• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் -28

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
தன் அலுவலகத்திற்கு வந்த ஆதவனுக்கு அங்கை சிரிப்புடன் தன் லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்த அகஸ்டினை பார்த்து ஜெர்க் ஆனான்.. ஒரு முறை உள்ளே பார்த்து மீண்டும் வெளியே சென்று பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே வந்தான்.

அகஸ்டினையே வித்தியாசமாய் பார்த்தவன் தன் இடத்தில் போய் அமர்ந்தான்.

ஆதவன் வந்ததையோ தன்னை வித்தியாசமாய் பார்த்தையோ உணராதவன் தன் போக்கில் சிரித்தபடி வேலை செய்து கொண்டிருந்தான்.

ஆதவனும் அவனை பார்த்துக் கொண்டே தான் வேலை செய்தான்.

அதற்கு மேலும் தாங்காது அவனிடம் சென்ற ஆதவன் அவனின் தோளை தொட்டு உலுக்கினான்.. அதில் சுயநினைவு பெற்றவன்,

"ஏய் லூசு எதுக்குடா இப்படி உலுக்குறா எருமை மாடு.." என்று திட்டினான்.

"யாரு நான் லூசா அடேய் ரொம்ப ஓவரா போறே டா.. ஆம நீ என்ன நெனப்புல இருக்க ராசா.. இந்த பைல் என்ன பன்னி வச்சிருக்கன்னு பாரு ராசா.." என்றான் முறைத்தபடி.

அதை பார்த்தவன் அப்பொழுது தான் தன் மடத்தனத்தை உணர்ந்தான்.. ஆதவனை பார்த்து,

"அது மச்சி ஏதோ ஞாபகத்துல ஒரு ஜீரோ சேர்த்து போட்டுட்டேன் டா.." என்றான் அசட்டு முழியுடன்.

அவனின் அந்த முழி அத்தனை அழகாய் இருந்தது.. ஆனால் ஏதோ இப்பொழுது தான் சிறுவயது பையன் போல் அவன் செய்யும் அட்டகாசம் தான் தாங்க முடியவில்லை.

அதை நினைத்து மனதினுள் சிரித்தவன் தன் சிரிப்பை வெளிக்காட்டாமல் முறைத்தான்.

" நீ என்ன டா உன் மனசுல நினைச்சிட்டு இருக்க.. ஏதோ நினைப்புல போடடுட்டுன்னு சொல்றீயா இதால எவ்வளவு பிரச்சனை வரும்னு யோசிச்சியா டா.." என்று திட்டியவன் அவனை சந்தேக கண் கொண்டு பார்ததான்.

அவன் சொன்னது புரிந்தாலும் இதை தான் மட்டுமே பார்த்து சரி பண்ணுவதில்லையே ஆதவனும் தானே செய்கிறான்.. நிச்சயம் அவன் கண்களில் விழாமல் போகாது என்ற எண்ணத்துடன் அவன் கொடுத்ததை மாற்றிக் கொண்டிருந்தான் அகஸ்டின்.

ஆனால் அவன் நினைத்ததை வாய் விட்டு சொல்லி விட முடியாது.. அப்படி சொன்னால் அதற்கும் அவன் தான் திட்டு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் மறுபேச்சு பேசாமல் அவன் சொன்ன பிழையை சரி பண்ணி கொண்டிருந்தான்.


தன் வேலையில் இருந்த அகஸ்டினை பார்த்த ஆதவன்,
"அகஸ்.." என்றான்

அவனோ அவனை நிமிர்ந்தும் பார்க்காமல், "ம்ம் சொல்லுடா மச்சான்.." என்றான் இயல்பாய்.

"என்கிட்ட எதுவும் மறைக்கியா மச்சான்.." என்றான் அவனை உற்றுப் பார்த்தபடி.

ஆதவன் அப்படி கேட்கவும் வேலை செய்து கொண்டிருந்த அகஸ்டினின் கைகள் அப்படியே அந்தரத்தில் நின்றது.

