காலையில எழுந்தவனுக்கு வழக்கமாய் கானும் தன்னவர்கள் முகம் அருகில் இல்லை.. விடியலில் அவர்களை அனுப்பி வைத்தவன் மீண்டும் படுத்து உறங்கி விட்டான் ஏதோ உடல் அசதியில்.
வழக்கமாய் அவன் எழும் போது அவள் அவன் மார்பில் அவனை அணைத்தபடி படுத்திருப்பாள்.. அவளுக்கு முன்பே என்பவன் அவளின் வதனத்தை இமை சிமிட்டாமல் பார்த்திருப்பான். அதன் கள்ளமில்லா புன்னகையில் உறங்கும் பிள்ளைகள்.. ஆனால் இன்று யாருமில்லாமல் அவனின் பொழுது அன்று வெறுமையாய் விடிந்தது.
மனம் ஏதோ பாரமாய் உணர எழுந்தவன் குளித்து முடித்து அலுவலகம் கிளம்பியவனுக்கு மெசேஜ் டென் வர யாரென்று பார்த்தான்.. அவனவள் தான் அவனை சாப்பிட்டு அலுவலகம் கிளம்பும் படி மெசேஜ் செய்திருந்தாள்.. தான் இல்லாமல் தன்னவன் சாப்பிட மாட்டான் என்பதை அறிந்தவள் அவனுக்கு மெசேஜை தட்டி விட்டாள்.
அதை பார்த்து சிரித்தவன் ஒரு ஹார்டினை அனுப்பி வைத்தான்.
சமையல் கட்டிற்கு வந்தவன் பிரிட்ஜை திறந்து தோசை மாவை எடுத்தவன் அடுப்பில் தோசைக் கல்லை வைத்து தோசை வார்க்க ஆரம்பித்தான்.. தொட்டுக் கொள்ள என்ன இருக்கு என்று பார்த்தவனின் கண்களில் தட்டுபட்டது பூண்டு சட்னி கொண்ட டப்பா..
அவனவள் தான் அதில் பெயர் எழுதி வைத்துள்ளாள்.. ராட்சசி என்ற செல்ல முனுமுனுப்புடன் தோசை வார்த்து சாப்பிட்டான்.
ஏனோ அது தன்னவள் கைகளில் கிடைப்பது போல் இல்லை என்றே தோன்றியது.
அலுவலகம் வந்தவனுக்கு தலைக்கு மேல் வேலை கிடக்க அதில் மூழ்கி போனவனுக்கு மற்றொரு பிரச்சனையாய் ஜெர்மனியில் அவனின் பிராஜெக்டில் பிரச்தனையானதாக அங்கே உள்ள பொறுப்பாளர் கால் செய்யவும் அதற்கு பின்பு நிற்க நேரமில்லாமல் வேலை நேரம் கட்டி பறந்ததது.
இப்போது ஜெர்மனி வேறு கிளம்ப வேண்டும்.. அங்கே நடக்கும் பிரச்சனையை சால்வ் பண்ண ஆதவன் அகஸ்டின் இருவரின் யாரேனும் ஒரு கண்டிப்பாக போக வேண்டும்..
ஆதவனை அனுப்பலாம என்று யோசித்தவனுக்கு ஏதோ தோன்ற, ச நம்பளே போயிட்டு வந்துருலாம்.. அம்முவுக்கு மெசேஜ் போட்டுவிட்டு போகலாம்.. எப்படியும் நான்கு நாட்களில் வந்துவிடலாம் என்று யோசித்தவனுக்கு தெரியவில்லை அங்கே மாதக்கணக்கில் அவன் வேலை இழுத்தடிக்க போவதை.
வெளி நாடுகளில் அதிகம் புராஜெக்ட் செய்ய எளிதாக ஒத்துக் கொள்ளமாட்டான்.. அவனின் நம்பிக்கை வைத்து யாரேனும் அணுகினால் அந்த வேலையை செய்ய மட்டும் ஒத்துக் கொள்வான்.. அதுவும் அவனின் கம்பெனி கட்டித் தரும் கட்டிடங்களில் பழமையும் புதுமையும் இணைந்து இருக்கும்.. கண்பவர்களை கவர்ந்திழுக்கும்.. அப்படி வந்தது தான் இந்த ஜெர்மனி புராஜெக்டும்.. அவனின் மேல் அதீதமான நம்பிக்கை வைத்து அதை கொடுத்தது நிர்வாகம்.. ஆனால் அதில் இன்று பிரச்சனை என்பதால் அவன் போய் ஆக வேண்டிய சூழ்நிலை.
இருக்கும் சூழ்நிலையை ஆதவனிடம் பகிர்ந்து கொண்டவன் தானே போவதாக சொல்ல அதை ஆதவன் தடுத்தான்.
