• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் -43

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
அந்த அறைக்கு வெளியே பார்வை சுவற்றை வெறித்திருக்க கண்கள் அவளறியாமல் கண்ணீரை பொழிய அதை துடைக்க கூட மனம் இல்லாமல் அமர்ந்திருந்தாள் அகல்யா.

உள்ளிருந்து மருத்துவர் வந்து என்ன சொல்வரோ என்ற பயம் மனதை அழுந்த யாரிடமும் சொல்லாமல் கல்லை போல் அமர்ந்திருந்தாள் அந்த மேஜையில்.. அவளின் மடியில் ஆதர்ஷ் தூங்கி கொண்டிருந்தான்.. உள்ளே இருப்பது அவளின் அருமை சிறிய மகன்.

எப்போதும் பள்ளி விட்டு வந்தவள் பிள்ளைகளை கவனிக்க அவர்களும் சிறிது நேரம் எதுவும் கேட்காமல் பள்ளி பாட வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.

இரவு சாப்பிட அமரும் பொழுது தான் நவீஷ் கேட்டான் அகல்யாவிடம்.

"அம்மா ஹீரோ ஏன் இன்னும் வரலை.. வந்திருந்தா காலையில போல ஊட்டி விட்டுருப்பாங்க இல்லை.." என்றவனின் குரலில் இருந்த ஏக்கம் பெண்ணவளை அசைத்து பார்த்தது.

என்ன சொல்லி அவனை சமாளிப்பது என்று நினைத்தவள், "நவி ஆது இங்கே பாருங்க.. அவரு இங்கேயே இருக்க முடியாது.. அவரு இங்கே இநுக்கறதை பார்த்த மத்தவங்க அம்மாவை தப்பா நினைப்பாங்க பா.. அதுனால அவரு இங்கை வரமாட்டாரு.. இனிஅம்மா தான் உங்களுக்கு எல்லாம்.." என்று அவர்களுக்கு புரியும் படி தான் சொன்னாள்.

அவர்களும் வேறு எதுவும் கேட்காமல் அவள் கையால் உணவை சாப்பிட்டு விட்டு போய் படுத்து விட்டார்கள்.. அவளிடம் எப்பொழுது சொல்லும் குட் நைட் இல்லை.. ஐ லவ் யூ இல்லை.. பாடல் இல்லை.. சிரிப்பு இல்லை.. இது எல்லாம் உணர்ந்தாலும் அகல்யா எதுவும் பேசாமல் மற்ற வேலையை செய்ய சென்றாள்.

இப்பொழுதே இதை இவர்கள் பழகி கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் அதை பற்றி மேலும் எதுவும் கூறவில்லை.

இன்று அகஸ்டின் அங்கே இல்லையாதலால் இவள் பிள்ளைகளுடன் சேர்ந்து எப்பொழுதும் போல் படுத்தாள்.

நன்றாக உறங்கி கொண்டிருந்தவளுக்கு யாரோ அனத்தும் சத்தம் கேட்க கண் விழித்து பார்த்தாள்.. அவளின் சின்ன பையனிடம் இருந்து தான் சத்தம் கேட்டது.. பதட்டத்துடன் அவனின் மேல் கை வைத்து பார்த்தாள்.. அவனின் உடல் அனலாய் கொதித்தது..

திடுக்கென கையை எடுத்தவள் வேகமாய் ஓடி சென்று காய்ச்சல் மாத்திரையை எடுத்து தூக்கத்திலேயே அவனுக்கு கொடுத்தாள்.. சற்று நேரம் தண்ணீரில் துணியை நனைத்து முகத்தை நன்றாக துடைத்தாள்.. ஆனால் என்ன செய்தும் விடியும் வரை காய்ச்சல் விடவில்லை.

விடிந்து விடியாத அந்த காலை வேலையில் பக்கத்தில் இருந்த ஆட்டோவை அழைத்து அவனை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றாள். கூடவே ஆதர்ஷிம்.

அவளை அங்கே எல்லோருக்கும் தெரியும் ஆதலால் அவள் பையனை தூக்கி வரவும் உடனே அவனுக்கு சிகிச்சை ஆரம்பித்தனர்.

அடுத்த நொடி அவள் சொல்லாமலே ஆடவனுக்கு மருத்துவமனை ஊழியர்களால் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இரவு உண்ணாமலும் உறங்காமலும் பிள்ளைகள் நினைவு அவனை வாட்டி வதைக்க அவளின் கரங்களால் உண்ண முடியாமல் சாப்பாடே பிடிக்கவில்லை ஆடவனுக்கு.

