அத்தியாயம் -03
ராமகோபாலன் பெண் பார்க்க வந்திருக்கிறார்கள் என்று கூறவும், அதிர்ந்து நின்றாள் வீணா.
' இது அவனுக்கு தெரியுமா ?'என்று சிந்திக்க,' அவனுக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ?' என்று ஒரு புறம் பதறியது அவளின் மனம்.
"என்ன முழிச்சுண்டு இருக்க?, சீக்கிரம் ரெடி ஆகி வான்னா வாயேன்!, அவா எல்லாம் காத்துண்டு இருக்கா , நீ என்னடான்னா கேள்வியா கேட்டுண்டு இருக்க?" என கடுப்பாய் கூறிவிட்டு அவன் நடுக்கூடத்திற்குச் சென்று விட்டான்.
வீணா அறைக்குள் சென்றவள், அப்படியே சரிந்தமர்ந்து விட்டாள்.
' இன்னும் என்னவெல்லாம் இருக்கிறதோ?' என்று வேதனை கொண்டவள் தன் தந்தையின் நினைவுகளில் அமிழ்ந்தாள்.
காயத்திரி மீண்டும் சிடுசிடுப்புடன் உள்ளே வந்தாள்.
" இன்னுமா தயாராகல நீ ?"என்று கேட்க,
"மன்னி இதெல்லாம் வேண்டாம் !"என்று பாவமாய் கூற,
"ம்ம்க்கும், நேக்கும் அப்படித்தான் தோணறது, ஆனா நான் என்ன செய்யறது?, வந்தவாளை வேணும் னா அப்படியே துரத்திடலாமா?? உன் அண்ணாவோட கௌரவம் எல்லாம் நீ வெளியே வர்றதில் தான் இருக்கறது " என்று கடு கடுக்க
"மன்னி அவாளுக்கு தெரிஞ்சுட்டா என்ன ஆகும்னு தெரியுமோன்னோ..?" என்று கேட்க ,காயத்ரியின் முகம் ஒரு நொடி அதிர்ந்து பின் இயல்பாகியது.
"அதெல்லாம் உன் அண்ணா பாத்துப்பார். நோக்கு ஏன் இந்தக் கவலை எல்லாம்?" என்றவள் ,"புடவையை மாத்தேன் வீணா!" என்றாள் சலிப்பாக.
"இல்ல மன்னி மாட்டேன்" என பிடிவாதமாக நிற்க,
காயத்ரியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
"உன் தோப்பனார் வார்த்தை எல்லாம் அவரோட போயிடுத்து அப்படித் தானே...?!, அவர் மேல இருந்த பாசம் எல்லாம் வேஷம் இல்லியா ...?"வார்த்தைகளை நஞ்சில் தோய்த்த அம்பாய் விடுத்தாள் காயத்ரி.
"மன்னி...!!" என்று அலறியவளை ஏளனத்துடன் பார்த்து விட்டு," அவா பேர்ல நோக்கு உண்மையான அன்பு இருந்தா வந்து சபையில நில்லு." என்று அழுத்தமாக சொல்ல, வீணா மனதை கல்லாக்கிக் கொண்டு வெளியே வந்தாள்.
சத்யநாராயணன் முகமெல்லாம் சிவந்து வீணா வரும் வழியை எதிர்பார்த்து நோக்கியிருந்தான்.
வீணா காயத்ரியால் அழைத்து வரப்பட்டாள் . முகத்தில் அருளே இல்லை அவளுக்கு.
"பொண்ண நல்லா பார்த்துக்கோ நாராயணா... தங்கவிஹ்ரகமாட்டம் இருக்கா. நோக்கு அதிர்ஷ்டம் தான் போ" என்று இடிஇடியென சிரித்து அந்தப் பெண்மணி சொல்ல , வீணாவிற்கு எரிச்சல் மண்டியது.
