• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிமலனின் நாயகி - 1

Vidya Gururajan

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 13, 2024
Messages
54
1. கண்டதும் காதல்!!??

"ஆனாலும் நீ இப்படி தடாலடியா பேசியிருக்க வேண்டாம்."

காருக்குள் நிலவிய அமைதியை உடைத்தார் நிரஞ்சன்.
அவருக்கு பதிலாக ஒரே ஒரு பார்வை மட்டுமே வந்தது நிமலனிடமிருந்து!

"இப்படியா நறுக்கு தெறிச்சமாதிரி சொல்லுறது! கொஞ்சம் நாசூக்கா சொல்லியிருக்கலாம். திருமுருகன் அங்கிள் நம்ம அப்பா காலத்திலேருந்து குடும்ப நண்பர். நிச்சியம் வருத்தப்பட்டிருப்பாரு." என்று நிரஞ்சன் தன் தம்பி நிமலனைக் குறை சொல்லுவதைத் தொடர்ந்தார்.

"சில விஷயங்களைக் குழப்பக்கூடாது, வளர்க்கக் கூடாது. குறிப்பா நமக்கு விருப்பம் இல்லைங்கறதைச் சொல்லுறதுக்கு யோசிக்கவும் கூடாது; தாமதிக்கவும் கூடாது. அது பல பிரச்சனைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டுடும். அதான் ஆரம்பத்திலையே முற்றுப்புள்ளி வச்சுட்டேன்."

"எனக்கு என்னவோ நீ அவசரப்பட்டு மறுத்துட்டியோன்னு தோணுது நிமலா!"

"இல்ல அண்ணே! நான் தெளிவா இருக்கேன். எனக்கும் ரேஷ்மிக்கும் செட் ஆகவே ஆகாது!"

"ஏன் அப்படி நினைக்கிற? என்னைப் பொறுத்த வரை நீங்க ரெண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதர் கபிளா இருப்பிங்க. நம்ம அந்தஸ்துக்கு, உன் படிப்புக்கு, உன் அழகுக்கு, நம்ம கம்பெனிக்கு ரேஷ்மி நல்லா செட் ஆவான்னு தான் எனக்கு தோணுது"

"கரக்ட்! ரேஷ்மி நல்ல அழகு தான். என்னைப்போலவே வெளி நாட்டுல படிச்சவ. நம்ம ரியல் எஸ்டேட் அண்ட் கட்டுமான கம்பெனிக்கு ஏத்தாப்பில அவ சிவில் இஞ்சினீயரிங்கும் எம்.பி.ஏவும் முடிச்சுருக்கா. பணத்துக்கு சொத்துக்கு குறைச்சலே கிடையாது. தெரிஞ்ச குடும்பம். எனக்கும் அவளைச் சின்ன வயசிலேருந்து தெரியும். அதுனால தான் கல்யாணம் பண்ணிக்க முடியாதுங்கறேன்"

"என்ன டா குழப்புற?"

"குழப்பல்ல அண்ணே! உங்களுக்கே தெரியும் என் ஆட்டிட்யூட், மெண்டாலிட்டி எல்லாம். எந்த பிரச்சனையுமே இல்லாத ஒன்னை என்னால ரசிக்க முடியாது. எல்லாமே இருக்குற ஒருத்திக்கு நான் ஸ்பெஷலா தெரிய மாட்டேன். அந்த லைஃப் போரிங்கா இருக்கும். எனக்கு எல்லாத்துலையும் ஒரு சேலஞ் இருக்கனும். திருமண வாழ்க்கை உட்பட. என் மனைவி எல்லா விதத்திலையும் எனக்கு நேர்மாறா இருக்கனும். வித்தியாசங்களுக்கு இடையில காதலிக்கனும். அப்படித்தான் என் விருப்பம். அதான் திரு அங்கிள் இன்னிக்கி முதல் முறையா கல்யாண பேச்சை ஆரம்பிச்ச அப்பவே எனக்கு இண்டெரெஸ்ட் இல்லன்னு ஓபனா சொல்லி முடிச்சு வச்சுட்டேன். அவங்க அடுத்த இடம் பாப்பாங்க இல்ல.."

"நீ பேசுறது பைத்தியக்காரத்தனமா இருக்கு. நல்லா பொருத்தமா இருக்குறதே பாதியில புட்டுக்கிட்டு போயிடுது..."

"அப்ப பொருத்தத்துக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்ல தானே!"

"உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது. ஒரு வேளை பேரழகியா எதிர்பார்க்குறியோ!?"

"ஹ ஹ ஹா... அப்படி எல்லாம் இல்ல. என்னைப் பொருத்த வரை எல்லா பெண்களுமே அழகு தான்."

"டேய்... சும்மா அளக்காத."

"நிஜமா தான். இப்ப நாம ஸிக்னல்ல நிக்கிறோம். சுத்தி பாருங்க.. நிறைய பெண்கள் நிக்குறாங்க. எல்லாரும் அழகாத்தான் இருக்காங்க. உதாரணத்துக்கு...." என்று சொல்லிக்கொண்டே காருக்குள் இருந்தபடியே வெளியில் கண்களை ஓட்டிய நிமலன் தன் காரில் இருந்து சில அடிகள் தள்ளி நின்ற ஒரு ஷேர் ஆட்டோவில் கதவோர சீட்டில் அமர்ந்திருந்த ஒருத்தியைப் பார்த்தான்.

