• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் - 42

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
அடுத்த ஒரு மணி நேரத்தில் பிள்ளைகளும் அகல்யாவும் பள்ளிக்கு கிளம்ப அகஸ்டின் தன் அலுவலகத்திற்கு கிளம்பினான். அனைவரும் வந்து டைனிங் டேபிளில் அமர எல்லோருக்கும் உணவை வைத்தாள்.. இயல்பாகவே அகஸ்டினுக்கும் வைத்தாள்.. இந்த முறை தயங்கவும் இல்லை நடுக்கமும் இல்லை.. ஏன் இரவு அவன் சொன்ன வார்த்தையின் வீரியம் அவளுள் இன்னும் உறங்கி கிடந்தது.

தன்னருகே தட்டு வைத்து அவள் பாரிமாறுவதையே சற்று பார்த்தவனை முறைத்து பார்த்தாள்.. அவளின் ஒற்றை பார்வை ஆடவனுக்கு உடல் சிலிர்த்து போனது.

மேலும் அவளிடம் எதுவும் பேசாமல் தன் தட்டில் வைத்ததை எடுத்து வாயருகே கொண்டு செல்லும் நேரம் அவனின் கையருகே தன் வாயை கொண்டு வைத்தான் நவீஷ்.

அதை கண்ட அகஸ்டினுக்கு தான் சொல்ல முடியா உணர்வு மனதில் தோன்றியது.. சந்தோஷமாக அதை சிறியவன் வாயில் தினித்தவனை ஆதர்ஷிம் அவர்களை பார்த்தான்.

அவன் பார்வையை கண்ட அகஸ்டின் தன் தட்டில் இருந்த இட்லியை எடுத்து அவனுக்கும் ஊட்டினான்.. அதை மனம் கொள்ளா புன்னகையுடன் வாங்கி கொண்டான்.

தன் தட்டில் இருந்ததை இருவருக்கும் ஊட்டியவன் அவர்கள் தட்டில் இருந்ததையும் சேர்த்து ஊட்டினான்.

அதை உள்ளே அனைவருக்கும் உணவு டப்பாவை எடுத்து வந்த அகல்யா பார்த்து அப்படியே ஸ்தம்பித்து விட்டாள்.

காரணம் பெரிதாய் இல்லை.. இத்தனை நாளாக தன்னை தவிர வேறு யாருடிமும் உணவை வாங்காத தன் மகன்கள் இன்று அகஸ்டினை கொடுத்த உணவை மகிழ்ச்சியாய் வாங்கி உண்ணுகிறார்கள்.. ஏன் அதை இருவருக்கும் சமமாய் ஊட்டி விட்ட அகஸ்டினுக்கு கூட முகத்தில் அத்தனை மகிழ்ச்சியை தோற்றுவித்தது.

நடுவே அகஸ்டின் அமர்ந்திருக்கு இருவரும் ஆளுக்கொருபுறம் அவன் கைகளால் உணவை வாங்கி கொண்டிருந்தனர்.. அதை கண்ட அகல்யாவின் கண்கள் கண்ணீரில் நனைந்தன.. அதுவும் மூவரின் முகத்திலும் இருந்த சந்தோஷம் அவர்களின் வாழ்நாள் பொக்கீஷமாய் பார்த்திருந்தாள்.

ஏனோ அவளின் மனமும் இடம் பெருள் தெரியாமல் பிரள்வதை தான் பெண்ணவளால் தாங்கி கொள்ள முடியவில்லை.

தன்னை தாண்டி ஓடும் மனதை தடுத்து நிறுத்தியவள் அவர்களிடம் சென்று,

"ஆது நவி என்ன பன்றீங்க.. உங்களுக்கு தான் தனியா போட்டேன் இல்லை.." என்றாள் கோபமாய்.. அவன் மேல் காட்ட முடியாத கோபத்தை பிள்ளைகளின் மேல் காட்டினாள்.

அதை கேட்டு பிள்ளைகள் இருவருக்கும் முகாம் வாடி போனது.. அதை மேற்கொண்டு பார்க்க முடியாதவனால்,

"அகி நீ என்ன பன்ற.. இப்போ எதுக்கு அவங்களை திட்டுற.. நான் தான் ஊட்டினேன்.. என்னை தான் நீ திட்டனும்.." என்றான் ஆதங்கமாய்.

தன்னால் பிள்ளைகள் அவளிடம் திட்டு வாங்குவதை அவனால் தாங்க முடியவில்லை.. அந்த ஆதங்கம்.. ஆனால் ஒன்றை மறந்து விட்டு அவளின் பெயரை சுருக்கி அழைத்து விட்டான்.

தன் பெயரை சுருக்கி அழைத்தவனை கண்கள் சுருக்கி முறைத்தாள்.

