• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் - 39

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
அகல்யாவின் வலியை கேட்ட அகஸ்டின் அதை போக்கி எப்படி தான் எப்படி அவளின் மனதில் நுழைவது என்று சிந்தித்தவன் சிந்தையில் ஒன்றும் விளங்காமல் போக மனம் போன போக்கில் தன் காரை எடுத்து சுற்றிக் கொண்டிருந்தான்.

அப்பொழுது தான் நினைத்தான் தனசேகரை பற்றி.. உடனே தன் வண்டியை சாரதா இல்லம் நோக்கி திருப்பினான்.

சாரதா இல்லம் தங்களை அன்புடன் அழைக்கிறது என்ற பெயர் பலகையை பார்த்தவன் அதன் உள்ளே நுழைந்தான்.

அங்காங்கே முதியவர்களும் மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.. குழந்தைகள் அங்கே இருந்த ராட்டின தூரியில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அதை பார்த்தவன் அங்கை முன்னே வந்த ஒருவரிடம், "ஐயா தனசேகர் சாரை பார்க்கனும்.." என்றான் கேள்வியாய்.

" அவரு அங்கே ஆபிஸ் ரூமில் இருப்பாருங்க.. இப்படியே நேரா போனா வலப்பக்க ரூம்ங்க.." என்று விட்டு அவர் சென்று விட்டார்.

அவருக்கு ஒரு நன்றியை சொல்லவிட்டு அலுவலக அறையை நோக்கி நகர்ந்தான்.

அங்கே ஏதோ கேப்பில் எழுதி கொணாடிருந்தவர் தன் முன்னை நிழலாடவும் நிமிர்ந்து பார்த்தார்.. அங்கே அகஸ்டின் நின்றிருக்கவும் வியப்புடன் தன் புருவத்தை உயர்த்தினார்.

" வாங்க வாங்க தம்பி எங்கே இவ்வளவு தூரம்.." என்றார் சிரிப்புடன் அவன் வரவை எதிர்பார்க்கவில்லை.

:வணக்கம் ஐயா உங்களை தான் பார்க்க வந்தேன்.. உங்க கூட கொஞ்சம் பேசலாமா.." என்றான் புன்னகையுடன்.

" அட வாங்க தம்பி இதுக்கு என்ன பர்மிஷன்.. நீங்க எவ்வளவு பெரிய ஆளு.. என்னை தேடி வந்ததே சந்தோஷம் தான் தம்பி.." என்றார் மென்மையாய்.

" நான் அகல்யாவை பத்தி பேசனும் சார்.."

" அகல்யாவை பத்தியா.. என்ன தம்பி.." என்றார் கேள்வியாய்.

அவரின் முகத்தில் இருந்த கேள்வியை உணர்ந்தவன் ஒரு வலியுடன் கூடிய சிரிப்புடன், "உங்களுக்கு அகல்யாவை பத்தி எதுவரைக்கும் தெரியும் சார்.. அவங்களோட முந்தைய வாழ்க்கை பத்தி.." என்றான் கேள்வியாய்.

அவரோ சோகமான முகத்துடன், "இல்லை தம்பி அதை கேட்டு சங்கடபடுத்த நானும் விரும்பலை.. அதனால கேட்கலை.. ஒரு தடவை கேட்கும் போது கூட அவளோட அழுகை மட்டும் தான் பதிலாய் கிடைச்சது.. அதனால நானும் கேட்கலை தம்பி.." என்றார் குற்றவுணர்வுடன்.

" பரவாயில்லைங்க ஐயா.. அவங்களை பத்தி தான் நான் பேச வந்துருக்கேன்.." என்றவன் கிட்டதட்ட அரை மணிநேரம் அவரிடம் பேசினான்.

அகல்யாவின் வாழ்க்கையை பற்றி கூறியவன் இப்பொழுது நடந்த பிரச்சனை பற்றியும் கூறினான்.

