• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் - 38

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
அடுத்த ஒரு மணி நேரத்தில் நவீஷிடன் அனைவரும் வீட்டிற்கு வந்தனர்.

மருத்துவமனையிலே மருத்தவர் கூறிய செய்தி நவீஷை அதிகம் ஏங்க வைக்க வேண்டாம் என்பது தான்.. அவனின் ஏக்கம் எதுவென உணர்ந்தவளும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாய் ஒதுங்கி கொண்டாள்.. தன் மகன்களுக்காக.


நவீஷிக்கு நன்றாக விவரம் தெரியும் முன்பே தினேஷ் இறந்து விட்டான்.. அவனுக்கு முழுதாய் தந்தையின் பாசத்தை இதுவரை உணர்ந்ததில்லை.. அவன் உயிரோடு இருந்தால் கூட ஒரு தந்தையின் பாசம் ஆதர்ஷிக்குமே கிடைக்கவில்லை.. ஆனால் இப்பொழுது ஏனென்றே தெரியாமல் இருவரும் அகஸ்டினிடம் நன்றாக ஒட்டிக் கொண்டார்கள்.

தந்தையிடம் உரிமையாக கிடைக்கக்கூடிய பாசம் கிடைக்காமல் இருக்கும் ஆதர்ஷிக்கும் தந்தையின் பாசம் அறியாமல் இருக்கும் நவிஷிம் இப்பொழுது எதிர்பார்ப்பது தந்தையின் அரவணைப்பு தான்.

அதை தான் அவர்கள் அகஸ்டினிடம் எதிர்பார்க்கிறார்கள்.. ஆனால் இது தவறு இல்லையா.. தன் சுயநலத்திற்காக ஒருவரின் பையரை கெடுப்பது போல் நடக்கும் செயல்.

அதை பற்றியே சிந்தித்தபடி அகல்யா சமைத்து முடித்தாள்.

அனைவரையும் சாப்பிட அழைக்கும் போது கூட அகஸ்டின் அருகில் தான் இருவரும் அமர்ந்தார்கள்.

இருவரும் சாப்பிடாமல் இருப்பது ஏன் என்று வினாவுடன் புருவத்தை உயர்த்தினான்.

நவீஷோ ஆஆ என்று தன் தன் திறக்க அதை பார்த்து சிரித்தபடி தன் தட்டில் இருந்த சாதத்தை பிசைந்து நவீஷிக்கு ஊட்டி விட்டான்.. ஆராவும் வாயை திறக்க இருவருக்கும் சேர்த்தே ஊட்டினான்.

ஏன் அதை ஆதர்ஷ் கூட ஏக்கத்துடன் தான் பார்த்தான்.

அவனை பார்த்த அகஸ்டின் தன் கைகளில் இருந்த உணவை அவனின வாயருகே கொண்டு சென்றான்.

புன்னகைத்தபடி அவனும் அதை சந்தோஷமாய் பெற்றுக் கொண்டான்.

இதை பார்த்த ஆதவனுக்கும் ரூபினிக்கும் சந்தோஷமாய் இருந்தது.

அதுவும் அகஸ்டின் எதிர்பார்த்த குடும்ப சூழல் அவனுக்கு அமைந்தது கண்டு அந்த உண்மையான நண்பனும் தங்கையும் பெருமகிழ்ச்சி கொண்டனர்.

ஆனால் இதை பார்த்த அகல்யாவுக்கு தான் தனிமை ஆனது போல் இருந்தது.

அதை பார்த்தும் பார்க்காமலும் இருந்த அகஸ்டின் ஆதர்ஷிடம் அகல்யாவை நோக்கி கண் காட்டினான்.. அதை கற்பூர புத்தியால் பிடித்துக் கொண்ட ஆதர்ஷ் தன் சிறு கைகளில் இருந்த உணவை தன் தாயின் வாயருகே கொண்டு சென்றான்.

தன் முன்னால் கைகள் உணவுடன் நீட்டப்பட்டிருக்க அதை கண்டவள் தன் மகன் தான் என்பதை அறிந்த அகல்யா சந்தோஷத்துடன் அதை வாங்கி கொண்டாள்.

அதை பார்த்த அகஸ்டினின் இதழ்களிலும் புன்னகை வந்தது.

