• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் - 34

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
அகல்யா கண் விழிக்கும் போது இரவை கடந்து மறுநாள் வந்தது.. அளவுக்கதிகமான பயம் மனதோரம் தோல்வி நிலை என அவளை நிறையவே பலவீனம் செய்திருந்தது.

அவள் எழும் போது ரூபினி தான் அருகில் தூங்கியபடி அமர்ந்திருந்தாள்.. அவளை பார்த்ததும் தன் மகன்களின் நினைவு வந்து அழுகை நெஞ்சை அடைத்தது.

அவள் அழுகும் குரல் கேட்டு எழுந்த ரூபினி அவள் அழுவதை பார்த்து அவளருகில் சென்று,

"அகல்யா இங்கே பாருங்க.. இப்போ எதுக்காக அழறீங்க.." என்றாள் ஆறுதலாய்.

"அண்ணி என் பசங்களை அந்த அரக்கன் கொண்டுட்டு போயிட்டான்.." என்று அவளை அணைத்துக் கொண்டு அழுதாள்.

" அகல்யா இங்கே பாருங்க அவங்களை நாம கூட்டிட்டு வரலாம்.. இப்போ நீங்க முதல்ல அழுறத நிறுத்துங்க.. அப்புறம் உங்களை பாக்க முக்கயமான ஒருத்தர் வந்துருக்காங்க.. " என்று அவளை சமாதானம் செய்தவன் வெளியே வந்து துவாரகனை அழைத்து வந்தாள்.

தன் தமையனை பார்த்ததும் எங்கிருந்து தான் வந்ததோ அந்த அழுகை, "அண்ணா.." என்று அவனை அணைத்துக் கொண்டு அழுதாள்.

" அழாதம்மா பசங்களை அங்கே பார்த்ததும் முடிவு பண்ணிட்டேன் மா.. நீ வா மா பசங்களை நாம அழைச்சிட்டு வரலாம்.." என்றான் தைரியமாய்.

எங்கிருந்து அவனுக்கு அந்த தைரியம் வந்தது என்று பெண்ணவளுக்கு புரியவில்லை.. ஆனாலும் அவளின் மனதில் விழுந்த கேள்வி அவனிடம் வார்த்தையாய் வந்தது.

"ஆனா அண்ணா என்னை வர வைக்க தானே அவன் பசங்களை கூட்டிட்டு போயிருக்கான்.." என்றாள் பயந்த குரலில்.

"அதுக்காக பசங்களை அப்படியே விட போறீங்களா அகல்யா.." என்ற குரல் கம்பீரமாய் வந்தது.

யாரென்று பார்க்காமலே தெரிந்தது அகஸ்டின் என்று.. அவனை கேள்வியாய் பார்த்தாள்.. அவனின் பின்னே ஆதவனும் அதே கேள்வியுடன் வந்தான்.

" அவங்க உங்க பசங்க தானே.. யாரோ ஒரு பொறுக்கிக்கு பயந்து யாரோ ஒருத்தர் கையில நீங்க சுமந்து பெத்த பையனை விடப் போறிங்களா.." என்றான் கோபத்துடன்.

அவனின் கோபத்தின் காரணம் புரியவில்லை.. ஆனாலும் அகல்யாவிற்கு தன் பிள்ளைகளை அப்படியே விட்டு விட முடியுமா என்ன.. ஆனால் அந்த அரக்கனுக்கு தன் மேல் அல்லவா கண்.. அவன் கைகளில் சிக்கினாள் தன் மானம் போவது உறுதி.. அதற்காக தாய் மனம் அமைதியடைந்து விடுமா என்ன..

அவளின் முகபாவனையே பார்த்திருந்தவன் அவளின் யோசனை என்னவென்று உணர்ந்தவன் ஆதவனிடமும் துவாரகனிடமும் கண் காட்டினான்.

இருவரும் சேர்ந்து அவளருகில் சென்றவர்கள், "குட்டிமா எங்க மருமகன்கள் உன்னோட தான்டா இருக்கனும்.. இப்போ நாம அவங்களை கூப்பிட போறோம்.. அதுமட்டுமில்ல உன் மாமியார் வீட்டு சொத்து உனக்கு வேணுமா என்ன.." என்றான் ஆதவன் கேள்வியாய்.