அவனோ அப்பொழுது தான் தன் தவறை உணர்ந்தான்.. தன்னவளின் பெயரை சுருக்கி ஆழைத்ததை.

தன் உதட்டை கடித்து மீண்டும் எதுவும் நடவாது போல் உணவில் கவனத்தை செலுத்தினான்.

அவளும் அதன் பின்பு அவனை எதுவும் சொல்லாமல் தன் வேலையை கவனிக்க சென்றாள்.. பள்ளிக்கு நேரம் ஆகிவிட்டது என்று வேகமாக கிளம்பியவள் தன் வண்டியை எடுத்தாள்.. ஆனால் அதற்குள்ளாக தன் வாகனத்தை கொண்டு வந்து அவளருகில் நிறுத்தினான்.

அவள் பார்வையால் கேள்வி கணைகளை தொடுக்க அவனோ தயங்கியபடி,


"இல்லை நானும் ஸ்கூல்லுக்கு தான் போறேன்.. நீங்க வேற தனியா வரணுமா என்ன.. உங்களை அப்படியே இறக்கி விட்டுட்டு நானும் எனா வேலையை பாத்துட்டு கிளம்புவேன் இல்லை.." என்றான் சிறிது தடுமாற்றத்துடன்.

அவளின் பார்வை அவனை கொன்று போட்டது.. அதற்கு மேலும் பொறுமை தாங்காதவளாய்,

"ம்ம் ஓகே உங்க கூட வந்து எறங்குனா எல்லாரும் என்னை பத்தி என்ன நினைப்பாங்கன்னு ஒரு நிமிஷம் நினைச்சி பாத்தீங்களா.. என் நடத்தையை சந்தேகபடுவாங்க.. உங்களுக்கு அது தான் வேணுமா.." என்றாள் கோபமாய்.

"அகி.." என்றான் அழுத்தமாய்.

அவனின் அழுத்தமான வார்த்தையில் பெண்ணவளுக்கு உடல் நடுக்கத்தை கொடுத்தது.

" என்ன பேசுறேன்னு யோசிச்சி தான் பேசுறியா.. எப்படி உன்னை அடுத்தவங்க தப்பா பேச நான் இடம் கொடுப்பேன்னு நினைச்சே.. அந்த அளவுக்கு நான் கீழ்தரமானவனா.. இவ்ளோ தான் நீ என்ன புரிஞ்சிகிட்டதா.. வேணாம் நான் இங்கே வரலை.. இனி எப்பவும் நானா வர மாட்டேன்.." என்றவன் கோபத்துடன் அங்கிருந்து பிள்ளைகள் அழைக்க அழைக்க அங்கிருந்து சென்று விட்டான்.

அவன் செல்வதை கண்களில் வழியும் கண்ணீருடன் பார்த்திருந்தாள்.. பின்பு பிள்ளைகளின் உலுக்களில் நினைவு வந்தவள் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு பிள்ளைகளுடன் பள்ளிக்கு சென்றாள்.

பள்ளிக்கு சென்றும் அவளால் நிம்மதியாய் வேலை செய்ய முடியவில்லை.. அவனின் கோபம் ஏனோ பெண்ணவளின் மனதை பாதித்தது.. பள்ளிக்கு வருவானா என்ற அடிக்கடி வாயிலை பார்த்துக் கொண்டிருந்தாள் பாவை.. ஆனால் ஆடவனோ வரவில்லை.

இங்கே அவளின் மேல் கோபத்தில் தன் அலுவலகத்திற்கு வந்தவன் ஆதவனிடம் பள்ளிக்கு சென்று பார்வையிட செல்லிவிட்டு இவன் அலுவலகத்திலே இருந்து கொண்டான்.

அவன் குரலிலே அவனின் கோபத்தை அறிந்தவனும் இருவருக்குள்ளும் நிச்சயம் ஏதோ நடந்துள்ளது என்று எண்ணியவன் பள்ளிக்கு சென்றான்.

அவன் முதலில் சென்று இடம் அகல்யாவின் வகுப்பறைக்கு தான்.. அங்கே மாணவர்களுக்கு வைத்த தேர்வு தாளை திருத்திக் கொண்டிருந்தவள் தன் முன் நிழலாடவும் யாரென பார்த்தவளின் முன்னே சிரித்தபடி ஆதவன் நின்றிருக்க சந்தோஷத்துடன், "அண்ணா.." என்றவளின் பார்வை தன்னிச்சையாய் பின்னே சென்றது.

அங்கே யாருமில்லாமல் போகவும் அவளின் முகம் சுருங்கியதை சிறு நொடியில் ஆதவன் கண்டு கொண்டான்.. அவளின் எதிர்பார்ப்பு என்னவென்று.

