• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிஜம் -65

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
230
43
Salem
அதே மருத்துவமனையில் அகஸ்டினிக்கு என்று ஒரு பிரத்யேக அறை உண்டு.. அங்கே அவனை அழைத்து சென்றான் ஆதவன்.


"உனக்கு என்னடா ஆச்சி.. ஏன் இப்படி செஞ்ச.. அகஸ் உனக்கு நினைவு இருக்குதா அந்த பொண்ணோட நிலமை தெரியும் தானே.. அந்த அப்பாவி பொண்ணு உன் மேல உயிரையே வச்சிருக்கா.. ஆனா நீ எப்படி டா இந்த வேலை செஞ்சே.. இப்போ நான் உன் நண்பனா பேசலை.. அகல்யாவோட அண்ணனா பேசுறேன் அகஸ்டின்.." என்றான் அழுத்தமாய்.

தன் நண்பனை நிமிர்ந்து பார்த்தவன், "நீ அண்ணன்னு சொல்லாத டா.. நீயெல்லாம் ஒரு அண்ணனா டா.. அவளை உன் கூட பிறந்த தங்கச்சியா நினைச்சிருந்தா என்னை அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருப்பியா.. இதே உன் கூட பிறந்த தங்கச்சியா இருந்தாலும் இதை செஞ்சிருப்பியா ஆதவ்.. இல்லை செஞ்சிருக்க மாட்டே.. என் வாழ்நாள் எப்ப வேணாலும் முடியும்னு தெரிஞ்சிக்கிட்டு எப்படி டா எனக்கு அவளை உன்னால எந்த உறுத்தலும் இல்லாம கல்யாணம் செஞ்சு வைக்க முடிஞ்சிது..

உண்மையை சொல்லனும்னா என் மேல தாண்டா எனக்கு கோபம்.. நீங்கெல்லாம் பாத்துப்பீங்கன்னு நான் அலட்சியமா விட்டதுக்கு எனக்கு எப்படி ஆதவ் துரோகம் செய்ய மனசு வந்தது.

ஆமா நான் அவளை நேசிச்சேன் தான்.
ஆனா எனக்கு என் உடல்நிலையை ஒரு வார்த்தை கோடிட்டு கட்டியிருந்தா இன்னைக்கு இப்படி அவ இருந்துருக்க மாட்டேளா ஆதவா.. நீ செஞ்சது எவ்வளவு பெரிய துரோகம் தெரியுமா டா.." என்றான் அவனுக்கும் சற்றும் குறையாத கோபத்துடன்.

அதை கேட்டதும் இத்தனை நேரமாய் அமிழ்ந்து கிடந்த குற்றவுணர்வு தலைதூக்க தன் தலையை குணிந்து கொண்டான் ஆதவன்.

"பேசுடா இப்போ பேசு.. இவ்ளோ நேரம் அண்ணன் அது இதுன்னு பேசன.. இப்போ பேசு ஆதவ்.. நீ எனக்கு எது நல்லதுன்னு நினைச்சி பண்ணுனியோ இன்னைக்கு அதுவே தலைகீழா நடக்குது.. ஏன்டா என்கிட்ட உண்மையை சொல்லலை.. சொல்லிருந்தா அப்பவே நான் விலகி போயிருப்பனே அவங்களை விட்டு.. ஏன் ஆதவ் இப்படி பண்ணுன..எதுக்கு யாருக்காக டா இதை பண்ணன.. நாளைக்கு எனக்கு எதாவது ஆச்சின்னா அவளால தாங்க முடியுமா டா.. ஒரு வாரம் என்னை பாக்கலை பேசலை அதுக்கே இப்படி வந்து படுத்துருக்காளே நாளைக்கு எனக்கு எது ஆனாலும் அத தாங்கிக்க கூடிய சக்தி அவகிட்டா இருக்காடா.. பசங்களை நினைச்சி பாத்தியா கொஞ்சம்.. முன்னவே அப்பா பாசம் இல்லாத இருந்தவங்களுக்கு இன்னைக்கு அந்த பாசத்தை திகட்ட திகட்ட காட்டிட்டேன்.. ஆனா அது வாழ்நாள் முழுக்க வராதுன்னு தெரிஞ்சா அத தாங்குவாங்களா.. ஏண்டா இப்படி பண்ணன.. ரொம்ப வலிக்குது ஆதவ்.

