• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் -64

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
230
43
Salem
அவளை விட்டு கண நேரமும் பிரிய மாட்டேன் என்று கூறியவன் இன்று தன் உயிர் வெறுத்து தன்னவளை பிரிந்திருக்கிறான்.. அவனின் வாழ்வில் அவனுக்கான அணைத்துமானவளாய் அவளை நினைத்தான்.. அவள் வலியில் துடித்தாள் தாயாய் தாங்கினான்.. கலக்கமாக இருக்கும் நேரத்தில் தந்தையாய் அரவணைத்தான்.. தோல்வியில் துவழும் சமயம் நண்பனாய் ஆறுதலிலித்தான்.. எல்லையில்லாமல் காதலித்தான்..திக்கு தெரியாத மழலைக்கு சொல்லிக் கொடுக்கும் ஆசானாய் அலுவலக நிர்வாகத்தை நடத்த கற்றுக் கொடுத்தான்.

மாதாந்திர வலியில் இவள் துடித்தாளே ஆடவன் பரிதவித்து போவான்.. ஆனால் இன்று அவளை உயிரற்ற உடலாய் ஊமையாக்கி விட்டான்.. என்ன செய்வது அதீதமான காதலில் தானே இதை போல் துணையை காண முடியும்.

இன்றோ அவன் இல்லாமல் அவன் நினைவில் சுயத்தை இழந்து நிற்கிறாளே பெண்ணவள்.

விநாயகம் ஆதவனிடம் சொல்லி பிள்ளைகளை அழைத்து வர சொல்லியிருந்தார்.. அவரை சந்தேக பார்வை பார்த்துக் கொண்டே பிள்ளைகளை அழைத்து வர சொன்னான்.

ராபர்டும் காயத்ரியும் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வந்தனர்.

பிள்ளைகள் இருவரும் தாயின் நிலையை கண்டு அதிர்ந்தனர்.. அரவணைக்க தந்தையும் இல்லாமல் தாயின் நிலையும் இப்படி இருக்க இருவருக்கும் பயம் வந்துவிட்டது.

ஆதவன் அருகில் சென்றவர்கள், "மாமா அத்தை அம்மாவுக்கு என்ன ஆச்சி.." என்றார்கள் அழுகையுடனே.

அவர்களை அந்த நிலையில் கண்ட ஆதவனுக்கே மனம் வலித்தது.. அதே நேரம் அகல்யாவின் மேலும் கோபம் வந்தது.

பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளைகளின் நிலையை கூடவா இந்த பெண்ணை அசைக்கவில்லை.. பிள்ளைகளை விட்டு நேற்று வந்தவனுக்காக இன்று உயிரை விடும் நிலையில் அல்லவா இருக்கிறாள் என்ற கோபம் இருந்தது.

பிள்ளைகளின் முன்னை குணிந்தவன், "ஆது நவி அம்மாகிட்ட போய் பேசுங்க.. நீங்க பேசுனா தான் அம்மா எழுந்து வருவா.. வாங்க பா.." என்றான் தனக்குள் பொங்கி வந்த அழுகையை மறைத்தபடி.

ரூபினியோ அவர்களின் முகத்தை பார்த்ததும் கலங்கி போனாள்.

பிள்ளைகள் இருவரும் தாயின் அருகில் சென்று தங்களின் கண்ணீரை துடைத்துக் கொண்டு,

"அம்மா எழுந்து வாங்க மா.. உங்களுக்கு என்னாச்சி மா.. எழுந்து வாங்க மா.. நீங்க இல்லைன்னா எங்களுக்கு யாருமில்லை மா.. அப்பா எங்கே போனாங்க ன்னு தெரியலை பயமாயிருக்கு மா.. எழுந்து வாங்க மா.." என்றார்கள் இருவரும்.

மீண்டும் மீண்டும் தன் தாயின் அழகிய நினைவுகளை மீட்டுடெடுக்க தான் முயன்றனர்.