அனைவரும் சாப்பிட்ட பின்பு ஆதவனும் அகஸ்டினும் கிளம்பும் சமயம் அகஸ்டின் அருகே வந்த நவீஷா,

"ஏன் கிளம்புறீங்க.. திரும்ப எப்ப வருவீங்க.." என்றான் சந்தேகத்துடன்.


அகஸ்டின் புன்னகை சிந்தியபடி, "நான் இப்போ ஆபிஸ் தான் போறேன்.. ஈவ்னிங் வந்துடுவேன் குட்டி ஹீரோ சார்.. இப்போ நான் போகவா.." என்றான் கேள்வியுடன்.


சிறிது தன் விரலை தாவாயை தேய்த்து விட்டு , "ஓகே ஹீரோ.. சீக்கிரம் வந்துடுங்க.. ஐ ஆம் வெயிட்டிங் பார் யூ மை லவ்லி ஹீரோ.." என்றான் புன்னகையுடன்.

இவற்றை எல்லாம் பார்வையாளராக மட்டும் பார்த்துக் கொண்டிருந்த அகல்யாவிற்கு இந்த சூழலை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை.. நவீஷின் உடல்நிலை அவளை கட்டாயப்படுத்த முடியாமல் தடுத்து நிறுத்தியது.

இனி விட்டது கடவுள் வழி என்று தன்னை தேற்றிக் கொள்வதை தவிர வேறு எதுவும் அவளுக்கு தெரியவில்லை.

தன் விதியை நினைத்து நொந்தபடி பிள்ளைகளுக்கு ஜீஸ் போட சென்றாள்.

ரூபினி அகஸ்யாவின் முகபாவனையை பார்த்துக் கொண்டிருந்தாள்.. ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று.

ஆனால் அப்படி எந்த மாற்றத்தையும் முகத்தில் கொண்டு வந்தாள் அது அகல்யா இல்லையே.. தன் உணர்வுகளை மனதிற்குள்ளே போட்டு பழகியவள் தானே இப்பொழுதும் அதையே செய்தாள்.

அனைவருக்கும் ஜீஸ் கொடுத்து விட்டு நவீஷையும் ஆராவையும் தூங்க வைத்தவள் ஆதர்ஷை படிக்க சொல்லிவிட்டு வந்து ரூபினியுடன் வந்து அமர்ந்தாள்.

தன் முன் வந்து அமர்ந்தவளை தன் பார்வையால் அமர சொல்லவிட்டு தன் கையில் இருந்த லேப்டாப்பை அணைத்தவள் அகல்யாவின் அருகே வந்து அமர்ந்தாள்.

அகல்யாவின் கலையிழந்த முகத்தின் தோற்றம் வைத்தாலும் வேறு வழியில்லை என்பதால் அவளை சமாதானம் செய்ய முயன்றாள்.

"அகல்யா ஏன் இப்படி இருக்குறீங்க.. என்னாச்சி அது தான் பையனுக்கு எதுவும் ஆகலையே நல்லாருக்கான் இல்லை..முதல்ல இந்த கவலையை விடுங்க.. எல்லாம் நல்லதா நடக்கும் அகல்யா.." என்றாள் ஆதரவாய்.

"எனக்கு என்னவோ அந்த நம்பிக்கையே இல்லை அண்ணி.. இன்னைக்கு நடந்ததை நீங்களும் பார்த்தீங்க இல்லை.. அவரு இங்க வந்து போறது அக்கம் பக்கம் தெரிஞ்சா என்னை பத்தி என்ன நினைப்பாங்க..

அதுவும் ஸ்கூலுக்கு தெரிஞ்சா ஆளுக்கு ஒரு மாரி பேசுவாங்க அண்ணி.. நீங்க சொல்றது என்ன மத்தவங்களுக்காக நாம வாழ முடியாது தானே.. ஆனா அது இந்த விஷயத்துக்கு சரி வராது அண்ணி..

நல்லதோ கெட்டதோ இந்த சமூகத்துல தான் வாழறோம்.. ஊரோட ஒத்து போன்னு பழமொழியே இருக்கு அண்ணி.. எனக்கு ஒன்னும் சொல்ல தெரியலை.. ஆனா மனசுல ஏதோ ஒரு இனம் புரியாத தவிப்பு இருக்கு அண்ணி.. எனக்கு அதை எப்படி சொல்றதுன்னு தெரியலை.." என்றாள் சூழ்நிலை கைதியாய்.