அதை பார்த்து மனதிற்குள் சிரித்தவனுக்கு வலிக்கவும் செய்தது.. தன்னிடமே மறைக்கிறானே அவனுக்கு தான் முக்கியம் இல்லையோ என்ற ஆதங்கம் எழுந்ததை தவிர்க்க முடியவில்லை.

தன்னையே விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருக்கும் தன் நண்பனின் பார்வையை உணர்ந்து மெதுவாய் பெருமூச்சு விட்டவன்,

"மச்சான் நீ என் வாழ்க்கையில எவ்வளவு முக்கியம்னு உனக்கு நல்லாவே தெரியும்.. அப்படிபட்ட உன்கிட்ட ஒரு விஷயம் மறைக்கிறேன் னா அதுக்கு காரணம் உன்னை நம்ப வச்ச ஏமாற்ற விருப்பம் இல்லை.. அது மட்டும் தான்.. அப்புறம் இன்னொரு விஷயம் அகல்யாவை எனக்கு தெரியும்.. ஆனா அகல்யாவுக்கு நான் யாருன்னு தெரியாது..

அதை என்னன்னு நானே உனக்கு ஒரு நாள் சொல்றேன்.. ஆனா இப்போ ரொம்ப முக்கியமானது அகல்யாவுக்கு விரிக்கப்பட்டிருக்கற வலை.. அதுல நவியும் ஆதுவும் மாட்டப்போறாங்க.. அவங்களை காப்பாத்தனும்.

அவங்க தான் அகல்யாவோட உயிர்.. அவங்களுக்காக எதுவும் செய்வா.. யோசிக்கமாட்டா.." என்று தன்னவளை பற்றி கூறியவன் தன் மொபைல் எடுத்து ஆன் செய்து அதில் அகல்யாவின் புகைப்படத்தை காட்டினான்.

அதை பார்த்த ஆதவனுக்கு மற்றொரு அதிர்ச்சியாய் இருந்தது. அந்த புகைப்படங்களில் இருந்த அகல்யாவின் தோற்றம் கோவிலின் உள்ளே வீற்றிருக்கும் கர்ப்பகிரகத்தை போல் இருந்தாள்.

அவளின் அந்த பூவூம் புன்னகையும் அத்தனை அழகானதாய் இருந்தது.

அகஸ்டின் காட்டியதால் ஒரு வீடியோவும் இருந்தது.. அதை ஓபன் பண்ண அதில் அகல்யா பாடியிருந்த பாடல் ஓடியது.

அது அவளுக்கு தெரியாமல் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோ.

அந்த பாட்டில் ஒரு குழந்தையை கையில் வைத்து அதன் அழுகையை நிறுத்த பாடியிருக்கிறாள் என்பதை பார்த்தவுடன் அறிந்து கொண்டான்.

அதையே பார்த்தவனின் விழிகள் வியப்பில் விரிந்தன.

எத்தனை அழகான குரல் இந்த பெண்ணுக்கு.. ஒரு முறை கேட்டிருக்கிறான் தான்.. ஆனால் இந்த குரலில் இருந்த மென்மை அவனுக்கும் மிகவும் பிடித்தன.

அதையே வைத்த கண் வாங்காமல் பார்த்தவனை கண்டு அகஸ்டினுக்கு பொறாமை உண்டானது.. வெடுக்கென அவன் கையில் இருந்த தன் மொபைலை பிடுங்கி கொண்டான்.

அவனின் பொறாமை ஆதவனுக்கு சிரிப்பை வரவழைத்தது.

" அடேய் அது என் தங்கச்சி டா.. என்கிட்டேயே பொறாமையா எருமை.." என்றான் பொய்யாய் கோபித்த படி.

"போய் வேலையை பாருடா.. இப்போ தான் வந்துட்டான் போட்டோவ பாக்க.." என்று அவனை துரத்தினான்.

அவனை முறைத்துக் கொண்டே சென்றவனை,

"ஆதவ்.." என்று அழைத்தான் யோசனையுடன்.