ஆனால் அவளோ கண்ணை சிறிதும் அசைக்க கூட இல்லை.. பிள்ளைகளின் அழுகை கூட கேட்காது அளவுக்கு தன் காதை இறுக அடைத்துக் கொண்டாள் போல.. எல்லோரும் பேசி பார்த்தனர்.
ஆனால் யாரின் குரலுக்கும் பெண்ணவள் செவி சாய்க்க வில்லை.

பிள்ளைகள் பேசும் போது அதுவும் அவர்களின் தந்தையை பற்றி பேசும் போதும் பெண்ணவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்ததே அன்றி அவளின் விழி மட்டும் திறக்கவில்லை.

அவளின் நிலை அனைவரையும் அச்சப்படுத்தியது.. ஏன் விநாயகத்திற்கு கூட சிறிது பயத்தை தோற்றுவித்தாள் பெண்ணவள்.

பிள்ளைகளும் ஆதவன் ரூபினி காயத்ரி ராபர்ட் என் எல்லோரும் முயற்சி செய்தும் யார் அவளுடன் பேசியும் அவள் கண்களை சுத்தமாய் திறக்கவில்லை.. யாருக்கும் சுத்தமாய் அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை.. இந்த நிலையிலும் அகஸ்டின் அங்கே வராதது வேறு ஆதவனுக்கு அதீத கோபத்தை கொடுத்தது.

அவளின் கண் விழிக்கும் நொடிக்காக எல்லோரும் காத்திருக்க பெண்ணவளோ இரவு வரை கண் திறக்கவில்லை.. இந்த செய்தி அகஸ்டின் காதுக்கு போகவும் பயந்து விட்டான்.

கிட்டதட்ட பனிரெண்டு மணி நேரம் கண் விழிக்காமல் இருந்தவளின் நிலை அனைவருக்கும் பயத்தை கொடுத்தது என்றால் ஆடவனின் நிலையே உயிர் நடுங்கியது.

உயிரை கையில் பிடித்து கொண்டு கிடைத்த பிளைட்டில் இந்தியா கிளம்பினான்.. அவளின் நிலை அவனின் இறுகிய மனதை அலைகழித்தது.

அவன் இந்தியாவில் கால் பதிக்கும் நேரம் நள்ளிரவை தாண்டி வந்தான்.. அவனுக்காக விநாயகம் காத்திருந்தான்.. ஏர்போர்டில் விட்ட தன் காரை எடுத்துக் கொண்டு சீறிப் பாய்ந்தான் அந்த அர்த்த ராத்திரியில்.. கண்கள் இரண்டும் கலங்கியிருந்தது.

ஹாஸ்பிடலின் முகப்பிலே காத்திருந்தார் விநாயகம்.

" விநாயகம் என்னாச்சி இன்னுமா கண் விழிக்காத இருக்கா.." என்றான் படபடப்புடன்.

அவனை கண்ட விநாயகத்திற்கு மேற் கொண்டு எதுவும் பேச முடியாமல் வார்த்தை தடுமாறியது.. அதனுடனே,

"சார் மேடம் பாக்க போலாம்.." என்றபடி முன்னே நடந்தான்

தன்னவளின் நினைவில் இருந்தவனுக்கு தன்னை சுற்றி நடந்த எதுவும் புரியவுமில்லை.. அவனால் யோசிக்கவும் முடியவில்லை.. அதன் முக்கிய காரணம் அவனவளின் உயிர்.

இருவரும் அகல்யா அனுமதிக்கப்பட்டிருந்த அந்த ஐ சீ யூ க்கு முன்னே வந்து நின்றனர்.

அங்கை இருவரை தவிர யாருமில்லை
அதை கண்டவன், "விநாயகம் எங்கே யாரையும் காணலை.." என்றான் தன் கூர்மையான விழிகளால் சுழற்றியபடி.

"சார் அது வந்து ஆதவன் சாரும் ரூபினி மேடம் பேரன்ஸ் பசங்களை கூட்டிட்டு வீட்டுக்கு போயிட்டாங்க சார்.. ரூபினி மேம் உள்ளார தூங்கிட்டு இருக்காங்க.. நீங்க போய் மேடம் பாருங்க சார்.." என்றான் தடுமாறியபடி.

