• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நினைக்க மறந்தாய் நெஞ்சாத்தியே -05

kkp37

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 3, 2023
Messages
14
அத்தியாயம் -05

வீணாவின் முகமே வீங்கிப் போயிருந்தது. அத்தனை அழுகை. தன் அன்னை தந்தை இறந்ததற்கு காரணம் சூழல் என்று தெரிந்தாலும் அவனை வதைக்கவே வார்த்தைகளே விட்டிருந்தாள் . 'அவன் விலகிப் போவான் பக்கம் வர நினைக்க மாட்டான்' என்று எண்ணியிருந்தாள். ஆனால் அவள் நினைத்தது தவறென்று சிந்திக்க வைத்துவிட்டான் அடுத்த நொடிதனில்.

சில நொடி நிலவிய மௌனம் நிம்மதியடைந்த அவளைக் கண்டு கெக்களித்தது.

"இப்படி எல்லாம் பேசினா உன்னை விட்டுட்டு போயிடுவேன்னு நினைச்சியா சாத்?" மீண்டும் இணைப்பில் வந்தவன் ஓங்கரித்து சிரித்தான்.

"எனக்கு வேறொருத்தர் கூட நிச்சயம் ஆகிடுச்சு" என்றாள் அறிவிப்பாக.
"ஸோ வாட்... நான் விலகிப் போகணும் உனக்கு ,அவ்வளவு தானே...?!, அதுக்குத் தானே போராடுற ஹ்ம்ம் விலகிட்டேன்" என்றான் அழுத்தமாக.

அவளுக்குள் நிம்மதி முகிழ்க்க கூடவே ,ஏமாற்றமும் பூப்படைந்தது. இரண்டும் ஒரு சேர கருகியது அவனது அடுத்த சொல்லாடலில்.

"உன்னை இதுவரை விலகி இருக்கணும் னு நினைச்சிருந்த அந்த எண்ணத்தில் இருந்து விலகிட்டேன் சாத்" என்றான் இதழ் வளைத்து புன்னகை சிந்தியபடி.

"ருத்ரா !"எனும் போதே," சமரா!, சமரன் சொல்லணும். நீ ருத்ரா சொன்னா ருத்ரன் தாண்டவம் ஆடிடுவான். வார்த்தையில் மடக்கப் பார்க்கறியா இந்த க்ரிமினல் லாயரை?, தொலைச்சிடுவேன் ராஸ்கல்." என்று எச்சரிக்க விக்கித்துப் போனாள் பெண்ணவள். அவனின் உறுதி அவளறிந்தது தானே...

அந்த மிரட்டல் எல்லாம் ஒரு நிமிடம் தான் அடுத்த நிமிடமே மென்மையாய் அவளிடம் பேசினான்.

"சாப்டியாடா!" மெல்லிய குரலில் வினவவும் கேவல் வெடித்தது அவளிடத்தில். சற்று முன் கேட்ட இறுகியக் குரலா இது நம்பவே இயலவில்லை அவளால்.

"என்னால் முடியல. உணர்வுகளுக்கும், நன்றிக்கடனுக்கும் இடையில் கிடந்து போராட முடியல. செத்துடலாம் னு தோணுது"
"சாத்வி...!"என்று அதட்டினான்.
"பேச விடு.. என்னை என்ன செய்ய சொல்ற...? ,நீ வேணும் எனக்கு. ஆனா வேண்டாம்... சுழல் போல சுழன்றடிக்கறது என் எண்ணங்கள். தத்தளிக்கிறேன் முடியல" கதறி விட்டு இணைப்பைத் துண்டித்தாள்.

ருத்ரன் அமைதி காத்தான். கவனமாய் தன் பெயர் சொல்ல மறுத்தவளை நினைத்து பெருமூச்செறிந்தான்.

"அண்ணா !"சந்துருவின் குரலில் சுயம்பெற்று திரும்ப," கோர்ட்டுக்கு டைம் ஆயிடுச்சு" என்றான் மணிக்கட்டை பார்த்தபடி.