அதை கண்டு தனக்குள் சிரித்தவன் தன் முன்னே நின்றவனை பார்த்து, "சொல்லுங்க அ.." அண்ணா என்று சொல்ல வந்தவள் அப்படியே நின்று விட்டாள்.

இது அவள் பணிபுரியும் இடம்.. அவனோ உரிமையாளன்.. அவனை உறவு முறை சொல்லி அழைப்பது சரியில்லை என்று உணர்ந்தவள்,

"சொல்லுங்க சார்.." என்றாள் மென்மையாய்.

அவள் அண்ணா என்று அழைக்க வந்து சற்று யோசித்து சார் என்று அழைத்தது என அனைத்தையும் கண்டவன் அவளிடம் எதுவும் கேட்காமல், "அண்ணானு சொல்லலாம் மா.. நீ என் தங்கை தான்.. அந்த உறவு எங்கேயும் எப்போதும் இருக்கும்.. சரியா.." என்றான் உரிமையாய்.

அது அப்படி இல்லை அண்ணா.. நான் வீட்ல உங்களை அண்ணான்னு தான் சொல்லுவேன்.. ஆனா இங்கே சார்ன்னே இருக்கட்டுமே அண்ணா.." என்றாள் கெஞ்சுதலாய்.

அவனும் புன்னகையுடன், "சரிம்மா உன் இஷ்டம்.. ஆமா இன்னைக்கு அகஸ்டின் சாப்பிட்டானா.. இல்லைனா சாப்பிட எடுத்துட்டு போகனும் அது தான் மா.." என்று ஒரு கயிறை திரித்தான்.

அங்கிருந்து பதில் என்ன வரும் என்ற எதிர்பார்ப்புடன்.

அதை கேட்டதும் அவளின் முகம் சுருங்கி விட்டது.

காலையில் அவன் பிள்ளைகளிடம் காட்டிய அன்பு அது காண கிடைக்காதது.. ஆனால் தன் முன்கோபம் அனைத்தையும் இழக்க செய்து விட்டது.

தன் பதிலுக்காக ஒருவன் காத்திருக்கிறான் என்ற நினைவில் இல்லாமல் ஆடவனின் நினைவில் மனம் கலங்கி நின்றாள் பெண்ணவள்.

அவளின் முகபாவனையை படித்தவன் நிச்சயம் இருவருக்குள்ளும் ஏதோ நடந்துள்ளது.. அதன் தாக்கம் தான் அவனின் கோபம் என்பதை உணர நிறைய நேரம் தேவைப்படவில்லை ஆடவனுக்கு.

ஒர் தொழிலை நிர்வகிப்பவன் மனிதனின் மனதை படிக்க தெரிய வேண்டும்.. இல்லையென்றால் இத்தனை பெரிய ஸ்தாபனத்தை நிறுவி அதை திறம்பட நடத்த முடியாது.

" அகல்யா மா என்னாச்சி ஏன் இப்படி ஸ்டக் ஆகி நிக்குற.. அப்படியா ஒரு கேள்வி கேட்டேன்.." என்றான் ஆச்சர்யமாய்.

அப்பொழுது தான் நடப்பு வந்தவள், "அண்ணா அது வந்து சாப்பிட்டாங்க.. அவங்களோட ஆபிஸ் பேக்ல மதியத்திற்கு லஞ்ச் வச்சிருக்கேன்.. ஆனா நான் சொல்லலை.. நீங்க அதை சொல்லிடுங்க அண்ணா.. நான் போய் கிளாஸ் பாக்குறேன் அண்ணா.." என்றபடி அதற்கு மேலும் நிற்காமல் அங்கிருந்து சென்று தனது வகுப்பறையில் தன்னை சிறை வைத்துக் கொண்டாள்.


அதை கண்ட ஆதவன் தன் மனதினுள் சிரித்துக் கொண்டு மேலும் ஒரு மணி நேரம் பள்ளியில் இருந்து எல்லாவற்றையும் ஒரு முறை பார்த்தவன் தங்களது அலுவலகத்துக்கு சென்றான்.

அங்கே கோபத்துடன் தன் ஊழியர்களை பார்த்துக் கத்தி கொண்டிருந்தான் அகஸ்டின்.

இவன் உள்ளே நுழையும் நேரம், "வாட் ஈஸ் திஸ் மாதவன்.. என்ன புராஜெக்ட் பண்ணி வச்சிருக்கீங்க.. ஏன் சார் உங்களை அழகான ஒரு ஹவுஸ் தானே பாரம்பரிய முறையில டிசைன் பண்ண சொன்னா என்னா சார் பண்ணி வச்சிருக்கீங்க.." என்று வார்த்தையை கடித்து துப்பிக் கொண்டிருந்தான்.

