• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் - 44

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
மருத்துவமனையில் இருந்து நவீஷை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர்.. அகல்யாவை விட அகஸ்டின் தான் அவர்களை நன்றாக பார்த்துக் கொண்டான்.. அவன் என்ன கேட்டாலும் அடுத்த.நொடி அவன் கைகளால் சமைத்து கொடுத்தான்.. அவர்களுடன் உட்கார்ந்து கதை கேட்டான்.. அவர்கள் மூவரின் உலகத்தில் வேறு யாரும் நுழையாதவாறு அங்கே அவர்களின் அன்பு மட்டும் பிரதானமாய் இருந்தது.

அதை தூர இருந்து கண்டாள் அகல்யா.. அப்பொழுது தான் ஆதவன் அவளிடம் பேசிய ஞாபகம் வர அவனை சந்திக்க வேண்டும் என்று கிளம்பினாள்.. அவள் இல்லையென்றாலும் யாரும் இங்கே தேடப்போவதில்லை என்று உணர்ந்தவள் சொல்லாமல் கிளம்ப முனைந்தாள்.

அவள் எங்கோ கிளம்புவதை கண்ட அகஸ்டின் சிறியவனிடம் கண்ணை காட்டினான்.. அவள் வாயில் படியில் காலை வைக்கும் போது

"அம்மா சொல்லாத போற.. நானும் வரவா.." என்றான் சிறியவன்.

அவனின் கேள்வியை பிரதிபலித்தான் ஆதர்ஷ்.. இருவரையும் பார்த்தவள் ஒரு பெரு மூச்சுடன் மூவரையும் பார்த்தவளுக்கு சொல்ல முடியா உணர்வு தோன்றியது என்னவோ உண்மை தான்.

சிறியவர்கள் மட்டுமல்ல பெரியவனும் அவளின் பதிலுக்கு காத்திருந்தான் என்பதை அவனின் கேள்வி தாங்கிய முகமே உணர்த்தியது.

அதை கண்டவள் சிறு சிரிப்புடன், "மனசு சரியில்லை நான் கோயிலுக்க் போயிட்டு வர்றேன்.. நீங்க விளையாடுங்க.." என்று விட்டு மீண்டும் அவர்களை திரும்ப காணாமல் சென்று விட்டாள்.

ஏனென்றால் அவனின் பார்வை அதை நம்பவில்லை என்று உணர்த்தியது.

வெளியில் வந்தவள் ஆதவனுக்கு அழைத்தாள்.. அவன் எங்கிருக்கிறான் அவனுடன் பேச வேண்டும் என்று கேட்டவளுக்கு வீட்டிற்கு வர சொல்லி விட்டு அவனும் வீட்டிற்கு கிளம்பினான்.

ஆதவனின் வீட்டிற்கு வந்தவளை வரவேற்று அமர வைத்த ரூபி அவளுக்கு குடிக்க காபி கொடுத்தாள்.. ஆதவன் அவளிடம் முன் கூட்டியே அழைத்து கூறியிருந்தான் அகல்யா வருவதாக.. இருவரும் எதுவும் பேசாமல் காபி அருந்தி கொண்டிருக்கும் போது ஆதவனும் அங்கே வந்து விட்டான்.

அவனுக்கு ஒரு காபியை கொடுத்து விட்டு அகல்யாவின் அருகே அமர்ந்து கொண்டாள்.

ஆதவன் தான் ஆரம்பித்தான்,

"சொல்லுடா அகல்யா என்னை பாக்கனும்னு சொன்ன.. என்ன விஷயமா பாக்கனும் டா.." என்றான் மென்மையாய்.

அண்ணா இப்போ நான் கேட்கிறதுக்கு நீங்க உண்மையை மட்டும் தான் சொல்லனும் இது என் மேல சத்தியம்.. அப்புறம் நீங்க எந்த இடத்திலாவது பொய் சொன்னீங்கன்னு தெரிஞ்சா நான் இங்கேயிருந்து போயிடுவேன் அண்ணா.. திரும்ப வர மாட்டேன்.. பேசவும் மாட்டேன்.." என்றாள் உறுதியாய்.

அவளின் உறுதியில் இன்று நிச்சயம் ஏதோ நடக்கும் என்ற எண்ணத்தில் அவளின் சொல்லுக்கு தலையாட்டினான்..

"கண்டிப்பா நீ என்ன கேட்டாலும் அதற்கு நான் பதில் சொல்றேன்.. எனக்கு தெரிஞ்சா.." என்று புள்ளி வைத்தான்.

