்.. இறைவா ஏன் உனக்கு ஓரவஞ்சனை.. ஏன் எதற்காக இன்னும் இன்னும் என் வலிகளை கூட்டிச் செல்கிறாய்.. அம்மா முடியலை மா.. ரொம்ப வலிக்குது மா.. ஏன் மா என்னை மட்டும் இப்படி வளர்த்தீங்க.. ஏன்மா என்னை விட்டு தனியா போனீங்க.. நான் எதையும் ஆசைப்படக்கூட தகுதி இல்லாதவன் மா.. ஏன் மா என் விதி நான் ஆசைப்பட்டதும் கிடைக்காம என் கண் முன்னாடியே அது அனுபவிக்குற வலி தாங்க முடியலை மா.. எல்லாம் இருந்தும் இந்த அகஸ்டின் பொணமா தான் மா வாழுறேன்.. ' தன்னை விட்டு சென்ற தன் தாயிடம் தன் மனக்குமுறலை கொட்டிக் கொண்டிருந்தான்.

கடலலையே பார்த்தவனுக்கு அந்த கரையை தீண்டும் அலையாய் மனம் அலைபாய்ந்ததை தடுக்க முடியவில்லை.

அவன் கண்களிலும் கண்ணீர் கரை கட்டியிருந்தது.. இதுவரை தாயின் இழப்பை தவிர வேறெதற்கும் கலங்காத ஆண்மகன் இன்று கலங்கி போய் அமர்ந்திருந்தான்.

அவனின் குடும்பமே அவனை ஒதுக்கி வைத்த போதும் மனம் வருந்தாதவன் எத்தனையோ விமர்சனங்களை கடந்து வந்தவன் இன்று ஒரு பெண்ணின் வலியை கண்டு கடந்து வரமுடியாமல் தவிக்கிறான் துடிக்கிறான்.. இதற்கான பதில் காலத்தின் கையிலே விடையாய் உள்ளது.

எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தானே கண்களுக்கு மெதுவாய் இருட்டு தட்டுப்படவும் தன்னை தேற்றிக் கொண்டு எழுந்தான்.

அகஸ்டினின் குணம் இது தான்.. எல்லா விஷயங்களுக்கும் அடுத்த நொடி கடந்து வந்து விடுவான்.. ஆனால் அதற்குரிய தீர்வுடன்.. இதோ இப்பொழுதும் அவனின் மனக்குழப்பத்திற்கு தீர்வை கிடைத்த நிம்மதியில் எழுந்தான்.

தன் பேண்டில் இருந்த மணலை தட்டிக் கொண்டு எழுந்தவன் மெதுவாய் தன் காரை நோக்கி சென்றான்.. முதலில் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்ற நினைப்பில்.


தன் சிந்தனையில் மருத்துவமனைக்கு வந்தவன் அங்கே அகல்யாவுடன் ஆதவன் ரூபினி ஆராவும் அவர்களுடன் இன்னும் இரு வயதானவர்கள் இருந்தனர்.

அவர்களையே யோசனையாய் பார்த்தபடி வந்தவன் நவிஷின் அருகில் சென்றவன் அவனின் உடல்நலத்தை கண்களால் பார்த்து விட்டு கேள்வியாய் அகல்யாவையும் ஆதவனையும் பார்த்தான்.

அவளுக்கு அவனின் பார்வையின் கேள்வி புரிந்ததோ இல்லை எதார்த்தமாக சென்னாளோ, "இப்போ பரவாயில்லை சார்.. ரெண்டு நாள்ல வீட்டுக்கு போயிடலாம்னு டாக்டர் சொல்லிருக்காங்க.. அவன் சாப்பிட்டான் சார்.." என்று பதில் கூறினாள்.

அதை கண்டவனின் விழிகள் மின்னியதை ஆதவனும் ரூபினியும் உணர்ந்தனர்.


மீண்டும் தன் பார்வையை கேள்வியாய் ஆதவனை பார்த்தான்.. அவனின் கேள்வியின் பொருளை உணர்ந்தவன்,

"இவரு தனசேகரன் சார் டா.. சாரதா இல்லத்தோட நிர்வாகி.. அப்புறம் இவரு டாக்டர் ராஜா.." என்று இருவரையும் அறிமுகப்படுத்தினான்.

அவர்கள் இருவரும் அகஸ்டினை பார்த்து மென்புன்னகை செய்தனர்.. அவர்களின் புன்னகையில் அகஸ்டினும் மெலிதாய் சிரித்து விட்டு,

"ஹலோ சார் வணக்கம்.. நான் அகஸ்டின்.." என்று மேலே சொல்ல வந்தவரை ,

"ராயல் குரூப்ஸ் சேர்மன்..அண்ட உங்க ஸ்கூல்ல தான் என் பொண்ணு அகல்யா டீச்சரா ஓர்க் பன்றா.. என் பேரபசங்களும் உங்க ஸ்கூல்ல படிக்குறாங்க.. ரைட்.." என்று புன்னைகயாய் பதில் கூறினார் ராஜா.

எப்படி என்ற கேள்வியுடன் ராஜாவை பார்த்த அகஸ்டினுக்கு,

"உங்களை பத்தி எங்களுக்கு நல்லா தெரியும் மிஸ்டர் அகஸ்டின்.. எங்க பொண்ணுக்கு ஒரு பாதுக்காப்பு உங்க ஸ்கூல் தான்.. உங்க ஸ்கூல் வாண்டட் பாத்து நாங்க தான் போக சொன்னோம்.." என்றார் தனசேகரன்.


இந்த தகவல் அவனுக்கு புதிது.. அதை ஏற்றுக் கொண்டவன்,

"தேங்க்யூ சார்.. அண்ட் உங்களுக்கும் மிஸ்ஸஸ் அகல்யா.. என் மேல வச்ச நம்பிக்கைக்கு.. " என்றான் யாருக்கும் எதுவும் விளங்காத குரலில்.

அதை மற்றவர்கள் சிரிப்புடன் ஏற்றுக் கொண்டாலும் ஆதவனுக்கு அகஸ்டினின் பேச்சில் ஏதோ உள்குத்து இருப்பதாகவே தோன்றியது.. யோசனையாகவே அகஸ்டினை பார்த்தான் ஆதவன்.




நிழலை வருடும் நிஜம் தொடரும்..🌹


அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ண பட்டூஸ்க்கு நன்றி.
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
சூப்பரா போகுதுடா 👌
அப்படின்னா முதல்ல கெஸ் பண்ணது தான்... அகஸ்டின் மனசுல இருக்குற பொண்ணு அகல்யா தான் 🤩
 

Mayuri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 2, 2024
36
11
8
Bangalore
கருணாகரனுக்கு அழிவு ஆரம்பம் ஆகிடுச்சு. எவனும் இனி அகல்யா அவளோட பிள்ளைங்களோட நிழலை கூட தொட முடியாது. அவங்களை காக்க அகஸ்டினும், ஆதவனும் அரணா நிக்கிறாங்களே..
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
😃😃😃😃மிஸ்ஸஸ் அகல்யானு சொன்னா ஏதாவது முக்கியமான விஷயம் அகஸ்டின்கு தெரியவரும்னு நூல் விடுறான்