• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் - 32

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
ஆதர்ஷ் பிறந்த அடுத்த ஐந்து வருடம் கழித்து தான் நவிஷ் பிறந்தான்.. தன் வீட்டில் இருந்த ஆண் பிள்ளைகள் என்று பவளத்திற்கு மகிழ்ச்சியில் தலை கால் புரியாமல் ஆடினாள்.. இதனால் சில உறவுகள் கூட பிரிந்தது.. ஆனால் அதை பற்றிய கவலை எல்லாம் அவளுக்கு இல்லை.. தனக்கும் இரண்டு மகன்கள் தன் மகனுக்கும் மகன் என்ற மிதப்பில் யாரிடமும் அடிபணிந்து போக மாட்டாள்.

நவிஷ் பிறப்பதற்குள் அகல்யா பல இன்னல்களை சந்தித்து விட்டாள்.. நவிஷை சுமந்து கொண்டிருக்கும் போது தான் கருணாகரன் அவளை கண்டது.

அவனுக்கு பெரும்பாலும் திருமணம் ஆன பெண்களை கண்டு கொள்ளமாட்டான்.. ஆனால் அதற்கு மாறாக அகல்யாவின் மீது ஆசை கொண்டான்.

கருவில் சூழ் கொண்டிருக்கும் பிள்ளையின் மேலும் கையில் இருக்கும் மகனின் மேலும் தீராத பாசம் வைத்துள்ளாள்.

அடுத்த பிறக்கப் போவதாவது பெண் குழந்தை தான் என்று உறுதியில் இருந்தவளுக்கு அடுத்த பிள்ளையும் ஆணாய் பிறந்தது வருத்தம் தான் என்றாலும் தன் கருவில் சுமந்த பிள்ளையை வெறுக்க முடியாது அல்லவா..

இருவரையும் தன் கண்ணின் இமையென காத்து வளர்த்தாள்.. அவளுக்கு கருணாகரனை பற்றி எதுவும் தெரியாது.. ஆனால் பவளத்தின் குடும்பத்திற்கு நன்றாகவே தெரியும்.. ஏன் அவர்களின் தூரத்து சொந்தம் தான் அவன்.

பணக்காரன் ஆதலால் யாரையும் மதிக்கமாட்டான்.. இவர்களும் அவனைத் தேடி போனாலும் ஒரு வார்த்தையுடன் பேசி முடித்து அனுப்பி விடுவான்.

அவன் அகல்யாவை பார்த்த பின்பு அவளின் அழகு அவனை பித்தம் கொள்ள செய்தது.. தினேஷ் அகல்யாவின் கல்யாணத்தின் போது வெளியூர் பயணமாக சென்றிருந்ததால் அவனுக்கு அகல்யாவை தெரியாது.

இவளும் திருமணத்திற்கு பின்பு வெளியே செல்லாதததால் அவளை காணும் வாய்ப்பும் அவனுக்கு கிடைக்கவில்லை.

நவீஷ் கருத்தரித்த பின்பு தான் ஒரு நாள் மாமியாரிடம் கெஞ்சி கோவிலுக்கு சென்றவளை கோவிலில் கண்டான் கருணாகரன்.

அவளை பார்த்ததும் அவனுக்கு பிடித்து விட்டது.. நிறைமாத வயிற்றுடன் மஞ்சள் பூசிய முகத்தில் நெற்றி விகிட்டில் குங்குமம் வைத்திருக்க நெற்றியில் சாந்து பொட்டு வைத்து அதற்கு கீழே குங்குமம் மேலே திருநீரும் வைத்து தேவலோக ரம்பையும் தோற்றுவிடுவது போல் இருந்தாள்.

தன் ஆட்களை விட்டு அவள் யாரென்று விசாரிக்க சொன்னவன் அவளையே வைத்துக் கண் வாங்காமல் ரசித்தான்.. ரசித்தான் என்பதை விட கண்களாலே அவளை கற்பழித்தான்.

அவனின் பார்வை பெண்ணவளின் முன் வனப்பும் பின் வனப்பும் ஆடவனை பித்தம் கொள்ள வைத்தது.

