• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் -41

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
பிள்ளைகள் இருவரும் உறங்கியதும் அவர்களை போர்வையால் போர்த்தி வி்ட்டு சென்றவளை அகஸ்டினின் வார்த்தையில் அப்படியே நின்று விட்டாள்.

" இந்த வயசுல நான் வேலைக்கு போனேன்.. ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டம்.. இந்த மாதிரி தாய் பாசத்தையும் நான் அனுபவிச்சதில்லை.." என்றான் அவளை பார்த்துக் கொண்டு.

அந்த வார்த்தையில் இருந்த வலி பெண்ணவளுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.. அதுவும் சில நிமிடம் தான் அடுத்த நொடி, "இதை ஏன் என்கிட்ட சொல்றீங்க.. உங்க அம்மாகிட்ட சொல்லலாம்.." என்றாள் சுவற்றை பார்த்தபடி.

"அம்மா இருந்தா சொல்லியிருப்பேன்.. ஆனா எல்லாரும் இருந்த அனாதையா இருக்கிறவனுக்கு எங்கிருந்து பாசம் கிடைக்கும்.." என்றான் அவனறியாமல்.

ஆம் அவனறியாமல் தான் அவளை பற்றி அகல்யாவிடம் சொல்லி கொண்டிருக்கிறான்.. தன் மனதை இறுக்கி இரும்பாய் வைத்திருந்தவனின் மனம் பெண்ணவளின் பாசத்தில் பித்தானது.. அந்த பாசமும் அன்பும் தனக்கும் வேண்டும் என்ற அவனின் ஆழ் மனதின் வேண்டுதல் அவனை அசைத்தது.

ஆனால பெண்ணவளுக்கோ அவனின் அனாதை என்ற வார்த்தை உள்ளத்தை தைத்தது.. எத்தனை பெரிய கோடிஸ்வரன்.. எத்தனை தொழிலாளர்கள் இவனின் நிழலில் நிம்மதியாய் இருக்கிறார்கள்.. ஏன் தன் மகன்களுக்குமே அங்கே கட்டணம் இல்லா கல்வியை அல்லவா கொடுத்திருக்கிறான்.. இத்தனை இருந்தும் இவன் அனாதை என்கிறானே என்றவளுக்கு தெரியாது அல்லவா அவன் பணமிருந்தும் பாசத்தில் ஏழை என்று.

ஏதோ அந்த ஒரு வார்த்தை அவளை இளக செய்தது.. தன் இளகிய மனதை இறுக்கி பிடித்தவள் அவனிடம் திரும்பாமல், "சீக்கரம் படுங்க நேரம் ஆச்சி.." என்றவள் வேகமாய் அங்கிருந்து சென்று விட்டாள்.

அந்த வார்த்தை ஆடவனுள் இத்தனை நாளாய் இருந்த வெறுமை மறைந்திருந்தது.

மனதோரம் மகிழ்ச்சி பூக்க தன் லேப்டாப்பை அணைத்து விட்டு வந்து பிள்ளகைளுடன் படுத்து விட்டான்.. படுத்தவுடன் நிம்மதியாய் உறங்கியும் விட்டான்.

அவன் தூங்கியதும் அவனருகில் இருந்த நவீஷ் தன் கால்களை தூக்கி அகஸ்டின் மேல் தூக்கி போட்டு உறங்கி விட்டான்.. ஆடவனும் தூக்கத்தில் உணர்ந்ததால் சிரிப்புடன் அந்த கால்களை தன் கைகளால் பிடித்து கொண்டு உறங்கி விட்டான்.. எத்தனை நாள் தவமோ இல்லை கிடைத்தற்கரிய வரமோ நிம்மதியான உறக்கம் ஆடவனை தழுவிக் கொண்டது.

இங்கே மற்றொரு அறைக்கு வந்த அகல்யாவுக்கு தான் தூக்கம் பறிபோனது.

அவன் கூறிய வார்த்தைகள் பெண்ணவளுக்கு வலியை தான் கொடுத்தன.. என்ன தான் அவன் தங்களுடன் தங்குவது அவளுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவனின் அனாதை என்ற வார்த்தை உலுக்கியது.

அவள் பெண் அதிலும் இரு குழந்தைகளின் தாய்.. ஒரு தாயால் எப்படி இந்த வார்த்தையை ஏற்றுக் கொள்ள முடியும்.. அவளறியாமல் அவனின் வார்த்தை அவள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.. அவள் கண்களில் கண்ணீர் கரை தட்டியது.