அதுமட்டுமல்லாமல் தான் அவளை பார்த்த நாள் முதல் இப்பொழுது அவளை நேசிப்பது வரை அத்தனையும் கூறியவன்,

"என்னால் அவங்களை இனி அப்படி தனியா விட முடியாது.. அவங்க மூனு பேருமே என்னோட சொத்து ஐயா.. அவங்க இனி என்னோட தான் இருக்கனும்.. அவ உங்க மேல நிறைய நம்பிக்கை வச்சிருக்கா.. உங்களை தன் பெத்தவரா நினைக்கிற.. நீங்க சொன்னா நிச்சயம் எங்களோட வாழ்க்கை நல்லாருக்கும் ஐயா.." என்றான் தீர்மானமாய்.

அவனையே சிறிது நேரம் யோசனையுடன் பார்த்தவர், "தம்பி நான் உங்களை கேட்குறேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க.. நீங்க இப்போ சொல்லவும் எனக்கு புது பொறுப்பு வந்துருக்கு.. அதை நான் சந்தோஷமா ஏத்துக்குறேன்..

உண்மையா நீங்க அகல்யாவை விரும்புறீங்களா.. நான் ஏன் இப்படி கேக்குறேன்னு யோசிக்காதீங்க தம்பி.. காரணம் இருக்கு.. நீங்க சொன்ன அத்தனையும் உண்மைன்னாலும் பிடிச்சதோ பிடிக்கலையோ அவ இன்னொருத்தனோட உடலால வாழ்ந்திருக்க.. முழு மனசோட அவளை நீங்க ஏத்துப்பீங்களா.. நாளைக்கு எந்த சூழ்நிலையிலும் இந்த விஷயம் உங்களோட மனசுல உறுத்திட்டு இருக்க கூடாது.. அதுக்காக ஒரு கிளாரிபிகேஷன் தான் இது.." என்றார் அவனின் முகத்தை பார்த்தபடி.

அதை கேட்டு மென்னகை புரிந்தவன், "உங்களுக்கு எப்படி சொன்னா புரியும்னு எனக்கு தெரியலை அங்கிள்.. ஆனா எனக்கு என் உயிரை விட மேலானவங்க இவங்க மூனு பேரும் தான்.. எந்த காலத்திலேயும் இவங்களை நான் விட மாட்டேன் அங்கிள்.. இது சத்தியம்.. நான் உயிரா மதிக்கிற என் தாய் மேல் சத்தியம்.." என்றவனை பார்த்து விதி சிரித்தது.

எந்த தாயின் மீது சத்தியம் செய்தானே அந்த சத்தியத்தை அவனே மீறுவான் என்று கனவிலும் அவள் நினைத்திருக்க மாட்டான்.. ஆனால் அது நடக்கும் போது அவனின் நிலை..? காலத்தின் கட்டாயம் நடப்பது நடக்க வேண்டியது என அனைத்துமே அவனின் கையில்.

அவன் செய்த சத்தியத்தில் மனம் குளிர்ந்த தனசேகர்,

"ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை.. என் பொண்ணை உங்களை விட யாரும் பாத்துக்க முடியாது.. நான் பேசுறேன்.. நான் பேசுறதால மட்டும் அவ மாறிட மாட்ட..அவளோட உடைஞ்சி போன நம்பிக்கை அவளுக்கு நீங்க தரணும்.. எந்த சூழ்நிலையிலும் அவளை விட்டு கொடுக்க மாட்டேன்னு அவளுக்கு நீங்க நிருபிங்க மாப்பிள்ளை.. கூடிய சீக்கிரம் அந்த நாளுக்காக நாங்க காத்திருக்கோம் மாப்பிள்ளை.. முதல்ல கல்லா இறுகி கிடக்கற என் பொண்ணோட மனசை இளக வைங்க.. அப்புறம் நீங்க நெனச்சது தன்னாலே நடக்கும்.." என்றபடி அவனை அணைத்துக் கொண்டார்.

" தேங்க்ஸ் அங்கிள்.. இங்கே வரும் போது குழப்பத்தோட வந்தேன்.. ஆனா இப்போ நான் தெளிவா இருக்கேன் அங்கிள்.. நான் திரும்ப வருவேன் அங்கிள்.. அப்புறம் அங்கிள் இது உங்க ஆசிரமத்துக்கு என்னோட சின்ன பரிசு.. கண்டிப்பா இதை நீங்க ஏத்துக்கனும்.. இது உங்க பொண்ணோட சார்பா உங்க மாப்பிள்ளை தர பரிசு.. ப்ளீஸ் அங்கிள் ஏத்துக்கோங்க.." என்றபடி இரண்டு லட்சத்துக்கான செக்கில் கையெப்பம் இட்டு கொடுத்தான்.