அவன் சொன்னதை கேட்டவன் அடுத்த நொடி அகல்யாவின் அறைக்குள் நுழைந்தான்.. அங்கே கையில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டிருக்க முகமெல்லாம் வாடி வதங்கிய பூங்கொடியாய் படுத்திருந்தவளை கண்டவனின் கண்கள் தன் கட்டுப்பாட்டை மீறி கண்ணீர் சிந்தித்து.

உடல் நடுங்க அவளருகில் மெல்ல சென்றான்.. அவனால் அவளை இந்த நிலையில் காண முடியவில்லை.. அவள் அதீதமான நேசம் உள்ளது.. அவளுக்காக எதுவும் செய்ய தயாராகத்தான் இருக்கிறான்.. ஆனால் அவன் உயிரை இழக்கும் தருணத்தில் கூட அவளின் நன்மை மட்டும் கருதினான் அந்த கணவன்.

அவளுக்காக தான் அவளை பிரியும் முடிவையும் எடுத்தான்.. ஆனால் தன் முடிவை தன்னவள் சுக்கு நூறாய் உடைத்ததை தான் அவனால் தாள முடியவில்லை.

அவளருகில் சென்று அமர்ந்தவன் நடுங்கும் கரங்களால் அவளின் விரல்களை தொட்டான்.

அவள் கரங்களை தொட்டதுமே அவளின் இமையோரம் கண்ணீர் சொரிந்தது.. அதை கண்டவனுக்கு தன்னவள் தன்னை உணர்ந்திருக்கிறாள் என்று புரிந்தது.. ஆனால் அந்த புரிதல் தான் அவனுக்கு அதிகமான வலியை கொடுத்தது.

தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவன் கட்டிலில் அவளருகில் அமர்ந்து அவளை அள்ளி எடுத்து அணைத்துக் கொண்டான் அந்த இரும்பு மனதுக்காரன்.

கிட்டதட்ட பத்து நாட்களுக்கு பின்பு அவனின் அணைப்பில் அவள் இருந்தாள்.. ஆனால் அதை உணர்ந்தாலும் விழி வழியே அந்த சந்தோஷத்தை அவளால் அனுபவிக்க முடியவில்லை ஆழ்ந்த மயக்கத்திலிருந்தவளால்.

அவளை இறுக்கமாய் தன்னுள் பொத்தி வைத்துக் கொண்டவன், "கண்ணம்மா என்னடி இது ஏன்டி இப்படி படுத்துருக்க.. வேணாம் அம்மு நம்ம பசங்க இருக்காங்க டி.. அவங்களுக்காக எழுந்து வாடா தங்கம்.. இதுக்கு தாண்டி பயந்தேன்.

ஆனா உனக்கு எல்லாம் தெரிஞ்சும் என்கிட்ட சொல்ல தோனலை இல்லை.. ஏன் பாப்பு இப்படி பண்ணன.. இங்கே வந்தா உங்களை பாக்காம இருக்க முடியாதுன்னு தானடி நான் அங்கேயே இருந்தேன்.. நீ இப்படி கிடக்கவா உன்னை விட்டு போகனும்னு நினைச்சேன்.. வேணாம்டி எழுந்து வா கண்ணம்மா.. எங்களுக்கு உயிர் போற வேதனையை குடுத்துட்டு இருக்கடி.. வேணாம் டா தங்கம் திரும்ப வாடி.. உன்னோட நூறு வருஷம் வாழனும்னு ஆசைப்பட்டேன்.. ஆனா இப்போ நான் உயிரோட இருக்கற வரைக்குமாவது நான் வாழ நீ.வேணும் டி.." அவளின் காதுக்குள் தன் காதலை மெய்பித்து கொண்டிருந்தான் அந்த காதல் கணவன்.

அவ்வளவு நேரம் விடி விளக்கின் வெளிச்சத்தில் தன்னவளிடம் பேசிக் கொண்டிருந்தவன் திடிரென பளிச் என வெளிச்சம் கொட்ட யாரென திரும்பி பார்த்தவனுக்கு அங்கே தன் கையை கட்டியபடி ஆதவனும் ரூபினியும் இருக்க கண்டவன் மெதுவாய் மீண்டும் தன்னவளை கட்டிலில் படுக்க வைத்து அவளின் தலைமுடி ஒதுக்கி விட்டவன் தன்னவளின் நெற்றியில் அழுத்தமாய் தன் முத்திரையை பதித்து எழுந்து தன் முன்னே உள்ளவர்களை கண்டான்.

