• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் - 27

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
தனசேகரனும் ராஜாவும் சிறிது நேரம் இருந்து எல்லோரிடமும் பேசிவிட்டு சென்றனர்.. அவர்கள் செல்லும் போது ராஜா விநாயகத்தை பார்த்து பேசிவிட்டு தான் சென்றார்.. அந்த மருத்துவமனையை பற்றி அவருக்கு முழுதாக தெரியும்.. அங்கே கிடைக்கும் டிரிட்மெண்ட் ஒரு பெரிய பர்ஸ்ட் கிளாஸ் மருத்துவமனையின் சிறப்பை கொண்டுள்ளது.. பணத்துக்காக செயல்படும் மருத்துவமனை அல்ல.. நோய் என்று வரும் ஏழை எளியோர்க்கு அந்த நோய் இருந்த இடம் தெரியாமல் போகும் அந்த அளவுக்கு நோயாளிகளுக்கு கவனிப்பு பெஸ்டாக இருக்கும்.. ராஜா விசாரித்தது கூட ஒரு மனதின் சந்தேகத்திற்க்காக தான்.

அவர்கள் விடைபெற்று சென்றதும் ரூபினி தன் தாய் சமைத்து கொடுத்த உணவை எல்லோருக்கும் கொடுத்தாள்.. ஏன் இப்போதெல்லாம் அகஸ்டினும் அங்கேயே அவர்களுடனே தான் சாப்பிடுகிறான்.

எல்லோரும் சாப்பிட்டதும் எல்லோரும் கிளம்பும் சமயம் ஆரா அகல்யாவிடம் வந்தவள், "அத்தை பாப்பா பாத்து..." என்று கூறினாள்.

அதை கேட்ட அகல்யா, "கண்டிப்பா டா தங்கம் அத்தை நாளைக்கு பாப்பா பாட்டு பாடுறேன்.." என்றாள் சமாதானமாய்.


" இல்லை இப்பவே தேனும்.." என்று மழலையின் அடம்பிடித்தாள்.

அவளின் அடத்தை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தாள் அகல்யா.. அதை பார்த்து சிரித்த ரூபினி,

"அகல்யா நீங்க பாடாம அவ விடமாட்டா.. நீங்களா மாட்டிக்கிட்டீங்க.." என்றாள் சிரித்தபடி.

அப்பொழுது தான் அங்கிருந்த அகஸ்டினுக்கும் ஆதவனுக்கும் புரிந்தது.. ஆராவின் பிடிவாதத்துக்குகான காரணம்.

அகல்யா செய்வதறியாமல் நின்றிருக்க ரூபினியோ தன் மகளை சமாதானம் செய்ய முனைந்தாள்.


"ஆரா குட்டி அத்தை நாளைக்கு பாடுவாங்க டா.. இப்போ தூக்கம் வருது இல்லை.. வாங்கடா தங்கம் போலாம்.." அவளை சமாதானம் செய்ய முனைந்தாள்.

ஆனால் அவளின் மகளோ, "நோ மம்மி.. பாப்பா பாட்டு தேனும்.." என்றாள் அழுகை குரலில்.

அவள் அழுகவும் பொறுக்கமாட்டாமல் அவளை தூக்கிக் கொண்ட அகல்யாவை பார்த்த ஆதர்ஷ், "அம்மா குட்டிமா பாட்டு தானே கேட்குறா.. பாடுங்க மா.." என்று சொல்ல அதையே நவிஷின் விழிகளும் பிரதிபலிக்க ஆராவை சமாதானம் செய்து கொண்டு தன் குரலையும் சரி செய்து கொண்டு பாட ஆரம்பித்தாள் அகல்யா.


கருப்பு நிலா
கருப்பு நிலா

கருப்பு நிலா
நீதான் கலங்குவது ஏன்
துளி துளியாய் கண்ணீர்
விழுவது ஏன்

சின்ன மானே
மாங்குயிலே உன் மனசுல
என்ன குறை பெத்த ஆத்தா
போல் இருப்பேன் இந்த
பூமியில் வாழும் வர

எட்டு திசை
யாவும் கட்டி அரசாள
வந்த ராசா நீதானே

கருப்பு நிலா நீதான்
கலங்குவது ஏன் துளி
துளியாய் கண்ணீர்
விழுவது ஏன்

பத்து மாசம்
மடியேந்தி பெத்தெடுத்த
மகராசி பச்ச புள்ள உன்ன
விட்டு போனதென்னி
அழுதாயா