" அய்யோ இல்லை அண்ணா அவங்களோட சொத்து எதுவும் என் பசங்களுக்கும் எனக்கும் வேணாம்.. எங்களை தொந்தரவு பண்ணாத இருந்தா மட்டும் போதும் அண்ணா.." என்றாள் கவலையாய்.

" அப்போ அதுக்கு நீ தான்டா முயற்சி பண்ணனும்.. இப்போ நீ கிளம்பு உங்க ஊருக்கு போலாம்.. இன்னையோட அந்த ஊருக்கும் உனக்கும் இருக்கும் பந்தத்தை முடிச்சிட்டு வந்துடலாம்.." என்றான் ஆதவன் தைரியமாய்.

அவளுக்கு திடிரென இப்படி முடிவெடுப்பது ஏதோ போல் இருந்தாலும் இன்று தன் பசங்களை தன்னிடமிருந்து பிரித்தவர்கள் நாளை சொத்திற்காக எதுவும் செய்வார்கள் என்ற எண்ணம் வலுப்பெற தைரியமாய் அவர்களுடன் கிளம்பினாள்.

அவளை கூட்டிக் கொண்டு முன்னே துவாரகன் செல்ல பின்னே செல்லப் போன ஆதவன் மீண்டும் அகஸ்டின் ரூபினியிடம் வந்து நின்றான்.

அவனை பார்த்த அகஸ்டின், "நீங்க முன்னே போங்க.. நான் பின்னாடி வர்றேன்.. நம்ம கார்ட்ஸ் அங்கே போயிட்டாங்க.. போ.." என்றான் உறுதியாய்.

அப்பொழுது தான் ரூபினி அகஸ்டினை வினோதமாய் பார்த்தாள்.. ஏன் இதுவரை எந்த பெண்ணிடமும் நெருங்காதவன் இன்று அகல்யாவை நெருங்கியது என்னவோ மனது உறுத்தியது.

தன்னவளின் முகத்தை பார்த்த ஆதவன் அகஸ்டினிடம் விடைபெற்று ரூபினியை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்.

அவளின் முகத்தை பார்த்தவனுக்கு அவள் இன்னும் சிந்தனையில் இருப்பது தெரிய, "ஏய் ஹனி என்னடி யோசனை.." என்றான் கேள்வியாய்.

" அத்தான் எனக்கு எதுவும் புரியலை.. அண்ணாவோட நடவடிக்கை வித்தியாசமா இருக்கு.. அவங்க ஏன் அகல்யாகிட்ட மட்டும் இப்படி நடந்துக்குறாங்க.." என்றாள் தன் சிந்தனையை கலைத்து.

" உனக்கு உன் அண்ணன் மேல நம்பிக்கை இருக்காடி.." என்றவனின் கேள்விக்கு

"இது என்ன புதுசா கேக்குறீங்க அத்தான் அதெல்லாம் நிறையவே இருக்கு.." என்றாள் முறைத்தபடி.

" அப்போ உங்க அண்ணனோட கல்யாணத்துக்கு சீக்கிரம் ரெடி ஆகிக்கோ ஹனி.. இப்போ மாமா பாப்பா கூட போயிட்டு வர்றேன்.." என்று அவள் எதிர்பார்க்காமல் அவளின் கண்ணதில் பசக் கென முத்தம் கொடுத்து விட்டு ஓடினான் ஆடவன்.

அவன் என்ன சொன்னான் என்று யோசிப்பதற்குள்ளாக இது நடக்க தன்னவனின் விளையாட்டு தனத்தில் முகம் சிவந்து நின்றாள்.

இங்கே அவர்களை எல்லாம் அனுப்பி விட்டு தன் அறைக்கு வந்தவன் தன் பர்சனல் கப்போர்டை திறந்த அதில் சுகமாய் உறங்கி கொண்டிருந்த கருப்பு நிற கன்னை எடுத்து தன் முதுகின் பின்னே சொருகியவன் தானும் அவர்களின் பின்னே கிளம்பினான்.

