அந்த நேரத்தில் அவர்கள் நால்வரையும் அங்கே எதிர்பார்க்கவில்லை அகல்யா.. ஆதவனும் ரூபினியும் அவளை பார்த்து சிரித்தனர்.. ஏன் அகஸ்டின் கூட அவளின் அந்த குரலில் மயங்கியவன் தானே.. அவளையே வைத்துக் கண் வாங்காமல் பார்த்தான்.
சற்று நேரத்தில் தெளிந்த அகல்யா எல்லோரையும் பார்த்து சிரித்தபடி,
"அடடே வாங்க அண்ணா, வாங்க சார், வாங்க அண்ணி.. ஆரா குட்டி வாங்க வாங்க அத்தைகிட்ட.." என்று அகஸ்டினின் கைகளில் இருந்த ஆராவை வாங்கும் சமயம் இருவரின் கைகளும் உரசியது.
அதில் பெண்ணவளோ இயல்பாகத்தான் இருந்தாள்.. ஆனால் ஆடவனின் நிலையோ வார்த்தைகளால் சொல்லத் தான் முடியவில்லை.. எத்தனையோ பெண்கள் அவனை உரசி சென்றுள்ளனர்.. ஆனால் அப்பொழுது உடலில் தோன்றாத சிலிர்ப்பும் மாற்றமும் பெண்ணவளின் லேசான தொடுதலில் கண்டான்.
ஆனால் தன் உணர்வை உடனே வெளிப்படுத்த இது வாலிப காதல் அல்லவே.. அவளோ மணமானவள்.. இரு குழந்தைகளின் தாய்.. அவளிடம் சென்று நான் உன்னே நேசிக்கிறேன் என்றால் என்ன சொல்வாள் மூஞ்சியில் காறி துப்பாமல் இருந்தால் சரி தான்.
தன் நண்பன் பீரிஸ் ஆகி நிற்பதன் காரணம் தெரியாமல் அவனிடம் வந்த ஆதவன்,
"டேய் அகஸ் என்னடா இப்படி நின்னுட்ட.." என்றான் மெதுவான குரலில்.
அவனின் குரலில் தன் உணர்வு பெற்றவன், "ஒன்னுமில்லை டா.." என்று தலையாட்டினான்.
அவனை வித்தியாசமாய் பார்த்த ஆதவன், "டேய் லூசு பசங்களை தான பாக்க வந்தே.. சின்னவனுக்கு உடம்பு சரியில்லையாம் டா.." என்றான் பதிலாய்.
அதே கேட்டவனுக்கோ உடல் பதற , "ஹேய் என்னடா சொல்ற.." என்றான் பதட்டத்துடன்.
"ஆமா அங்கே பாரு சாப்பிடாம அடம் பிடிச்சிட்டு இருக்கான் டா.. வா போலாம்.." என்று அவனை அழைத்துக் கொண்டு சென்றான்.
தன் தாய் பாடிய பாடலில் பாதி உணவை மட்டுமே சாப்பிட்டவன் மீதி வேண்டாம் என்று தர்க்கம் செய்து கொண்டிருந்தான்.
அவனருகில் சென்ற அகஸ்டின் அகல்யாவிடம் கையை நீட்டினான் உணவை தரச் சொல்லி.. அவனை பார்த்துக் கொண்டே அவளறியாமல் உணவு கிண்ணத்தை அவனிடம் தந்தாள்.
அதை வாங்கியவன் தன் கைகளால் உணவை எடுத்து நவிஷின் வாயருகே கொண்டு சென்றான்.
அவனும் என்ன நினைத்தானோ இதுவரை தாயிடம் வேண்டாம் என்று அடம் பிடித்தவன் அகஸ்டினை பார்த்துக் கொண்டே வாயை திறந்தான்.
மெதுவாய் புன்னகை சிந்தியபடி அவனுக்கு முழு உணவையும் சாப்பிட கொடுத்தான்.
ஏனோ இயல்பாகவே அகஸ்டின் அருகில் சென்று அமர்ந்து கொண்டவன் அவனை பார்த்து,
"தினமும் வந்து ஊட்டுவீங்களா.." என்றான் ஏக்கமாய்.
" ம்ம் வர்றேன் கண்டிப்பா.. நீ சீக்கிரம் சரியாகி வா.. தினமும் நானே வந்து ஊட்டுறேன்.." என்றான் இயல்பாய்.