மாமன் வந்து
என்னை காக்க நானும்
வந்து உன்னை தாக்க
நாம் விரும்பும் இன்பம்
எல்லாம் நாளை வரும்
நமக்காக

காலம் உள்ள
காலம் வாழும் இந்த
பாசம் பூ விழி இமை
மூடியே சின்ன பூவே
கண்ணுறங்கு

கருப்பு நிலா
நீதான் கலங்குவது ஏன்
துளி துளியாய் கண்ணீர்
விழுவது ஏன்


வண்ண வண்ண
முகம் காட்டி வானவில்லின்
நிறம் காட்டி சின்ன சின்ன
மழலை பேசி சித்திரம்
போல் மகனே வா

செம்பருத்தி மலர்
போலே சொக்க வெள்ளி
மணி போலே கன்னம்
ரெண்டும் மின்ன மின்ன
கண்மணியே மடிமேல் வா

பாட்டு தமிழ்
பாட்டு பாட அத கேட்டு
ஆடிடும் விளையாடிடும்
தங்க தேரே நீதானே

கருப்பு நிலா
நீதான் கலங்குவது ஏன்
துளி துளியாய் கண்ணீர்
விழுவது ஏன்

யே சின்ன மானே
மாங்குயிலே உன் மனசுல
என்ன குறை பெத்த ஆத்தா
போல் இருப்பேன் இந்த
பூமியில் வாழும் வர

எட்டு திசை
யாவும் கட்டி அரசாள
வந்த ராசா நீதானே

கருப்பு நிலா நீதான்
கலங்குவது ஏன் துளி
துளியாய் கண்ணீர்
விழுவது ஏன்


அகல்யா பாடி முடிக்கவும் ஆரா அவளின் தோளிலே தூங்கி விட்டாள்.. அவளின் குரலை கேட்ட ஆதவனுக்கும் ரூபினிக்கும் சந்தோஷமாய் இருந்தது.

அகஸ்டினுக்கோ அவன் நிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.. அவளின் அந்த பாடல் அவனுக்காக அவள் பாடியது போல் இருந்தது.

அந்த பாடலில் அவன் மனமும் கண்களும் கலங்கி தான் போயின..


ஆரா தூங்கியதும் அவளை தூக்கிக் கொண்டு ஆதவனும் ரூபினியும் காலையில் வருவதாக சொல்லிவிட்டு சென்றனர்.


அகஸ்டின் அங்கே இருக்கும் தன் அறைக்கு வந்தான்.. உறக்கம் வரவில்லை.. கண்களில் கண்ணீர் வழிந்தது.

" என்னை மறந்துட்டியா கண்ணம்மா.. என்னால முடியலை டி.. வாழவும் முடியாம சாகவும் முடியாம தவிக்கிற நேரத்துல இந்த கோலத்துல வந்து நிக்குறியேடி பாவி.. நான் என்னடி பண்ணுவேன்.. நான் யாருக்காகவும் இப்படி தவிச்ச துடிச்சதில்லை டி.. ஆனா உன் மேல நான் வச்ச அன்பு என்னை கோழையாக்குதே.. இது இன்னும் ஆதவனுக்கு தெரியாது டி.. தெரிஞ்சா என்ன பண்ணுவானே தெரியலை..

என்னை என் குடும்பம் ஒதுக்கி வச்ச போது கூட நான் இப்படி துடிச்சதில்லை டி.. ஆனா இப்போ நான் துடிக்கிறேன்.. அதுவும் உன்னை இப்படி பாக்கும் போது எல்லாம் நான் யாருன்னு சொல்ல முடியாம தவிக்கற நொடி நரகத்துக்கு மேலே டி.. இத்தனை வருசத்துக்கு அப்புறம் என் கண்ல விழற நீ இப்படியாடி விழனும் பாப்பு மா.." தன் மொபைலில் இருந்த
அகல்யாவை பார்த்து பேசினான்.

அந்த புகைப்படத்தில் அகல்யா தாவணி பாவடையில் தலை நிறைய பூ வைத்து சிரித்த கண்களுடன் ஏதோ ஒரு குழந்தையை கொஞ்சி கொண்டிருந்தாள்.. அந்த புகைப்படம் அவளறியாமல் எடுக்கப்பட்டிருந்தது என்பதை அவளின் இயல்பான புன்னகையில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.