ஆனால் அவளறியாதது இதுவரை யாரிடமும் ஏன் ஆதவன் ரூபினியிடமும் என்றும் தன் மனதை திறக்காதவன் இன்று அவளிடம் தான் அவனறியாமல் திறந்தான் என்பதை பேதையவள் அறிந்தாள்..? அவனுக்கு அத்தனை முக்கியமானவளா அவள் என்பது அவன் மனதே அறியும் ரகசியம்.

அவனை பற்றிய சிந்தித்தவள் தூங்கிய நேரத்தை அறியவில்லை.

அதிகாலையின் செந்நிறத்தோன் ஒளி வீச தன் தூக்கம் கலைந்து எழுந்தாள் பாவை.. தன் பக்கத்தில் பார்த்தாள் தன் பிள்ளைகள் எப்பொழுதும் இருப்பார்கள் என்ற எண்ணத்தில்.. ஆனால் அவர்கள் தான் அவர்களின் ஹீரோவுடன் படுத்திருப்பார்களே.. தன் தலையை தானே தட்டியவள் எழுந்து தன் காலை கடன்களை முடித்து விட்டு குளித்தாள்.

உடனே தன் பிள்ளைகளை காண வேண்டும் என்ற ஊக்கத்தில் அவர்களின் அறைக்கு சென்றவள் அப்படியே விக்கித்து நின்று விட்டாள்.

அவளின் அதிர்ச்சிக்கு காரணமானவர்களோ அவள் வந்ததை அறியாது நிம்மதியுடன் துயில் கொண்டிருந்தார்கள்.

அகஸ்டின் நடுவே படுத்திருக்க ஒருவன் தன் காலை அதிகாரமாய் அவனின் மேலே போட்டு படுத்திருக்க மற்றொருவனோ அவனின் புஜத்தில் தன் தலையை வைத்து அவனை அணைத்தபடி படுத்திருந்தான்.. ஆனால் மூவரின் முகத்திலும் மென்மையாய் சிரிப்பு இருந்தது.. ஏன் தூக்கத்தில் மூவரும் ஒன்று போல் தான் படுத்திருந்தனர்.

தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள் அவர்களை எழுப்பாமல் வெளியே வந்து விட்டாள்.. ஏனோ மனம் படபடவென துடித்தது.. தான் எப்படி அவர்கள் மூவரையும் ஒன்று போல் உள்ளார்கள் என எண்ணினேன்.. அவர்களின் ஒன்றாக எண்ணினேன்.. என் பிள்ளைகளின் தந்தை தான் இறந்து விட்டானே.. என்றவள் தன் எண்ணத்திற்கு திரையிட்டு தன் வேலையை செய்ய சென்றாள்.

வெளியே சென்று வாசல் தெளித்து அதில் சிறியதாய் ஒரு கோலத்தை போட்டவள் பூஜையறைக்கு சென்று இரவு கட்டி வைத்த மலர்களை சாமி படங்களுக்கு போட்டு விளக்கேற்றி சாமி கும்பிட்டாள்.

நன்றாக தூங்கி கொண்டிருந்தவனின் மூக்கில் நுழைந்த வித்தியாசமான வாசனையில் எழுந்தவன் தன் அருகில் இருந்தவர்களை தலையணையில் படுக்க வைத்து விட்டு எழுந்து வெளியே வந்தான்.

அங்கே சுவாமி படங்களின் முன்னே நின்று காயத்ரி மந்திரத்தை மெதுவாய் உச்சரித்து கொண்டிருந்தாள் பெண்ணவள்.

"அய்கிரி நந்தினி நந்தித மேதினி

விஸ்வவிநோதினி நந்தனுதே....

கிரிவர விந்திய சிரோதினி வாஸினி

விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே...."


தன் இருகரம் கூப்பி மனதில் தெய்வத்தை நினைத்து அதன் முன்பு காயத்ரி மந்திரத்தை உச்சரித்தவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.. காலையிலே தலைக்கு ஊத்தியிருப்பாள் போல.. தலையை நன்றாக உலர்த்தி அதன் உச்சியில் சிறியதாய் முடிச்சிட்டவள் தண்ணீர் ஒழுக எளிமையான அந்த காட்டன் புடவையிலும் தேவதையாய் ஜொலித்தாள் பெண்ணவள்.

ஏனோ அந்த காலை நேரம் தான் அவன் வாழ்வின் முக்கிய நேரமாகின.. இத்தனை அழகான விடியலை அவன் வாழ்வில் கண்டதுண்டா என்ற கேள்விக்கு நிச்சயம் இல்லை என்று தான் சொல்வான்.