எனக்கு என் சொந்த பந்தம் விட்டு போனப்ப கூட நான் தவிக்கலை துடிக்கலை கடந்து வந்துட்டேன்.. ஆனா இப்போ என் கண்ணம்மாவும் பசங்களும் என்னை விட்டு போனா அதை என்னால தாங்க முடியாது ஆதவ்.. சத்தியமா முடியாது டா.. இதை எல்லாம் எனக்கு எதுவும் இல்லைன்னு நினைச்ச நான் அவளோட இனைஞ்சிருந்தா.. நினைக்கவே உடம்பு நடுங்குது டா எனக்கு.. இவங்க எப்படி தவிக்கிறதை என்னால பாக்க முடியாது டா.. அதனால தான் நான் அங்கேயே இருந்தேன்.. ஆனா இப்போ என்னையும் இங்கே வரவச்சிட்டே இல்லை.." என்றான் வலியுடன்.

அதை கண்ட ஆதவனால் தாங்க முடியாமல், "அகஸ் வேணாம் டா.. உனக்கும் ஒரு குடும்பம் வேணும்னு நினைச்சேன் டா.. ஆனா அதுக்காக நான் தப்பே பண்ணலைன்னு சொல்லலை.. அதே நேரம் அகல்யாவுக்கு எல்லா உண்மையும் தெரியும் டா உங்க கல்யாணத்துக்கு முன்னாடியே.. அப்பவே என் மனசு பரிதவிதவிச்சிது டா.. ஆனால் அவளே இதை உன்கிட்ட சத்தியம் வாங்கவும் என்னால மறுக்க முடியலை.. அந்த நேரம் நான் சுயநலக்காரனா தாண்டா இருந்தேன்.. என் நண்பனுக்கு அவன் ஆசைப்பட்ட வாழ்வு கிடைக்கும்னு நினைச்சேன்..

அதை அந்த கடவுளே அகல்யா மூலமா எனக்கு நிறைவேற்றி குடுத்தாரு.. என்ன என்னவேணாலும் சொல்லு.. ஆனா தயவு செஞ்சு உனக்கு துரோகம் செஞ்சேன்னு மட்டும் சொல்லாதடா.. வேற யாரு என்ன சொன்னாலும் என்னால தாங்கிக்க முடியும்.. ஆனா நீ அதை சொன்னா என் உயிரே போயிடும் டா.. நீ எனக்கு நண்பன் அப்படிங்கிறதை விட நீ தாண்டா என் எல்லாமே.. ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு அகஸ்.. உன்னை காப்பாத்துவேன்.. நிச்சயம் உன்னை சரி பண்ணி அகல்யா கையில ஒப்படைபேன் டா.. அதுக்கான எல்லா முயற்சியும் பண்ணிட்டு இருக்கேன் டா.." என்றான் விடா முயற்சியுடன்.

" இன்னுமா என்னை காப்பாத்துங்க முடியும்னு நம்புறே.. வாய்ப்பே இல்லை ஆதவ்.. எனக்கு எதுவும் வேணாம் யாரும் இல்லைன்னு நினைக்கும் போது நான் வாழ்ந்தேன்.. ஆனா இப்போ எனக்கே எனக்காகன்னு என் பொண்டாட்டி என் பிள்ளைங்க இருக்கும் போது நான் சாகப் போறேன்.. இல்லை ஆதவா.. ஒன்னு சொல்லவா ஆதவ்.." என்றான் ஏக்கமாக வழிந்த கண்களுடன்.

அவன் என்ன சொல்ல போகிறானோ என்ற பயத்தில் மனம் நடுங்க நின்றவனை கட்டிக் கொண்ட அகஸ்டின், "எனக்கு வாழனும் போல இருக்கு ஆதவ்.. என் கண்ணம்மா பசங்களோட.. உங்களோட.. இந்த ஆறு மாசம் நான் வாழ்ந்த வாழ்க்கை தாண்டா எனக்கு பொக்கீஷம் டா.. எனக்கு திரும்பவும் அந்த வாழ்க்கை வேணும் ஆதவ்.. என் கண்ணம்மாவோட அன்பிற்குரிய பழையபடி நான் வாழனும்டா.. எனக்கு அந்த வாழ்க்கை கிடைக்குமா ஆதவ்.." என்றான் கண்களில் கண்ணீருடன்.