இங்கே கருணாகரன் அழைத்து வந்த தன் பேரன்களை பார்த்த பவளம் அவர்களிடம் கொஞ்சியபடி,

"கண்ணுகளா வாங்க வாங்க அப்பத்தாகிட்ட.. " என்றபடி அவர்களிடம் நெருங்கினாள்.

நவிஷோ அவள் தங்கள் அருகில் வரும் போது , "அப்பத்தா எங்களை அம்மாகிட்ட விட சொல்லுங்க இந்த பாட் அங்கிள் அம்மாவை அடிச்சிட்டு எங்களை கூட்டிட்டு வந்துட்டாரு.." என்று அழுது கொண்டே புலம்பினான்.

"அடேய் எந்தங்கங்களா அந்த சிறுக்கி இனிமே நமக்கு வேணாம் கண்ணு இந்த அப்பத்தா உங்களை பாத்துக்குறேன் கண்ணு.. அவ உங்களை இத்தனை நாளா என்கிட்ட இருந்து பிரிச்சட்டா கண்ணு.. இதோ இவரு உன்ற பெரியப்பன் கண்ணு.. எங்கூட இருங்க தங்கம் அப்பத்தை உங்களை பெரிய படிப்பு படிக்க வச்சி காலேசுக்குலாம் படிக்க வைக்கிறேன் கண்ணு.. இந்த நம்ம தோட்டம் துரவுலாம் யாருக்கு கண்ணு உங்களுக்கு தானே.. நீங்க என்னவெல்லாம் கேட்குறீங்களோ அதையெல்லாம் அப்பத்தா உங்களுக்கு செய்யறேன் ராசா.." என்றாள் நாக்கில் தேன் தடவியபடி.

ஆனால் அதற்கெல்லாம் அசரும் பிள்ளைகள் இல்லையே.. தன் அன்னையின் வலிகளை பார்த்து அல்லவா வளர்ந்திருக்கிறார்கள்.. அவர்களை அசைப்பது அத்தனை எளிதான காரியம் இல்லை என்பது பாவம் பவளத்திற்கு தான் தெரியவில்லை.

அவள் அத்தனை கூறியும் தன் தாய் தான் வேணும் என்று அழும் பிள்ளைகளை என்ன செல்லி சமாதானம் செய்வது என்று புரியாமல் நின்றிருந்தாள் பவளம்.


அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கே புழுதியை கிளப்பிக் கொண்டு நான்கு ஐந்து கார்கள் அங்கே வந்து நின்றது.

பொதுவாக கிராமத்தில் இது போல் வண்டி வருவது அதிகம் இல்லை.. என்றாவது ஒரு நாள் தான்.. அப்படி வரும் போது ஊர் மக்கள் ஏதோ கண்காட்சியை போன்று பார்த்தனர்.

அந்த கார்களிலிருந்து துவாரகனை தொடர்ந்து ஆதவனும் இறங்கினான்.. அவனை தொடர்ந்து பின் சீட்டியில் இருந்து இறங்கினாள் அகல்யா.

தங்களின் வீட்டின் முன்பே வண்டி நிற்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தனர் பவளமும் கருணாகரனும்.

அங்கே நின்றிருந்த அகல்யாவை பார்த்து எகத்தாளத்துடன் பார்த்து சிரித்த கருணாகரன் பவளத்திடம் திரும்பி கட்டை விரலை உயர்த்திக் காட்டினான்.


அவளும் திமிருடன் அகல்யாவை பார்த்து சிரித்தாள்.

அவர்களின் சிரிப்பு பெண்வளுக்கு எரிச்சலை தந்தது.. வேகமாய் அவர்களின் முன்னே வந்தவள் பவளத்திடம் திரும்பி,

"என் பசங்க எங்க.. கூப்பிடுங்க எனக்கும் என் பசங்களுக்கும் உங்க சொத்து சுகம் எதுவும் வேணாம்.. எனக்கு என் பையனை மட்டும் குடுங்க.." என்றாள் வேகமாய்.

என் பையன் இல்லாம உனக்கு மட்டும் எப்படி டி புள்ள வந்துச்சி.. அவங்க என் வீட்டு வாரிசு.. அப்படி உன்னோடலாம் அனுப்பிட முடியாதுன்னா என்னடி பண்ணுவ.." என்றாள் பவளமும் கோபம் குறையாமல்.