வெறுமையாய் இருந்த வாழ்வில் சொர்க்கத்தை கொண்டு வந்த தேவதையாய் தெரிந்தாள் அவனின் கண்களுக்கு.

அவளை பார்த்து கண்களில் நிரப்பிக் கொண்டவனுக்கு அவளின் அழகில் எதுவோ குறைவது போல் இருந்தது.. அது என்ன என்று நன்றாக உற்று பார்த்தவனுக்கு தெரிந்து விட்டது அது என்ன என்று.. ஆனால் தான் இருக்கும் சூழ்நிலையில் அவளுக்கு அதை செய்ய முடியாது என்று உணர்ந்தவன் வெளியே வழக்கம் போல் செல்லும் வாக்கிங் சென்றான்.

பூஜையறையிலிருந்து வெளிவந்தவள் கண்டது வீட்டை விட்டு வெளியேறும் அகஸ்டினை தான்..


' ஓஓ எழுந்து விட்டார் போல.. ஆனா இந்த காலை வேலையில் எங்கு செல்கிறார்.. சரி வரட்டும்.. நாம் போய் வேலையே கவனிப்போம்..' என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டவள் சமையல் கட்டிற்கு சென்று பிள்ளைகளுக்கு ஹார்லிக்ஸ் கலந்து எடுத்துக் கொண்டு அவர்களின் அறைக்கு சென்றாள்.

அங்கே இருவரும் இன்னும் துயில் கலையாமல் இருக்க ஒரு சிரிப்புடன் அவர்களருகில் சென்றவள் இருவரின் தலையையும் கோதி விட்டு எழுப்பி விட்டாள்.

அதில் எழுந்த நவீஷ் தன் தாயை பார்த்து சிரிப்புடன்,

"குட்மார்னிங் மா.." என்று கூறியவன் தன் பார்வையை சுற்றிலும் தேடியவன் அவன் தேடலுக்குண்டானவன் இல்லாமல் போகவும் தன் தாயிடம் திரும்பி,

"அம்மா எங்க ஹீரோ காணோம்.. நான் தூங்கினதும் போயிட்டாறா.. ஆனா இல்லையே அவரு என்னோட தானே தூங்கனாரு.." என்றான் ஏமாற்றமான முகத்துடன்.

அவனின் அந்த முகத்தை பார்க்க முடியாமல்,

"நவீஷ் அவங்க எங்கேயும் போகலை.. வெளியே தான் போயிருக்காங்க.. வந்துருவாங்க போய் பல் விளக்கிட்டு வந்து ஹார்லிக்ஸ் குடி.. ஆது கண்ணா எழுந்திரு.." என்று அவனையும் எழுப்பியவள் பார்வையை மடித்து வைத்து விட்டு தலையணையை சரி செய்தவள் அதிலிருந்து விழுந்த மொபைலை பார்த்தவள் அதை எடுத்து டேபிளில் வைத்தாள்.

அவள் எடுத்து வைத்த அடுத்த நொடி அலைபேசி அடித்தது.. அதை எடுத்து யாரென பார்த்தவள் ஆதவன் காலிங் என்று வர தமையன் என்று நினைத்து அதை அட்டெண்ட் செய்து பேசினாள்.

"ஹலோ அண்ணா.." என்றாள் சிரிப்புடன்.

அந்த பக்கமோ தன் மொபைலை திரும்ப எடுத்து பார்த்தவன்,' நாம அகஸ்டினுக்கு தானே பன்னனோம்.. ஆனா தங்கச்சி எடுத்து பேசுது..' என்று சிந்தனையில் இருக்கு அந்த பக்கம் ஹலோ ஹலோ என்று கத்தி விட்டு எந்த சத்தமும் இல்லாது போக அதை அணைத்து வைத்தவள் தன் வேலையை பார்க்க சென்றாள்.

அங்கே ஆதவனுக்கு காபியை கொடுக்க வந்த ரூபினி அவனின் சிந்தனையை பார்த்தவாறு அவனிடம் வந்து சூடான காபி கப்பை அவனின் கையில் வைத்து அழுத்தினாள்.. தன் கையில் ஏதோ சூடாக உணர்ந்தவன் காபி கப்பை பார்த்து விட்டு, "ஆஆ அய்யோ அடிப்பாவி இப்படி சூடு வைக்குறீயேடி ராட்சசி.." என்று கத்தினான்.

அவனின் கத்தை பார்த்து பயந்த ரூபி அவனின் இதழில் சட்டென தன் இதழை பொருத்தி அவனின் கத்தலை நிறுத்தினாள்.