ஒரு கர்ப்பிணி பெண்ணை தாயாய் பார்க்காமல் அவள் உடலின் வனப்பை மட்டும் ரசித்திருந்தான் அந்த அரக்கன்.

அவன் ஆட்கள் சொன்ன விடயம் அவனுக்கு புதிது.. தன் ஆளை பார்த்து,

"என்னடா சொல்ற அவனோட பொண்டாட்டியா இது.. எப்படி டா இவ அவனை கட்டிட்டு வாழுறா.. இவ அழகுக்கு முன்னாடி அவன் அழுகுலாம் ஒன்னுமே இல்லை.. ம்ம் பரவாயில்லை பாக்க நல்லாத்தான் இருக்கா.. அதுவும் அவ முன் அழகு சும்மா கி****ணு தூக்கிட்டு இருக்கு.. அதை அப்படியே.." அதற்கு மேல் அவன் கூறிய விடயம் அத்தனையும் காது கூச வைக்கும் வார்த்தைகள் தான்.
அவளை பார்த்ததும் அவனுக்கு மோகம் பற்றிக் கொண்டது.

இவளை ஒரு நாளாவது அனுபவித்திட வேண்டும் என்று எண்ணியவன் அதன் பின்பு பவளத்தின் வீட்டிற்கு இயல்பாய் வந்து போனான்.

பணக்காரன் யார் வீட்டிற்கும் போகாதவன் தன் வீட்டிற்கு வரவும் பவளத்திற்கு தலை கால் புரியவில்லை.. அவன் என்ன நோக்கத்துடன் வருகிறான் என்றெல்லாம் அவள் உணரவில்லை.

அவன் வரும் பொழுது எல்லாம் அகல்யாவை பார்க்கும் பார்வையில் பெண்ணவள் தான் உடல் கூசிட நின்றிடுவாள்.

அதுவும் அவளை பார்க்கும் பார்வையில் மட்டும் துகிலிரிந்து நடுக்கூடத்தில் நிர்வாணமாய் நிற்பது போல் நிற்பாள்.

அவனை கவனிக்காமல் அவள் வேலையை பார்த்தாலும் பவளத்திடம் ஒன்னுக்கு ரெண்டாய் போட்டுக் கொடுத்து விடுவான்.

" என்ன சித்தி நான் வர்றது உன் மருமகளுக்கு பிடிக்கலை போல.. தண்ணி கூட குடுக்கலை.." என்று சொல்லிவிடுவான்.

அவன் சென்ற பின்பு பவளம் ஆடும் ஆட்டத்தில் அடுத்த முறை அவன் வந்து போகும் வரை அவன் முன்னே தான் அவள் நிற்க நேரிடும்.

நவிஷ் பிறந்த ஒன்பது மாதத்தில் அவள் தந்தை தவறி போக அவளின் குடும்பம் ஆட்டம் காண இவளுக்கு அங்கே செல்வது முற்றிலும் தடை போட்டார்கள்.

தன் தந்தையை இழந்து குடும்பத்தை பிரிந்து புகுந்த வீட்டில் பெண்ணவள் பட்ட வலிகள் சொல்லில் அடங்காதவை.

அவளும் அவள் தலையனையும் மட்டும் அறிந்த ரகசியம்.

இதற்கு நடுவே அவளுக்கு ஆறுதலாய் இருந்தது அவளின் இரு மகன்கள் தான். மற்றொரு உறவு தினேஷின் நண்பன் துவாரகன் தான்.

பார்த்த நாள் முதலாய் அண்ணா என்று அழைத்த பாசம் தன் உடன் பிறந்தவளாய் அவளை ஏற்றுக் கொண்டவன் ப அவள் தந்தை இறந்த பின்பு பிறந்த வீட்டின் சீர்களை அவன் தான் தன் தாய் மனைவியை வைத்து செய்தான்.

தன் நண்பனின் வாழ்வு இந்த பெண்ணினால் தான் மாறியது என்று உணர்ந்தவன் அவளின் வாழ்க்கை நன்றாக இருக்குமென அவனே நினைத்து கொண்டான்.