" அகஸ் நானே போயிட்டு வர்றேன் டா.. தங்கச்சி நைட் வந்தா உன்னை தேடுவாங்க டா.." என்றான் படபடப்பாய்.
அவன் உள்ளுணர்வு கூறியது எதோ தவறாக நடக்க போவதை.. அதில் தான் அகஸ்டினடம் அப்படி கூறினான்.
"ஏய் எருமை என் தங்கச்சியும் தான் உன்னை தேடுவா.. அதுக்காக உன்னை மட்டுமே எப்பவும் அனுப்ப முடியுமா.. நான் போயிட்டு வர்றேன்.
அம்முவுக்கு மெசேஜ் பண்ணிட்டு போறேன்.." என்று தன் நண்பனை சமாதானம் செய்து கிளம்பினான்.
அலுவலக சம்பந்தபட்ட அனைத்து தகவல்களையும் தன் நண்பனுக்கு விவரித்தவன் அந்த புராஜெக்ட்டுக்கு தேவையான தகவல்களையும் திரட்டிக் கொண்டு கிளம்பினான்.
ஏர்போர்டில் தன் நண்பனை இறக்கிவிட்டு இருவரும் அலுவலக சம்பந்தமாய் பேசிக் கொண்டிருக்க செக்கின் செய்யும் அறிவிப்பு வர அகஸ்டின் கிளம்பினான் தன் பொருட்களை தள்ளியபடி.
ஆதவனும் கிளம்பும் சமயம் அகஸ்டினுக்கு என்ன தோன்றியதோ,
"ஆதவ்.." என்று அழைத்தான்.
தன் நண்பனின் குரலில் திரும்பியவனின் முன்னே வந்தவன்,
"ஆதவ் கண்ணம்மாவையும் பசங்களையும் நான் வர்ற வரைக்கும் பத்திரமா பாத்துக்கோ.. நான் கிளம்புறத அவளுக்கு மெசேஜ் போட்டுட்டேன்.
ஆனா அவ இன்னும் பாக்கலை.. அவ கேட்டா நிச்சயம் நேரம் இருக்கும் போது கால் பன்றேன்னு சொல்லுடா.." என்றவன் மனபாரத்துடன் கிளம்பினான்.
அவனின் குரலில் இருந்து வருத்தம் ஆதவனையும் சிதறடித்தது.
இங்கே பாளையூர் வந்த அகல்யா சிவன் கோவிலின் வெளியே இருந்த அரசமரத்தினடியில் எப்பொழுதும் திதி கொடுக்க ஐயர் இருப்பார்.
தினேஷிற்கு கொடுக்க வேண்டிய திதியை ஆதுவை வைத்து கொடுத்தவள் கோவிலின் உள்ளே சென்று சிவனை வணங்கியவள் கிளம்பும் சமயம் அங்கே வந்த ஒரு பெரியவர்,
"அட அக்லயாவா எப்படி தாயி இருக்க.. இது தான் உன் பசங்களா.. நல்லாவே இருக்காங்கமா.. ஆமா நீ மறு கல்யாணம் செய்துகிட்டேன்னு கேள்விபட்டேன்.. நல்வாருக்கியா தாயி.." என்றாள் வயதில் மூத்தவர்.
" ம்ம் நல்லாருக்கேன் ஐயா.. நீங்க எப்படி இருக்கீங்க.." என்றாள் இயல்பாய் புன்னகைத்தபடி.
"நல்லாருக்கோம் தாயி.. ஆனா அந்த கருணாகரன் உன் மாமியார் வீட்ல தான் எதுவும் சரியில்லை தாயி.." என்றார் அவர்.
" அய்யா என்ன சொல்றீங்க.." என்றாள் பதட்டத்துடன்.
"அட ஆமாம் தாயி உனக்கு பண்ண கொடுமைக்கு எல்லாம் அனுபவிக்குறாங்க தாயி.. அந்த கடவுள் இன்னும் இருக்கார் தாயி.. அந்த கருணாகரனோட வண்டி ஆக்ஸிடெண்ட் ஆகி இப்போ படுத்த படுக்கையா இருக்கான் தாயி.. உன்னையும் உன் பிள்ளைகளையும் கொடுமை பண்ண உன் மாமியார் இருக்கற நிலத்தை எல்லாம் இழந்து இன்னைக்கு கலை எடுக்க போய் கஞ்சி குடிக்கிறாங்க தாயி.. அது தான் நல்லவங்களுக்கு எப்பவும் அந்த கடவுள் துணையா இருப்பான் தாயி.." என்றவர் அங்கிருந்து சென்று விட்டார்.
ஆனால் அதை செய்தது அவளவன் தான் என்பது யாரும் அறியாமல் போன ரகசியம் தான்.