"அப்போ ராத்திரி என்னை கட்டிகிட்டு தூங்குவீங்களா.." என்றவனின் வார்த்தையில் இருந்த எதிர்பார்ப்பு ஆடவனுக்கு வலியை கொடுத்தது.
அதே வலியுடன் சிறியவனின் தலையை தடவிய பெரியவன், "உனக்கு அது தான் விருப்பம் சந்தோஷம் னா கண்டிப்பா நான் உன்னோட இருக்கேன் நவி.." என்றவனின் வார்த்தையில் இருந்தது என்னவென்று பிரித்தறிய முடியவில்லை அங்கிருந்தோர்களுக்கு.
ஆனால் அகல்யாவோ அதிர்ச்சியுடன் அவனை பார்த்து விட்டு சிறியவனிடம் திரும்பி, "நவி என்ன இது அவங்களுக்கு வீடு இருக்கு.. இங்கே எப்படி அவங்க தங்க முடியும்.. உனக்கு தான் நானும் அண்ணனும் இருக்கோம் இல்லை.." என்றாள் கோபமாய்.
அவளின் கோபத்தில் முகம் சுருக்கியவன் தலையை கீழே குணிந்து கொண்டு, "சாரி மா.." என்றான் கண்களில் நீர் தழும்ப.
அவனுக்கு புரியவில்லை என்றாலும் அகஸ்டினுக்கும் ஆதவனுக்கும் நன்றாகவே புரிந்தது.. அவன் இவர்களுக்கு நடுவே வருவது அவளுக்கு பிடிக்கவில்லை என்று.
ஆனால் அதை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் நவிஷின் தலையை தடவியவன், "உனக்கு நான் வர்றது பிடிச்சிருக்கா நவி.. யாருக்காகவும் நீ பார்க்க வேணாம்.. உனக்காக சொல்லு.. நான் கண்டிப்பா வர்றேன்.." என்றான் உறுதியாய்.
நான் வருவதை உன்னால் தடுக்க முடியாது என்று அவனின் வார்த்தையில் இருந்தத அர்த்தம் பெண்ணவளை விதிர்க்க செய்தது.
அவள் எதுவோ கோபமாய் பேச வர நடுவில் ஆதவன் அவளருகில் வந்து, "அகல்யா என்னாச்சி இப்போ எதுக்கு இந்த கோபம்.. நவிக்கு அவனை பிடிச்சிருக்கு போல.. அவன் வர்றதே நீ விரும்பலையா.. உனக்கு என்னடா பிரச்சனை.." என்றான் ஆதுரமாய்.
"அய்யோ அண்ணா எனக்கு பிடிச்சிருக்கு பிடிக்கலை இப்போ அது பிரச்சனை இல்லை.. இவரு இங்கே வந்தா தேவையில்லாத நிறைய பிரச்சனை வரலாம்.. ஏன் என்னோட ஒழுக்கத்தை கூட சந்தேகபடுவாங்க.. நான் எப்படி அண்ணா.. என்னால தாங்க முடியாது அண்ணா.. நிறைய வலியை அனுபவிச்சுட்டேன்.. இனி ஒரு வலியையும் ஒழுக்கத்தையும் தாங்க முடியாது அண்ணா.." என்றாள் அழுகுரலில்.
அவள் சொன்னதில் இருந்த உண்மை அகஸ்டினுக்கு புரிந்தாலும் யாரோ ஒருத்தருக்கு பயந்து நான் இவர்களை பிரிய வேண்டுமா என்ன.. முடியாது இவர்கள் என்னவர்கள்.. இவர்களை பிரிந்தால் என் உயிர் உடலில் தங்காது..' என்ற உண்மை முகத்திலறைய ஆதவனிடம் திரும்பியவன்,
"ஆதவ் நான் இங்கே பசங்களுக்காக வருவேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது.. அடுத்தவங்க என்ன சொல்வாங்களோன்னு வாழ்ந்த நம்ம வாழ்க்கை காணாம போயிடும்.. நமக்காக தான் நாம வாழனும்.. அவன் கண்கள்ல இருந்த ஏக்கமே சொல்லுது.. அவன் என்னை தேடுறத.. சொல்லி வை இனி நான் இங்கே வருவேன் இவங்களுக்காக.." என்றவன் அங்கிருந்த வேகமாக சென்று விட்டான்.