அதற்கு பின்பு கருணாகரனின் வரவு அந்த வீட்டில் தினமும் என்றானது.. அவன் வந்தால் பெண்ணவள் அவனருகில் நின்று அவன் கேட்டதை செய்து கொடுக்க வேண்டும்.. அந்த வீட்டில் தினமும் வந்து சாப்பிட்டான் அகல்யாவின் கைகளில்.

அவன் வரவு நிச்சயம் நன்மைக்கு இல்லை என்பதை உணர்ந்த அகல்யாவிற்கு ஏதோ தவறாக நடப்பது போல் சர்வ நிச்சயமாய் தோன்றியது.

நவிஷ் பிறந்த ஒரு ஆண்டுக்குள் அகல்யாவிற்கு அங்கே இருக்கும் தனியார் பள்ளியில் கே ஜீ பிள்ளைகளை கவனிக்க வர முடியுமா என்று தூரத்து உறவினர் ஒருவர் பவளத்திடம் கேட்டார்.

முதலில் பவளம் அதை ஒத்துக் கொள்ளவில்லை.. பின்பு அகல்யா அவளிடம் சென்று பேசினாள்.

கூடத்தில் அமர்ந்திருந்த பவளத்திடம் வந்த அகல்யா, "அத்தை.." என்று அழைத்தாள்.

" ம்ம் சொல்லு.." என்றாள் பேரனை கொஞ்சியபடி.

"அத்தை அது வந்து ராமசாமி சித்தப்பா கேட்டாங்களே ஸ்கூலுக்கு நான் போகட்டா அத்தை.. போனா மாசா மாசா சம்பளம் வரும் வீட்டு செலவுக்கு வரும் இல்லை அத்தை.." என்று நைச்சியமாய் தூண்டில் போட்டாள்.

"அதுக்கு நீ சீவி சிங்காரிச்சி ஊட்டு வேலையே செய்யாத நீ பாட்டு போயிட்டா இதெல்லாம் யாருடி பார்ப்பாங்க.. செத்து போன உங்கப்பனா இதெல்லாம் பார்ப்பான்.." என்று அவளின் பிறந்த வீட்டையும் சேர்த்து தூர்வாறினாள்.

அதில் கோபம் வந்தாலும் வெளியே காட்டமுடியா தன் சூழ்நிலையை அறவே வெறுத்தாள்.

ஆனால் அதை மறைத்துக் கொண்டு, "இல்லைங்க அத்த நான் எல்லா வேலையும் செஞ்சிட்டு போறேன்.. பெரியவன் ஸ்கூலுக்கு போறான்.. சின்னவனையும் நானே கூட்டிட்டு போறேன்.." என்று சமாதானம் செய்தாள்.

சிறிது நேரம் யோசித்த பவளம் , "சரி போ ஆனா சம்பள பணம் மொத்தமும் என் கைக்கு வரணும்.. அதுமட்டுமில்லாம வீட்டு வேலை எல்லாம் முடிச்சிட்டு போகனும்.. இதுல எதாவது மாறுச்சினா நீ வேற பவளத்தை தான் பார்ப்பே பாத்துக்கோ.." என்று சம்மதம் சொல்லிவிட்டு போனவள் மீண்டும் அவளிடம் திரும்பி,

"நம்ப தான் ஊட்டுலேயே அதிகம் படிச்சிருக்கோம் அதனால மதிக்காம நடந்தீன்னா அவ்வளவு தான் அன்னைக்கு உன்னோட வேலைக்கு வேட்டு தான் பாத்துக்கோ.." என்று விட்டு சென்றாள்.


இதற்கு நடுவே தாய் வீட்டிற்கு சென்று வரும் ஒன்று இரண்டு நாட்களில் தூரவழி கல்வியில் ஒரு பட்டய படிப்பை முடித்திருந்தாள்.

அதுவும் அவளின் புகுந்த வீட்டிற்கு தெரியாமல்.. ஆனால் அவளின் தாய் தந்தைக்கு நன்றாக தெரியும்.. தன் மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இதற்கு மகளுக்கு உதவி செய்தனர்.