ஆனால் அதை கேட்ட பெண்ணவளுக்கு தான் மனதில் பாரம் ஏறிப்போனது.
ஆனால் அவர்களை சென்று பார்க்கவும் மனம் இல்லை.. அனுபவித்த வலி இன்னும் மறையவில்லை.. மனதில் அழியா கல்வெட்டாய் பதிந்திருந்தது.
ஒரு வழியாய் அதற்கு மேல் அங்கே இருக்க முடியாமல் கிளம்பி விட்டாள்.. அதே நினைவால் வந்தவளுக்கு தன்னவனிடம் பேச வேண்டும் என்பதும் மறந்து போனது தான் அவளின் துரதிர்ஷ்டம்.
அவள் வீடு வரும் போது இரவு பத்து மணி ஆகிவிட்டது.. வரும் வழியில் பிள்ளைகளுடன் கோவிலுக்கு சென்று விட்டு வந்தாள்.
வீட்டிற்கு வந்து இறங்கும் சமயம் வீடு இன்னும் பூட்டியிருந்ததை கண்டு தன்னவன் இன்னும் வரவில்லை என்பது உணர்ந்தது.
அதிகாலையில் அவனை கண்டது.. ஏனோ அவனை காண மனம் ஆர்பரித்தது.. பிள்ளைகள் இருவரும் நன்றாய் உறங்கி விட இவ்ளோ தன்னவனுக்காய் காத்திருந்தாள்.
தன்னிடம் சிறுபிள்ளையாய் கோபித்து கொண்ட கள்வனை காண பெண்ணவளின் உள்ளம் ஏங்கியது.
எவ்வளவு நேரம் காத்திருந்தாளோ அவன் வரவேயில்லை.. சோபாவில் அமர்ந்திருந்தவள் அப்படியே தூங்கிவிட்டாள்.
செங்கதிரோன் பளிச்சென முகத்தில் அடிக்க இமை சிமிட்டி பார்த்தவள் கண்டது விடிந்த பொழுதை தான்.. ஆனால் அவளவன் அபபொழுதும் வந்திருக்கவில்லை.
மனதில் ஒரு அதிர்வுடன் சார்ஜரில் இருந்த தன் அலைபேசியை எடுத்து அவனுக்கு கால் செய்தால்.. ஆனால் கால் போகவில்லை.
இரண்டு மூன்று முறை முயற்சித்து பார்த்தவள் வாட்ஸ் அப்பில் சென்று மெசேஜ் செய்ய பார்த்து போது தான் தெரிந்தது தன்னவன் அனுப்பிய மெசேஜ்.
அதை ஓபன் செய்து பார்த்தவளுக்கு கண்களில் கண்ணீர் கரை புரண்டோடியது.. தன்னிடம் சொல்லாமல் சென்று விட்டானே என்ற ஏக்கம் இருந்தாலும் அவன் வேலை விஷயமாய் தானே சென்றிருக்கிறான்.. வந்துவிடுவான் என்று மனதை தேத்திக் கொண்டாள்.. ஆனால் இதயத்தில் எழுந்த வலியை தவிர்க்க முடியவில்லை.
குளியலறை சென்றவள் குளித்து முடித்து வேலையை பார்க்க சென்றாள்.. ஒரு காபியை போட்டு கொண்டு ஹாலுக்கு வந்தமர்ந்தவள் காபியை குடிக்கும் சமயம் அவளவனின் நினைவு தான்.
வழக்கமாய் ஒரு கப்பிலே இருவரும் காபியை குடித்து விடுவார்கள்.. ஆனால் இன்று அவன் தன் அருகில் இல்லாததது அந்த காபியும் கசந்து தான் போனது.
மெதுவாய் காலை சமையலை முடித்தவள் பிள்ளைகள் எழவும் அவர்களை பள்ளிக்கு அனுப்பி விட்டு இவள் கோவிலுக்கு சென்றாள்.
பெருமாள் கோவிலுக்கு சென்றவள் பெருமாளை மனதார வணங்கி விட்டு அங்கேயிருந்த கிருஷ்ணர் சன்னிதியில் வந்து அமர்ந்து கொண்டாள்.
அவளறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தது.. ஏனோ அவளின் உள்ளுணர்வு எதுவோ தவறாக நடப்பது போல் தோன்றியது.. ஆனால் அது என்னவென்று மட்டும் தான் பெண்ணுக்கு தெரியவில்லை.
அந்த கண்ணனை நோக்கி கையெடுத்து வணங்கியவள், "கண்ணா என்னவோ சொல்ல தெரியலை மனசு பூரா ஏதோ தப்பா நடக்கறது போல தோனுது.. அவரை பார்த்தும் ரெண்டு நாள் ஆச்சு.. அவரோட குரல் கேட்கனும் போல இருக்க.. ஆனா கால் போகலை.. அவருகிட்ட பேசாதது வேற எதுவோ பண்ணுது.. எனக்கு சுத்தமா புரியலை.