அவன் திரும்பி நிற்கவும், "அகல்யா கல்யாணத்துக்கு அப்புறம் என்ன நடந்துச்சின்னு தெரியனும்.. நம்ம சுகுமார் கிட்ட சொல்லி விசாரிக்க சொல்லு.. கான்பிடன்ஷியல்லா.." என்று மீண்டும் அவன் வேலைக்குள் தன்னை புகுத்திக் கொண்டான்.

அடுத்ததாய் ஆதவ் போய் நின்ற இடம் சுகுமாரின் அலுவலகம் தான்.. அவன் ஒரு பிரைவெட் டிடெக்டிவ் ஏஜென்ஸி வைத்துள்ளான்.. அகஸ்டின் கம்பெனிக்கு எல்லாவிதத்திலும் உறுதுணையாய் இருப்பவன்.. அகஸ்டினின் எதிரியை கண்டுபிடித்து கொடுப்பவன்.

இங்கே பள்ளிக்கு வந்த ரூபினி ஆராவை கூட்டிக் கொண்டு பள்ளியின் முதல்வர் அறைக்கு வந்தாள்.

அவளை கண்ட பிரின்சிபல், " குட் மார்னிங் மேம்.. வாங்க மேம்.. நீங்க வரப்போறதா சார் மார்னிங் சொன்னாரு மேம்... ஒரு நிமிஷம் மேம்.." என்றவர் வெளியே இருந்த பியூனை அழைத்து ஆதார் கார்டு எடுக்கும் இடத்திற்கு அழைத்து செல்ல சொன்னார்.

அவருக்கு ஒரு நன்றியை உதிர்த்துவிட்டு பியூனுடன் சென்றாள் ரூபினி.

ஆராவிற்கு ஆதார் கார்டு எடுத்து விட்டு வரும் போது அகல்யாவின் கிளாஸ் எங்கே உள்ளது என்று கேட்டாள் பியூனிடம்.


அவன் அகல்யாவின் கிளாஸில் கொண்டு விட்டு சென்றான்.. அவள் அகல்யாவை பார்க்க போகும் போது எட்டாம் வகுப்பு மானவிகளுக்கு வரலாறு பாடத்தை நடத்திக் கொண்டிருந்தாள்.

சர்வாதிகாரி முசோலினி ஹிட்லர் போன்ற தலைவர்களையும் அவர்கள் போரிட்ட ஆண்டுகளையும் புத்தகத்தை பார்க்காமல் அவ்வளவு எளிதாக சொல்லிக் கொடுத்தாள்.


அதை ஒரு ஓரமாய் நின்று கவனித்தாள் ரூபினி.. ஏன் எத்தனையோ வருடம் ஆயிற்று வரலாறை படித்து.. ஆனால் இன்று அகல்யாவின் பாடத்தை கவனித்த பிறகு மீண்டும் அதை படிக்க வேண்டும் என்ற ஆசையே வந்தது.

அதை கண்டு தனக்குத் தானே சிரித்தவள் அவள் வெளியே வருவதற்காக அங்கேயே நின்றிருந்தாள்.. ஆராவை அங்கிருந்த பிளே ரூமில் விளையாடிவிட்டு அவளை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு வந்திருந்தாள்.


அந்த நேரத்தில் அந்த வகுப்பு நேரம் முடிவடைதற்கான மணி அடிக்கவும் தன் கைகளில் பேப்பர் கட்டுடனும் புத்தகத்துடனும் வெளியே வந்தாள்.

அவளின் முன்னே சிரித்தபடி ரூபினி நிற்கவும் சந்தோஷத்தில் சிரித்தபடி அவளருகே வந்தவள் அவள் கையை படித்து சிறுகுழந்தை போல குதூகலத்துடன்,

"அண்ணி எங்க இங்கே வநாதுருக்கீங்க.. ஆரா குட்டி எங்க அண்ணி.." என்றாள் பரபரப்பாய்.


" அவ ப்ளே கேம்ல இருக்கா அகல்யா.. அப்பா என்ன ஒரு எக்ஸ்பிளேனேஷன்.. நிஜமா எங்களுக்குலாம் இப்படி ஒரு வரலாறு டீச்சர் கிடைக்கல பா.. ஐ ஆம் இம்பரஸிங் அகல்யா.. அதுவும் நீங்க லெசன் டீச் பண்ண வீதம் ரொம்பவே அருமை மா.." என்று சிலாகித்தாள்.