"அண்ணா எனக்கு உங்க நண்பரோட குடும்பத்தை பத்தி தெரியனும்.. ஏன் அவரு கல்யாணம் செய்துக்கலை.. அப்படியே இருந்தாலும் அவருக்கு மற்ற உறவுகள் இருக்கும் போது ஏன் இப்படி அனாதைன்னு சொல்லனும்.. அன்னைக்கு அதையே தான் அவரும் சொன்னாரு.. நேத்து நீங்களும் அதை தான் சொன்னீங்க.." என்றாள் கேள்வியாய்.

அவள் கூறியதை கேட்டவனின் கண்கள் கூர்மையாக அவளை துளைத்தது.. "யாரு எப்போ என்ன சொன்னாங்க.." என்றான கேள்வியாய்.

"அது அவரு தான் அண்ணா சொன்னாங்க.. அன்னைக்கு.." என்று அன்று இரவு அவன் தன்னிடம் கூறியதை அப்படியே அவனிடம் ஒப்புவித்தாள்.

அதை கேட்டவனுக்கு, "இதை அவனே சொன்னானா அகல்யா.." என்றான் யோசனையாய்.

" ஆமாம் அண்ணா அவரு தான் சொன்னாரு.." என்றாள் அழுத்தமாய்.

அதை கேட்ட கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

அவர்களின் பார்வை பரிமாற்றத்தை கண்ட பெண்ணவள், "அண்ணா என்னாச்சி.. ஏன் இப்படி ரெண்டு பேரும் பாத்துக்குறீங்க.." என்றாள் புரியாமல்.

அதை கேட்டு மௌனமாய் சிரித்தவன், "இல்லைம்மா தன் உணர்வுகளை கூட யாருகிட்டேயும் பகிர்ந்திடாதவன் ஏன் இத்தனை காலமும் நான் அவனோட நண்பன்.. ஆனா என்கிட்ட கூட சொல்லாத விஷயத்தை உன்கிட்ட சொல்லிருக்கான்.. அதை கேட்டு சந்தோஷபடுறதா இல்லை வருத்தப்படறதா நினைச்சேன் மா.." என்றான் ஆதங்கமாய்.

" என்ன அண்ணா சொல்றீங்க.." என்றாள் கேள்வியாய்.

ஆமாம் அகல்யா உனக்கு அகஸ்டின் இப்போ தான் தெரியும்.. ஆனா என்னோட அஞ்சு வயசுல இருந்து அவனை எனக்கு தெரியும்.. சின்ன வயசுல அவன் பட்ட காயம் வலி எல்லாம் சேர்ந்து அவனை இறுக்கிடுச்சி.. இதையும் யாருகிட்டேயும் சொல்ல மாட்டான்...

அகஸ்டினுக்கு பத்து வயசு வரைக்கும் எல்லாமே நல்லா தான் நடந்துச்சி.. அவனுக்கு அடுத்தது ரெண்டு தம்பி ஒரு தங்கை மா.. அவனோட அந்த வயசுலேயே அவனோட அப்பா அவங்க அம்மாவை விட்டு வேறு ஒரு பொண்ணோட போயிட்டாரு..

அம்மாவோட கண்ணீரை பாத்து அகஸ்டினுக்கு அவனோட அப்பா மேல கொலை வெறி உண்டாச்சு..

இப்போ இருக்கற மாறி வசதி அப்போ இல்லை.. ஒரு வேளை சாப்பாடு கூட கிடைக்காது.. அவங்க அம்மா தையல் மிஷன்ல உட்கார்ந்து தைக்கிற அந்த பழைய துணியில என்ன பெருசா வருமானம் வந்துட போகுது.. நல்லா படிச்சிட்டுருந்தவன் படிப்பை விட்டுட்டு தன் தம்பி தங்கச்சியை படிக்க வச்சிட்டு இவன் வேலைக்கு வருவான்.

எல்லா வேலையும் செஞ்சான்.. ஹோட்டல் இருந்து டீ கடை பேப்பர் போடுற வேலை இப்படி கிடைச்ச எல்லா வேலையும் செஞ்சான்..

அப்போ தான் என்னை ஒரு இக்கட்டுல இருந்து என்னை காப்பாத்தினான்.. நானும் என் குடும்பத்தை காப்பாத்த வேற வழி இல்லாம கிடைச்ச வேலையை செஞ்சோம்.. அதுல இருந்து ரெண்டு பேரும் ஒன்னா தான் வேலை செஞ்சோம்.. ஒரு கட்டத்துல அவனோட இதயத்துல ஓட்டை விழுந்துடுச்சி.. அப்போ அகஸ்டினுக்கு இருபது வயசு.. தம்பி தங்கச்சின்னு பெரிய பொறுப்பு அவன் கையில குடுத்துட்டு அவங்க அம்மா நிம்மதியா கண்ணை மூடிட்டாங்க.. அதுக்கு பின்னாடி அகஸ்டின் தான் அவனோட தம்பி தங்கச்சியை பராமரிச்சான்.