பிள்ளைகள் இருவரும் தன்னிடம் காட்டிய பாசம் எதிர்பார்த்த பாசம் இரவு அவளின் தாலாட்டு என எதுவும் இல்லாமல் அவனது இரவு கொடிய இரவாக நகர்ந்தது.

தகவல் கிடைத்த அடுத்த அரைமணி நேரத்தில் அங்கே பதட்டத்துடன் அங்கே வரவும் சுவற்றை வெறிந்திருந்தவள் எழுந்து அவனை கண்டதும் கண்கள் பொங்க ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டாள்.

அவள் வந்து அவனை அணைத்ததுமோ அவள் சுயநினைவில் இல்லை என்பதை உணர்ந்தாலும் இவளால் தானே அவன் இப்போது படுக்கையில் என என்று எண்ணினாலும் அவளின் இந்த கண்ணீரை ஆடவனால் கான முடியவில்லை.

தன் கரங்களால் அவளை அவன் அணைக்கவில்லை.. அவளும் அவனை காதலுடனோ தாபத்துடனோ அணைக்கவில்லை.. அவளுக்கு தேவை அவளை தாங்கி பிடிக்கும் ஆறுதலான அரவணைப்பு.

ஆனால் அவள் ஆறுதலுக்காக தேடியது அவனைத் தானே.. அவளின் முதுகை தடவி கொடுத்தவன் அவளை விளக்கி விட்டு அந்த அறைக்கு சென்றான்.

இது எல்லாவற்றையும் அகஸ்டினின் மூலம் தகவல் அறிந்து வந்த ஆதவனின் கண்களிலும் பட்டது.


ஆதர்ஷின் அருகே வந்து அமர்ந்தவன் அவனின் தலையை தூக்கி தன் மடியில் போட்டுக் கொண்டான்.

நேரம் கடக்க கடக்க அனைவருக்கும் பயம் பிடித்தது.. ஏன் இவ்வளவு நேரம் என இருப்பு கொள்ளாமல் அலைபாய்ந்த மனதை அடக்க முடியாமல் அழுதபடி அங்கே அமர்ந்திருந்தாள் பெண்ணவள்.

சற்று தூரத்தில் அகஸ்டின் ஆதர்ஷிடன் ஆதவனும் அமர்ந்திருந்தனர்.

ஒரு மணி நேரம் கழித்து வந்த மருத்துவரை கேள்வியுடன் பார்த்தான் அகஸ்டின்.

அவனின் பார்வையை புரிந்து கொண்ட அவர், "சார் முன்னவே சொன்னது தான்.. அவங்களோட மனசுல இப்போ ஒரு ஏக்கம்.. அதை வெளியே சொல்ல முடியாத ஆசை தான் இப்படி அதீத பீவர் வர காரணம்.. ஏதோ தீராத ஆசை ஏக்கம் இது எல்லாம் தான் இதுக்கு காரணம்.. அதுமட்டுமில்லாம உடல்நிலை ரொம்ப வீக்கா இருக்காங்க.. கொஞ்சம் கேர் பண்ணி பாத்துக்கணும்.." என்று சொன்னவர் சென்று விட்டார்.

ஆனால் அதை கேட்டதும் பெண்ணவளுக்கோ இதயத்தின் நடுவே யாரோ ஊசி குத்தும் வலியை கொடுத்தது.

அடுத்த அரை மணி நேரத்தில் அவன் விழித்து விட்டதாக நர்ஸ் வந்து சொல்லவும் மனதோரம் தவிப்புடன் உள்ளே முதலில் ஓடினான் அகஸ்டின்.

அவனைத் தொடர்ந்து ஆதவன் ஆதர்ஷ் அகல்யா என அனைவரும் சென்றனர்.

அகஸ்டினை கண்ட சிறியவனின் முகம் தாமரையாய் மலர்ந்தது.

" அப்பா.." என்று படுக்கையில் இருந்து எழ முயன்றான்.

அவனின் அப்பா என்ற வார்த்தையில் உச்சி குளிர்ந்து போன ஆடவன் ஓடி சென்று கட்டியணைத்துக் கொண்டான்.

அவனை அப்பா என்று அழை என்று யாரும் சொல்லிக் தரவில்லை.. ஆனால் சிறுவனின் மனதில் பதிந்ததை யார் செய்த குற்றமோ.. இல்லை அவர்களின் வரமோ.. பெண்ணவளின் சாபமோ என்னவென விந்தை சொல்வது இறைவா.