"டென் மினிட்ஸ் வந்துடுறேன்" என்றவன் ஆழ்ந்த பெருமூச்செடுத்து விட்டு எழுந்து கொண்டான். அவளின் நினைவுகள் சுழற்றினாலும், நிஜமதை எதிர்கொள்ள வேண்டும்.

சொன்னது போலவே பத்து நிமிடத்தில் தயாராகி வந்தவன்," சந்துரு கிளம்பலாம்" என படிக்கட்டில் இறங்கி வரும் போது அவனின் ஜூனியர்கள் எல்லாம் வியப்பாய் பார்த்து இருந்தனர் .
'எத்தனை பிரச்சனை வந்தாலும், என்ன துன்பம் நேர்ந்தாலும் அதை முகத்தில் காட்டாதவாறு இருக்க அவனுக்கு மட்டுமே தெரியும் போல' என்று ஆச்சரியப்பட்டனர்.

இன்று நீதிமன்றத்தில் முக்கியமான கொலை வழக்கு ஒன்று விவாதத்திற்கு வருகிறது. கொலை வழக்கில் சிக்கி இருக்கும் குற்றவாளிக்கு ஆதரவாக இறங்கியிருந்தான் ருத்ரன்.
"இன்னைக்கு வாய்தா கேக்க மாட்டாங்கள்ள, ஸ்யூரா தெரியுமா? இழுத்துட்டே போகுதுடா இந்த கேஸ் "என்று சலிப்பாக கூறியவன், கேஸ் கட்டை சந்துருவினிடத்தில் வாங்கினான்.

"தெரியலண்ணா, அவரு என்ன செய்வார்னு."
"கவர்மெண்ட் வக்கீல் .எதுவும் பேசவும் முடியவில்லை' என்றான் அவனும் சலிப்பாக

"இன்னைக்கு வாய்தா கேட்டா கண்டிப்பா நோட்டீஸ் ஒன்னு போட வேண்டியது தான், அவன் எதுவுமே பண்ணாம ஜெயில்ல இருக்கணும்னு என்ன அவசியம்?" என தனது
கிளைன்ட்டிற்காக பேசினான்.

"அண்ணா நீங்க நம்புறீங்களா நிஜமா அவன் கொலை பண்ணலைனு ?"
"நம்பறதால தான்டா ஆஜராகி இருக்கேன்" என்று பேச்சை விட்டு விட்டு காரில் ஏறினான்.
மீடியாக்கள் அங்கு சூழ்ந்திருந்தனர். இன்று தான் கடைசி விவாதம் இதன் பிறகு நீதிபதியின் முழு ஆராய்தலுக்குப் பிறகு தீர்ப்பு வந்து விடும். ஆனால் அரசாங்க வக்கீலின் இழுத்தடிப்பால் வழக்கு இழுத்துக் கொண்டே போகிறது.

"சந்துரு மீடியா இருக்காங்க. நான் பேக் சைட் போறேன் நீ சமாளிச்சுக்கோ" என்றபடி கிளம்பி இருந்தான்.

அரசாங்க வழக்கறிஞர் எதிர்பட குட் மார்னிங் சார். இந்த முறை எல்லாம் முடிச்சுடலாம்ல சார் ரொம்ப இழுத்தடிக்கிறீங்க என்றான்.
குட் மார்னிங் ருத்ரன். நான் என்ன செய்யட்டும் இறந்து போன பெண் வீட்டுல அவனை தண்டிச்சே ஆகணும்னு நிற்கறாங்க. எவிடென்ஸ் இல்ல ஏன் அந்தப் பொண்ணு மரண வாக்குமூலம் கூட அவனுக்கு சாதகமா தான் இருக்கு. ஆனாலும் கேட்க மாட்டேங்கிறாங்க ருத்ரன்.என்றவர் இந்த தடவை சரியா முடிச்சுடுறேன் என்றார்.