"ஆ.. அந்த ஷேர் ஆட்டோவில ஒரு பொண்ணு உக்கார்ந்திருக்கா பாருங்க. அந்த பச்சை-கறுப்பு புடவை. அந்த பொண்ணு எவ்வளவு அழகு பாருங்க. மாநிறம் தான். ஆனா அளவான உயரம். ஒல்லி தான் ஆனா உறுதியா இருக்கா. ஸிம்பிளா இருக்கா. ஆனா கவனத்தை ஈர்க்குறா. கண்ணு பாருங்க பெருசா செம்மையா இருக்கு. கண்ணு கலங்கித்தான் இருக்கு. முகம் சோகமாத்தான் இருக்கு. பாக்க சோர்வா தான் இருக்கா. ஆனா எல்லாத்தையும் தாண்டி அவ அழகா இருக்கா. பாத்திங்களா!. எல்லா பெண்களும் ரசிக்கப்படக் கூடிய அளவு அழகிகள் தான்" என்று பேசி முடித்து மீண்டும் அந்த பெண்ணைப் பார்த்தான் நிமலன்.

அதுவரை படபடவென அவள் அழகை ரசித்துப்பேசியவன் அமைதியாகினான். மேலோட்டமாக அவளைப் பார்த்துப் பேசிய நிமலன் அவளின் அந்த கலங்கிய பெரிய விழிகளையும் சோகமாக இருந்த முகத்தையும் நன்றாக உற்றுப்பார்த்தான். முதன்முறையாக ஏதோ போல் உணர்ந்தான். வார்த்தைப்படுத்திட முடியாத உணர்வு அது. ஒன்பது உணர்வுகளின் பட்டியலில் இல்லாத உணர்வு அது.

அவள் வைத்த கண் வாங்காமல் அப்படி எதைப் பார்க்கிறாள் என்று தேடினான்.
அவளிருந்த ஷேர் ஆட்டோவுக்கும் இவனிருந்த காருக்கும் இடையே இரு சக்கிர வாகனம் ஒன்றில் 6 வயது சிறுமி ஒருத்தி நடுவில் அமர்ந்திருக்க அவள் அப்பா வண்டி ஓட்டும் இருக்கையிலும் அம்மா பின்னாலும் இருந்துகொண்டு அவளிடம் ஏதோ சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். தாய் தந்தையின் பாதுகாப்பில் சந்தோஷமாக இருந்த அந்த சிறுமியைத்தான் ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தாள் அந்த மாநிற பெண்!

அவளிடம் தொக்கி நின்ற சோகம் நிமலனை உலுக்கியது. விளையாட்டாக அவளை வருணித்துப் பேசிய நிமலன், நிஜமாகவே அவளால் கவரப்பட்டான். தினமும் அவன் கம்பெனி செல்லும் முன் நின்று செல்லும் அந்த டிராஃபிக் சிக்னல் அன்று அவன் வாழ்வையே ஒரு கணம் நிறுத்திவிட்டதைப்போல் இருந்தது.

அவள் அவனைக் கவர்ந்துவிட்டாள். அவனும் அதை உணரத்தான் செய்தான்.

2.
ஒரு கண நிகழ்வு

-வித்யாகுரு
 
Last edited:

திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
458

2. ஒரு கண நிகழ்வு (நாளை)

-வித்யாகுரு
நிமலனை கவர்ந்த பெண் யார்🤔🤔 கதையின் ஆரம்பம் அருமை சகி👏👏வாழ்த்துகள் 😊
 
Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
410
அருமை வித்யா.. நிமலனின் பேச்சு எதார்த்தம். ரேஷ்மியை வேண்டமென் ஒதுக்கியதற்கு காரணங்களும் உண்மை. திருமணத்திற்கான வன் எதிர்பார்ப்பும் அழகு. கதை நடை அருமை.
 
Samithraa

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 16, 2022
Messages
94
Hi Sis, Welcome to Vaigai
Unka story nan padichirukken.
happy to see here..
Nimlan pesinathu 100%sari, Yar antha ponnu. aen aekkama irukka
 
Vidya Gururajan

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 13, 2024
Messages
54
அருமை வித்யா.. நிமலனின் பேச்சு எதார்த்தம். ரேஷ்மியை வேண்டமென் ஒதுக்கியதற்கு காரணங்களும் உண்மை. திருமணத்திற்கான வன் எதிர்பார்ப்பும் அழகு. கதை நடை அருமை.
மிக்க நன்றி 😍😍
 
பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
2,018
சூப்பர் சூப்பர் சகி 💚💚💚💚💚💚💚💚நிமலனின் வாழ்க்கை துணை பற்றிய எண்ணங்கள் சிறப்பு,,, எதிர் துருவங்கள் ஒன்றோடு ஒன்று ஈர்க்கும் அதுபோல் தான் வாழ்க்கை 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
 
Vidya Gururajan

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 13, 2024
Messages
54
சூப்பர் சூப்பர் சகி 💚💚💚💚💚💚💚💚நிமலனின் வாழ்க்கை துணை பற்றிய எண்ணங்கள் சிறப்பு,,, எதிர் துருவங்கள் ஒன்றோடு ஒன்று ஈர்க்கும் அதுபோல் தான் வாழ்க்கை 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
உண்மை.. கருத்துக்கு நன்றி சகி..
 
Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
466
எதிர் எதிர் துருவங்கள் ஈர்க்கும் என்பதைப் போல
எதிரில் அமர்ந்த பெண்ணின் இரு விழிகளின் சோகம் இவனை ஈர்த்ததோ..... 🤩💐💐💐💐
 
Vidya Gururajan

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 13, 2024
Messages
54

Kothai Suresh

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
113
முதல் பார்வையிலேயே அவனை கவர்ந்த அழகி யார்?
 
Lakshmi murugan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 14, 2022
Messages
646
நிமலன் உடைத்து பேசியது சரி தானே.
 
Top