• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் -46

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
தன் அருகே அமர்ந்தவனை திரும்பியும் பார்க்காமல் அமர்ந்திருந்தாள் அகல்யா.. ஏன் வலி கண்ட இதயம் மீண்டும் யாரையும் அவ்வளவு எளிதில் நம்ப மறுத்தது.. அவள் மூளைக்கு சரி என்றது மனதிற்கு ஏற்க முடியாமல் தவித்தாள் பேதை.

"கண்ணம்மா என்னடா யோசிக்குற.." ஏனோ அந்த கண்ணம்மாவில் இருந்த அழுத்தம் பெண்ணவளின் மனதிற்குள் தென்றலாய் நுழைந்தது.

அவனை திரும்பி பார்த்தவள், "நான் தப்பானவளா.." என்றவள் கேட்கும் போது ஏனோ அவனுக்கு சிரிப்பு தான் வந்தது..

" ஏன் இப்போ இப்படி ஒரு கேள்வி.." என்றான் மென்மையாய்.

"நான் ஏற்கனவே கல்யாணம் ஆகி ரெண்டு பசங்களோட அம்மா.. ஆனா இப்போ உங்களையும் என் வாழ்க்கைகுள்ள அனுமதிச்சிருக்கேன்.. அது தப்பில்லையா.." என்றாள் தயக்கமாய்.

"ஆமா இது தப்புன்னு உனக்கு யாரு சொன்னது.." என்றான் குழந்தையிடம் கேள்வி கேட்பது போல்.

இப்பொழுது யாராவது அவளை பார்த்தாள் அவள் ஒரு ஆசிரியர் என்று யாரும் சொல்லமாட்டார்கள்.

ஏதோ பேச தெரியாத குழந்தை அவனிடம் புதிதாய் கேள்வி கேட்பதை போல் உணர்ந்தான் ஆடவன்.

"அது எங்க ஊர்லே அப்படி தான் சொல்வாங்க.. தப்பானவளா புருசனுக்கு துரோகம் பன்றன்னு சொல்வாங்க.." என்றாள் தன் முழியை உருட்டி.

அந்த கண் பேசும் மொழியில் விழுந்தவனுக்கு எழவும் மனமில்லை போலும்.. அதையே சிறிது நேரம் பார்த்தவன் அவளின் கண்ணத்தில் இருபுறமும் தன் கைகளை வைத்து அவளை தன் புறம் திருப்பியவன்,

"கண்ணம்மா அப்படி எதுவும் இல்லை சரியா.. இதோ பாரு புருசனை இழந்த ஒரு பொண்ணு இந்த உலகத்துல தனியா தான் வாழனும்னு எதாவது இருக்கா என்ன..

இதோ பாரு இந்த உலகத்துல நீ எத்தனை நல்லவளா இருந்தாலும் யாரும் உனக்கு சிலை வச்சி கும்பிட போறது இல்லை..

அப்படியே உன்னை பத்தி பேசுறிங்க எத்தனை நாள் பேசுவாங்க.. அவங்க பேச அடுத்த ஆள் கிடைக்கிற வரைக்கும் தான்.. அடுத்த நாளே அதை மறந்தும் போவாங்க.. ஆனா அடுத்தவங்களுக்கு பயந்து எத்தனை நாள் உன்னை நீயே புதைச்சிக்க முடியும்..

அப்படி பேசுறவங்களா உன்னோட சுமையை பகிர்ந்துக்க போறாங்க.. இது உனக்கான வாழ்க்கை.. நீதான் வாழனும்.. அதை விடுத்து அடுத்தவங்க கையில கொடுக்க கூடாது புரியுதா..

இந்த உன்னோட வாழ்க்கையை வாழறது எப்படின்னும் நீதான் முடிவு பண்ணனும்.. நான் வேணுமா வேணாமான்னு நீதான் முடிவு பண்ணனும்.. அதை விட்டு அடுத்தவங்களுக்காக என்ன வேணாம்னு சொல்லுவீயா.. உன் மனசார நான் வேணாம்னு தோனுச்சின்னா சொல்லு நான் விலகி போறேன்..


அப்பவும் உன்கிட்ட மட்டும் தான் விலகி இருப்பேன் ஒழிய.. பசங்களை விட்டு இம்மியும் அசைய மாட்டேன்.. நீ என் உயிர்னா.. அவங்க தான் என் உலகம்.. நீயே யோசி.. ரொம்ப யோசிக்காத சீக்கிரம் வந்து படு.." என்று அவளை இழுத்து அவளின் தலையின் உச்சியில் இதழ் பதித்து விட்டு விலகினான்.