ஆனால் தான் செயலுக்கு எந்த காரணமும் சொல்லவில்லை.. அதுவும் தன்னவளை காரணம் காட்டி தன்னை இங்கே வரவழைத்ததும் ஆதவனின் வேலை என்று அறிந்தவன் மேலே எதுவும் பேசாமல் நின்று விட்டான்.. அதுவே ஆதவனுக்கு கோபத்தை கொண்டு வந்தது.. ரூபினியோ தன் தமையனை அடிபட்ட பார்வை பார்த்தாள்.. ஆனால் எதுவும் பேசவில்லை அவனிடம்.. மெதுவாய் சென்று அகல்யாவின் அருகில் அமர்ந்து கொண்டாள்.. அப்பொழுது தான் கண்டாள் அகல்யாவின் இமைகள் அங்குமிங்கும் அலைவதை.. உடனே,

"டாக்டர் சீக்கிரம் வாங்க.. அகல்யாவோட கண் இமை அசையுது.." என்று சந்தோஷமாய் கத்தி கூப்பாடு போட்டாள்.

அவளின் சத்தத்தில் இரு ஆண்களும் பதட்டத்துடன் அவளருகில் வந்தனர்.

ரூபினியின் சத்தம் கேட்டு வெளியே பயத்துடன் நின்றிருந்த விநாயகம் வேகமாய் ஓடி வந்தார் சந்தோஷத்துடன்.

பின்னே ஒரு நாள் முழுவதும் கண் திறக்காமல் அனைவரையும் சோதனைக்குள்ளாக்கியவள் இப்போது கண் திறந்தாள் அதை விட வேறு என்ன சந்தோஷம் இருக்க போகிறது.

இரு ஆண்களையும் தாண்டி வேகமாய் அகல்யாவின் அருகில் வந்தவர் அவசரமாய் அவளை செக் செய்தவர் சற்று நேரத்தில் சந்தோமாய் மூவரிடமும் திரும்பி, " சார் மேடம் ஓட பல்ஸ் நார்மல் ஆயிடுச்சி.. இன்னும் கொஞ்ச நேரத்துல கண் விழிச்சிருவாங்க சார்.." என்றார் சந்தோஷமாய்.

அகஸ்டின் சந்தோஷமாய் அவளருகில் செல்ல அவனை தன் கைகளால் தடுத்த ஆதவன் ரூபியிடம் திரும்பி,

"ரூபி அகல்யா கண் விழிச்சா சொல்லு.. இங்கே இவனோட ரூம்ல தான் இருப்போம்.." என்று அவளிடம் சொல்லியவன் தன் நண்பனை இழுத்து செல்ல முயன்றான்.

அகஸ்டினோ அவன் கைகளிலிருந்து தன் கைகளை பிரித்தெடுத்து, "ஏய் லூசு உனக்கென்ன பைத்தியமா எதுக்குடா எருமை இப்படி கையை இறுக்கமான புடிக்குற.. நான் இப்போ எங்கேயும் வரலை.. அவ கண் விழிச்சி அவளை பாத்துட்டு தான் வருவேன்.." என்று பிடிவாதமாய் அங்கேயே நின்றான்.


" ஓஓ இப்போ தான் அவ உங்க பொண்டாட்டின்னு தெரிஞ்சுதா சார்.. இத்தனை நாளா அவளை தவிக்க விட்டுட்டு போனியே அப்போ தெரியலையா.. இல்லை யாரு எப்படி போனா எனக்கென்னனு இருந்தியா.. அவ எந்த அளவுக்கு மனசு பாதிச்சா இப்படி வந்து சுயநினைவை விட்டு படுத்து கெடப்பா.. இந்த ஒரு வாரமா அந்த மூனு பேரும் தவிச்சி துடிச்சாங்களே அப்போ எங்கே போச்சி இந்த பாசம்.. ஏன் அவளுக்கு இருக்கற கொஞ்ச நஞ்ச உயிரையும் எடுக்க இங்கே இருக்க போறியா.." என்றான் கோபமாய்.