ஆதவன் பதில் சொல்வதற்கு முன்பாகவே, "நிச்சயம் வாழ்வோம் மாமூ.. நம்ம பசங்களோட நம்ம வாழ்க்கை சந்தோஷமா இருக்கும் மாமூ.. உங்க பசங்களோட நீங்க ரொம்ப நாள் சந்தோஷமா வாழ்வீங்க மாமூ.." என்றபடி ரூபினியின் தோளில் சாய்ந்த படி அங்கு வந்தாள் அகல்யா.

தன்னவள் குரலில் திடுக்கென திரும்பிய அகஸ்டின் அங்கே நிற்க முடியாமல் தன் முழுபாரத்தையும் ரூபினியின் மேல் சாய்ந்தபடி நின்ற அகல்யாவை பார்த்ததும் நொடியும் தாமதிக்காமல் ஓடி சென்று அவளை அள்ளி எடுத்தவன் அங்கேயிருந்த படுக்கையில் படுக்க வைத்தான் அகஸ்டின்.

"ஏன் கண்ணம்மா இப்படி முடியாத நேரம் எழுந்து வந்த.. உன்னால உடம்புக்கு முடியலை இல்லை டி.." என்றான் அவள் கண்ணத்தை மென்மையாய் பிடித்துக் கொண்டு.

நீங்க வந்துட்டிங்கன்னு என் உள்ளுணர்வு சொல்லுச்சி மாமூ.. அண்ணி உங்களை வர சொல்றேன்னு தான் சொன்னாங்க.. ஆனா என்னால தான் அவ்வளவு நேரம் தாக்குபிடிக்க முடியாதுன்னு வந்துட்டேன் மாமூ..

" எனக்கு உங்களை பாக்கனும் மாமூ.. பத்து நாளைக்கு மேல ஆச்சி மாமூ உங்களை பாத்து.. அது தான் வந்துட்டேன்.." என்றாள் வலியை தாங்கியபடி.

" பாப்பு.. பாப்பு.. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை டி.. ஆனா உன்னோட இந்த காதல் கான கிடைக்காதததுடி.." என்றபடி அவளை அணைத்துக் கொண்டான்.

அவர்கள் இருவருக்கும் தனிமையை கொடுத்து விட்டு அவர்களை பார்த்து சிரித்தபடி ஆதவனும் ரூபினியும் வெளியேறினார்கள்.

அகல்யாவுக்கு இனி அவர்கள் துணை தேவையில்லை.. அது தான் அவளை காக்கும் மந்திரம் வந்து விட்டதே.

தன்னவனை விடாமல் இறுக அணைத்துக் கொண்டவள் அவனின் மார்பில் தலை சாய்த்து நிம்மதியாய் தூங்கி போனாள்.. பத்து நாளாய் தூங்காமல் அவனுக்காக அகமும் புறமும் தவிக்க காத்திருந்தவள் இதோ அவன் வந்ததும் தூங்கி விட்டாள் நிம்மதியாக.

அவள் என்னவோ நிம்மதியாய் தூங்கி விட்டாள் தான்.. ஆனால் ஆடவனின் மனம் தான் அவளின் நிம்மதியில் தூக்கம் தொலைத்து நின்றான்.

அவளை மெதுவாக கட்டிலில் படுக்க வைத்தவன் தானும் அவளுடனே அவளை அணைத்தபடி படுத்து விட்டான்.


இனி என்ன நடந்தாலும் சரி தன்னவர்களை விட்டுச் செல்லக்கூடாது என்ற எண்ணம் அவன் மனதில் ஆழமாய் பதிந்து போனது.

மறுநாள் அகல்யாவை அழைத்துக் கொண்டு அனைவரும் வீட்டிற்கு சென்றனர்.. அகஸ்டினை பார்த்த பிள்ளைகள் இருவரும் அப்பா என ஓடி வந்து அவனின் காலை கட்டி கொண்டனர் அழுகையுடன்.

அவனும் அவர்களை ஆரத் தழுவி கொண்டான்.. அவர்களை இத்தனை நாளாய் பார்க்காமல் அவனும் அல்லவா பிணமாய் இருந்தான்.

ஆதவனும் ரூபினியும் கொஞ்ச நேரம் இருந்து விட்டு பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சென்றனர்.

ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத அகல்யாவை வைத்துக் கொண்டு பிள்ளைகளையும் கவனிக்க முடியாது என்பதால் நாளை கொண்டு வந்து விடுவதாக அவர்களை அழைத்து சென்று விட்டனர்.