தன்னவளின் முகத்தில் இருந்த அதிர்ச்சியை கண்டான் தான்.. ஆனால் இப்போது வீட்டால் இனி என்றும் இங்கே வரமுடியாது.. பிள்ளைகளுக்காக மட்டும் இல்லாம் அவளுக்காகவும் இங்கே வரத் தான் வேண்டும்.
ஆனால் அவளுக்காக மென்மையை கையாண்டாள் நிச்சயம் தன்னை சமாளித்து விடுவாள்.
அவளை பற்றிய சிந்தனையில் இருந்தவனுக்கு உள்ளிருந்து அகல்யாவின் சத்தம் கேட்கவும் வேகமாய் உள்ளே சென்றவனின் பார்வை நிலைகுத்தி நின்றது.
ஆம் அங்கே நவிஷ் வாயில் நுரைதள்ளி இருந்தான்.
வேகமாய் அவனருகில் சென்றவன் அவனை தன் மடியில் எடுத்து அவன் கண்ணங்களை தட்டினான்.
ஆனால் முழுதாய் மயங்கியிருந்தவன் எழாமல் இருக்க உடனே தன் கைகளில் அள்ளிக் கொண்டு ஆதவனிடம் கண் காட்டி விட்டு தன் காரில் கொண்டு வைத்தான்.
அவன் பின்னே பதட்டத்துடன் வந்த அகல்யா கூடவே ஏறி தன் மகனை மடியில் தாங்கி கொண்டாள்.
அவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது.. தடுக்க நினைத்தாள் முடியவில்லை.
ஆதவன் வண்டி எடுக்க ஜெட் வேகத்தில் வண்டி பறந்தது.. அங்கே யாராலும் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
இப்பொழுது தான் பிரச்சினை முடிந்தது என்று நினைத்தாள் அடுத்தடுத்து வந்த பிரச்சனையில் தொய்ந்து தான் போனாள்.
நவிஷை கொண்டு வந்து ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்து விட்டு எல்லோரும் வெளியே காத்திருக்க அந்த நொடி கூட நகராமல் அப்படியே இருந்ததை போல் இருந்தது.
அகஸ்டினுக்கு இருந்த கோபத்தில் எங்கே அவளை வதைத்து விடுவோமோ என்று எண்ணத்தில் தன் அறைக்கு சென்று விட்டான்.
அவனின் வேகத்திலே அவனின் கோபத்தை தெரிந்து கொண்ட அதவன் கூடவே சென்றான்.
அங்கே சென்றவனுக்கு இருப்புக் கொள்ளாமல் அறையில் இருந்த பொருட்களை தூக்கி போட்டு உடைத்தான்.
அறையில் கேட்ட சத்தத்தில் வேகமாக உள்ளே போன ஆதவன் அவனை தடுத்து, "டேய் லூசா நீ.. எதுக்கு டா இப்போ இவ்ளோ கோபபடற.. உன்னோட கோபத்துல இங்கே எதுவும் சரியாகாது அகஸ்.. முதல்ல குட்டி சரியாகட்டும் அப்புறம் பேசலாம்.." என்றான் அவனை சமாதானம் செய்யும் வீதமாக.
என்ன டா பேசுறது.. சொல்லு என்ன பேசுறது.. இவளுக்கு மட்டும் தான் எல்லா கஷ்டமும் இருக்கா.. நமக்கு எதுவும் இல்லையா.. இவளோட பேரு மட்டும் தான் பாதிக்குமா.. ஏன் ஒரு ஆம்பளையா எனக்கு அந்த பாதிப்பு இருக்காதா..
அவன் எவ்வளவு ஏக்கத்தோட கேட்டான் தெரியுமா டா.. அவன் கேட்கும் போது என் உசுறே போயிடுச்சி டா.. அவனோட எதிர்பார்ப்பு என்ன தெரியுமா.. நான் அவனோட இருக்கறது தான்.. அவனுக்கு அப்பா பாசம் வேணும்னு நினைக்குறான்.. என்னால அதை குடுக்க முடியும் போது நான் ஏன்டா ஒதுங்கி நிற்கனும்..
அவனுக்கு எதாவது ஆச்சி என்னை யாரும் மனுசனா பாக்கமுடியாது.. ஜாக்கிரதை.." என்றவன் கோபத்துடன் போய் அமர்ந்துவிட்டான்.