அவளின் மனம் புரிந்தது.. தன் கையை அவள் கைகளில் வைத்து அழுத்தி ஆறுதல் தந்தவள்,

"ஏன் அகல்யா நான் ஒன்னு கேட்டா தப்பா நினைப்பீங்களா.." என்றாள் கேள்வியுடன்.

"கேளுங்க அண்ணி.. உங்க மேல என்ன கோபம்.." என்றாள் இயல்பாய்.

"பசங்க ரெண்டு சின்ன பசங்க தானே.. ஏன் நீங்க மறுமணம் பண்ணிக்க கூடாது.. இது ஒன்னும் கொலை குற்றம் இல்லையே.. ஏன் எத்தனையோ பேரு வயசானதுக்கு அப்புறம் கூட தங்களுக்கு ஒரு துணை தேவையேன்னு மறுமணம் பண்ணிக்குறாங்க.. உங்க வயசும் இளம் வயசு.. பெருசா என்ன முப்பது முப்பத்தி ரெண்டு இருக்குமா.. ஏன் இப்படி தனிமையா கஷ்டபடனும்.." என்றாள் தனக்குள் தோன்றிய சந்தேகத்தை தீர்க்க.

மெதுவாய் புன்னகைத்தவள், "மறுமணம் தப்புன்னு நானும் சொல்லலை அண்ணி.. ஆனா எனக்கு அது வேணாம்.. ஒர் வாழ்க்கையில பட்ட துன்பத்தோட வடுவே இன்னும் ஆறலை.. அதுக்குள்ள இன்னொரு வாழ்க்கையா.." என்றான் கசப்பான புன்னகையுடன்.

" என்ன சொல்றீங்க அகல்யா.." என்றாள் புரியாமல்.

" நீங்களும் ஒரு பொண்ணு அண்ணி.. நான் பட்ட வடு இன்னும் என் உடம்புல இருக்கு.. அதை மறைக்கவும் முடியாது.. மறக்கவும் முடியாது.. உங்ககிட்ட காட்டறதுக்கு என்ன.." என்றவள் தன் புடவையின் முந்தானையை எடுத்து பிளவுஸ் கொக்கிகளை கழட்டியவளின் மார்பில் தீக்காயம் இருந்தது.

அதை பார்த்து அதிர்ந்த ரூபினி, "அகல்யா என்னது இது.." என்றாள் அதிர்ச்சி நீங்கா குரலில்.

" பதட்டபடாதீங்க அண்ணி இன்னும் இருக்கு.." என்றவன் தன் புடவையை பாவாடையுடன் கீழிறிக்கினாள்.. அவள் நாபிக்குழியின் ஆறிய தீக்காயங்கள் காய்ந்து இருந்தன.

அதை பார்த்தவளின் கண்களில் கண்ணீர் தான் வந்தது.. அவளின் வடுவை தாங்க முடியாமல் ,

"என்னம்மா இது.. இப்படி சூடு வச்ச தழும்பா இருக்கு.." என்றாள் வலியோடு.

"இது என் இறந்த கணவர் எனக்கு கொடுத்த பரிசு அண்ணி.. இது மட்டுமில்லாம உங்கிட்ட காட்ட முடியாத இடத்துல கூட இருக்கு.. இதோ காயம் தான் அண்ணி ஆறியிருக்கு.. ஆனா அதோட வடு இன்னும் அழியாம இருக்கு அண்ணி.. நான் எப்படி அண்ணி இதோட இன்னொருத்தர் கூட வாழ முடியும்.. இதெல்லாம் இன்னும் யாருக்கும் தெரியாது அண்ணி.. உங்ககிட்ட தான் ஏனோ சொல்லனும்னு தோனுச்சி சொல்லிட்டேன்.. இப்போ சொல்லுங்க நான் இன்னொரு கல்யாணம் செய்துக்க தகுதியானவளா அண்ணி.." என்றாள் வலியான குரலில்.