அவனுக்கு எதிரே இருந்தவனோ எதுவும் பேச முடியாமல், "சாரி சார்.." என்ற ஒற்றை வார்த்தையுடன் நின்று கொண்டான்.

அதற்கு மேல் பேசினாலும் அகஸ்டினின் காதிற்கு கேட்காது.. அவனுக்கு தேவை சரியான வேலை.. அது நடக்கவில்லையென்றாள் அவனின் குணம் இதுதான்.

அது சரியாக நடக்கும் வரை யாரையும் விட்டு வைக்க மாட்டான்.. முத்தத்தில் அவனின் மனதுக்கு அது பிடிக்க வேண்டும்.

அங்கே வந்த ஆதவன் அவனை தன் கண்களால் வெளியே அனுப்பி வி்ட்டு இவன் அகஸ்டினின் அருகில் சென்றான்.

தலையை நிமிர்த்தாமலே அவனின் வரவை அறிந்த அகஸ்டின்,

"என்னடா இன்ஸ்டிட்யூட் போயிட்டு வந்துட்டியா.. எல்லாம் ஒரு தடவை பாத்தியா.. வேறு எதுவும் இல்லைலை.." என்றவன் தலையை நிமிர்த்தாமலே பேசிக் கொண்டிருந்தான்.

ஆனால் ஆதவன் அவனின் கேள்விக்கு எதுவும் சொல்லாமல் அவனருகே சென்று அவனின் தலையை நிமிர்த்தினான்.

அவனின் கண்கள் இரண்டும் சிவந்து அழுதிருப்பான் போல.. கண்கள் இரண்டும் அந்தளவு சிவந்திருந்தது.

" டேய் மச்சான் என்னடா இது.. எதுக்கு இப்போ இப்படி கலங்கி போய் இருக்க.. அப்படி என்ன நடந்துச்சி.." என்றான் ஆறுதலாய்.

" ஏன் இன்னும் என்ன நடக்கனும்.. உன் தங்கச்சி பண்ண வேலைக்கு.. நான் வரலைன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.. இனிமே அவளாவது நிம்மதியா இருக்கட்டும்.." என்றான் எங்கோ வெறித்த பார்வையுடன்.

" ஆஹும் ஆனா என் தங்கச்சி உனக்கு சமைச்சிலாம் போட்டாலாமே மச்சான்.. சமைச்சி போட உரிமை இருக்கும் போது திட்டவும் உரிமை இருக்குன்னு நினைக்கிறேன் மச்சான்.." என்றான் கிண்டலாக.

"ஆமா ஆமா உரிமை கொடுத்த அம்மா தான் என்னால அவங்களுக்கு கெட்ட பேரு வாங்கி தரேன்னு சொன்னாங்க.." என்றான் சற்றும் கோபம் குறையாமல்.

" ஏன்டா அந்த பொண்ணு உன்னை எதுவுமே சொல்லலையே.. சரி அப்படியே சொல்லிருந்தா தான் என்ன இப்போ.. ஐயா எந்த இடத்திலே குறைஞ்சி போயிட்டீங்க.. ஏன்டா அதுக்கு எல்லாம் யாராவது கோபபடுவாங்களா டா.. நான் போனதும் அந்த பொண்ணு உன்னை தேடுனா டா.. அது மட்டுமில்லாம உனக்கும் மதியத்துக்கு சாப்பாடு கொடுத்து விட்டுருக்கா.. உன் வீம்பை தள்ளி வச்சிட்டு ஈவ்னிங் வீட்டுக்கு போ.." என்று அவனிடம் கூறியவன் தன் வேலையை பார்க்க சென்றான்.

இங்கே ஆதவன் சொல்லி சென்றது சரிதானா இல்லை நாம் செய்தது தவறா என்ற சிந்தனையில் இறங்கியவன் இல்லை அவ என்னை தேடட்டும் அப்புறம் போலாம்.. இன்னைக்கு வீட்டுக்கு போலாம்..' என்று முடிவு எடுத்தவனுக்கு தெரியவில்லை இதன் விளைவு அவனை பாதிக்கும் என்று.


அன்று அகல்யாவையும் பிள்ளைகளையும் பார்க்காமல் இருந்தவன் தன் வீட்டிற்கு சென்று விட்டான்.

அதன் விளைவு ஆதர்ஷ் நவீஷ் அவனை தேடி நவீஷிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.




நிழலை வருடும் நிஜம் தொடரும்..🌹


அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு லைக் கமெண்ட் பண்ண பட்டூஸ்க்கு நன்றி.
 

Samithraa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 16, 2022
131
64
28
Karur
இவங்க வீம்புக்கு குழந்தைங்க தான் பாவம்