கிடைக்கிற வேலையை பார்த்துட்டு தம்பி தங்கச்சியை படிக்க வைத்தான்.. அவனோட புத்தி கூர்மையால ரெண்டு பேரும் சேர்ந்து சின்னதா ஒரு பழைய இரும்பு கடை ஆரம்பிச்சோம்..

ஓய்வே இல்லாம ரெண்டு பேரும் உழைச்சோம்.. ஆனா ஒரு நாள் கூட நாங்க நிம்மதியா சாப்பிட்டதில்லை ஏன் தூங்கினதுமில்லை.. இரவு பகல் பாராமா வேலை செஞ்சோம்.. கொஞ்சம் கொஞ்சமா வசதி பெருகுனுச்சி.. ஆனா எங்களோட சொந்தங்கள் எங்களை விட்டு விலகுனுச்சி.. எந்த தம்பி தங்கச்சிக்காக தன் படிப்பு அவனோட ஆசை எல்லாத்தையும் தியாகம் பண்ண ஆரம்பிச்சானோ அதே தம்பி தங்கச்சி அவனை மதிக்கலை..

பணம் வந்ததும் அவங்க மொத்த குணமும் மாறி போச்சு.. அது தெரிஞ்சதுல இருந்து அகஸ்டின் உள்ளுக்குள்ளே இறுகி போயிட்டான்.

அதுமட்டுமில்லாம அவன் தம்பிங்க அவனுங்களே அவங்களோட வாழ்க்கையை தேர்ந்தெடுத்துகிட்டாங்க.. அதை அகஸ்டின் கிட்ட ஒரு தகவலா தான் சொன்னாங்க.. இவங்க தான் இப்படின்னா அவங்களுக்கு வாய்த்த மனைவிகளோ அதுக்கு மேலே..

அதுமட்டுமில்லாம அவனோட அம்மாவுக்கு இருந்த நோய் அவனுக்கும் வந்துடுச்சி.. அவனுக்கு ஹார்ட்ல ஹோல் இருந்தது தெரியவந்தது.. அது தெரிஞ்சதுல அவனோட தம்பிங்க அவங்களோட மனைவிங்க தங்கச்சி எல்லாரும் அவனை ஏதோ தொடக்கூடாத வியாதி வந்தவன் மாதிரி டிரிட் பண்ண ஆரம்பிச்சாங்க..

அவனே எல்லாரையும் விட்டு ஒதுங்கி நின்னா.. இதுக்கு நடுவுல என்னோட வீட்லேயும் பிரச்சனை பண்ணி அம்மாவை தங்கச்சி கூட்டிட்டு போயிட்டா.. நானும் தனியா ஆனேன்.. என்னவோ எல்லா சொந்தத்து மேல இருந்த நம்பிக்கையும் அவனுக்கு போயிடுச்சி.. தனக்குள்ளே மறுகி இறுகி போனான்.. ஏன் நானும் அப்படித் தான் இருந்தேன்.. இதோ இவ என் வாழ்க்கையில வர வரைக்கும் எனக்கும் எந்த சொந்த பந்தமும் தேவையில்லைன்னு ஒதுங்கி தான் நின்னேன்..

ஆனா என்னையே சுத்தி வந்து என்னை கல்யாணமும் செய்துகிட்டா.. எங்க கல்யாணமும் அகஸ்டினோட விருப்ப படித்தான் நடந்தது..

அவன் இவளை தங்கச்சியா பாத்துக்கிட்டான்.. உடன் பிறந்த தங்கச்சிகிட்ட கிடைக்காத பாசத்தை இவகிட்ட பார்த்தான்.

எனக்கப்புறம் இவளைத் தான் நம்பினான்..

ஆனா அவனோட வீட்ல அவன் நிலைமை எந்த எதிரிக்கும் வரக்கூடாதது.

அவனுக்கு வந்த இருதய நோய் மரபு வழியாக வந்ததுன்னு நினைச்சிகிட்டு அவனோட யாரும் நெருங்க மாட்டாங்க.. அவனோட அம்மாவுக்கு அப்புறம் அவனுக்கு வந்தது அப்படின்னு அவங்களே தீர்மானிச்சிகிட்டாங்க.. எங்க அவனோட பழகனா அவனோட நோய் தங்களுக்கும் வந்துருமோன்னு அவங்களும் அவன் கிட்ட நெருங்கி பழக மாட்டாங்க.. அவங்களோட பிள்ளைகளையும் அவன்கிட்ட நெருங்க மாட்டாங்க.. படிச்ச முட்டாள்கள்னு நிருபிச்சாங்க.. அவங்க வீட்ல அவனோட யாரும் பேசவும் பழகவும் மாட்டாங்க.. ஆனா அவன் சம்பாதிச்ச பணத்துல எதுவும் வராதுன்னு அதை மட்டும் வாங்கிப்பாங்க. .