வழக்கம் போல இந்த முறையும் வழக்கை ருத்ரன் தான் ஜெயிப்பான் என்று அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர் அவர்களின் ஆவலை பொய்யாக்காமல் வெற்றி பெற்றிருந்தான்.
அனைத்துமே ருத்ரனுக்கு சாதகமாகத்தான் அமைந்தது . குற்றவாளி என குற்றம் சுமத்தப்பட்டவன் நன்றி பெருக்குடன் ருத்ரனைக் காண அவனோ , ஒரு இமை சிமிட்டலில் நன்றியை ஏற்றுக் கொண்டான். தீர்ப்பு வரும் போது ருத்ரனிடம் ஒரு மெல்லிய புன்னகை மட்டுமே.
"வாழ்த்துக்கள் ருத்ரா.பிரமாதமா வாதாடின. "என்று அரசு தரப்பு வக்கீல் கைகுலுக்கி வாழ்த்த அவனோ," சாரி சார் கோர்ட்டில் கொஞ்சம் அதிகமாக எதிர்க்க வேண்டியதா போயிடுச்சு" என்றதும்," இதெல்லாம் சகஜம் மேன். எனிவே ட்ரீட் வச்சிடு" என்றார் சிரிப்புடன்.
"என்ன வேணும் னு கேளுங்க சார் செஞ்சிடலாம்" என அவன் சொல்ல ,
"கேட்ட பின்னே முடியாது னு சொல்ல மாட்டியே?" என்று மர்மமாய் புன்னகைத்தபடி கேட்க
"அப்போ எங்க அண்ணா கிட்ட ஏதோ வில்லங்கமா கேட்கப் போறீங்க !,அப்படி தானே சார் ?!"என்றபடி சந்துரு வர
"படவா கரெக்ட்டா பாயிண்ட் பிடிக்கறியா நீ" என்றவர் ," சந்துருவை என் வீட்டு மாப்பிள்ளை ஆக்கிடு ருத்ரா" என்றார் கிண்டலாக.
"என்னடா அவர் வீட்டுக்கு மாப்பிள்ளையா போயிடுறியா ?"என்று கிண்டல் செய்ய," அண்ணா!" என்று சிணுங்கினான் சந்துரு.
"சார்....!"என இரண்டு கைகளையும் மேலே தூக்கி கும்பிட்டவன்,"என்னை விட்டுடுங்க சார். உங்கப் பொண்ணு கிட்ட போன் முறை வாங்கின அடியே இன்னும் லெஃப்ட் காது லைட்டா கேட்க மாட்டேங்குது" என்று சிரித்தான்.
"உன்னை யாருடா அவ கிட்ட கன்னத்தை கொடுக்க சொன்னது?" என்றபடி," சரி வரேன் ருத்ரா.என் பொண்ணு ஷார்ப்பா நாலு மணிக்கு மால் வரச் சொன்னா" என்று விடைபெற்று கொண்டார்.
அண்ணா பத்து வயசு பொண்ணுக்கு மாப்ளை பார்க்கிறதை பார்த்திங்களா விட்டா இப்பவே என்னை தூக்கிட்டுப் போயிடுவார் போல என்று சிரிக்க ருத்ரனும் அவனது சிரிப்பில் கலந்து கொண்டான்.
"சரி சரி வா!!" என்று சிரித்தபடி செல்ல போகும் வழியில் கண்ணில் பட்டது வீணாவின் பேனர்.
பிரபல மஹாலில் இன்று கச்சேரி என்று அறிவிக்கப் பட்டிருந்தது. இடம் நேரம் எல்லாம் குறிப்பிடப்பட்டிருக்க அமைதியாக அதைப் பார்த்தபடி பயணித்தான்.
"அண்ணா டிக்கெட் வாங்கிட்டேன்" என்று சந்துரு அவன் மனம் அறிந்தது போல கூற
"இன்னைக்குப் போகல சந்துரு . வண்டியை திருவான்மியூர் பீச்சுக்கு விடு "என்றான்.