"ஏன்டி மா வீணா ஒரு கீர்த்தனை வாசிக்கப்படாதோ...? ,காயூ நீ போய் அவ வீணையை எடுத்துண்டு வாயேன். என் புள்ளையாண்டானுக்கு ஆர்வம் பொங்கறது!!" என்று அந்தப் பெண்மணி மீண்டும் சிரிக்க
"இதோ மாமி !"என காயத்ரி தனக்குள் கனன்ற ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு கூற
"மன்னி நேக்கு கையில அடி பட்டிருக்கு" என்று இரு விரல்களையும் எடுத்துக் காட்டினாள்.
சத்யநாராயணன் பதறி விட்டான். உடனே எழுந்து அவளிடம் ஓடியவன்," கையைக் காட்டு வீணா, கவனமே இல்லை நோக்கு. வீணை வாசிக்கறவளுக்கு அக்கறை வேணாமோ...?!, இப்படியா அலட்சியமா இருப்ப, வா டாக்டர் கிட்ட போகலாம்" என்று கையைப் பிடிக்கப் போகவும், சட்டென்று இழுத்துக் கொண்டாள். அவனைத் தொட அனுமதிக்கவில்லை வீணா.
"இல்லை வீணா நோக்கு ..."என்று தயங்கியவனிடம்," நான் மருந்து போட்டுண்டேன் மன்னி, நேக்கு அசதியா இருக்கறது, நான் உள்ளே போறேன்" விடுவிடுவென்று திரும்பி நடந்து விட்டாள்.
காயத்ரி உள்ளூர நிம்மதியடைந்தாள் என்றால் ராமகோபாலனுக்கு கோபம் கனன்றது.
"சரி சரி விடுங்கோ , அவளும் கச்சேரி அது இதுனு அசந்திருப்பாளாக்கும். நீங்க மத்த காரியங்களை பேசுங்கோ" என்று சத்யனோடு வந்த பெரியவர் துவங்க ராமகோபாலனின் அத்திம்பேர் உள்ளே வந்தார்.
வந்திருக்கும் கூட்டத்தை கவனித்து விட்டு ராமனை கேள்வியாக நோக்க அவனோ எவ்வித தயக்கமுமின்றி பேசினான்.
நம்ம வீணாவை பெண் பார்க்க வந்திருக்கா அத்திம்பேர். மாப்ளைக்கு ஐடி ஃபீல்ட். வீணாவோட இசைக்கு பயங்கர விசிறி என பெருமிதம் போல சொல்லி முடித்தவனை முகமாறுதல் இன்றி பார்த்தார் அவர்.
எவ்வித பேச்சும் தற்போது வேண்டாம் என அமைதிக் காத்தாலும் ருத்ரனுக்கு தகவல் சென்று சேரும்படி பார்த்துக் கொண்டார்.
************
ருத்ரன் அக்னிபிழம்பாய் அமர்ந்திருந்தான்.
"நீ சொல்றது நிஜமாடா...?"குரல் கற்பாறை போல இருந்தது அவனுக்கு.
"நிஜம் தான்ண்ணா... ஸ்ரீனிவாச சாஸ்திரிகளோட பையனாம், பேரு சத்யநாராயணன் சென்னை ஓஎம்ஆர் ல ஏதோ ஐடி கம்பெனியில் ப்ராஜெக்ட் மேனேஜராம். லட்சத்தில் சம்பளமாம். அண்ணியோட மியூசிக் ல" என்று தயங்க ருத்ரன் நேராக அமர்ந்தான்.
"சந்துரு வண்டியை எடு" என்று எழுந்து நின்று நெட்டி முறித்தவன்," கோபாலனுக்கு கொஞ்சம் ஆக்ஷன் சீக்குவன்ஸ் காட்டணும் "என்றான்.
சந்துரு உற்சாகமாக," இதோ ண்ணா!!" என வாசலுக்கு ஓடியவன், திரும்பி வந்து," அப்படியே நம்ம அம்மாவையும் "என்று தயங்கினான்.