"அட நீங்க வேற அண்ணி எப்பவும் எடுக்கற கிளாஸ் தான்.. உங்களுக்கு புதுசா பாக்கறதுல அப்படி தெரிஞ்சிருக்கும் அண்ணி.." என்றாள் தன்மையாய்.

அகல்யாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்த ரூபினிக்கு தன் கணவன் சொன்ன விடயம் தான் நினைவுக்கு வந்தது.

அதிலிருந்து வெளி வந்தவள் அடல்யாவுடன் ஆராவை பார்க்க சென்றாள்.

போகும் வழியில் அகல்யா தன் கையில் உள்ள பேப்பர் புத்தகத்தை ஆசிரியர்கள் ஓய்வு அறையில் அவளின் டேபிளில் வைத்து விட்டு சென்றாள்.

அங்கே அகல்யாவுடன் ரூபினியை கண்ட மற்ற ஆசிரியர்கள் ரூபினிக்கு விஸ் செய்தனர்.

அவள் யார் என்று அங்கை இருக்கும் அனைவருக்கும் தெரியும்.. பள்ளி கல்லாரி ஆண்டு விழாக்களில் ஆதவன் அகஸ்டினுடன் வருவாள்.. அங்கே இருக்கும் அனைவருக்கும் அவளின் உயரம் தெரியும்.

அவளும் ஒற்றை தலையைசைப்புடன் ஏற்றுக் கொண்டாள்.. அப்போது வெளிப்பட்ட கம்பீரம் அகல்யா இதற்கு முன் பார்த்ததில்லை.. தன்னிடம் இருக்கும் ரூபினியும் மற்றவர்களின் முன்னே இருக்கும் ரூபினியும் வேறு வேறு என்று உணர்ந்து கொண்டாள்.

அவர்கள் இருவரும் ஆராவை பார்க்க போகும் போது அங்கே அவள் நவிஷ் ஆதர்ஷிடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.. அவளின் முகத்தில் புன்னகைக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.. அவள் தூளி ஆட இருவரும் அதை ஆட்டிவிட்டனர்.

அதை கண்ட பெண்கள் இருவருக்கும் மகிழ்ச்சி நிரம்பியது.

கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு இருவரும் கிளம்பும் நேரம் ஆரா அழுக ஆரம்பித்தாள்.

அவளை சமாதானம் செய்து அழைத்து போவதற்குள் போதும் போதும் என்றானது ரூபினிக்கு.


அவள் சென்றதும் இவள் மீண்டும் தனது வகுப்பிற்கு சென்றாள்.

பள்ளி முடியும் நேரம் பள்ளியின் வாயிலில் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.. அங்கே நின்றிருந்தார்களை பார்த்து அதிர்ச்சியில் மயங்கி விழுந்தாள் அகல்யா.

அது அகஸ்டின் காதிற்கு செல்வதற்குள் நவிஷிம் ஆதர்ஷிம் காணாமல் போயினர்.

அதே கேட்ட ஆதவன் அகஸ்டினின் கோபங்கள் எல்லையை கடந்தது.. அதன் விளைவு சூறாவளியை சமாளிக்க முடியாமல் கருணாகரனின் படைபலம் சரிந்தது.

அகல்யாவின் வாயிலேயே அவளின் முந்தைய வாழ்க்கையை கேட்ட அகஸ்டினும் ஆதவனும் எடுத்த முயற்சியில் பவளமும் அவள் குடும்பத்திற்கும் அகல்யாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எழுதி கொடுத்தனர்.. இதன் மூலம் அகல்யாவிற்கு நிரந்தர விடுதலை கிடைத்தது ஏன் புது வாழ்க்கையும் கிடைத்தது.


நிழலை வருடும் நிஜம் தொடரும்...🌹



அடுத்த பாகத்தில் பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு லைக் கமெண்டு பண்ண பட்டூஸ்க்கு நன்றி