அதை பார்த்துக் கொண்டே அந்த புகைப்படத்தை கைகளால் வருடிக் கொண்டே பெண்ணவளிடம் தன் மனக்குமுறலை கொட்டிக் கொண்டிருந்தான்.


இந்த காதல் தான் எத்தனை பெரிய வீரனையும் கோழை ஆக்குகிறது.. யாருக்கும் அடங்காமல் யாருக்கும் அஞ்சாமல் தன் நினைத்ததை விழி அசைவில் செயல் படுத்தும் வீரன் இன்று ஒரு பெண்ணின் மேல் கொண்ட காதல் அவனை பைத்தியமாக்குகிறது என்றால் அதன் வலி எந்தளவுக்கு அந்த ஆண்மகனை அழித்துக் கொண்டிருக்கும்.

நீண்ட நாட்களுக்கு அல்ல வருடங்களுக்கு பிறகு கேட்ட அவள் குரலில் தன்னை மறந்து நிம்மதியில் படுத்தான் அகஸ்டின்.. மூடிய கண்களுக்குள் வந்து நின்று புன்னகைத்தாள் அகல்யா..' தூங்கு மாமூ..' என்றவளின் வார்த்தையில் ஆடவன் நிம்மதியாய் தூங்கினான்.

மருத்துவமனையில் இரண்டு நாட்கள் போனது தெரியாமல் ஆதவனும் ரூபினியும் அவளுடனே இருந்தது அவளுக்கு பெரிய ஆறுதலாகியிருந்தது..அதுவும் அகஸ்டினின் பார்வை தான் அவளை மொய்த்தே தவிர அவன் பிள்ளைகளிடம் காட்டிய அந்த அன்பு அவளுக்கு கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.

ஆனால் சில நேரங்களில் அழுத்தமாக பார்க்கும் அவன் பார்வையின் அர்த்தம் மட்டும் தான் விளங்காது.

மற்றபடி அவளுக்கு அங்கே கிடைத்த புது உறவுகளும் நிம்மதியும் அவள் வாழ்க்கையில் இதுவரை அனுபவித்திராது.


இரண்டு நாளில் வீடு வந்தவளுக்கு கூடவே இருந்து உதவி புரிந்த ரூபினியும் ஆதவனும் தங்களின் வீடு நோக்கி சென்றனர்.

அவர்கள் சென்றதும் தாயும் பிள்ளைகளும் மட்டும் மீண்டும் மூவராகினர்.


மறுநாள் மீண்டும் பள்ளிக்கு எப்படி விடுமுறை சொல்வது என்று யோசித்தாள்.. ஏற்கனவே அவளுக்கு அகஸ்டின் மேலும் ஒரு வாரம் தரச் சொல்லியிருந்தான் பிரின்சிபலிடம்.


அவள் பிரின்சிபலிற்கு கால் செய்யவும் உடனே அவளின் லீவுக்கு அனுமதி கொடுத்தார்.


ஒரு வாரம் தன் மகன்களுடன் இருந்தவள் அடுத்த வாரத்தில் இருந்து மீண்டும் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தாள்.

இந்த ஒரு வாரத்தில் ரூபினியும் ஆராவும் தினமும் வந்து விடுவார்கள்.

அப்பொழுது ஆரா கேட்கும் பாடலை தினமும் பாடுவது என்று அவளுக்கும் மகிழ்வாய் இருந்தனர்.. அவ்வப்போது ஆதவனும் சேர்ந்து கொள்வான்.

இதில் மிகவும் பாதிக்கப்பட்டது அகஸ்டின் தான்.. அகல்யாவையும் பிள்ளைகளையும் பார்க்க முடியாமல் தவித்து போனான்.. அவளின் வீட்டிற்கு சென்று பார்க்கவும் என்றாள் பார்ப்பவரின் கண்களுக்கு அது நல்லவிதமாக அமையாது என்றும் தோன்றியது.. தன்னால் அவளுக்கு எந்த கொட்டபெயரும் வருவதை அவன் விரும்பவில்லை.

சில வேலைகளில் அவனின் மொபைலில் அவள் பாடலை பதிந்து வைத்திருந்தவன் அதை வைத்து கேட்டுக் கொள்வான்.

அடுத்த வாரத்தில் அவள் பள்ளிக்கு வரவும் முதல் வேலையாய் அவர்களை காண பள்ளிக்கு வந்திருந்தான்.. அதுவும் ஆதவன் இல்லாமல்.