அவன் தலையில் கொடுத்த அந்த ஒற்றை இதழ் முத்தம் ஆயிரம் யானை பலத்தை கொடுத்தது.

அவன் கொடுத்த நெற்றி முத்தத்தை நினைத்தபடி சந்தோஷமாய் உறங்கி போனாள்.. எத்தனை தெளிவானவள்.. ஆனால் அவனின் விஷயத்தில் மட்டும் அவளின் தெளிவு மறைந்து போகிறது.. அதில் மனதுக்கும் மூளைக்கும் மிகப்பெரிய வாக்குவாதமே நடைபெறும்.


நிலாமகள் தன்னை ஒளித்து சூரியன் ஒளிர இடம் விட்டு விலகினாள்.. ஏனோ அவள் விலகுவது தன் உயிரே போவது போல் அவளையும் தன்னுள்ளே பொத்தி வைத்துக் கொண்டு பிரகாசித்தான் செங்கதிரோன்.

எப்பொழுதும் மனதில் இருக்கும் சோர்வு உடலுக்கும் வந்துவிடும்.. இத்தனை நாள் எழும்போதே ஏதோ கடமைக்கு எழுந்தவள் இன்று மகிழ்ச்சியுடன் எழுந்தாள்.

தன்னவன் இரவு கொடுத்த தைரியம் அவளுக்கு மேலும் வலூவூட்டியது.. காலை வேலையில் மளமளவென வேலை பார்த்தவள் அவர்களையும் எழுப்பி காபி கொடுத்து குளிக்க அனுப்பியவள் காலை உணவுக்கு தான் அனைவரும் டேபிளுக்கு வந்தனர்.

மூவருக்கும் பரிமாறியவள் தானும் உண்டு விட்டு அவனுடனே பள்ளிக்கு சென்றாள்.. பிள்ளைகள் அவனின் வண்டியில் ஏறியதும் இவளும் சென்று அமர்ந்து கொண்டாள்.

ஏன் என்று அவனும் காரணம் கேட்கவில்லை.. எதற்கு என்று அவளும் காரணம் சொல்லவில்லை.. மொத்தத்தில் மெதுவாய் தங்களின் வாழ்வில் அவனை அழைத்துக் கொண்டாள்.

அவர்கள் நால்வரும் இணைந்தது ஒரு குடும்பமாய் இருந்தது.. அந்த வீட்டில் இதுவரை இருந்த சோகம் துடைக்கப்பட்டு மகிழ்ச்சி வெளி வந்தது.. சில வேலைகளில் ஆதவனின் குடும்பமும் இந்த மகிழ்ச்சியில் இணைந்து கொள்ளும்.

கிட்டதிட்ட நான்கு மாதங்கள் கரைந்த நிலையில் ஒரு நாள் அலுவலகத்தில் வேலையில் இருந்த அகஸ்டினுக்கு பள்ளியில் இருந்து அழைப்பு வந்தது உடனே பள்ளிக்கு வருமாறு ஏதோ பிரச்சனை என்று..

உடனே ஆதவனை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்றான்.

அவனின் அறைக்கு செல்வதற்குள்ளாகவே அங்கே ரூபினியும் அகல்யாவும் கைகளை பிசைந்து நின்று கொண்டிருந்தனர்.

என்னவென்று புரியாமல் தன் அறைக்கு சென்று அமர்ந்தவன் முதல்வரை அழைத்தான்.

அவர் வந்ததும், "என்னாச்சி சார்.
என்ன பிராப்ளம்.." என்றான் அழுத்தமாய்.

அவரோ தயங்கியபடி, "சார் அது வந்து நம்ப கம்பியூட்டர் ஸ்டாப் ஆஆ நவீஷ் கல்லால அடிச்சிட்டான்.. அவரு பிரச்சனை பண்றாரு சார்.." என்றார் தயக்கமாய்.

அவர் சொன்னதை கேட்டு சற்று யோசித்த அகஸ்டினுக்கு நவீஷை பற்றி நன்றாக தெரியும்.. அவனாக எந்த வம்பு தும்புக்கும் போகமாட்டான்.. அவனிடம் பிரச்சனையாக நெருங்காதவரை.. அதுவும் இன்று ஒரு ஆசிரியரை அடித்திருக்கிறான் என்றாள் அதற்கு நிச்சயம் காரணம் இருக்க வேண்டும்.