"டேய் இப்போ போறது ப்ளாக்மெயிலுக்கு பொண்ணு பார்க்க இல்ல" என்று கூறியவன் ,"அநேகமாக நமக்கு அந்த சீன் கிடையாதுன்னு நினைக்கிறேன் டா சந்துரு "என்றபடி நடக்க," அதுசரி !"என்று தலையாட்டிக் கொண்டான் சந்துரு.
*************
வீணாவை பெண் பார்த்து விட்டு கிளம்பி இருந்தனர்.
வீணாவிற்கு தலை எல்லாம் வலித்தது. இன்னும் என்னவெல்லாம் இருக்கிறதோ என்று நொந்து போனாள்.
'
யாரிடம் தன் வேதனையை சொல்லுவது?' என்றே புரியவில்லை அவளுக்கு.
'சமரா!
ஏதாவது செய்யேன் 'மானசீகமாக கேட்டுக் கொண்டாள்.
அவளின் குரல் அவனுக்கு கேட்டதுவோ....அங்கே வந்து விட்டிருந்தான் ருத்ரசமரன்.
ஜீப்பில் இருந்து இறங்கியவன், கண்ணாடியை கழற்றி சட்டை பட்டனுக்கு நடுவில் கோர்த்தான்.
"
கண்ணாடியை கழட்டறதுல கூட ஸ்டைலா தான் பண்ணுவாரு!" என்று சந்துரு முனக
"
ஏதாவது சொன்னீயா ?"என்றான் அடிக்கண்ணால் பார்த்தபடி.
"
ஒரே வெயிலுன்னு சொன்னேன் ண்ணா!" என்று சந்துரு பம்ம
"
பயம் விட்டுப் போச்சு உனக்கு. இருக்கட்டும் பார்த்துக்கிறேன்" என்றபடி வீட்டினுள் நுழைய, காயத்ரி கதவை சாத்த வந்தவள் ,"ஏன்னா... யாரோ வந்திருக்கா...! யார் நீங்க? என்ன வேணும் ?"என்று கேட்க
"
வீணாசாத்விகா...!"
"
ஓஓஓ அவளோட ஃபேனா... மேடம் பிஸிப்பா ஆறு மணிக்கு மேல வாங்கோ" என்று சொல்லவும்
"
ஃபேனும் இல்ல, ஏசியும் இல்ல வழிய விடுறேளா !?"என்று முறைத்தபடி உள்ளே நுழைந்து விட்டான்.
"
சித்த நில்லுங்கோ என்ன அராஜகம் பண்றேளா...?வெளியே போங்கோ முதல்ல, நாங்க ஆச்சாரமான குடும்பம்" என்று பின்னாலேயே ஓடினாள் காயத்ரி.
"
நீங்க ஆச்சாரமான குடும்பம் னா ,நாங்க பேஜாரான குடும்பம் அமைதியா இருக்கல கழுத்து திருப்பிக்கும்" என்று மிரட்ட
"
என்ன அராஜகம் பண்றேளா? ஏன்னா உள்ள என்ன பண்றேள்...? , இங்க பாருங்கோ ரௌடியாட்டம் தெரியறது "காயத்ரி கூச்சல் போட்டாள்.
ராமகோபாலன் விடுவிடுவென்று வெளியே வந்து விட்டான். கூடவே அவனது அத்திம்பேரும் வந்து நின்றார். அவர் ருத்ரனைக் கண்டு நிம்மதியடைய அவனோ சாவகாசமாக வந்தமர்ந்தான்.
ராமகோபாலனோ, " யார்
நீ?, ஏன் வந்தாய் ?வெளியே போ முதல்ல "என்றவன் தன்னை நிதானித்தான்.