கண்களில் வழிந்த கண்ணீருடன் அவளை அணைத்துக் கொண்டவள், "தகுதின்னு எதை அகல்யா நினைக்குறீங்க.. இந்த அழிய போற உடலையா..? இல்லை இதோ உங்களுக்கு ஆராத காயத்தை குடுத்துட்டு போன உங்க முன்னாள் கணவர் சந்தோஷம்னு நினைச்ச தாம்பத்தியத்தையா..? இல்லை மா இதையெல்லாம் விட இன்னும் இருக்கு என்ன தெரியுமா.. காதல் நேசம் அன்பு.. துவளும் போது தாங்கி பிடிக்க கரம்.. மடிசாய்த்து சொல்லும் ஆறுதல்.. ஒற்றை அணைப்பில் தெரியும் ஒராயிரம் பாதுகாப்பு.. வழிநடத்தி செல்லும் நம்பிக்கையான வழித்துணை வாழ்க்கைத்துணை.. இது தான் மா தகுதி.. உன்கிட்ட இதை விட அதிகமான தகுதிகள் நிறைய இருக்குடா..


இதோ பாரு நம்மோட வலியும் துக்கமும் ஒருத்தருக்கு சந்தோஷம்னா அதை நாம அவங்களுக்கு தந்துட்டு போலாமே.. ஆனா அவங்க அடிக்குறாங்க அப்படிங்கறதுக்காக இன்னொரு கண்ணத்தை காட்ட நாம ஏசு நாதர் இல்லை மா.. சாதாரண மனுசங்க..


கோபம் வந்தா காட்டிடனும்.. ஆத்திரம் வந்தா கொட்டிடனும்.. இன்பம் வந்தா சந்தோஷமா வாய் விட்டு சிரிக்கனும்.. இல்லையின்னா இந்த உலகம் நம்மளை மனுசங்களா பாக்காது.. அதே போலத்தான் நீயும்.. உனக்கு இன்னும் வாழ்க்கை இருக்கு...

தங்கமாட்டாம் ரெண்டு பசங்க.. இப்போ அவங்களோட தேடல் எது தெரியுமா.. தந்தையோட அன்பு அரவணைப்பு வாழ்க்கைகான வழிகாட்டல் உறவுகளின் தேடல்.. அவங்களோட உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து பாரு.. இந்த வீட்ல அவங்களோட சந்தோஷம் உன் கையில..

இந்த உலகத்துல தன் வீட்டுல என்ன பிரச்சனை என்னன்னு யாரும் பாக்க மாட்டாங்க.. ஆனா அடுத்தவங்க பிரச்சனைன்னு வரும் போது மட்டும் அவங்களோட காதுகள் கூர்மையாகிடும்.. இது எத்தனை நாளைக்கு இன்னொரு பேச்சும் பிரச்சனையும் கிடைக்கும் வரைக்கும் தான்.. நல்லா யோசி.." என்றவள் தன் கையிலிருந்து அகல்யா பார்க்காதவாறு அதை அணைத்து விட்டு மீண்டும் தன் வேலைக்குள் புகுந்து கொண்டாள்.

அதே நேரத்தில் இங்கே தன் போனை அணைத்த அகஸ்டின் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த ஆதவனை கண்டான்.

அவனின் வழிகளிலும் கண்ணீர் வழிய அதை துடைத்து விட்டு அகஸ்டினை பார்த்தவன், "என்னடா இது.. கஷ்டமா இருக்குடா.." என்றான் வலியுடன்.

அதை கேட்டு தன் தலையை கோதிய அகஸ்டினின் யோசனை எப்படி தன்னவளை இதிலிருந்து மீட்பது என்று தான்.

" அகஸ் என்னடா பண்ண போற.." என்றவனின் கேள்விக்கு,


"அவளோட மனசு மாறுர வரைக்கும் வெயிட் பண்ண வேண்டியது தான்.. ஆனா அதுக்காக நான் அங்கே போகாமா இருக்க மாட்டேன்.. இனி தான் அதிகமா போவேன்.. என் அகியை மாத்துவேன். . அவளோடவும் என் பசங்களோடவும் சந்தோஷமா வாழ்வேன் மச்சான்.." என்றான விழிகளில் ஆயிரம் கனவுகளுடன்.

ஆனால் அவன் அறியாதது அவனின் கனவுகளுக்கு அவனே தீயை வைப்பான் என்பதும் பிள்ளைகளையும் அவளையும் இவனாலே துன்பம் கொள்வார்கள் என்றும் இவன் அறியாதது.

அது விதியின் விளையாட்டு.. அதை மதி கொண்டு வெற்றி பெறுவது யார் என்பது தான் தற்போதைய வேள்வி.



நிழலை வருடும் நிஜம் தொடரும்..🌹


அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ண பட்டூஸ்க்கு நன்றி.
 

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
255
144
43
Theni
மிகவும் அழுத்தமான பதிவு மா