தன்னிடம் கேள்வி கேட்ட தன் நண்பனை அடிபட்ட பார்வை பார்த்தவன், "மச்சான் நீயுமா டா என்ன புரிஞ்சிக்கலை.. அவளை நான் கொல்ல பார்ப்பேன் டா.. அவ என்ன உயிருக்கும் மேலானவ டா.. ஏன் என்னோட நிஜம் டா அவ.." என்றான் வலியுடன்.

இத்தனை காலம் தன்னுடன் ஒன்றாய் இருந்த தன் நண்பனும் தன்னை புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் அதில் இருந்தது.

அதை ஆதவனும் உணர்ந்தான் தான்.. ஆனால் அவனிடம் அதை காட்டி கொள்ளவில்லை.

ரூபினியிடம் திரும்பியவன், "ரூபி மா நீயுமா இந்த அண்ணனை பத்தி புரிஞ்சிக்கலை.. இவளை கொல்றதுக்கா அப்படி பொத்தி பொத்தி பாத்துக்கிட்டேன்.. இவ இல்லைன்னா இந்த அகஸ்டின் உயிர் இல்லை மா.." என்றான் தங்கையிடம்.

"அண்ணா உங்களை புரிஞ்சிக்காத இல்லை ணா.. ஆனா அகல்யாவை பத்தி கொஞ்சமாவது யோசிச்சி பாத்தீங்களா.. அவளுக்கு நீங்க தானே அண்ணா உயிர்.. ஆனா இன்னைக்கு அவளை இந்த நிலையில் கொண்டு வந்து விட்டுட்டீங்களே அண்ணா.. அதுவும் பசங்க உங்களை பாக்காம எவ்வளவு தவிச்சி துடிச்சாங்க தெரியுமா.. ஏன் நாங்களும் உங்களை பாக்காம எப்படி தவிச்சோம்னு தெரியுமா.. அதுவும் இவரு உங்களை விட்டு எப்பவாவது பிரிஞ்சி இருந்துருக்காரா அண்ணா.. ஏன்னா இப்படி பண்ணீங்க.." என்றாள் அழுகையுடன்.

அதை கேட்ட அகஸ்டின் உறைந்து போய் விட்டான்.

தன்னவர்களை மட்டும் யோசித்தவர் தன் நண்பனையும் தங்கையையும் மறந்து விட்டானே.. சுயநலமாய் இருந்து விட்டானே என்ற எண்ணமே அகஸ்டினை நிலைகுலைய வைத்தது.



நிழலை வருடும் நிஜம் தொடரும்..🌹


அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ண பட்டூஸ்க்கு நன்றி பா.

அட என்னடா இப்படி கட்டை எல்லாம் கொண்டு வர்றீங்க.. ஆனா இந்த கதை உண்மை சம்பவத்தை வைத்து எழுதினது தானே சொன்னேன்.. அதுல அகல்யா அகஸ்டின் பிரிஞ்சிடுவாங்க பா.. இப்போ நான் என்ன பன்றது.. உண்மையான கிளைமேக்ஸ் போடட்டா. . இல்லை பொய்யான கிளைமேக்ஸ் போடவா.. கொஞ்சம் சொல்லிட்டு போங்க பா.

ஆனா நான் யோசிச்ச கிளைமேக்ஸ் அவங்களோட பிரிவு தான்.. ஆனா ரெண்டு பேருல ஒருத்தர் மட்டும் தான் உயிரோட இருப்பாங்க.. அது யாருன்னு நீங்களே சொல்லுங்க பா.


நோ வன்முறை.. யாரும் வன்முறையை கையில் எடுக்காதீங்க பா.. மீ பாவம்.

சரி உங்களுக்கு ஒரு ஆப்சன்.. அது என்னன்னா கிளைமேக்ஸ் ரெண்டா கொடுத்திடலாமா.. ஒரு சந்தோஷம் ஒரு சோகம்.

என்ன பண்றதுன்னு சொல்லிட்டு போங்க பா.