முதல்வரிடம் திரும்பி, "அவங்க ரெண்டு பேரையும் வர சொல்லுங்க.. அப்புறம் அகல்யாவை தவிர இங்கே வேற எந்த ஸ்டாபும் இருக்க கூடாது.. காட் இட்.." என்று அவருக்கு உத்தரவிட்டான்.

அவர் வெளியே சென்றதும் ஆதவன் அகஸ்டினிடம் திரும்பி, "டேய் எதுக்கு இப்போ அவனை அடிச்சிருப்பான் நவீஷ்.." என்றான் யோசனையாய்.

" ம்ம் எனக்கு மட்டும் என்னடா தெரியும் எருமை.. அவன் வந்தா தான் தெரியும்.. ஆமா உன் தங்கச்சியும் என் தங்கச்சியும் ஏன் டென்சனா இருக்காங்க.." என்றான யோசனையாய்.

அது மட்டும் எனக்கு எப்படி டா தெரியும்.. உன்னோட தானே நானும் வந்தேன்.. ஆனால் அகல்யா அழுதிருப்பா போல.." என்றான் யோசனையாய்.

" அழுதிருப்பா இல்லை.. அழுதிருக்கா ஆதவ்.." என்றான் அழுத்தமாய்.

ஏனோ அவளின் அழுத முகம் அவன் மனதினுள் தோன்றி இதயம் வலி கண்டது.

சமீபமாக அவளை சிரிக்க வைத்தே பார்த்த பின்பு இப்பொழுது தான் அழுகிறாள்.. ஆனால் அதன் காரணம் தெரியாமல் மனம் அலைபாய்ந்தது.

அவன் சிந்தனையோடே முதல்வர் நவீஷையும் ஆசிரியரையும் அழைத்து வந்தார்.

அவன் நவிஷீன் முகத்தை கண்டான்.. அதில் அவ்வளவு கோபம் அடங்கியிருந்தது தெரிந்தது.. அவனை யோசனையாக பார்த்தவன் ஆசிரியரின் திரும்பி,

"சொல்லுங்க கணபதி என்ன நடந்துச்சி.." என்றான் கேள்வியாய்.

சார் அது வந்து வீட்டு பாடம் ஏண்டா எழுதலைன்னு கேட்டேன்.. அதுக்கு அடிச்சிட்டான் சார்.. இவன் மேல கம்பிளைண்ட் பண்ணுங்க சார்.." என்றான் ஆத்திரமாய்.

அவன் ஆத்திரம் அவனுக்கு எதை தடுத்தானோ இல்லை எதற்க்கு இந்த அடியோ.. தன்னை விட சிறிய பையனிடம் அடி வாங்கிய அவமானம் அவனை அப்படி பேசச் சொன்னது.

அகஸ்டின் நவீஷீடம் திரும்பி, "எதுக்கு நவீஷ் அவரை அடிச்சீங்க.." என்றான் அழுத்தமாய்.

எத்தனை பாசமாய் இருந்தாலும் தவறு செய்தால் நியாயமான கண்டிக்கும் நல்ல தகப்பனுமாய் இருந்தான் அகஸ்டின்.

"இவரு தப்பு பண்ணாரு அதுனால அடிச்சேன்.." என்றான் அவனும் அழுத்தமாய்.

அவனின் அழுத்தம் ஆதவனுக்கும் முதல்வருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.. காரணம் அந்த அழுத்தமான வார்த்தைகள் அகஸ்டினின் வாயிலிருந்து வருபவை.. அதை ஒத்திருந்தது அவனின் குரல்.

"நீ தண்டனை குடுக்கற அளவுக்கு அவரு என்ன தப்பு பண்ணாரு.. அப்படியே பேசி இருந்தாலும் எங்ககிட்ட தானே சொல்லியிருக்கனும்.. நீ ஏன் அடிச்ச.." என்றான் யோசனையாய்.

அவன் எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்கவும் அகஸ்டினுக்கு ஏனோ கோபம் வந்தது.

" நவீஷ் நான் உன்கிட்ட தான் கேட்குறேன்.. இப்படி பேசாம இருக்கறது தப்பு.." என்றான் அழுத்தமான கோபமான குரலில்.

அவன் அப்பொழுதும் அமைதியாய் இருக்க, "நவீஷ் இப்போ என்ன நடந்துச்சின்னு நீ சொல்லனும்.. இது உங்க அம்மா மேல சத்தியம்.." என்றான் அகஸ்டின்.