"அண்ணா !,அண்ணி உங்களைத் தேடுவாங்க "என்று உள் வாங்கிய குரலில் அவன் கூற
"ப்ப்ச். ஐ க்நோ டா , பட் நான் போனா அவளால இன்றைக்கு வாசிக்க முடியாது" என்று நெற்றியை கீறிக் கொண்டான்.
"அண்ணா ஒண்ணு கேட்பேன் திட்ட மாட்டீங்களே ?"என்று தயக்கமாக கேட்க
"என்ன கேட்கப் போற இவ்வளவு லவ் பண்றீங்களே அப்புறம் பிரிஞ்சு இருக்கீங்க னு தானே ?!"என்றான் கண்களை மூடியபடி.
"அண்ணா ! எப்படிண்ணா?" சந்துரு வாயைப் பிளக்க," என் கிட்ட அடிக்கடி எல்லாரும் கேட்கிற கேள்வி" என்றான் சலிப்பாக
"உங்களுக்குள்ள என்ன பிரச்சினை னு தெரியாது அண்ணா . ஆனா நான் பார்த்த வரை அண்ணியும் உங்களை தேடறாங்க, நீங்களும் அவங்களை மிஸ் பண்றீங்க னு புரியுது "என்று முடித்து கொண்டான் சந்துரு.

'அதற்கு மேல் அவர்களின் சொந்த விஷயத்தில் தலையிட எவருக்கும் உரிமை இல்லை' என்று உணர்ந்திருந்தமையால் வாயை திறக்கவில்லை.
காற்றைக் கிழித்துக் கொண்டு மகிழுந்து பயணிப்பது போல அவன் நினைவுகளும் உணர்வுகளை கிழித்தபடி பின்னோக்கி பயணித்தது.
தரணி போற்றும் தஞ்சையில் ஒரு சிறு கிராமம் பச்சையும் இளமஞ்சளும் கலந்த பட்டாடை போர்த்தியது போல பசுமையாக இருந்தது தண்டாங்கோரை கிராமம். ஆங்காங்கே சில மாடி வீடுகளும் அதனிடையே ஓட்டு வீடுகளும், தென்னங்கீற்று வேய்ந்த கூரை வீடும் வரிசைகட்டி இருக்கும் ஒவ்வொரு வீட்டினைச் சுற்றிலும் இளமூங்கிலால் வேயப்பட்ட வேலிகள் காம்பவுண்ட் சுவர் போல நிற்கும். தட்டியிலேயே கதவும் போட்டிருப்பார்கள். பெரும்பாலும் கருங்கல் வீடுகள் தாம் அங்கே. வெயிலாக இருந்தாலும் அவ்வளவாக வெட்கை தெரியாது. தென்னையும் நுணாவும் வளர்ந்திருக்கும் அங்கே வயல்களில் பெரும்பாலும் கத்தரிச்செடிகள் இடம் பிடித்தாலும் நெற்சாகுபடி தான் அங்கே பிரதானம்.
அனைவரும் கிராமத்தில் இருந்து சென்னைக்கு செல்வார்கள். சென்னையில் இருந்து இந்த கிராமத்திற்கு வந்திருந்தார் வெங்கடாத்ரி. ஷேஷகோபாலனின் உடன்பிறந்த தம்பி. தண்டாங்கோரை வெங்கடாத்ரியின் அன்னை பிறந்த ஊர் அது. அன்னை இறந்து விட்டாலும் அவரின் உடன்பிறப்புகளோடு சொந்தம் தொடர்ந்து கொண்டு தானிருந்தது ஷேஷாவின் குடும்பத்தினருக்கு. ஷேஷாவின் தாய்மாமன் அங்கிருந்த கோவிலில் குருக்களாக திருப்பணி செய்து வந்தார். அவரது மனைவி தவறிப் போனதால் , மச்சான் முறையில் இருந்த வெங்கடாத்ரி வரவேண்டிய சூழல் ஏற்பட்டது. பெரிதாக இதிலெல்லாம் ஈடுபாடு இல்லாவிட்டாலும், மாமாவிற்காக வந்திருந்தார் வெங்கடாத்ரி. அந்த கிராமத்தில் தான் அவரது வாழ்வும் தீர்மானிக்கப்படப் போகிறது என்பதை உணரவில்லை போல அவர்.
மேகநாதனின் குடும்பம் தான் அங்கே பெரிய குடும்பம். கோவிலுக்கு தேவையான பொருட்கள் எல்லாம் அவர்கள் வீட்டில் இருந்து தான் போய்க் கொண்டிருந்தது. ஏதேனும் இல்லையென்றால் மேகநாதனின் வீட்டிற்குச் சென்று வாங்கி வருவார். சில சமயங்களில் கோவிலுக்கு வரும் மேகநாதனின் தங்கை பொற்கொடி கொண்டு செல்வாள். இயல்பாக துவங்கிய பேச்சு வார்த்தை காதலில் வந்து நின்றது இருவரிடையே. வெங்கடாத்ரியை முதல் பார்வையிலேயே கொள்ளை கொண்டு விட்டாள் பொற்கொடி. பொற்கொடியின் வீட்டிலும் சரி ,வெங்கடாத்ரியின் வீட்டிலும் சரி பலத்த எதிர்ப்பு அவர்கள் காதலுக்கு. ஷேஷகோபாலனின் தந்தை முகத்தில் விழிக்காதே என்று ஒதுக்கி வைத்து விட்டார். வெங்கடாத்ரி அங்கேயே தங்கி பிடிவாதமாக நின்று பொற்கொடியை திருமணம் செய்து விட, மேகநாதன் தங்கையிடம் உறவை முறித்திருந்தார். தாயும் தந்தையும் வருத்தம் கொள்கின்றனர் என்ற ஒரே காரணத்தினால் தங்கையுடனான உறவை பட்டும் படாமல் தொடர்ந்தார் மேகநாதன்.