அங்கே ஆரா இருப்பதால் பிள்ளைகளும் அவர்களுடன் சென்று விட்டனர்.

எல்லோரும் சென்றதற்கு பின்பு தன்னவளுக்கு சாப்பிட கொடுத்தவன் அவளுக்கு தேவையான மாத்திரையை கொடுத்து விட்டு தானும் அவளுடனே சேர்ந்து சாப்பிட்டு விட்டதால் அவளுடனே படுத்து விட்டான்.

தன்னருகில் படுத்தவனின் மார்பில் தலை சாய்த்து படுத்தவள் அவன் மார்பிலே முத்தமிட்டாள்.

அவளின் ஈர உதடுகள் பட்டதும் ஆணவனின் தேகமெங்கும் மின்சாரம் பாய்ந்தது.

"பாப்பு.." என்றான் மென்மையாய்.

"சொல்லுங்க மாமூ.." என்றாள் கண்களை மூடியபடி.

"என்னை பத்தி எல்லாமா தெரிஞ்சும் ஏன்டி என்னை கல்யாணம் செய்துக்கிட்டே.. ஹேய் நான் தப்பா கேட்கலை அம்மு.. ஏற்கனவே உன் வாழ்க்கை பாதியில முடிஞ்சிடுச்சி.. ஆனா திரும்பவும் அப்படி முடியும்னு தெரிஞ்சும் ஏன்டி என்னை கல்யாணம் செஞ்சுகிட்ட.. ஏன் அம்மு இப்படி பண்ண.." என்றான் வலியுடன்.

"ம்ம் தெரியும் மாமூ.. நம்ம கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி.. உங்களோட உடல்நிலை பத்தி நீங்க சொன்னதுக்கு அப்புறம் எனக்கு முழுசா எல்லாம் தெரிஞ்சிக்கனும்னு தோனுச்சி.. நீங்க ஆபிஸ் போனதுக்கு அப்புறம் அண்ணாகிட்ட சொல்லிட்டு தான் போனேன்.. அங்கே தான் மாமூ எல்லாமே தெரிஞ்சிது.. மனசு தாங்கலை.. ரொம்ப யோசிச்சேன்.. அப்புறம் அண்ணன்கிட்ட கூப்பிட்டு பேசுனேன்.. அப்பவே எனக்கு தெரியும் உங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு.. அப்படி தெரிஞ்சிருந்தா நீங்க எங்க வாழ்க்கைக்குள்ள வந்துருக்க மாட்டீங்க.. என்னைக்கு நீங்க என் வாழ்க்கைக்குள்ள வந்தீங்களோ அப்பவே உங்களை தெரியும் மாமூ..

எனக்கு அந்த நேரம் நீங்க தான் முக்கியமா தெரிஞ்சீங்க.. நீங்க எதிர்பார்த்த குடும்ப வாழ்க்கையை உங்களுக்கு குடுக்கனும்.. உங்க அம்மா பாசத்தை கொடுக்கனும்.. அதுமட்டுமில்லாம.." அவனின் முகத்தை பார்த்தவள் தன் கைகளை அவனின் கண்ணத்தில் வைத்து அழுத்தி அவன் கண்களோடு தன் கண்களை கலக்கி விட்டு,

"உங்க பசங்களை உங்ககிட்ட சேக்கனும் மாமூ.. அதுக்காக தான்.." என்றவள் முழுசாய் முடிக்க முடியாமல் அவனின் மார்பில் மீண்டும் தலை வைத்து படுத்தவளின் முதுகு குலுங்கியது.

அதுவே அவள் அழுகிறாள் என்று தெரிந்தாலும் அவள் கூறிய விஷயம் அவனுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.. அதிர்ச்சியில் அவள் முகம் பார்த்தவன்,

"கண்ணம்மா.." என்றான் பரிதவிப்புடன்.

அவளோ அவனின் வாயை தன் விரல்களால் பொத்தியவள் அவனை இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள்.. அதில் அவள் உடல் நடுங்கியதை ஆடவன் உணர்ந்து கொண்டான்.



நிழலை வருடும் நிஜம் தொடரும்..🌹


அடுத்த பகுதியில் பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு லைக் கமெண்ட் பண்ண பட்டூஸ்க்கு நன்றி.