அதை வாங்கியவர், "என்ன மாப்பிள்ளை என் பொண்ணுக்கு சீதனமா இது.. நான் தான் மாப்பிள்ளை கொடுக்கனும் இதை.." என்றார் புன்னகை முகமாய்.

"இல்லை அங்கிள் உங்க பொண்ணுக்கு சீதனம் நான் தான் தரணும்.. அவ கொடுத்த சீதனம் என் பசங்க அங்கிள்.. கண்டிப்பா என் உயிர் உள்ள வரைக்கும் காப்பாத்துவேன் அங்கிள்.." என்றான் இறுதியாக.


அவனின் உறுதி நிறைந்த வார்த்தை தந்தையானவருக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.. அவன் கொடுத்த பரிசை ஏற்றவர் அதற்குண்டான ரசீதை தந்தார்.

அதை கேள்வியுடன் வாங்கியவன் இது எதற்கு என்பது போல் பார்த்தான்.

" மாப்பிள்ளை இது நீங்க கொடுத்த பரிசுக்கான உண்மை சான்று.. இதை உங்களுக்கு எப்பவும் உதவும் மாப்பிள்ளை.." என்றார் சிரித்தபடி.

அவரின் நேர்மை அகஸ்டினை வியக்க வைத்தது.. இந்த காலத்திலும் இப்படி ஒரு மனிதரா.. அதனால் தான் தன்னவள் இவரை தந்தையாக ஏற்றுள்ளாள் என்று நினைத்து சிரித்தவன் சந்தோஷமாய் கிளம்பினான்.

நேரே அவன் சென்ற இடம் அகல்யாவின் வீடு தான்.. ஏதோ தன் வீடு போல் உரிமையாக வீட்டின் உள்ளே நுழைந்தவன் அங்கே கட்டிலில் உறங்கி கொண்டிருந்த நவீஷை கண்டு மனம் கனிந்தது..கூடவே ஆதர்ஷ் விளையாடி கொண்டிருந்தான்.. அவனை பார்த்து புன்னகை செய்தவன் தன் கைகளை நீட்டி அழைத்தான்.

அவனும் அதற்காகவே காத்திருந்தது போல், "ஹீரோ.." என்ற குரலுடன் சென்று அவனின் மடியில் இயல்பாய் அமர்ந்து கொண்டான்.

தன் பிள்ளை என்று மனதில் பதிந்து போனதாலோ என்னவோ ஆடவனுக்கு சிலிர்ப்பையும் சேர்த்து தான் தந்தார்கள் சிறியவர்கள் இருவரும்.

கோவிலுக்கு சென்றிருந்த அகல்யா அப்போது தான் வீடு வந்தாள்.. தன் வீட்டின் முன்னே நின்றிருந்த காரை பார்த்து விட்டு தயக்கத்துடன் உள்ளே நுழைந்தாள்.

அகஸ்டினின் மடியில் ஆதர்ஷ் அமர்ந்து அவனின் மொபைலில் விளையாடி கொண்டிருக்க நவீஷோ மருந்தின் வீரியத்தில் நன்றாக உறங்கி கொண்டிருந்தான்.

அவர்கள் இருவரும் அமர்ந்ததை பார்த்தவளுக்கு ஏதோ தந்தையும் தனயனும் அமர்ந்ததை போல் இருந்தது.

தன் எண்ணத்தில விதிர்த்தவள் தன்னையே நடந்து கொண்டாள்.

அவனை இருவரும் ஹீரோ என்றே அழைத்தனர்.. அவனும் அவர்களை மாற்றி அழைக்க சொல்லவில்லை.. ஏன் அவர்கள் விரும்புவது போல் அழைக்கட்டும் என்று நினைத்தான்.