இவனின் கோபம் இப்போது தீராது என்பது புரிந்த ஆதவன் அவனை தனிமையில் விட்டு மீண்டும் அகல்யாவிடம் வந்தவன் ரூபினியும் அகல்யாவும் பேசுவதை கேட்டு அப்படியே நின்றுவிட்டான்.
" ஏன் அகல்யா இவ்வளவு பிரச்சினை நடக்கும் போது ஏன் உன் பிறந்த வீட்ல இருந்து யாரும் வந்து பாக்கலையே ஏன்மா.." யோசனையாக.
"அவங்க யாரும் வரமாட்டாங்க அண்ணி.. அம்மா மட்டும் தான் என்கிட்ட யாருக்கும் தெரியாம பேசுவாங்க.. அவங்களுக்கு என் மேல கோபம் அண்ணி.. அதுமட்டுமில்லாம நான் அவங்களுக்கு சுமையானவ அண்ணி.. என்னோட சுமையை அவங்க பகிர்ந்துக்க விரும்பலை.. நானும் எதுவும் அவங்ககிட்ட சொல்லலை அண்ணி... வேணாம் என்னால யாரும் கஷ்டபட வேணாம்னு நினைச்சேன் அண்ணி.. போதும் அண்ணி என் பையனுக்கு ஏதாவது ஆச்சின்னா நான் உயிரோட வாழறதுல அர்த்தம் இல்லை அண்ணி.." என்றான் அழுத்தமாக விழிகளுடன்.
அதை கேட்ட ஆதவனுக்கு மட்டுமல்ல மறுபறுத்தில் இருந்த கேட்ட அகஸ்டினுக்கு கூட வலித்தது.
என்ன மனிதர்கள் இவர்கள்.. உடன் பிறந்தவள் வாழ்வை இழந்தால் அரவணைக்க வேண்டாமா.. எப்படியே போ என்றா விட்டுவிடுவார்கள்.
இதை நினைத்து வருந்தியவன் மருத்துவர் அறையை விட்டு வெளியே வரவும் அவரருகே அனைவரும் சென்றனர்.
அகஸ்டினை பார்த்த மருத்துவர், "நல்லாருக்காங்க சார்.. அதீதமான மன அழுத்தம்.. வெளியே சொல்ல பயம்.. முன்னவே ஆக்ஸிடெண்ட் பயம் வேற.. சோ உட்கார்ந்து பேசுனா சீக்கிரமா குணமாயிடுவான் சார்.. இப்போ பரவாயில்லை.. கண் திறந்தது வீட்டுக்கு கூட்டிட்டு போலாம் சார்.." என்றவர் அங்கிருந்து விடை பெற்றார்.
அவன் நன்றாயிருக்கிறான் என்று காதில் வாங்கவும் தான் அனைவருக்கும் நிம்மதி.
ஆனால் அப்பொழுதும் அகல்யா மேல் அகஸ்டின் கோபமாய்த்தான் இருந்தான்.
அவளை முறைத்து பார்த்தபடி அங்கிருந்து நவிஷ் அறைக்குள் சென்றான்.
அவனை பின்தொடர்ந்து ரூபினியும் அகல்யாவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
இவர்கள் உள்ளே போவதற்குள்ளாக அங்கே அகஸ்டின் நவிஷின் அறையில் அமர்ந்திருந்தான்.
கண்விழித்து முதலில் நவீஷ் பார்த்தது அகஸ்டினை தான்.. எழுந்த வேகத்தில் அவனை அணைத்துக் கொண்டான்.
பெரியவனும் அவனை அணைத்துக் கொண்டான்.. அப்பொழுது அகஸ்டின் ஆதர்ஷை காண அவன் கண்களில் இருந்த ஆசை அவனை ஏதோ செய்ய தன் மற்றொரு கரத்தை எடுத்து அவனை அழைத்தான்.
அதில் இருவருடன் மூவராய் ஆதர்ஷிம் இணைந்து கொண்டான்.
அவர்களோடு ஆராவும் தன் சிறிய கரத்தால் மூவரையும் அணைத்தாள்.
அதை கண்ட ஆதவன் ரூபினிக்கு சந்தோஷமாய் இருந்தாலும் அகல்யாவின் கண்கள் அதிர்ச்சியாய் விழிவிரித்தாள்.
நிழலை வருடும் நிஜம் தொடரும்..
அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ண பட்டூஸ்க்கு நன்றி