"முடியாது" என சட்டமாய் கூறிட
வெளியே ராமகோபாலன் கத்தும் சத்தம் கேட்டது. வீணா ருத்ரனைக் கண்டு உள்ளூர நிம்மதியடைந்தாள். அந்த நிம்மதி பரவிய முகத்தை அவனிடத்தில் காட்டி இருக்கலாம். ஆனால் தன் உணர்வுகளை தன்னுள்ளேயே மறைத்து விட்டாள்.
"
யார் நீங்க எதுக்கு அராஜகமா ஆத்துக்குள்ள வர்றேள்?" என்று ராமகோபாலன் எகிற
"
ப்ப்ச் சும்மா நடிக்காதடா நான் யார் னு உனக்குத் தெரியாதா?, அண்ணனும் தங்கையும் நல்லாவே நடிக்கீறிங்க... சாத்விக்கு மாப்ளை பார்க்க நீ யாரு?" என்றான் எடுத்த எடுப்பிலேயே.
"
நீங்க யாரு நேக்குத் தெரியாது "என்றான் கோபாலன் பொய்யென தெரிந்தும்.
"
நான் யார்னா... ஏன் உனக்குத் தெரியாதா ?"என புருவமுயர்த்திக் கேட்டவன் ,"சாத்வி எனக்கானவ அவளுக்கு கல்யாணம் பண்றேன் ,கச்சேரி வைக்கிறேன் னு ஏதாவது பண்ண குடும்பத்தோட தூக்கிடுவேன் புரியுதா?!" என்று எச்சரித்தான்.
"இதோப் பாருங்கோ நீங்க மிரட்டினா பயந்துண்டு போக நான் ஒண்ணும் எல்கேஜி குழந்தை இல்லையாக்கும். ஐம் போஸ்ட் க்ராஜுவேட்... **** கம்பெனி ல டீசண்ட் போஸ்டிங்கில் இருக்கறவன். எங்காத்துல வந்து நெஞ்சை நிமிர்த்திண்டு பேசினா பயந்துடுவேன்னு நினைப்போ... நீங்க முதல்ல ஆத்தை விட்டு வெளியே போங்கோ "என்று சத்தம் போட்டான் ராமகோபாலன்.
எதிரில் இருந்தவனோ எதற்கும் அசைந்து கொடுத்தானில்லை.
"இப்போ வெளியேப் போறேளா...! போலீஸை கூப்பிடவா...? அத்திம்பேர் பார்த்துண்டே இருக்கேளே ஏதானும் சொல்லுங்கோ... !?"என அருகில் இருந்த நபரையும் துணைக்கழைத்துக் கொண்டான் அவன்.
எதிரில் இருந்தவன் பார்வையில் கிஞ்சித்தும் மாற்றமில்லை.' நீ யாரை வேண்டுமானாலும் கூப்பிடு 'என்பது போல அழுத்தமாக அமர்ந்திருந்தான்.
"சொல்லிண்டே இருக்கேன், உன் நோக்கத்திற்கும் ஜடமாட்டம் உட்கார்ந்து இருக்கியே ?!"என்று அதட்டியவன் தொலைபேசியில் 100 ஐ அழுத்த போனான்.
"ஹேய்!!" என்றவன் இணைப்பைத் துண்டிக்கும்படி சைகை காட்ட, ராமகோபாலன் அசரவில்லை. அழைப்பை விடுக்க எண்ணை அழுத்தி விட்டான். அடுத்த நொடியே தொலைபேசி சுக்கு சுக்காய் உடைந்திருந்தது.
"ஹேய்! அராஜகம் பண்ணறியா...?"என்று அவனிடத்தில் பாய
"ஏய் !மூச் பேசக் கூடாது" என்று எச்சரிக்கை விடுத்து," மறுபடியும் வருவேன். வரும் போது... "என்று அவன் நிறுத்திய தொனியிலேயே ராமகோபாலனால் அத்திம்பேர் என அழைக்கப்பட்டவர்," நீங்க போங்கோ நான் எல்லாம் சுபமா முடிச்சு தரேன்" என்று இறைஞ்சும் தொனியில் பேசி அனுப்பி விட்டார்.