சிறியவனை அகஸ்டின் கட்டியணைக்கவும் ஆதர்ஷிம் அவர்கள் இருவரையும் சேர்த்து கட்டினான்.. அவனின் சிறு கை போதாமல் இருக்க அகஸ்டின் அவனையும் சேர்த்து அணைத்துக் கொண்டான்.

அவர்கள் மூவரையும் பார்த்த ஆதவனுக்கு கூட விந்தையாகத் தான் தோன்றியது.

இது என்ன மாதிரி பாசம்.. மூவரும் ஒருவரையொருவர் அறிந்ததில்லை.. ஏன் பழக்க வழக்கம் கூட தெரியாது.. ஆனால் எந்த புள்ளியில் தந்தை மகனாய் இணைந்தனர்.. ஆடவனோ புரியாமல் தவிக்க பெண்ணவளுக்கோ அதிர்ச்சியாய் அப்படியே சிலையாக நின்று விட்டாள்.

இத்தனை நாட்களாக ஹீரோ ஹீரோ என்று அழைத்தவர்கள் இன்று அப்பா என்று அழைக்கவும் அவளுக்கும் புரியவில்லை அவர்களின் பாசம் எப்படி என்று.

சிறிது நேரத்தில் தெளிந்த அகஸ்டின் இருவரையும் தன் அருகே அமர வைத்து நவீஷின் கையை பிடித்துக் கொண்டு, "என்னாச்சுடா தங்கம்.. ஏன் இப்படி திடிர்னு நடந்துச்சி.." என்று விசாரித்தான்.

" அப்பா.. அப்பா.. நான் உங்களை அப்படி கூப்பிடலாமா.." என்றான் முதல் சந்தேகமாய்.

" நிச்சயமா கூப்பிடலாம்.. உங்களுக்கு மட்டும் தான் அந்த உரிமை இருக்கு.." என்று எதையோ நினைத்து கூறினான்.

நீங்க ஏன் ராத்திரி வரலை.. நான் உங்களை எவ்வளவு தேடுனேன் தெரியுமா.. நேத்து ஸ்கூல்ல நடந்தது எல்லாம் உங்ககிட்ட சொல்ல ஆசையா வந்தா.. நீங்க வரலை.. எனக்கு அழுகையா வந்துச்சி.. நான் அழுதா அம்மா கஷ்டபடுவாங்களேன்னு நான் அழலை..

எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு அப்பா.. என்னோட பிரண்ட்ஸ் எல்லாம் அவங்க அப்பா தான் கூட்டிட்டு வருவாங்க.. அவங்களை ஜாலியா வெளியே கூட்டிட்டு போவாங்க.. அவங்களோட ஜாலியா விளையாடுவாங்க.. ஆனா எங்களுக்கு அம்மா மட்டும் தானே.. நாங்க எதாவது கேட்டா அம்மா அழுவாங்க.. அதுனால நாங்க அம்மாகிட்ட எதுவும் கேட்கலை.. ஆனா எனக்கு உங்களை பாத்த நாள்ல இருந்து உங்க கூடவே இருக்கனும்னு தோணுது..

ஆனா நீங்க எங்களோட இருந்தா அம்மாவை தப்பா சொல்வாங்கன்னு அம்மா அழுதாங்க.. அது தான் நீங்க வேணும்னு நான் அம்மாகிட்ட சொல்லலை.." என்றான் தன் மனதில் உள்ளவற்றை மழலையாய்.

அவன் கூறியதை கேட்டு அனைவரும் ஒரு யோசனையில் இருக்க பெண்ணவள் தான் விக்கித்து நின்று விட்டாள்.

இத்தனை தங்கமாய் பார்த்தும் மகனின் மனதில் தந்தைக்கான ஏக்கம் இருந்ததா..? நான் உணரவில்லையா.. இல்லை என் எண்ணத்தின் படி தான் என் மகன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கவனிக்காமல் விட்டனோ..

அவர்களின் தந்தை இருந்ததை விட அதிகமாய் பார்த்துக் கொள்ள நினைத்தேனே ஆனால் அது உண்மையில்லையா.. என்றவளின் சிந்தனைக்கு நடுவே அம்மா என்ற அழைப்பு அவளை அணைத்துக் மறக்கச் செய்தது.

" நவீ தங்கம்.." என்று அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள்.