நவீஷ் கண் விழிக்கும் போது அகஸ்டின் அவன் முன்னே ஆதர்ஷிக்கு பள்ளி பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

கோவிலில் இருந்த வந்த அகல்யா ஆதர்ஷின் நெற்றியில் விபூதியை பூசி விட்டு தூங்கி கொண்டிருந்த நவீஷிக்கு அவன் கைகளில் கிள்ளி விட்ட படி விபூதியை வைத்து விட்டாள்.

அங்கே அகஸ்டின் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்க்க பெண்ணவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.. அங்கிருந்து செல்லப் போனவளை,

"அம்மா ஹீரோக்கு வச்சி விடுங்க.." என்று அவளின் மகனே அவளை மாட்டி விட்டான்.

மகனின் முன்பு என்ன செய்வது என்று தடுமாறியவள் தன் இமையை மெதுவாக உயர்த்தி அவனை பார்த்தாள்.. அவள் நினைத்தது அவன் ஒரு கிறிஸ்டின் இதில் அவனுக்கு நம்பிக்கை இருக்குமா என்ற எண்ணமும் வந்தது.. அதை தள்ளி வைத்தவளோ மெதுவாக அவனை பார்த்தாள்.. ஆனால் அவனோ தன் நெற்றியில் வழிந்த முடியை தன் கைகளால் ஒதுக்கி இடம் விட்டு அவளிடம் குணிந்து நின்றான்.

அதை பார்த்தவளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் நடுங்கும் கரங்களால் தன் கையில் விபூதியை எடுத்தவள் அவனின் நெற்றியில் வைப்பதற்குள்ளாக அவளின் உடல் வியர்வையில் நனைந்தது.

இது நாள் வரையில் இல்லாத தயக்கம் இன்று அவளிடம் ஒட்டிக் கொண்டது.

ஆதர்ஷிற்கு நன்றாகவே விவரம் தெரியும் தான்.. ஆனால் தன் தாயின் கடந்த காலம் முழுமையாய் அறியாமல் இருந்தாலும் சிலது அறிவான் மற்றவர்கள் சொன்னதை கேட்டு.. தன் தாயின் பழையை வாழ்க்கை இனி தேவையில்லை என்றே முடிவு செய்தவன் அகஸ்டினின் பாசத்தை கண்டவனுக்கு நிச்சயம் தன் தந்தையுடன் ஒப்பிட முடியாத இடத்தில் அகஸ்டின் உள்ளான் என்பதை மட்டும் அறிந்திருந்தான்.

மதியம் அகல்யாவும் ரூபினியும் பேசியதை கேட்டவனுக்கு தன் தாய்க்கும் சரி தங்களுக்கும் சரி அகஸ்டின் தான் சரி என்றே அவனுக்கு தோன்றியது.

அதில் ஏற்பட்ட மாற்றம் அகஸ்டின் தந்தையாய் அவனின் மனதினுள் நுழைந்து விட்டான்.. இனி அவனும் இந்த குடும்பத்தில் ஒருவன் என்பதை சிறியவனின் மனம் ஏற்றுக் கொண்டது.

இருவரையும் சிரிப்புடன் பார்த்தான்.. கரங்கள் நடுங்க அவனின் நெற்றியில் தன் விபூதியை வைத்தாள்.

ஆடவனின் மேனியோ சிலிர்த்து தான் போனது.. அவளின் அந்த பிரத்யேகமான வாசனை ஆடவனை நிலை கொள்ள செய்தது.

தன் கரங்களை சடக்கென இழுத்துக் கொண்டவளுக்கும் அவனின் ஸ்பரிசம் இன்னும் தன் உடலில் இருப்பதை போல் உணர்ந்தாள்.

அவளின் பொன்மேனி நடுக்கம் கொண்டது.. அவனை மேற்கொண்டு பார்க்க முடியாமல் அங்கிருந்து வேகமாய் சென்று விட்டாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் தன் நினைவை திருப்பி ஆதர்ஷிடம் தன் கவனத்தை வைத்தான்.


நிழலை வருடும் நிஜம் தொடரும்..🌹


அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ண பட்டூஸ்க்கு நன்றி.