அவனுக்கு நன்றாக தெரியும் எங்கே அடித்தால் எங்கே பதில் வரும் என்று.

" இந்த ஆள் சொல்றாரு நீங்க எங்க அம்மா கூட இருக்க எவ்வளவு பணம் தர்றீங்கன்னு என்கிட்ட கேட்கிறாரு.. நானும் தர்றேன் ஒரு நைட் மட்டும் உங்க அம்மாவை அனுப்பி வை அப்படிங்குறான்.. எங்கம்மாவ தப்பா பேசனா நான் எப்படி சும்மா இருப்பேன்.. அதுதான் அடிச்சேன்.." என்று கத்திவிட்டு அங்கிருந்து கோபமாய் சென்று விட்டான்.

அதை கேட்ட அகஸ்டினுக்கு ஏனோ உலகமே தலைகீழாய் சுற்றுவது போல் இருந்தது.. இதுவரை யாரின் வார்த்தையும் செவிமடுக்காதவன்.. ஆனால் இன்று தனது கவனமின்மையால் தன்னவளை ஒருவன் விலைமகள் போல் கேட்டுள்ளான்.. அதிர்ச்சியால் சிலைபோல் அப்படியே நின்று விட்டான்.

ஆனால் ஆதவனுக்கு வந்த கோபத்திற்கு அந்த ஆசிரியரை நையபுடைத்து விட்டான்.

" ஏய் என்ன தைரியம் இருந்தா யாரை பத்தி என்ன கேட்டுருப்பே.. யூ பிளடி சீட்டேட்.. ஏன்டா ஒரு ஆசிரியர் போலவா நடந்துக்குற.. இடியட் சின்ன பையன்கிட்ட போய் என்ன கேட்டு வச்சிருக்க..

சார் இவனை இப்பவே இந்த ஸ்கூல்ல இருந்து டெர்மினேட் பண்ணுங்க.. நான் கையெழுத்து போடறேன்.. அப்புறம் அடுத்து இவன் எங்கேயும் வேலை செய்யக் கூடாது.. அதையும் பாருங்க.." என்றான் முதல்வரிடம்.

அவனோ, "சும்மா நிறுத்துங்க சார்.. நான் என்ன தப்பா கேட்டேன்னு இந்த குதி குதிக்கிறீங்க.. ஏன் நீங்களும் தானே அவளோட இருக்கீங்க.. நான் ஒரு நாள் தானே கேட்டேன்.. அது என்னவோ பெரிய உலக மகா தப்பு மாறி இந்த அடி அடிகுறீங்க.. உங்ககிட்ட வேலை தான் செய்யறேன்.. ஒன்னும் அடிமை சாசனம் எழுதி தரலை.." என்றான் தான் கேட்டது தப்பில்லை என்ற குருட்டு தைரியத்துடன்.

"ஏய் அவ என்னோட தங்கச்சி டா.. அவளை போய் என்னோட சம்பந்த படுத்தி பேசுற.. உன்னை.." என்று மீண்டும் அவனை அடிக்க போக அகஸ்டினின் கரம் அவனை தடுத்து நிறுத்தியது.

"விடுடா என்னை இவனை இப்பவே இங்கேயே கொலை பண்ணிட்டு போறேன்.." என்றான் அடங்காத கோபத்துடன்.

"அவனை கொன்னுட்டு நீ ஜெயிலுக்கு போறியா இடியட்.." என்றவன் முதல்வரிடம் திரும்பி,

"உடனே ஸ்கூல் ஸ்டாப் மீட்டிங் அரேஞ்ச் பண்ணுங்க.." என்று உத்தரவிட்டவன் அங்கிருந்து வெளியே போகும் சமயம் அவனவள் அங்கே அழுகையுடன் நின்றிருந்தாள்.

அதை பார்த்தவன் மனம் வலிக்க அங்கிருந்து சென்று விட்டான்.

ஆதவனும் ரூபினியும் கோபத்தின் உச்சியில் இருந்தனர்.


நிழலை வருடும் நிஜம் தொடரும்..🌹


அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு லைக் கமெண்ட் பண்ண பட்டூஸ்க்கு நன்றி.
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
அருமை சகி 🩷🩷🩷🩷🩷🩷🩷🩷அகஸ்டின், அகல்யா இப்போவாவது ஒரு முடிவெடுத்து கல்யாணம் பண்ணிப்பாங்களா 🤔🤔🤔🤔🤔🤔🤔