வெங்கடாத்ரி பொற்கொடியுடன் அங்கேயே வாழ, கோவில் பூஜையை தொடர்ந்து செய்து வந்தார். அவர்களின் காதலின் அடையாளமாக சாத்விகாவும் பிறந்து விட்டாள்.

சிறிது சிறிதாக இரு குடும்பத்தின் உறவும் மீண்டும் துளிர் விட , ருத்ரன் சாத்விகாவின் தோழனாகிப் போனான்.

"என் பொண்ணை பிடிக்குதா மருமகனுக்கு?" வெங்கடாத்ரி புன்னகையுடன் கேட்க

"ஹ்ம்ம் பாப்பு பொம்மை மாதிரி இருக்கா. அழகா குட்டியா... என் கூட பாப்பாவை அனுப்புறீங்களா நான் டெய்லி ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போறேன்" என்றான் ஆர்வத்துடன்.

"சர்வ நிச்சயமா நீங்க தான் அழைச்சுண்டு போகணும். பத்திரமா பார்த்துப்பேளா மாப்பிள்ளை" என்றதும் ருத்ரன் வேகமாக தலையாட்டினான்.

"என்னங்க அவனுக்கு பிடிச்சுட்டா அப்புறம் விடவே மாட்டான். நீங்க சொல்லிட்டதால இனி எல்லாம் அவனே பார்ப்பான் பாருங்க "என்றாள் பொற்கொடி பெருமிதமாக.

அப்படியே நாட்கள் நகர சாத்விகாவை பள்ளிக்கு அழைத்துச் செல்வதிலிருந்து, எழுத வைப்பது என ருத்ரன் சாத்விகாவுடன் தான் நேரத்தை செலவிட்டான்.

இதனிடையே வெங்கடாத்ரியின் தந்தை படுத்த படுக்கையாகி விட அவரைப் பார்க்க குடும்பமாய் கிளம்பி விட்டனர் வெங்கடாத்ரியின் குடும்பத்தினர்.

..... தொடரும்.
 
SarathaGanesan91

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 16, 2023
Messages
1

Top