அவருக்கு இன்னும் எல்லா விஷயமும் தெரிஞ்சா அந்த கோபத்தை வேற தாங்க முடியாது.. எனக்கு நீதான் கண்ணா பக்கத் துணையா இருக்கனும்.. இன்னைக்கு எப்படியும் அவருகிட்ட பேசிடனும் கண்ணா.." என்ற வேண்டுதலுடன் வீட்டிற்கு வந்தாள்.
மனம் எதிலும் லயிக்கவில்லை.. தாயின் மடி தேடும் மழலையாய் தன்னவனை மனமா தேடுவதை தவிர்க்க முடியவில்லை.
இங்கே வீட்டிற்கு வந்த ஆதவனின் முகம் யோசனையை தாங்கி இருந்தது.. அவனின் முகத்தை பார்த்து ரூபினி அவனருகில் சென்று அமர்ந்து கொண்டு,
"என்னாச்சு அத்தான்.. என்ன யோசனை பலமா இருக்கு.." என்றாள் அவனருகில் அமர்ந்து கொண்டு.
அவளை பார்த்தவன் மெதுவாய் அவள் மடியில் தன் தலையை சாய்த்துக் கொண்டு,
"ஹனி ஏதோ மனசு தப்பா நடக்க போற மாறி தெரியுது டி.. இந்த அகஸ்டின் வேற இப்போ ஜெர்மனி போயிருக்கான்.. அகல்யா பசங்களோட பாளையூர் போயிருக்கா.. எதுவோ எங்கேயோ தப்பா நடக்கறது போல இருக்குடி.. இப்போ தாண்டி அவன் நல்லா சிரிச்சி அவன் குடும்பத்தோட சந்தோஷமா இருக்கான்.. இந்த ஆறு மாசமாதான் அவனோட வாழ்க்கையில கல்யாணம் குடும்பம் குழந்தைங்கன்னு சந்தோஷமா இருக்கான் டி.. ஆனா இப்போ போய் இந்த ஜெர்மனி புராஜெக்ட் ல பிராப்ளம் வந்துருக்கு கூடாதோன்னு தோனுது டி.. இந்த புராஜெக்ட் வேணாம்னு அவன் சொன்னான்.. ஆனா நான் தான் வேணும்னு ஒத்துக்க சொன்னேன்.. இப்போ அது தப்புன்னு தோனுது ஹனி.
ம்ம் அப்புறம் ஹனி அகஸ்டின் வர்ற வரைக்கும் அகல்யாவையும் பசங்களையும் அடிக்கடி போய் பாத்துட்டு வரலாம் டி.. பாப்பாவ பாத்த கொஞ்சம் ஆறுதல் அடைவாங்க ஹனி.." என்றான் கண்ணை மூடியபடி.
" ம்ம் கண்டிப்பா போய் பாக்கலாம்..நீங்க வந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.. நீங்க தான் அப்புறம் அண்ணன் வர்ற வரைக்கும் கம்பெனியை பாத்துக்கணும்.. வாங்க.."
என்றபடி அவனை சமாதானம் செய்து சாப்பாடு கொடுத்து தூங்க வைத்தாள்.
இங்கே அகல்யா பிள்ளைகளுக்கு மட்டும் சாப்பிட கொடுத்து தூங்க வைத்தவள் தன்னவனின் நினைவில் கால் சோபாவில் போனை பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.. தன்னவனின் குரலையாவது கேட்க முடியுமா என்ற எண்ணத்தில் வாட்ஸ் அப் கால் செய்தவள் முழு ரிங் போய் கட் ஆனது.. அவனோ எடுக்கவில்லை.
கிட்டதிட்ட இந்த ஆறேழு மாதமாய் அவனின் அணைப்பு இல்லாமல் ஒரு நாளும் உறங்கியதில்லை.. அவனின் மார்பு சூட்டில் முகம் புதைத்து கொண்டு நிம்மதியாய் துயில் கொண்ட நாட்கள் கனவாய் அவளை நிந்தித்தது.
அவனை பார்க்காத அவனிடம் பேசாத இந்த இரு பொழுதில் புரிந்து கொண்டாள்.. தன்னவனின் காதலில் தான் முழுமையாய் தொலைந்ததை.
ஆனால் காலன் இன்னும் அவளுக்கு வலிகள் நிறைந்த வாழ்க்கையை தரப் போவதை பேதையவள் அறியவில்லை.
நிழலை வருடும் நிஜம் தொடரும்..
அடுத்து பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.
போன பதிவுக்கு லைக் கமெண்ட் பண்ண பட்டூஸ்க்கு நன்றி.