ஆதவன் இல்லாமல் அவன் எங்கும் செல்ல மாட்டான்.. ஆனால் இன்று அவளையும் பிள்ளைகளையும் காண ஓடி வந்து விட்டான்.

தூரத்திலிருந்தே அவர்களை கண்குளிர பார்த்து விட்டவன் நிறைந்த மனதுடன் அங்கிருந்து சென்று விட்டான்.

ஆனால் இவனின் இந்த செயல் ஆதவனின் கண்களுக்கு தப்பவில்லை என்பதை மறந்து விட்டான்.

ஆதவனின் சந்தேகம் அதிகம் ஆனது தான் மிச்சம்.

இங்கே தன் வீட்டில் போன் பேசி விட்டு வைத்த ஆதவனின் முகம் யோசனையில் சுருங்கியது.

அதை கவனித்த ரூபினி அவனருகே வந்தவள், "என்னாச்சு அத்தான்.. எதை இப்படி தீவிரமாக யோசிக்குறீங்க.." என்றாள் தலையை துவட்டியபடி.

அவளின் குரலில் நினைவுக்கு வந்தவன், "ஒன்னுமில்லை ஹனி.. உன் அண்ணனை தான் யோசிக்குறேன்.. அவன் எதுவோ என்கிட்ட மறைக்கிறான் டி.. அவனுக்கம் அகல்யாவுக்கும் முன்னவே தெரிந்திருக்குமோன்னு சந்தேகமா இருக்கு டி.. அப்படி தெரிந்திருந்தா ஏன் இந்த பொண்ணு யாருன்னு தெரியாத மாறி பேசனும்.. இதோ இப்போ கூட நான் இல்லாம ஸ்கூலுக்கு போயிருகக்கான் டி.. அதுவும் தூர இருந்தே அகல்யாவையும் பசங்களையும் பாத்துட்டு வந்துருக்கான் டி.. எதை மனசுல வச்சிட்டு இந்த நாய் பண்ணுதுன்னே தெரியலை டி.." என்றான் சிந்தனையுடனே.


" சரி அத்தான் பாத்துக்கலாம்.. உண்மையை ரொம்ப நாளைக்கு மறைக்க முடியாது அத்தான்.. சீக்கரம் உங்களுக்கு தெரிய வரும் அத்தான்.. இப்போ போய் ஆபிஸ் கிளம்புங்க.. நானும் பாப்பாவும் ஸ்கூலுக்கு போயிட்டு வர்றோம்.." என்றபடி கிளம்ப போனாள்.

அவள் சொன்னதை கேட்டவன், "அடியே நீங்க எதுக்குடி ஸ்கூலுக்கு போறிங்க.. அந்த பொண்ணை அங்கே வேலை செய்ய போயிருக்காடி.. அதை கெடுக்க அம்மாவும் மகளும் போறீங்களா.." என்றபடி கடிந்தான்.

" அய்யோ அத்தான் நான் நம்ம பாப்பாக்கு நம்ம ஸ்கூல்ல ஆதார் கார்டு பிடிக்குறாங்க இல்லை அதுக்கு போறோம்.. போங்க போய் வேலையை பாருங்க.." என்று கணவனை டீலில் விட்டுவிட்டு தன் மகளை கிளப்ப சென்றாள்.

" ஏன்டி கேம்ப் போடுறோம்னு சொன்னது ஒரு குத்தமா.. கடவுளே இந்த அண்ணனும் தங்கச்சிகிட்டயும் மாட்டிட்டு நான் படற பாடு இருக்கே.." என்று தனியாக பேசிக் கொண்டு புலம்பி கொண்டு சென்றான்.




நிழலை வருடும் நிஜம் தொடரும்..🌹



அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ண பட்டூஸ்க்கு நன்றி.
 

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
518
150
43
Dindugal
நான் கெஸ் பண்ணது சரிதான்.
ஆனா இவனை அகல்யாவுக்கு ஏன் தெரியல
 
  • Like
Reactions: ரமா

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
அகஸ்டினோட தவிப்புக்கு சீக்கிரம் ஒரு என்ட் கார்டு போடுங்கப்பா. பாவம் அவன்
 

Mayuri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 2, 2024
36
11
8
Bangalore
அகஸ்டின் ஆதவன்கிட்ட எப்ப சிக்கப் போறானோ தெரியல... ஆனா தெரிஞ்சதும் அவங்களை உடனே ஜோடி சேர்க்காம ஓயமாட்டான்.