அதே திமிருடன் மீண்டும் பவளம், "உனக்கு உன் பசங்க வேணும்னா நீ இதே வீட்ல திரும்பவும் இருக்கலாம்.. உன் பசங்களை பாத்துகிட்டு பழைய படி இருக்கலாம்.. என்ன சொல்ற.." என்றாள் கர்வத்துடன் மீண்டும் என் வீட்டில் வேலைக்காரியாய் இருந்து கொள் என கூறுகிறாள்.

பெண்ணவளுக்கோ வேலைக்காரியாய் இருப்பதில் பிரச்சினை இல்லை.. ஆனால் அவளின் மானத்துக்கும் அல்லவா உத்திரவாதம் இல்லை..


" அப்படியா பவளத்தம்மா.." என்றபடி அங்கே வந்தார் ஒரு நடுத்தர வயதுடைய பெண்.

பவளமோ அவளை யார் என்று பார்த்தாள்..அந்த பெண்ணே தொடர்ந்து,

"நான் யாருன்னு பாக்குறீங்களா.. நான் மனித உரிமை ஆணையத்துல இருந்து வந்துருக்கேன் மா.. உங்க மேல கம்பிளையண்ட் வந்துருக்கு.. நீங்க ரெண்டு குழந்தைகளை அவங்களோட தாயை விட்டு பிரிக்கிறீங்கன்னு.." என்றாள் தைரியமாய்.

"அய்யோ யம்மா அது என் பேரப்பசங்க.. இது என் மருமக மா.. இதோ என் மருமககிட்டயே கேட்டு பாரேன்.. அம்மாடி அகல்யா நீயே சொல்லுமா அம்மாகிட்ட.." என்றாள் நையந்தபடி.

ஏன் கருணாகரனும் கூட பயந்து தான் விட்டான்.. அவன் எத்தனை பொறுக்கி தனம் செய்தாலும் போலிஸ் கேஸ் என்றால் சற்று பயம் தான்.. இந்த கிராமத்தில் தான் அவன் வஸ்தாத்து.. மற்றபடி கோழை தான்.. அதுவும் மனித உரிமைகள் ஆணையம் பற்றி கேள்வி பட்டிருக்கிறான்.


பவளத்தின் எந்த ஒரு பேச்சிற்கும் அகல்யா பதில் கூறவில்லை.. தன் இரு கைகளையும் கட்டியபடி அவள் தடுமாறுவதை நின்று பார்த்தபடி நின்றிருந்தாள்.

ஒரு கட்டத்தில் பவளத்திற்கு ஆதரவாக கருணாகரன் பேசினான்.. அவன் பேசினாள் மட்டும் போதும் ஊரில் உள்ள ஆட்கள் சொல்ல வேண்டுமே.. ஆனால் ஊர் மக்கள் யாரும் பவளத்திற்கு ஆதரவாய் பேசவில்லை.

ஏன் அகல்யாவின் முந்தைய வாழ்க்கை அங்கே அலசப்பட்டது.. யாராலும் பொய் சொல்ல முடியவில்லை.. ஒர் பெண்ணின் வாழ்க்கையும் அவளின் பிள்ளைகளின் வாழ்க்கைகாகவும் எல்லோரும் உண்மையை பேசினார்கள்.

ஆனால் எந்த காரணத்திற்காகவும் அவளிடம் தவறாய் நடந்தவர்கள் பற்றி யாரும் சொல்லவில்லை.. அதுவே சிலருக்கு நிம்மதியாய் இருந்தது.

அடுத்த ஒரு மணி நேரத்தில் பிள்ளைகள் இருவரும் அகல்யா வசம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஆனால் இதற்கு பின்னால் அகஸ்டின் இருந்தது அகல்யாவுக்கு தெரியவில்லை.



நிழலை வருடும் நிஜம் தொடரும்..🌹


அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு லைக் கமெண்ட் பண்ண பட்டூஸ்க்கு நன்றி
 

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
255
144
43
Theni
அந்த பொம்பளய அப்படியே விடக்கூடாது
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
அட என்னப்பா ஒரு ஆக்ஷன் சீன் இருக்கும்ன்னு பாத்தா... சப்புன்னு போச்சு 🙄