தன் உதட்டில் படர்ந்த தன்னவள் இதழின் ருசியில் எல்லாவற்றையும் மறந்தவன் அவளின் இடையில் கரம் கொடுத்து தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான்.

அவள் கொடுத்ததை எப்போது அவன் எடுத்துக் கொண்டானோ அவள் மூச்சுக்கு திணறும் சமயத்தில் அவளை விட்டவன் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

"என்னடி காலையிலே மயக்க பாக்குற.. என் பொண்டாட்டிக்கு ராத்திரி கொடுத்தது பத்தலையோ.." என்றான் அவளின் காதுகளில் ரகசியமாய்.

" ஆமா புதுசா தான் என்கிட்ட மயங்குற மாறி.. ஏதோ யோசனையிலே இருந்தீங்களேன்னு லைட் ஆஆ சூடு வச்சா நீங்க ஊரையே கூட்டுறீங்க.. அது தான் எப்படி உங்களை கரெக்ட் பண்ணேன் பாத்தீங்களா.." என்றாள் பெருமையாய்.

"ஆமாடி நான் புதுசா மயங்குல தான்.
ஆனா முன்னே மயங்குனதுக்கே தான் இன்னும் மயக்கும் முழுசா தெளியாம வச்சிருக்க.. ஆனா பாத்தியா நான் சும்மா கத்துனதுக்கே உன்னையே முத்தம் கொடுக்க வச்சிட்டேன்.. பட் ஆனா ரொம்ப டேஸ்ட்டி இந்த லிப்.." என்றான் கள்ளமாய்.

"பிராடு அத்தான் நீங்க அப்போ வலிச்ச மாறி நடிச்சீங்களா.. சரி அதை விடுங்க என்ன அப்படி யோசனையில இருந்தீங்க.." என்றாள் அவனின் முகத்தை தாங்கியபடி.

" அது வந்து ஹனி நான் அகஸ்க்கு போன் பண்ணேன்.. ஆனா அட்டெண்ட் பண்ணது அகல்யா டி.. அவனோட போனை அவ எப்படி டி எடுத்தா.. அவங்களுக்குள்ள எல்லாம் சரியாகிடுச்சா.. எனக்கு ஒன்னும் புரியலை ஹனி.." என்றான் குழப்பமாய்.

" அய்யோ அத்தான் உங்களை என்ன தான் சொல்றது.. அண்ணா இப்போ அங்க தானே இருக்காங்க.. எங்கேயாவது வெளியே போயிருப்பாங்க.. அதனால அகல்யா எடுத்துருப்பாங்க.. அதுக்கு இந்த யோசனையா போய் வேலையை பாருங்க.." என்று அவனை திட்டி விட்டு சென்றவளை தன் கைகளில் அள்ளி எடுத்தவன்,

"காலையிலே என்னோட மூட் சேஞ்ச் பண்ணிட்டு நீ மட்டும் போறே.." என்று அவளை கைகளில் அள்ளி எடுத்து மற்றொரு அறைக்குள் சென்று விட்டான் .

இங்கே வீட்டிற்கு வந்த அகஸ்டினுக்கு காபியை கொடுத்து விட்டு சமையல் கட்டிற்குள் சென்றுவிட்டாள் அகல்யா.

அதை புன்னகையுடன் எடுத்துக் கொண்டவன், 'அம்மா உங்க மருமக என்னை நல்லாவே கவனிக்குறா. . ஆனா என்னை விட்டு பிரிய நினைக்குறா மா.. என்கிட்ட இருந்து அவளை பிரிச்சிடாதிங்க மா.. உங்களை நான் அவகிட்ட தான் பாக்குறேன்..' என்றவனுக்கு தெரியவில்லை தானே அவளை பிரியும் முடிவு எடுப்பான் என்று.


விதியின் ரதங்களிலே நாம்
விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா சிறு
மனமும் கலங்குதடா..
கொடுக்க எதுவுமில்லை என்
குழப்பம் முடிந்ததடா..
கணக்கை முடித்து விட்டேன்
ஒரு கவலை முடிந்ததடா..




நிழலை வருடும் நிஜம் தொடரும்.. 🌹


அடுத்து பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ண பட்டூஸ்க்கு நன்றி
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
நல்லா போகுதே 🤔🤔🤔🤔🤔அப்புறம் எப்படி அகஸ் விலகுவான் உடம்புக்கு பிரச்னை வரும்போது செய்வானோ 🤔🤔🤔