"ம்ம்ம் !"என்றவன், அங்கிருந்து சென்று விட்டான்.
அவன் சென்ற நொடியில் அவள் வெளியே வந்து நின்று பெருமூச்சு விட்டாள்.
சட்டென்று உள்ளே வந்தவன்," ருத்ரன் கிட்ட அவ்வளவு பயமா சாத்... இதுவும் நல்லா தான் இருக்கு "என்று சிரித்தவன் அங்கிருந்து சென்று விட்டான்.
"
அண்ணா !"என்று ராமகோபாலனை சாத்வி அழைக்க," இப்போ நோக்கு சந்தோஷமா...? நீ சொல்லாம அவன் எப்படி வந்தான்?, என்ன எல்லாம் மறந்துடுத்தா ...நேக்கே துரோகம் பண்ண பாக்குறல்ல நீ "என்று கத்த சாத்வி வாயை மூடிக் கொண்டு கதறியவள்," இல்லண்ணா நான் கூப்பிடலை அவர. நேக்குத் தெரியாதுண்ணா அவர் எப்படி வந்தார் னு தெரியாதுண்ணா "என்றாள்.
"
அப்படியே பசப்பாதே நீ சொல்லாம தான் அவன் வந்தானாக்கும். உன் கச்சேரி ஒண்ணு விடாம வந்து பாக்குறான். நீ சொல்லாமலா...?" என்று கத்தினாள் காயத்ரி.
"
இல்ல மன்னி நான் அவரண்ட பேசினது என்ன பாக்கறது கூட இல்லை, மன்னி நம்புங்கோ."என விசும்பினாள்.
"
கோபாலா நீ செய்றது ரொம்ப தப்பு. வீணாவை நீ கஷ்டப்படுத்தற!" என்று அத்திம்பேர் திட்ட
"
ஒங்க குடும்ப விவகாரத்தை நாங்க பேசினோமா மாமா. நீங்க ஏன் எங்க வீட்டு விவகாரத்தில் தலையிடுறேள்?. வந்த வேளை முடிஞ்சுட்டா கிளம்புங்கோ" என்று பட்டென்று கூறி விட்டாள் காயத்ரி.
"
ஆத்துக்கு வந்தவாளை தூக்கி எறிஞ்சு பேசறியே இது தான் நாகரீகமா...? இதோ பாரு கோபாலா... நீ நடந்துக்குற முறை எதுவும் சரியில்லை அதுவும் வீணா விஷயத்தில் நீ ரொம்ப தப்பு பண்ற... இது நல்லதுக்கே இல்லை. பணம் உன் கண்ணை மறைக்கறது கோபாலா" என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டார்.
போகும் போது வீணாவை பார்த்தவர் ,"இந்த குடும்பத்தை முழுசா தெரிஞ்சுண்டவன்ற முறையில் சொல்லறேன் வீணா. நீ இவா பேச்சை கேட்காதே" என்று கூறி விட்டு போய் விட்டார்.
வீணா தளர்ந்து அமர்ந்து விட்டாள்.
'
இனி என்ன செய்வேன்... ருத்ரன் வேண்டும் என்ற மனதை எப்படி தெளிவு செய்வேன். காதலுக்காக தந்தையின் அன்பை வளர்ப்பை மறப்பதா?' அவளுக்குள் விவாதம் நடத்தியே ஓய்ந்து போனாள்.
நெஞ்சம் நிலையில்லாமல் தவிக்க, எல்லாவற்றையும் மறந்து இருக்க முடிவு செய்தவளாய் வீணைகளின் இருப்பிடத்திற்குள் நுழைந்தாள்.