கொஞ்சம் கொஞ்சமா அந்த வீட்ல அனாதையா ஆக்கினாங்க அவனை.. ஏன் சாப்பாடு கூட அவனுக்கு தனியா தான் சமைச்சி தரனும்.. அவனோட யாரும் ஒன்னா உட்கார்ந்து சாப்பிட மாட்டாங்க.. கொஞ்ச நாள்ல அவனுக்கு அவனே மறைச்சி வாழ ஆரம்பிச்சான்.. தன்னை தானே தனிமை படுத்திக்கிட்டான்.. அவனோட இயல்பு தொலைஞ்சி போய் எப்பவும் இயந்திரமாவே வாழ ஆரம்பிச்சான்.

கொஞ்ச நாள்ல அவனை சம்மதிக்க வச்சி ஹார்ட் பிளான் சர்ஜரி பண்ணினோம்.. இதோ இவளால தான் அதுவும் நடந்துச்சி.. எங்களுக்காகன்னு அவன் சம்மதிச்ச செஞ்ச விஷயம் அது மட்டும் தான்.. அதுக்கப்புறம் சுத்தமா இறுகி தன்னையே தனிமை படுத்திக்கிட்டான்.

அவனோட உடல்நிலைக்கு சடனா டென்சன் ஆகக்கூடாது.. அதுனால் எல்லாத்தையும் இயல்பா கடந்து போக பழகிட்டான்.. ஆனால் ரொம்ப வருசம் கழிச்சி அவன் ரொம்பவே டென்சன் ஆனது நவீஷ்க்கு ஆக்ஸிடெண்ட் ஆன போது தான்..

அன்னைக்கு நீ இருந்த டென்சன்ல அதை கவனிக்கலை.. ஆனா இப்போ நீங்க தான் அவனுக்கு எல்லாமே.. அவ ரொம்ப நாளைக்கு அப்புறம் சிரிச்சது உங்களை பாத்ததுக்குப்புறம் தான்.. இனி நீ தான் முடிவு பண்ணணும் அகல்யா.. அவனோட மொத்த சந்தோஷமே நீயும் பசங்களும் தான்.. ஏன் அன்னைக்கு உன்னோட முன்னாள் மாமியார்கிட்ட இருந்து பசங்களை காப்பாத்தனதும் அவன் தான்.. எங்கே அவன் தான்னு தெரிஞ்சா நீ என்ன நினைச்சிப்பியோன்னு அதை மறைச்சிட்டான்.

அவனை பத்தி எல்லாமும் சொல்லிட்டேன்.. இனி நீதான் முடிவு எடுக்கனும்..

ஆஆ அப்புறம் இன்னொரு விஷயம் இருக்கு.. அவனுக்கு உன்னை முன்னையே தெரியும்.. ஆனா அது எங்கே எப்படின்னு நானும் கேட்கலை அவனும் சொல்லலை.. ஆனா உன்னோட கல்யாணத்துக்கு முன்னவே அவன் உன்னை விரும்பியிருக்கான் அது மட்டும் உண்மை..

இப்போ மட்டும் இல்லை.. அவன் வாழ்வோட கடைசி நொடி கூட உங்களோட இருக்கனும்னு தான் அவனோட ஆசை.. இவ்வளவு தான் அகல்யா அவனை பத்தி எனக்கு தெரிஞ்ச எல்லாம் சொல்லிட்டேன்.. ஆனா எனக்கு தெரிஞ்சு இன்னும் ஏதோ உங்களோட விசயத்துல மறைக்கிறான்னு மட்டும் எனக்கு தெரியும்.. அது என்னன்னு நீதான் அகல்யா கேட்கனும் அவன்கிட்ட.." என்று தன் மனதில் வைத்து குமுறி கொண்டிருந்த தன் நண்பனின் வாழ்கைக்கையை இன்று அவனுக்கு உரியவளிடம் ஒப்படைத்த நிம்மதி அவனின் மனதில் தோன்றியது.

அகஸ்டினின் வாழ்க்கையை கேட்ட பின்பு அகல்யாவின் வலி அதிகம் தான் ஆனது.

ஆதவன் சொன்னதை கேட்ட அகல்யா அங்கிருந்து இருவரிடமும் சொல்லாமல் அவனின் நினைவில் சென்று விட்டாள்.


உடைந்து போகும் அவளை அவர்கள் தடுக்கவில்லை.. அவர்களின் நினைவும் முழுதாய் அகஸ்டினின் நினைவு தான் இருவருக்கும்.



நிழலை வருடும் நிஜம் தொடரும்..🌹


அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ண பட்டூஸ்க்கு நன்றி