அகஸ்டினும் அங்கே தான் இருந்தான்.அவளறியாமல் நல்வாரும் ஒரே குடும்பமாய் இருந்தனர்.. அதை அவர்களறியாமல் தன் மொபைலில் படம் பிடித்துக் கொண்டான் ஆதவன்.

சற்று நேரம் கழித்து தெளிந்த அகல்யா "நவி குட்டி வீட்டுக்கு போலாமா.." என்றாள் மகிழ்வாய்.

"ஓஓ போலாமே இனிமே அப்பாவும் நம்மளோட தானே இருப்பாரு.. அப்பா இருப்பீங்க தானே.." என்றான் ஆவலாய்.

"உங்க அம்மா சம்மதிச்சா நானும் உங்களோட தான் இருப்பேன்.." என்றான் அவளின் முகத்தை பார்த்து.

பிள்ளைகள் இருவரும் சேர்ந்து அவளின் முகத்தை பார்த்தனர்.. அவர்களின் அந்த நிம்மதி அவன் வரவினால் உண்டு என்றால் வந்து விட்டு போகட்டுமே. . யாரோ ஒருவர் ஏதோ செல்வார்கள் என்பதற்காக என் பிள்ளைகளின் மகிழ்ச்சியை நான் குலைக்க வேண்டுமா..? ஆனால் அவனுக்கும் குடும்பம் என்ற ஒன்று இருக்குமே.. என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்தாள்.

அப்பொழுது தான் அவன் கூறிய வார்த்தை அவளுள் தாக்கத்தை ஏற்படுத்திய வார்த்தை தான் எல்லோரும் இருந்தும் அனாதை என்று.. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தாள் யோசனையாய் அவனின் முகம் பார்த்தாள்.

அவளின் யோசனையை பார்த்தவன் அவளின் நினைப்பு புரிய ஆதவனிடம் கண்ணை காட்டினான்.

அதை புரிந்த ஆதவனும் அகல்யாவிடம் சென்று அவளை வெளியே அழைத்து வந்தான்.

"என்னம்மா இன்னும் யோசனை.. ஏன் அவன் உன் வீட்டுல இருக்க கூட அவனுக்கு தகுதி இல்லையா.. இல்லை உன் பசங்களுக்காக கூட அவன் அங்கே வரக்கூடாதா.. அவன் பசங்க மேல உயிரையே வச்சிருக்கான் மா.. ராத்திரி கஷ்டபட்டு நீ மட்டும் இல்லை.. அவனும் தான் ராத்திரி பூரா தூங்கலை.. இப்போ நீ சொல்ல போற பதில் தான் இருக்கு அவனோட நிம்மதி.." என்றான் இறுதியாய்.

" அய்யோ இல்லை அண்ணா நான் அப்படிலாம் நினைக்கல.. அவரோட குடும்பம் மனைவி என்ன சொல்லுவாங்க.. அவங்களோட வாழ்க்கையில எங்களால எந்த பிரச்சினையும் வரக்கூடாதுன்னு தான் நான் ஒதுங்கி இருக்க நினைக்குறேன்.." என்றாள் வலியுடன்.

அதை கேட்ட ஆதவன் ஒரு வலியுடன் கூடிய சிரிப்புடன், "அவனுக்கு குடும்பம் இருக்கு.. ஆனா குழந்தை இல்லை.. அது மட்டும் இல்லாம அவனுக்கு கல்யாணம் ஆகலை.. உன்னையும் பசங்களையும் பார்த்ததுக்கு அப்புறம் தான் அவனோட சிரிப்பையே நான் பார்க்கிறேன்.. இனி அவன் சந்தோஷமா இருக்கறது உங்க கையில தான் மா இருக்கு.." என்றான் வலியுடன்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அகல்யா பிள்ளைகளுடன் அகஸ்டினுடன் வீட்டிற்கு வந்தனர்.

நவீஷை பக்கத்தில் இருந்து அகஸ்டின் பார்த்துக் கொண்டான்..

அடுத்த நாள் அகல்யா சென்று பார்த்தது ஆதவனைத தான்.. அகஸ்டினை பற்றி தெரிந்து கொள்ள.

ஆனால் அவனை பற்றிய தெரிந்து கொண்டவளுக்கு தன் வாழ்வு நிலை எவ்வளவோ பரவாயில்லை என்றே தோன்றியது.. ஆனாலும் அகல்யாவிற்கு அவனை நினைத்து துயரம் கொண்டது.


நிழலை வருடும் நிஜம் தொடரும்..🌹



அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ண பட்டூஸ்க்கு நன்றி.