அது பாவம் பவளத்திற்கு தெரியாது .. தெரிந்தால் அதற்கும் அவளின் குடும்பத்தை இழைத்து விடுவாள்.

சந்தோஷமாய் முதல் நாள் பள்ளி வேலையில் சேர்ந்தாள்.. இத்தனை நாள் வீட்டிலேயே அடைத்திருந்தவளுக்கு இன்று கூண்டை விட்டு வெளியே பறந்த சுதந்திர பறவையாய் தன்னை உணர்ந்தாள்.

அதுமட்டுமில்லாமல் மற்றொரு பிரச்சினையில் இருந்தும் அவளுக்கு விடுதலை கிடைத்தது.. ஆம் கருணாகரன் அவளின் வீட்டிற்கு வரும் நேரம் அவள் அங்கே இருப்பதில்லை.. இதை கருணாகரன் பவளத்திடம் கூறிவிட்டான்,

"என்ன சித்தி நீ உன் மருமகளை வேலைக்கு அனுப்பியிருக்க.. அவ சுயமா சம்பாதிச்சா உங்களை எப்படி சித்தி மதிப்பா.." என்று எடுத்துக் கொடுத்தான்.

ஆனால் அதை பவளம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், "அட விடுங்க கருணா அவள் தான் சம்பாரிக்கிற பணத்தை அப்படியே கைல குடுக்குறாளே.. வீட்ல சும்ம உட்கார்ந்து திங்கறதுக்கு இப்படி போயாவாது திங்குற காசை குடுக்கட்டும்.. அதுமட்டுமில்லாம இப்போ விலைவாசி எப்படி எகிறி போய் இருக்கு.. போகட்டும் கருணா.." என்றாள் அவனின் தீய எண்ணம் அறியாமல்.

பள்ளிக்கு வேலைக்கு சேர்ந்த அடுத்த மாதத்திலே தூரவழி கல்வியில் ஆசிரியர் படிப்பிற்கும் சேர்ந்திருந்தாள்.

தன் மகன்கள் இருவரையும் அங்கேயே சேர்த்து விட்டு இவளும் அங்கேயே வேலை செய்து கொண்டு படித்தாள்.. தன் வீட்டிற்கும் கணவனுக்கும் தெரியாமல்.

இரண்டு வருடத்தில் படிப்பை முடித்திருக்க தேர்வுக்கு மட்டும் உடல்நிலை சரியில்லை என்று காரணத்தை வைத்து பிறந்த வீட்டிற்கு சென்று தேர்வை எழுதினாள்.

வெற்றிகரமாய் இரண்டு வருட படிப்பையும் முடித்திருக்க அடுத்த சோதனையாய் அவளின் கணவன் ஓட்டி சென்ற வண்டி விபத்துக்குள்ளாகி அதே இடத்தில் தினேஷ் இறந்து விட்டான் என்ற செய்தி தான்.

அதை கேட்டவள் முழுதாய் உடைந்து போனாள்.. தனக்கு மட்டும் ஏன் இத்தனை இன்னல்கள்.. ஏன் தன்னை மட்டும் இந்த கடவுள் சிதைக்கிறார்.. இன்னும் எத்தனை வலிகளை தாங்க வேண்டும்.. இன்னும் எத்தனை பாரம் சுமக்க வேண்டும் இறைவா.. என்றவளின் கண்ணீர் மட்டும் இறைவனை சேரவில்லை போலும்.


அடி மேல் அடியாய் இடி மேல் இடியாய் தன் வாழ்க்கையில் விழுந்த போதெல்லாம் எழுந்தவள் கணவனை இழந்த பின்பும் பிள்ளைகளுக்காக மீண்டு எழுந்தாள்.

ஆனால் மீண்டும் அவளை நிலைகுலைய வைக்க கருணாகரன் அவளிடம் நேரடியாக அவளை இம்சித்தான்.


நிழலை வருடும் நிஜம் தொடரும்..🌹


அடுத்து பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ண பட்டூஸ்க்கு நன்றி.