வீணையை மடியில் வைத்து அமர்ந்தவளுக்கு ஸ்வரம் பிடிபடவில்லை. தாளம் தப்பியது இதயத்தை போலவே. மூளை செயலற்று நின்றது. மாமி மாமி என்று உள்ளூர ஆர்ப்பரித்தான் அவன். 'சாத் எனக்காக வாசியேன் 'கண்கள் சுருக்கி கேட்கும் அவனின் பிள்ளைமுகம் மையல் கொண்டு நிறைந்தது. வித்தைக்காரன் கண்களை மூட விட மறுத்தான். அவனை மறப்பதா அதற்கு மரித்தே போவேனா நான் மனமெங்கும் ஓலமிட்டது.
********
சாத்வியின் வீட்டில் இருந்து வந்த ருத்ரனுக்கு கோபம் மட்டுப்படவில்லை.
'
என்னைப் பார்த்து பயப்படுற அளவுக்கு நான் என்னடி செஞ்சேன்?, மறந்துட்டல்ல மொத்தமா இந்த சமரன மறந்துட்டல்ல... என் நினைப்பு இருந்திருந்தா அலங்காரம் பண்ணிட்டு வந்து நின்னுருப்பியா நீ... ஆஆஆஆ 'ஆத்திரத்தில் அலறினான்.
ஒரு வருடமா இருவருடமா கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலான காதல். கணக்கா முக்கியம் நிமிடத்துள் பூத்தாலும் நேசம் நேசம் தானே... அதை மறந்து வாழ முடியுமா... உலைக்கலனாய் கொந்தளித்த மனதை அடக்க முயன்றான். அவனை ஆற்றுப்படுத்தும் மருந்தே அவளும், அவள் இசையும் பாடலும் தானே... அவள் குரல் கேட்டால் மனது சமன்படுமா... அவளின் நினைவுகளிலேயே உழன்றான்.
காமாட்சி கதவைத் தட்டினார்.
"
சொல்லுங்கம்மா ?"வாசலில் நின்றே கேட்டான்.
"
ஏன் ருத்ரா எதுக்கு கோபமா இருக்க...?" முகத்தை வைத்தே கண்டறிந்து கேட்டார்.
"
கோபமா.. அதெல்லாம் இல்லையே!" சமாளித்தவனிடம் ,"அந்தப் பொண்ணு வீட்டுக்குப் போனீயா ?"என்றார் எடுத்த எடுப்பிலேயே.
"
இல்லை" என தடுமாறி நின்றவன்," ஆமாம்" என்று ஒப்புக் கொண்டான்.
"
ஏன் ருத்ரா இன்னும் அவமானம் தேவையா...? அவ பெரிய ஆளா ஆகிட்டா, ஏற்றி விட்ட ஏணியும் தெரியல காதலிச்ச உன்னையும் அவளுக்கு கண்ணுக்கு தெரியல. புகழ் போதை கண்ணை மறைக்குது, அது காதலையும் அழிச்சுடுச்சு ருத்ரா புரிஞ்சுக்கோ உனக்கு பொண்ணு பார்த்திருக்கேன் சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு நல்லபடியா இரு" என்றார்.
"
கல்யாணமா...? எனக்கு வேற பொண்ணு கூடவா??" எள்ளலாக வினவியவனை சற்று திடுக்கிடலுடன் பார்த்தார் காமாட்சி.
"
அந்தப் பொண்ணே கல்யாணம் பண்ணிக்க தயார் ஆகிட்டா ருத்ரா... நீ ஏன் தனியா இருக்கணும்?" என்று எரிச்சலுடன் கேட்க
"
எனக்கு சாத்வி வேணும்...எதுக்காகவும் யாருக்காகவும் அவளை விட்டுத்தர மாட்டேன். புரிஞ்சுதா?!" என்று அலறினான்.
"ருத்ரா... ?!"
"
அம்மா கிளம்புங்க" என்று கூறி விட்டான் பட்டென்று.
சாத்விகா தனக்கு இல்லை என்பதை அவன் எந்த விதத்திலும் ஏற்க தயாராக இல்லை.
...... தொடரும்

Last edited: